Skip to content
Post Views: 2,134
6(1)
தன் முழுமதியை பிரகாசமாக்கி ஊரையே வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தான் நிலவரசன்.
எல்லாரும் உறங்கிய பின் தீரனுக்காக இருவரும் காத்திருந்தனர். சுப்ரியா மறைந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
தீரன் வரவும் அக்சரா செழியனுக்கு சைகையை பாஸ் செய்தாள். அவன் வைசு அறைக்கு பதட்டமாக இருப்பது போல சென்றான்.
Advertisement
தீரன் முன் சென்று நின்றாள் அக்சரா.
Advertisement
மாமா, அக்கா உங்களிடம் பேசணுமாம். உங்க அறைக்கு போகும் முன் அவளை பார்த்துட்டு போங்க. அவ வீட்டுக்கு பின்னாடி இருக்கா..
Advertisement
அங்க என்ன செய்றா?
“உங்களிடம் ரகசியம் பேச நினைக்கிறாளோ!” அக்சரா சிந்திப்பது போல தாடையில் கை வைத்து நின்றாள்.
“சரி, நீ போ. தூங்கு” அவன் சொல்லி வீட்டின் பின் சென்றான்.
வைசு, “அண்ணாவுக்கு பயங்கரமா அடிபட்டிருக்கு. அவர் வீட்டுக்கு பின் அமர்ந்திருக்கார். நீ முதல்ல போய் பாரு. நான் சித்தப்பூவை அழைச்சிட்டு வாரேன்” பரபரப்புடன் பேசினான் செழியன்.
“என்னாச்சு? எதுனால?” அந்த காலுடன் அவளை அறியாமல் கொஞ்சமும் சிந்திக்காமல் வீட்டின் பின் விரைந்து நடந்தாள் வைஷ்ணவி.
“அடப்பாவிகளா?” சுப்ரியா வாயில் கை வைத்து அவள் அக்கா பின் ஓடினாள்.
வீட்டின் பின் அமர்ந்திருந்த இளந்திரையனுக்கு யாரோ வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். பதட்டமாக காலில் காலணி கூட அணியாமல் வேகமாக அவனை நோக்கி வரும் வைஷ்ணவியை பார்த்து, பிரச்சனை என்று அவன் பதட்டமாக எழுந்து அவளை நெருங்கினான்.
தீரன், என்னாச்சு? எங்க அடிப்பட்டிருக்கு? யார்? எங்களை கொல்ல வந்தவனா? பெரிய அடியா? நெஞ்சு ஏறி இறங்க அவனை ஆராய்ந்தாள். தீரனுக்கு அவள் பேச்சும் புரியவில்லை. அவள் நடத்தையும் புரியவில்லை.
“உங்களுக்கு அடியில்லைல்ல? சட்டையை கழற்றுங்கள் பார்க்கலாம்” அவன் சட்டை பொத்தான் ஒன்றை பிரித்தாள். அவள் கையை பிடித்த இளந்திரையன் “சிட்டு என்னாச்சு? உனக்கு ஒன்றுமில்லையே!” கேட்டான்.
“இல்ல, உங்களுக்கு தான் அடிபட்டிருக்குல்ல?” கண்கலங்க அவனை பார்த்தாள். அவன் ஏதும் பேசாமல் அவளது கலங்கும் கண்களையே ஆழ்ந்து நோக்கினான்.
கண்ணீர் அவளை மீறி வரவும் சிந்தித்த இளந்திரையன், “சிட்டு..எனக்கு ஒன்றுமேயில்லை. நான் நல்லா இருக்கேன். எனக்கு சின்ன அடி கூட இல்லை. உனக்கு யார் சொன்னா?” அவன் கேட்க, “சீனியர் தான் சொன்னாங்க” என்றாள்.
அக்சரா அவனிடம் சொன்னதை எண்ணியவனுக்கு இருவரின் தில்லாலங்கடி வேலையும் புரிந்து போனது.
