Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 28.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காலை சிதம்பரம் மதுசூதன் இருவரும்  பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்காக சென்றிருந்தனர்.

Advertisement

வள்ளி சமையலறையில் காபி போட்டுக் கொண்டிருந்தார்.

பாலில் காபி தூள் கலந்து விட்டு சர்க்கரை பாத்திரத்தை பார்த்தார்.

Advertisement

சர்க்கரை அதில் இல்லாததால் மொத்தமாக சர்க்கரையைக் கொட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியை மேலே இருந்த செல்பிலிருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தார்.

Advertisement

அது அவரது கைக்கு எட்டாமல் மேலே இருந்ததால்  கஷ்டப்பட்டு எக்கி எடுத்துக்கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது  அது எதிர்பாராமல்  அவரது கால் மீது விழுந்தது.

கால் வலி பொருக்க முடியாமல் வள்ளி “அம்மா”. என்று கத்தினார்.

இந்த சத்தத்தை கேட்ட மாதவன் சமையல் அறைக்குள்  ஓடிவந்து வள்ளி தரையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்தான்.

“என்ன ஆச்சு அத்தை?” என்று பதறியபடி கேட்டான்.

“அது ஒன்னும் இல்ல மாப்பிள்ளை. அந்த சக்கர டப்பாவை எடுக்கும்போது தவறி காலில் விழுந்துடுச்சு. அதான் வலியில்  கத்தி விட்டேன். வேற ஒன்னும் இல்லை நான் பார்த்துக்கிறேன்.” என்றார் வள்ளி.

“காலை காட்டுங்கள் பார்ப்போம்.” என்று கேட்டான் மாதவன்.

“இல்லை பரவாயில்லை.” என்றார் வள்ளி.

“நீங்க காட்டுங்க.” என்றான் மாதவன்.

“நானும் உங்க பையன் மாதிரிதான். காட்டுங்க. என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்.” என்று கேட்டான்.

“அவர் மெதுவாக அவரது காலை நீட்டி அவனிடம் காண்பித்தார்.

கால் கட்டை விரலில் டப்பா பட்டு  சிவந்து வீங்கி இருந்தது.

“அச்சச்சோ வீங்கி இருக்கு. சரி என் கூட வாங்க.” என்று அவரை கைத்தாங்கலாக அழைத்து சென்று ஹாலில் இருந்த சோபாவில் உட்கார வைத்தான்.

“உங்க வீட்ல மஞ்சள் எங்க இருக்கு ?”என்று கேட்டான்.

“அதெல்லாம் பரவாயில்லை மாப்பிள்ளை. நானே பாத்துக்கிறேன்.” என்றார் வள்ளி.

“சொல்லுங்க அத்தை. எங்க அம்மாவுக்கு ஒன்னுனா நான் செய்ய மாட்டேனா?” என்று கேட்டான்.

“இல்லை பரவாயில்லை. நீங்க மதுமிதாவை கூப்பிடுங்க.” என்றார் வள்ளி.

“அவள் குளிச்சிட்டு இருக்கா. சரி நான் கிச்சனில் பார்க்கிறேன். (Xanax) ” என்று  சமையலறைக்கு சென்று மஞ்சள் பொடியை  தேடி அதில் தண்ணீர் விட்டு குழைத்து எடுத்து வந்தான்.

தரையில் அமர்ந்து கொண்டு அவரது காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு தன் கையில் இருந்த மஞ்சளைக் கொண்டு வள்ளியின் காலில்  வீங்கி இருந்த இடத்தில் பத்து போட்டுவிட்டான்.

“வேண்டாம் வேண்டாம்” என்று வள்ளி சொன்னதை கேட்காமல் அவன்  வீக்கத்தை சுற்றி முழுதாக பத்து போட்டு முடித்தான் .

குளித்து முடித்து விட்டு வெளியில் வந்த மதுமிதா  இவர்களைப் பார்த்தாள்.

“என்னமா என்ன ஆச்சு?” என்று பதறியபடி தாயிடம் வந்தாள்.

“ஒரு சின்ன அடிதான்.நானே பார்த்துக்கிறேன்u சொன்னாலும் மாப்பிள்ளை கேட்காமல் எனக்கு பத்து போட்டுட்டு இருக்காரு.” என்றார்.

