Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 20

கீதம் 💜 20

அவளை பார்த்தபடி நின்றவன், திரையில் தெரிந்த அவள் முகம் மறைந்ததும் வாடிவிட்டான். ” கொஞ்ச நேரம் பார்க்க விடுறாளா..,  இவளை ..,” என்றவன் “யுவர் டைம் இஸ் ஸ்டார்ட் நௌ., போய் தூங்குங்க செல்ல குட்டி !.. ”  என்று கொஞ்சி  பேசும் அவளின்  குரலில் கைபேசியில் வந்த அலாரத்தை அணைத்து விட்டு,” பன்னிரண்டு மணிக்கு நான் படுக்கணும்னு கேமரா கனெக்சனா ஆப் பண்ண தெரியும். அவ்வளவு அக்கறை இருக்குறவ, என் பேச்சை கேட்டு அப்போவே என்கூட வந்துருக்கலாம்ல.” சலித்து கொண்டவன், ” மனசுல இத்தனை காதலை வச்சிக்கிட்டு அன்னைக்கு இல்லைனு சொன்னியே. எல்லாரையும் பத்தி யோசிக்கிறவ உன்னோட சந்தோசத்தை பத்தி மட்டும் யோசிக்கவே மாட்டியா.”   ஹ்ம்ம்… என் நந்திதா  அநியாயத்துக்கு நல்லவளா இருக்காளே ”   மேலும் புலம்பியவன் ” பொண்டாட்டி சொன்னா கேக்கணுமே, போய் தூங்குவோம்.., ” என நித்திரா தேவியிடம் சரண் புக அறைக்குள் சென்றான்.

அவனின் புகைப்படத்தோடு நாளை இனிதாய் தொடங்கிவிட்டு தான், இவள் பணியை தொடங்குவது அன்றாட வழக்கமாக்கி விட்டது. இன்றோ கல்யாணம், குழந்தை என பேசியதை கேட்டதும் தன்னவனை மனம் தேடவே தன் மனதை மறைக்காமல் வெளிப்படுத்தி விட்டாள். இத்தனை நேரமும் நடந்தவை யாவும் கனவல்ல, நிஜமே. அவன் கனடாவில், இவள் இந்தியாவில் உள்ளாள். தூரங்கள் தூர சென்று மனதோடும், உணர்வோடும், ஒன்றாய் கலந்து வாழ்கிறார்கள். இருவரையும் இணைத்து படித்தால் சந்தோசம் கிடைக்கும். தனித்து படித்தால் அவர்களின் சோகம் புரியும் . அவளை காண அவன் தவிப்பது புரியும். அவனை எண்ணி இவள் வாழ்வதும் புரியும். காதலுக்கு பிரிவு என்பது இல்லையே. எத்தனை தூரம் இருந்தாலும் மனதால் ஒன்றாக இணைந்து வாழலாமே. பிரிவும் கூட அவர்களை பிரிக்க முடியவில்லை. இன்னுமே பிணைத்தது. உறக்கத்தை தொலைத்து விட்டு அவளை காண இவன் தவிக்க. ரசிப்பதற்கு நேரம் கொடுத்து ரசனையாய் அவனை உறங்க வைப்பதும் புரியும். இங்கவன் திரையை பார்த்து பேச, அங்கவள் பாராமல் உணர்கிறாள். சோகத்தில் கூட இணைந்தே இருப்பவர்களை இணைந்தே எழுதிவிட்டேன். அவர்களின் சந்தோசம் மட்டுமே உங்கள் கண்களுக்கு புலப்பட்டது. அவர்களின் சோகம் உங்களால் உணர முடியவில்லையே. இப்படி தான் அனைவரையும் ஏமாற்றி கொண்டு,  தங்கள் துக்கத்தை தங்களுக்குள்  மறைத்து கொண்டு வெளிவேசம் போடுகின்றனர். அவளின் ஏக்கமும், துக்கமும் புரிந்த நல் இதயம் ஒன்று அவளுக்குக்காக அவளுக்கே தெரியாமல், அவள் வாழ்க்கைக்கு ஒளி ஏற்ற கிளம்பி விட்டது. இனியேனும் கானல் நீர் மறையுமோ? பார்ப்போம்.

