Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK-22

“இனியா இங்க பாரு இந்த லிப்டிக் கலர் ஓகே வா பாரு” என்று வந்தாள் அமிழ்தினி.

மணமகள் அலங்காரத்தில் தயாராகி கொண்டு இருந்த இனியா அதை திரும்பி பார்த்து, “ஏய் இந்த கலர் இல்ல இன்னும் கொஞ்சம் டார்க்கா வேணும்” என்றவளை பார்த்து,”போடி இதுக்கு மேல என்னால முடியாது இது வர நான் பைவ் டைம்ஸ் போய்ட்டு வந்துட்டேன். இது தான் பைனல் போட்டா போடு இல்லனா போடி”என்று சொல்லி அந்த ரூமில் உள்ள பெட்டில் அமர்ந்து இருந்த யாழினி பக்கத்தில் போய் அமர்ந்து அவள் மடியில் இருந்த குழந்தையுடன் விளையாட தொடங்கினாள்.

“ஏய் என் செல்லம் இல்ல ப்ளீஸ் ப்ளீஸ் உன் சிஸ்டர்க்கு இது கூட பண்ணமாட்டியா நான் பாவம் இல்ல” என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு

“நீ எப்படி பாத்தாலும் நான் போகமாட்டேன் போடி”



Advertisement

“ப்ளீஸ் டி போடி இந்தமுறை நீ எனக்கு பண்ணா தான் நான் உன்னோட மேரேஜ்க்கு பண்ணுவேன். அதனால ப்ளீஸ் போடி”

“போடி நான் போக மாட்டேன். அந்த பார்லரு பொண்ணு எல்லாம் சரியா தான பண்ணிட்டு போனா. நீ ஏன் அத கலைச்ச”

“எது அந்த பொங்கப் பானைக்கு வெள்ள அடிச்சது கரெக்டா. அட போடி அவளுக்கு மேக்கப் போடவே தெரியல. அவ பண்ணத்தோட நான் போய் நின்னன்னா பேய் தான் வந்திருக்குனு எல்லாரும் ஓடி போய்டு வாங்க” என்றால் கடுப்பாக

Advertisement

“அப்ப கூட இன்பா இருப்பான் உன்ன மேரேஜ் பண்ண சரியா” என்றதும் முகம் சிவந்தவளை பார்த்து, “ஐயோ என் சீஸ் வெக்கப்பட்டுடா வெக்கப்பட்டுடா டோய். ஐயோ ஈஸ்வரா இந்த கொடுமைய பார்க்க முடியலையே கடவுளை இந்த சின்ன வயசுல எனக்கு இந்த சோதனை தேவையா” என்று நடித்தவளை பார்த்து முறைத்துக் கொண்டு, “பேசுடி நல்லா பேசு எனக்குன்னு ஒரு காலம் வரும் அப்போ உன்ன நான் பாத்துக்குறேன். அதான் இவ்வளவு என்ன கலாய்ச்சிட்ட இல்ல போய் லிப்ஸ்டிக் வாங்கிட்டு வா” என்றாள் காரியத்தில் கண்ணாக.

Advertisement

“ போடி என்னால முடியாது. அதான் உன் தம்பினு ஒருத்தன் இருக்கான்ல அவன கூப்பிட்டு வாங்கிக்கோ”

“ஏய் அவனே பாவம் சின்ன பையன் நைட் எல்லாம் கண் முழிச்சி எவ்வளவு வேலை பார்த்தான். ப்ளீஸ் நீ போடி”

“என்னால முடியாது இதே மேக்கப்போட போடி”

Advertisement

“இந்த மேக்கப்போட என் முகத்த பாரு இதோட எப்படி நான் போட்டோ எடுக்க முடியும். என் கல்யாண ஆல்பத்துல நான் நானா இருக்க ஆசைபடுறேன் அது தப்பா யாழினி நீங்க சொல்லுங்க நான் நினைக்கிறது தப்பா”என்று இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த யாழினி பார்த்து நியாயம் கேட்டாள் இனியா.

“கரெக்ட் தானங்க அவங்க சொல்றதும்” என்றாள் புன்னகையுடன் அமிழ்தினியை பார்த்து

“கரெக்டு தாங்க ஆனா அவ என்ன எவ்ளோ அலைய வைக்கிறா அதையும் நீங்க பாத்துட்டு தானே இருக்கீங்க நானும் பாவம் தானுங்க”

“ம் நீங்க சொன்னதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். இனியா நான் வேணும்னா உங்களுக்கு மேக்கப் பண்ணட்டுமா”

“ஐயோ ஆமால நீங்களும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தான நான் மறந்தேப் போய்ட்டேன் பாருங்க சரிங்க நீங்க பண்ணுங்க” என்றதும் தனது குழந்தையை அமிழ்தினிடம் கொடுத்துவிட்டு வந்த யாழினி 10 நிமிடங்களில் அவளை அழகாக தயார் செய்து விட்டாள்.

