Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi un kaathala – 7

தனது அறையில் கால்கள் நோக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள் அனிக்கா.

விக்கி எரிச்சலாகநீ இப்படி ஓவரா ரியக்ட் பண்ற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கல. சும்மா படத்துல வர வில்லி மாதிரி அங்க, இங்க நடந்துட்டு இருக்க”.

“ம்ம் உனக்கு என்னடா ஒரு கவலையும் இல்லை, நீ இப்படிதான் கூலா இருப்ப….. சை, அந்த கிழவிகிட்ட எங்கள் இருவருக்கும் உள்ள காதலை பற்றி ஒரு கோடிட்டு காட்டலாம் என்றால் இந்த சூர்யா காரியத்தையே கெடுத்து விட்டான்”

“ஹ்ம்ம், எனக்கு என்னமோ அந்த சூர்யாவிற்கு உன் மீது உள்ள ஈர்ப்பு போய் விட்டது மாதிரி தான் தெரியுது. இங்க என் முன்னாடி இப்படி கால் கடுக்க நடக்குறதுக்கு அவன் முன்னாடி செஞ்சாவது ஏதோ கொஞ்சமே கொஞ்சம் பலன் கிடைக்கும்” என்றான் விக்கி கேலியுடன்.



Advertisement

“கண்டிப்பா அப்படி இருக்க கூடாது. பின், என் கனவு என்னவாவது??!. அவனின் அப்பா, அம்மாவிடம் கேட்டால் ‘சூர்யா வந்ததும் பேசி கொள்ளலாம்’ என்றனர். இவன் என்னவென்றால் யாரோ தெரியாதவரை பார்ப்பது போல் பார்க்கிறான்” என்று மனதில் எழுந்த பயத்துடன் கூறினாள்.

அவளின் தவிப்பு எதுவும் விக்கியை சிறுதும் பாதிக்கவில்லை. அவன் இங்கு வந்ததற்கான முதன்மை காரணம் ‘மலர்’ மட்டும் தான்.

அவளின் அடக்கமான அழகு, அமைதி எல்லாம் விக்கியை கவர்ந்து என்னமோ உண்மைதான். ஆனால், சூர்யா இருக்கும் பொழுது தன்னால் மலரை சிறிது கூட அணுக முடியாது என்பது அவனுக்கும் அனிக்காவிற்கு அது நன்கு தெரியும்.

Advertisement

“இங்கு பார் விக்கி, நீ இங்கு மலருக்காக தான் வந்து இருக்க. ஆனால், பத்திரமாக இரு கண்டிப்பாக சூர்யா உன்னை மலரிடம் நெருங்க விட மாட்டான். அவன் இல்லாத பொழுது நீ அவளை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். உன்னால் என் வாழ்கையில் பிரச்சனை வந்தது., உன்னை மாட்டிவிட கூட நான் தயங்க மாட்டேன், என்னை பற்றி உனக்கு தெரியும் தானே??……” என்றாள் அவனை எச்சரிக்கை விதமாக.

Advertisement

ம்ச்ச் இந்த வில்லி டையலாக்லா விடாத. மலர்கிட்ட எப்படினு நெருங்கனும் அப்படினு எனக்கு தெரியும். நீ என்னை கண்டுக்காம இரு… உனக்கு எந்த பாதிப்பும் வராது” என்று வெளியே சென்று விட்டான்.

இரண்டு நாட்கள் எந்த வித மாற்றமும் இன்றி சென்றது. மூன்றாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை திருவிழா கலை கட்டும்…. ஊர் முழுவதும் வெளிச்சம், மகிழ்ச்சி என்றே மூழ்கி இருக்கும்.

அன்று தான் சங்கரும் தன் தொழில் துறை பயணத்தை முடித்துவிட்டு ஊருக்கு வந்து இருந்தார். அவர் வந்ததும் “மாமா” என்று ஓடி வந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் மலர்.

Advertisement

“என்னடாமா, எப்படி இருக்கிறாய்” என்றார் அவளை தோளோடு அணைத்தவாறு.