“நீ வா. உனக்கு கால் வலிக்கப் போகுது” அவளை நடக்க சொல்ல, அவள் காலில் கல் குத்தியது.
ஷ்ஷ்..அவள் சத்தமிட வைஷ்ணவியை தூக்கி, “தப்பா எடுத்துக்காத சிட்டு. இங்க கல்லா தான் இருக்கும். அறையில உன்னை இறக்கி விட்டுடுறேன்” என்று சொல்லி நடந்தான்.
அவனையே கண்டு கொண்டே வந்த வைஷ்ணவி, “உங்களுக்கு நிஜமாகவே ஒன்றுமில்லைல்ல?”
உன்னை நான் தான் தூக்கி நடக்கிறேன். எனக்கு ஒன்றுமில்லை. செழியா ப்ரான்க் செய்திருக்கான்.
ப்ரான்க்கா?
இருவரும் பேசிக் கொண்டே செல்ல, தீரன் வைஷ்ணவியை தூக்கி செல்வதை பார்த்து அதிர்ந்தாலும் “அவளை நல்லா பார்த்துக்கிறானே! அக்கறையோட இருக்கானே!” என்று அவர்களுக்கு தெரியாமலே அவர்களை பின் தொடர்ந்தாள் சுப்ரியா.
வைஷ்ணவியை அறையில் விட்டு, அவள் கதவை தாழிடவும் இளந்திரையன் அவனறைக் கதவை திறந்தான். உள்ளே செழியனும் அக்சராவும் இருந்தனர்.
என்னோட அறைக்கு சாவி உங்களிடம் எப்படிடா வந்தது? இளந்திரையன் கேட்டான்.
“மாமா கொடுத்தாங்க” செழியனை பார்த்தாள்.
ஏன்டா?
அண்ணா, நீ நம்ம குடும்பத்தை இந்த அளவிற்கு நேசிப்பன்னு தெரியல. வைசு லக்கி தான். இன்னும் அவளது எந்த பொருளையும் கீழே போடாமல் வச்சிருக்க? செழியன் கேட்க, வெளியே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சுப்ரியா குழம்பினாள்.
அது என்னோட பொக்கிஷம்டா.
“மாமா, அக்காகிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்ல்ல?”
இல்ல தேனும்மா, அவள் எல்லாத்தையும் மறந்துட்டா. அவளிடம் இப்ப சொல்லி அவ நம்பலைன்னா என்னால தாங்க முடியாது.
“அதான் புகைப்படமெல்லாம் இருக்கே!”
இப்பொழுதிருக்கும் உலகில் இதெல்லாம் உருவாக்குவது சாதாரணம்..
ஆமா அண்ணா. ஆனால் அண்ணா எங்கோ ஓர் மூலை வைசுவுக்கு உன் மீது பாசம் இருக்கு. அது அவளுக்கே தெரியல.
இருக்கும். அவ நம்ம குடும்பத்து பொண்ணு இல்லாமல் போகுமா? நம்ம தலைமுறையில்ல அவ தான் நம்ம வீட்டு முதல் பொண்ணு. அதனாலவே நம்ம வைஷ்ணவி தேவி அம்மா பெயரை அவளுக்கு வச்சாங்க. நம்ம ஊருக்கே அவ தேவியம்மா தான்.
மாமா, அக்கா புரிஞ்சுப்பா. நாம சொல்லிடலாம்..
இல்ல தேனும்மா. அவன் கண்ணுல சிட்டு படவே கூடாது. ஒன்று அவன் திருந்தணும் இல்லை சாவணும். அப்புறம் தான் சிட்டுவை நான் வெளியவே விடுவேன். அவள் என்னை என்ன பேசினாலும் பரவாயில்லை.
யாரண்ணா சொல்ற? யாரு அவன்? மகி குடும்பத்து ஆளா?
இல்லை…அகில்..
மாமாவா?
