Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Maarum kalangal Maara kathal

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

“குட் மார்னிங்.” என்று கண்ணில் பட்டவர்கள் இடம் கூறியபடி அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சாதனா.

தன் கைப்பையில் இருந்த  பழங்களை அலுவலகத்தில் இருந்த  பிரிட்ஜில் வைத்துவிட்டு தன் கேபினுக்கு வந்து அமர்ந்தாள்.



Advertisement

 

“ஹாய் சாதனா.” என்றபடி அங்கு வந்தான் திலீப்.

 

Advertisement

அந்த அலுவலகத்தில் மொத்தம் 200 பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதில் 50க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். அதில் தமிழர்கள் 10 பேர், தெலுங்கர்கள் பத்துபேர். ஹிந்தி, மலையாளம் கன்னடம் மற்ற மொழிகள் பேசுபவர்கள் 30 பேர் இருந்தனர்.

Advertisement

 

தமிழ் பேசும் பத்து  நபர்களில் சாதனா, திலீப் மற்றும் சாதனாவின் தோழி லதா மூவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் திலீப் அந்த அலுவலகத்தில்d மேலாளர் பதவியில் இருந்தான்.

 

Advertisement

சாதனா அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. என்ன பேசுவது என்று புரியவில்லை.

 

அவனே தொடர்ந்தான் “its ok. forge it. (பரவாயில்லை மறந்துவிடு.) என்றால்d சாதாரணமாக.

 

அவளுக்கு அவனது செய்கை ஆச்சரியத்தை தந்தது.

 

அவள் “sorry, if i had hurt you. (நான் உன்னை காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்)” என்றாள் சாதனா மெல்லிய குரலில்.

 

”its alright. (பரவாயில்லை).”

 

என் மனசில் பட்டதை கேட்டேன். நீயும் உன் மனசில் பட்டதை சொன்னாய். thats it .cool . (அவ்வளவுதான்.)” என்றவிட்டு தன் கேபினுக்கு சென்றுவிட்டான்.

 

அவன் பெருந்தன்மையை  எண்ணி மகிழ்ந்தபடி தன் வேலையில் ஆழ்ந்தாள் சாதனா.

 

“ஹாய் சாது” என்றபடி அங்கு வந்தாள் லதா.

 

“ஹாய் லதா” என்று அவள் பக்கம் தன் சுழல் நாற்காலியை திருப்பி பார்த்தாள் சாதனா.

 

“என்ன சாது பிஸியா?” என்று கேட்டாள் லதா.

 

“நோ.” என்றாள் சாதனா. then, come . let’s take a break.( அப்போ என் கூட வா. ஒரு இடைவேளை எடுக்கலாம்.) என்றாள் லதா.

 

“ஓகே. வெயிட் பண்ணு. ஃப்ரிட்ஜில் இருந்து ஃப்ரூட் எடுத்துட்டு வரேன்.” என்றவள் சென்று 3 பிளாஸ்டிக் டப்பாக்களில்  நன்கு பழுத்த ஸ்ட்ராபெரி,  செரி, பிளாக்பெரி எடுத்து வந்தாள்.

 

“ என்னோட ஸ்நேக்.” என்றபடி கையில் வைத்திருந்த muffine டப்பாவை காண்பித்தாள் லதா.

 

“சரி உக்காரு.” என்று சாதனா சொல்ல இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

 

“நீ எப்படி தான் எப்ப பார்த்தாலும் இந்த மாதிரி ஃப்ரூட்ஸ் சாப்பிடுகிறாயோ! எனக்கு இதெல்லாம் ஒரே போர். ஆனால் ஒன்று இப்படி சாப்பிட்டு தான் ஸ்லிம் பியூட்டியா இருக்க.” என்றாள்

லதா.

“எனக்கு இதெல்லாம் போர் அடிக்கல. இந்த பழத்தை சாப்பிட்டு பாரு. ரொம்ப ஸ்வீட்டா இருக்கு.” என்றாள் சாதனா.

 

ஒரு ஸ்ட்ராபெரி பழத்தை எடுத்து வாயில் வைத்தாள் லதா.

 

“yumm” என்றபடி அதனை ரசித்து சாப்பிட்டாள்.

 

“நல்லாத்தான் இருக்கு. எங்க வாங்கின? இவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு!”

 

“வரும்பொழுது sprouts( market name) மார்க்கெட்ல வாங்கிட்டு வந்தேன்.” என்றாள் சாதனா.

இருவரும் பேசியபடி பழங்களை சாப்பிட்டுவிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

 

“ஹாய் சாதனா” என்ற படி திலீப் அங்கு மீண்டும் வந்தான்.

