Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 23

ஒளி 23:-

 

எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி!
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி!
கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக!
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக!

உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை!
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி…!



Advertisement

 

அவன் வைத்திருந்த பாடலை நினைத்து “யாருக்காக இந்த பாட்டு வைச்சிருப்பாங்க?” என்று  பாடலின் சிந்தனையில் இருந்தவளின் எதிரில் அந்த நாயகனே வந்தான்.

 

Advertisement

அவள் அனுமதி கேட்டு உள்ளே வந்தவனின் முகத்தை ஆராய்ந்தால் அவன் இறுகி போயிருப்பது  நன்றாகவே தெரிந்தது. “நல்லா தானே என்கிட்ட வந்து பேசி வாழ்த்துலாம் பண்ணாங்க.. இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே?” என்று யோசிக்க,

Advertisement

 

“சொல்லுங்க மேம் ! கூப்பிட்டிருந்தீங்க? என்ன விஷயம்?”

 

Advertisement

“உட்காருங்க சார்… “என்றவளிடம் மறுத்து,

“பரவாயில்லை சொல்லுங்க மேம் !”

 

“சேகர் சாருக்கு நாளைக்கு இங்க கடைசி நாள் வேலை, அவருக்கு சின்னதா ஒரு பிரிவு உபச்சார விழா ஏற்பாடு பண்ணனும்… என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.. ஏன்னா நம்மகிட்ட நிறைய நேரம் இல்லை அது தான்…”

 

“நீங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க, நான் பண்றேன்,” என்ற அவன் கத்தரி பேச்சில் அவள் முகம் சுருங்கியது.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“நீங்க  ஏதோ கோவமா இருக்கீங்கன்னு தெரியுது? ஆனால் ஏன்னு தான் தெரியலை.. அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு எனக்கு இதுல ஹெல்ப் பண்ணுங்க.. ஏன்னா அவங்க இந்த ஆஃபீஸ்லயே இவ்ளோ வருஷம் ஒர்க் பண்ணியிருக்காங்கஅதனால நம்ப அதுக்கு உரிய மரியாதை செய்யணும்அதான்ப்ளீஸ் ! “என்று அவள் கேட்க,

 

அவள் ப்ளீஸில் தன்னையே நொந்தவன், “ஒரு அரைமணி நேரம் கொடுங்க மேம்  என்னனு பார்த்துட்டு சொல்றேன்…” என்று வெளியேறினான்.  

 

அவன் போனதும் பெருமூச்செறிந்தவள், வேலையில் கவனம் செலுத்தினாள். ஒரு ஒருமணி நேரம் கழித்து வந்தவன் எல்லா வேலையையும்  முடித்திருந்தான்

“நாளைக்கு ஆபீஸ் முடிஞ்சு ஈவினிங் ஆறு மணிக்கு பார்பிகியூல டின்னர் புக் பண்ணி இருக்கேன்எல்லாரும் வீட்டுக்கு போயிட்டு பேமிலில யாரும் துணைக்கு கூட்டிட்டு வந்தாலும் ஓகே, இல்ல இங்கிருந்து அப்படியே வந்தாலும் ஓகேஆறு மணிக்கே ஸ்டார்ட் பண்ணினால் பத்திரமாக எல்லாரும் ரிட்டர்ன் வீட்டுக்கு கிளம்ப வசதியா இருக்கும்…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க,

 

 இவள் அவனை தான் பார்த்திருந்தாள். ஏனெனில் அவன் அவளை நேருக்கு நேர் பார்த்து பேசவில்லை. ஏன் என்று யோசிக்க அவளுக்கு குழப்பம், குழப்பம் மட்டுமே மிஞ்சியது

 

“மேம் !”

 

“ஹான் சொல்லுங்க !”

 

“நான் சொல்லிட்டேன் !”என்று முறைத்தவாறே பதிலளித்தான்.

 

“சரி எல்லாருக்கும்  இன்போர்ம் பண்ணிடுங்க.. சேகர் சாரையும் பேமிலில  எல்லாரையும் கூட்டிட்டு வர சொல்லுங்க…”

 

“ம்ம்ம் ! சரி !” என்று வெளியேறப் போனவனை,

 

“ஒரு நிமிஷம்!” என்று ரதி நிறுத்த,

“என்ன ?” என்றவாறே திரும்பினான்.

