வைஷுவை பார்த்து பணியாள் “மேம் , ரூம்கி ரண்டி மேம்” என்று அவனை அறிமுகம் படுத்திக்கொண்டே, அவளுடைய பேகை தூக்கி கொண்டு சென்றான்..
போகும் போதே “மேம் இது தான் கேன்டீன், சரியான டைமுக்கு போனா புட் கிடைக்கும்” என்று தெலுங்கில் பேச..
Advertisement
இவளுக்கு தெலுங்கு புரியும் ஆனா பேச வராது.. அவன் சொன்னதை புரிந்து கொண்டவள்..
“ஓக்கே” என்று தலையாட்ட.. ஒரு அடுக்கு மாடி கட்டிடத்துக்கு வைஷுவை அழைத்து வந்தவன்.. மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் முன் வைஷுவின் பேக்கை வைத்தவள்.. எதிர் வீட்டின் பெல்லை அடிக்க..
ஒரு பெண் கதவை திறந்து என்னவென்பது போல் இவனை பார்க்க…
வைஷுவை காண்பித்து “நீயூ டான்ஸ் டீச்சர், பிரகாஷ் சார் செப்பாடு” என்று சொல்ல.
அப்பெண் ஷைஷுவை பார்த்துக்கொண்டை சாவியை கொண்டு வந்து கொடுக்க..
சாவீயை வாங்கி கொண்டவன் ரூம்பை திறந்து விட்டு, “இப்புடு ஒஸ்தா மேம்” என்றவன் கீழே உள்ள ஸ்டோர் ரூம்பில் இருந்து ஒரு கட்டிலை எடுத்து வந்து பெட் ரூம்பில் போட்டவன்..பின்பு மறுபடியும் சென்று ஒரு பெட்டை எடுத்து வந்து கட்டிலின் மேல் போட்டு.. வெளியே சொல்ல போக..
வைஷு அவரை பார்த்து நன்றி சொல்லி விட்டு பணம் தர..
பணத்தை வாங்கி கொண்டவன், வேற எதாவது வேணுமா மேம்”.. என்று கேட்க.
“வாட்டர்” என்று குடிப்பதற்காக என்று செய்கை செய்ய..
கிச்சன் சென்றவன், “இது ட்ரிங்கிங் வாட்டர், இது போர் வாட்டர்” என்று திறந்து காட்ட..
வைஷு அவனிடம் “ஓகே” என்று சொல்லி கட்டை விரலை நீட்டினாள்…
அவளை பார்த்து சிரித்தவன்.. “மேம் நைட்டு கேன்டீன் சென்று சாப்பிடுங்க” என்று சொல்லி சென்று விட..
வைஷுவுக்கு அப்பாடா என்று இருந்தது.. அது ஒற்றை படுக்கை அறை உள்ள வீடு அட்டாச் பாத்ரூம், ஷீட்டர் என்று எல்லா வசதிகளும் இருந்தது.. பொருள்கள் மட்டும் இல்லை பேன் மட்டும் இருந்தது.. முதலில் தாத்தா பாட்டிக்கு வந்து விட்டாக சொல்லிவிட்டு, அடுத்தாக சௌமிக்கு அழைத்து, வந்துவிட்டேன் ரூம் குடுத்து இருக்காங்க நல்லா வசதியா இருக்கு, கீழே வாச்மேன் இருக்காரு,, ஐ யம் ஓகே எந்த பிரச்சனை இல்ல” என்று கூற..
சௌமிக்கு தங்கை பேசியுடன் தான் நிம்மதியானது,, தெரியாத ஊருக்கு தனியா செல்கிறாள் என்று வருத்தப்பட்டவள்,, “ரொம்ப சந்தோஷம் டீ”.. என்றாள் சௌமி,,..வைஷுவுக்கு போன் பேசி வைத்தவுடன், பசி எடுக்க..
ஒரு குளியலை போட்டவள் ஒரு சுடிதார் அணித்து கேன்டின் சென்றாள்… வரும் போதே கேன்டீனை நன்றாக பார்த்து விட்டு தான் வந்தாள்,, புது இடம் என்பதால் வழி தெரியாமல் சென்று விட்டால் என்ன பண்ணறது என்று யோசித்தவள்..
சரியா கண்டு பிடித்து கேன்டீன் உள்ளே நுழைய, அது மிக பெரியதாக இருந்தது..