 

“ஹாய் திலீப்” என்று சாதாரணமாகவே சாதனாவால் இப்பொழுது பேச முடிந்தது.

“நான் அனுப்பின ஈமெயில் எல்லாத்தையும் செக் பண்ணியாச்சா?”

என்று கேட்டான்.

“done. (முடிந்துவிட்டது). இதை சொல்லவா இங்க வந்தீங்க?” என்று ஆச்சர்யமாக பார்த்தாள்.

 

“அதுக்கு மட்டும்  இல்லை. அப்படியே  லன்ச் சாப்பிடலாம்nu வந்தேன்.” என்றான்.

 

தன் கையில் கட்டியிருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்ல் மணியை பார்த்தாள்.

ஒரு மணி ஆகியிருந்தது.

 

அதேநேரம், லதா  கையில் டிபன் பாக்ஸ் உடன் வந்தாள்.

 

“சரி” என்று சொன்ன சாதனா தன் பையிலிருந்து கண்ணாடி டிபன் பாக்ஸ் எடுத்து மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு பண்ணி எடுத்து வந்து அவர்களுடன் அமர்ந்தாள்.

மூவரும் பேசியபடி கலகலப்பாக சாப்பிட்டனர். முன்னாள் அவன் பேசியதை இருவரும் முழுவதுமாக மறந்து பழையபடி நட்புடன் பழக ஆரம்பித்தனர்.

 

ஜோதி தன் கையில் வைத்திருந்த பார்பி டால் உடல்d விளையாடிக்கொண்டிருந்தாள்.

 

விஜயா சாதனாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

 

விக்ரம், சஞ்சனா, கலைவாணி மூவரும் குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வெளியில் சென்று இருந்தனர்.

 

“அம்மா நான் டாய்லெட் போகனும்” என்று வந்தாள் ஜோதி.

 

விஜயா சாதனா இடம் திரும்பி

“இங்கே டாய்லெட் எங்க இருக்கு?” என்று கேட்டாள்.

 

“அதோ  அங்க இருக்கு. வாங்க கூட்டிட்டு போறேன்.” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கு  சென்று காட்டிவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்.

 

சிறுது நேரத்தில் குழந்தையுடன் விஜயா வந்தாள்.

 

“நீங்க இன்னும் இந்த வீட்டை சுத்தி பாக்கல இல்ல?  போன தடவை வந்த பொழுது மறந்தே போய்ட்டோம். வாங்க இன்னிக்கி நான் உங்களுக்கு வீட்டை சுத்தி  காட்டறேன்.”

என்று இருவரையும் அழைத்தாள்.

 

“இது ஸ்டடி ரூம்.” என்று ஒரு அறையை காண்பித்தாள் சாதனா.

அங்கு ஒரு பெரிய கண்ணாடி அலமாரியில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு ஒரு பெரிய  மேஜை மற்றும் நான்கு நாற்காலிகள் போடப்பட்டு மேஜையின் மீது சில பேனா, பேப்பர்கள் இருந்தன.

 

“இது ஆபீஸ் ரூம். இங்கதான் விக்ரம் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணுவார்” என்று காண்பித்தாள்.

அங்கு ஒரு  மேஜையில் பெரிய கம்ப்யூட்டர் மற்றும் சுழல் நாற்காலி, பேப்பர், பேனா சில புத்தகங்கள் செல்பில் இருந்தன.

 

“இது மாஸ்டர் பெட்ரூம், சஞ்சனா விக்ரம் பெட்ரூம். ” என்று காண்பித்த அறையில் ஒரு பெரிய படுக்கை  நடுவில் இருக்க, மரத்தினால் செய்யப்பட்ட அழகிய தொட்டில் இருந்தது. அறையில்d ஒரு மூளையில் இரண்டு நாற்காலிகள் மற்றும் ஒரு மேசையும் இருந்தன.

 

“இது  இன்னொரு பெட்ரூம். இங்கதான் அம்மா இருக்காங்க.” என்று காண்பித்த அறையிலும் படுக்கையும் நாற்காலிகளும் இருந்தன.

 

“வாங்க என்னோட ரூமுக்கு போகலாம்.”  என்றபடி படியேறி அவளுடைய அறைக்கு  சென்று காண்பித்தாள்.

 

அங்கு பெரிய படுக்கை, சூழல் நாற்காலி, பெரிய கம்ப்யூட்டரும் இருந்தன.

 

“இது மீடியா ரூம்.” என்று  காண்பித்த அறையில் ஒரு பெரிய திரை இருக்க திரையில் படத்தை பார்ப்பதற்கு வசதியாக பெரிய பெரிய குஷன் நாற்காலிகள் 15 இருந்தன.