கொஞ்சம்கூட மாப்பிள்ளை என்று வெட்டி பந்தா காண்பித்துக் கொண்டு ஏதோ ஒரு இடத்தில் ஏனோதானோ என்று இருந்துவிட்டு போகாமல் குடும்பத்தினருடன் குடும்பத்தினராக கலந்து பழகும் அவனது குணம் அவளை  கவர்ந்தது. சிறிது நேரம் தன்னை மீறி மாதவனை பார்த்துக்கொண்டிருந்தாள். யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு கலைந்து திரும்பிப் பார்த்தாள் மதுமிதா.

சிதம்பரம், மதுசுதன் இருவரும் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மூவரையும் பார்த்து “என்ன ஆச்சு?” என்று கேட்டபடி சிதம்பரம் அங்கு வந்தார்.

“காலில் சர்க்கரை டப்பா பட்டு வீங்கிருச்சு. அதான் பத்து போட்டு விட்டேன். அவ்வளவுதான்.” என்று எழுந்தான் மாதவன்.

“நீங்க எதுக்கு மாப்பிள்ளை இதை பண்ணிக்கிட்டு?” என்றார் சிதம்பரம்.

“இதுல என்ன இருக்கு மாமா? எங்க அம்மாவுக்கு இந்த மாதிரி ஆகியிருந்தால் நான் பண்ணி இருக்க மாட்டேனா?” என்றான் மாதவன் சாதாரணமாக.

அந்த வீட்டிலிருந்த அனைவரும் மாதவனின் நல்ல குணத்தை எண்ணி மகிழ்ந்தனர்.

“சரி. நான் போய் குளிச்சிட்டு வரேன்.” என்று விட்டு மாதவன் சென்றுவிட்டான்.

அவன் சென்ற பிறகு வள்ளி  “நம்ம பொண்ணு மட்டும் இல்லை. நாம எல்லோருமே ரொம்ப கொடுத்து வச்சவங்க. அதனாலதான் நமக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்து இருக்கிறார்.” என்று சொல்லி பூரித்துப் போனார் வள்ளி.

“ஆமாம் வள்ளி .நீ சொல்றது கரெக்ட் தான். நமக்கு இன்னொரு மகன் கிடைத்திருக்கிறார்.” என்றார் சிதம்பரம்.

அன்று மாலை 4 மணி அளவில் மதுமிதாவும் மாதவனும் ஊருக்கு கிளம்பினர். சிதம்பரம், வள்ளி இருவருக்கும் மகளோடு  சேர்த்து மாப்பிள்ளையையும்  பிரிய வேண்டுமே என்று கவலைப்பட்டனர்.

மதுசூதனக்கு ஒரு அண்ணனை பிரிவது போலவே இருந்தது.

மதுமிதாவுக்கு பிறந்த வீட்டினரை பிரியும் சோகம் என்று எல்லோருமே சோகமாக இருந்தனர்.

“அடிக்கடி இந்த பக்கம்  மதுமிதாவை கூட்டிட்டு வாங்க மாப்பிள்ளை.” என்றார் வள்ளி கண்கள் கலங்கியபடி.

“சரிங்க அத்தை.. நீங்க எல்லோரும் லீவு கிடைக்கும்போது திருச்சிக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு இருவரும்  பையை எடுத்துக் கொண்டு காரில் ஏறினர்.

மதுமிதா  காரில் ஏறி அந்தத்  தெரு திரும்பும் வரையிலும் கையை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தாள்.

அந்த தெருவை தாண்டியதும் கண்ணில் நீர் எட்டிப்பார்த்தது. மாதவன் சிறிது நேரம் அமைதியாகவே  காரை ஓட்டினான்.

மதுமிதா அப்படியே தூங்கிவிட்டாள்.

சிறுது நேரம் காரை ஓட்டிய மாதவன் ஒரு இடத்தில் காரை நிறுத்தினான். மதுமிதா கார் நிற்பதை உணர்ந்து கண் விழித்து பார்த்தாள். மாதவன் அவளிடம் திரும்பி “காபி குடிக்கலாமா?” என்று கேட்டான்.

