Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thondrum Oliyaai Nee 29

ஒளி 29 ::-

 

ஓ! கடல் போன்ற கண்ணாலே!
என்னை வாரி சென்றாளே!
இழந்தேனே இன்று!
இருந்தாலும் நன்று!
அனல் மேலே கொஞ்சம்!
புனல் மேலே கொஞ்சம்!
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்!

 



Advertisement

அவள் பேச்சில் ஒரு வேகத்தில் அவளருகே வந்தவன் அவளிடம் இருந்த பதட்டத்தைக் கண்டு தன்னைத் தானே திட்டிக் கொண்டு நகர்ந்தான்.

 

“சாரி!” என்றவன் அவளுக்கு முதுகு காட்டியவாறு நின்று தலையைக் கோதி ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்தியவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து அவளையும் அருகே வந்து அமர சொன்னான். அவன் சாரி சொன்னதிலேயே சிறிது தெளிந்தவள் அவன் அருகே அமர்ந்தாள்.

Advertisement

 

Advertisement

“நான் சொன்னதும் எந்த கேள்வியும் கேட்காமால் என் பக்கத்துல எந்த நம்பிக்கையில வந்து உட்கார்ந்த குந்தவை…?“ என்று அவள் பக்கம் திரும்பி கேட்டவனை அதிர்ந்து நோக்கினாள்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி நீயும் நானும் ஒரு மூணு தடவை பார்த்திருப்போமா? அப்படி நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்னு என்னை நீ தேடிகிட்டு இருந்த ?”

 “எதை வைச்சு நீ என்னோட குணத்தை முடிவு பண்ணின? நீ யோசிச்சபடியே நான் இருக்கணும்னு எப்படி நீ முடிவு பண்ணலாம்?” என்ற அவனின் வரிசையான கேள்விகளால் தடுமாறியவளிடம்,

Advertisement

 

“சொல்லு குந்தவை!” என்று அழுத்தமாக கேட்டான்.

 

“எனக்குத் தெரியல! நீங்க கேட்ட எதுக்கும் என்கிட்ட பதில் இல்லை ஆனால் உங்களை என்னோட மனசுல ரொம்ப உயர்வா நினைக்கறேன்னு மட்டும் சொல்ல முடியும்…” என்றவளிடம்,

 

“ஓஓ…..! சரி! நான் பேசின அப்புறம் வரனைப் பத்தி என்ன முடிவோடு வீட்டுக்கு வந்த?”

 

 

[the_ad id=”6605″]

 

 

“வீட்ல எல்லோருக்கும் பிடிச்சிருந்தால் பேசி பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்னு வந்தேன்”

 

“அப்ப உனக்கு பிடிக்கணும் என்பது அவசியம் இல்லையா?” என்று கறாராகக் கேட்டவனிடம்,

 

“பேசிப் பார்க்கும் போதே எனக்கும் பிடிச்சிருந்தால் ஓகே சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்..” என்று தயங்கியவாறே கூறினாள்.

“ஆஹான்! கரெக்ட் தான்.. உனக்கு என்மேல மரியாதை இருக்கு.. நான் கூட இருந்தா ஆறுதலா இருக்கும், பாதுகாப்பா இருக்கும்.. அதுக்காக உனக்கு என்னை பிடிக்கணும்னு அவசியம் இல்லைல்ல… நீ யோசிக்கறது கரெக்ட் தான்…” என்று சொல்லியவனை திடீரெனெ இடையிட்டாள். 

“இல்லை இல்லை அப்படியெல்லாம் இல்லை”என்று கூறியவளை,

 

“இரு நான் பேசி முடிச்சுடறேன். உன்னோட எண்ணங்களை நான் தப்புன்னு சொல்லல…ஒருத்தருக்கு என்னோட அக்கறையும் உதவியும் தேவைப்படுற வரைக்கும் நான் யோசிச்சுக்கிட்டும் காத்துக் கொண்டும்    இருக்க மாட்டேன்… இறங்கி தேவையானதை செய்து முடிச்சுடுவேன்.. இது முழுக்க முழுக்க என்னோட தனிப்பட்ட மனத் திருப்திக்கு… “

 