அன்றைய அலுவல் பணி முடித்து இரவு தான் வீட்டுக்குள் அயர்ந்து சென்றாள். காலையில் கிளம்பிய ஓட்டம் அடங்கி இருள் கவ்வும் வேளையில் தான் அயர்வாய் உள்ளே வந்தவள் அறைக்கு சென்று முகம் கழுவி, இரவு உடை அணிந்து, சிறிது நேரம் வைபவ் உடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள். காலையில் விசேஷத்திற்கு சென்ற கதைகளை தாயிடம் கூறி கொண்டு இருந்தவள், தயக்கமாய் முகம் பார்க்க, பின் வாய் திறக்க என மாற்றி மாற்றி முயற்சித்த அலைப்புறுதல் கண்டுவிட்டு,” என்னம்மா, ஏன் ஒரு மாதிரி நெர்வஸா இருக்கீங்க. என்கிட்டே எதுவும் சொல்லனுமா ? ” என்றாள் நந்திதா.



Advertisement

” சொல்லணும்தான். ஆனால் மறுத்து பேச மாட்டேன்னு சொல்லு. அப்போ தான் சொல்லுவேன்..,” என பீடிகை போட்டார்.

” நீ சொல்லி நான் என்னம்மா கேக்காம இருக்கிறேன். சொல்லுங்க…,” அவசரப்பட்டு வார்த்தையை விட்டாள்.

” அது ஒண்ணுமில்லமா, உனக்கு ஒரு வரம் பார்த்திருக்கிறேன். நீ சொன்ன மாதிரியே உள்ளூர் மாப்பிள்ளை, வரதட்சணை எதுவும் வேண்டாம். கல்யாண செலவும் அவங்களே பண்ணி பெண்ணை கூட்டிட்டு போறோம். அப்பிடின்னு விரும்பி வந்து கேட்டாங்க. உன்னை கேட்காம இந்த சண்டே அன்னிக்கு பொண்ணு பார்க்க கோயிலுக்கு வரச் சொல்லிட்டேன்..,” என இவள் தலையில் அழகாய் இடியை இறக்கினார்.

Advertisement

” அம்மா. நான்தான் கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. திருப்பி திருப்பி இதுவே பேசுவீங்களா?, அவங்கள வர வேணாம்னு சொல்லுங்க..,” என கோபமாய் பேச.

Advertisement

” இங்க பாரு.., நான் இனி உன்கூட எத்தனை வருசம் இருப்பேனோ எனக்கு தெரியாது. உசிரு இருக்கும் போதே உன் கல்யாணம் பார்க்கணும்னு ஆசைப்படுறேன். சொந்தமா வீடு இருக்கு, நீ உழைச்சி கட்டின மேல் வீட்டு வாடகையும் வருது.

தம்பியும் இன்னும் ரெண்டு வருசத்துல காலேஜ் போக போறான். நகை, நட்டு, ஆஸ்தின்னு எத்தனை இருந்தாலும் நீ கல்யாணம் பண்ணாம , ஒண்டிக்கட்டையாய் வாழுறதை நினைச்சா தூக்கம் கூட வரமாட்டேங்குது. ஊருக்கு எல்லாம் உபதேசம் சொல்லி ஒரு பிரயோஜனம் இல்லை. என் மனசு காயத்தை மொத சரிபண்ணுடி.., என அவரும் கோபமாய் கத்தினார்.

இத்தனை நாள் தாயிற்காக திருமணம் செய்வதை வெறுத்தவள், அவனை விடுத்து வேறு ஒருவனை எப்படி திருமணம் செய்வேன் என சொல்ல முடியாது தவித்தாள்.