“ஆமா, மாமனும், மருமகளும் பல வருஷம் பிரிந்து இருந்தது போல் பேசுவதை பார்?!….” என்று பெரிய பாட்டி நொடித்து கொண்டார். அவரின் செய்கையில் அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

பாட்டியிடம் நலம் விசாரித்தவர் சுஜாவிடம் திரும்பி “என்னமா வரதன் எப்பொழுது வருகிறான்” என்று விசாரித்தார்.

“அவருக்கு அங்கு வேலை அதிகம் அண்ணா. நவீன் வேறு இங்கு வந்து விட்டானா இன்னும் இருமடங்கு அதிகமாகி விட்டது. இவன் கூட இருக்கிறேன் என்று தான் சொன்னான் அவர் தான் பிடிவாதமாக அனுப்பி வைத்து விட்டார். வேலை எல்லாம் முடிந்து ஏழாவது நாள் விழாவிற்கு வருவார்” என்றார் கவலையாக .

பின், அவருக்கும் ஆசை இருக்கும் தானே… குடும்பம் எல்லாம் ஒன்றாக கூடி இருக்கும் தருணத்தில் தன் கணவன் மட்டும் இல்லை என்றால் அவராலும் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்.

அவரின் கவலையை புரிந்து கொண்ட சங்கர் “அவ்வளவு நாள் ஆகுமா?. சரி சுஜா நான் வரதன்கிடா பேசி நாளைக்கே வர சொல்கிறேன்” என்றார் ஆறுதலாக.

முகம் முழுக்க வெளிச்சம் பரவ “செய்யுங்கள் அண்ணா, நீங்கள் சொன்னா கண்டிப்பா அவர் வருவார்” என்றார்.

பின், எல்லோரிடமும் சிறுது நேரம் பேசி விட்டு சூர்யாவை பார்க்க அவன் அறைக்கு சென்றவர் அவனிடம் சிறிது நேரம் பேசவிட்டு தன் அறைக்கு சென்றார்.

தன் தந்தை வந்துவிட்டு சென்றதும் அவன் மனதில் ஓடி கொண்டு இருந்தது எல்லாம்…. அன்று அமெரிக்காவில் அவன் இருந்த பொழுது சொன்ன வார்த்தைகள் தான், ‘இங்கு பார் சூர்யா, அன்னிக்கா விஷயமாக உன் மனதை குழப்பி கொள்ளாதே. அது என்ன வகையான உறவு என்பது எனக்கும் உன் அம்மாவிற்கும் தெரியும், அதை நாங்கள் உன்கிட்ட திணிக்க விரும்பவில்லை. உனக்கு இரண்டு வருடம் நேரம் இருக்கிறது… நீ திரும்பி வரும் பொழுது அதை பற்றின ஒரு தெளிவு உனக்கு கிடைக்கும்’ என்று தன் தந்தை சொன்னதும் எவ்வளவு உண்மை என்று இப்போ சுர்யாவிற்கு புரிந்தது.

அனிக்கா மீது தனக்கு இருந்தது ஒரு ஈர்ப்புதான் என்பதை அமெரிக்கா சென்ற ஒரு சில வாரங்களிலே தெரிந்து கொண்டான்.

ஆனால், அவனுக்கே புரியாத ஒன்று ‘இங்கு வந்ததில் இருந்து மலர் மீது ஏதோ ஒரு உணர்வு… அவளை பார்த்துட்டே இருக்கனும் போல ஒரு ஆசை’.

கதவு தட்டும் ஓசையில் இருந்து மீண்டவன் ‘யாரு’ என்று திரும்பி பார்த்தவன் இதயம் ஓட்ட பந்தயத்துக்கு ரெடியாக இருந்தது.

அவனின் சிந்தனையின் நாயகியே அவன் கண் முன்னால் வந்து நின்றாள். அதுவும் அவள் உடுத்தி இருந்த சிகப்பு கலர் தாவணி அவளின் அழகை இன்னும் கூட்ட அப்படியே பனி போல் உறைந்து நின்று இருந்தான் சூர்யா.

“அத்தான், காபி”  லேசாக இதழ் விரித்து புன்னகையோடு அவனிடம் நிட்டினாள்.

கண்ணுக்கு மை தீட்டி இருந்தாள். அது எப்பவும் அவள் செய்வது மற்றபடி லேசான் பவுடர். இதுதான் அவளது மேக்அப்.

