Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நேற்று பார்த்த நிலா முகம் – 16

“ஓகே. மகி.. நான் கிளம்பறேன். டேக் கேர். பை.

 நான் உனக்கு என் அக்கா, அண்ணன் அண்ணியோட போன் நம்பரை எல்லாம் உனக்கு அனுப்பி வைக்கிறேன்.

 சேவ் பண்ணி வச்சுக்கோ” என்றான் ராஜு, மகியை மெயின்ரோட்டில் இறக்கி விட்டு விட்டு!

“எனக்கு எதுக்குங்க அவங்க நம்பர் எல்லாம்? நீங்களே அவங்க கிட்ட பேசாத போது!”



Advertisement

“நான் வர்ற வழியில நம்மள ஒருத்தன் போட்டோ எடுத்தான்னு சொன்னேன் இல்ல?

 அவன் இந்நேரம் எங்க வீட்டில் அதை அனுப்பி கொளுத்திப் போட்டு இருப்பான்.

நிச்சயம் என்னோட அண்ணியோ, இல்லை அக்காவோ உனக்கு போன் பண்ணி வம்பு இழுப்பாங்க.

Advertisement

உன்னை கோபப் படுத்தப் பார்ப்பாங்க.

Advertisement

எப்படியாவது உன்னை மறுபடியும் பேக் ஆக வச்சு, கல்யாணத்தை நிறுத்த பார்ப்பாங்க.

கோபால் அண்ணன் சொன்ன மாதிரி நீ தான் ஸ்ட்ராங்கா இருந்து அவங்கள ஹேண்டில் பண்ணனும்!

நீ எப்படியாவது அவங்கள மேனேஜ் பண்ணிக்கோ! எனக்காக! நமக்காக! ப்ளீஸ்!”

Advertisement

“ச்சே. இதுக்கு போய் ஏன் ப்ளீஸ் எல்லாம் சொல்லிட்டு! விடுங்க நான் பார்த்துக்குறேன்!” என்று அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள் மகி.

ராஜு சொல்லி விட்டு சென்ற மாதிரியே மகிக்கு வனிதாவிடம் இருந்து போன் வந்தது.

மகி எடுக்கவில்லை! அது அடித்து நின்றவுடன் ராஜுவை அழைத்து அழைப்பில் இருக்கும்படி செய்து விட்டு, அவளே வனிதாவை அழைத்து ராஜுவோடு அழைப்பை இணைத்து விட்டாள்!

வனிதா போனை அட்டென்ட் செய்தவள்,

“ஹலோ.. நான் வனிதா பேசுறேன்!”

“ஹேய்.. வனிதாவா.. ம்ம்.. சொல்லுடி.. ஏய்..குண்டம்மா.. எப்படி இருக்கே?

இன்னமும் இந்த மிஸ்டு கால் கொடுக்கிறதை நிறுத்தவே மாட்டியா? எப்போதும் ஓசி தான்!”  என்றாள் மகி.

“ஏய்.. நான் ராஜுவோட அண்ணி வனிதா பேசுறேன்” என்றாள் வனிதா கோபமாக.

“ஓ.. நீங்களா? நான் என்னோட கிளாஸ் மேட் ஒருத்தி இருக்கா வனிதான்னு!

சரியான சோத்து மூட்டை குண்டச்சி!

ட்ரு காலர்ல வனிதான்னு காட்டவும்,  நான் அவ தான் புது நம்பரில் இருந்து பேசுறான்னு நினைச்சு பேசிட்டேன்!

சொல்லுங்க அக்கா!” என்றாள் மகி.

“என்ன சொல்றது? உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லியா?

ஒருத்தன் உன்னை பொண்ணு பார்த்து நிச்சயமே பண்றேன்னு வந்திட்டு, அதை பண்ணாம, அவங்க அக்கா சொன்னானு அவ கைய பிடிச்சுக்கிட்டு அவ பின்னாடியே போய்ட்டான்.

