Idhaya Thirudan Episode 2.2
“எல்லாமே. அவனோட நல்லதுக்கு தான். இதை நீயும் புரிஞ்சுக்கணும். சரியா? எனக்கு மட்டும் அவன் மேல பாசம் இல்லைனு நினைக்கிறாயா?” என்று கேட்டான்.
“அப்படியெல்லாம் நினைக்கல. இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான்.” என்றாள் சிறு வருத்தத்துடன்.
Advertisement
“சரி அதை விடு. நான் உனக்கு வளையல் வாங்கி தரலாம்னு இருக்கேன். சாயந்திரம் கடைக்கு போகலாமா?”
“என்ன சொல்றீங்க? திடீர்னு இப்போ என்ன வளையல்?” என்று புரியாமல் கேட்டாள் மலர் .
Advertisement
“ அது உங்கள் அத்தையின் ஆடர்.”
Advertisement
“என்ன?” என்று மேலும் குழப்பமாக கேட்டாள் மலர் .
Advertisement
“இல்ல பொங்கல், சட்னி பண்ணின கைக்கு வளையல் போடலாம்ன்னு சொன்னேன். அதை நீ செய்ததால் உனக்கு போட சொன்னாங்க.”
“ஏற்கனவே என் கிட்ட வளையல்கள் இருக்கு. எதுக்கு இப்போ இந்த செலவு வேற?” என்று பொறுப்பான மனைவியாய் கேட்டாள்.
“ஐம்பது ரூபாய்க்கு கண்ணாடி வளையல் வாங்கி போடுறதுக்கு எதுக்காக கணக்கு பார்க்கணும்?” என்று அவன் படு தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
“என்னது கண்ணாடி வளையல் பத்தியா பேசிட்டு இருந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த மலர் புரிந்து கொண்டாள்.
“உங்களை” என்று கூறிக்கொண்டு அவன் மார்பில் குத்தினாள். ஆறுமுகம் அவளை அப்படியே அணைத்தான்.
“விடுங்க. யாராவது பார்க்க போறாங்க.” என்று அவனிடமிருந்து திமிறினாள்.
“யார் பார்த்தா எனக்கு என்ன? என் பொண்டாட்டி. நான் கட்டி பிடிக்கிறேன்.” என்று இருக்கினான்.
அவள் முகம் அந்திவானம் ஆக சிவந்தது.
“ஆளை விடுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று கூறிவிட்டு அவனிடமிருந்து விலகி வீட்டுக்குள் ஓடினாள் மலர் .
மனைவியை சமாதானம் செய்து விட்ட திருப்தியில் தன் வேலையை பார்ப்பதற்கு நிலத்திற்கு சென்றான் ஆறுமுகம்.
திருப்தியாக சாப்பிட்டு முடித்த அண்ணாமலை “மலர் நான் கடைக்கு போயிட்டு வரேன்.” என்று மருமகளிடம் கூறிவிட்டு காரில் ஏறி சென்றார்.
மதிய உணவை முடித்த பிறகு
“மலர் மாதவன் போன் பண்ணினானா?”
“பண்ணவில்லை அத்தை. வேலை விஷயமா வெளியூர் போனா போன் பண்ணி இங்க இருக்கேன். எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவேன்னு சொன்னாதானே நமக்கு நிம்மதியாக இருக்கும். இந்த பையனுக்கு இதெல்லாம் தெரிகிறதே கிடையாது.” என்று சலித்து கொண்டார் பார்வதி.
“மாதவன் ஏதாவது வேலையா இருந்திருப்பான் அத்தை.” என்று மச்சினனுக்கு பரிந்து பேசினாள் மலர் .
“சரி சரி உனக்கு ஒன்னும் வேலை இல்லைன்னா கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. காலையில அஞ்சு மணிக்கு எழுந்ததில் இருந்து வேலை செஞ்சுகிட்டு இருக்க.”
“சரிங்க அத்தை.” என்று கூறியவள் தலை குளித்து முடித்து கூந்தலின் நுனியில் போட்டிருந்த முடிச்சை அவிழ்த்துவிட்டு தலையை உளர்த்தியபடி அவளது அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் உறங்கினாள் .
அண்ணாமலை பார்வதி இவர்களுக்கு இரண்டு பையன்கள் மற்றும் ஒரு பெண் இருக்கிறார்கள். மூத்தவன் ஆறுமுகம் மிகவும் பொறுப்பானவன். அண்ணாமலைக்கு இருந்த சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு பெண் தேடும் பொழுது ஒரு திருமணத்தில் மலரை பார்த்தனர். பார்ப்பதற்கு லட்சணம் ஆகவும் சிரித்த முகத்துடனும் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த மலரை அவர்களுக்கு பிடித்துப்போனது. முக்கியமாக ஆறுமுகத்திற்கு பிடித்துவிட்டது. பிறகு அவளை பெண் கேட்டு பெரியவர்கள் ஆறுமுகத்திற்கு திருமணம் செய்து வைத்தனர்.
