Skip to content
Post Views: 501
மங்கையின் நிழலாய் வந்தவன்🥰💕
அத்தியாயம் – 4
காலம் நமக்கு கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் வாழ்வில் நிம்மதியும், சந்தோஷமும் நம்மை விட்டு செல்லாது என்பதே,
இதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும், நம் பூமிதாய் நமக்கு
கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம், கோடைகாலங்களில் பகலவனின் சில்மிஷங்களால் சோகமாகவும், குளிர்காலத்தில் அம்புலியின் அரவணைப்பால் அவனை அணைத்துக்கொண்டு நம்மை ஒரவஞ்சனை செய்யவில்லையே, அனைத்தையும் தாங்கிக்கொண்டு சிரித்தமுகத்தோடு காலநிலைகளுக்கு ஏற்ப நம்மிடம் பொறுமையாக இருக்கிறாளே,
Advertisement
அதுபோலதான் அன்னமும், சொக்கலிங்கமும் ஏழ்மையின் இருந்த போதிலும் கடிகார முள்ளைபோன்று சரியான பாதையை தேர்ந்தெடுத்ததால் இன்று சின்னமனுரில் மட்டுமல்ல, தேனியிலும் தங்களுக்கென சொந்தமான இடத்தை வாங்கி மிக பெரிய இரண்டு அடுக்குகளால் கட்டப்பட்ட “அன்னம் தலைவாழை உணவகம் ” என்ற பெயரில் இரண்டு ப்ராஞ்சுகளை சம்பாதித்து இருந்தனர்.
“காலத்தின் பாடம் இவர்களுக்கு ஒன்றை மட்டும் தெளிவாக உணர்த்தியது. எந்த நிலையிலும் வந்த பாதையை மறக்ககூடாது”
காலம் கடந்த நிலையில் சொக்கனின் தாய், தந்தை இறைவனின் பாதத்தை அடையும் இறுதி நிலையில் இவனிடம் வாங்கிய சத்தியம்,
Advertisement
“பணத்தால் வருவதல்ல மரியாதை, குணத்தால் வருவது மட்டுமே மரியாதை அது உன்னோட அண்ணனுங்க ரெண்டு பேருக்கும் இல்லாமல் போய்விட்டது”
Advertisement
சொத்துக்களை “விட்டுக்கொடுத்தது கொடுத்ததாகவே” இருக்கட்டும் பிள்ளைகளை பாதுகாப்பா வளக்கணும், (ஆம் இப்பொழுது இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் அன்னமும், சொக்கணும் ) அன்னம் உன்னோட துணைவி மட்டுமில்லை.
“உன் வாழ்க்கையின் மிக பெரிய அகண்ட தீபம் போன்றவள், சொல்லாமலே உன்னோட உணர்வுகளை புரிந்துகொண்டு பம்பரம்போல சுற்றிவருபவள், உன்னோடவளர்ச்சிக்கு உறுதுணையானவள்”
“மறுபடியும் சொல்றேன் சொக்கா, அவனுங்களிடம் பிரச்சனைக்கு போகாதே, யாசகம் கொடுத்ததாக நெனச்சி மொத்தத்தையும் விட்டுவிடு எதையும் செய்யும் கேவலமான குறுக்குபுத்தி உடையவர்கள் இருவரும், என்று பலவிதமான அறிவுரைகளை மகனுக்கு சொன்னவர்கள் மகனின் கையினை பிடித்துக்கொண்டே உயிரைவிட்டனர். “
Advertisement
பல சிந்தனையில் இருந்தவருக்கு,
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…அவரின் கைபேசியில் ஒலித்தது.
வந்த அழைப்பை பார்த்து சிரித்தவர் “சொல்லுடா, இன்பா என்றார்”
ஹோட்டல் கட்டிடா மட்டும் போதாதுப்பா பொறுப்பா பூஜையில் கலந்துகிடணும். ஐயர் ரொம்ப நேரமா உங்களைதான் காணலைன்னு கேக்கறாங்க என்றாள் குற்றம் சாட்டுதலாக,
ஓஹோ அப்படியா?……..இதோ “டூ மினிட்ஸ்” வந்துடறேன் என்றவர் கைபேசியை அணைத்துவிட்டு காரினை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
ஆனால், அங்கோ அப்படியில்லை வாசலிலே நின்ற செல்லமகள், இன்பா அங்கயே நில்லுங்க டாடி, உள்ள போகக்கூடாது என்றாள்.