“சரி போகலாம்.” என்று கூறவும் இருவரும் இறங்கி அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

மதுமிதாவுக்கும் அந்த நேரத்தில் காபி தேவைப்பட்டது. எனவே அந்த காபியை ரசித்து குடித்தாள்.

குளித்து முடித்துவிட்டு மீண்டும் இருவரும் காரில் ஏறி திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

மதுமிதா “எனக்கு போரடிக்குது. நான் கொஞ்சநேரம் கார்  ஓட்டட்டுமா?” என்று கேட்டாள்.

“சரி ஓட்டு.” என்று சொல்லவும் அவள் ஒரு மணி நேரம் கார் ஓட்டினாள்.

இருவரும் அவர்களது பள்ளி படிப்பு, கல்லூரி நண்பர்கள், கல்லூரியில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என்று பேசிக் கொண்டே திருச்சியை நோக்கி பயணித்தனர்.

பிறகு இருவரும் ஒரு ஹோட்டலில் இறங்கி இரவு உணவினை முடித்தனர். பிறகு தொடர்ந்து மாதவன் வண்டியை ஓட்டினான்.

சாலையின் மீது கவனத்தை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்த  மாதவனை மதுமிதா பார்த்தாள்.

‘இவன் கூட பழகி இவனை புரிந்துகொள்ள மூணு மாசம் டைம் வேணும் நினைச்சது  தப்பு. ஒரு வாரத்திலேயே இவனோட  நல்ல குணத்தால் என் மனசுல மட்டும் இல்லை என் வீட்டில் இருக்கும் எல்லோர் மனசுலயும் இடம் பிடித்து விட்டான். பெரிய ஆளு தான் இவன். இவனால மட்டும்தான் இதை பண்ணமுடியுமா? இருக்கட்டும். இவங்க வீட்ல நான் நடந்துக்கிற விதத்தில் இவங்க வீட்ல இருக்கிற எல்லோரும் என்னை அந்த வீட்டு பெண்ணாகவே பார்க்கணும். இவங்க வீட்ல இருக்கிற  எல்லோர் மனதையும் நானும் ஜெயிக்கணும். இவன் கூட பழகி இவனை புருஷனா ஏத்துக்க எனக்கு மூணு மாசம் தேவைப்படும்னு நினைத்தேன். ஆனால் இந்த ஒரு வாரத்திலேயே என் புருஷனா மட்டும் இல்லை என் உயிரா நினைக்க ஆரம்பித்துவிட்டேன் இனிமேலும் இந்த  மூன்றுமாத கட்டுபாடு  தேவையா என்று யோசித்துவிட்டு நாமா இப்படி யோசிக்கிறோம்?’ என்று தன்னையே நினைத்து  வெட்கத்தில் முகம் சிவந்தாள் மதுமிதா.

அதற்குப் பின்பும் அவனை பார்க்க முடியாமல் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பினாள்.

“என்ன மது? என் முகம் உனக்கு போரடிச்சுப் போச்சா?” என்று மாதவன் கேட்கவும் மதுமிதாவுக்கு தூக்கிவாரிப்போட்டது.

“என்ன? என்ன கேட்டீங்க?” என்று திரும்பவும் கேட்டாள்.

“இல்ல இவ்வளவு நேரம் என் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்த. இப்போ திடீர்னு ஜன்னல் பக்கம் பார்க்க ஆரம்பிச்சிட்ட. அதான் என் முகம் உனக்கு போர்   அடிக்க ஆரம்பித்து விட்டதான்னு கேட்டேன்.” என்றான் மாதவன் லேசான சிரிப்புடன்.

“அது அது வந்து….. அது அப்படி இல்லை.” என்று மனதில் நினைத்ததை சொல்ல முடியாமல் தவித்தாள் மதுமிதா.

“அப்படி இல்லைன்னா? வேற எப்படி?” என்று கேட்டான் மாதவன்.

“அது அது சரி நீங்க ரோட்டைப் பார்த்து தானே கார் ஓட்டிட்டு இருந்தீங்க. எப்போ என்னை பார்த்தீங்க?” என்று பேச்சை மாற்றினாள் மதுமிதா.