அவன் திரும்பி வந்து உன்னை கட்டிக்கிறேன்னு சொன்னா, நீயும் உடனே ஒத்துக்குவியா?

உனக்கு கொஞ்சம் கூட செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லியா?” எடுத்தவுடனே விஷயத்துக்கு வந்து விட்டாள் வனிதா!

“என்னோட கல்யாணம், என்னோட செல்ஃப்  ரெஸ்பெக்ட்  எல்லாம் என்னோட சொந்த விசயம்!

நான் பார்த்துக்கறேன்!

இத சொல்லவா நீங்க மெனக்கிட்டு என் நம்பரை எல்லாம் எப்படியோ வாங்கிகிட்டு போன் பண்ணி இருக்கீங்க?”

“என்ன பண்றது? நீ கூட்டிக்கிட்டு சுத்தறது எங்க வீட்டு பையனை இல்ல!

அதான்! உனக்கு வேணுமின்னா எதுவும் இல்லாம போகலாம்!

ஆனா எங்களுக்கு இருக்கே! இனிமே எங்க ராஜுவோட இப்படி பைக்கில போறத பார்த்தேன் அவ்வளவு தான்!”

“என்ன பண்ணுவீங்க? என்ன பண்ண முடியும் உங்களால? அப்புறம் என்ன சொன்னீங்க?

உங்க ராஜுவா? எப்பத்துல இருந்து? அவர் கிட்ட காசு சொத்து இன்னமும் பாக்கி இருக்குனு தெரிஞ்சதுக்கு அப்புறமாவா?”

“ஓ.. அப்ப நீயும் அவன் கிட்ட சொத்து இருக்குன்னு ஆசைப்பட்டு தான் மறுபடி வந்து ஒட்டிக்கிட்டியா?”

“உங்கள மாதிரியே எல்லாத்தையும் நினைக்காதீங்க.

அந்த புத்தி எல்லாம் எனக்கு கிடையாதுன்னு அம்மாச்சிக்கும் தெரியும். அவருக்கும் தெரியும்!

நீங்க உங்க குடும்பத்தை மட்டும் கவனிங்க! என் விசயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்!”

“அது சரி.. உன் வளர்ப்பு அப்படி.. என்னத்த சொல்ல!

கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பைக்கில் ஒட்டி உரசிக் கிட்டு போய் தான் அவனை நல்லா மயக்கி வச்சுருக்க!”

“வார்த்தை.. வார்த்தை கவனம்..

என்னோட வளர்ப்பு ஒண்ணும் எந்த வகையிலும் கீழானது இல்ல!

உங்க தங்கச்சி மாதிரி ஸ்கூல் போற வயசுல படிக்கிற வயசுல காதல் கத்திரிக்கான்னு ஊரை சுத்தல!

அடுத்தவங்க வண்டிய ஆட்டய போட்டுக்கிட்டு பொண்ணுகளோட சுத்தற உன் தம்பிக்கு முதல்ல அட்வைஸ் பண்ணுங்க.

அப்புறம் என் கிட்ட வாங்க!”

“ஏய்.. இப்ப எதுக்கு அவங்கள இழுக்கிற?”

“பின்னே? என்னோட வளர்ப்பை தப்பா பேசினா, நான் உங்க வீட்டு லட்சணத்தை சொல்ல தான் செய்வேன்!

அப்புறம் உங்க தொம்பி எங்கள போட்டோ எடுக்கிறதை பார்த்துட்டு தான் நாங்க வேணுமின்னே நெருக்கமா உட்கார்ந்து போஸ் கொடுத்தோம்!

உங்க தம்பி எஞ்சினியரிங் தானே படிக்கிறான்! ஏன் நல்லா படிக்க மாட்டானா?

அவன் படிப்புக்கு வேலை கிடைக்காதுன்னு முடிவே பண்ணிட்டானா?