விரக்தியுடன் அவனை பார்த்த இளந்திரையன் அவனை மாமான்னு சொல்லாத. அவன் நம்ம வீட்டு பொண்ணுங்களை கொல்லும் எண்ணத்துடன் தான் சுத்துறான். அவனுக்கு சிட்டு வேணுமாம்..பல்லை கடித்தான்.
மாமா, ரிலாக்ஸ்..கூல் அவன் தோளில் அக்சரா தடவினாள்.
அவள் கையை எடுத்து விட்டு, நீங்க என்ன செய்ய பாக்குறீங்க? இப்படி செய்தால் அவளுக்கு என் மீதான அபிப்ராயம் மட்டுமல்ல உங்க மீதான நம்பிக்கையும் போயிடும். விட்ருங்க..
படாரென கதவு திறக்கும் சத்தம் கேட்டு அனைவரும் திகைத்தனர்.
திகைப்பொன்றை மிதித்தாற் போல அனைத்தையும் கேட்டு நின்ற சுப்ரியா படாரென கதவை திறந்தாள். மூவரும் அவளை பார்த்து அதிர்ந்தனர்.
“குட்டிம்மா” இளந்திரையன் அழைக்க, அவனிடம் ஓடி வந்து “நீங்க யாரு? நீங்க எல்லாரும் எங்களுக்கு சொந்தமா? ஷரா அக்கா உங்களை எதுக்கு மாமான்னு அழைக்கிறாள்?” கேள்வி மீது கேள்வி கேட்டாள் படபடப்புடன்.
அவளை அமர வைத்து அறையை காட்டி அவளிடமும் அனைத்தையும் கூறினான். ஆனால் அகில் யாரென்று மட்டும் கூறவில்லை தீரன் அவளிடம்.
அப்படின்னா, நீங்க எல்லாரும் எங்களுக்கு மாமாவா? உங்க சித்தப்பா..
அவரும் உனக்கு மாமா தான். தாய் மாமா..
“தாய்மாமாவா?” கண்கலங்க இளந்திரையன் செழியனை அணைத்துக் கொண்டாள் சுப்ரியா.
“யாரும் சிட்டுவிடம் உண்மையை சொல்லாதீங்க. நானே சொல்லும் நேரம் வரும். சொல்லிடுறேன். இப்ப போங்க” சுப்ரியா கண்ணீரை துடைத்து விட்டு அவளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி அவன் அவனது பழைய சிட்டுவின் நினைவுகளுக்குள் சென்றான்.
வைஷ்ணவியின் தாய்க்கு குழந்தை பிறந்தது இதே வீட்டில் தான். எல்லாரும் வேலையில் இருக்க, வீட்டு பொம்பளைங்களும் செழியன், தீரனும் தான் இருந்திருப்பார்கள்.
பிரசவம் பார்க்கும் பாட்டியை அழைத்து வந்தார் தீரனின் தாய். எல்லாரும் வைஷ்ணவி அம்மாவை சூழ்ந்திருக்க பயத்துடன் இளந்திரையன் அமர்ந்திருந்தான். அவனுக்கு வயது ஐந்து. அவனுடன் இரு வயது பையனாக செழியன் இருந்தான்.
குழந்தை பிறந்ததும் பிரசவம் பார்த்த பாட்டி குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்து, வைஷ்ணவியின் தந்தையை தேடினார். அவர் இல்லை என்றதும் இரு குழந்தைகளையும் பார்த்து இளந்திரையனை பார்த்தார். குழந்தை அழுது கொண்டிருந்தது.
“தீரா, நீ கட்டிக்க நம்ம தேவியம்மா பிறந்திருக்கா” என்று அந்த ஐந்து வயது சிறுவன் கையில் குழந்தை வைஷ்ணவியை வைத்தார்.
பாப்பா அழுது?
“அழுவா. இதோ உன்னோட பாட்டி வந்துட்டா” அவர் கிளம்பினார்.
