Skip to content
Post Views: 2,221
அவள் சொல்லியை கேட்டு இருவரும் சிரித்து, “சரி அந்த சந்திரமுகி எங்கே,, சாரி சொர்ணமுகி எங்கே” என்று வைஷு சிரிக்க..
“அது ரூபுல இருக்கும், ஆயிரம் கேள்வி கேட்கும் வாங்க” என்று சொர்ணமுகி அறைக்கு செல்ல.. கோஆடினேட்டர் அறைமுன் இருந்த ஒரு பெண்ணிடம், “மேம்மை பார்க்கணும்” என்று கேட்க..
Advertisement
“வெய்ட் பண்ணுங்க, கேட்டு சொல்லுறேன் என்றவள்…
Advertisement
உள்ளே சென்று விட்டு. கேட்டு வந்தவள்..
Advertisement
“ஒரு பத்து நிமிடம் கழிச்சு போங்க”.. என்று கூற.
Advertisement
இருவரும் பத்து நிமிடம் கழித்து கதவை தட்டி விட்டு உள்ளே வர..
இருபெண்கள் உள்ளே வருவதை பார்த்த சொர்ண முகி. பிரகதி பார்த்து..”நூவு கிளாஸ் போலேதா, இங்கடா ஏண்டி பணி நீக்கு” என்று கேட்க..
“மேம் ஈ மேம் டான்ஸ் டீச்சர்கா பணிக்கு ஒச்சாரு, அந்துக்கே இக்கடா” என்று சொல்ல..
“நேனு சூஸ்தா நூவு கிளாஸ்கி வெல்லு” என்று கத்த..
“ஓகே மேம்” என்று வெளியில் ஓடிவிட்டாள் பிரகதி..
வைஷு சொர்ணமுகியை பார்த்த படியே நிற்க..
“எப்புடு இக்கடா ஒச்சாவு, யாரு ரின்டர்யுவ் சேஸ்சாரு” என்று கேட்க..(நீ எப்போ இங்க வந்த?. உன்னை யாரு இன்டர்யூவ் பண்ணது) என்று கேட்க..
“மேம் நான் தமிழ், தெலுங்கு தெரியாது” என்று ஆங்கிலத்தில் வைஷு கூற..
“எந்த ஊர்?. யாரு நீ, எப்படி இங்கே வேலைக்கு வந்த?”. என்று ஆயிரம் கேள்விகள் கேட்க..
வைஷு ஒரே வரியில் “வீ. பி சார்” என்று சொல்ல..
“சார் இப்போ பாரின்லா இருக்காரே”..
“சார் பாரின்ல இருக்கார், பிரகாஷ் சார் தான்” அழைத்து வந்தாக கூற..
உடனே பிரகாஷுக்கு போன் பண்ணி விவரம் கேட்க.. வைஷுவை பத்தி அனைத்தையும் சொன்னான் சொர்ணமுகியிடம்..
இவள் “ஓகே” என்று போனை வைத்து விட்டு…
ஒரு பேப்பரில் இவளுக்கு எந்த கிளாசில் நடனம் சொல்லி கொடுக்க வேண்டும் என்று எழுதி கொடுத்து, அவள் பக்கத்தில் இருந்த பெல்லை அடித்து, பணிபெண்ணை அழைத்து,,
“இந்த பொண்ணுக்கு இரண்டு செட் டீச்சர் யுனிபார்ம் கொடு, என்று கூறியவர்.. அவர் எழுதிய பேப்பரை அவளிடம் தந்து,, “நாளையில யுனிபார்ம் போட்டுட்டு கிளாஸுக்கு போ”..
என்று பேச்சை முடித்து விட..
அப்பாடா என்று இருந்தது வைஷுவுக்கு.. பணிபெண் வைஷுவுக்கு இரண்டு செட் புடவையை எடுத்து கொடுத்தவள்..
“மேம் பிளாவுஸ் மட்டும் அளவு கொடுத்துட்டு போங்க, ஈவ்னிங் வந்திரும்” என்று கூறி அளவெடுத்து அவளை அனுப்பி விட..