“ஆமா ரொம்ப கஷ்டம் தான். இவ்வளவு அழகா பொண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்து  கிட்டு இருக்கும்போது புருஷன் நான் பார்க்காமலா இருப்பேன்?” என்று கேட்டு கண்ணடித்தான் மாதவன்.

“ஆனால் நீங்க என்னை பார்க்கவே இல்லையே!”

“உனக்கு அப்படி தான் தெரியும். ஆனால் நான் உன்னை பார்த்து ரசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். எக்ஸாம்பிள் சொல்லட்டுமா?”

“சொல்லுங்க பார்ப்போம். என்னை பார்க்காமலே ரோட்டைப் பார்த்து என்னைப்பற்றி சொல்லுங்க.” என்றாள் மதுமிதா.

“உன் லெஃப்ட் கண்ல வச்சிருக்கிற மை நீ அழுததால் லேசா கலைந்து போய் இருக்கு.” என்று சொல்லவும் காரில் இருந்த கண்ணாடியில் தன் கண்ணை பார்த்தாள் அவன் சொன்னது உண்மைதான் என்று தெரிந்தது.

“என்ன செக் பண்ணிட்டியா? கரெக்டா இருந்துச்சா?”

அவள் பதில் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்புறம் உன் பொட்டு லேசா  இருக்கவேண்டிய இடத்தில் இருந்து நகர்ந்து இருக்கு. நீ காபி குடிச்சிட்டு உன் துப்பட்டாவால் முகத்தை துடைத்த போது நகர்ந்தது. “என்றான்.

அவள் அதனையும் கண்ணாடியில் பார்த்து சரி என்று தெரிந்து கொண்டாள்.

“நீ போட்டிருக்கிற துப்பட்டாவின் நுனியில் தொங்கிட்டு இருந்த மணியில் நாலு மணி இருக்காது.” என்று சொல்லவும் அவள் துப்பட்டாவை எடுத்து பார்த்தாள்.

அதில் 4 மணிகள் காணாமல் போயிருந்தன.

“அது என்கிட்ட தான் இருக்கு.” என்று  தன் சட்டைப் பையில் இருந்து அந்த மணிகளை எடுத்து காண்பித்தான்.

காலை சிதம்பரம் மதுசூதன் இருவரும்  பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்காக சென்றிருந்தனர்.

வள்ளி சமையலறையில் காபி போட்டுக் கொண்டிருந்தார்.

பாலில் காபி தூள் கலந்து விட்டு சர்க்கரை பாத்திரத்தை பார்த்தார்.

சர்க்கரை அதில் இல்லாததால் மொத்தமாக சர்க்கரையைக் கொட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியை மேலே இருந்த செல்பிலிருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தார்.

அது அவரது கைக்கு எட்டாமல் மேலே இருந்ததால்  கஷ்டப்பட்டு எக்கி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது  அது எதிர்பாராமல்  அவரது கால் மீது விழுந்தது.

கால் வலி பொருக்க முடியாமல் வள்ளி “அம்மா”. என்று கத்தினார்.

இந்த சத்தத்தை கேட்ட மாதவன் சமையல் அறைக்குள்  ஓடிவந்து வள்ளி தரையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்தான்.

“என்ன ஆச்சு அத்தை?” என்று பதறியபடி கேட்டான்.

“அது ஒன்னும் இல்ல மாப்பிள்ளை. அந்த சக்கர டப்பாவை எடுக்கும்போது தவறி காலில் விழுந்துடுச்சு. அதான் வலியில்  கத்தி விட்டேன். வேற ஒன்னும் இல்லை நான் பார்த்துக்கிறேன்.” என்றார் வள்ளி.

“காலை காட்டுங்கள் பார்ப்போம்.” என்று கேட்டான் மாதவன்.

“இல்லை பரவாயில்லை.” என்றார் வள்ளி.

“நீங்க காட்டுங்க.” என்றான் மாதவன்.

“நானும் உங்க பையன் மாதிரிதான். காட்டுங்க. என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்.” என்று கேட்டான்.

“அவர் மெதுவாக அவரது காலை நீட்டி அவனிடம் காண்பித்தார்.

கால் கட்டை விரலில் டப்பா பட்டு  சிவந்து வீங்கி இருந்தது.