“அவ்வளவுதானா என்னங்க இவ்வளவு சீக்கிரம் மேக்கப் பண்ணிட்டீங்க. கரெக்டா தான் பண்ணீங்களா. அமி உண்மையிலே நான் நல்லா தான் இருக்கேனா ஏன் டி இப்படி அதிர்ச்சியா இருக்க” என்று சொல்லி தனது முகத்தினை கண்ணாடியில் பார்த்தவள் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.

 இருவரின் அதிர்ச்சியை பார்த்த யாழினி, “என்னங்க நல்லா இல்லையா ஏன் இப்படி ரெண்டு பேரும் அதிர்ச்சி இருக்கீங்க. ஒருவேளை உங்களுக்கு இந்த மேக்கப் பிடிக்கலையா” என்றாள் புரியாமல்

“என்ன இந்த மேக்கப் பிடிக்கலையா என்னங்க நீங்க உங்க கைல என்ன மேஜிக் வச்சிருக்கீங்களா பத்து நிமிஷத்துல எப்படி இவ்ளோ அழகா மேக்கப் பண்ண முடியும் நானே அதிர்ச்சியில இருக்கேன் நீங்க வேற இப்படி கேக்குறீங்க” என்றாள் பிரமிப்பு மாறாமல் இனியா.

“ஆமாங்க என்னோட சிஸ்டர் வாழ்க்கையிலேயே இன்னைக்கு தான் அழகா இருக்கா. எப்படிங்க ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்துட்டு இவ்ளோ அழகா மேக்கப் பண்றீங்க இதுதான் நிறைகுடம் தழும்பாதுனு சொல்றதோ” என்றாள் சைடு கேப்பில் தனது தங்கையே கலாய்த்துக்கொண்டாள் அமிழ்தினி.

 தன்னை கலாய்த்தவளை முறைத்து பார்த்துவிட்டு, “ஆமாங்க அவ சொல்றது கரெக்ட் தான் உண்மையிலேயே அழகா இருக்குங்க”

“பின்ன வேர்ல்ட் ஃபேமஸ் மேக்கப் ஆர்டிஸ்ட் கவினா சும்மாவா” என்று சொல்லிக் கொண்டு வந்தாள் கவியாழினின் தோழி சதா.

“ஏய் சதா எப்ப டி வந்த” என்று சொல்லி தனது தோழியை அணைத்துக் கொண்டு புதிதாக யாரது என்று பார்த்து நின்று இருவருக்கும் தனது தோழியே அறிமுகம் செய்து வைத்தாள்.

“ஐயோ அது நீங்கதானா என் ஃப்ரெண்ட் சொல்லி இருக்கா” என்று மேலும் பேசிக்கொண்டு இருந்தவர்களை தடுத்து, “ஏய் பொண்ணுங்களா என்ன கிளம்பிட்டீங்களா. அங்க மாப்பிள்ளை வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சீக்கிரம் வாங்க” என்று அனைவரையும் வேகமாக கிளப்பிக்கொண்டு மணமேடைக்கு சென்றார் சிவகாமி.

 

@@@@@@@@@@@@@

 

  மணமேடையில் அமர்ந்து ஐயர் சொன்ன அனைத்து மந்திரங்களையும் பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தான் இன்பா. அவனின் பொறுமையை சோதிக்கும் விதமாக இன்னும் மந்திரம் சொல்லிக் கொண்ட ஐயரைப் பார்த்து தனது பின்னால் நின்ற தனது தம்பியின் வேட்டியை பிடித்து இழுத்தான்.

“என்னடா” என்று அவன் அருகில் அமர்ந்து கேட்டான் கவின்

“ டேய் தயவுசெய்து இந்த ஆள வாயை மூட சொல்லிட்டு பொண்ணு கூப்பிட சொல்லுடா மொக்கை போட்டு சாவடிக்கான் என்னால முடியல” என்று அவன் காதில் மெதுவாக முனுமுனுத்தான்.

“டேய் ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுமையா இருக்க முடியாதா அவர் சொல்றதெல்லாம் செய்டா” என்று அவனை திட்டிக் கொண்டு எழுந்து நின்றான்.

 “இவன்கிட்ட போய் சொன்னேன் பாரு” என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு மந்திரத்தை சொல்ல தொடங்கினான். அதற்குள் “பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என்று ஐயர் சொல்ல

“அப்பா புண்ணியவான் இப்பவாவது சொன்னானே” என்று சொல்லி திரும்ப அங்கே வந்து கொண்டு இருந்த தனது வருங்கால மனைவியை பார்த்து அப்படியே மயங்கி நின்றான்.