மறுநாள் வைஷு குளித்து தாயராகி, நடன ஆசிரியர் ஊடை அணிந்து கண்ணாடியில் பார்த்தாள்.. அந்த சிவப்பு வண்ண சாக்கெட்டும், மெருன் கலர் புடவையில், பச்சை நிற பார்டர் வைத்த, காட்டன் புடவையில் பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தாள்.. கீழே சிவப்பு வண்ண சுடிதார் பேன்டும் அணிந்து இருக்க,, நீண்ட நாள் கழித்து கண்ணுக்கு மையிட்டு இருந்தாள். கொஞ்சம் ஒப்பனையும் செய்து கொண்டவள், நீண்ட கூத்தலை அழகாயா பின்னலிட்டு இருந்தாள்.. கண்ணாடியில் தன்னை சரிபார்த்துக்
கொண்டவள்..
தனக்கு என்று நடன வகுப்பு கொடுத்த அறை எண்ணை நோக்கி சென்றாள்…
அந்த அறை 20 பிள்ளைகள் வயது வித்தியாச தோடு இருக்க..
அவளுக்கு முதல் நாள் என்பதால் எதில் இருந்து ஆரம்பிக்கலாம், என்று தெரியாமல் நின்றவள்..
முதலில் அவளை அவர்களுக்கு அறிமுகம் படுத்திக்கொண்டு..
அவர்களை பற்றி கேட்க.. அனைவரம் தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் இவளிடம் பேச..
இவள் ஆங்கிலத்திலே அவர்களிடம் பேசினாள்..
அவளுக்கு இவர் பேசிக் கோர்சில் சேர்ந்து இருப்பது தெரிந்தது.
போடில் பார்த்தாள் இவர்களுக்கு என்ன சொல்லி கொடுத்தார்கள். அடுத்து என்ன சொல்லி தர வேண்டும் என்பது தெளிவாக எழுதி இருக்க..
அப்பாடா என்றவள்..
அவர்களுக்கு எந்த அளவுக்கு நடனதை பற்றி தெரிந்து இருக்கிறது என்று பேச தொடங்கினாள்..
“நீங்க என்ன நடனம் கத்துக்க வந்தீங்க?”.. என்று வைஷு கேள்வி கேட்க..
“பரத நாட்டியம் மேம்” என்று பிள்ளைகள் கோரசாக சொல்ல..
“பரத நாட்டியம் அப்படியின்னா என்ன?. அதுக்கு ஏன் பரத நாட்டியமுன்னு பேர்வந்துச்சு தெரியுமா”.. என்று கேட்க..
பிள்ளைகள் ஒருவரை, ஒருவர் பார்த்திருக்க..
“நான் சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க.. ஒன்ன நாம கத்துக்குறப்போ, அத பத்தி எல்லாவிசயமும் தெரிஞ்சக்கனும். யாரவது பரதத்த பத்தி கேட்க பதில் சொல்லனும்”..
என்றவள்..
பரத நாட்டியத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்..
பரதம் என்பதன் பொருள்..
ப- என்றால் பாவம்,
ர- என்றால் ராகம்,
த-என்றால் தாளம் என்று மூன்றையும் குறிப்பது பரதநாட்டியம்.. இதில் பாவம் என்பது உணர்ச்சியையும், ராகம் இசையை குறிக்கும், இவற்றுடன் தாளம் சேர்த்து
ஆடுவதே பரத நாட்டியம், புரியுதா” என்று கேட்க..
பிள்ளைகள் “புரியுது மேம்”..என்றனர்..
‘”பரதநாட்டியம் நடனம் இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவானது,,நம் இந்திய செவ்விய ஆடல் வகையில் ஒன்று பரதநாட்டியம்”.. என்றவள்.. பின்பு
“70 ஆண்டுகளாக தான் இதை பரதநாட்டியம் என்று அழைக்கிறார்கள், அதற்கு முன் கூத்து, ஆடல் பாடல், தாசி ஆட்டம், சதிர் ஆட்டம் என பல பெயர்களால் அழைத்தார்கள், இந்த நடனத்தை முதலில் தேவதாசி பெண்கள் தான் கோவிலில் ஆடினார்கள், பின்பு நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டியக் கலைஞர் அதில் முகபாவனையும், நவரசங்களை வெளிப்படுத்தி பரதநாட்டியம் என் ஆடினார்கள்,, பரதநாட்டியத்தை கண்டு பிடித்தவர் பரத முனிவர்.. இது உருவான ஊர் தமிழ்நாடு”,..