Advertisement

” பொண்ணு பார்க்க தானே வராங்க. மாப்பிள்ளை வீட்டுல எனக்கு சம்மதமில்லைனு சொல்லி நிறுத்திடுவோம். அம்மாவையும் ஏமாத்த வேண்டி இருக்கே?  என்ன செய்வோம்? ” என பலகட்ட யோசனைகளுக்கு பிறகு ஒருவாறு தலை அசைத்தாள்.

” சரிம்மா. அவங்க வரட்டும். எனக்கு பிடிச்சா மட்டும் தான் அடுத்து பேசணும். நீ பாட்டுக்கு கல்யாணம் அது இதுன்னு பேசி வற்புறுத்த கூடாது. அவங்க இவங்கன்னு யாரையும் கூப்பிட கூடாது. சும்மா கோயிலுக்கு போற மாதிரி போயிட்டு வந்துறணும். சரியா? ..,” என்றவளிடம்

” நீ மாப்பிளையை பார்த்துட்டு, இப்போவே தாலி கட்டுங்கன்னு நிற்க போறியா ? இல்லைல . அப்புறம் ஏண்டி இவ்வளவு யோசனை? ..,” என்றவர்

” உனக்கு ஓர் கல்யாணம் பண்றதுக்குள்ள என்னை இப்படி படுத்துற ?” என சலித்துக் கொண்டே சென்று விட்டார்.

என்ன செய்யலாம் என யோசித்தபடி இருந்தவளுக்கு மனம் இரண்டு வருடங்களுக்கு முன்னான அன்றைய நாளிற்கு தாவியது.

அன்று திருமணத்திற்கு பெண் பார்த்தேன் என தாய் கூறியதும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, வேக நடையில் அவள் எதிரில் வந்து நின்றான்.

” உள்ளே வா !” அவனின் கர்ஜனையிலே மருண்டு பார்த்தவள் “அதுக்குள்ள என்னாச்சு, ஏன் இவ்ளோ கோபம்.? ” பதில் தெரியா கேள்வியில் அவனின் பின் செல்ல.

வேறு எதுவும் சொல்லாமல், புயல் போல் வேகமாக சென்றவனை பின் தொடர்ந்து சென்றாள். அவனுக்கான சீட்டில் அமராமல் எதிரே அமர்ந்து கொண்டு, அவளை அங்கே அமர சொல்லி கை காட்டினான்.

” அது உங்க சீட். நான் எப்படி… ” தயங்கியவளை முறைத்து கொண்டே

“அதுல நீ மட்டும் தான் உட்காரணும். நீ மட்டும் தான் எப்பவும் உட்கார முடியும். புரியுதா! பேசாம உட்காரு..” என அதட்ட

ஒன்றும் கூறாமல் அவனை பார்த்தப்படியே அமர்ந்தாள். ஏன் இவ்வளவு கோபம் என அவளுக்கு சத்தியமாக புரியவே இல்லை.

” நேத்து என்ன பண்ண? ” அவளை ஆழ்ந்து பார்த்தப்படியே அழுத்தி கேட்க

” நான் ஒன்னும் பண்ணல சார். எதை பத்தி கேக்குறீங்க? “

” அம்மா கூட சேர்ந்து எனக்கு பொண்ணு பார்த்தியே!, அத தான் கேக்குறேன். எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணிருப்ப..” அடிதொண்டையில் கத்தினான்.

” சாரி சார். அ.. அது மேடம் தான் போட்டோ காட்டி கேட்டாங்க. அதுல அழகான நல்ல பொண்ணு இருந்தாங்க. அதான்.. ” வார்த்தையை முடிக்கும் முன்பே எழுந்து மேஜையை அடித்ததில் அடுத்த வார்த்தை எழவில்லை.

” என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. உன்னை காதலிச்சுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்கிறியா? அம்மா இப்போ டீடெயில்ஸ் உன்கிட்ட இருக்கு. உனக்கும் பிடிக்கிதுன்னு சொல்ராங்க. எனக்கு வர்ற கோபத்துக்கு அப்படியே உன்னை…” என அவள் அருகில் வந்து நின்றான்.