“நான் கால் பண்ணேன்ல அதான் என்னோட நம்பர் பதிவு பண்ணிக்கோங்க? அடுத்த முறை கால் பண்ணும் போது யாருனு கேட்க கூடாதுல்ல அதான்… “என்று சொன்னவளுக்கு பதிலளிக்காமல் முறைத்தவாறே வெளியேறினான்.      

 

மறுநாள் ஹோட்டல் போகணும் என்பதால் அனைவருமே அதற்கேற்றாற் போல ரெடியாகி வந்திருந்தனர். ரதி மட்டும் எப்போதும் வருவது போல் வந்திருந்தாள்

 

“ஏன் மேம் ? நீங்க  மட்டும் எப்பவும் போல வந்திருக்கீங்க ?” என்று  சக பெண்  ஊழியர்  ஒருவர்  கேட்க,  

 

அவளோ சிரிப்புடன்,  “எனக்கு மூன்று மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு, அதான்அது முடிஞ்சதும் வீட்டுக்கு போயிட்டு ரெடியாகி வரணும்.”

 

“ஓ! சரி மேம் !”

 

“கிப்ட்க்கு ஏதும் பிளான் பண்ணீங்களா…?”  என்று ரதி அவரிடம் கேட்க,

 

“தனித் தனியா வாங்க யாருக்கும் விருப்பம் இல்லையாம் மேம், எல்லாரும் காசு போட்டு என்ன வருதோ மதியம் லஞ்ச் டைம்ல யாரவது வெளிய போய் வாங்கிட்டு வரலாம்னு இருக்கோம்.. இப்போதைக்கு இதான் பிளான்நீங்க ஏதும் யோசிச்சிருந்தா சொல்லுங்க … “என்று  வேறு ஒருத்தர் கேட்க,

 

“இல்லையில்லை.. எனக்கும் இதுவே ஓகே! போறவங்கள என்கிட்டயும் வந்து ஷேர்  வாங்கிக்க சொல்லுங்க…” 

 

“ம்ம்ம் சரி மேம் !”

 

“ஆமா எல்லாரும் இப்பவே ரெடியாகிடீங்க போல, இன்னைக்கு வேலை ஏதும் நடக்காது போலவே?” என்று நட்பின் கிண்டலோடு அவள் வினவினாள். 

 

அதற்கு, அருகில் இருந்த  பெண்  “பின்ன எப்போதாவது ஒரு நாள் தான் இது போல பங்க்ஷன்லாம் நடக்கும்நடக்கற அப்ப  என்ஜோய் பண்ணிக்கணும்… “  என்று கூறினாள்.

 

“இல்லைனா  மட்டும்  இவள் அப்படியே வேலை செய்துட்டு தான் மறு வேலை, இன்னைக்கு எத்தனை  கோட்டிங் மேக்கப் போக போகுதோஆறு மணி பங்க்ஷன்க்கு எப்படியும் மூன்று மணிக்கே இவள் மேக்கப் போட ஆரம்பிச்சுடுவா…”  என்று  வேறு  ஒருவர் அந்த பெண்ணை  கேலி செய்தார்.

 

“மேம்ம்ம்!” என்று அந்த பெண் சிணுங்க

 

ஜஸ்ட்  ஃபார்  ஃபன்இதையும் சேர்த்து என்ஜாய் பண்ணிக்கோ…” என்று சிரித்தவள்“சரி ஏதும் முக்கியமான பைல் இருந்தால் மட்டும் ஒர்க்  பண்ணுங்கமீட்டிங் இல்லைனா நானும் உங்ககூடவே வந்து என்ஜாய் பண்ணியிருப்பேன்.. அதனால் இன்னொரு முறை பார்த்துக்கலாம்…” என்று புன்னகைத்தவாறே அவள் கேபின் சென்றாள்.

