Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural 19

கருவின் குரல்
அத்தியாயம் 19

ஜானகி தற்போது தன் மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.தினமும் தொழில் விஷயமாக நிறைய பேரை பார்ப்பதால் தன் நடை,உடைகளில் கவனம் செலுத்தினாள்.

அனிஷும் நெகமம் சேரிஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதால் அம்மாவுக்காக பிரத்யேக நெகமம் கைத்தறி சாரிஸ்களை டிசைன் செய்து தந்தாள். இருந்தாலும் ஜானகிக்கு சுங்குடி காட்டன் தான் ஃபேவரைட்.

நேர்த்தியான உடை நிமிர்ந்த நடை எவரையும் கண்களை பார்த்து அழுத்தமாக பேசும் தோரணை இவை எல்லாம் ஜானகியை பக்கா பெண் தொழில்முனைவோராக காட்டியது.



Advertisement

தன் மகளின் எதிர்கால வாழ்விற்காக மைபேஷனுள் நுழைந்த ஜானகியை பார்த்த அடுத்த நொடி தன்னை அறியாமல் இரு கைகளையும் எடுத்து கும்பிட்டவாறு உள்ளே அழைத்தான் அர்ஜூன்

வாங்க மேடம் உட்காருங்க என்றான். தேவா சார பாக்கணும் என்றாள் ஜானகி தேவா சாரா ஒரு நிமிஷம் இருங்க சார் ரொம்ப பிசியா இருக்காரு நான் உள்ள போய் உங்களைப்பற்றி சொல்றேன் என உள்ளே போனான்

ஜானகி ஒரு பெரும் மூச்சு வீட்டு அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தாள்.மகளின் எதிர்கால கனவுகளில் மூழ்கி கொண்டிருந்தாள்.

Advertisement

வரும் மாப்பிளை வீட்டார் பெண்ணைப் பார்த்து சரி என்று சொன்னாலும் பிறகு அப்பாவை பற்றி கேட்டுவிட்டு வந்த வழியே சென்று விடுகிறார்கள். எவ்வளவு முயன்றும் அவளால் ஒரு சரியான மாப்பிள்ளையை அனிஷுக்கு தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால் தேவாவின் உதவியை நாட, அவன் “சரி ஆபீசுக்கு வா” என்று கூறி விட்டான்.

Advertisement

மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை ஊர் முழுவதும் தேடிக் கொண்டிருக்க, அனிஷோ அம்மாவிற்கு பிடி கொடுக்காமல் அவளது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தாள்.

அவளது எண்ணமெல்லாம் நெகமம் கைத்தறி சாரீஸை உலகறிய செய்ய வேண்டும். இதன் மூலம் அங்குள்ள நெசவாளர்களின் வாழ்வாதரம் மேம்படும். தனக்கும் ஆராய்ச்சி துறையில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என அதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

அம்மா பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை. அதுபோக கல்யாணத்தின் மீதும் எந்த ஒரு எண்ணமும் அவளுக்கு இல்லை.
அவளை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று ஜானகியும் அலைந்து கொண்டிருக்கிறாள்.

Advertisement

அனிஷ் நெகமம் கைத்தறி புடவைகளைப் பற்றி நிறைய ரிசர்ச் செய்து இந்தியாவின் புகழ்பெற்ற யுனிவர்சிட்டிகளில் எல்லாம் அவார்ட் வாங்கிவிட்டாள் .தற்போது ஒரு பெரிய ரிசர்ச் செய்து கொண்டிருக்கிறாள். அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. இதை முடித்தவுடன் எப்படியாவது அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று ஜானகி அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறாள்.

தேவா ஃப்ரீயாகத்தான் உள்ளே இருந்தான். அர்ஜூன் ஒரு மரியாதை நிமித்தமா அவர் பிஸி என சொல்லி உள்ள வந்தான். நேரே தேவாவிடம் போய் விவரங்களை சொல்ல, தேவா ஒரு நிமிஷம் கூட தாமதம் செய்யாமல் உடனே அவங்கள உள்ள வர சொல்லு ஏன் வெளியே உட்கார வச்சிருக்கே? என்றான் .