ஆனால், இப்போ அதே மை அலங்காரத்துடன் சிலதும் கூட சேர்ந்து இருந்தது. புருவ திருத்தம், லேசான  உதட்டு சாயம், மேற்காதுகளில் புதிய விருத்தாளிகளாக சின்ன கல் வைத்த ஸ்டட்.

அவளின் அந்த மயக்கும் புன்னகை சிந்திய உதட்டின் மீதே அவன் பார்வை இருந்தது. அதற்கு கொஞ்சம் மேலே மின்னி கொண்டு இருந்த மூக்குத்தி ‘என்னையும் கொஞ்சம் பார்’ என்று டால்-லடித்து கொண்டு இருந்தது. அவளை நெருங்கி சென்றான்,

‘ஏன் இப்படி பார்க்கிறான், இங்க வந்ததுல இருந்து இவன் பார்வையே புதுசா இருக்கு’ என்று நினைத்தவள் “அத்தான் காபி” என்றாள் கொஞ்சம் அழுத்தமான குரலில்.

அதில் சுயம் வந்தவன் அவளின் முகம் பார்க்காது திரும்பி நின்று தலை முடியை கோதிவாறு தன் உண₹₹ர்ச்சியை கட்டுபடுத்தினான்.

வந்ததில் இருந்து அவன் செய்கை மலர்க்கு விசித்திரமாகவே இருந்தது. “அத்தான்” என்று அழைத்தவள் புறம் திரும்பியவன் கண்ணில் ‘பளிச்’ என்று மின்னி கொண்டு இருந்த மூக்குத்தி பட்டது.

அவளை நெருங்கியவாறு நின்றவன் மூச்சு காற்றுபட்டு அவளது முகத்தின் ஓரம் இருந்த முடி அசைந்தாடியது. ஒற்றை விரலை அவளின் மூக்குத்தி மீது வைத்து “இதை எப்போ இருந்து போட்ருக்க?ஆழ்ந்த குரலில் கேட்டான்.

சூர்யா அருகில் வந்ததும் அவளது பின்ன கழுத்து முடி கூச்சத்தில் எழுந்து நின்றது. அந்த நெருக்கமும், குரலும் அவளை ஏதோ செய்ய பூனை கண்களை அடர்ந்த இம்மைக்குள் மறைத்து கீழே குனிந்தாள்.

“நான் டென்த்து படிக்கும் போதுல இருந்து போட்டுருக்கேன்” என்றாள்.

‘ஹ்ம்ம் அப்பொழுது எல்லாம் இது என் கண்ணிலும், கருத்திலும் பட்டது இல்லை. இப்பொழுது என்னை இம்சிக்கிறது’ என்றவனின் சிந்தனையை அனிக்காவின் குரல்  கலைத்தது.

ஒரு அழகான கனவு உலகத்தில் இருந்து கலைந்த உணர்வு இருவருக்கும். அனிக்காவின் குரல் கேட்டதும் காபி கப்பை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு… கொலுசு சத்தம் ஒலிக்க வெளியே சென்று விட்டாள் மலர்.

இருவரையும் நெருக்கமாக பார்த்த அனிக்காவிற்கு உலகமே சுழன்றுவிட்டது என்றால் அது மிகையாகாது. அவர்களின் அந்த நிலையை கலைக்கத்தான் அவள் சூர்யாவை அழைத்தாள். அனிக்காவின் வரவை அந்த நேரத்தில் சூர்யா சுத்தமாக விரும்பவில்லை…..

கோபத்துடன் “என்ன அனிக்கா?” என்றான் காபியை அருந்தியவாறு.

அவன் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்தவள், ‘ஓஹோ, சாரை தொந்தரவு செய்து விட்டேன் என்று இந்த கோபமா?’ என்று பல்லை கடித்தவள்….

அதை வெளிக்காட்டாது “என்ன சூர்யா நமக்குள் பேசுவதற்கு எத்தனை விசயம் இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கீங்க அந்த இரண்டு வருக்ஷ கதையை பேசனும். ஐ’வில் மிஸ் யூ ஸோமச் சூர்யா”  என்றாள் கண்களை விரித்து.