அந்த குடும்பத்தின் ஆணிவேராக திகழும் தீரனின் பாட்டி மட்டுவார்குழலி தீரனிடம் வந்தார்.
“ஏய்யா, பிள்ளைய குடு. பொட்ட புள்ள பிறந்திருக்காம். நம்ம குல தேவியம்மாவே வந்துட்டா” பூரிப்புடன் குழந்தையை வாங்க வந்தார்.
“பாட்டி, நான் பாப்பாவை தர மாட்டேன். பாப்பா எனக்கு தான்” தீரன் பிடிவாதம் செய்தான்.
“பேரான்டி, என்னோட பேத்தி உனக்கு தான். இப்ப உன்னால அவளை பார்த்துக்க முடியாது. வளர்ந்த பின் பார்த்துக்கோ” அவன் கையிலிருந்து குழந்தை வைஷ்ணவியை வாங்கினார்.
வைஷ்ணவியின் தாயருகே தீரன் அம்மாயிருக்க, அவன் சித்தி பாட்டியிடம் வந்து வைஷ்ணவியை பார்த்தனர்.
“சக்கர தண்ணீ எடுத்துட்டு வாங்கடி” பாட்டி சொல்ல, அவன் சித்தி மேகலை அடுக்கலைக்கு சென்றார்.
சக்கர தண்ணீ எதுக்கு பாட்டி? தீரன் கேட்டான்.
என்னோட பேத்தி நம்ம வீட்டுக்கு வந்திருக்கால்ல..அதான் சக்கரத்தண்ணீ..
“உங்க அப்பனுகள எங்கடா? ஒருத்தனையும் காணோம். உன்னோட தாத்தாவையும் காணோம்” பாட்டி புலம்பித் தள்ளினார்.
சக்கர தண்ணீ வரவும்..பாட்டி தண்ணீரை தொட்டு பாப்பா வாயில் வைக்க, அழுகையை நிறுத்தி சப்பு கொட்டினாள். அதை பார்த்த தீரன்.. பாட்டி..நானு..நானும் பாப்பாவுக்கு தாரேன்..
தீரா அவன் தாய் அதட்ட, இருடி புள்ள ஆசைப்படுதுல்ல. கொடுக்கட்டும். தீரன் குணமும் வரட்டுமே!
என்ன பாட்டி?
நீ வச்சா உன்னிடம் உள்ள ஏதாவது நல்ல எண்ணம் பாப்பாவுக்கும் வரும்..
பாட்டி, நான் மறுக்கா தரவா?
பேரான்டி..இது சம்பிரதாயம். உன்னோட மாமன் வரட்டும்..
ஆண்கள் வந்தனர். வைஷ்ணவி தந்தையுடன் போட்டியிட்டுக் கொண்டு தாத்தா காளையன் தான் வைஷ்ணவிக்கு மூன்றாவதாக சக்கர தண்ணீ கொடுத்தார். அதன் பின் எல்லாரும் கொடுத்தார்கள். சப்புக் கொட்டியது குழந்தை.
அது சப்பு கொட்டும் அழகை ரசித்து பார்த்தான் இளந்திரையன்.
நாட்கள் சென்றது. வைசுவும் வளர்ந்தாள். தீரன் செழியனும் வளர்ந்தனர். இருவரும் பள்ளிக்கு சென்று வந்தனர்.
வந்தவுடன் வைஷ்ணவியை தான் தேடுவான். மற்றவர்கள் போல அவனும் முதலில் வைஷ்ணவியை “தேவி” என்று தான் அழைத்திருந்திருப்பான்.
அன்றொரு நாள் பள்ளியில் சிட்டுக்குருவி பற்றிய வகுப்பு நடந்தது. மிகவும் குட்டியாக அழகாக இருக்கும் ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்க, அவனுக்கு எண்ணம் வைசுவிடம் சென்றது.
