Skip to content
Post Views: 1,603
꧁☆☬ லயம் – 13 ☬☆꧂
வண்ண விளக்குகள் ஒளிர்ந்தபடி, பூக்கள் தோரணமாய் மணம் பரப்ப, இரவிலும் ஜெகஜோதியாய் உறவுகள் சூழ நிச்சயம் நடந்து முடிந்திருந்தது. சந்தோசமாய், பரபரப்பாய், உற்சாகமாய், இளைய தலைமுறையின் ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என மண்டபமே களை கட்டி கொண்டிருந்தது.
Advertisement
ஆனால் அதற்கு நேர் மாறாய் மேலே அறையில் ஏசியின் குளுமையிலும் வியர்த்து வழிய, தடதடக்கும் மனதை சமன் படுத்தும் வழி தெரியாமல், கண்களின் கலக்கம் முகத்தில் தெரிய கோபமாய் தமயந்தி அமர்ந்து இருந்தார். கீழே நடந்து கொண்டிருப்பது தமயந்தியின் அக்கா ஜானகியின் நாத்தனார் மகனின் நிச்சயமே. நாளை திருமணம். ஆனால் நெருப்பாய் சுடும் வார்த்தைகளை கொண்டு பூகம்பத்தை ஆரம்பித்து வைத்தது அக்காளின் ஓரகத்தி வைஜெயந்தி.
Advertisement
” ஏன் தமயந்தி, நீயெல்லாம் மேடையிலே வந்து நிற்கலாமா? உன் மகனுக்கு கல்யாணம் பண்ண முடியலன்னு வயித்தெரிச்சல நிக்குறவ நீ, உன் கொள்ளி கண்ணு பட்டா இந்த பிள்ளைங்க வாழ்வு என்னவாவது? ” என சபையில் வைத்து கேட்டு விட அங்கிருந்து வந்து அமர்ந்தவர் தான், கோபத்தில் இறுகி போய் அமர்ந்து இருந்தார்.
Advertisement
” இவன் சொன்னதை நம்பி கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சது தப்பா போச்சே. நமக்கு முன்னாடியே இவளோ பேசுறவங்க பின்னாடி வாயை மூடுவாங்களா., இனி அவனுக்கு மொத கால்கட்டு போட்டுட்டு தான் அடுத்த வேலை. இதே மண்டபத்துல இந்த மாசமே அவனுக்கு நடத்தியே தீரனும்…,” என முடிவெடுத்தவராக மகனுக்கு போன் செய்தார்.
Advertisement
மகன் ராஜாவின் காதல் கதை எல்லாம் கூறுவதை அமைதியாக கேட்டவர் ” உன் லைப் பத்தி எப்போ யோசிக்க போற நீ ? இன்னும் எவ்ளோ நாள் நான் வெயிட் பண்ணனும் ? என் மருமகளை பத்தி இப்பயே எனக்கு முடிவு தெரிஞ்சாகனும்…? என்னால இவங்க பேச்சை எல்லாம் கேட்க முடியலடா., ” அவரின் குரலில் என்ன நினைத்தானோ
” உனக்கு பிடிச்ச பொண்ணை பாரும்மா.., கண்ணை மூடிக்கிட்டு இப்போ கூட தாலி காட்டுறேன்., மீ ரெடி .., ” மகனின் அதிரடி பதிலில் சந்தோசமாய் போனை வைத்தவர் அடுத்த நிமிடமே பத்து வயது குறைந்தது போல பொண்ணை தேட ரெடி ஆகிவிட்டார் அப்போதே. பாதி திருமணங்கள் முடிவாவது இன்னொரு கல்யாணம் நடைபெறும் மண்டபத்தில் தானே. அழகான இளவயது பெண்கள் கண்ணில் பட்டு ஜாதகம் அடுத்த கணமே பரிமாறப்படும் இலவச திருமண தகவல் மையம் அது தானே.
அவரின் நல்ல நேரம் மறுநாள் காலை அவருக்கு அழகாய் விடிந்தது. அடுத்த அறையிலிருந்து அழகு பதுமையாக ஒரு பெண் சேலை அணிந்து அவரை கடந்து செல்ல பார்த்ததும் மனதிற்கு பிடித்து விட்டது. கண்ணுக்கு லட்சணமாக, அழகியாய், எந்த குறையும் சொல்ல தோன்றா வண்ணம் எலுமிச்சை நிறத்தழகி இருந்தாள். சிலரின் முகத்தை பார்த்தவுடன் மனதிற்கு நெருக்கமாய் தோன்றுமே, அப்படி தமயந்தியின் மனதை திருடிவிட்டால் பெண்ணவள்.
வெளியே வந்தவள் பின்னோடு தானும் வந்து அவள் பின் புறமே அமர்ந்து கொண்டார்.