இந்த அனிக்காவின் காதல் விஷயத்தை இன்றோடு முடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் “இங்கு, பார் அனிக்கா காலேஜ் எண்ட்ல தான் உன் காதலை நீ என்கிட்ட சொன்ன. அப்போ உன் மேல எனக்கு ஒரு மயக்கம்…. நீ ரொம்ப அழகா, மார்ட்னா இருக்க அப்படிங்கிற மயக்கம். ஸோ, நீ ல்வ் சொன்னதும் ரிஜெக்ட் பண்ண எந்த ரீசனும் அந்த நேரத்துல எனக்கு இல்லை.”

“இப்போ உங்களுக்கு ரீசன் கிடைச்சிட்டோ?” சற்று கோபமாவே கேட்டாள்.

“லிசன் அனிக்கா எனக்கு அப்போ அந்த அளவு மெச்சூரிட்டி இல்லை.ஸோ ஐ அட்மைர் யூர் புயூட்டி. இப்போ என் மனசு ரொம்ப தெளிவா இருக்கு”

 

அவன் தோளை இரண்டையும் பிடித்து “எந்த அளவுக்கு தெளிவு சூர்யா…. லவ் பண்ண பொண்ண ரிஜெக்ட் செய்ற அளவுக்கா!????”

அவளது கைளை விலக்கி “உன் மேல எனக்கு இருந்தது மயக்கம் அப்படினு புரியுற அளவுக்கு ஒரு தெளிவு இருக்கு. ஸோ இனி இப்படி காதல் அது, இதுனு சும்மா லூஸ் டாக் விடாத. என் பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு,” அடிக்குரலில் எச்சரித்தான்.

அனிக்கா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ‘அவனுக்கு தன் மீது உள்ள மயக்கம் இவ்வளவு சீக்கிரம் தெளிந்து விடும்’ என்று அவள் நினைக்கவில்லை. இதை அவ்வளவு சுலபமா எடுத்து கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை.

கோபத்துடன் “என்ன சூர்யா அமெரிக்கா போய்விட்டு வந்ததும் என்னை  கல்யாணம் செய்வதாக சொன்னிங்க. என் மனசுல  ஆசையை வளர்த்து விட்டு இப்போ வந்து அது ஜஸ்ட் அட்ரக்க்ஷன்னு சொல்ரீங்கஎப்படியாவது அவன் மனசு திரும்பி விடாதா என்ற ஒரு ஆசையில் பேசினாள்.

தவறு தன் மீதும் உள்ளத்தால் சூர்யா அமைதியாக இருந்தான். அவனுக்கு அவளிடம் ஓரளவிற்கு ஈர்ப்பு இருந்ததுதான், அது அந்த வயதில் வரும் சாதாரண ஒன்று என்பதை அவன் புரிந்து கொண்டான். அவளாக வந்து காதலை சொல்லாவிட்டாள் அவனுமே அவளை மறந்து இருப்பான்.

சூர்யாவின் இந்த அமைதியை பயன்படுத்த எண்ணி “சூர்யா உங்கள்க்கு என்மீது அன்பு இருக்கு. நமக்கு கல்யாணம் ஆன பின்பு அதை நீங்க உணர்வீங்க” என்றாள்

தன் பொறுமையை சூர்யா மொத்தமாக வடிய கோபத்துடன் அவள் புறம் திரும்பியவன் “இங்கு பார், நீயாக வந்து தான் என்கிட்ட காதல் சொன்னாய். உன்னோட அப்பாவாக வந்து என் அப்பாவிடம் கல்யாணம் பற்றி பேசினார். உன்னை எனக்கு பிடித்து இருந்தால் அப்போதே நான் என் அப்பாவிடம் பேசி இருப்பேன்… அதுவும் உன்கிட்ட கூட நான் அமெரிக்கா போயிட்டு வந்து பதில் சொல்கிறேன் என்று சொன்னனே தவிர கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டு செல்லவில்லை.”

“அதனால் கடைசி ஒருமுறை  சொல்கிறேன் கவனமாக கேள், எனக்கு உன் மீது காதல் இல்லை… இதை பற்றி இனி பேசாதே” என்று முடித்தவன் வெளியே போகுமாறு கையை வாசல் நோக்கி நீட்டினான்.

