Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 4 1

ஜதி தரும் அமுதம்



Advertisement

அத்தியாயம் -4

Advertisement

Advertisement

பிரகாஷ் பெங்களூர் வந்து இரண்டு நாளாகி விட்டது,, வைஷுவை  பத்தி அனைத்து விசயத்தையும்   தெரிந்து கொண்டவன்..

விஜயேந்திரனிடம் சொல்ல,, அவனால் அதை தாங்கிகொள்ள  முடியவில்லை, தனக்கே  இப்படி என்றால்  தன்னவளுக்கு  எப்படி  இருந்திருக்கும்,, எப்படி தாங்கிக்கொண்டாள்.. இதில்  இருந்த அவள்  மீண்டு வந்ததே பெரிய விசயம்,, இனி அவளை எந்த விசயத்துக்கும் கலங்க விட மாட்டேன் என்று நினைத்தவன்.

Advertisement

“நீ கிளம்பி வா பிரகாஷ், நான் இன்னும் கொஞ்சம்  யோசிச்சு சொல்லுறேன், நீ ஐதராபாத் வந்திரு” என்று கூற.

“சார்  அப்பறம்  ஒரு விசயம்” என்றான் பிரகாஷ்..

“என்ன”?.. வென்று விஜயேந்திரன் கேட்க..

“சார் மேம்மோட  அப்பா, மேம்  காலேஜ் படிக்க பேங்குல லோன்  வாங்குனாங்க போல,  அப்புறம் அவங்க டிரீட்மென்ட்க்காக  லோன் வாங்கி இருக்காங்க, அது மட்டும் இல்ல அவங்க தம்பி பத்ரி  மெடிசன் படிக்குறான்.. அதற்கும்  லோன்.. எதையும் சரியா  மேம் அப்பாவால கட்ட முடியல போல. பேங்குல இருந்து ரொம்ப பிரச்சனை பண்ணுறாங்க சார், நானே பார்த்தேன், பேங் ஆளுங்க வந்து காசு கட்டசொல்லி பிரச்சனை பண்ணுறாங்க”…

“எந்த பேங்குன்னு  உனக்கு தெரியுமா”?…

“தெரியும் சார்”…

“சரி,   நீ   பேங்க் போய் அவர் வாங்கி வச்ச எல்லா லோனையும் வட்டியோட கட்டிடு”..

“சார் அமௌன்ட் ரொம்ப  பெருசு சார்”..

“டேய் சொன்னத செய், கேள்வி கேட்காத, இன்னும் ஒன் ஹவருல கட்டி முடிச்சுட்டு நீ கிளம்பு”…. என்றான்..

“சரி சார்” என்றவன். பேங்க்  சென்று வைஷு அப்பா கேஷவன் வாங்கி வைத்து அத்தனை லோனின் அமௌன்டை கட்டமுன் வர..

 பேங்கில்  இருந்து “நீங்க யாரு? பேப்பர் எங்கே?.. உங்க ஆதார்,, லோன் வாங்கியவர்கள் எங்கே”  என்று ஆயிரம் கேள்விகள் கேட்க..

உடனே கிளம்பியவன் கேஷவன் வேலை செய்யும் ஆபிஸ் வந்து அவரிடம்  சொல்ல..

அவரும் ஆயிரம் கேள்வி கேட்டார். “நீங்க யாருன்னு”?..

பிரகாஷுக்கு என்ன பதில்  சொல்வது என்று தெரியாமல் முளித்தவன்..

பிறகு “சார் உங்க பொண்ணு  எங்க டான்ஸ் அகடாமியில டான்ஸ்  டீச்சரா சேர போறாங்க அதுக்குத்தான்,  இவ்வளவு பணம் தர்ரோம், இது இரண்டு வருசம் அக்ரிமெண்ட் சார், உங்க பொண்ணு  டான்ஸ்ச பத்தி உங்களுக்கு தெரியாத, எந்தன  கோடியின்னாலும்  தரலாம் வாங்க சார்”  என்று ஏதோ,  ஏதோ  பேசி சரிபண்ணி, பேங்க்கு  அழைத்து வந்தவன்.. அவர்  வாங்கி வைத்திருந்த அத்தனை லோனை அடைத்திருந்தான்..