“மாப்பிள்ளை போதும் பொண்ணு இங்க உங்க கிட்ட தான் வந்து உட்கார போகுது. நீங்க திரும்பி சபை பாத்து மந்திரத்தை சொல்லுங்கோ” என்றார் ஐயர்.

 அவர் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரிக்க அதில் அசடு வழிந்து மறுபடியும் சபையை பார்த்து அமர்ந்து கொண்டான்.

 அவனின் அருகே வந்து அமர்ந்தவளின் கை தீண்டலில் மறுபடியும் அவளின் முகத்தை திரும்பிப் பார்த்து, “ என்னடி இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்க உன்னை இப்படியே தூங்கிட்டு யாரும் இல்லாத இடத்துக்கு போகணும் போல இருக்கு” என்று அவளுக்கு மட்டும் கேக்கும் விதமா மெதுவாக சொல்ல அதில் இனியாவின் முகம் வெட்கத்தில் ரோஜாவாக மலர்ந்தது.

  இருவரின் செயலையும் பார்த்துக் கொண்டிருந்த ஐயர் கடுப்பாகி, “மாப்பிள்ளை தம்பி இந்த தாலியை மட்டும் கட்டிட்டு போய் அவங்கள கொஞ்சிக்கோ பிடிங்க தாழிய” என்று அவன் கையில் தாலியை கொடுத்து கட்ட சொன்னார். அசடு வழியே கையில் தாலியை வாங்கிய இன்பா தனது அன்னை மற்றும் தாத்தா பாட்டியை பார்த்து அவர்களின் சம்மதத்தை கேட்டு அவர்கள் சம்மதம் சொன்னதும் இனியாவின் கழுத்தில் தாலியை கட்டினான் இன்பா.

 

 மேடையின் ஒரு ஓரத்தில் நின்று அவர்களின் திருமணத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்த அமிழ்தினியின் அருகில் வந்த மாறன், “டீச்சர் மேடம் நம்ம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கேட்டான்.

“கல்யாணம் தானே பண்ணிக்கலாம் அதுக்கு முன்னாடி ப்ரொபோசர் சார் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே” என்றாள் நக்கலாக

“ஏய் அதான் நான் என் முடிவ சொல்லிட்டேனே அதுல எந்த மாற்றமும் இல்ல” என்றான் தீர்மானமாக

“அப்ப என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை எப்ப நான் சொன்னதுக்கு நீ சம்மதம் சொல்லுறியோ அப்ப தான் நமக்குள்ள கல்யாணம் அதுவரைக்கும் நீ சிங்கிளாவே இரு” என்று சொல்லி மேடையை விட்டு இறங்கி செல்ல அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், “ ஐயோ கடவுளே இந்த பைத்தியத்தை எப்படித்தான் என் வழிக்கு கொண்டு வர போறன்னு தெரியலையே” என்று புலம்பிக்கொண்டு நின்றான் மாறன்.

 

@@@@@@@@@@

 

“என்னை ஏன் டி இந்த கல்யாணத்துக்கு கூப்பிட்ட” என்றாள் சதா தன் தோழி யாழினிடம்

 மேடைக்கு கீழே உள்ள முதல் வரிசையில் தனது குழந்தையுடன் அமர்ந்திருந்த யாழினி அவளைப் பார்த்து, “அந்த மேடையில உள்ளவங்கள எல்லாம் பாரு” என்றாள் மீண்டும் அவர்களைப் பார்த்துக் கொண்டு

“ஏன் அவங்களுக்கு என்ன எதுக்கு அவங்கள பார்க்க சொல்ற” என்றாள் புரியாமல்

“அவங்க எல்லாரு முகத்தையும் பாரு எவ்ளோ சந்தோசமா இருக்காங்க”

“ ஆமா எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க அதுல என்ன ஒரு கல்யாணம் நடந்தா எல்லாரும் சந்தோஷமா தான் இருப்பாங்க இதுல என்ன இருக்குனு புதுசா நீ கேட்க”

“கரெக்ட் நீ சொன்னது கரெக்ட் தான் ஒரு கல்யாண நடந்தா எல்லாரும் முகத்திலேயே சந்தோசம் மட்டும் தானே இருக்கணும். ஆனா என் கல்யாண எப்படி நடந்துச்சு உனக்கு ஞாபகம் இருக்கா”

“ஏ லூசு உன் கல்யாண எப்படி நடந்துச்சுன்னு உனக்கே தெரியும் இல்ல”

