Skip to content
Post Views: 2,022
கருவின் குரல் final
அத்தியாயம் 27
அதுல்யா திருமண விஷயத்தை ஜானகியிடம் பேச தேவா தயாராக வர,அனிஷின் திருமண விஷயத்தை பேச ஜானகி தயாராக வந்தாள்.
இந்த முறை காற்று ஜானகி பக்கமே பலமாக வீசியது. முதலில் அவளே கூறி விட்டாள்.தேவாவிற்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
ஆனால் மனதில் ஒரு உறுதி எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அனிஷிற்கும் அர்ஜூனிற்கும் திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என,ஏனெனில் இதுவரை அப்பாவாக அனிஷிற்கு எதுவுமே செய்தது இல்லை.
Advertisement
முதன்முதலில் அவள் வாழ்க்கைக்கான முடிவை அவளே தேர்ந்தெடுத்து இருப்பதால்,அதை அவளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அமைத்துத்தர வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.
ஜானகி அதுல்யாவிற்காக யாரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து உள்ளீர்கள் என கேட்க,நாங்க மாப்பிள்ளை இன்னமும் பார்க்க வில்லை திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவை மட்டும் எடுத்துள்ளோம் என்று மட்டும் கூறினான்.
“சரி கல்யாண வேலை நிறைய உள்ளது நா கிளம்பறே”,தயங்கின வாறே… நீங்க கண்டிப்பா கல்யாணத்திற்கு வரனும்,நீங்கதான் முன்ன நின்னு எல்லாமே செய்யனும் என்று கண்ணீர்களில் நீர் தேங்க அழைத்தாள்.
Advertisement
“கண்டிப்பா வரே ஜானு,எந்த உதவினாலும் தயங்காம கேளு” என்றான்.
Advertisement
சரி என கூறிவிட்டு அடுத்த நொடியே சென்றுவிட்டாள்.தேவாவிற்கு அந்த இடத்தை விட்டு நகர கால்கள் மறுத்தன.
அவ்வளவுதானா திருமணத்தை பற்றி மட்டும் கூறிவிட்டு சென்று விட்டாள். என்னை பற்றி எதுவும் அக்கறை பட்டதாக தெரியவில்லையே.ஏன் என்னை எப்போதுமே பார்க்கும் அந்த பார்வையை கூட காணவில்லையே.
அந்த பார்வையில் தான் எத்தனை காதல் நிறைந்து இருக்கும்.
ஆனால் இன்று ஒரு கடமையாக மட்டுமே அது இருந்ததே,இந்த இடத்தில் எவ்வளவு காதலை இருவரும் பரிமாறி உள்ளோம்.
Advertisement
எத்தனை அழகான தருணங்கள் அவை. ஆனால் இன்று நான் மட்டுமே பழைய நினைவுகளில் மூழ்கி அந்த வாழ்வு திரும்பி வராதா என ஏக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இவள் என்னடா என்றால் பெண்ணிற்கு திருமணம் வந்து விடுங்கள் என்று ஏனோதானோவென செல்கிறாள்.
எல்லோரையும் போலத்தானே நாங்கள் காதல் செய்தோம். ஏன் திருமணம் கூட முடிந்து விட்டது.ஆனால் விதி ஏன் எங்களை இப்படி பிரித்து விட்டது.
ஏதாவது ஒரு சின்ன வெளிச்சம் எங்கள் வாழ்வில் திரும்ப வந்து இணைத்து விடாதா?என்றெல்லாம் ஏங்கினான்.
இப்போது அவர்களைவிட அனிஷ் அர்ஜூன் திருமணம் முக்கியம் இனியும் தாமதிக்க வேண்டாம் என்று சக்கரவர்த்தியிடம் சொல்லி விட்டான்.
சற்று அவருக்கும் மனக்கஷ்டம் தான் என்ன செய்வது?அதுல்யாவிற்கு நாங்கள் இவ்வளவு பேர் இருக்கிறோம் எப்படியாவது நல்ல வாழ்க்கையை அமைத்து தந்து விடுவோம்.