அடுத்த நொடி ஜானகி உள்ளே வந்தாள்.அது ஒரு அழகான கண்ணாடி மாளிகை உள்ளே இருந்து வெளில் பார்த்தால் மொத்த பொள்ளாச்சியினுடைய அழகும் தெரியும்படி ரம்யமா இருந்தது அந்த அறை. அறை முழுவதும் ஏசி குளிரூட்டப்பட்டு இருந்தது.

ஒரு ரோலிங் சேரில் தேவா உட்கார்ந்திருந்தான். நேர் எதிரே ஜானகி, பக்கவாட்டில் அர்ஜுன் லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தான். சொல்லு ஜானகி என்ன விஷயம் என தேவா கேட்க, எல்லாம் அனிஷோட கல்யாண விஷயம் தான் அனீசுக்கு சல்லடை போட்டு மாப்பிள்ளை தேடிட்டே எங்குமே மாப்பிள்ளை கிடைக்கல எல்லாருமே வந்து பார்க்கராங்க, எங்களோட வசதியை பார்த்து சரினு சொல்றாங்களே தவிர யாரும் அனிஷை நல்லா பாத்துக்குவாங்கனு எனக்கு தோணுல, அதுபோக வரவங்க அப்பா பத்தி கேட்கறாங்க ,ஒரு நிமிடம் அர்ஜூன் இருப்பதை கண்களால் தேவாவிடம் சுட்டி காட்டி விட்டு,அப்பறோம் அப்படியே போயிறாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல நீங்கதான் இந்த விஷயத்துலே எனக்கு உதவி செய்யணும்.

நான் உங்கள மட்டும் தான் நம்பி இருக்கிறேன் என்று ஜானகி சொல்ல, சரி ஜானகி எப்படி மாப்ள வேணும்னு எதிர்பார்க்கிற என்று தேவா கேட்டான்.

அனிஷை நல்லபடியா பாத்துக்கணும். எக்காரணத்தைக் கொண்டு அவளை பாதியில விட்டுட்டு
போய்ரக்கூடாது என்றாள். ஜானகி அப்படி ஒரு வார்த்தையை சொல்லியவுடன் லேசான அதிருப்தி தேவா முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அதை மறைத்துக் கொண்டு சரி நீ சொன்ன மாதிரியே ஒரு நல்ல மாப்பிள்ளை நான் பார்க்கிறேன்.

எனக்கு தெரிஞ்ச புரோக்கர் கிட்ட சொல்றேன். இல்லனா மேட்ரிமோனிலே அப்ளை பண்ணலாம். அனிஷுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து நானே முன்னாடி நின்னு கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன் என்றான்.

ஜானகி உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே கல்யாணத்தை பார்த்துக்கிறேன். நீங்க எனக்காக மாப்பிள்ளை மட்டும் தேடி கொடுங்க. எங்கள பத்தின எல்லா விஷயங்களையும் சொல்லிட்டு ஒரு நல்ல மாப்பிள்ளை தேடி குடுங்க.

என்கிட்ட வீடு வாசல் எல்லாமே இருக்கு. வர மாப்பிள்ளை என் பொண்ணை மட்டும் கடைசி வரைக்கும் வச்சு காப்பாத்துனா போதும் வேற எதுவும் எனக்கு வேணாம் நான் வேற எதுவும் மாப்பிள்ளை கிட்ட எதிர்பார்க்கலே
என்றாள்

என்ன தான் அர்ஜூனுடைய கவனம் லேப்டாப்பில் இருந்தாலும் ஜானகி சொல்லிய அனைத்தும் அவனுடைய மூலையில் ஏதோ ஒரு இடத்தில் பதிவாகிவிட்டது.

சரி இப்ப அனீஸ் எங்க எப்படி இருக்கா பார்த்து ரொம்ப நாளாச்சு என தேவா கேட்க , அனிஷ் பத்தியும் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் அதுதா தாமதிக்காம உடனே வந்தேன்

அனிஷிற்கு திருமணத்துலே விருப்பம் இல்லைனு நினைக்கறே,அந்த பேச்சு எடுத்ததுலே இருந்து வீட்டுக்கு வரத கூட நிறுத்திட்டா , எனக்கு அவ எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு.

வர புதன் கிழமை டெல்லி யுனிவர்சிட்டிலே அவளோட பிரசன்டேசன் இருக்கு, அத முடிச்சதும் அவளை எப்படியாச்சு என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுங்க, அப்பறோம் நான் பார்த்துக்கறேன் என்றாள்.