படிப்புக்கு ஏத்த வேலைய செய்ய சொல்லுங்க! அத விட்டுட்டு ஏன் இப்படி இந்த வேலை செய்றான்?”

“ஏய்.. என்னடி கொழுப்பா? என்ன வாய் நீளுது?”

“ஆமா கொழுப்பு தான்! சொந்த சம்பாத்தியத்தில் சாப்பிடற கொழுப்பு!

திருட்டு காசில, அடுத்தவங்க உழைப்பில் உக்காந்து திங்கும் உங்களுக்கே இவ்வளவு கொழுப்பு இருக்கும் போது எனக்கு இருக்காதா?

அப்புறம்.. நான் ஒண்ணும் கண்டவனோட பைக்கில் ஒண்ணா சுத்தல!

என்னைக் கட்டிக்க போறவர் கூட, அதுவும் வீட்டில் பெரியவங்க கிட்ட பர்மிசன் வாங்கின பிறகு தான் பைக்கில் வந்தேன்!

அப்புறம்.. இந்த வாடி போடி பேச்சு எல்லாம் என் கிட்ட வேணாம்! நானும் திருப்பி பேசினா நல்லா இருக்காது!

மரியாதையைப் பொறுத்தவரை நான் கண்ணாடி மாதிரி!

நீங்க கொடுக்கிற மரியாதை தான் திருப்பி வரும்!

இனி போன் பண்ணி இந்த மாதிரி பேசுற வேலை வேண்டாம்!” என்று கடுமையாக சொல்லி போனை வைத்து விட்டாள் மகி.

அனைத்தையும் ஸ்பீக்கரில் போட்டு விட்டு கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள் ராமுவும் ப்ரியாவும்!

இந்த பக்கம் கான்காலில் இருந்து கொண்டு  இவர்கள் பேசுவதை ம்யூட்டில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் ராஜுவும்!

அவனுக்கு ச்சே. என்று ஆகி விட்டது!

இவ்வளவு நடந்த பிறகும் அப்படி என்ன என் கல்யாணத்தைக் கெடுக்க இவ்வளவு ஆசை இவங்களுக்கு!

கல்யாணத்தை நிறுத்தி விட்டு, கொஞ்ச நாள் கழித்து அழுது டிராமாக்கள் பண்ணி திரும்பவும் வந்து ஒட்டிக் கொள்ளலாம் என்று ப்ளான் போல!

அப்படி திரும்ப வந்தால், தானும் அவர்கள் டிராமாவை நம்பி சேர்த்துக் கொள்வேன் என்றும் அவர்களுக்கு என் மேல் இன்னமும் நம்பிக்கை இருக்கு!

எப்படி என்னை இன்னமும் அண்டர் எஸ்டிமேட் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்! அவனுக்கு வலித்தது!

ஸ்பீக்கரில் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா,

“உன் பொண்டாட்டிக்கு சாமர்த்தியம் பத்தாது.

நாம பேச வேண்டிய ஆளே வேற! அந்த கங்காவுக்கு போனைப் போடு” என்று சொல்லி கங்காவை அழைத்தார்கள்!

—–

கட்டிலில் சோர்வாக படுத்து இருந்த கங்காவை மெல்ல எழுப்பி சாய்வாக அமர வைத்து கையில் சூப் கிண்ணத்தை அவளிடம் கொடுத்தான் மகேந்திரன்.

“உப்பு பத்தலைன்னா, இந்தாடா இந்த தூள் உப்பைக் கொடு அவ கிட்ட” என்றார் பரமேஸ்வரி கிச்சனில் இருந்து கொண்டு!

“இல்லத்தை போதும்” என்றாள் கங்கா சோர்வாக.

அவளுக்கு அபார்ஷன் ஆகி விட்டிருந்தது!

நிறைய ரத்தப்போக்கு! கிழிந்து போன துணியை போல கிடந்தாள் அவள்!

மிகவும் களைத்துப் போய்!

