Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 20

அத்தியாயம்-20

மூன்று மாதங்கள் கடந்திருந்த வேளையில்,

 

“இப்போ இந்த ப்ரொஜெக்ட்டை பத்தி உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா கேக்கலாம்” என்று நேத்ரா வேலை செய்யும் ஆபீஸ் டீம் மீட்டிங்கில் அவளது டீம் லீடர் சுப்ரியா கூறிக்கொண்டிருக்க,



Advertisement

 

டீமில் அமர்ந்திருந்தவர்கள் சிலர் சில பல டவுட்டுகளை கேட்க, அவர்கள் சந்தேகங்களைக் களைந்தவர் “ஓகே வி மே லீவ் நொவ், என்ற சுப்ரியா நேத்ரா ஸ்டே ஹியர்” என்றவள் அனைவரும் வெளியே சென்றவுடன்,

 

Advertisement

“நேத்ரா, இது ரொம்ப இம்போர்டன்ட்டான ப்ராஜெக்ட், சோ இடையில லீவு எடுக்க முடியாது, அப்படியே லீவு எடுக்கணும்னா நீங்க இந்த ப்ரொஜெக்ட்ல இருந்து விலகனும், அண்ட் இட் இஸ் அ பிளாக் மார்க் போர் யுவர் கெரியர், சோ நான் சொல்றது உங்களுக்கு புரியுதா?” என்ற சுப்ரியாவிடம்,

Advertisement

 

“இந்தம்மா என்ன சொல்லுதுன்னே புரியாலையே” என்று நினைத்தவள் “இல்லை மேம் நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு சரியா புரியலை” என்றாள்.

 

Advertisement

“சுத்தம், நேத்ரா இப்போ தான் உங்களுக்கு மேரேஜ் ஆகியிருக்கு, சோ…. நீங்க கன்சிவ் ஆயிட்டா லீவு போட வேண்டி வரும் தென், நான் சொன்னது தான் நடக்கும், உங்களை கன்சிவ் ஆக கூடாதுன்னு என்னால கண்டிப்பா சொல்ல முடியாது, நான் சொல்லவும் மாட்டேன்,

 

உங்களுக்கு அந்த மாதிரி எதாவது பிளான் இருந்ததுன்னா ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே இந்த ப்ரொஜெக்ட்ல இருந்து விலகிக்கோங்க, அது தான் உங்க கெரியருக்கு நல்லது” என்றார் சுப்ரியா.    

 

எதுக்கும் நீங்க உங்க ஹஸ்பண்ட் கிட்ட பேசீட்டு சொல்லுங்க, இந்த ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே சொல்லீடுங்க ” என்ற சுப்ரியா அறையை விட்டு வெளியே சென்றிருந்தார்.

 

திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளின் அலைபேசிக்கு வனிதாவிடமிருந்து போன் வரவும் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“என்ன டி புது பொண்ணு எப்படி இருக்க? டெய்லி நைட் தூங்காம உன் கண்ணெல்லாம் செவப்பா இருக்காமே, உன்னோட பக்கத்துக்கு டேபிள் ஹேமா சொன்னா” என்கவும் அமைதி காத்த நேத்ராவிடம்,

 

“ஹே ஏன் டி அமைதியா இருக்க, பேசு டி எத்தனை தடவை டி நானும் சாரி கேக்குறது, அன்னைக்கு உண்மையிலேயே பாரின் கிளையன்ட் மீட்டிங் டி, அதான் உன்னோட மேரேஜுக்கு வர முடியலை, அதுக்கு அப்புறம் எத்தனை வாட்டி சாரி கேட்டுட்டேன், சாரி டி பேசு” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் வனிதா.    

 

வனிதாவின் குரலில் நடப்புக்கு வந்தவள் “அதை விடு டி, இப்போ நாம மீட் பண்ணலாமா?” எனவும்

 

“இப்போவா” என்று யோசித்த வனிதா “ம்ம் சரி வா நான் லீவு சொல்லீட்டு வரேன், நாம எப்பவும் மீட் பண்ற காப்பி ஷாப்புக்கு வந்துரு” என்றாள் வனிதா.