மலரின் பெற்றோர்கள் வசதியில் குறைந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அந்தக் குடும்பத்தில் இருந்து மலரை பெண் கேட்டு தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்கள்.
இரண்டாவதாக பிறந்த மாதவன் சிறுவயது முதலே விளையாட்டு புத்தியுடன் இருந்தான். பிறகு கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஓரளவுக்கு பொறுப்புடன் தந்தையுடன் சேர்ந்து அவரது கடையை நடத்தி வந்தான்.
ஆறுமுகம் விவசாயத்தில் இளநிலை பட்டம் பெற்றிருந்தான். மாதவன் எம்.பி. ஏ படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக அவர் நடத்தி வந்த கடையில் பற்பல மாற்றங்களை கொண்டு வந்து அதனை விரிவுபடுத்தினான். கடந்த ஒரு வருடமாக அவனது யோசனையால் இப்பொழுது வியாபாரம் பன்மடங்கு பெருகி இருந்தது.
அண்ணாமலைக்கு சொந்தமாக திருச்சி நகரத்தில் ஒரு பெரிய இடம் இருந்தது. அதில் அவர் கடைகள் கட்டி வாடகை விட்டுக் கொண்டிருந்தார் பிறகு பார்வதியின் யோசனையால் அந்த கடையில் ஒரு கடையை காலி செய்து விட்டு தானே பாத்திர கடை வைத்து நடத்த ஆரம்பித்தார். அதில் நல்ல லாபத்தையும் கண்டார்.
அண்ணாமலை ஸ்டோர்ஸ் என்ற பெயர் அந்த பெயர் பலகையில் பளிச்சென்று தெரிந்தது.
அண்ணாமலை அந்த பெரிய கடையில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
“என்னப்பா அண்ணாமலை எப்படி இருக்க?” என்று கேட்டபடி அந்த கடைக்குள் நுழைந்தார் அண்ணாமலையின் நண்பர் வேலாயுதம்.
“வேலாயுதமா வா பா.” என்று வரவேற்றார் அண்ணாமலை.
“ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்க வேலாயுதம்? வா பா. நம்ம ரூம்ல உட்கார்ந்து பேசலாம்.” என்று கூறி அவரை கையோடு அழைத்து கொண்டு தனது அறைக்கு சென்றார் அண்ணாமலை.
அறைக்குள் நுழைந்ததும் அவரது நாற்காலியில் அண்ணாமலை உட்கார்ந்து கொண்டு எதிரில் இருக்கும் நாற்காலியைக் காட்டி
“உட்காரு வேலாயுதம்.” என்று கூறினார் அண்ணாமலை.
வேலாயுதம் “வெயில் மண்டையைப் பொளக்குது.” என்று கையில் இருந்த துண்டைக் கொண்டு முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டார் வேலாயுதம்.
“நான் நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்றபடி அந்த அறையில் நிரம்பி இருந்த ஏசி காற்றின் சுகமான குளிர்ச்சியை அனுபவித்தார்.
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் வேலாயுதம்.
வெயில் ரொம்ப ஜாஸ்தியா தான் இருக்கு. இந்த வெயில்ல நீ எங்க போயிட்டு வருகிறாய்?” என்று அக்கறையாக விசாரித்தார் அண்ணாமலை.
“என்னோட விவசாய நிலம் ஒன்னு இருக்கு இல்லையா? அதை வாங்குறதுக்கு ஒருத்தர் வந்திருந்தாரு. அவருக்கு நிலத்தை காமிச்சிட்டு வர்றேன்.”
“என்னப்பா சொல்ற? உன் நிலத்தை விற்க போறியா?” என்று அதிர்ச்சியாக கேட்டார் அண்ணாமலை.
“ஆமாம்பா. நாங்க கோயம்புத்தூரில் செட்டில் ஆயிட்டோம். இங்கே வந்து இந்த நிலத்தை பார்க்கிறது கஷ்டமா இருக்கு. அதனால விற்றுவிடலாம்னு முடிவு பண்ணி இருக்கிறோம். ஆனா அவர் ரொம்ப கம்மியா கேட்கிறார். அதனால கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். உனக்கு தேவைனா சொல்லு உனக்கு என்றால் நான் கம்மியா கூட கொடுப்பேன்.” என்றார்.
“இல்லை வேலாயுதம். இப்பதான் சின்னவன் யோசனைப்படி கையில இருந்த காசை எல்லாம் போட்டு இந்த கடையை விரிவு படுத்தி இருக்கிறோம். அதனால இப்போ என்னால அந்த நிலத்தை வாங்க முடியாது.”
“ஓ அப்படியா? ஆமாம் நான் கூட பார்த்தேன். முன்னாடி நான் பார்த்ததை விட கடை இப்போ நல்லா பார்வையா இருக்கு.”