ஆனால் அனிஷ் அப்படி இல்லையே தகப்பனின் நிழல் இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவள்.அவள் விரும்பிய வாழ்வை அவளுக்கு அமைத்துத்தர வேண்டு ம் என்று உறுதி கொண்டார்.
அதுல்யாவின் நேசத்தை என்ன செய்வது என்று குழம் பினார்.மைதிலியிடம் விஷயத்தை கூற தேவாவிடம் அறிவுறுத்தினார்.
விஷயம் கேள்விப்பட்டு அங்கே ஒரு பூகம்பமே வெடித்து.அதுல்யா மீண்டும் கதவடைத்துக் கொண்டாள்.
ராஜேஸ்வரியும்,சுப்பிரமணியமும் தேவாவை உண்டு இல்லை என ஆக்கிவிட்டனர்.
நாங்கள் நல்ல பையனை ஏற்கனவே பார்த்திருந்தோம்,நீங்கதான் எங்கோ இருந்து வந்தவனை என்பேத்தி கிட்ட காட்டி கல்யாண ஆசையை வளர்த்துவிட்டுடீங்க..
இப்ப அவ மனசு ஒடைஞ்சி போய்ட்டா..
ஏதாச்சு பண்ணி அந்த பையனைவே கட்டி வச்சிரலாம் என்றாள் ராஜேஸ்வரி.
இல்லை அனிஷ் விருப்பப்பட்டுடா அதனால அவளுக்கு அந்த வாழ்க்கையை அமைச்சு கொடுக்கிறதுதான் சரி என்றான் தேவா
அது மாதிரிதானே என் பொண்ணும் ஆசைப்பட்டா இப்போ வேண்டானா என்ன அர்த்தம் என்று எகிறினாள் மைதிலி.
நாம ஆசைப்பட்டா மட்டும் போதாது இரண்டு பக்கமும் இருந்தாதான் அது காதல் அப்போதா வாழ்க்கை முழுமை அடையும்.
கல்யாணம் ஒருவர் மட்டும் விருப்பப்பட்ட நபரோடு வாழ்வது இல்லை, இருவரும் விருப்பப்பட்டு இணைந்து வாழ வேண்டும் அப்போதுதான் இல்லறம் முழுமை அடையும் என்றான் தேவா.
ஏன் நம்ம வாழ்க்கையில கூடதான் நீங்க அந்த ஜானகி மேலே பிரியப்பட்டீங்க,இப்ப வரைக்கும் அவமேல மட்டுந்தான் உங்களுக்கு பிரியம் இருக்கு.
நீங்க சொன்ன அதையே நம்ம வாழ்க்கையில பொருத்தி பாருங்க நா மட்டுந்தான் உங்க மேலே பிரியம் வச்சேன்
இருந்தும் ரெண்டு புள்ள பெத்து சந்தோசமா வாழுலே, அதே மாதிரிதான் அந்த பையனே கட்டி வைங்க அதுல்யா சந்தோசமா வாழுவா என்ற அடுத்த நொடி அவளை ஓங்கி ஒரு அறை அறைந்தான் தேவா.
அவள் திருகிகொண்டு சோபாவின் மீது விழுந்தாள்.அவ்வளவு கோபம் அவனுக்கு வினய்உம், ஸ்வேதாவும் அருகில் இருக்க மாமியார் மாமனார் முன்னாடி இவள் தன்னுடன் ஜானகியை பேசியது அவமான உணர்வை தர அறைந்து விட்டான்.
இனி ராஜேஸ்வரி ஆட்டம்… அந்த ஜானகியையும் அவ புள்ளையும் அன்னைக்கே அடிச்சு இந்த ஊரவிட்டு துரத்தி விட்டுருக்கனு என்றாள் அன்று ஜானகி இவளை அடித்து துவைத்ததை மறந்து.
அம்மா என் புள்ளை வாழ்க்கையை கெடுத்தா,மக என் பேத்தி வாழ்க்கையை கெடுக்கிறா.
இப்படி அடுத்தவங்க குடியை கெடுத்துட்டு எப்படி நல்லா வாழப் போறாங்க அம்மா மாறி புள்ளையோட வாழ்க்கையும் விளங்காமதான் போகப் போது என்றாள்.