இவன் தன் மீது இருந்த மயக்கம் தெளிந்தால் இப்படி சொல்லுவான் என்று அறிந்து தான்…. அமெரிக்கா செல்லும் முன்னே அவனிடம் கல்யாணத்திற்கு அவன் பெற்றோரிடம் சம்மதம் வாங்க சொல்லி நச்சரித்தாள், ஆனால் கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை.

சூர்யாவின் தெளிவான பேச்சை மீறி அனிக்காவால் மேலே ஒரு வார்த்தை பேச முடியவில்லை. முன்னமே அவனிடம் பார்த்து பார்த்து தான் பேசுவாள்.

 இப்பொழுது தன் மேல் இருந்த மயக்கம் தெளிந்து ஒரு கம்பீரமான ஆண்மகனாக இருக்கும் பொழுது சுத்தமாக அவனை எதிர்த்து பேச முடியவில்லை. 

கோபத்துடன் அவன் அறையை விட்டு வெளியே சென்றவள், நேராக விக்கியின் முன் போய் நின்றாள். தன் கைபேசியை நோண்டி கொண்டு இருந்தவனிடம் அதை தூக்கி கட்டிலில் வீசி விட்டு,

“நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது…. இந்த திருவிழா முடிந்து போகும் முன் மலரை நீ ஏதாவது செய்தாகணும்” என்றாள் கண்களில் வெறியுடன்.

அனிக்கா பேசியது முதலில் புரியாது முழித்தவன் ‘என்ன சொல்கிறாள் இவள்?’ என்று நினைத்தவனின் கண்ணில் அவளின் கோபம் கொண்ட முகம் தெரிய “என்ன அனிக்கா ஏதாவது பிரச்சனையா”.

“ம்ம் ஆமா, பெரிய பிரச்சனைதான்…. முதலில் அந்த மலரை ஏதாவது செய்ய வேண்டும்” என்று கத்தினாள்.

“இங்கு பார், எதை சொல்வதாக இருந்தாலும் தெளிவாக சொல்… சும்மா வந்து கத்தி  என் நேரத்தை வீணாக்காத” என்றான் பொறுமை இழந்தவாறு.

அவன் பேச்சில் இன்னும் அவளுக்கு கோபம் கூடத்தான் செய்தது. ஆனால், இப்பொழுது அவனிடம் கோபம் கொண்டால் தன் வேலை ஆகாது என்று நினைத்தவள்… பொறுமையை வரவழைத்து கொண்டு சூர்யாவிற்கும் ,அவளுக்கும் நடந்த வாக்கு வாதத்தை பற்றி சொல்லி முடித்தாள்.

அதை கேட்டவனுக்கு ஆச்சிரியமாக இருந்தது அவனுமே சூர்யாவின் இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை, அதை மறைக்காது அவளிடமும் கேட்டு விட்டான்.

“ஹ்ம்ம் ஆமாடா, அவன் இப்படி சொல்லிவிட கூடாது என்று நினைத்து தான் முதலிலே ‘காதல்’ன்னு அவன்கிட்ட பெரிய அஸ்திவாரத்தை போட்டேன். என்ன செய்ய கடைசியில் எல்லாம் என் கை விட்டு போயிட்டு. ஏற்கனவே, அழகா இருப்பான் இப்போ அமெரிக்கா போயிட்டு வந்ததும் அவன் மேல இருந்து கண்ணே எடுக்க முடியல. இருந்தாலும் இப்படி ஹண்ட்சம்மா ஒருத்தே இருக்க கூடாதுதா!

அவளின் புலம்பலில் எரிச்சல் மூடமுதல அவனை வர்ணிக்கிறத விட்டுட்டு எப்படி மறுபடியும் மடக்கலாம் அப்படினு யோசி.

அது சரி, அவன் உன்னை வேண்டாம்னு சொன்னதுக்கும் மலர்க்கும் என்ன தொடர்பு?” என்றான் கண்களில் கூர்மையுடன்.

“ம்ம், அவள் மீது சூர்யாவின் மனசு சாய்ந்திடுமோ என்ற பயம் தான்….. அதான் அவளை ஏதாவது நீ செய்ய வேண்டும்”. 