விஷயம் கேள்விப்பட்டு உடனே ஓடி வந்து விட்டார் பரமேஸ்வரி.

வடிவுக்கு அத்தனை பக்குவமாக பார்த்துக் கொள்ள தெரியாது!

“அண்ணி.. நீங்க கொஞ்சம் வாங்களேன்” என்று அவர் போனில் அழுத போது மனம் கேளாமல் வந்து விட்டார் அவர்.

கூடவே இருந்து ஒரு அம்மாவைப் போல கவனித்துக் கொண்ட மாமியாரைக் கண்டு கொஞ்சம் மனம் மாறியது கங்காவுக்கு!

பத்தாதற்கு அவள் அம்மாவின் அறிவுரை வேறு!

“ஏய்..கங்கா.. ரொம்ப ஓவரா பணத்தாசைப் பிடிச்சு அலையாத! என்னடா நம்ம அம்மாவே இப்படி சொல்றாங்கன்னு பார்க்காதே!

நான் தான் சொல்றேன்! வட்டிக்கு விடுறது என்னோட தொழில் தான்!

ஆனா அது நான் வாழ வேற வழி தெரியாம எடுத்துகிட்ட தொழில், உங்கப்பா செத்துப் போனவுடனே!

எனக்கு உங்க அத்தை மாதிரி பக்குவமா வீட்டு வேலையோ, இல்ல வயக்காட்டு வேலையோ ஒண்ணுமே தெரியாது!

நான் அப்படியே வளர்ந்துட்டேன்!

உங்கப்பா போனவுடன், எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம, இருக்கிற நகைகளை எல்லாம் வித்துட்டு, அந்த பணத்தை சின்ன சின்ன வியாபாரிங்க, நம்மள மாதிரி இருக்கிற கீழ்த்தட்டு ஆளுங்களுக்கு வட்டிக்கு விட ஆரம்பிச்சேன்.

அதுக்கு அப்புறம் தான் இந்த அடாவடி பேச்சு, ஓங்கின குரல் எல்லாம் வரவழைச்சுக்கிட்டேன்!

ஏன்னா.. கொஞ்சம் நல்லா பேசினா கூட வட்டிய கொடுக்காம ஏமாத்திடுவாங்க!

அப்புறம் அதுவே என் சுபாவமா போய்டுச்சு!

என்னோட சூழ்நிலை நான் அப்படி மாற வேண்டியதா போய்டுச்சு.

ஆனா உனக்கென்னடி குறைச்சல்! உன் மேல ஆசையா இருக்கிற புருஷன்! அப்பிராணி மாமியார்! போட்டி போடாத நாத்தனார்!

இருந்து இருந்தும் அவ கல்யாணத்தைப் போய் கெடுத்து விட்டிருக்கியேடி!

ஏதோ வீட்டு செலவு காசை மிச்சப்படுத்தி வட்டிக்கு விட சொன்னே விட்டேன்!

ஆனா உன் புருஷன் அவன் தங்கச்சி கல்யாணத்துக்காக நகையை திருப்ப சொன்ன காசை கொண்டு வந்து, என் புருசன் எனக்கு தெரியாம சேர்த்து வச்சிருந்த காசுன்னு சொல்லி என் கிட்ட கொடுத்து, வட்டிக்கு விட்டு..

இப்ப போச்சா.. அத்தனை வட்டிக் காசும் ஆசுபத்திரிக்கு!

பொம்பள பாவம் பொல்லாதது!

நீயும் ஒரு பொம்பள பிள்ளை பெத்து வச்சுருக்க!

நாளைக்கு எல்லாமே அது தலையில வந்து விழுந்துட போவுது!” என்று பலவாறு திட்டி விட்டார்.

“பார்த்துக்கோ.. உன் புருஷன் நல்லவனா இருக்கிறதால நீ தப்பிச்ச!