உணவு வகைகள் வருசையாக டேபிள் மேல் வைத்து இருக்க… அவர்களுக்கு தேவையானதை அவர்களே எடுத்து கொண்டு சாப்பிட்டுலாம்.. அதை பார்த்தவள் அப்பாடா நல்ல சிஸ்டமா இருக்கே என்றவள்..
பக்கத்தில் சென்று பார்க்க.. முதலில் பால், காபி, கேன்னில் இருக்க. பக்கத்தில் சுகர், நாட்டு சர்க்கரை, பின்பு காபி பொடிகளும் இருக்க… பக்கதில் சாப்பிட தண்டு இருந்தது.. ஒரு தண்டை எடுத்துக்கொண்டவள்.. பாட்டி… தினம் கலிய போட்டு என்னை கொல்லுவாங்க, இன்னைக்கு நல்லா சாப்பாடு சாப்பிட போறேன், என்றவள், ஹாட் பாக்சை திறக்க அதில் தோசை இருந்தது, பின்பு அதற்கு சாப்பார், சட்ணி, சப்பாத்தி, குருமாவை பார்த்தவள், இரண்டு சாப்பாத்தியை எடுத்து தட்டில் வைத்து குருமாவை ஊற்றிக்கொண்டு, அடுத்து ஹாட் பாக்சை திறந்து பார்த்தாள், அவுல் உக்குமா இருக்க, அதை கொஞ்சம் கரண்டில் எடுத்து கொண்டு, ஒரு டம்ளர் தண்ணி பிடித்து பக்கத்தில் உள்ள டேபிள் மேல் அனைத்தையும் வைத்து அழகு பார்த்தவள், இனி இரண்டு வருடம் வித, விதமாக சாப்பிடலாம் என்று எண்ணி,
சப்பாத்தியை பிய்த்து, குருமாவில் நன்கு முக்கி வாய்யில் போட்டவள்..
“ஆ……
ஆ…” என்று கத்த..
காரம் மண்டையை பிடித்தது..
“ஆ.. ஆ” பக்கத்தில் இருந்த தண்ணியை எடுத்து குடித்தவள்..
தண்ணீர் குடித்தும் காரம், தாங்காமல், “காரம், காரம்” என்றவள்.. பக்கத்தில் இருந்த பெண்ணின் தண்ணீரை எடுத்து குடித்தும், காரம் அடுக்க வில்லை. நாக்கு எல்லாம் எரிவது போல் தெரிய, ஒரு பெண் வைஷுவின் அருகில் வந்து.. தயிரை ஒரு கப்பில் வைஷுவுக்கு குடுக்க, “நன்றி” சொல்லி அதை குடித்தவுடன் தான் அவளுக்கு நாக்கில் உள்ள காரம் குறைந்தது..
“அப்பாடா…” என்றவள்..
தயிர் குடுத்த பெண்ணிடம்
“தாங்யூ” என்று கூறினாள்..
“தமிழா” என்றாள் அப்பெண்..
வைஷு “ஆமாம்” என்று தலையாட்ட…
“ஐ யம் பிரகதி,”… என்று அவளை அறிமுகம் படுத்திக்கொள்ள..
“நான் வைஷு, டான்ஸ் டீச்சர்” என்றாள் இவள்..
“ஓ… டீச்சர் நான், நீங்களும் என்னை மாதிரி டான்ஸ் கத்துக்க வந்தீங்கன்னு நெனச்சேன்”.
“ஓ.. நீ டான்ஸ் கத்துக்க, வந்துருக்கீயா?”…
“ஆமா மேம். எங்க ஊரு சேலம் நான் வந்து 1 வருஷம் ஆகுது,”..
“நீங்க மேம்”..
“பெங்களூரு”.. என்றாள் வைஷு..
“இதை எப்படி சாப்பிடுறீங்க, இவ்வளவு காரமா இருக்கு”..
“மேம், இன்னைக்கு காரம் கொஞ்சம் கம்மியா, இருக்கு இத விட அதிகமா கூட சில வாட்டி இருக்கும்”..
“என்னது இது கம்மியா?”..
“ஆமாம் மேம்,, எனக்கு வந்த புதுசுல சாப்பிடறப்போ கஷ்டமா இருந்துச்சு, இப்போ பழகிடுச்சு மேம்”..,