” நான் உங்களுக்கு ஏத்தவ இல்லை., அவங்க டாக்டர்., புரிஞ்சுக்கோங்க., “

” சரி. அப்போ உனக்கும் நல்ல மாப்பிள்ளை பார்ப்போம்., அவனை முதல நீ கல்யாணம் பண்ணு..,” நக்கலாய் கேட்க.

” நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.,” அழுத்தமாய் சொல்ல.

” ஏன் என்னை தவிர யாரையும் பண்ண புடிக்கலயா.,?” அழுத்தி கேட்க.

ஒன்றும் கூறாமல் அவனை முறைத்து பார்க்க.

” பொய் சொல்லாமல் உண்மை சொல்லு.,” அழுத்தமாய் அவளை பார்த்து கொண்டு கேட்க.

” எனக்கு பேமிலில நிறைய கமிட்மென்ட் இருக்கு. இந்த காதல், கத்திரிக்காய், கல்யாணம் எல்லாம் எனக்கு செட் ஆகாது. இதான் உண்மை போதுமா., ” அவளும் கோபத்தில் கத்த.

” இது தான் உண்மையான காரணமா? வேற எதுவுமில்லையே. “

” நீங்க என்னை லவ் பண்ணாலும், உங்க வீட்டுல ஓத்துக்கிட்டு.., வார்த்தை தடுமாறியவள் .., ” நடக்காது, விடுங்களேன்.” என்றாள் பரிதவிப்பாய்.

“உனக்கு பிடிக்குதா, இல்லையானு மட்டும் சொல்லு.”

” இல்லை. போதுமா., “

” பொய், உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்…,” என்றவனை அவள் திகைப்புடன் பார்க்க., ” என்ன பார்க்குற? உன்னை பத்தி எனக்கு எல்லாமே தெரியும். ஓரு வாரம் விட்டுட்ட போன என்னை நினச்சு தவிச்சதை நான் கண் கூடா பார்த்துருக்கேன். காலையில் வரும் போது எனக்காக நீ தவிச்சதை பார்த்து அவ்ளோ சந்தோசமா இருந்தேன். கொஞ்ச நேரம் கூட எனக்கு அந்த நிம்மதி கிடைக்கல. ஏண்டி இப்படி பண்ற.,” சட்டென அவளை பற்றி நிமிர்த்தி, விழிகளை ஆழ்ந்து பார்த்து கொண்டே நின்றான். அவளின் தவிப்பு அவனுக்கும் புரிந்தது. விழிகளின் அலைப்புறுதலில் அவள் சொல்லாதன யாவும் விழிகள் உரைத்தது.

” தவிக்க விடாதடி… வலிக்குது ரொம்ப… ” என அவளை சட்டென்று விட்டு முதுகு காட்டி நின்று கொண்டான்.

சில நொடிகள் அமைதியில் கழிய, ” உங்களுக்கு நான் வேணாம். ப்ளீஸ்.. வேற நல்ல பொண்ணா… ” அவள் பேசி முடிக்கவில்லை. அதற்குள்

” இனியும் என்னை இன்னொரு பெண்ணோட இணைச்சு பார்க்காதே. அந்த நிமிஷமே நான் செத்துருப்பேன் ” முதுகு காட்டி நின்றாலும், அவனின் தவிப்பில் இவளும் துடித்தாள்.