“நீ என்னைப் பார்த்ததும் அந்த மாதிரி சூழ்நிலைகள்லதான் அதனாலதான் உனக்கு என் மேல மரியாதையும் மதிப்பும் இருக்கு.. ஆனால் அதைத் தாண்டி எனக்குன்னும் விருப்பு வெறுப்பு இருக்க சாதாரண மனுஷன் தான் நான்…”

 

“இங்க வர்றதுக்கு முன்னாடி உங்கிட்ட என்ன சொன்னேனோ அதேதான் எனக்கும்… உன்னைத்தான் பார்க்க போறேன்னு தெரிஞ்சும் என்னோட வாழ்க்கையா நீ வேணும்னு நினைச்சுத்தான் இங்க வந்தேன்…ஆனால் நீயும் அப்படி எதிர்பார்க்கணும்னு நான் சொல்ல மாட்டேன்… அதனால உன் விருப்பம் என்னவோ அதை யோசிச்சு முடிவு பண்ணு…” என்று பார்த்திபன் சொல்ல சொல்ல ரதியோ அமைதியாக இருந்தாள்.                               

 

அவளின் அமைதியைக் கண்டு பெருமூச்சு விட்டு வெளியேற எழுந்தவன், “நீங்க என்னை லவ் பண்றீங்களா?” என்ற அவளின் கேள்வியில் அவளருகே வந்து,

 

“எனக்குத் தெரியல… அதை நீயே கண்டுபிடிச்சு எனக்கும் சொல்லு… ஆனால் என்னால ஒன்னு மட்டும் சொல்ல முடியும்…” என்றவன்,  

 

“நீ நினைக்கற மாதிரி நான் நல்லவன் இல்லை.. எந்த அளவுக்கு நல்லவன் இல்லைன்னா முதல் முதல்ல உன்னோட சிரிப்பையும் சிணுங்கலையும் பார்த்த போது அது இரண்டும் எனக்கே எனக்குன்னு வேணும்னு நினைக்கற அளவுக்கு சுயநலமானவன்… அதை விட உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத அளவுக்கு பேராசைப்பிடிச்சவன்…” என்று அதிர்ந்து நின்றவளின் கண்களைப் பார்த்து சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.   

 

நேராக பாண்டியனிடம் வந்தவன், “குந்தவைக் கிட்ட பேசியிருக்கேன்.  நீங்க எல்லோரும் பேசி முடிவு பண்ணிட்டு என்னன்னு சொல்லுங்க பெரியப்பா… அப்போ நாங்க கிளம்பறோம்” என்று கிளம்பி விட்டான்.

 

அவன் கிளம்பியதும் ரதியின் விருப்பத்தை பாண்டியன் கேட்க, “எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு… நான் யோசிக்கணும் மாமா..” என்றாள்…

 

“சரிம்மா! எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.. எல்லாம் விசாரிச்சுட்டேன். நீ சொல்றதுக்கு தகுந்த போல மற்றது எல்லாம் முடிவு பண்ணிக்கலாம்” 

 

சாந்திக்கு மகளின் முகத்தில் இருந்த குழப்பதைக் கண்டு யோசனையாக இருந்தது. எல்லோரும் சென்றதும், “என்னாச்சு அம்மு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று சாந்தி கேட்க,

 

“ஒன்னுமில்லைம்மா… இது தானே முதல் தடவை அதான்… உங்களுக்கு அவரைப் பிடிச்சிருக்கா?” என்று மற்றது மறைத்து தன் தாயின் விருப்பத்தை அறிய கேட்டாள்.

 

மகள் கேட்டதும் அவர் முகமோ மலர்ந்தது. “எனக்கு இந்த வரன் ரொம்ப பிடிச்சிருக்கு, குணமானவராத் தான் தெரியறாங்க…உங்க இரண்டு பேருக்கும் ஜாதகம் பார்க்க வேணாம்னு பெரியம்மா சொன்னதால வெறும் பெயர் பொருத்தம் தான் பார்த்தங்களாம் அவ்ளோ அமோகமா பொருந்தியிருக்குன்னு பழனி தான் சொன்னான்…”

 

[the_ad id=”6605″]

 

 

 

“இந்த இடமே தகைஞ்சால் நிறைவா இருக்கும்… ஆனால் எதுவானாலும் உன் விருப்பம் தான்…” என்று சொல்லியவர் அவள் முகத்தில் இருந்த யோசனையைப் பார்த்து அவளே யோசிக்கட்டும் என்று வெளியேறி விட்டார். மறுநாள் வந்த சிவா ரதியிடம் பேசினான். 