“தேவியும் குட்டியா அழகா தான இருக்கா” வீட்டிற்கு வந்து வீட்டினரிடம் அதை பற்றி பேசினான். அவன் தந்தையோ என்னோட மருமக அழகாக தான இருப்பா?
“சிட்டுக் குருவி அழிய தொடங்கிருச்சாம் பாட்டி” ஆர்வமுடன் அவன் பேச, மேகலை சிட்டுக் குருவி பற்றி அவருக்கு தெரிந்ததை கூறினார்.
அன்றிலிருந்தே எல்லார் முன்னும் வைஷ்ணவி தேவியை சிட்டு..சிட்டு..சிட்டு.. என்றே அழைக்க தொடங்கினான் இளந்திரையன். எல்லாரும் சிரித்து அவனை கேலி செய்திருப்பர். எல்லார் நினைவும் வர எழுந்து அமர்ந்தான் இளந்திரையன்.
பிறந்த போது கையில் தூக்கிய அவன் சிட்டுவை உணவுண்ணாமல் மயங்கிய நிலையிலும், அவளின் வலியிலும் தூக்கியதை எண்ணினான். அவளால் பேச முடியவில்லை என்றும் எண்ணினான். இப்பொழுது அவனுடன் இருக்கும் வைஷ்ணவியை பற்றி சிந்தித்தான். அவனுக்கு சினம் துளிர் விட்டது..
சிட்டு இங்கிருந்து போனதால் தான் அவளுக்கு இந்த கஷ்டம். நம்ம யாழு, பாட்டி, சித்தியும் என்ன கஷ்டப்படுறாங்களோ? என்னோட குடும்பத்தை கஷ்டப்படுத்திய அந்த குடும்பத்தை அழிக்காமல் விட மாட்டேன்.
இனி என் ஆட்டம் ஆரம்பம்..சினமுடன் கூறினான்.
தன் குடும்ப ஆண்கள் இல்லாமல் வளர்ந்த சுப்ரியாவிற்கு தீரன் தன் மாமா என்றதுவும் அவ்வளவு மகிழ்ச்சி. விவரிக்க முடியவில்லை. உடனே நண்பர்களிடம் கூற வேண்டும் என்று எண்ணம் போன போக்கில் கடுப்பாகி..
வேண்டாம் அவங்களையும் பிரச்சனையில்ல இழுத்து விடக் கூடாது. யாருக்கும் கால் பண்ணவும் கூடாது. யார் அழைத்தாலும் எடுக்கவும் கூடாது எண்ணினாள்.
அப்படின்னா இது நான் பிறந்த ஊர். எனக்கு பெரிய மாமா, மூன்று மாமாக்கள் இருக்காங்க.
எல்லாரும் ஓ.கே. இந்த மாறனையும் மாமான்னா அழைக்கணும்? சிந்தித்தாள். பின் முடிவெடுத்து அவனை மட்டும் மாமான்னு அழைக்கக் கூடாது.
தீரன் மாமா கூறியது போல மாறனுக்கு நாம எதையும் சொல்லக் கூடாது. தெரிஞ்சா மேலும் என்னோட சண்டைக்கு வந்திருவான். அப்புறம் அக்காவும் மாமாவும் தான் கஷ்டப்படுவாங்க.
அக்காவையும் மாமாவையும் காதலிக்க செய்யும் முயற்சியில் தான செழியன் மாமாவும் ஷராவும் இருந்தாங்க. அவங்களோட சேர்ந்து என்னோட வைசு அக்காவை தீரன் மாமாவோட சேர்த்து வைக்கணும் எண்ணினாள் சுப்ரியா.
சுப்ரியா மகிழ்ச்சியில் உறங்காமல் வெளியே வந்தாள். தீரன் தூங்க முடியாமல் மனவேதனையில் வெளியே வந்தான்.
மாமா, நீங்க தூங்கலையா?
உறக்கம் வரலைடா..
என்னாச்சு மாமா?
ஒன்றுமில்லை. “எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே! செய்வீயா குட்டிம்மா?”