சிறிது நேரம் யோசித்தவன் பின் உறுதியான குரலில் “மலர் எனக்கு வேண்டும்…. மனைவி என்கிற உறவோடு” என்றான்.

விக்கியை ஆச்சிரியமாக பார்த்தாள். அவளுக்கு விக்கி பற்றி நன்றாக தெரியும்….. அவனை பொறுத்தமட்டு பெண்களளோடு அவனுக்கு உண்டான உறவு கட்டில் வரை மட்டும் தான். அதற்கு மீறி அவன் கொண்டு செல்ல மாட்டான். ஆனால், மலர் விஷயத்தில் மட்டும் அவனின் அந்த கோட்பாடு விதிவிலக்காக இருந்தது.

மேலும், அவன் மலரை எல்லா பொண்ணுங்களையும் எப்படி நடத்தினானோ அப்படிதான் மலர்கிட்டயும் இருப்பான் என்று நினைத்து இருந்தாள்.

இந்த பதிலை அவள் எதிர் பார்க்கவில்லை. அதுவும் பெண்களுக்கே உண்டான பொறாமை குணம் மனதில் உதிக்க “அவகிட்ட அப்படி என்ன இருக்குனு எல்லாரும் அவள் பின்னாடி சுத்துரிங்கமலரின் மீது படிந்த சூர்யாவின் பார்வையையும்  நினைத்தவள் எரிச்சலுடன் கேட்டாள்.

அவளின் பொறாமையை  கண்டு கொண்டவன் “உன்னை மாதிரி பெண் என்று மலரை நினைத்தாயோ?…. அவளிடம் அடக்கமான அழகு இருக்கிறது, அவளை விட்டு கொடுக்க எந்த மடையனும் விரும்பமாட்டான்”.

ம்ச்ச் போதும், அவளை புகழ்ந்தது…. நீ மலரை என்ன வேணாலும் செஞ்சுக்கோ, ஆனால் கொஞ்சம் சீக்கிரம் முடித்தாக வேண்டும். அப்பொழுதுதான் சூர்யா பரன்ட்ஸ் கிட்ட என்னால் பேச முடியும்”.

“சரி, நான்  அதை பார்த்து கொள்கிறேன்…. இதற்கு உன் உதவியும் எனக்கு தேவைப்படும், செய்ய தயாராக இரு” என்று அவன் முடிக்கையும் போனில் இருந்து அழைப்பு வர, பேசியவாறு வெளியே சென்று விட்டான்.

அனிக்காவிடம் பேசிய பின் தான் சூர்யாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால், தன் பேச்சின் பாதிப்பு மலரை சென்று தாக்கும் என்று அவன் அப்பொழுது அறியவில்லை.

ஏழாம் நாள் திருவிழா அன்று தான் நவீனின் தந்தை வரதனால் வர முடிந்தது. சங்கர் சொன்னதற்காகவே சீக்கிரம் முடிக்க முயன்றார்…. ஆனால், வேலை அதிகமாக இருந்ததால் அவரால் ஏழாம் நாள் தான் வர முடிந்தது.

பரஸ்பர விசாரிப்பிற்கு பின் தங்கள் அறைக்கு வந்தவர் தன் மனைவியிடம் “சுஜா  அனிக்காவும், விக்கியும் எந்த தொந்தரவும் செய்யவில்லையே?”.

“ஒரு தொந்தரவும் இல்லைங்க. உங்களுக்கும், நவீனுக்கும் தான் அவங்க இரண்டு பேர் மீதும் நம்பிக்கையே கிடையாது” என்றார் ஆற்றாமையுடன்.

“அப்படி இல்லை சுஜா.. இரண்டு பேரும் ஒரு  இடத்தில் இருந்தால் ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கிவிடுவர்.  நீ சொன்னதால் தான் அவர்களை இங்கு அனுப்ப நான் சம்மதிச்சேன், தொந்தரவு இல்லாதமட்டும் சந்தோஷம்” என்று அவர்கள் இருவரின் பற்றின பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

நவீனையும், சூர்யாவையும் ஒரு முக்கியமான வேலைக்காக பெரிய பாட்டி கோவிலுக்கு அனுப்பி வைத்திருந்தார். மலர் தனியாக அமர்ந்து கொண்டு தன் சுடியில் எம்ராய்ட் போட்டு கொண்டு இருந்தாள். யாரும் அருகில் இல்லை என்பதை உணர்ந்த விக்கி மெதுவாக மலரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

 திரும்பி பார்த்தவள் விக்கி என்று தெரிந்ததும் முதிலில் வீடு முழுவதும் தன் பார்வையால் அலசினால் எங்காவது சூர்யா இருக்கிறானா என்று….