ஜானு நீ அனிஷை ரொம்ப பிடிச்சு வைக்காதே. ஃபிரியா விடு ,எப்படியும் நம்மகிட்டதா திரும்பி வந்தாகனும் என்றான்.

இல்லை நா அவளை பார்த்தே நாலு மாசம் ஆகுது என கண்களில் நீர் கசிய கூறினாள்.

அவள் அழுகை தேவாவை முடிவெடுக்க தள்ளியது.சரி நீ அழாதே அனிஷை உன் கையிலே ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு என்றான்.

சந்தோசமாக சரி என்று கிளம்பி விட்டாள்.தேவா ஜானு என கூறியது , அவள் அழுதவுடன் மகளை ஒப்படைக்க வாக்குறுதி அளித்தது எல்லாம் அர்ஜூன் பதிவு செய்து கொண்டான்.

இரண்டு நாட்கள் செல்ல தேவாவிற்கு ஒரே குற்ற உணர்ச்சி , மகளை அழைத்து வருவதாக உறுதி தந்துவிட்டான். ஆனால் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருக்கிறான்.

வீட்டில் இருந்து கிளம்ப மைதிலியிடம் பர்மிஷன் வாங்க வேண்டும், அது கூட பரவா இல்லை. பிசினஸ் விஷயமாக என்று சொல்லி சமாளித்து விடுவான். ஆனால் இவன் கிளம்பியதும் ஒரு ஒற்றனை பின்னாடியே அனுப்பி வைப்பாள். இவன் தொழில் விஷயமாகதான் செல்கிறானா? இல்லை ஜானகியுடன் டூயட் பாட செல்கிறானா? என, இப்போதுதான் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டுள்ளது. வேறு எதையும் இழுத்துவிடக் கூடாது என எண்ணினான்.

என்ன செய்து அனிஷை அழைத்து வருவது? அவனிடம் உள்ள பாடி கார்ட் இரண்டு பேரை அனுப்பலாமா? என யோசித்தான்.

பின் அனிஷின் பாதுகாப்பு கருதி அது சரிவராது என முடிவெடுத்தான்.
திடீரென அர்ஜூன் போன் செய்து, சார் நா இன்னைக்கு ஜப்பான் சிக்கன் செஞ்சிருக்கே நீங்க வந்து சாப்பிட்டுட்டு போங்க என அழைத்தான்.

தற்போது அர்ஜூன் யூடியூப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சமைக்க கத்துக் கொண்டிருக்கிறான்.
அடிக்கடி தேவாவும் , அவனும் சமைத்து உண்டு பொழுதை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஏதோ ஒரு பிணைப்பு உருவாகி இருந்தது. அதன் படி இன்று இரவு உணவு உண்ண அழைக்க வந்துவிட்டான் தேவா.

ஏதோ யோசனையிலேயே உணவை கொறித்துக் கொண்டிருக்க, என்ன சார் ஏதாவது ப்ராப்ளமா? என்றான்.
தேவா அனிஷை பற்றி சொல்ல, சட்டென்று நான் போய் அழைத்து வருகிறேன் என கூறிவிட்டான்.

தேவா முதலில் யோசித்தாலும் சரி என்று சொல்லி விட்டான்.

புதன்கிழமை டெல்லி யுனிவர்சிட்டி கான்பரன்ஸ் ஆடிட்டோரியம் வாசலில் நின்றிருந்தான்.

“டெல்லி குளிர் முகத்தைக் குத்துவது போல தோன்றியது ” அர்ஜூனுக்கு, சட்டை காலரை தூக்கி விட்டு,தனது கூலிங் க்ளாசை சட்டை பையினுள் வைத்தபடியே,
“சார், நெகமம் ஹேண்ட்லூம் பிரசன்டேசனா? என ஆடிட்டோரியம் வாசலில் நின்றிருந்தவர்களிடம் கேட்டான். அவன் ஆம் என தலையாட்ட உள்ளே சென்றான்.

அது ஒரு பெரிய ஆடிட்டோரியம். நிறைய வண்ண விளக்குகள், அந்த இடத்தை மேலும் மெருகூட்டியது.கூடவே மாணவர்களின் ஆரவாரமும்..

ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டான், அர்ஜூன்.