இல்ல அவனே உன்னை அத்து விட்டிருந்தா, நீயும் என்னை மாதிரி கையில் ஒரு பொம்பள பிள்ளையோட தனியா நின்னுட்டு இருந்திருப்ப!

பார்த்து நடந்துக்கோ” என்றும் சொல்லி இருந்தார்.

இப்போது கங்காவிடம் நல்ல மன மாற்றம்!

தான் செய்தது எவ்வளவு தவறு என்றும் உணர தொடங்கி இருந்தாள்!

இனி.. மகியின் கல்யாண விசயத்தில் அவளுக்கு துணையாக தான் இருக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்திருந்தாள்!

அப்போது பார்த்து தான் ப்ரியாவின் போன் கால் அவளுக்கு வந்தது.

கையில் இருந்த சூப்பை கங்காவிடம் கொடுத்த மகேந்திரன், அடித்துக் கொண்டிருந்த கங்காவின் போனை எடுத்துப் பார்த்தான்!

“யாருடி அது ப்ரியா?” கேட்டான்.

கங்கா தயங்கிய படி,  “அது..  நம்ம மகியோட நாத்தனார்!”

“அவ எதுக்கு இப்ப போன் பண்றா? முதல்ல அவ நம்பர் உன்கிட்ட எப்படி?”

“அது.. அது வந்து நான் அப்பவே வாங்கி வச்சுருந்தேன்!”

“அது எதுக்கு இப்ப போன் பண்ணுது? நிச்சயமா நல்லதுக்கு இருக்காது!

மகி கல்யாணத்தை கெடுக்க அதுங்க இன்னமும் எதாச்சும் திட்டம் போட்டுட்டு இருக்குங்க போல!

உன்னையும் கூட்டு சேர்க்க தான் கூப்பிடுதுங்க போல! பார்த்து நடந்துக்கோ!

இனி உன்னால என் தங்கச்சி கல்யாணத்துல ஏதாச்சும் பிரச்சினை வந்துச்சு.

நீ அப்படியே உன் அம்மா வீட்டுக்கு நடைய கட்டிட வேண்டியது தான்!

பாப்பாவ என் அம்மா பார்த்துக்கும்!” என்றான் கோபமாக!

“நான் இனி அப்படி எதுவும் செய்ய மாட்டேன்ங்க. நம்புங்க” என்றாள் கங்கா.

“இந்தா பேசு” என்று போனைக் கொடுத்தான்.

வாங்கிய கங்கா அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஹலோ.. கங்கா.. நான் ப்ரியா பேசுறேன்!”

“ம்ம்.. சொல்லுங்க..”

“என்னத்தை சொல்ல.. நீ என்ன தான் பண்ணிட்டு இருக்க?” என்றாள் ப்ரியா கோபமாக.

“என்ன பண்ண சொல்றீங்க?”

“என்ன பண்ணனுமா? உன் நாத்தனார் கல்யாண செலவுக்கு பணம் வச்சுருக்கியா?

இல்ல உன் புருசன கடன் வாங்க வைக்க போறியா?”

“நாங்க கடன் வாங்குறோம், இல்ல என்னமோ பண்றோம். உங்களுக்கு என்ன வந்துச்சு?”

“என்ன இப்படி பேசுற.. சரி தான்.

அப்போ உனக்கும் என் தம்பி இன்னமும் சொத்தோட தான் இருக்கான்னு தெரிஞ்சுருக்கு!

அப்புறம் எங்க அம்மாவே வந்து திரும்பவும் பொண்ணு கேட்டதாலே, செலவு இல்லாம உன் நாத்தானார் கல்யாணத்தை முடிச்சுக்கலாம்னு நினைக்கிற போல!” என்றாள் ப்ரியா நக்கலாக!

“ம்ம் சரி.. அப்படியே வச்சுக்கோ. ஏன்.. நீ எப்படி உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணின?

அப்படியே உன் புருஷன் உழைச்சி கொண்டு வந்து கொட்டுன காசுலயா? எல்லாம் எங்க மாப்பிள்ளை காசு தானே!

