Skip to content
Post Views: 1,383
கீதம்
18
” ம்ம்ம். போலாமே! ” என தன்னை அறியாமல் பதில் சொல்லிவிட்டு தான் நாக்கை கடித்து, ” அய்யோ லூசு, இவர் முன்னாடி போய் இப்படி பாடிட்டேனே என்ன நினைப்பாரு” என விழி விரித்து பார்க்க
” லெட்ஸ் கோ ! “.. என கூறியபடி தனக்கென அமைத்த புதிய அறைக்குள் புகுந்து கொண்டான்.
” நான் கூப்பிட்டதும் எதுவும் கேக்காம டக்குனு கிளம்பி வந்தியே ? எந்த நம்பிக்கைல வந்த ? ” என்றான் அவள் அமர்ந்தவுடன்.
Advertisement
” நம்ம ஹாஸ்பிடல்ல எனக்கு என்ன பயம் ? “மெல்லிய குரலில் பதில் தர.
” ஓஓ., நம்ம ஹாஸ்பிடல் .., வெல், நம்ம புருஷன்னு எப்போ தோணும் உனக்கு ? ” விழி மலர ஆரவ் கேட்க.
” சார், ஏற்கனவே சொல்லிட்டேன் அப்படி சொல்லதிங்கனு, திருப்பி ஆரம்பிக்காதீங்க.?
Advertisement
” நான் எங்கம்மா ஆரம்பிச்சேன், நீ தானே கல்யாணம் பண்ணலாமா, ஓடி போகலாமானு பாட்டு பாடி கேட்ட ? ” என்றான் நக்கலாய்.
Advertisement
” பாட்டு வந்தவுடனே டக்குனு பாடிட்டேன், இது ஒரு குத்தமா ? ” எரிச்சலாய் கேட்க “
” இதே தான் அன்னைக்கு நான் கேட்டேன். அப்போ அது மட்டும் தப்பா ? ” என்றான் உடனே.
” இங்கே பாருங்க, உங்ககூட வேலை விஷயம் தவிர்த்து எதுவும் பேச மாட்டேன்னு முடிவு பண்ணி இருக்கேன். ப்ளீஸ், டென்ஷன் ஆக்காதிங்க.” வந்த கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.
Advertisement
” அப்போ உன் பதில் தான் என்ன? ” மீண்டும் கேட்க.
” முடியாதுன்னு சொல்லிட்டேனே? ” என்றாள் மீண்டுமாய்.
” முடியாதுன்னு தானே சொல்ற, பிடிக்கலைன்னு ஒரு தடவை கூட சொல்லவே இல்லையே? ” அவள் புறம் சரிந்து கையை மேஜையில் ஊன்றி கண்ணோடு கண் நோக்க.
அவன் கண்களை காண முடியாமல் தலை குனிந்தவள் ” இப்போ என்ன உங்களை புடிக்கலைனு சொல்லணும், அவ்வளவு தானே, சொல்றேன்,” என்றவள் அவன் கண்ணை பார்த்து ” எனக்கு உங்களை.. ” அதற்கு மேல் வார்த்தை வெளிவரவில்லை. தொண்டை குழியில் சிக்கி கொண்ட மீன் முள்ளாய் தடுமாறி வேறு புறம் பார்க்க.
” வார்த்தை தொண்டையை விட்டு வெளியே வர மாட்டேங்குதே ? என் நந்திதா இப்படி இருக்க மாட்டாளே? ” தாடையில் கை வைத்து யோசனை செய்வது போல செய்ய.
” நான் ஒன்னும் உங்க நந்திதா இல்லை ” என்றாள் சட்டென்று.
அவள் கூறியதை அசட்டை செய்தவன் ” கமான்மா, அப்போ பிடிக்கும்னு சொல்லு.” என்றான் சிரிப்பை உள்ளிதழில் அடக்கி கொண்டு.
” டேய் !., ” என ஆரம்பித்தவள் ” சார்! ப்ளீஸ் திருப்பி திருப்பி என்னை ஹர்ட் பண்ற மாதிரியே பேசாதீங்க. என்னால முடியல. “என்றாள் இறைஞ்சுதலாய் .
” எனக்கு பொய் சொன்னா சுத்தமா பிடிக்காது. உண்மையை சொல்லிட்டு போ. உன்னை வேறேதுவும் கேட்க மாட்டேன்.” அழுத்தி கேட்க.
இல்லை என தலையை மட்டும் அசைத்தாள்.
