Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 17 2

“டாடி எனக்கு கேட் டெட்டி பொம்மை  ரைம்ஸ் சொல்லுற  டாய் வேணும்” என்றாள்..

“சிவாக்குட்டி  எங்க  பாத்தீங்க கேட் டாய்யை”  என்றான்..



Advertisement

“வாஜிதா  சித்தி கசின் வீட்டுல, இருக்கு பா, எனக்கு வேணும்” என்றாள்..

Advertisement

“கண்டிப்பா டாடி வாங்கி தர்ரேன், அம்மாவை பாரு , அம்மா உன்ன பாக்குறாங்க பாரு” என்றான்..

Advertisement

 “பானுமா” என்றவள்  கட்டிலில் ஏறி ஆபிதாவின்  பக்கத்தில் அமர்ந்து கொண்டு, “ஆபிமாவுக்கு  பீவர் சரியா போச்சா”..

Advertisement

பானு மகளை அணைத்துக் கொண்டவள்.”எனக்கு பீவர் சரியா போச்சு, நீ என்ன பண்ண இரண்டு, மூனு நாளா”..

“நானாமா , வாஜிமாவுக்கு டூ குட்டி தம்பி  இருக்கு நீ பாத்தீயா, நான் பாத்தேன் குட்டி பேபியை. அப்பறம் வாஜிமா கசின் வீட்டுல விளையாடினேன் தெரியுமா. அது பிக் ஹௌஸ், அங்கே நிறைய டாய் இருக்கு சிவா பாப்பா, அண்ணா நல்லா விளையாடினோம்” என்றாள்..

” ஓ பாப்பாவும், அண்ணாவும் விளையாடினீங்க”என்றவள்.

நிமிர்ந்து பார்க்க மஹாமுது  நின்று இருந்தார்..

“வாப்பா”  என்று ஆபிதா பானு தந்தையை அழைக்க..

ஆபிதாவின் அருகில் வந்த மஹாமுது  “பானு  நல்லா  இருக்கீயாமா” என்று பானுவின் கையை பிடித்துக்கொண்டு  கேட்க..

” நான்  நல்லா  இருக்கேன்  வாப்பா”  என்றாள்..

“ஷேக்தாவுத்தும், முபாரக்கும் உள்ளே வந்தவர்கள், ஆபிதாவிடம் நலம் விசாரிக்க.”நான் நல்லா இருக்கேன்” என்றாள்…

முபாரக் தங்கையிடம்  சென்று “என்னை  மன்னிச்சிடு  ஆபிதா, நான்  வேணுமுன்னு  தான் அந்த மெடிசனை  உனக்கு தராமல் இருந்துட்டேன்.. உனக்கு இப்படி ஆகும்முன்னு நினைக்கல. சாரி ஆபிதா” என்று மன்னிப்பு கேட்க..

“அண்ணா உங்கள பத்தி எனக்கு தெரியும் அண்ணா, மன்னிப்பு எல்லாம்  கேட்க வேண்டாம்”..

“ஷேக்தாவுத்தை  பார்த்தவள்  வாழ்த்துக்கள் மச்சான்”  என்றாள்..

” நன்றி பானு” என்றவன், அவளை பத்தி விசாரிக்க. விக்ரமை பார்த்தவள் எல்லாம் இவங்க  பாத்துக்கிட்ட தால , நான் நல்லா இருக்கேன் மச்சான்”   என்றாள்.

ஆபிதா பானு ஷேக்தாவுத்தை  மச்சான் என்று அழைப்பதை  கேட்ட விக்ரம். என்ன மச்சானா. இவள் ஏன் ஷேக்தாவுத்தை மச்சான் என்று அழைக்கிறாள் என்று ஆபிதா மீது கோபமா பாத்திருந்தான்…

அனைவரும் பேசிக்கோண்டு இருக்கும் போதே உள்ளே வந்த நர்ஸ் “இவ்வளவு பேர்  ரூம்பில் இருக்க கூடாது, வெளியே போங்க” என்று சொல்ல..

மஹாமுது சிறிது நேரம் மகளிடம் இருப்பதாக சொல்ல..

மற்ற அனைவரும்  வெளியே  சென்றனர்.. ஷேக்தாவுத்  வாஜிதாவை பார்க்க ஹாஸ்பெட்டல் போறேன் என்று சென்றார்..

முபாரக் ஆபிதா பானு இருக்கும் அறை வெளியே அமர்ந்து இருந்தான்..

சிவாக்குட்டி விக்ரமிடம் ” பசிக்குது” என்று சொல்ல..