அக்கா பொண்ணுக்கே செலவு பண்ணும் போது, அவர் கல்யாணத்துக்கு பண்ணினா என்ன தப்பு?” என்றாள் கங்காவும் விடாமல்!

ஓ. அண்ணி.. விடுங்க இதுங்க எல்லாம் நம்ம ராஜு காசை ஆட்டய போட நினைக்குதுங்க.

சரியான மானம் கெட்ட  குடும்பம் என்றாள் வனிதா இடையிட்டு!

ஏய்.. யாரைப் பார்த்து மானம் கெட்ட குடும்பம்னு சொல்ற?

அடுத்தவங்க காசை ஆட்டய போடுற புத்தி எல்லாம் உங்களோடது!

ஆமா.. நான் தெரியாம தான் கேக்குறேன்..

நீங்க என்னமோ உங்க அப்பா காசுல உங்க கல்யாணத்தை நடத்துன மாதிரி பேசிட்டு இருக்கீங்க?

உங்க கல்யாண செலவே மாப்பிள்ளை தான் பண்ணினார்ன்னு எனக்கும் தெரியும்!

உன் புருஷன் உங்க கல்யாணத்துக்கு உங்க அப்பாவ ஒத்த ரூபா கூட செலவழிக்க விடாம வச்சு, ராஜுவையே எல்லா செலவும் பண்ண வச்சுட்டு அப்புறமா காசா வாங்கி பேங்குல போட்டுகிட்டார்ல!

அந்த மாதிரி எங்களையும் நினைச்சுட்டீங்களா?

வேண்டாம்.. வீணா என் வாயை கிளறினா, இன்னமும் ராஜுவுக்கு தெரியாத உங்க வண்டவாளம் எல்லாம் வெளியே வந்துடும்!”

“ஓ.. எங்கள மீறி எப்படி இந்த கல்யாணம் நடக்கிறதுன்னு நான் பார்க்கிறேன்!

நாத்தி முடிச்சு போட நான் தானே வரணும்?” என்றாள் ப்ரியா காட்டமாக!

“ஓ.. நீ இல்லாட்டி, என்ன இப்போ? நானே ராஜுவுக்கு கூட பிறந்தவளா நின்னு அந்த நாத்தி முடிச்ச நான் போட்டுட்டு போறேன் என்ன இப்போ?

நீயெல்லாம் கல்யாணத்துக்கு வந்திடாத!

 அப்புறம் அந்த முருகன் அவர் கையில் இருக்கும் வேலை வைத்து உன் கண்ணை நோண்டி, தள்ளி விட்டுடுவார் ஜாக்கிரதை! வை போனை!” என்று கத்தி போனை வைத்து விட்டாள் கங்கா!

“என்னடா இவளும் இப்படி மாறிட்டா!” என்றாள் ப்ரியா.

“ஆனால் கோபத்தில் முருகன் கோவில் தான் கல்யாணம் என்று சொல்லிட்டா அந்த கங்கா!

அப்ப ஸ்வாமிமலை முருகன் கோவிலில், இல்லைனா வயலூர் முருகன் கோவிலில் , ரெண்டு இடத்துல தான் எங்கியோ கல்யாணம் போல!” என்றாள் மேலும்.

“ஆனா அதை கூட உங்கம்மா வாயில் இருந்து வாங்க முடியலையே!” என்றாள் வனிதா!

ஆமாம்!  ராமுவும் கமலா அம்மாவிடம் ஒரு டிராமாவை அரங்கேற்றி தான் பார்த்திருந்தான்!

ஆனால் பாவம் பருப்பு வேகவில்லை அவரிடம்!

“தாய்க்கு தலை பிள்ளை தான் கொள்ளி போடணும்! நீ இப்படியே இருந்திடுவியா?” என்று கூட சொல்லி பார்த்து விட்டான்!