 

“என்ன? இந்த மாமாவோட நினைப்புலயே இன்னும் இருக்கியா? அதான் இவ்ளோ குழப்பமா?” என்று கேலி செய்தான்.

 

“உனக்கு இருந்தாலும் ஓவர் கான்ஃபிடென்ஸ் டா மாமா!” என்று அவனுக்கே திருப்பிக் கொடுத்தாள்.

 

“ம்ம்ம்ம்ம்! மாமாவோட மதிப்பு தெரியாம பேசற… சரி பரவால்ல… விடு… உனக்கு என்ன குழப்பம்?” என்று அக்கறையாக கேட்டவனிடம்,

    

“அவங்க மேல இருக்க மரியாதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்கா இல்லையான்னு இது வரைக்கும் நான் யோசிச்சது இல்லை… இப்ப அவங்க கூட கல்யாணம்னு யோசிக்கும் போது ரொம்ப குழப்பமா இருக்கு.. என்னால அதை ஏத்துக்க முடியும்னு தோணலை…” என்று ரதி சொல்ல,

 

“முதல்ல இந்த மரியாதைன்ற விஷயத்தில இருந்து வெளியே வா! நாங்க உனக்கான நல்லது எதுன்னு காட்ட தான் முடியும் ஆனால் அது உனக்கு பிடிச்சிருக்கான்னு நீ தான் யோசிக்கணும்… ஒரே ஒரு முறை எல்லாம் நிதானமா யோசிச்சுட்டு முடிவு பண்ணு…” என்றான்.

 

“ம்ம்ம் சரி சிவா!” என்றவள் அன்றிலிருந்து யோசனையில் ஆழ்ந்தாள்.

 

இரண்டு வாரம் கழித்து, 

 

அப்போது தான் அலுவகத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவள் முகம் கழுவிக் கொண்டிருக்க, வீட்டின் அழைப்பு மணி அடித்தது. முதலில் கவனிக்காதவள் அதுவும் விடாது அடிக்கும் போதுதான் உணர்ந்தாள்.

 

“வரேன்” என்று குரல் கொடுத்தவள், அவசரமாக டவலில் முகத்தை ஒற்றி எடுத்தவாறு வந்து கதவைத் திறக்க அங்கு பார்த்திபனைக் கண்டு அதிர்ந்தாள்.

 

அன்று வீட்டில் சந்தித்தப் பின் அலுவகத்தில் சந்திக்கும் போது இருவருமே எதுவும் நடந்தது போல காட்டிக் கொள்ளவில்லை..  குவார்ட்டர்ஸின் பார்க்கில் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் இருவரிடையே ஒரு புன்னகை மட்டுமே… இத்தனை நாட்கள் இல்லாமல் இரண்டாம் முறை தன் இருப்பிடம் வந்தவனைப் பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

 

ஒரு வேகத்தில் வந்து விட்டவன் அவளின் அதிர்ந்த பார்வையில் தன் முட்டாள் தனத்தை அறிந்து அவளைப் பார்த்தான். அழைப்பொலியில் அவசரமாக வந்தவள் முகத்தை இன்னும் சரியாக துடைக்காமல் இருந்ததில் முகத்தில் அங்கங்கே நீர்த்துளி… வந்த விஷயம் மறந்தவன் தன்னையும் மறந்து அவள் முகத்தையே ரசனையோடு பார்த்திருந்தான்.

 

அருகே குழந்தைகளின் கூச்சல் கேட்டதும் முதலில் சுதாரித்த பார்த்திபன்… “உங்கிட்ட கொஞ்சம் பேசணும்… கீழே பார்க்ல வெயிட் பண்றேன்.. சீக்கிரம் வா…..”  என்று அவளின் பதிலுக்கு காத்திராமல் உடனே சென்று விட்டான்.  

