Skip to content
Post Views: 3,013
அத்தியாயம்-10
நேத்ராவை கல்லூரி வளாகத்தினுள் இறக்கிவிட்டு நேராக கார்த்திகேயன் அறைக்கு சென்ற நளனை பிரின்சிபாலும், மற்ற ஆசிரியர்களும் வரவேற்றனர். பின் விருந்தினர்களுடன் விழா நடக்கும் அரங்கத்திற்கு சென்றவன், அவர்களுடன் அமர்ந்தான்.
வரவேற்பு நடனம் நேத்ரா என்றவுடன் நளனின் கண்கள் அசுவாரஸ்யமாக மேடையைத் தொட்டது.
Advertisement
அங்கு பச்சை வண்ண பரதநாட்டிய உடையில் கால்களில் சலங்கையுடன் கைகளிலும் கால்களிலும் சிவப்பு வண்ண சாயம் பூசப்பட்டு, கண்களிலும் உடல் மொழியிலும் அபிநயம் பிடித்தவளைக் கண்ணிமைக்காது பார்த்தான் நளன்.
Advertisement
அதை இப்போது நினைத்துப் பார்த்தவனுக்கு, அவள் கண்கள்…, சிரித்ததால் குழி விழுந்த அவள் கன்னம், வளைவு நெளிவான அவளது உடல், இப்படி அவன் கண் முன்னாள் வந்து அவனை செயலிழக்க செய்து கொண்டிருந்தாள் நேத்ரா.
Advertisement
விழா மதியத்திற்குள் முடிந்திருக்க, நேராக அவன் அலுவலகத்திற்கு வந்தவன், வினோத்தை அழைத்தான்.
Advertisement
“சொல்றா நளா என்ன காலையில இருந்து ஆளையே காணோம், எங்க போன” என்றான் வினோத்.
“சொல்றேன், நீ என்னோட கேபினுக்கு வா” என்ற நளன் அழைப்பைத் துண்டித்தான்.
சற்று நேரத்தில் அவனின் கேபினுக்குள் வந்த வினோத்தை ஓடிச்சென்று கட்டிக் கொண்டான் நளன்.
“ஹே… என்ன நளா வாட் ஹாப்பெண்ட்” என்ற வினோத்திற்கு,
“வா உக்காரு சொல்றேன்” என்றவன் அன்று காலையிலிருந்து நடந்த அனைத்தையும் வினோத்திடம் கூறினான்.
“அடப்பாவி நீ மட்டும் போயிட்டு வந்திருக்க, என்னையும் கூட்டீட்டு போயிருக்கலாம்ல, துரோகி” என்று சலித்தவனிடம்,
“டேய் உனக்கு தான் இன்னிக்கு கிளைண்ட்டோட முக்கியமான மீட்டிங் இருந்ததிள்ள…. அதான் வினோ,” என்றான்.
ஆமாமா என்று சலிப்பாக பேசியவனிடம், “வினோ ஐ லைக் ஹேர்” என்றான் நளன்.
“என்னடா அதுக்குள்ளயா, சரி லைக் ஹேர் ஆ? இல்ல லவ் ஹேர் ஆ?” என்ற வினோத்திடம்,
“தெரியலை வினோ, ஆனா இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு, போறவரை இப்படியே போகட்டும் பாக்கலாம்” என்ற நளனுக்கு,
“சரிதான் என்ஜாய் பண்ணு” என்றான் வினோத்.
பத்து நாட்கள் கழித்து…
நளன் அவன் வாகனத்தில் அவன் ஆபீசுக்கு சென்று கொண்டிருக்க, அங்கே சாலையோரத்தில் நேத்ரா அவள் போனை டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேத்ராவைக் கண்டவுடன் வாவ்… என்றவன், அவள் முன் வாகனத்தை நிறுத்தினான்.
தன் முன் நின்ற வாகனத்தால் யார் என்று பார்த்தவள், நளன் விண்டோவை இறக்கி “ஹாய் நேத்ரா…” எனவும்,
“ஹாய்… “என்றவள் அவன் பெயர் சொல்லாமல் பாதியில் நிறுத்தினாள்,
“நளன்” என்று அதை முடித்து வைத்தவன், “என்ன இங்க நிக்கிறீங்க, என்னாச்சு…” என்றவனிடம்
“அது கேப்புக்காக வைட்டிங்….” என்றவள் அவள் போனை மீண்டும் பார்க்க,
“வாங்க நான் உங்கள ட்ரோப் பண்றேன்” என்றவனிடம்
“இல்ல வேண்டாம் பரவாயில்லை சார், நான் போயிக்கிறேன்” என்று தயங்கியவளை,
“மச்… கம்” என்றவன் அவன் இருக்கையிலிருந்து எட்டி அவள் புறத்து கதவை திறந்துவிட்டான்.
நளன் கதவைத் திறந்தவுடன் சங்கடத்துடன் அவன் வாகனத்தில் ஏறினாள் நேத்ரா.
“எங்க ஒர்க் பண்றீங்க” என்றவனிடம், ஒரு நிறுவனத்தின் பெயரை சொன்னவளிடம், “எப்பவும் எப்படி போவீங்க” என்றான்.