கேஷவன் பிரகாஷின் கையை பிடித்துக்கொண்டு நன்றி சொல்ல..

“சார்  இது நான் பண்ணல எங்க வீ. பி சார் தான்”..

“நான் வீ. பி சார்கிட்ட பேசலாமா”?.. என்றார் கேஷவன்..

“வீ. பி சார் இப்போ வெளிநாடுல, இருக்காரு, நீங்க சொன்னத அவர்கிட்ட சொல்லுறேன், அவரே உங்களுக்கு கால் பண்ணுவாறு”.. என்றவன்,, அவனின் போன் நம்பரை மட்டும் கேஷவனிடம் தந்து விட்டு சென்றான்…

வைஷுவுக்கு  பெங்களூரில்   நடந்தது  எதுவும்  தெரியாது,, அவளின் அக்கா ரெண்டு நாள் கழித்து இவளுக்கு போன் செய்ய..

வைஷு எப்பாவும் போல்  அக்காவிடம் பேச “ஏன்டி  என்கிட்ட  மறச்சா”..

“என்ன மறச்சேன்டீ”..

“உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல டீ,, அம்மாவும், அப்பாவும்  சொல்லிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க,, அவங்களுக்கு  நீ எடுத்துருக்க  முடிவுல ரொம்ப சந்தோஷமாம்”… என்று கூற..

“என்ன பக்கி சொல்லுற, எனக்கு ஒன்னும் புரியல”. என்றாள் வைஷு..

“எவ்வளவு பெரிய விசயம் பண்ணி இருக்க என்கிட்ட சொல்லல்ல பாத்தீயா” என்ற அக்காளை..

“ஏய்  சௌமி  நீ  சொல்லுற தெளிவா சொல்லு. எனக்கு நீ பேசறதே புரியல, அம்மா, அப்பா எதுக்கு சந்தோசப்பட்டாங்க”..

“வைஷு நீ பண்ணது பெரிய விசயம், எவ்வளவு  பணம் பேங்க்ல கட்டியிருக்க, என்கிட்ட சொல்லவே இல்ல பாத்தீயா!ஆமா  எப்போ ஐதராபாத் போற?”..

“நானா, நான்  எதுக்கு ஐதராபாத்

 போகனும்?”…

“என்னடி பேசுற  நீதான்  டான்ஸ் டீச்சரா வேலைக்கு போறீயாமே!”..

“ஏய்  நான் எதுவும் பண்ணல எங்கேயும் போகல,, ஆமா ஏதோ பேங்குல பணமுன்னு சொன்ன, யாரு குடுத்தா?”…

“அடியே நீ டான்ஸ் டீச்சரா இரண்டு வருசம் ஐதராபாத்  போறேன்னு, ஒருதன் வந்து,  அப்பா வாங்குன  எல்லா லோனையும்  பணம் குடுத்து கட்டிட்டான்”..

“என்ன லோனா?”..

“உனக்கு தெரியாத, நீ  காலேஜ் படிக்குறப்போ  வாங்குனது.. உன் பிரண்டு ஹேமா  கூடதான் படிப்பேன்னு. அந்த பெரிய காலேஜுல அவ கூட சேர்ந்த  படிச்சல, அதுக்கு வாங்குனது, இப்போ உன் தம்பி டாக்டருக்கு படிக்குறான் ஞாபகம் இருக்க, அதுக்கு வாங்கனது அப்படியின்னு  நம்ம அப்பா ஏகப்பட்ட லோன் வாங்கி வச்சு இருக்காரு, மொத்த எவ்வளவு தெரியுமா”?.. என்று கூறியவளின் பதிலில் மெரண்டு  போனாள் வைஷு…

இவ்வளவு பெரிய தொகையை வைஷு சத்தியமாக  எதிர் பார்க்க வில்லை..

“என்ன பதிலே காணோம்? நீ பாட்டுக்கு தாத்தா,பாட்டி  வீட்டுல  போய் உட்கார்ந்துட்ட, உன் படிப்புக்கு வாங்கின லோனை யாரு கட்டுவா”?.. என்று கோபப்பட்டு  பேசிவிட்டவள்..