“இது இரண்டும் பெட்ரூம்” என்று பக்கத்து பக்கத்தில் இருந்த இரண்டு அறைகளை காண்பித்தாள்.

 

அந்த இரு அறைகளிலும் படுக்கை  இருந்தன.  மூவரும் உள்ளே சென்றனர்.

“இந்த டாய்லெட், பாத்ரூம் இந்த இரண்டு ரூமுக்கும் பொதுவானது. ஜாக் அண்ட் ஜில்(Jack and jill) பாத்ரூம்.” என்றாள் சாதனா.

 

மற்ற எல்லா படுக்கை அறையிலும் தனித்தனியாக அந்தந்த அறையில் குளியலறை, கழிவறை இருந்தன.  படுக்கை விரிப்பும் ஜன்னல்களின் திரையும் ஒரே நிறத்தில் பளிச்சென்று இருந்தன.

“வீடு ரொம்ப அழகா இருக்கு. வீட்டு பெயிண்ட் க்ரீம் கலருக்கு நீங்க வாங்கி போட்டிருக்கிற  டார்க் ப்ரவுன் கலர் பர்னிச்சர்  நல்லா சூட் ஆகுது. நல்ல கலர் காம்பினேஷன்.” என்று புகழ்ந்தாள் விஜயா.

 

“எல்லாத்தையும் செலக்ட் பண்ணது சஞ்சனா தான். இந்த வீட்டை விக்ரம் வாங்கி ஒரு வருஷம் ஆகுது. வாங்கினது மட்டும்தான் அவர். மத்தபடி இன்டீரியர் டெகரேஷன் எல்லாமே சஞ்சனா ஐடியாதான்.”

 

சஞ்சனா விக்ரம் திருமண புகைப்படம் ஒன்று ஒரு சுவர் முழுவதையும் ஆக்கிரமித்து பெரிதாக அழகாக இருந்தது.

 

“இந்த போட்டோவை பிரேம் பண்ணுது கூட சஞ்சனா தான்.” என்று அதனை காண்பித்து சொன்னாள் சாதனா.

 

அதற்கு பக்கத்தில் ஒரு புகைப்படத்தில் சஞ்சனா, சாதனா, விக்ரம் கலைவாணி, கார்த்திகேயன் இருந்தனர்.

 

அதற்கு பக்கத்தில் விக்ரம் பெற்றோர்கள் மற்றும் சஞ்சனா உடன் இருந்தான். பிறகு குழந்தை விஷால் உடன் சஞ்சனா, விக்ரம் என்று பல புகைப்படங்கள் இருந்தன. இதனை பார்த்துக் கொண்டிருந்த விஜயாவுக்கு சாதனாவின் கணவன் குழந்தைகளை பற்றி கேட்க வேண்டும் போல தோன்ற

“சாதனா  உங்க  ஹஸ்பண்ட்  எங்க இருக்காங்க?” என்று  கேட்டாள்.

 

ஆனால் அது சாதனாவின் காதுகளில் விழுந்த மாதிரி தெரியவில்லை.

 

சாதனா அந்த ஹாலில் இருந்த பெரிய புத்தர் சிலையை காண்பித்து

“ இதை அம்மா வந்தப்போ வாங்கிட்டு வந்தாங்க.” என்றாள் சாதனா.

 

விஜயாவுக்கு ‘நாம் ஏதாவது தவறாக கேட்டு விட்டோமே’ என்று கூட தோன்றியது.

 

அதற்கு பிறகு அவள் அந்த கேள்வியை கேட்கவில்லை. மற்றபடி சாதனா நன்றாகவே  பேசினாள்.

 

“ஜோ உனக்கு  பாஸ்தா பிடிக்குமா?” என்று கேட்டபடி சமையலறை சென்றாள் சாதனா.

 

“எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று ஜோதி குதித்தாள்.

 

பேசியபடி எலக்ட்ரிக் குக்கரில் 5 நிமிடத்தில் பாஸ்தா செய்து மூன்று பேருக்கும் பரிமாறினாள்.

 

“ரொம்ப டேஸ்டா இருக்கு.” என்றபடி  சாப்பிட்டு முடித்தாள் விஜயா.

 

ஜோதி “சூப்பர் ஆன்ட்டி.” என்று சப்புக் கொட்டிக்கொண்டு  பொறுமையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

விஜயாவின் கைபேசி ஒலித்தது. எடுத்து பேசினாள்.

 

“வந்துட்டியா? சரி நாங்களும் வருகிறோம்.” என்றபடி போனை வைத்துவிட்டு சாதனாவை பார்த்தாள்.