 

“மேம் ரொம்ப சூப்பர்ல, இப்ப நடந்த பிரச்சனைங்களை ஹாண்டில் பண்ணதும் சரி,  நம்மகிட்ட  இப்படி  பிரெண்ட்லியா பேசறதும் சரி பொய்யாவோ கடமைக்கோனு  இல்லைல.. அவங்க  ரியலாக இருக்காங்கல்ல”  என்று அந்த பெண் கூற, மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

 இதையெல்லாம் கேட்டும் கேட்காதவாறும் அவளின் புன்னகையை பார்த்தும் பார்க்காதவாறும் இருந்த ஒருத்தர்

 

“ஆமா, மேடம் தான் எல்லோரையும் பிரெண்ட்ஸ் பிடிக்கறதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே… “   என்று முணுமுணுத்தபடியே தீவிரமாக வேலை செய்தது  பார்த்திபன் அன்றி வேறு யார்?

 

மாலை ஆஃபிஸில் இருந்து எல்லோரும் ஒன்றாக கிளம்பி ஹோட்டலை அடைந்திருந்தனர். பார்த்திபன் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வையிட்டு மற்றவர்களுடன் நின்று கொண்டான்.     

 

ஆறு மணிபோல் சேகரும் அவர் குடும்பத்தோடு வந்து விட்டார், எல்லோரும் ரதிக்காக காத்திருந்தனர். ஆறரைப் போல ரதியும் வந்து சேர்ந்தாள்.. 

 

இளநீல நிறத்தில் சேலையும் அதற்குத் தோதாக ஒரு ஜிமிக்கியும் ஒரே ஒரு குட்டி நெக்லசும் என எளிமையான அலங்காரத்தோடு நேரமாகி விட்டதே என்ற பதட்டத்துடன் உள்ளே நுழைந்தவளைப் பார்த்து ரசித்தபடியே  நின்றவனின் கண்கள் அவள் கையைப் பார்த்து ஒரு நொடி பளிச்சிட்டது..

 

 “சாரி சார் ! மீட்டிங் கொஞ்சம் லேட்டாகிடுச்சு…” ரதி சேகரிடம் சொல்ல ,

“பரவாயில்லைமா! இப்ப தான் எல்லாரும் வந்தோம்நேரம் கொஞ்சம் முன்னே பின்ன தான் ஆகும் அதுக்கு எதுக்கு சாரி! நம்பளோடதுல எப்பவும் ரிட்டையர்மென்ட்  தான் இது போல பண்ணுவாங்கஇவ்வளவு தூரம் எனக்காக  பண்றதே  பெரிய விஷயம்.. தேங்க்ஸ்மா!”

 

அதன் பின் எல்லோரும் சேர்ந்து அவருடன் பணிபுரிந்த அனுபவங்கள் பேசி, சேர்ந்து புகைப்படம் எடுத்து என்று நேரம் ஓடியது.

 

முடியும் நேரம் அவருக்கு கிப்ட் கொடுத்தும் அவரின் நன்றி நவில்களும் முடிய அனைவரும் உணவருந்த சென்றனர்

 

எப்போதும் பார்மல் உடையில் பார்த்த அவளை இன்று சிறிது அலங்காரத்தோடு பார்த்தவர்கள் எல்லோரும் அவளை பாராட்டினர். எல்லாவற்றையும் சிறு சிரிப்போடு கடந்தவள் அவர்களுடன் இயல்பாக உரையாடினாள்.

 

எட்டு மணி போல் எல்லோரும் கிளம்பவும், கணக்கை முடித்துக் கொண்டு கடைசியாக கிளம்பிய பார்த்திபனை நேரெதிரே எதிர் கொண்டாள். அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

“என்னாச்சு மேம் ! நீங்க  இன்னும் கிளம்பலையா?” என்று பதட்டமாக கேட்டவனை,

 

இல்ல இப்ப தான் எல்லாரும் கிளம்பினாங்க.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்அதான் வெயிட் பண்றேன்…”

 

“இப்ப லேட்  ஆச்சு வீட்டுக்கு போங்க ! நாளைக்கு கூட பேசலாம்… “

 

“இல்லை, நான் ஊருக்கு போறேன்.. ஈவினிங் தான் வீட்ல இருந்து போன் வந்ததுஅதனால நான் இப்ப கிளம்பனும்…”  

 

அவனோ  இன்னும்  படபடப்பு  அடங்காமல் என்ன வர போகிறதோ என்று  

 

“சரி சொல்லுங்க என்ன பேசணும்?”