“அச்சச்சோ வீங்கி இருக்கு. சரி என் கூட வாங்க.” என்று அவரை கைத்தாங்கலாக அழைத்து சென்று ஹாலில் இருந்த சோபாவில் உட்கார வைத்தான்.

“உங்க வீட்ல மஞ்சள் எங்க இருக்கு ?”என்று கேட்டான்.

“அதெல்லாம் பரவாயில்லை மாப்பிள்ளை. நானே பாத்துக்கிறேன்.” என்றார் வள்ளி.

“சொல்லுங்க அத்தை. எங்க அம்மாவுக்கு ஒன்னுனா நான் செய்ய மாட்டேனா?” என்று கேட்டான்.

“இல்லை பரவாயில்லை. நீங்க மதுமிதாவை கூப்பிடுங்க.” என்றார் வள்ளி.

“அவள் குளிச்சிட்டு இருக்கா. சரி நான் கிச்சனில் பார்க்கிறேன்.” என்று  சமையலறைக்கு சென்று மஞ்சள் பொடியை  தேடி அதில் தண்ணீர் விட்டு குழைத்து எடுத்து வந்தான்.

தரையில் அமர்ந்து கொண்டு அவரது காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு தன் கையில் இருந்த மஞ்சளைக் கொண்டு வள்ளியின் காலில்  வீங்கி இருந்த இடத்தில் பத்து போட்டுவிட்டான்.

“வேண்டாம் வேண்டாம்” என்று வள்ளி சொன்னதை கேட்காமல் அவன்  வீக்கத்தை சுற்றி முழுதாக பத்து போட்டு முடித்தான் .

குளித்து முடித்து விட்டு வெளியில் வந்த மதுமிதா  இவர்களைப் பார்த்தாள்.

“என்னமா என்ன ஆச்சு?” என்று பதறியபடி தாயிடம் வந்தாள்.

“ஒரு சின்ன அடிதான்.நானே பார்த்துக்கிறேன்u சொன்னாலும் மாப்பிள்ளை கேட்காமல் எனக்கு பத்து போட்டுட்டு இருக்காரு.” என்றார்.

கொஞ்சம்கூட மாப்பிள்ளை என்று வெட்டி பந்தா காண்பித்துக் கொண்டு ஏதோ ஒரு இடத்தில் ஏனோதானோ என்று இருந்துவிட்டு போகாமல் குடும்பத்தினருடன் குடும்பத்தினராக கலந்து பழகும் அவனது குணம் அவளை  கவர்ந்தது. சிறிது நேரம் தன்னை மீறி மாதவனை பார்த்துக்கொண்டிருந்தாள். யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு கலைந்து திரும்பிப் பார்த்தாள் மதுமிதா.

சிதம்பரம், மதுசுதன் இருவரும் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மூவரையும் பார்த்து “என்ன ஆச்சு?” என்று கேட்டபடி சிதம்பரம் அங்கு வந்தார்.

“காலில் சர்க்கரை டப்பா பட்டு வீங்கிருச்சு. அதான் பத்து போட்டு விட்டேன். அவ்வளவுதான்.” என்று எழுந்தான் மாதவன்.

“நீங்க எதுக்கு மாப்பிள்ளை இதை பண்ணிக்கிட்டு?” என்றார் சிதம்பரம்.

“இதுல என்ன இருக்கு மாமா? எங்க அம்மாவுக்கு இந்த மாதிரி ஆகியிருந்தால் நான் பண்ணி இருக்க மாட்டேனா?” என்றான் மாதவன் சாதாரணமாக.

அந்த வீட்டிலிருந்த அனைவரும் மாதவனின் நல்ல குணத்தை எண்ணி மகிழ்ந்தனர்.

“சரி. நான் போய் குளிச்சிட்டு வரேன்.” என்று விட்டு மாதவன் சென்றுவிட்டான்.

அவன் சென்ற பிறகு வள்ளி  “நம்ம பொண்ணு மட்டும் இல்லை. நாம எல்லோருமே ரொம்ப கொடுத்து வச்சவங்க. அதனாலதான் நமக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்து இருக்கிறார்.” என்று சொல்லி பூரித்துப் போனார் வள்ளி.