” உனக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும்.” என்றவனை கண்டு
” ஐயோ. அப்படிலாம் இல்லை “
” நீயா வந்து உன் காதலை சொன்னா மட்டும் தான் நம்ம கல்யாணம் நடக்கும். அது எவ்ளோ நாள் ஆனாலும் நான் வெயிட் பண்றேன். இன்னும் கொஞ்ச நாள்ல நான் பாரின் கிளம்பிருவேன். அப்புறம் மறைஞ்சு நின்னு கூட என்ன நீ பார்க்கவே முடியாது, நல்லா யோசிச்சு முடிவெடு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் டைம் கொடுப்பேன். அப்புறம் என் முடிவு தான். அதை மாத்திக்கவே மாட்டேன். ” அழுத்தமாய் அவள் விழியோடு விழி பார்த்தபடி இருந்தவன் அனைத்தும் பேசி விட்டு சம்மதமா என தலையாட்டி கேட்க இவளும் தன்னிசையாக தலை அசைத்தாள்.
” இப்போ போய் என்னை சைட் அடிக்கிற வேலையை பார்க்காம, உங்க வேலையை மட்டும் பாருங்க மேடம். ” மீசையை வருடுவது போல வாயை மூடி, புன்னகையை இதழுக்குள் மறைத்து கொண்டு கேட்க .
” நான் ஒன்னும் சைட் அடிக்கல ” வாய்க்குள் மெதுவே முணங்க
” ஓகே. சைட் அடிக்கல, சைடுல பார்த்த. இப்போ கரெக்டா, ” என சிரித்து கொண்டே கேட்ட ஆரவ்வின் கேலியில் முகம் கன்றி, சட்டென அறையை விட்டு வெளியேறி விட்டாள்.
” இவனை என்ன பண்றதுன்னே தெரியல. என்னையும் பேசியே கவுத்துருவான் போல. பீ ஸ்ட்ராங் நந்து, இல்லனா நீயே அவன்கிட்ட போய் ஓகே சொல்லிருவ.” விடாமல் மனதில் உருபோட்டு கொண்டே இருக்க, அவன் புறம் திரும்பாமல் வேலையும் அவளை உள்ளிழுத்து கொண்டது.
” அவனவன் பிக்கப், ட்ராப்ன்னு போய்ட்டு இருக்கான். ஒரே ஒரு பொண்ணை லவ் பண்ணி, கல்யாணம் பண்ண கேக்குறதுல்ல, நான் படுற பாடு இருக்கே. கடவுளே! ” சுகமாய் சலித்தபடி, சிரித்த முகத்துடன் மாடிக்கு சென்றவன் சாப்பிட்டுவிட்டு விரைவில் கீழே இறங்கி வந்தான்.
அப்போதும் வேலை செய்து கொண்டே தான் இருந்தாள். அவள் அவனை பார்த்து கொண்டிருந்த மீன் தொட்டியின் பிம்பத்தின் வழி தான் இவனும் அவளை உரிமையாக அமர்ந்து ரசித்து கொண்டு இருந்தான். லைட் ஆரஞ்சு அனார்கலி சுடிதாரில், கழுத்தின் ஓரத்திலும், கை முழுவதும் எம்ப்ராயடரி செய்யப்பட்டு, அவளே வடிவமைத்த ஆடையில் தான் இன்றும் வந்திருந்தாள். இடையின் அழகை கச்சிதமாக எடுத்து காட்டும் வண்ணம், கரெக்டாக அவளுக்கு பொருந்தி இருந்தது. கூந்தலை இறுக்கி பின்னி அனைத்தையும் சுருட்டி, ஒற்றை கேட்ச் கிளிப்பில் அடக்கி இருந்தாள்.
கைகள் தன்னிசையாக கீபோர்டை தட்டி கொண்டிருக்க, எதிரே பேஷண்ட் பைலை பார்த்து கொண்டே, அங்குமிங்கும் உருண்டு செல்லும் விழிகளின் வழி நாட்டியங்கள் அரங்கேற, அவள் இதழ் பாட்டினை முனுமுனுத்து கொண்டே அத்தனை வேகத்தில் வேலையை செய்து கொண்டிருந்தாள். இடையில் வரும் போன் கால்களுக்கு பதில் சொல்லியபடியும், கடந்து செல்லும் நோயாளிகளின் கேள்விகளுக்கு பதில் குறி கொண்டும் இருந்தவள், ஓர பார்வையால் அவன் தன்னை காண்பதை, கண்டும் காணாமல் தான் இருந்தாள்.
அவளின் பிரத்தியேக தொலைபேசி ஒலியெழுப்ப, ” ம்ம்மா.., என்னம்மா இப்போ கால் பண்ணிருக்க? என்றாள் எடுத்தவுடன்.