 

“நான் வர எப்படியும் மூன்று நாள் ஆகிடும்னு நினைக்கிறேன் , சரியாகத் தெரியலசேகர் சாரும் இல்லைஅதனால் நீங்க தான் எல்லாம் பார்த்துக்கணும்.. எதுவானாலும் எனக்கு போன் பண்ணுங்க.. “ என்று அவள் சொன்னதும்,

 

ஷப்பா.. இவ்வளவு தானா என்று நிம்மதியடைந்தவன், அவளின் அப்புறம் என்ற  வார்த்தையில் திடுக்கிட்டான்

 

[the_ad id=”6605″]

 

 

 

அவள் எதைக் கண்டுகொள்வாள் என்று  இந்த  படபடப்பு , பதட்டம் என்பது  அவனே முழுமையாக உணராதது.

 

யோசனையோடவே பேச ஆரம்பித்தாள்,  ” உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லைனு  நினைக்கிறேன், கொஞ்சம்  நாள் தினமும் ட்ரைன்ல  பார்த்திருப்போம் ஒரு மூன்று முறை இது போல நேராக பேசியிருப்போம்அவ்ளோ தான் இதெல்லாம் நடந்து  நான்கு வருஷமாச்சு..  அதனால் தான்  உங்களுக்கு  என்னை ஞாபகம் இல்லைன்னு நினைக்கிறேன்..” 

 

“ஆனால் அதுக்கு அப்புறம் கொஞ்சம் நிலைமை சரியில்லை, அதனால நான்  ட்ரைன்ல வரலஉங்களை பார்க்கவும் இல்லை…”

 

“உங்களோட கேரக்டர், உங்க மோட்டிவேஷன் பேச்சு, ஒரு சில விஷயத்துல நீங்க நடந்துக்கிட்டதுனு  உங்க மேல எனக்கு மரியாதை இருந்தது இப்பவும் இருக்கு… இது எல்லாமே ஏதோ ஒரு இடத்துல எனக்கு இம்பாக்ட் கொடுத்திருக்கு…  நான் பிரச்சனையில் இருக்கும் போது நானே அறியாம நீங்க எனக்கு நம்பிக்கை கொடுக்கற போல நான் உணர்ந்தேன்..”

  

“வெளிய இருந்து பார்க்கும் போது இதெல்லாம் ஒரு விஷயமானு தோணும் ஆனால் நமக்கு நிராதரவான நிலையில இருக்கும் போது நம்பளை ஏதோ ஒரு குரல் வழி நடத்தும்ல அது போல தான் உங்க வார்த்தைகள் என்னை வழி நடத்துச்சு, எனக்கு தைரியம் கொடுத்துச்சு எல்லாமே…”

 

“என்னை சுத்தி நிறைய பேர் இருந்தாங்க ஆனால் அதெல்லாம் மீறி நான் ஏதோ ஒரு சப்போர்ட் தேடினேன்நான் தேடினது ஏன் உங்ககிட்ட வந்து நின்னுதுன்னு என்னை கேட்டால் என்கிட்ட பதிலில்லைன்னு சொல்றதை விட  இதுவரைக்கும் நான் அதுக்கான பதில் தேடலைனு வேணும்னா சொல்லலாம்…”

 

“உங்களைத் தேடினேன்.  எனக்கு உங்க பெயர் கூடத் தெரியலஉங்களைப்  பார்க்கவே மாட்டேனோன்னு கூட நினைச்சேன் ஆனால் நீங்களே நான் இருக்கற  இடம்  வந்தீங்க…”

 

“அப்ப நான் எப்படி உணர்ந்தேன்னு என்னால வார்த்தையால சொல்லமுடியாதுஇப்ப நடந்த பிரச்சனைகள்ல கூட நீங்க என்கூட இருந்தது எனக்கு அவ்ளோ தைரியமா  இருந்துச்சுஎல்லாம் நீங்க பார்த்துப்பீங்கனு ஒரு நம்பிக்கை…”என்று அவள் பேசுவதைக்  கேட்டு  உறைந்தவன் அவன் போன் அடிக்கும் சத்தத்தில் தான் விழித்தான்…

 

உன்னை மறக்கவில்லை!!

உன் நினைவுகளை மட்டுமே மறைத்து வைத்தேன் !!! 

என்னைப் போல உன்னையும் அது துரத்தும் என்று! !!! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!