ஏன்டா இன்பா டாடி எந்த தப்பும் பண்ணலையே!
அவரை முறைத்து கொண்டே அருகில் சென்றவள், சொன்ன நேரத்தைவிட பத்துநிமிஷம் லேட்டா வந்துட்டு கேட்கற கேள்வியை பாரு என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
மெல்ல அவளின் முகத்தை திருப்பி இன்பா என்றவர், வரும் வழில கொஞ்சம் ட்ராபிக்டா, அதை தாண்டி வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சி, அதான் கொஞ்சம் லேட் சாரி என்றவர், வாடா உள்ள போகலாம் அம்மா எங்கே என்றார்.
ம்ம்…. உங்க பொண்டாட்டியை பற்றி தெரிஞ்சிட்டே எங்கன்னு கேக்கறீங்க என்றாள் விதண்டாவாதமாக,
வாலு, ரொம்ப பேசற என்றவர் மகளை செல்லமாக முறைத்துவிட்டு மனைவியை தேடி சென்றார்.
எதிரில் பட்டுவேட்டி சட்டையில் மகன் விஷ்வா வந்து டாடி, மம்மி உங்களை சமையல்கட்டுக்கு வரச்சொன்னங்க என்றான்.
இப்பதானே வந்து இறங்கினேன் அதுக்குள்ள சமையல் கட்டுக்கு போகணுமா?
அதெல்லாம் எனக்கு தெரியாது டாடி போகலைன்னா பின்விளைவுகள் நெறைய வருமாம். எல்லாத்தையும் நீங்கதான் சமாளிக்கனும் என்றான் தாயின் குணமரிந்து,
சரி சரி என்றவன் புதிதாக கட்டிய ஹோட்டல் சமையல் அறைக்கு உள்ளே கால் வைத்த அடுத்த நொடி ஹாப்பி பார்த்டே டு யூ, ஹாப்பி பர்த்டே டு யூ என்று அவனின் மாமியார் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைத்து பாட்டுபாடி வரவேற்க,
மனைவி மட்டும் கணவனையே இமை மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள். அவளின் அருகில் சென்றவன் என்ன செல்லம் இதெல்லாம் உன்னோட வேலை தானே,
“ஆமாம் என்னோட வேலை தான் என்னவாம்”
ஹம்……இவ ஒருத்தி என்னவாம் என்னவாம்ன்னு கேட்டு மயக்கியே ரெண்டு பேர் இருக்காங்களே, மறுபடியும் அப்படியே கேக்கறாளே என்று கிசுகிசுப்பாக முனகினான்,
அய்யோ பசங்க வளந்துட்டாங்க இன்னமும் இப்படியே இருந்தா எப்படிங்க?
“ப்ச், என்னோட மிஸ்டேக்ஸ் இல்லை, என் செல்லத்தோட மிஸ்டேக்ஸ் என்று கண் அடித்துவைத்தான்”
“வயசானாலும் இந்த குறும்பு தனம் உங்களை விட்டு போக மாட்டேங்குது என்று அவனின் இடுப்பில் கிள்ளிவைத்தாள்”
இப்படியே ஊடலும் கூடலுமாக இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது அவர்களின் வாழ்கை. அந்த நேரத்தில் இதை கலைப்பதற்கென வந்தாள்
சின்னவள்
அப்பா, அம்மா உங்கள் குலத்தொழிலை அப்புறம் பாத்துக்கலாம். வாங்க பூஜைக்கு நேரமாச்சு என்றவள் அவர்களை விடாமல் தன்னுடைய இருபுறங்களிலும் அவர்களின் கையினை கோர்த்துக்கொண்டு வீரநடை போட்டு இழுத்து சென்றாள்.
முழுமுதர் கடவுளான கணபதியில் துவங்கி அணைத்து கடவுளையும் வணங்கி பூஜையை சிறப்பாக நடத்திமுடித்து தொழிலை துவங்கினர்.
காலை ஆறு மணிக்கெல்லாம் பூஜை முடிந்த நிலையில் கடையின் முன்பு கூட்டம் அலைமோதியது. விஷயம் என்னவென்றால், துவக்க நாளின் காரணமாக சமபந்தி விருந்து அனைவரும் வந்து உண்டுமகிழுங்கள் என்று கடையின் முன்பு வாசகம் மிகப்பெரிய பலகையில் எழுதப்பட்டிருந்தது.