‘ ம்ம்மா., நான் சுடியே போட்டு வந்திருக்கலாம், எத்தனை தடவை தான் சாரியை சரி பண்ணிட்டே இருக்கிறது., என மெதுவே சிணுங்க.,
” ம்க்கும்.,மேரேஜ் பண்ணா சாரி தான் கட்டணும்., இல்லைனா உன் மாமியார் குமட்டுல குத்துவாங்க., ஒழுங்கா கட்டி பழகும்மா ., “
” அவங்க ஒன்னும் அப்படிலாம் சொல்ல மாட்டாங்க., என் அம்மா மாதிரி நல்லவங்களா தான் இருப்பாங்க., ” அவர் கழுத்தை கட்டி கொண்டு சிரித்தபடி சொல்ல.
” எனக்கு ஐஸ் வச்ச மாதிரி அவங்களையும் கவுக்க போறியா.,”
” ஆமா., என் பின்னாடி தான் இருக்காங்க., சீட்டுக்கு அடியில 50 கிலோ ஐஸ் வச்சி அவங்கள கவுக்க போறேன்., போம்மா.., ” என சிணுங்கிய படி சொல்ல, தமயந்திக்கோ சிரிப்பு வந்தது.
“அப்படி மட்டும் இருந்தாங்கனு வச்சிக்கோ., இப்பயே உன் கையை பிடிச்சி கொடுத்து கூட்டிட்டு போங்கன்னு அனுப்பி வச்சிருவேன்., “
” ஏம்மா., இப்படி பத்தி விடுறதிலேயே இருக்க., அப்பா., பாருப்பா., ” என்றால் சிணுங்கி கொண்டே தந்தையிடம் சலுகையாய்.
” நீ கவலை படாதேடா., இப்பயே எப்படி அனுப்புறதாம்., மறுவாரமே நல்ல நாளை பார்த்து, மண்டபம் பார்த்து, கிராண்டா கல்யாணம் பண்ணி அனுப்பி வைப்பேன்., ” அவரும் சிரிப்பு கொண்டே சொல்ல.
” ப்பா., யூ டு…., மீ பாவம்…, போப்பா.., ” பின்னால் இருந்து ததாஸ்து தேவதைகள் வாழ்த்தின போலும்., செல்லமாய் பேசி சண்டை போடும் குடும்பத்தை பார்த்தவுடன் இன்னுமே பிடித்து விட்டது.
” இல்லைடா .., குரு பார்வை இன்னும் மூணு மாசத்துல உனக்கு முடிய போகுது., அதுக்குள்ள பண்ணனும்.., இல்லைனா இழுத்துட்டு போகும். ” தாய் சொல்ல .,
” ஏன் குருக்கு அப்புறம் சிஷ்யர் பார்க்க மாட்டாரா? இன்னும் இதெல்லாம் நம்பிகிட்டு இருப்பிங்களா ? “
” அது மட்டும் காரணம் இல்லைடா .., உனக்கு முடிச்சா தான் அண்ணனுக்கு முடிக்க முடியும். அவங்களுக்கும் வயசாகுது. பஸ்ட் காரணம் அது தான். வீட்டுல பொண்ணு இருக்க பசங்களுக்கு பண்ண முடியுமா சொல்லு ? ” தந்தையின் காரணம் நியாயமாய் பட அமைதியாக தலையாட்டினாள்.
சிறிது நேரத்தில் தோழி பெண் ஒருத்தி வந்து, அவளை அழைத்ததை பார்த்ததும், பின் அவள் சென்று செய்த செயலில் முடிவே கட்டி விட்டார் அவள் தான் தன் செல்ல மருமகள் என்று.
மேடையில் நின்றிந்த அக்காவை தேடி சென்று , தூரத்தில் இருந்தே பெண்ணை காட்டி, விஷயத்தை சொல்ல, கூர்ந்து பார்த்தவரோ, அடையாளம் கொண்டு புன்னகை முகமாய் நிமிர்ந்தார். ” அட…. நம்ம பாப்பு குட்டி.., எனக்கு தோணாம போச்சே இது., கையில் கிரில் சிக்கனை வச்சுக்கிட்டு சிக்கன் 65யை தேடி அலைஞ்ச கதையா இருக்கே, ( எத்தனை வருஷம் தான் கையில வெண்ணையும், நெய்யும் வச்சு அலைய, நாங்களும் மாத்துவோம் ) வா., இப்போவே போய் பேசுவோம்., ” என அழைத்து சென்றவர் , அப்போதே பேசி கையோடு ஜாதகம் வாங்கி விட்டார்.
இவர்களின் செயலினை பார்த்து கொண்டிருந்த வைஜெயந்தியோ ” இவளுக்கு மட்டும் எப்படி தான் எல்லாம் உடனே உடனே நடக்குதோ ., நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி., ” இன்னும் வயிற்றெச்சலில் கறுவி கொண்டிருந்தார். நேற்று தன்னை திட்டியது என்ன, இப்போ தங்கச்சிக்கு மட்டும் ஓடுறது என்ன., ” பொரும தான் முடிந்தது நடந்ததை எண்ணி .