“ஆமாப்பா முன்னாடி நான் பாத்திரக்கடை மட்டும்தான் வெச்சி இருந்தேன். இப்போ சின்னவன் பக்கத்துல வாடகைக்கு விட்டிருந்த ரெண்டு கடையையும் காலி பண்ணிட்டு அங்கேயும் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம்.” என்று கூறியபடி தான் எடுத்து வந்து இருந்த மோர் கூஜாவை எடுத்து ஒரு டம்ளரில் மோர் ஊற்றி அவரிடம் நீட்டினார் அண்ணாமலை.
“வெயிலில் வந்ததால் ரொம்ப களைப்பா இருப்ப. இந்த மோரை குடி. வெயிலுக்கு இதமா இருக்கும்.” என்றார்.
அதனை மறுக்காமல் வாங்கி அருந்தினார் வேலாயுதம்.
“நானும் பார்த்தேன். பக்கத்திலேயும் பாத்திரகடை போட்டு இருக்கீங்களா?”
“இல்லை வேலாயுதம். அங்க ஸ்கூலுக்கு தேவையான எல்லா பொருட்களையும் விற்கிறோம். என்கூட வா பார்க்கலாம்.” என்று அவரையும் அழைத்துக் கொண்டு பக்கத்து கடைக்கு சென்றார் அண்ணாமலை.
“இந்த கடையில் ஸ்கூல் பேக்ல இருந்து பேனா, பென்சில், நோட்புக், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கெட்ச், கலர் பென்சில் என எல்லாமே கிடைக்கும்.” என்று அந்த கடையை சுற்றிக் காட்டினார்.
பிறகு அடுத்த கடைக்கு சென்று
“இந்தக் கடையில் லேடிஸ் ஹேண்ட் பேக், ஜென்ஸ் பேக் பெல்ட், சூட்கேஸ், மணி பர்ஸ், ஷூஸ் என எல்லாமே இங்கு கிடைக்கும்.” என்று அந்த கடையையும் சுற்றிக் காட்டினார்.
இதை எல்லாவற்றையும் பார்த்த வேலாயுதம்
“ரொம்ப அருமையா விரிவு பண்ணி இருக்கீங்க. நிறைய செலவு பண்ணி இருப்பன்னு நினைக்கிறேன்.”
“ஆமாம்பா. கையில இருந்த காசை எல்லாத்தையும் போட்டு பண்ணியாச்சு.”
“வியாபாரம் எதிர்பார்த்த மாதிரி நல்லா போகுதா?”
“கடவுள் புண்ணியத்துல வியாபாரம் நல்லபடியா நடக்கிறது. அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை.”
“ இந்த இடம் மெயின் ரோடு இல்லையாப்பா? அதனால நல்லா வியாபாரம் ஆகும்.
சரிப்பா எனக்கு அடுத்த பஸ்சுக்கு நேரமாச்சு. நான் கிளம்பறேன். வந்த வேலை தான் முடியல. உனக்கு நிலம் வாங்கற ஐடியா இருந்துச்சுன்னா, எனக்கு போன் பண்ணு.” என்று கூறிவிட்டு சென்றார் வேலாயுதம்.
மாலை அந்த கடையின் முன்பு ஒரு கார் வந்து நின்றது. ‘மாதவன் வந்துட்டான் போல இருக்கு’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு இரண்டாம் தளத்தின் பால்கனியில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த அண்ணாமலை லிஃப்டில் இறங்கி கீழே வந்தார்.
அதேநேரம் காரை பார்க் பண்ணிவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தான் அவரது இரண்டாவது மகன் மாதவன்.
“என்னப்பா போன வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?”. என்று விசாரித்தார் அண்ணாமலை
“நல்லபடியா முடிந்தது அப்பா. நீங்க வீட்டுக்கு போங்க. நான் கடையை பார்த்துகிறேன்.” என்று கூறிக்கொண்டே தன் நீண்ட கால்களை எட்டி வைத்து நடந்து தந்தையிடம் வந்தான்.
“நீயே ரொம்ப தூரம் கார் ஓட்டிட்டு டயர்டா வந்திருப்ப. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.” என்றார் மகனின் மீது அக்கறையாக அண்ணாமலை.
“அதெல்லாம் பரவாயில்லை அப்பா. எனக்கு கொஞ்சம் கணக்கு பார்க்க வேண்டி இருக்கு. நான் போய் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடறேன். நீங்க கிளம்புங்க.” என்று கூறினான் மாதவன்.
“சரிப்பா நீ உன்னோட வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வந்துரு. நடராஜ் கடையை மூடிட்டு வரட்டும்.” என்றார் அண்ணாமலை.
“ஓகே பா நான் பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க.” என்ற மாதவன் தன் அறைக்கு சென்றான்.