அதன் பிறகு பரதநாட்டியத்தில் உள்ள உருப்படிகள் என்னென்ன?. நடனத்தின் உட்பிரிவுகள் என்ன?. என்று கூறியவள்,
“இன்னும் நிறைய இருக்கு, மிச்சத்தை நாளை பார்க்கலாம்”.. என்றவள்..
“இப்போ டான்ஸ் ஆடலாம்” என்றவள்..
“போஸ் ரெடி, ரெடி 1.2 3.” என்று சொல்லி ஆட தயாராக..
சில பிள்ளைகள் போஸ் சரியாக வைத்து ஆட, சில பிள்ளைகளுக்கு சரியாக தெரியவில்லை..
அவர்களுக்கு எப்படி நிற்க வேண்டும், இடுப்பை இறக்கு, கால் போஸ், கை எப்படி இருக்க வேண்டும், நிமிர்ந்து பார்,, பிள்ளைகளை சரியாக நிற்க வைத்தவள்…
“என்னை பாருங்க, நான் எப்படி நிக்குறேன், என் கால் போஸ், கைபோஸ் பாருங்க என்று நின்று காண்பித்தவள், அவர்களை அதே போல் நிக்க வைத்து கிளாஸ் எடுக்க.. சரியாக ஆட தெரியாத பிள்ளைகளுக்கு எப்படி ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவள்..
அன்றைய காலை வகுப்பு நேரம் முடிந்து, அவள் கேன்டின் சென்று உண்டுவிட்டு மதியம் 3 டூ 5 மணி அவளுக்கு அடுத்த கிளாஸுக்கா வந்தாள்..
அவளுக்கு இரண்டு கிளாஸ் மட்டுமே கொடுத்தார்கள்.. காலை 10 டூ 12 மணி வரைக்கும், பின்பு மாலை 3 டூ 5 வரைக்கும்..
மதியம் 2.45 மணிக்கு வைஷு கிளாஸுக்கு செல்ல.. அந்த கிளாஸுக்கு வந்த பிள்ளைகள் அனைவரும் குட்டி பிள்ளைகள், 5 வயதில் இருந்து 7 வயது மட்டுமே உள்ள சின்ன பிள்ளைகள் மட்டுமே, இருந்தனர். மொத்தம் 10 பிள்ளைகள் அதில் ஒரு குட்டி பையன் மட்டுமே இருந்தான்..
எல்லா குழந்தைகளும் நடன யூனிபாம்மில் வந்து இருக்க.. வைஷுவுக்கு அவர்களை , பார்க்க, சிரித்தவள் சந்தோஷமான மனதோடு..
அவர்களோடு சேர்ந்து கீழே அமர்ந்து கொண்டவள்.. அதில் மிகவும் குட்டியாக இருந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டு மடியில் வைத்துக் கொண்டாள்.. குழந்தையின் பெயர்களை கேட்க
வரிசையாக அவர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டவள்..
“எல்லாரும் சாப்டீங்களா, என்ன? சாப்டீங்க” என்ன படிக்குறீங்க.. என்று அவர்களிடம் சேர்ந்து பேசிக்கொண்டு குழந்தையாக மாறிபோனவள்..
அவர்கள் நிக்க சொல்லிக்கொடுத்தவள்.. குரு வணக்கம், நமஸ்காரம் பண்ணவது, ஜதி வைத்து ஆடுவது, போஸ் கொடுப்பது என்று அச்சிறு குழந்தைகளுக்கு பொறுமையாக சொல்லிக்கொடுத்தாள் வைஷு..
வகுப்பு நேரம் முடித்து அப்பிள்ளைகள் அவளுக்கு வணக்கம் சொல்லி சென்றதை நினைத்து சந்தோஷமாக வந்தாள்.. மனம் இன்று உற்சாகமாக இருக்க.. உடல், கால் வலித்தாலும், ஏதோ மனம் நிறைந்து இருந்தது, கேன்டின் வந்தவள் சூடான பாலை ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு அமர..