 

அவன் பேசணும் என்றதும் அவளுக்கு பதட்டமானது. “இப்ப ஆபீஸ்ல இருந்து வரும்போது தானே வீட்ல சொன்னேன் அதுக்குள்ள இவங்களுக்கு தெரிஞ்சுடுச்சா…” என்று மனதோடு பேசியவள் உள்ளே சென்று மறுபடியும் ஒரு முறை முகம் கழுவி தெளிவோடும் ஒரு முடிவோடும் அவனை சந்திக்க கீழே வந்தாள்.  

 

அங்கே முதல் முறை பதட்டத்தோடு இருந்தவனைப் பார்த்து, “இவங்க ஏன் இப்படி இருக்காங்க?” என்று யோசித்தவாறே அருகே சென்றாள். அவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க இவள் அவனை நேரெதிரே பார்த்தவாறு நின்றாள்.

 

“சொல்லுங்க ! என்ன பேசணும்?” என்று கேட்டவளைக் கண்ணோடு கண் பார்த்து “கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னியா?”

 

என்னவோ ஏதோ என வந்தால் இதற்குத்தானா என்றதும் அவள் மனநிலை முற்றிலுமாக மாறியது. அவனை நிதானமாகப் பார்த்துக் கொண்டே “ஆமா! உங்களைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு தான் சொன்னேன்” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி சொன்னாள்.

 

“ஏன் ?”

 

”ஏன்னா? என்ன கேட்கறீங்கன்னு புரியல?” 

 

“வீட்ல எதுவும் கட்டாயப்படுத்தினாங்களா?” என்று பார்த்திபன் கேட்க,

 

“இல்லை! இது முழுக்க முழுக்க என்னோட தனிப்பட்ட விருப்பமான முடிவு தான்” என்றவளை அவன் யோசனையாகப் பார்த்தான்.

 

“உங்க கிட்ட நான் சொன்ன எல்லா விஷயமும் அப்படியேத் தான் இருக்கு.. ஆனால் ஒரு பொண்ணு கல்யாணம் கணவன்ற உறவில் முதல்ல எதிர்பார்க்கறது நம்பிக்கையும் பாதுகாப்பும் தான்! அது உங்ககிட்ட எந்த தடையுமில்லாமல் கிடைக்கும்னு எனக்குத் தெரியும்… அதனால…” என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியிலே பேச்சை நிறுத்தி அவனைப் பார்க்க அவனோ அவளையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

கண்களில் குறும்போடு அவள் தொடர்ந்தாள். “மத்தது எல்லாம் நீங்க சொன்ன நாற்பது வருஷ வாழ்க்கையில உங்க கூட வாழ்ந்து தெரிஞ்சுக்கிறேன்…என்று ரதி முடித்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவளை ரசனையோடு பார்த்தவன், “ஓஓ! என்னென்ன தெரிஞ்சுப்ப?” என்று கேட்க, அவன் சீரியசாகக் கேட்கிறான் என்று நினைத்து,

 

“உங்களை எனக்கு எந்த அளவிற்கு பிடிக்கும்னு தெரியணும்? அதுலேயும் முக்கியமா உங்களை நான் லவ் பண்ணறேனா இல்லையான்னு தெரியணும்?இனி எனக்கு எல்லாமே நீங்க தான்ன்னு நான் பீல் பண்ணனும்? இதெல்லாம் உங்க கூட வாழும் போது ஒண்ணா ஒண்ணா கண்டிப்பா தெரிஞ்சுப்பேன்…” என்று ஆழ்ந்து சொன்னவளைப் பார்த்து மலர்ந்து சிரித்தவனின் கண்ணும் அவனோடு சேர்ந்து சிரிப்பதை ஒரு ரசனையோடு பார்த்திருந்தவளின் கையை எட்டிப் பிடித்தவன் ஒரு சுழற்று சுழற்றி தன் அருகே உட்கார வைத்து தோளோடு அணைத்துப் பிடித்து “தேங்க்ஸ்!” என்றான்.    

 

காலம் கடந்து உன் காதலை….

நான் அறிந்த போது…

நீண்ட நெடுநாள் எனக்காக காத்திருந்த….

உன் இதயத்திற்கு சம்மதம் தெரிவிக்க … 

வேறு மொழி எதுவும் எனக்குத் தெரியவில்லை…

அதனாலே மெளனமாக நின்றேன்!

மௌனமே என் சம்மதமாய்!…           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!