 

நேத்ராவும் அவள் ஆபீசில் லீவ் சொல்லிவிட்டுக் கிளம்பியவள் வனிதா வரச் சொன்ன ஷாப்பிற்குச் சென்றாள்.

 

நேத்ராவைக் கண்டவுடன் அவளது பொலிவான முகத்தைக் கண்டவள் “ஹேய் நேத்ரா உன்னை பாத்து எத்தனை நாள் ஆச்சு, முன்னைக்கு இப்போ ரொம்ப அழகாய்ட்ட” என்று கட்டிக்கொண்டாள்.  

 

நேத்ராவின் யோசனையான முகம் கண்டு “ஆமா எதுக்கு அவசரமா மீட் பண்ணணுன்னு சொன்ன?” என்ற வனிதாவிடம், இன்று ஆபீசில் சுப்ரியா கூறியதை எடுத்துரைத்தாள் நேத்ரா.

 

நேத்ரா கூறியதைக் கேட்ட வனிதா “ஆமா நேத்ரா அவங்க சொல்றது உண்மை தான், அதுக்கும் நீ இப்படி டென்ஷனா இருக்குறதுக்கு என்ன சம்பந்தம்?” என்ற வனிதா சற்று நிறுத்தி,

 

“ஹேய் நேத்ரா நெஜமாவா? பிரக்னேண்டா இருக்கியா? அண்ணா கிட்ட சொன்னியா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவளிடம்,

 

வாயில் விரல் வைத்து “ஷ்… சும்மா இரு வனிதா, எனக்கு தெரியலை, ஆனா இந்த மந்த் எனக்கு நாள் தள்ளி போயிருக்கு” என்றாள் நேத்ரா.

 

“நிஜமாவா, அப்போ உடனே அண்ணாக்கு கால் பண்ணி இங்க வரச்சொல்லு, ரெண்டு பேரும் இப்போவே போயி ஹாஸ்பிடல்ல செக் பண்ணீட்டு வாங்க” என்று குதூகலித்தாள்.

 

“இல்ல வனிதா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு, அப்படி பிரக்னேண்டா இருந்தா, இப்போ இந்த ப்ரொஜெக்ட என்னால பண்ண முடியாது” என்றவளை தீயாக முறைத்த வனிதா,

 

“அறிவிருக்கா உனக்கு இப்போ இந்த ப்ரொஜெக்ட ரொம்ப முக்கியமா, எவ்வளவு சந்தோஷமான விஷயம், இதை மட்டும் அண்ணா கேட்டாங்க உன்னை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க, நீ மொதல்ல அண்ணா கிட்ட பேசு” என்று டேபிளில் இருந்த நேத்ராவின் போனை எடுத்து அவளுக்கு நீட்டினாள். 

 

வனிதா நீட்டிய போனை வாங்கி அவள் கைப்பையில் வைத்தவள் “இல்ல வனிதா நான் அம்மா கிட்ட பேசணும்” எனவும்

 

“ஹேய் நீ இன்னும் உங்க அம்மாகிட்ட ஐடியா கேக்குறதை நிறுத்தலையா, உருப்பட்ட மாதிரித்தான், அண்ணா உன்னை திட்டமாட்டாங்களா,

 

ஹே நேத்ரா இது உங்க ரெண்டு பேரோட குழந்தை, அதை பத்தி நீ அண்ணா கிட்ட தான் பேசணும், உங்க அம்மா கிட்ட பேசாத, உங்க அம்மாவை பத்தி எனக்கு நல்லா தெரியும், உங்க அம்மா கண்டிப்பா நெகட்டிவா தான் உனக்கு வழி சொல்வாங்க” 

 

என்ற வனிதாவின் கன்னத்தில் சப்பென்று அறைந்திருந்தாள் நேத்ரா.

Link👉குட்டி கவிதைமனைவி


Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇

Please Subscribe & Support🙏
https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!