அத்தை இனி ஒரு நிமிஷம் நீங்க இந்த வீட்டுல இருக்க கூடாது இப்பவே கிளம்புங்க. இனிமே இந்த வீட்டு பக்கம் வராதீங்க. உங்க பொண்ணு வேணுனா உங்க வீட்டுக்கு வர வெச்சு பாத்துங்கோங்க என்றான்.
பாரு மைதிலி உன் புருசே அந்த வீணாப்போன ஜானகிக்காக என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்றான் என்று எரியும் விளக்கில் எண்ணெய் விட்டாள்.
எங்க அம்மா இங்கதான் இருப்பாங்க நீ முதல்லே வீட்டை விட்டு வெளியே கிளம்பு என்றாள் மைதிலி.
இது என் வீடு என்றான் நெஞ்சை நிமிர்த்தி தேவா
ஓஹோ அப்போ என்னை வெளியே தள்ளிட்டு அந்த ஜானகியை இங்க கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்த போறீங்களா என்றாள்.
ஜானகியை இணைத்து பேசுவது தர்மசங்கடமாக உணர மேற்கொண்டு என்ன செய்வது என தேவாவிற்கு தெரியவில்லை.
ஆமா என்ன இருந்தாலும் இந்த வீடு வாசல் என் மனசு எல்லாத்துக்கும் சொந்தகாரி ஜானகி மட்டுந்தான்.நா சொன்ன மாதிரி இரண்டு மனசும் இணைந்தால்தான் அது இல்லறம் நாம் வாழ்ந்த வாழ்வு பணம் அந்தஸ்திற்காக மட்டுமே.
அதை எப்படியாவது நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த இரண்டு பிள்ளைகளையும் பெற்றோம்.
உன் மனசாட்சியை தொட்டு சொல்லு மைதிலி , இந்த பணம் சக்கரவர்த்தியின் மகன் என்ற அந்தஸ்து இவை எல்லாம் இல்லாமல் இருந்தால் கூட என்னை நீ திருமணம் செய்து இருப்பாயா என்றான்.
அவள் பதில் கூறும் முன் இவனே கூறிவிட்டான்.நிச்சயமாக இல்லை. இவை அனைத்தும் இந்த நொடி போனாலும் நீ என்னை விட்டுச் சென்று விடுவாய். ஆனால் ஜானகி அப்படியல்ல பணம் இல்லாத ஏழையாக நான் அவள் முன்னாடி சென்று நின்றாலும் அவள் இதயத்தின் ராஜா நான் மட்டுமே என்றான்.
மைதிலி எதும் பேசாமல் அவன் முகத்தையே பார்க்க, ராஜி என்னடி அவன் பாட்டுக்கு அந்த ஜானகி புராணம் பாடிட்டு இருக்கான் நீ ஒன்னும் பேசாம நிக்கறே என்றாள்.
சுப்பிரமணியம் சரி நீ எல்லா சொத்தையும் என் பொண்ணுக்கு கொடுத்துட்டு ஜானகியோட போ அவதான் நீ சொத்து இல்லாம போனாலும் ஏத்துப்பா இல்ல என்று தன் பங்கிற்கு காய் நகர்த்தினார்.அவருக்கு எப்படியோ சொத்து கிடைத்தால் போதும் இல்லையா .
தேவா உள்ளே சென்று அனைத்து பத்திரங்களையும் எடுத்து வந்து அவர்கள் முன்பு வைத்தான். அனைத்து சொத்துக்களும் மைதிலி,அதுல்யா,வினய் பெயரில் சரிசமமாக எழுதி இருந்தான்.
இனி இந்த வீட்டுல ஒரு நிமிஷம் இருந்தாலும் அது எனக்கு அவமானம்.இந்த பணம் பகட்டான வாழ்வு எதுவும் வேண்டா .நா இனி என் வாழ்வை வாழப் போகிறேன் என ஜானகி விட்டை நோக்கி நடந்தான்.
ஜானகியின் வீட்டில் அர்ஜூன் சமையல் செய்து கொண்டிருந்தான்.