“எப்பவும் கம்பெனி பஸ் வரும், இன்னைக்கு எனக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அதான் பஸ் போயிடுச்சு, சோ கேப் ட்ரை பண்ணேன், பீக் அவர்ஸ்ல யாருமே வரலை” என்றவள் சலித்துக்கொள்ள,
“ஓ இட்ஸ் ஓகே, அப்புறம் அன்னைக்கு உங்க டான்ஸ் சூப்பரா இருந்தது, அன்னைக்கே சொல்லணுன்னு நெனைச்சேன், பட் சான்ஸ் கிடைக்கலை” என்றவனிடம்
கன்னக்குழியுடன் “தேங்க்யூ சார்” என்றாள்.
“பரதம் முறையா கத்துக்கிட்டிங்களா?” என்ற நளனிடம்,
“ம்ம் ஆமா சார், சின்ன வயசுல இருந்தே கத்துக்கிட்டேன்” என்றவள் “அன்னைக்கு… நீங்க தான் கார்த்திகேயன் சாரோட பையன்னு ஏன் சார் சொல்லலை” என்றாள் தயங்கியவாறு,
புருவத்தை சுருக்கியவன் “சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க” என்றவனிடம்
உதட்டை பிதுக்கி சிரித்தவளின் அழகில் சொக்கிப்போனவன், அருகில் இருந்த சாக்லெட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவன் சாக்லெட்டை நீட்டியவுடன் வாங்க போனவள் அவள் மனசாட்சியின் “ஏய் அல்பம்” என்ற வார்த்தையில் பின்னடைந்தவளாக,
“இல்ல சார் வேண்டாம் பரவாயில்லை” என்றாள்.
“ஆர் யூ சுயர் என்றவன் சரி எனக்கு பிரிச்சு கொடுங்க” என்றான்.
வேகமாக வாங்கி பிரித்தவளுக்கு நாக்கில் எச்சில் சுரக்க “ஐயோ டெம்ப்ட்டிங் ஆ இருக்கே” என்றவள் எச்சில் விழுங்க,
அதை ஓரக்கண்ணில் பார்த்து சிரித்தவன் “சாப்பிடுங்க உங்களுக்காக தான் பிரிக்க சொன்னேன்” என்றான்.
“நிஜமாவா, தேங்க் யூ சார்” என்றவள் முழுதாக உண்டு முடித்தாள். பின்பு நேத்ராவை இறக்கி விட்டவன் அவன் அலுவலகத்திற்கு சென்றான்.
அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன், ஒரு நிலையில் எழுந்து அமர்ந்தான். “ச்ச நேத்ரா கிட்ட போன் நம்பர் கேட்ருக்கலாம்” என்று புலம்பியவனிடம்,
அருகில் படுத்திருந்த வினோத் வாயில் கொட்டாவியுடன் எழுந்து அமர்ந்து “என்ன டா நளா, ஏன் டா நீயும் தூங்காம என்னையும் தூங்கவிடாம இப்படி உருண்டுட்டு இருக்க” என்றான்.
“இல்ல டா இன்னைக்கும் நேத்ராவ பாத்தேன், ச்ச அவ கிட்ட போன் நம்பர் கேக்காம விட்டுட்டேன்” என்றான் கவலையுடன்.
நளனை முறைத்த வினோத் “பாத்து ரெண்டாவது நாளே போன் நம்பர் கேட்டா, அந்த பொண்ணு உன்னை பத்தி என்ன நினைக்கும்” என்றான்.
“ஆமா வினோ, அதுவும் உண்மைதான் ம்ம்ம்… என்ன பண்ணலாம்” என்ற நளனிடம்,
“அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, அதான் இப்போல்லாம் பொண்ணுங்க இன்ஸ்டா, பேஸ்புக்குன்னு எதுலயாவது கண்டிப்பா இருப்பாங்களே, நீ என்ன பண்ற… அப்படி போயி ஓரமா உக்காந்துக்க.
இந்தா உன்னோட லேப்டாப், என்று அங்கிருந்த லேப்டாப்பை எடுத்து நீட்டியவன், போ போயி நல்லா தேடு கண்டிப்பா கண்டுபிடுச்சுடலாம்” என்றான்.
“டேய் வினோ தேங்க்ஸ் டா, உருப்படியான ஐடியா கொடுத்திருக்க, என்னடா அந்த பொண்ணோட பேரைத் தவிர எதுமே கேக்கலையேன்னு நெனைச்சுகிட்டு இருந்தேன், இப்போ பாரு அய்யாவோட பெர்பாமென்சை” என்றவன்,
அவன் அறையுடன் கூடிய பால்கணியில் மடிக்கணிணியுடன் அமர்ந்தான். நளன் நகர்ந்தவுடன் ஹப்பாடா என்று பெருமூச்சு விட்ட வினோத், அவன் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான்.
எது அழகு!
அவளின் கண்கள்!
இமைகள்!
நெற்றிமுடி!
கன்னக்குழி!
புன்சிரிப்பு! (இல்லை)
அவளின் குணம் தெரியாமல்,
அவள் குணம் யாவாயினும்,
ஏற்றுக்கொள்ளும்
என் குணம் அழகா?
என்னுள் புதிதாய் வந்த
என் சந்தோசம் அழகா! (இல்லை)
என்னுள் சந்தோஷம் அளித்த
என்னவள் அழகா!
எனக்குத் திரும்பக் கிடைத்த
என் இளமைக் காலம் அழகா! (இல்லை)
எந்தன் இளமையை உணரவைத்த என்னவள் அழகா!
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,
Please Subscribe & Support
error: Content is protected !!