” நீ எதுவும் பேசாதே நான் சொல்றது மட்டும் கேளு. நான் தான் உன்னோட பலவீனம்னா நான் இனிமே இங்கே இருக்கவே மாட்டேன். கனடா போறேன். MD முடிச்சுட்டு வரவா, வேண்டாமான்னு நீயே முடிவு எடுத்துக்கோ” என்றவன் ஓரு நொடி ஆழ் மூச்செடுத்து வெளியேற்றி, ” இந்த ரூமை உனக்கு கன்சல்டேசன் ரூமா சேஞ்ச் பண்ண சொல்றேன், படிச்சு முடி, உன்னோட  எல்லா கமிட்மென்ட்டையும் முடி., நான் வந்தாலும் வராட்டாலும்.. ” நிறுத்தி அவளை ஓரு முறை திரும்பி பார்த்து விட்டு ” எப்பவும் போல இங்கே எல்லாத்தையும், எல்லாரையும் நீயே பார்த்துக்கோ. உனக்கு நான் வேணும்னு தோணினா மட்டும் தான் உன் முன்னாடி வருவேன். அதுவரை உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” என்றவன்

” நீ நினைச்சுட்டே வாழுறியா, நானும் வாழுறேன். நீ இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நானும் இருப்பேன். எனக்குள்ள இதயகீதமா நீ மட்டும் தான் துடிச்சிட்டே இருப்ப. எத்தனை வருஷம் ஆனாலும் உனக்காக வெயிட் பண்றேன். . இனி வரவோ பேசவோ மாட்டேன். முடிவு உன் கையில் தான்.” சொல்லியவன் திரும்பியும் பார்க்காமல் வெளியேறி விட்டான்.

அவன் விட்ட இடத்திலேயே நிலைகுழைந்து நின்றவள்  மடிந்து அமர்ந்து அழுகையில் கரைந்தாள்.  அவளிடம் பேசி விட்டு சென்றவன் ஒரு வாரத்திற்கு பின் பாரின் கிளம்பி விட்டான். அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. வேலை விஷயமாக கூட பேச்சினை தவிர்த்தான். அவனின் பாராமுகம் இவளை வதைக்க தான் செய்தது.

இதோ இன்று அவன் நாட்டை விட்டு, தன்னை விட்டு பறந்து போக இருக்கிறான். எத்தனை முயன்றும் கதறும் மனதை அடக்க முடியவில்லை. அவன் முகம் கண்டால் தன்னை மீறி அழுது விடுவாள் என எண்ணி அன்று அவள் கிளினிக் கூட செல்ல வில்லை. வேலை இருப்பதாக கூறி விடுப்பு முன்தினமே சொல்லி விட்டாள். தன் செல்லில் இருந்த அவன் புகைப்படம் கண்டு தான் மனதோடு அவனோடு பேசி கொண்டு இருந்தாள்.

அரு.., நீ என்னை விட்டு எங்கேயும் போக முடியாது. நான் பார்க்கிற எல்லா இடத்திலும் நீயும் இருப்ப. என் இதயத்தில் துடிக்கிற கீதமே  நீ தான். அது துடிப்பை நிப்பாட்டுற வரை எனக்குள் நீ உயிர் வாழ்வ. உன்னுடைய சிரிப்பை பார்க்காம எப்படி இருக்க போறேன்னு தான் தெரியல. கண் மூடி திறக்குறதுக்குள்ள வருஷம் ஓடி போயிரனும். உன்னை பார்த்துட்டு மட்டுமே இருந்தா போதும். எனக்கு வேற எதுவும் வேண்டாம். இத்தனை நாள் வேலைக்காக மட்டும் தான் கல்யாணம் வேணான்னு சொன்னேன். இப்போ நீ இல்லாம நானில்லை.வேற யாரையும்  கல்யாணம் பண்ண மாட்டேன்.  உனக்கான என் காதல் எப்போவும் என் கூடவே எனக்குள்ளே மட்டும் துடிச்சிட்டு இருக்கும். உன்னை பார்க்கும் அந்த நேரம் மட்டுமே உயிர் வாழும். சீக்கிரம் பத்திரமா போயிட்டு என்கிட்ட திரும்பி வந்துரு.., என வாய் விட்டு புலம்பி கொண்டு இருந்தாள். தானாக யாரிடமும் தன் சோகம் சொல்லி பழக்கமில்லாதவள் தனக்குள் மட்டும் தானே மறுக முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!