“ஹாய் மலர், இந்த ப்ளாக் கலர் தாவணி உனக்கு ரொம்ப அழகா இருக்கு”.

தேங்க்ஸ்” என்றவள் வேறு எதுவும் சொல்லாது தன் வேலையிலே கவனமாக இருந்தாள்.

கோவிலில் இருந்து வீடு நுழைந்தவனின் கண்ணில் மலரை அங்கம் அங்கமாக ரசித்து கொண்டு இருந்த நவீனின் பார்வை  பட வேகமாக மலரின் அருகில் சென்று “மலர்” என்றான் கர்ஜனையுடன்.

ஒரு நொடி அந்த குரலில் விக்கியே நடுங்கி விட்டான். சும்மாவே அவனை கண்டால் நடுங்கி கொண்டு இருப்பவள் இப்பொழுது அவனின் அவதாரத்தில் மழையில் நனைந்த கோழி குஞ்சுபோல தான் அவளின் நிலை இருந்தது.

தன் மருண்ட விழிகளை உருட்டி “என்ன அத்தான்” என்றாள் நடுக்கத்துடன்.

விக்கியின் மீது தன் பார்வையை ஒரு நொடி கூர்மையாக பதித்தவன் பின் அவளிடம் திரும்பினான். அவளின் அந்த மருண்ட பார்வையை கண்டு தன் கோபத்தை கட்டுபடுத்தியவன் “உன்னை அம்மா கூப்டாங்க, போய் என்னனு கேள்” என்று அவன் சொன்னது தான் தாமதம், உடனே அங்கு இருந்து சென்று விட்டாள்.

தன் பேன்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்து கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து விக்கியை அளவிட்டவாறு  அவன் முன் வந்து நின்றான் சூர்யா.

“உன்னை நான் ஏற்கனவே எச்சரித்து இருக்கேன், மலர்கிட்ட இருந்து விலகியே இரு. உன் பொறுக்கிதனத்தை மலர்கிட்ட வச்சிக்காதே. எப்பவும் நான் இப்படி எச்சரித்துகிட்டே இருக்க மாட்டேன்” என்றான்.

“நீ சொன்னால் நான் கேட்டு விட வேண்டுமா என்ன?… எனக்கு மலரை பிடிச்சிருக்கு அதனால் அவளிடம் நான் பேசுவேன். எப்படியும் அவள் ஒருத்தனுக்கு கழுத்த நீட்ட போறா அது எனக்கு நீட்டினதாவே இருக்கட்டும்” என்றான் விக்கி அலட்சியமாக.

விக்கி பேசி முடித்த அடுத்த நிமிடம் தனது வலது கரத்தால் அவன்  கரத்தை பிடித்து முதுகுக்கு பின்னால் வளைத்துவிட்டான். அவர்கள் நின்ற இடத்தை பெரிய தூண் மறைச்சிட்டதால சூர்யாவிற்கு அது இன்னும் வசதியா இருந்தது.

“ஆஆ… விடு சூ…ர்யா கை வலிக்….கு” அலறியவனின் கையை இன்னும் வலிக்க வளைத்து,

“மலர யாருக்கு கல்யாணம் செஞ்சி வைக்கனும் அப்படின்னு எங்களுக்கு  தெரியும். ரொம்ப தைய்ரியமா என்கிட்டயே அவள உனக்கு கெட்டி வைக்க சொல்லற… ஒழுங்கா திரும்ப லண்டனுக்கு ஓடி போயிறு. திஸ் இஸ் யூவர் லாஸ்ட் வார்ன்னிங்க், மைன்ட் இட்.”