“ஆமாம் வள்ளி .நீ சொல்றது கரெக்ட் தான். நமக்கு இன்னொரு மகன் கிடைத்திருக்கிறார்.” என்றார் சிதம்பரம்.

அன்று மாலை 4 மணி அளவில் மதுமிதாவும் மாதவனும் ஊருக்கு கிளம்பினர். சிதம்பரம், வள்ளி இருவருக்கும் மகளோடு  சேர்த்து மாப்பிள்ளையையும்  பிரிய வேண்டுமே என்று கவலைப்பட்டனர்.

மதுசூதனக்கு ஒரு அண்ணனை பிரிவது போலவே இருந்தது.

மதுமிதாவுக்கு பிறந்த வீட்டினரை பிரியும் சோகம் என்று எல்லோருமே சோகமாக இருந்தனர்.

“அடிக்கடி இந்த பக்கம்  மதுமிதாவை கூட்டிட்டு வாங்க மாப்பிள்ளை.” என்றார் வள்ளி கண்கள் கலங்கியபடி.

“சரிங்க அத்தை.. நீங்க எல்லோரும் லீவு கிடைக்கும்போது திருச்சிக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு இருவரும்  பையை எடுத்துக் கொண்டு காரில் ஏறினர்.

மதுமிதா  காரில் ஏறி அந்தத்  தெரு திரும்பும் வரையிலும் கையை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தாள்.

அந்த தெருவை தாண்டியதும் கண்ணில் நீர் எட்டிப்பார்த்தது. மாதவன் சிறிது நேரம் அமைதியாகவே  காரை ஓட்டினான்.

மதுமிதா அப்படியே தூங்கிவிட்டாள்.

சிறுது நேரம் காரை ஓட்டிய மாதவன் ஒரு இடத்தில் காரை நிறுத்தினான். மதுமிதா கார் நிற்பதை உணர்ந்து கண் விழித்து பார்த்தாள். மாதவன் அவளிடம் திரும்பி “காபி குடிக்கலாமா?” என்று கேட்டான்.

“சரி போகலாம்.” என்று கூறவும் இருவரும் இறங்கி அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

மதுமிதாவுக்கும் அந்த நேரத்தில் காபி தேவைப்பட்டது. எனவே அந்த காபியை ரசித்து குடித்தாள்.

குளித்து முடித்துவிட்டு மீண்டும் இருவரும் காரில் ஏறி திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

மதுமிதா “எனக்கு போரடிக்குது. நான் கொஞ்சநேரம் கார்  ஓட்டட்டுமா?” என்று கேட்டாள்.

“சரி ஓட்டு.” என்று சொல்லவும் அவள் ஒரு மணி நேரம் கார் ஓட்டினாள்.

இருவரும் அவர்களது பள்ளி படிப்பு, கல்லூரி நண்பர்கள், கல்லூரியில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என்று பேசிக் கொண்டே திருச்சியை நோக்கி பயணித்தனர்.

பிறகு இருவரும் ஒரு ஹோட்டலில் இறங்கி இரவு உணவினை முடித்தனர். பிறகு தொடர்ந்து மாதவன் வண்டியை ஓட்டினான்.

சாலையின் மீது கவனத்தை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்த  மாதவனை மதுமிதா பார்த்தாள்.

‘இவன் கூட பழகி இவனை புரிந்துகொள்ள மூணு மாசம் டைம் வேணும் நினைச்சது  தப்பு. ஒரு வாரத்திலேயே இவனோட  நல்ல குணத்தால் என் மனசுல மட்டும் இல்லை என் வீட்டில் இருக்கும் எல்லோர் மனசுலயும் இடம் பிடித்து விட்டான். பெரிய ஆளு தான் இவன். இவனால மட்டும்தான் இதை பண்ணமுடியுமா? இருக்கட்டும். இவங்க வீட்ல நான் நடந்துக்கிற விதத்தில் இவங்க வீட்ல இருக்கிற எல்லோரும் என்னை அந்த வீட்டு பெண்ணாகவே பார்க்கணும். இவங்க வீட்ல இருக்கிற  எல்லோர் மனதையும் நானும் ஜெயிக்கணும். இவன் கூட பழகி இவனை புருஷனா ஏத்துக்க எனக்கு மூணு மாசம் தேவைப்படும்னு நினைத்தேன். ஆனால் இந்த ஒரு வாரத்திலேயே என் புருஷனா மட்டும் இல்லை என் உயிரா நினைக்க ஆரம்பித்துவிட்டேன் இனிமேலும் இந்த  மூன்றுமாத கட்டுபாடு  தேவையா என்று யோசித்துவிட்டு நாமா இப்படி யோசிக்கிறோம்?’ என்று தன்னையே நினைத்து  வெட்கத்தில் முகம் சிவந்தாள் மதுமிதா.