 

“ராஜேஷ் இப்பதான் வீட்டுக்கு வர்றான். நாங்க கிளம்பறோம். ஜோ வேகமா சாப்பிடு.” என்று சொல்ல ஜோதி

“ம்ஹூம், முடியாது. நான் பொறுமையா தான் சாப்பிடுவேன். ரொம்ப டேஸ்டா இருக்கு.” என்றாள்.

 

“அப்பா வீட்டுக்கு கூப்பிடறாங்க. வா போகலாம்.” என்றாள் விஜயா.

 

“நீங்க போங்க. நான்  சாப்பிட்டுட்டு வரேன்.” என்றாள்  ஜோதி.

 

“சரி அவள் பொறுமையா சாப்பிடட்டும். பக்கத்து வீடு தானே நான் வந்து விட்டுட்டு போகிறேன்.” என்றாள் சாதனா.

 

“சரி. ரொம்ப தேங்க்ஸ்” என்றுவிட்டுஎழுந்து சென்றாள் விஜயா.

 

ஒரு பதினைந்து நிமிடம் அந்த பாஸ்தாவை சுவைத்து சாப்பிட்டாள் ஜோதி. சாப்பிட்டு முடித்தவுடன் சாதனா

“ஜோ வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்க அவள்

“சரி” எனவும் சாதனா வீட்டு கதவை பூட்டாமல் சாத்தி விட்டு ஜோதியை அழைத்துக்கொண்டு அவள் வீட்டு வாசலுக்கு சென்று அங்கிருந்து அவளை உள்ளே அனுப்பிவிட்டு தன் வீட்டுக்கு வந்து தெருக் கதவைத் தாளிட்டாள்.

 

வீட்டுக்குள் நுழைந்த விஜயா புகைப்படங்களை பார்த்ததும்

 

‘உங்க ஹஸ்பன்ட் எங்கே இருக்காங்க?” என்று கேட்டது காதில் ஒலித்தது.

 

கண்களில் நீர் திரையிட்டது. மூடிய கதவின் மேல் சாய்ந்து கொண்டு கண்களை மூடி சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் ஒரு துளி வந்தது. தன்னை சமாளித்துக்கொண்டு அவள் கையில் இருந்த கைபேசியில் இருந்த புகைப்படங்களில் அவனது புகைப்படத்தை தேடினாள்.

 

அந்த புகைப்படம் கிடைத்தது. அதில் சுகந்தன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் அந்த புகைப்படத்தை அவள்  கைபேசியில் இருந்து அழிக்காமல் ஏன் வைத்திருக்கிறாள் என்று அவளுக்கே தெரியாது.  அந்த புகைப்படத்தை  அழிக்க முற்பட்டாள். ஆனால் அழிக்காமல் எப்போதும் போல  விட்டு விட்டு  கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து நேராக பார்த்தாள்.

 

அவள் கண்களுக்கு  அவன் அவளுக்கு முன்பு இருந்த சோபாவில் அமர்ந்து இருப்பது போல தெரிந்தது. எப்பொழுதாவது அவன் முகம் இப்படி எங்காவது அவளுக்கு  தெரிவது உண்டு. இன்றும் அப்படியே தெரிந்தது. அவள் அவனை பார்த்தாள்.

 

ஒரு நீண்ட கருப்பு நிற  கோட், கருப்பு நிற ஸ்கார் யூ தொப்பியுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தான் அவன். அவனை பார்த்ததும் அவளுக்கு ஏதோ உறுத்தியது. ‘இதுக்கு முன்னாடி வந்த போது எல்லாம் இந்த மாதிரி  வின்டர் ஜாக்கெட்(winter jacket) போட்டு வந்தது கிடையாது.

 

இவனை நான் இந்த மாதிரி பார்த்ததே கிடையாதே! ஒருவேளை நாம இப்படி  இமேஜின் பண்ணி பார்க்கிறோமா?’ என்று அவனையே மீண்டும் பார்த்தாள்.

 

அவன் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘சரி எப்போதும்போல தொட்டால் போய் விடுவான்.’ என்று நினைத்துக் கொண்டு அவன் அருகில் சென்று அவன் கன்னத்தை தொட்டாள்.

 

அவன் மறையவே இல்லை. அவள் கை அவன் மீது பட்டதை உணர்ந்து அதிர்ந்து கையை  இழுத்துக்கொண்டு ஒன்றும் புரியாமல் இரண்டு அடி  பின் வைத்தாள்.

இவளுக்கு பின் இருந்த  டீபாயில் பின்னங்கால் வேகமாக இடிக்க தடுமாறி கீழே விழப்போனாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!