கன்றி சிவந்து இருந்த கையை தேய்த்து விட்டான் விக்கி. அவனின் தோற்றத்திலும், குரலிலும் கொஞ்சம் பயந்து தான் வந்தது ஆனால், மலரை விடும் எண்ணமும் அவனுக்கு இல்லை.

விக்கியை எச்சரித்து விட்டு வந்தவனுக்கு இன்னும் கோபம் முழுவதுமாக அடங்கவில்லை. காய்ந்த துணிகளை எடுத்து கொண்டு தன் அறைக்கு சென்ற மலரின் பின் சென்றவன் அவள் வெளியே வரும் வரை வாசலிலே நின்று  இருந்தான். அவள் வெளியே வரவும் அவளின் கையை பிடித்து  இழுத்து சென்றான்.

அவன் செய்கையில் பதறியவள் “ஐயோ அத்தான் என்ன இது, கையை விடுங்கள்” என்றாள் பதட்டத்துடன்.

அவளை போன்று அவனுக்கு எந்த பதட்டமும் இருந்த மாதிரி தெரியவில்லை. மொட்டை மாடி செல்லும் படியின் அருகில் அவளை மறைத்து நிறுத்தியவன் “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா??” என்றான்.

அவன் செய்கையில் பதறியவள், அவன் கேட்ட கேள்வியில் பதட்டம் போய் கோபம் வர  “இதை நான் உங்ககிட்ட கேட்கனும். சும்மா இருந்தவளை இழுத்து வந்து இப்படி கேட்கிங்க.” .

மலர் சாதுவான குணம் உடையவள் தான். ஆனால், எப்பொழுதுமே அப்படி இருப்பவள் இல்லை. படிக்கும் இடத்தில் உள்ள எல்லோரிடமும் நன்றாக பேசுபவள் கூச்சம், பயம், வெட்கம் எல்லாம் சூர்யாவை பார்க்கும் பொழுது தான் அதிகம் வெளிப்படும். இன்று அவன் இப்படி தன்னை பற்றி ‘அறிவு இருக்கிறதா’ என்று கேட்டதும் கோபம் வந்து விட்டது அதான் அவனிடம் நேரடியாகவே கேட்டு விட்டாள்.

மலரின் அந்த கோபம் அவனுக்கு ஆச்சிரியத்தை தரவில்லை. சிறு வயதில் இருக்கும் பொழுதே அவளை பற்றி கொஞ்சம் மட்டம் தட்டினால் சும்மா இருக்க மாட்டாள் பொங்கி எழுந்து விடுவாள்.

ம்ச்ச் ஃபிர்ஸ்ட் கொஞ்சம் தள்ளி நில்லுங்க இப்படி யாருமே இல்லாத இடத்துக்கு தள்ளிட்டு வந்து கேட்கிற கேள்விய பாரு?”

அவனுக்கு விக்கி பற்றிய சிந்தனை பின்னுக்கு போய்விட்டது, மாடி கைபிடியில் கைகளை மடக்கி சாய்ந்து நின்றவன் “என்ன சொன்ன?! தள்ளிட்டு வந்தேனா, இந்த இரண்டு வருசத்துல வாய் உனக்கு அதிகமாயிட்டு” சுழித்த அவள் இதழ்களில் அவன் பார்வை சென்றது.

உங்களுக்கு கோபம் வர மாதிரி நான் ஏதோ செஞ்சிருக்கேன் அதை சொல்லாம இப்படி ஒரு வயசு பொண்ணுகிட்ட  அறிவு இருக்கானு கேட்டிங்கனா கோபம் வர தான் செய்யும்” தலை குனிந்து இமைகளை மட்டும் மேலே விரித்து மெல்லிய குரலில் சொன்னாள்.

அந்த பார்வை அவனை ஏதோ செய்ய இதழ்களை விரித்து “நீ வயசு பொண்ணுனு எனக்கு நியாபக படுத்திரியோ” என்றான் புன்னகையுடன்.

அவனின் அந்த பேச்சில் உடல் சூடேறி முகம் சிவக்க நகர போனவளின் கையை பிடித்து நிறுத்தினான்.

“சூர்யா” என்று அவர்கள் அருகில் கேட்ட குரலில் மலர் பயந்து நின்றுவிட்டாள்.

மலரும்…………..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!