Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK – PART -2

மண்டபத்தின் வாசலில் சிலை போல நின்றவனின் தோளில் கை வைத்த சதீஸ்,”என்ன மச்சான் போயிட்டாங்களா. நீ என்னடா முகத்தை டல்லா வெச்சிருக்க ஃபீலிங்ஸா என்ன”

“ஃபீலிங்ஸா அட போடா அந்த மரமண்டை இப்படித்தான் பண்ணனும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதுக்கு தான் அவ கூடவே ஸ்பை ஒன்ன அனுப்பி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அவ எங்கே போய் இருக்குறானு ஃபுல் டீடைல் எனக்கு வந்துரும் அப்புறம் நான் ஏண்டா ஃபீல் பண்ணனும்” என்றான் கூலாக கண்ணில் கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டு இன்பா

“அடப்பாவி அது யாருடா அந்த ஸ்பை அவங்க கூட இருந்தாலே அந்த ஸ்பிரிங் முடிய கரெக்ட் பண்ணிட்டியா என்ன”

“டேய் லூசு தப்பா பேசாதடா அவ என் தங்கச்சி”



Advertisement

“ஏய் அப்படி நான் சொல்லவே இல்லடா நீ எதுவும் தப்பா யோசிக்காத டா. எனக்கு தெரியாம எப்ப அந்த பொண்ணு கிட்ட பேசுன தான் கேட்க வரேன்”

“உனக்கு தெரியாம தான் நிறைய நடக்குது உன்ன ஒரு பொண்ணு ஒரு வருசமா லவ் பண்ணிட்டு இருக்கா அது கூட உனக்கு தெரியல நீ எல்லாம் ஒரு ஆளு”

“அது யாரு மச்சான் எனக்கு தெரியாம’ என்றவன் திடீரென, ‘டேய் நான் என்ன கேட்டா நீ என்னடா சொல்ற”

Advertisement

“ஒன்னும் இல்லடா மேடம் ஏற்கனவே குற்றணர்ச்சில இருந்தாங்க. கொஞ்ச நாள் நானே அவளை அவங்க அப்பா கிட்ட அனுப்பலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இந்த லூசு எதோ முடிவு பண்ணி தனியா போகுது. போகட்டும் டா ஒரு ஆறு மாசம் கழிச்சு போய் நம்ம சமாதானம் பண்ணிக்கலாம். வாடா உள்ள நிறைய வேலை இருக்கு போய் பாக்கணும்” என்று சொல்லி உள்ளே சென்றான் கவி. அவன் பின்னே வந்தவன். அங்கே தனியாக கவலையாக நின்று கொண்டிருந்த மாறனை பார்த்து, “மாறண்ணா உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி தனியா நிக்கிறீங்க” என்றான் சதீஷ்.

Advertisement

“அது ஏன் டா கேக்குற”

“சரி அண்ணா நீங்க சொல்லிட்டீங்களா இனி நான் கேட்க மாட்டேன்” என்று சொல்லி உள்ளே செல்ல போனவனை பிடித்து, “என்னடா லந்தா கொன்னுருவேன் மரியாதையா நின்னு நான் புலம்புறத கேட்டுட்டு போ”

“அது சரி நானா வந்து தலையை கொடுத்துட்டேன் இனி என்ன பண்ண சொல்லி தொலைங்கண்ணா நான் கேட்கிறேன்” என்றான் சலிப்பாக சதீஷ்.

Advertisement

 “அதை ஏன் டா கேக்குற அது ஒரு பெரிய கதை அதனால அத நான் செகண்ட் பார்ட்ல சொல்றேன்” என்று உள்ளே சென்றான் மாறன்.

 

போகும் இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்டவன் “அது சரி அப்போ செகண்ட் பார்ட் கன்ஃபார்ம் தானா. ரைட்டர்ஜி அடுத்த பார்ட்ல எனக்கு ஒரு ஜோடியை போடுங்க இவனுக கூட ஜோடியா சுத்தி எனக்கு மண்ட காயுது” என்று சொல்லி அவர்களின் பின்னே புலம்பிக் கொண்டு சென்றான் சதீஷ்.

 

 அதாங்க மக்களே இப்போ நாங்க போறோம் நெக்ஸ்ட் பார்ட் ல வந்து உங்களை சந்திக்கிறோம் பாய் பாய் 🤗

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!