” !!!!”
” இல்லமா, இன்னும் சாப்பிடல, இனிமே தான் போகணும்.”
” !!!”
” மாத்தி விட ஆள் யாரும் இல்லைமா. கொஞ்ச நேரத்துல வந்துறேன்.”
“!!!”
” ஓன் ஸ்ரீ ஒரு நாள் சாப்பிடாம இருந்தா ஒன்னும் ஆயிரமாட்டா, வந்துர்றேன்மா .” என வைத்து விட்டாள்.
அவளை பார்த்து கொண்டு இருந்தவன் ” இன்னும் சாப்பிடாம என்ன பண்ரா இவ ” முணங்கி கொண்டே இண்டர்காம் அழைப்பில் அழைத்தவன், அவள் எடுத்தவுடன் ” உன் வீட்டுல போய் சாப்பிட்டு வர்றியா, இல்லை நம்ம வீட்டுல இருந்து கொண்டு வந்து தரவா,” என்க. ஒரு நொடி எதுவும் சொல்லாமல் இருந்தவள் ” நான் போய் சாப்புட்டு வர்றேன் சார். ” என வைத்துவிட்டு ஓடினாள். நான்கு வீடு தள்ளி இருக்கும் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வர பத்து நிமிடம் ஆகுமா?. வந்தவள் அவனை பார்வையால் தீண்டி கொண்டே தலையசைத்து சென்று அமர்ந்தாள்.” பரவாயில்லையே மேடம் பார்வையாலேயே பதில் சொல்ராங்களே. ” மெல்லிய மென்புறுவல் இதழில் தோன்ற கேஸ் எதுவும் அடுத்து வராததால் கால் செய்யும்படி சொல்லிவிட்டு மேலே சென்று விட்டான்.
இவன் ஊருக்கு வந்த உடனே காண்பதற்கு மூர்த்தியும் வந்து விட்டார். அவரோடு இணைந்து பொதுவாய் பேசி கொண்டிருக்க இடையில் நந்திதா பற்றி பேச்சு வந்தது.
” நந்து கீழே இருக்காளா? , அவகிட்ட கொஞ்சம் பேசணும்.” சாவித்ரியிடம் கேட்க.
” இன்னைக்கு புல்லா இங்கே தான் இருக்கா. மதியம் கூட வீட்டுக்கு போகல. எதுக்கு கேக்குற அண்ணா ?”
” ஆக்சிடென்ட் கேஸ் டீடெயில்ஸ் எடுத்து கொடுக்க சொல்லி இருந்தேன். ஆனந்த் இன்னும் கொண்டு வரல. இவகிட்ட கேட்டா டக்குனு எனக்கு மெயில் அனுப்பிருவாமா .”
” ஆமா அங்கிள், உங்களுக்கும் நந்து மேடம் குலோசா. அன்னைக்கு கூட கேம்ப்ல உங்க பேரை சொல்லி தான் அந்த மூர்த்தியை கூட மிரட்டினாங்க.”
“ஹ்ம்ம்., என் பெயரை உன்னை விட அவ தான் அதிகம் யூஸ் பண்ணிருக்கா.? ” என்றதை கேட்டவன் புரியாமல் அவரை நோக்க.
” அவகிட்ட யார் பிரச்சனை பண்ண வந்தாலும் என் பெயரை தான் சொல்லுவா. என்னையே மிரட்டி வேலை வாங்குவா, அதை பார்த்து கார்பொரேஷன் ஆபீஸ்ல என் வீட்டு பொண்ணுனு கூட அவளை நினைச்சிட்டாங்க. என்றார் சிரித்து கொண்டே.
அவர் கூறியதை கேட்டதும் ” நீங்க எனக்கு தானே மாமா, அவளுக்கு இல்லையே.” அவளை பற்றி உரிமையாய் பேசியதும் பொறாமையில் இவன் கேக்க.
” நான் கரெக்டா தான்டா சொல்லுறேன்” தொடையில் தட்டி அவனை பார்த்து விஷமமாய் சிரிக்க. இவனுக்கும் கூட வெட்கத்தில் முகம் சிவக்க ஆரம்பித்தது. அடுத்து அவளை பத்தி பேச்சினை எடுக்காது, திசையை மாற்றி வேறு பேச்சை தொடர்ந்தார்.
” இந்த வீக்ல விசா வந்துரும்னு நேத்து சொன்னான். அவனை போய் ஒரு தடவை பார்த்துட்டு வந்துரு. இல்லின்னா டிலே பண்ணுவான்.” என்றவரிடம்
” ஓகே அங்கிள். நாளைக்கு போறேன். “இருவருக்கும் காபியை எடுத்து கொண்டு வந்தமர்ந்த சாவித்திரி,”அண்ணா, நீ கீழே போனா, என் ட்ராவுல ஒரு பொண்ணோட கவர் இருக்கும். நந்துவை எடுத்துட்டு வந்து தர சொல்லு.”