அவளின் பாட்டி மரகதமும்,அனிஷும் டைனிங் டேபிளில் தட்டை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
இப்போதெல்லாம் மரகதம் தனக்கு சரியான தோழியாக அனிஷ் கிடைத்துவிட்டதாக நினைத்தாள்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து சீரியல் பார்ப்பது,ஷாப்பிங் செல்வது என பொழுதுபோக்கிக் கொண்டிருந்தனர்.
அனிஷும் மரகதத்திடம் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.இருவரும் சேர்ந்து அர்ஜூனை வேலை வாங்குவதில் குறியாக இருந்தனர்.
அவன் இவர்களுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்ய இது நெட்டை அது நொள்ளை என வேண்டும் என்றே குறை கூறினர் இருவரும்.
எப்போது இவர்களிடம் இருந்து தப்பிக்க போகிறேன் என்று கவலைப்பட்டுக் கொண்டே சமைத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
திருமண நாள் நெருங்க நெருங்க ஜானகிக்கு மகளின் வாழ்க்கையை நினைத்து ஆயிரம் ஆயிரம் கனவுகள்.
இன்றுதான் இவளை கரங்களில் ஏந்தியதாக தோன்றியது.அதற்குள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாளா?
நாம் இப்போது அவளுக்கு திருமணம் செய்து வைப்பது சரியா? மகள் அதற்குள் பக்குவப்பட்டுவிட்டாளா?
குடும்பத்தை நடத்தி விடுவாளா? நாம் அவசரப்பட்டு விட்டோமோ?என்னை போன்ற வாழ்க்கை அமைந்துவிட்டாள் சமாளித்து விடுவாளா?என்று கலங்கினாள்.
மனதில் தோன்றிய அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை பதிலாக சமையல் செய்து கொண்டிருக்கும் அர்ஜூன் பதிலாக தோன்றினான்.
நிச்சயமாக அனிஷை கைவிடமாட்டான் என்ற எண்ணம் அவளுக்கு சிறிது கர்வத்தை தந்தது.அதே சமயம் தன்னை நினைத்து பயமாக இருந்தது அவளுக்கு.
இனி என் வாழ்வுக்கு யார் துணை?பெற்றவர்களும் கைவிட்டுவிட்டார்கள்.
கட்டியவன் வேறு துணை தேடிக் கொண்டான்.
யாருக்காக வாழ்ந்தோமோ அந்த மகள் இன்று தனக்கான வாழ்வை வாழப் போகிறாள். அவளை விட்டு இனி எப்படி இருக்க போகிறோம் என்று கண்ணீர் வடித்தாள்.
அர்ஜூன்,” அம்மா சாப்பிட வாங்க” என அழைத்தான்.கண்களை துடைத்துக் கொண்டு சாப்பிட சென்றாள்.
சுவையான சாப்பாடுதான் இருந்தும் மரகதமும் அனிஷும் உப்பு இல்லை.காரம் அதிகம் என்றனர்.
ஜானகி இனிமேல் அனிஷ் நீ சமைச்சு போடு நா சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்றே என்றாள்.
அருகில் அமர்ந்திருந்த அர்ஜூனை கிள்ளினாள்.
அம்மா என்னை திட்டுனா நீதான் எனக்கு சப்போர்ட்டு பண்ணனும் என்றாள்.
உனக்காகதான் என் பாட்டி இருக்காங்களே அப்பறம் என்ன அம்மா எனக்கு சப்போர்ட்டு என்றான்.இந்த சந்தோச நிலையை கலைக்க வந்துவிட்டான் தேவராஜ்.
என்னதான் ஜானகி இனி தன் தனிமை வாழ்வை நினைத்து வாடினாலும், தன்னை வயிற்றில் பிள்ளையோடு தவிக்க விட்டு சென்ற தேவாவை ஏற்றுக் கொள்வாளா?அதுமட்டுமா தன் கண்முன்னால் மைதிலியுடன் வாழ்ந்தவன் ஆயிற்றே அதை மறந்து விடுவாளா?இல்லை அவள் மனதின் ஓரத்தில் அவன் மீது இருக்கும் காதலால் அவனை தன் வாழ்வில் மீண்டும் மன்னித்து ஏற்றுக் கொள்வாளா?
— கருவின் குரல் ஒலிக்கும்
error: Content is protected !!