“கம்ப்யூட்டர்லே வைரஸை தேடிப் பிடிக்கிற மாதிரி, ஒரு பொண்ண தேடி கூட்டிட்டு வானு சொல்லிட்டாங்க … இங்கே ஆயிரம் பொண்ணுகளுக்கு நடுவுல எப்படி தேட?” என முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தான்.

தொப்பையுடன் மூக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டே ஒரு வயதான பெரியவர்:
“அனிஷ் மேடம் வரப்போராங்க…”
“அவங்களோட டிசைன் தான் இங்க பெரிய ஹைலைட்…” என்றார்.

அர்ஜூன் மனதில்
“என்ன இவ ப்ரெசன்டேசன் அந்த அளவுக்கு பேமஸா?” என நினைத்துக் கொண்டான்.

அனிஷ் சற்று கலக்கத்தோடு ஸ்டேஜின் பக்கவாட்டில் நின்றிருந்தாள்.இப்போதுள்ள ஜென் இசட் மாணவர்களுக்கு நெகமம் பற்றியும் அங்குள்ள நெசவாளர்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெரியாது. ஏதாவது கத்தி கலாட்டா செய்து விட்டாள் என்ன செய்வது என கலக்கமாக நின்றிருந்தாள்.

அங்கிருந்த ஆங்கர் நெக்ஸ்ட் ப்ரெசன்டர் மிஸ் அனிஷ்கா தேவி என அறிவிக்க அரங்கத்தில் கரவொளி எழும்பியது.

அர்ஜூன் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

பெண்கள் வரிசையாக பச்சை, மஞ்சள் ,சிவப்பு என கைத்தறி புடவைகளை கட்டி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

மாணவர்கள் கூச்சலிட்டு கத்தினர்.ஒவ்வொருத்தராக நடந்து வந்து பின் அனைவரும் சர்க்கிள் ஷேப்பில் ஆடியன்ஸை பார்த்து நின்றனர்.

அனிஷ் மைக்கை பிடித்து எளிய ஆங்கிலத்தில் தனது ஆராய்ச்சி பற்றி விளக்க ஆரம்பித்தாள்.

குட்மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில் மேன்
முதலில் நெகமம் சாரீஸ் தயாரிக்க தரமான பருத்திகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.பின் அவை நூலாக மாற்றி தேவையான வண்ணங்களில் சாயமிடப்படுகின்றன.
சாயமிட்ட நூல்கள் புடவை நீளத்திற்கேற்ப பெரிய சுருள்களாக கட்டப்படுகின்றன.

பின் பாரம்பரிய முறையில் குடும்பம் இணைந்து கைத்தறியில் நெய்து புடவை தயாரிக்கிறார்கள். கலைநயமிக்க வடிவங்கள், ஜரி வேலைகள், நிற கலவைகள் அனைத்தும் கையால் உருவாக்கப்படுகின்றன.

இறுதியாக புடவைகளை சரிபார்த்து குறைபாடுகள் நீக்கி, புடவைக்கு இறுதி மென்மை மற்றும் பொலிவு சேர்க்கப்படுகிறது.

நெகமம் புடவை, உயர்தர பருத்தி என்பதால் மென்மை, குளிர்வு, சுவாசிக்கக்கூடிய தன்மை நிறைந்து உள்ளது.

தலைமுறைத் தலைமுறையாக வந்த பாரம்பரிய கைத்தறி நுட்பத்தின் உயிருள்ள கலை நெகமம் சாரீஸ்.

ஒவ்வொரு புடவையும் அந்த பகுதி நெசவாளர்களின் கதை மற்றும் உழைப்பை கொண்ட கலைப் படைப்பு, என அழுத்தமாக சொல்லி முடித்தாள்.

இதுவரை புடவை கடையில் வாங்கும் பொருள் என நினைத்துக் கொண்டிருந்த ஜென் இசட் மாணவர்களும் இவள் சொன்ன தகவல்களை கேட்டு கைதட்டினர்.

அர்ஜூன் ,அனிஷின் முகத்தில் தெரிந்த குழந்தை தனத்தையும், அவள் ப்ரெசன்டேசனில் இருந்த ஆளுமையையும் கண்அசராது பார்த்துக் கொண்டிருந்தான்.

—கருவின் குரல் ஒலிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!