என்ன மாமா, சொல்லுங்க ஜமாய்ச்சிடலாம்..
நீ சிட்டுவை விட்டு விலகி இருக்கணும்..
“மாமா” அதிர்ந்து எழுந்தாள் சுப்ரியா.
நீ விலகி இரு..
“என்னால முடியாது மாமா” கண்ணீருடன் சுப்ரியா கூற, அவள் கையை பிடித்து அமர்த்தியவன், “நீ விலகி இருந்தா தான் பேச முயற்சியாவது செய்வா?”
பேசவா? அக்கா பேச முடியாதுல்ல?
யார் சொன்னா சிட்டு பேச முடியாதுன்னு?
டாக்டர் சொன்னாங்க..
நாம அவளை பேச வைக்கணும்.
ம்ம்! ஆனால் நான் விலகி இருந்தால் எப்படி அக்கா பேசுவா?
முயற்சிப்பா.
என்ன?
குட்டிம்மா, அவளுடன் அதிகம் நீ மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்க. அதனால கொஞ்சம் கூட பேச முயற்சிக்க மாட்டேங்கிறா..
மாமா, இப்ப நிக்கியும் இருக்கா. நானில்லைன்னா அவளை பார்த்துட்டு இருப்பா..
ஆமா..பாப்பா தூங்கும் நேரம் கண்டிப்பாக யாரிடமாவது பேச வருவாள். அவளை அவாய்டு பண்ணுங்க. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பேச முயற்சிப்பா..
மாமா, எத்தனை நாள்?
பேசும் வரை. அவள் பேசிட்டால் போதும். அவள் வாழ்க்கைக்கான சிறுநிறைவு என் மனதிற்கு ஆறுதலளிக்கும்.
மாமா..
உறங்கு…இரு நாள் தான். பள்ளி தொடங்கப் போகுது..
ஆமா மாமா, புது இடம், ப்ரெண்ட்ஸ், புது பாடம்..நான் பன்னிரண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கப் போகிறேன் சத்தமிட்டாள்.
ஷ்..எல்லாரும் தூங்குறாங்கம்மா..
சாரி மாமா, தலையை தேய்த்து க்யூட்டாக சுப்ரியா கூற, புன்னகையுடன் அவளை அவளறைக்கு அனுப்பி அவனறைக்கு சென்றான்.
சுப்ரியா பள்ளிக்கு கிளம்பும் முந்தைய நாள்.
அறையிலிருந்து வெளியே வந்தாள் வைஷ்ணவி. அக்சரா அருகே அமர்ந்து சுப்ரியா ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
அடுக்கலைக்குள் சென்று பாலை எடுத்தாள்.
“அம்மா, எல்லாரும் காபி குடிச்சிட்டாங்க” சுந்தரம் சொன்னார்.
எல்லாருமா?
ஆமாம்மா..
சுபா..
ம்ம் அவங்க தான் முதல்ல காபி போட சொல்லி குடிச்சாங்க. “பெரிய சார்?” தீரனை கேட்டாள்.
தீரா கிளம்பிட்டார்ம்மா…
அதற்குள்ளா?
ஆமாம்மா..அவள் முகம் வாட, செழியன் மாறனை கேட்டாள்.
செழியன் அய்யா பண்ணைக்கு போயிருக்கார். மாறன் இங்க தான் அறையில இருக்கார்..
அப்புறம் அந்த சார்..
பெரியய்யா வேலைக்கு கிளம்பீட்டார்.
வருத்தமுடன் தலையை மட்டும் அசைத்து அவள் நகர்ந்தாள்.
உங்களுக்கு காபிம்மா?
“நோ அங்கிள்” உதட்டை அசைத்து இரு பெண்களுக்கும் எதிரே வந்து அமர்ந்தாள்.
சுப்ரியா வைஷ்ணவியை பார்த்தும் பார்க்காதது போல அக்சராவிடம் அத்தனை அக்கா போட்டு பேசினாள். இருவரும் மறந்தும் வைஷ்ணவி பக்கம் திரும்பவில்லை.