கூட்டத்தை பார்த்த கணவன், மனைவி இருவருக்கும் இருந்த ஒரே வேண்டுதல் ஒருவரும் உணவின்றி திரும்பி போகக்கூடாது என்பதே,
இப்படிப்பட்ட தெளிந்த நீரோடை போன்று ஓடிகொண்டிருந்த நல்ல உள்ளங்களின் வாழ்க்கையை, கலங்கின சாக்கடையாக மாற்றி பலவீனப்படுத்த வந்தது மிகப்பெரிய இடிவிழுந்த செய்தி.
தன்னுடைய மகளுக்கு இப்படியா?
எந்த பெற்றோர்களால் இப்படி ஒரு விஷயத்தை தாங்கிக்கொள்ள முடியும். இன்றளவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் மனதை என்ன சொல்லி ஆறுதல் படுத்தமுடியும்.
இழந்தது பொருளாக இருந்தால், எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி கொள்ளலாம். ஆனால் இழந்தது உயிரல்லவா? என்னதான் புரண்டு புரண்டு அழுதாலும் மாண்டோர்கள் பூமிக்கு வருவதில்லை.
அந்த வயதில் விவரமில்லாமல்
செய்த செயல், அதை நினைக்க நினைக்க, ஐயோ என்னால் முடியவில்லையே அம்மா, என்று கதறினாள்,
அம்மா என்ற அந்த வார்த்தையை இனி ஒருநாளும் என்னால் உச்சரிக்க முடியாதே, என்று நினைக்கும்போதே என்னுடைய நெஞ்சாங்கூட்டில் கத்தியால் குத்திகிழிக்கும் மிகப்பெரிய வலியம்மா,
“உன்னுடைய கண்டிப்பும் இன்பா என்றழைக்கும் செல்லக்குரலும் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறதே, அது நிஜமாக இருக்கூடாதா? “
நான் தெரியாமல் செய்த சிறுதவறு, என்னால் உண்டான சிறு குழப்பம், உன் உயிரை எடுத்துசெல்லும் என்று, அன்று நான் உணரவில்லையே, அந்த நிகழ்வுகளை என்னுடைய வாழ்கை பக்கத்தில் அழித்துவிட்டு உன்னை திரும்ப பெற்றுவிட மாட்டேனா? என்ற ஏக்கம் இன்னும் என்னுளே இருக்கிறதே அம்மா,
“உன் மீது எந்த தவறும் இல்லை இன்பா” என்று மரணிக்கும் தருவாயிலும் நீ சொன்ன ஒத்த வார்த்தை இன்றளவும் நெறிஞ்சிமுள்ளாய் என்னை குத்தி கிழிக்கிறதேயம்மா,
“அம்மா அம்மா”….. உன் பேச்சை கேட்காமலிருந்தது என்னுடைய தவறுன்னு கதறிகொண்டே மன்னிப்பு கேட்டேனே, ஆனால் நீயே கண் மூடி தூங்கிவிட்டாயேம்மா,
“இனி உன் கண்களில் என் உருவத்தை பார்க்க முடியாதா?”
என்னுடைய தவறுக்கு உன் உயிரை இறைவனுக்கு காணிக்கை செய்துவிட்டாயா? பதில் சொல்லுமா?
உன்னுடைய புகைப்படத்தை பார்த்து ஒவ்வொரு நாளும் கேட்கிறேனே,
“உன்னை கொன்றவள் நான் என்ற உறுத்தளுக்கும், பழிச்சொல்லுக்கெல்லாம் காரணமாக்கிவிட்டு என்னை நடைபிணமாய் கொள்ளுகின்ற இந்த வாழ்வை வாழ வைக்கவா உன்னை நீ இழந்தாயம்மா “
மரண படுக்கையிலும் எனக்காக அழுத அந்த கண்கள் இனி திறக்கவே திறக்காதா? என்று நினைக்கநினைக்க ஏன் இந்த வாழ்கை உன்னுடனே நானும் வந்துவிடுகிறேன் என்று தினம்தினம் தோணுகிறது.
இதற்கான பல முயற்சிகள் நான் எடுத்தும் தோல்விமட்டுமே என்னை கவ்வியிளுகிறதே! என்ற நினைவிலிருந்தவளை தோழியின் காரணம் தட்டி எழுப்பியது.
ஏய், இன்னுமா டீ போடுற இன்பா?