“ஹாய் மேம்” என்ற பிரகதி வைஷுவின் பக்கத்தில் வந்து அமர்ந்தவள்.. “எப்படி போச்சு மேம் கிளாஸ்”… என்று கேட்க.
வைஷு பிரகதியிடம் காலையில் இருந்து நடந்ததை சொல்ல..
“மேம் புது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குறது, ரொம்ப கஷ்டம் மேம், அதுவும் சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குறது இன்னும் கஷ்டம் மேம் அந்த சொர்ணமுகி வேணுமுன்னே உங்களை போட்டு இருக்கா”… என்று கூறி வருத்தப்பட..
” நான் பாத்துக்கிறேன் பிரகதி. நான் அதுக்காக தானே வந்து இருக்கேன்,, அதில் புது பிள்ளைகள் என்ன. பழய பிள்ளைகள் என்றால் என்ன? எல்லாம் ஒன்னுதான்,, டான்ஸ் நல்ல படியா சொல்லி கொடுக்கனும் அவ்வளவு தான்,
ஓகே பிரகதி எனக்கு டாயாடா இருக்கு நான் போறேன்” என்று கிளம்பி விட்டாள்..
இங்கே வீ. பி, பிரகாஷ்க்கு போன் பண்ணி. “உன்னை என்ன சொல்லி வைஷுவை அகாடமியில் சேர்க்க சொன்னேன்”..என்று திட்ட..
“சார் என்ன சார் விசயம்” என்று கேட்க.
“வைஷுவை நீயூ டான்சருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்க போட்டு இருக்காங்க.. அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?. உன் கிட்ட என்ன சொன்னேன்,, அவளை காம்பிடேஷனுக்கு மட்டும் தானே டான்ஸ் சொல்லி கொடுக்க சொன்னேன், நீ என்ன பண்ணி வச்சுருக்க,” என்று கோபப்பட,..
“சார் நான் பாத்துக்கிறேன் சார்” என்று போனை வைத்தவன்..
அகாடமி ஆபிஸ் ரூம்பிற்கு அழைத்து விசயத்தை கேட்க..
“சார் எங்களுக்கு தெரியாது, கோஆடினேட்டரை கேளுங்க” என்று போனை வைத்து விட..
பிரகாஷ் சொர்ணமுகிக்கு போனில் அழைத்து, வைஷுவை பத்தி சொல்லி ‘மேம் காம்பிடேஷன் டான்ஸுக்கு மட்டும் சொல்லிக்கொடுக்க சொல்லுங்க.. வைஷுமேம்மை, அப்பறம் யாழினிக்கு, சாடர்டே , சன்டே கிளாஸ் எடுக்க சொல்லுங்க”.. என்று கூற..
“ஹலோ… இங்க நான் தான் கோஆடினேட்டர் நீ இல்ல, எனக்கு எல்லாம் தெரியும், புதுச வந்தவுடனே எல்லாம் காம்பிடேஷனுக்கு டான்ஸ் சொல்லி தர போட முடியாது,, நீ எனக்கு சொல்லி தர வேண்டாம், யாரை எந்த கிளாசில் போட வேண்டும் என்று எனக்கு தெரியும், வை போனை” என்று போனை வைத்த சொர்ணமுகிக்கு கோபம் தலைக்கேற..
தன் கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணை அழைத்தவள். “அந்த புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காளே வைஷு, அவளை காலையில் என்னை பார்க்க வர சொல்லு” என்று அவள் அறைக்கு சென்றவளுக்கு கோபம் குறையாமல்..
மனதில் இவ பெரிய டான்சர், வந்த முதல் நாளே இவளை காம்பிடேஷன் டான்ஸ் கிளாஸுக்கு போடனுமாம், நாளைக்கு வாடி, உனக்கு இருக்கு…. உன்னை ஓட விடுறேன் என்று திட்டிக்கொண்டே இருந்தாள்… சொர்ண முகி..
error: Content is protected !!