எதேச்சையாக மாறன் வெளியே வந்தான்.
வைஷ்ணவி தன் தங்கைகளை ஏக்கமுடன் பார்ப்பதை கவனித்தான். அவனுக்கும் நடப்பதை நம்ப முடியவில்லை. இவர்கள் தீரன் வீட்டிற்கு வந்து ஒரு வாரமாச்சே. மாறனும் எல்லாரையும் கவனித்துக் கொண்டு தான இருந்தான்.
“அக்கா..அக்கா..என பின் சுற்றுபவள் இன்று அவங்கள பார்க்காமல் கூட இருக்காளே!” சிந்தனையுடன் கீழே வந்தான்.
செழியன் உள்ளே வந்து, அவனும் வைஷ்ணவியை கண்டு கொள்ளாமல் அவர்களிடம் சென்று அமர்ந்தான். வைஷ்ணவி அவனிடம் அழைக்க கையை நீட்டி இருப்பாள். மாறனுக்கு லேசாக கோபம் எட்டி பார்த்தது. இருந்தும் மௌனம் காத்தான்.
இளவேலன் வந்தவுடனே சுந்தரத்தை அதிரடியாக அழைக்க, “சமையல் முடிந்ததா?” கத்தினார்.
ஐய்யா…பத்தே நிமிசம். தயாராகிடும்.
ஏற்கனவே நேரமாகிடுச்சு. தீரனும் இப்பொழுது வருவான். “செழியா, இங்க என்ன வெட்டி கதை பேசிட்டு இருக்க? கோவில் நிர்வாகிகளுடன் பேச தீராவுடன் போகலாம்ல்ல?”
சித்தப்பூ, இப்ப தான் பண்ணையில இருந்து வந்தேன்..
சரி, குருவை பார்த்தாயா? காலையிலிருந்து என் அழைப்பை ஏற்க மாட்டேங்கிறான்.
சித்தப்பூ, அவனிடம் எதுக்கு நீங்க பேசணும்? மாறன் கத்தினான்.
இவன் வேற… அக்சரா அவனை பார்த்து, “உங்க அண்ணா தோழன் மேல உனக்கு இவ்வளவு காண்டா?”
“பின்னே இருக்காதா? என்னோட அண்ணன் பொண்டாட்டி மாதிரி ஒட்டிக்கிட்டே திரியுறான்” மாறன் சினமுடன் சொல்ல,
“அய்யய்யோ! நான் தீரா பொண்டாட்டியா? பாருடா தீரா. உன்னோட தம்பி என்னை ஃகே ஆக்காமல் விட மாட்டான் போல. அப்புறம் என் காதல் என்னாவது?” நெஞ்சை பிடித்தான் குரு.
“மாறா, இது என்ன பேச்சு?” இளந்திரையன் சத்தமிட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான்.
சுப்ரியா எழுந்து..எல்லாரையும் சார், அங்கிள்ன்னு அழைத்து அழைத்து நல்லாவேயில்லை. அதனால என்று சுப்ரியா தன் ஆருயிர் அக்கா வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே, “நான் உங்களை தீரன் சார்ன்னு அழைக்க மாட்டேன். அங்கிளுக்கு பதில் மாமான்னு அழைக்கவா?” நேரடியாக கேட்டாள்.
வைஷ்ணவி சினமுடன் எழுந்தாள். இளந்திரையனும் செய்வதறியாது திகைக்க, மாறனுக்கோ சீற்றம் பிறந்தது.
“நானும் தான்.. மாமான்னு அழைக்கவா? உங்களுக்கு பிரச்சனையில்லையே சார்?” அக்சரா கேட்க, “விளையாடுறீங்களா?” மாறன் சினமுடன் இளந்திரையனிடம் வந்து “இதுக்கு தான் இவங்களை வீட்டுக்குள்ள சேர்க்காதீங்கன்னு சொன்னேன் அண்ணா”.