விக்ரம் ஆஷிக்கையும் சிவாக்குட்டியை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலில் உள்ள புட் சென்டர் சென்றான்.. பிள்ளைகளுக்கு  வேண்டியதை வாங்கிக் கொடுத்தவன், அவனுக்கு ஒரு சூஸ் வாங்கி அமர.

ஆஷிக் “தாங்ஸ் பா” என்று சொல்லி உணவை சாப்பிட.

“அப்பா கிட்ட தாங்ஸ் சொல்ல கூடாது டா கண்ணா, அப்பாட்டா  உனக்கு  என்ன வேணுமோ  கேளு அப்பா வாங்கி தர்ரேன் ” என்றான்.. “ஓகே  அப்பா”  என்றவன் உணவை சாப்பிட. சிவாக்குட்டிக்கு  சரியாக சாப்பிட  தெரியாமல் கீழே சிந்த.

விக்ரம்  மகளுக்கு ஊட்டி விட்டான். சிவகாமி பேசுறது  அப்படியே பல்லவி பேசுறது போலவே இருந்தது.. மனதில்  குட்டி பல்லவி என்று நினைத்து கொண்டான்..

பிள்ளைகள்  இருவர் சாப்பிட்டு முடித்தவுடன், ஆபிதா இருக்கும் அறைக்கு அழைத்து வந்தான்..

முபாரக் விக்ரமை பார்த்து பிள்ளைகளை மஹாமுது  வீட்டுக்கு அழைத்து  சொல்வதாக கேட்க.

“வேண்டாம்  முபாரக்  என் பிள்ளைகளை  நான் பாத்துக்கிறேன்” என்றான்.

விக்ரம் அறைக்கு வர.. மஹாமுது விக்ரமை பார்த்து  எழுந்து கொண்டவர், “நான் வீட்டுக்கு போறேன் மாப்பிள்ளை பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ” என்றார்.

“வேணாம்  மாமா, நான் பாத்துக்கிறேன். இங்கே பக்கத்தில்  அடுத்த ரூம்பை புக் பண்ணி இருக்கேன், நான் பாத்துக்கிறேன்”என்றான்..

“மாப்பிள்ளை  நீங்க ஆபிதாவையும், பிள்ளைகளை எப்படி சேர்த்து  பாத்துபீங்க”..

” நான் பாத்துப்பேன் மாமா,, இன்னும் இரண்டு நாள்ல ஆபிதாவை  வீட்டுக்கு அனுப்பி இருவாங்க.. நான் ஆபிதாவையும், பிள்ளைகளையும்  லண்டன்  கூட்டிட்டு போறேன்” என்றான்..

“சரி மாப்பிள்ளை  உங்க இஷ்டம் மாப்பிள்ளை  நீங்க  லண்டன் போகும் போது, ஒரு தடவை வீட்டுக்கு வந்துட்டு போங்க அது போதும்”  என்றார் மஹாமுது.

விக்ரம் ” சாரி மாமா” என்றான்..

ஆபிதா விக்ரம் பேசுவதை கேட்டு அமைதியாக இருந்தாள்..

மகளிடம் “வர்ரேன்மா” என்று மஹாமுது கிளம்ப.

முபாரக் தங்கையிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்..

சிறிது நேரத்தில் விக்ரமுக்கு  போன் வர.. எடுத்து பார்த்தான்.

சுந்தர் தான் அழைத்து இருந்தார்..

“டாட் சொல்லுங்க என்றான்..

“விக்ரம் நீ  இருக்குற இடத்துல லைவ் லோகேஷன் , போனுல ஷேர்  பண்ணு ”  என்றார்..

“என்ன  டாடி எங்கே இருக்கீங்க”என்றான்..

“மலேசியா” என்றார்..

“ஏன்  டாடி.  நான் ஒரு  டூ டேசுல வந்துருவேன் தானே சொன்னேன்”..

“நீ  முதல்ல  லோகேஷன்  ஷேர் பண்ணு நான் நேருல வர்ரேன்” என்றார்.

“ஓகே டாட்”  என்றவன் சுந்தருக்கு லோகேஷனை அனுப்பி வைத்தான்..

அவன் ஷேர் பண்ணி அரை மணி  நேரத்தில் சுந்தர்  ஹாஸ்பெட்டல் வந்து சேர்ந்தார்..

 என்ன இது ஹாஸ்பெட்டல் போல் இருக்கே, விக்ரமுக்கு  போன் செய்ய போனை எடுத்து  பார்த்த விக்ரம் “டாட் ரூம் நம்பர  76  வாங்க” என்றான்..

 “சரி” என்றவர், என்னாச்சு இவனுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?, இல்லை  பல்லவிக்கா  என்று  நினைத்து கொண்டே  ரூம் வந்தார்..