அதற்குப் பின்பும் அவனை பார்க்க முடியாமல் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பினாள்.

“என்ன மது? என் முகம் உனக்கு போரடிச்சுப் போச்சா?” என்று மாதவன் கேட்கவும் மதுமிதாவுக்கு தூக்கிவாரிப்போட்டது.

“என்ன? என்ன கேட்டீங்க?” என்று திரும்பவும் கேட்டாள்.

“இல்ல இவ்வளவு நேரம் என் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்த. இப்போ திடீர்னு ஜன்னல் பக்கம் பார்க்க ஆரம்பிச்சிட்ட. அதான் என் முகம் உனக்கு போர்   அடிக்க ஆரம்பித்து விட்டதான்னு கேட்டேன்.” என்றான் மாதவன் லேசான சிரிப்புடன்.

“அது அது வந்து….. அது அப்படி இல்லை.” என்று மனதில் நினைத்ததை சொல்ல முடியாமல் தவித்தாள் மதுமிதா.

“அப்படி இல்லைன்னா? வேற எப்படி?” என்று கேட்டான் மாதவன்.

“அது அது சரி நீங்க ரோட்டைப் பார்த்து தானே கார் ஓட்டிட்டு இருந்தீங்க. எப்போ என்னை பார்த்தீங்க?” என்று பேச்சை மாற்றினாள் மதுமிதா.

“ஆமா ரொம்ப கஷ்டம் தான். இவ்வளவு அழகா பொண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்து  கிட்டு இருக்கும்போது புருஷன் நான் பார்க்காமலா இருப்பேன்?” என்று கேட்டு கண்ணடித்தான் மாதவன்.

“ஆனால் நீங்க என்னை பார்க்கவே இல்லையே!”

“உனக்கு அப்படி தான் தெரியும். ஆனால் நான் உன்னை பார்த்து ரசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். எக்ஸாம்பிள் சொல்லட்டுமா?”

“சொல்லுங்க பார்ப்போம். என்னை பார்க்காமலே ரோட்டைப் பார்த்து என்னைப்பற்றி சொல்லுங்க.” என்றாள் மதுமிதா.

“உன் லெஃப்ட் கண்ல வச்சிருக்கிற மை நீ அழுததால் லேசா கலைந்து போய் இருக்கு.” என்று சொல்லவும் காரில் இருந்த கண்ணாடியில் தன் கண்ணை பார்த்தாள் அவன் சொன்னது உண்மைதான் என்று தெரிந்தது.

“என்ன செக் பண்ணிட்டியா? கரெக்டா இருந்துச்சா?”

அவள் பதில் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்புறம் உன் பொட்டு லேசா  இருக்கவேண்டிய இடத்தில் இருந்து நகர்ந்து இருக்கு. நீ காபி குடிச்சிட்டு உன் துப்பட்டாவால் முகத்தை துடைத்த போது நகர்ந்தது. “என்றான்.

அவள் அதனையும் கண்ணாடியில் பார்த்து சரி என்று தெரிந்து கொண்டாள்.

“நீ போட்டிருக்கிற துப்பட்டாவின் நுனியில் தொங்கிட்டு இருந்த மணியில் நாலு மணி இருக்காது.” என்று சொல்லவும் அவள் துப்பட்டாவை எடுத்து பார்த்தாள்.

அதில் 4 மணிகள் காணாமல் போயிருந்தன.

“அது என்கிட்ட தான் இருக்கு.” என்று  தன் சட்டைப் பையில் இருந்து அந்த மணிகளை எடுத்து காண்பித்தான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!