எப்போதும் போல் கோபத்தில் தமயந்தி தனியே வந்து அமர, அங்கே அவள் அக்காவோ வைஜெயந்தியை தாளித்து கொண்டிருந்தார்.
” ஏய் ஜெயந்தி ! என்ன வாய் ரொம்ப நீளுது. அவ எதுக்கு வயித்தெரிச்சல் படனும்? ” என்றார் முகத்தை ஒன்பது முழத்திற்கு தூக்கி வைத்து கொண்டு கடுப்பாய்.
அத்தனை பேர் இருக்க தன் தங்கையை பேசுவதை கேட்டவர்க்கு பொறுக்க முடியவில்லை, தமயந்தியிடம் தங்கள் அறையில் வைத்த நகையை எடுத்து வர சொல்லி அனுப்பி வைத்தவர், பக்கத்து அறைக்கு இழுத்து வந்து உடனேயே இவளிடம் பொரிய ஆரம்பித்து விட்டார்.
” இல்லக்கா.., நேத்து தான் பையனுக்கு கல்யாணம் கூடி வரலன்னு என்கிட்ட வருத்தப்பட்டாங்க. அதான்..,” என இழுக்க
” அதுக்கு என்னவாம், ஏதோ மனசு கேட்காம உன்கிட்ட ஒத்த வார்த்தை பேசுனா சுருக்குனு இப்படி சொல்லுவியா? ” தன் மனதின் கோபத்தை வார்த்தையால் கொட்ட ஆரம்பித்து விட்டார்.
” மூத்தவளுக்கு கல்யாணம் பண்ணி ரெட்டை குழந்தை பிறந்து நண்டும் சிண்டுமாய் இருக்கறதை பார்ப்பாங்களா? அப்படி ஒன்னும் என் மவனுக்கு வயசு கூடி போகல. இப்போ தான் பெரிய கம்பெனியில பெரிய போஸ்ட்ல வேற உட்கார்ந்துருக்கான். இந்த வயசில அவன் வாங்குற சம்பளம் என் புருஷன் கூட இன்னும் வாங்கல. “
“எல்லாரும் உன் பையனை மாதிரி படிச்சி முடிச்சிட்டு, எவளையாவது இழுத்துட்டு ஓடி போக நினைக்க மாட்டாங்க. எந்த வேலையும் நிலைக்காம உன் பையனே வேலை கேட்டு அவன் கால்ல தான் விழுந்து கெடக்குறான். அவன் வேலை தரலை அப்புறம் பூவாக்கு நீங்க சிங்கி தான் அடிக்கனும். ஒழுங்கா ஒரு இடத்துல நிக்காத மவனை வச்சிட்டு, அவளை பார்த்து கேக்குற உனக்கு தாண்டி வயித்தெரிச்சல். அவகிட்ட வாயில வந்தத பேசாத, உன்னை மாறி எல்லாம் அவ இல்லை.
அவ கோபப்பட்டு எல்லாம் கத்த மாட்டா. வேணாம்னு நினைச்சிட்டா திரும்பி கூட பார்க்க மாட்டா. ஒழுங்கா போய் அவகிட்ட மன்னிப்பு கேளு. உன் புருஷனுக்கு மட்டும் தெரிஞ்சது, தூக்கி போட்டு மிதிப்பான். ஒழுங்கா போய் பொழைக்கிற வழியை பாரு, போ… ” என ஒரு மூச்சு திட்டி தீர்ப்பவரிடம் ஜெயந்தியால் சொல்ல கூட முடியவில்லை.
” நீங்க மூச்சு வாங்காம பேசுறதை உன் தொங்கச்சி நறுக்குன்னு கேட்டு போயிட்டா ” என்று.
வைஜெயந்தி பேசி முடித்த அடுத்த கணம் அவர் அருகே குனிந்து தமயந்தி அடிகுரலில் ” வயித்தெரிச்சல் உனக்கா? எனக்கா? ” நக்கல் சிரிப்புடன் அமைதியாக கேட்டு விட்டு.
” என் பையனை பத்தி நீ கவலைப்படாதே. நான் பாத்துக்கிறேன், ஆல்ரெடி உனக்கே ஆயிரதெட்டு கவலை, நீ அதை பாரு., பாவம்… ” என வலிக்காமல் ஊசி கொண்டு குத்தி விட்டு தான் சென்றிருந்தார். தமயந்தி அதிர்ந்து பேச மாட்டார். ஆனால் பேசினால் நறுக்கு தெறித்தார் போல நாலு வார்த்தையில் முடித்து விடுவார்.
*********
error: Content is protected !!