“ஏன் தெரியாம நல்லா தெரியுமே இங்க இருக்கிறவங்களோட கண்ணீரோட சாபத்தோடு கோபத்தோட நம்பிக்கை துரோகத்தோட தானே என் கல்யாணம் நடந்துச்சு”

“ஏய் ஏன்டி நீ இப்படி எல்லாம் பேசுற. யாழினி இங்க பாரு என்ன பாரு நீ ஏதாவது முடிவு பண்ணிட்டியா என்ன”

“ ஆமா நான் முடிவு பண்ணிட்டேன். இந்த குடும்பத்தில் இருக்கிறவங்களோட சந்தோசத்துக்காக இவங்கள விட்டு நான் பிரியலாம்னு முடிவு பண்ணிட்டேன். நானும் என் பேபி மட்டும் தனியா ஒரு இடத்துக்கு போக போறோம் அதுக்கு தான் உன்ன வர சொன்னேன்” என்றாள் விடாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு யாழினி.

“நீ போ ஓகே உன் பொண்ணு ஏன் கூட்டிட்டு போகனும் சொல்ற அவ அவளோட அப்பா கிட்ட இருக்க வேண்டாமா”

“இல்லடி நாங்க ரெண்டு பேரும் போனா தான் அவருடைய வாழ்க்கை புதுசா ஆரம்பிப்பாரு. நான் டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு தான் வரப் போறேன். அப்பதான் அவர் முகத்தில் இருக்கிற இந்த சந்தோஷம் நிரந்தரமா இருக்கும். நான் ஒரு அன் லக்கி என் கூட அவர் இருந்தா அவருக்கு எந்த சந்தோசமும் கிடைக்காது. அதனால நான் அவர்கிட்ட இருக்க கூடாது. எனக்கு என் பேபி மட்டும் போதும். நான் முடிவு பண்ணிட்டேன். இவங்க எல்லாரையும் விட்டுட்டு போகலாம்னு” என்று இவள் சொல்லி முடிக்கும் முன்னே மேடையில் இருந்த கவின் இவளைப் பார்த்து திரும்பி கண் ஜாடையில் “ஏதாவது வேணுமா” என்று கேட்டான். இதற்கு ஒன்றும் வேண்டாம் என்று தலையாட்டி பதில் சொல்லிவிட்டு பார்வையை தனது தோழியின் பக்கம் திருப்பினாள்.

அவளோ இருவரின் கண் ஜாடையை பார்த்துக் கொண்டே இருந்தவள், “நீ மனசுல அவர நினைச்ச உடனே திரும்பி பாக்குறாரு இவரை விட்டு நீ பிரிய போறியா” என்றாள் நக்கலாக.

 அவளை முறைத்துப் பார்த்த யாழினி, “ இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம கிளம்பனும் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் நீ அதனால உன் வாய மூடிட்டு என் கூட வர்ற வேலைய மட்டும் பாரு சரியா” என்றாள் கடுப்புடன்

“ஓகே எனக்கு ஒரு பிரச்சனை இல்ல ஆனா இவர் உன்ன விடமாட்டார். அப்படியே நீ போனாலும் உன் கிட்ட வந்துருவாரு பாரு. நீ தான் தேவை இல்லாம டைம் வேஸ்ட் பண்ண போற சரி வா போலாம்” என்று இருவரும் ரூமுக்கு சென்றனர்.

 

 சிறிது நேரத்தில் இருவரும் அந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்து திரும்பி அதனைப் பார்த்து, “பைனலா கேக்கேன் இதான் உன்னோட முடிவா” என்றாள் சோர்ந்து இருந்த யாழினி முகத்தைப் பார்த்து சதா.

“ இதுதான் என்னோட முடிவு இதுல எந்த மாற்றமும் இல்லை வா போலாம்” என்று அவர்களுக்காக காத்திருந்த கேபில் ஏறி அமர்ந்து அந்த ஜன்னல் வழியே வெளிய கவின் எங்கேயாவது தெரிகின்றானா என்று தேடினாள். அவனை தேடிய கண்களுக்கு எங்குமே காட்சி தராமல் போனான் கவின். கவினின் கண்மணிகளை ஏற்றுக்கொண்டு அந்த வாகனம் அந்த மண்டபத்தை விட்டு சென்றது. அந்த மண்டபம் கண்ணை விட்டு மறைவு வரை அதனை பார்த்துக்கொண்டே சென்றாள் யாழினி.

 

 சிறிது நேரம் கழித்து இவர்கள் இருவரையும் தேடி வெளியே வந்த கவினின் காதில்,

“உயிரை வேரோடு கிள்ளி

என்னைச் செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா”

     என்ற பாடலின் வரிகள் கேட்டது. அதனை கேட்டுக் கொண்டு செய்வதறியாது அப்படியே நின்றான் கவின்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!