ம்ம்ம்ம்…… இதோ இருடி சக்கரை ரொம்ப நேரமா தேடிட்டிருக்கேன் கிடைக்கலைஅதனால தான் லேட் ஆகிடுச்சு. எங்கிருக்கு கொஞ்சம் எடுத்து கொடு என்று தடுமாறினாள்.
அவளின் தடுமாற்றத்தை உணர்ந்த பிரிஷில்லா, ஏய் கொஞ்சம் திரும்பு என்னை பாரு,
எதுக்குடி?
திரும்புன்னு சொன்னேன்.
“திரும்பியவளின் கண்கள் இரண்டும் நெருப்பாய் கொதித்து சிவப்பு நிறத்தில் இருந்தது”
இன்பா என்றவள் அழைக்க,
“ஒன்றும் பேசாமல் அவளை கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் பெண் அவள் “
ஓரளவுக்கு பொறுமையாக இருந்த பிரிஷில்லா இன்று கொஞ்சம் காட்டமாக பேசிவிட்டாள். காரணம் இன்பாவின் உடல்நிலை மனதில் கொண்டே,
எவ்ளோ டைம் சொல்லிட்டேன் இன்பா, இனியும் நீ உன்னை மாத்திக்கலை உங்க அம்மா கூட உன்னை மன்னிக்க மாட்டாங்க என்றாள் வெடுக்கென்று,
அவள் சொன்ன வார்த்தையை கேட்டு நிமிர்ந்து அவளை முறைத்துபார்த்தாள்.
இந்த முறைப்பெல்லாம் எங்ககிட்ட வேண்டாம். எது செய்தாலும் யோசிச்சி பிளான் பண்ணிட்டு தான் செய்யணும் இல்லனா இப்படிதான் எல்லாமே சொதப்பல் ஆகிடும். என்றாள் அவளின் வாழ்க்கையில் என்ன நடந்ததென்று தெரியாமல்,
விரக்தியான சிரிப்பை சிரித்தவள், ஓகே இனிமேல் அப்படியே செய்கிறேன் என்றாள்.
சரி நேரமாகுது கிளம்பு சமையலை நான் பார்த்துக்கறேன் என்றவள், அவளை பிடித்து இழுத்துகொண்டு கொல்லைபுறத்தில் உள்ள பாத்ரூமில் அடைத்தாள்.
விடுடி விடுடி மாத்து துணி எடுக்கணும் என்றவளின் பேச்சுக்களை காதிலேயே வாங்காமல் அவளுக்கு ஒரு “டவலை”கொடுத்து திணித்துவிட்டாள்.
இன்பா குளித்து முடித்து வருவதற்குள் இட்லியும், வேர்க்கடலை சட்னியும் செய்து வைத்திருந்தாள். மதியம் மற்றும் இரவு (இரண்டு வேலை) உணவு வேலை செய்யுமிடத்தில் என்பதால் காலை மட்டும் செய்துகொள்வார்கள்.
குளித்து முடித்து உடையை மாற்றி வந்தவள் நேரத்தை பார்க்க இன்னும் அரை மணிநேரம் தான் என்பதை காண்பிக்க வேகவேகமாக இருவரும் உணவை முடித்துவிட்டு பேருந்துநிலையத்தில் காத்துகொண்டிருந்தனார்.
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
அம்மா இருவது ரூபாய்க்கு ஆறு இட்லி கிடைக்குதுமா உனக்கு தான் உடம்புக்கு முடியலே சொன்னா கேளும்மா? என்றான் தேவா என்றழைக்கும் விஷ்ணுதேவன். (நம் கதையின் நாயகன்)
விவசாயத்துறையில் படித்து பட்டம் பெற்றவன் இன்று இருக்கும் நிலையோ வேறு, தாயின் பாசத்துக்கு கட்டுப்பட்டவன். ஆறடி ஆண்மகன் வலதுப்புறம் வகீடு எடுத்து சீவிய தலை, சீவிய அருவாளை போன்ற புருவம், நெற்றிக்கு இடையில் சந்தன போட்டும் அதற்க்கு இடையில் குங்குமமும், மேலும் காபி கலரில் சட்டையும், பேண்டும் போட்டுகொண்டு வேலைக்கு கிளம்பி நின்றவனை தாய் தடுத்து நிறுத்தி வம்பு செய்து கொண்டிருந்தார்.
இந்த இருதுருவங்களும் ஒரே வட்டத்தில் இணையுமா? என்பதை இனி வரும் பதிவில் காணலாம்.
🙏🙏🙏🙏🙏🙏
error: Content is protected !!