“பொண்ணு போட்டோவா, யாருக்கு ” என்றார் உடனே.
” இவரோட ஒன்னுவிட்ட அக்கா, அவங்க ஓரகத்தி பொண்ணு போட்டோ கொடுத்துருந்தாங்க. நம்ம கண்ணாவுக்கு தான்.”
” ஹ்ம்ம்., என்ன படிச்சிருக்கா?
” டாக்டர்க்கு மூணாவது வருஷம் படிச்சிட்டு இருக்கா. ரொம்ப அழகா வேற இருந்தா, நம்ம ரம்யா நந்துக்கு கூட ரொம்ப புடிச்சது” என்றவரின் பதிலில் கோப பார்வை பார்த்தான்.
” இப்போ எதுக்கு பார்க்கிறே நீ? அவன் தான் ஊர்க்கு போறானே.?”
” அவன் ஊருக்கு போயிட்டு வரும் போது வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிட்டு வந்துருவானாம். இவங்க அக்காக்கு பயம். கொண்டு வந்து கொடுத்து இப்போவே முடிக்கனுமுனு நிற்கிறாங்க. ? அவரின் பேச்சிலேயே இடையில் பாதியில் எழுந்தவன் ” அம்மா வேணாம்னு சொல்லுங்க, எனக்கு கீழே கேஸ் இருக்கு., நான் போறேன் ” என விருட்டென கிளம்பி சென்று விட்டான்.
அவன் சென்ற திசையில் பார்த்தபடியே ” நடக்காத விசயத்துக்கு எதுக்குமே பயப்படுறீங்க ? என்றார் கேள்வியாய்.
” நாங்க வேண்டாம்னு அப்போவே சொல்லிட்டோம்னா. அடுத்த வாரம் ஒரு மேரேஜ் வருது, அப்போ நேர்ல பார்த்து வேணாம்னு சொல்லி நம்மளே போட்டோவை திரும்ப கொடுத்துரலாம்னு இவரு சொல்லிருக்கார். அதுக்கு தான். “
“அடப்பாவி போனவன் முழுசா கேக்காம போய்ட்டான்னே, இப்போ என்ன பண்ண போறேனோ தெரியல, ” மனதில் எண்ணியவர் ” சரிம்மா., நீ பார்த்துக்கோ நான் கிளம்புறேன்” என்றபடி கீழே செல்ல ஆரவ்வை பின் தொடர்ந்து நந்து அவன் பின்னால் செல்வதை பார்த்தபடி வெளியேறி விட்டார்.
அவளிடம் பேசிவிட்டு பத்து நிமிடத்தில் வெளிவந்தவன் op ரூமுக்கு செல்ல, அரைமணி நேரம் கடந்தே நந்திதா வெளியே வந்தாள். அவளும் அமைதியாக சென்று அமர்ந்து வேலையை தொடர, சிறிது நேரத்தில் அறுவை சிகிக்சை முடித்து வெளியே வந்த ரவி, அவளை பார்த்தவுடன் நேரத்தை பார்வையிட்டு, அவளின் அருகே சென்று “உனக்கு எத்தனை தடவை சொல்றேன். காலையில் எட்டு மணியிலிருந்து இங்கேயே சுத்திட்டு இருக்க. முகத்தை பாரு, வாடி போய் டயர்டா தெரியுது. போய் ரெஸ்ட் எடுத்துட்டு மார்னிங் வா. கிளம்பு ” என மூச்சு விடாமல் பேச.
அவரை பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினாள். ” இன்னைக்கு மழை கொட்ட போகுது. என் நந்து பொண்ணு உடனே தலையாட்டுறா. ” அவளை கேலி செய்தப்படி அறைக்கு சென்றவரை அடுத்து நிமிர கூட நேரமின்றி கேஸ் அவரை முழ்கடித்தது.
இரவு ஒன்பது மணியளவில் வீட்டுக்கு வந்தவன் அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்தியில் போனை எடுத்து பார்க்க ” நீங்க சொன்னதை நான் ஏத்துக்கிறேன். ஆனால் ஊருக்கு வர்றது உங்க விருப்பம் தான். நான் இதில் எதுவும் சொல்ல மாட்டேன். என வந்ததை பார்த்தப்படியே படுக்கையில் கவிழ்ந்தான்.
error: Content is protected !!