விக்ரம் ரூம் கதவை திறந்தே வைத்து  இருந்தான்..

விக்ரம் வாசலில் வந்து நிற்க.

சுந்தர் விக்ரமை பார்த்தவர், விக்ரமுக்கு  ஒன்னுமில்லை, அப்போ  பல்லவிக்கா என்றவர் மகனை பார்த்து கொண்டே வந்தவர்.

“என்னாச்சு பல்லவிக்கு” என்று விக்ரமிடம் அருகில்  வந்து கேட்க, சூர்யா விக்ரமை பார்த்து “டாடி” என்று  ஓடி வந்து அணைத்து கொள்ள.  மகனை தூக்கிய வாறே.

“பல்லவிக்கு ஒன்னும் இல்ல  பா  சி  இஸ்  ஓகே  நவ், வாங்க”  என்றவன்.. உள்ளே அழைத்து செல்ல பல்லவி கட்டிலில்  படுத்து இருந்தாள்.

பல்லவி அருகில்  வந்த சுந்தர், பல்லவியை பார்த்து. ” “என்னாச்சும்மா   உனக்கு பல்லவி” என்று கேட்க.

விக்ரம் ஏற்கனவே சொல்லி இருந்தான் தன் தந்தை வருகிறார் என்று.

“நல்லா  இருக்கேன்  மாமா”  என்றாள்..

“என்னை உனக்கு தெரியுதாமா? நான் விக்ரம் அப்பா சுந்தர்”.என்றார்..

 தெரியவில்லை  என்பது போல் தலையாட்ட..

“பராவயில்லை மா    சரி பண்ணிடலாம்” என்றார்..

சுந்தர்  அந்த அறையை பார்க்க..

சூர்யா  வயதுடைய ஒரு பையன் ஆபிதாவின்  அருகில் அமர்ந்திருக்க. அந்த  பையனை பார்த்து சிரித்தவர்..

சூர்யாவை  பார்க்க, அவனோ  ஒரு சின்ன பொண்ணை தூங்க முடியாமல் தூங்கி வைத்து இருந்தான்..

” சூர்யா பாப்பாவை  கீழே  போட்டுடுடாத” என்றவர் குழந்தையை பிடிக்க வர.

சிவாக்குட்டி  திரும்பி சுந்தரை பார்த்தவள்.

விக்ரமை பார்க்க..

தன் மகளிடம் ” உனக்கு தாத்தா, சுந்தர் தாத்தா போ”  என்றான்..

தந்தை   சொன்னவுடன் சூர்யாவிடம் இருந்து இறங்கியவள். சுந்தரிடம் சென்று “தாத்தா” என்றாள்..

சுந்தர் அந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சியாக நின்றார்..

அச்சு அசல் தன் மனைவி சிவகாமி போல் குண்டு முகம். பெரிய கண்கள், பால் நிறத்தில்  சிவகாமி முகவடிவில் . குட்டி சிவகாமி போல் இருந்த தன் பேத்தியை பார்த்தார்.

” என் பொண்ணு பா, உங்க பேத்தி, உன்  பேர் என்ன தாத்தாவுக்கு

  சொல்லுங்க” என்றான்..

அவளோ  சுந்தரின் அருகில் சென்று “மை நேம் சிவகாமி, சிவா பாப்பா ” என்று சிரிக்க..

சுந்தரின் கண்களில்  இருந்து மட, மடவென கண்ணீர் வந்தது. தன் மனைவி மறுபிறவி எடுத்து  தன்  எதிரில்  நிற்பது போல் உணர்ந்தவர்..

குழந்தையை தூக்கி  அணைத்திருந்தார்..

சுந்தர்  கண்ணீல்  இருந்து கண்ணீர் வருவதை பார்த்த குழந்தை “தாத்தா சாக்கி தர்ரேன் அழுகாத” என்றாள்..

தன் பேத்தியை உச்சி முகர்ந்து பார்த்தார்..

இத்தனை  நாள் பணம், புகழ்,  என்று ஓடியவர். தனது சந்தோஷம் எங்கே? நான் ஏன் வாழ்கிறேன்? என்று  இருந்தவருக்கு.

பொக்கிஷம்  போல் பேத்தி  கிடைக்கவே. இவ்வளவு நாள் இதற்காக தான்,  நான் வாழ்ந்து இருக்கிறேன் போல என்று நினைத்தவர்..

விக்ரமை பார்த்து “தாங் யூ மை சன்”  என்றார்…

” டாட்”!என்றான்.

” கம்மிங் பேக்  மை  லிட்டில் சிவகாமி” என்றார்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!