சுப்ரியா தீரன் அருகே வந்து, “அவன் என்னமும் பேசட்டும். நீங்க சொல்லுங்க? நாங்க மாமான்னு அழைக்கலாமா?” கேட்டாள்.
இளந்திரையன் வைஷ்ணவியை பார்த்தான். அவள் பேசவும் முடியாமல் அவர்களை தடுக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
உங்க அக்கா பர்மிசன் கொடுத்தால் சரிதான்..
“அண்ணா” மாறன் சத்தமிட, “ஹலோ சும்மா இருக்கிறாயா?” சுப்ரியா அவனிடம் விரலை நீட்டி சொல்ல, அவன் சினமுடன் அவளை தள்ளி விட்டான்.
“மாறா” இளவேலன் சினமுடன் சத்தமிட்டு, “பொட்ட புள்ளைய எதுக்கு கை நீட்டுற?” கத்தினார். வைஷ்ணவி நடப்பதை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சித்தப்பூ, என்ன சொல்றாங்க இவங்க?” அவன் சினமுடன் பல்லை கடித்தான்.
“மாமான்னு அழைப்பதில் என்ன தவறு இருக்கு? அவங்க உன்னோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்க கேட்கலை. உன் கோபத்தை ரூபினியிடம் ஒரு நாளாவது காட்டி இருப்பாயாடா?” கோபமாக பேசினார்.
சித்தப்பூ, அவளை அண்ணா பக்கம் கூட விட்டதில்லை. இவங்க ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க..
வைஷ்ணவி கண்ணை மூடி திறந்து காற்றை வெளியேற்றி, சுப்ரியா கையை பிடித்து இழுத்தாள். முதன் முறையாக சுப்ரியா வைஷ்ணவியின் கையை உதறி விட்டாள்.
“சுபா” உதட்டசைத்து கண்கலங்க நின்றாள் வைஷ்ணவி.
குழந்தை அழும் சத்தம் கேட்க, இளவேலன் குழந்தையை பார்க்க சென்றார்.
“அக்கா, நீ சும்மா இரு. ஏதோ இவங்க சொத்தை கொள்ளையடிப்பது போல நான் என்ன செய்தாலும் குத்தம் கண்டுபிடிக்கிறான். இவன் எனக்கு மாமியாரா?” கேட்டு சுப்ரியா வைஷ்ணவியை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
இளந்திரையன் வைஷ்ணவியின் கண்ணீரை பார்க்கவும் அவள் பக்கம் திரும்பினான். அக்சரா ஓடி வந்து அவன் கையை பிடித்தாள்.
“இதுக ஏதோ திட்டம் போடுதுக?” செழியன் எண்ண, மாறனுக்கு கோபம் எல்லை மீறியது.
நிற்க முடியாமல் வைஷ்ணவி அழுது கொண்டே அறைக்கு சென்று கதவை தாழிட்டாள்.
“அம்மாடி” கையில் குழந்தையுடன் இளவேலன் அழைத்தார்.
“சாரி, நீங்க சொன்னதை செய்ய தான் இப்படி செய்தேன்” சுப்ரியா சொல்ல, அக்சரா அவன் கையை விட்டு நகர்ந்து நின்றாள்.
இதுக்கும் நான் சொன்னதுக்கும் சம்பந்தமேயில்லை..
“நீங்க சொன்னது போல அக்காவை நேரடியா செய்ய வைக்க முடியாது. அவள் கஷ்டப்பட்டால் தான் அவளையும் மீறி நடக்கும்” என்று சொல்லி சுப்ரியா அழுது கொண்டே அறைக்கு ஓடினாள்.
நில்லுடி சுபா, “நான் வந்து உங்களுக்கு எல்லாவற்றையும் விவரிக்கிறேன்” அக்சரா அவள் பின் ஓடினாள்.
error: Content is protected !!