“சாரி டி, ஏதோ கோபத்துல பேசிட்டேன்,, உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுது, நீ மீண்டும் வந்து,  இப்படி இருக்கறதே பெரிய விசயம்,, உன் திறமையெல்லாம் வீணா போகுதேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்   இப்பதாண்டி எனக்கு சந்தோசமா இருக்க.. உன் திறமைக்கு  நீ பெரிய ஆள வருவா”…

“சரி நான் சொல்லுற கேளு, அப்பாகிட்ட பேசி, அந்த  பிரகாஷ் போன் நம்பர் வாங்கி தா”..

“ஏய்  நீ  அப்பாகிட்டையும், அம்மாகிட்டையும்  பேசு டீ, எத்தன வருசம் தான் பேசாம, பார்க்காம இருப்ப”.. என்ற சௌமியிடம்..

“என்ன மாதிரி உனக்கு நடந்து இருந்த, நீ   என்ன பண்ணியிருப்ப?. அப்பா, அம்மாகிட்ட பேசுவீயா,,  பேசமாட்டதான, உன் வேலையை மட்டும் பாரு, போன் நம்பர்  வாங்கி அனுப்பு” என்று போனை வைத்திருந்தாள் வைஷு…

சாயங்காலம் பிரகாஷ் நம்பர் இவள் போனுக்கு வந்திருக்க. எப்படி அழைப்பது அவனை என்று யோசித்துக்கொண்டிருந்தாள்..

தன்னை அவன் போனில் அழைக்கவே இல்லையே,, அவன் பணம் கட்டி எத்தனை நாள்கள் ஆகிவிட்டது, தன்னை ஐதராபாத்துக்கு வர அவன் சொல்லவே இல்லை,,  என்ன நினைத்து பணம் கட்டி விட்டு சென்றான்.. நான் வரமாட்டேன் என்று சொல்லி விட்ட பின்பும் தன் தந்தையிடம் பேச போயிருக்கிறான்.. போனவன் ஏன்  நான் மறுத்ததை சொல்லாமல், ஏன் பணம் உதவி செய்தான்,,  ஐயோ அவன் பணம் கட்டியது தெரிந்ததில் இருந்து அவளால் ஒரு நிமிடம் கூட அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை,  இவளால் கண்டிப்பாக இவ்வளவு பணத்தை  அவர்களுக்கு திருப்பி தர முடியாது,  என்ன பண்ண என்று பலத்த யோசனைக்கு  பிறகு ஒரு முடிவு எடுத்தவளாக..

பிரகாஷை போனில் அழைக்க..

புதிய எண்ணை பார்த்தவன், போனை ஆன் பண்ணி  “ஹலோ  எவரு”  என்ற கேட்க.

“ஹலோ நான் வைஷு” என்றாள்..

“வைஷு…. மேம், மேம் நீங்களா,, சொல்லுங்க மேம்”  என்று சந்தோஷப்பட்டவன்..

“ஹலோ பிரதர், யார கேட்டு இவ்வளவு பணம் பேங்க்ல கட்டுன”?..

“மேம் வீ. பி சார் சொன்னாரு, நான் கட்டுனேன்”..

“யாரு பிரதர் அந்த  அது வீ. பி சாரு, என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறீங்க”..

“மேம், நான் தான் மேம். உங்க அப்பா லோன் கட்டாமா ரொம்ப  கஷ்டபடுறான்னு   வீ. பி சார்கிட்ட  சொன்னேன், சார்வுடனே லோன் கட்ட சொல்லிட்டாரு”…

“டேய் எல்லாரும் சேர்ந்து என்னை  டார்ச்சர் பண்ணுறீங்க, தர்மசங்கடம்  ஆக்குறீங்க, யார கேட்டு பணம் கட்டுனீங்க, என்னால முடியல”.. என்றவள்.

“உங்க வீ. பி சார்  எந்த நம்பிக்கைல  இவ்வளவு பணம் கட்டுனாரு”..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!