“அடப் போடா.. இப்போது எல்லாம் எலெக்ட்ரிக் மயானம் தான்!

அதில எவன் வச்சா என்ன? அதும் இல்லாம நானே போன பின்னே அதெல்லாம் பார்த்துட்டா இருக்க போறேன்! விடுவியா” என்றே சொல்லி விட்டார் கமலா!

கடைசி வரை பேசிப் பார்த்தும், அவர் வாயில் இருந்து கல்யாணம் என்றைக்கு என்றோ, அல்லது எங்கு வைத்து என்றோ அறிந்து கொள்ளவே முடியவில்லை!

ஆனால் வனிதா, அந்த மாதம் மிச்சமிருந்த மூன்று முகூர்த்ததில் எது வென்று, மணமக்களின் நட்சத்திரங்களைக் கொண்டு

அவள் அப்பாவின் துணையுடன் எப்படியோ கல்யாண தேதியை ஊகித்து தெரிந்து கொண்டு விட்டாள்!

முதல் இரண்டு முஹூர்த்த நாட்களில் ராஜுவை சில இடங்களில் பார்த்து விட்டு,

கடைசி முகூர்த்த நாள் தான் அவர்கள் திருமணம் என்று அறிந்து கொண்டு விட்டார்கள்!

திருமண நாள் வந்தது!

ராமு, வனிதா இருவரும், நால்வரும் ஸ்வாமிமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

ப்ரியாவும் வேல்முருகனும் வயலூர் சென்றனர்!

அன்று நிறைய திருமணங்கள் அந்த இரு கோவில்களிலும்!

கோவில் முழுவதும் சுற்றிப் பார்த்தும் யாரையும் காணவில்லை!

எப்படியாவது கல்யாணத்திற்கு சென்று, வாழ்த்துவது போல நன்கு பேசி விட்டு, மன்னிப்பு கேட்டுக்கொண்டு,

  ராஜு மகியை கமலா அம்மாவோடு திரும்ப உறையூர் வீட்டுக்கே அழைத்து வந்து விடுவது என்பது அவர்களின் ப்ளான் பி!

ப்ளான் ஏ – எப்படியாவது கல்யாணம் நடக்க விடாமல் செய்வது!

ப்ளான் பி – எல்லாவற்றையும் மீறி கல்யாணம் நடந்து விட்டால், ராஜுவிடம் உள்ளம் உருக பேசி, அவர்களை வீட்டுக்கே அழைத்து வந்து,

பின் ராஜுவை எப்படியாவது மீண்டும் துபாய் அனுப்பி விட்டு, இங்கே மகியை பேசியே துரத்தி விடுவது!

ப்ளான் ஏ – தோற்றுப்போன காரணத்தால், இப்போது ப்ளான் பி ஐ தான் செயல் படுத்த துடித்துக் கொண்டிருந்தார்கள் அந்த நல்லவர்கள் நால்வரும்!

ஆனால் கமலா அம்மா கில்லாடி! அந்த ராமுவையே பெற்றவர் அவர்!

நடிகர் விவேக் சொன்ன தமிழ்நாடு ஆட்டோ மாதிரி, ஒரு லெஃப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் ஹேன்ட் சிக்னல் காட்டி நேராக போய் குழப்பி விடுவது போல,

அவர் ராஜு மகி திருமணத்தை சமயபுரம் மாரியம்மன் கோவில் வைத்து நடத்தி விட்டார், மிகவும் எளிமையாக!

கங்கா சொன்னது போல அவளே நாத்தி முடிச்சு போட்டு விட்டாள் மகியின் கழுத்தில்!

பின் எல்லோரும் ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் போய் ஸ்பெசல் மீல் ஆர்டர் பண்ணி இனிப்புடன் விருந்து சாப்பிட்டனர்!

இங்கே இலையில் பாயாசம்! அங்கே ராமு அன்ட் கோ விற்கு அல்வா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!