Skip to content
Post Views: 9,285
அதிரூபன் காருக்கு செல்ல.. பின்னுக்கு வந்த ஆதிரையிடம் ‘ஆதிம்மா நீ முன்னாடி உக்காரு..” என காஞ்சனா சொல்ல.. ‘ம்மா.. உன்கூட நிறைய பேசனும்..” என பின்சீட்டில் அமர்ந்தாள்.
இன்னைக்கு அத்தை அவ்வளோதான் என மனதில் சிரித்தவன் புன்னகை முகமாக காரை கிளம்பினான். ‘அம்மா.. மொழியாள் ரொம்ப சமத்து.. “ என ஆரம்பித்தவள் வீடு வரும்வரை குழந்தை புராணம் மாமனார் மாமியார் தன்னை கவனிப்பதை சொல்லி முடித்து.. அடுத்து மாரியப்பன் பேச்சை எடுக்கவும் வீடு வந்திருந்தது.
‘ஆதி.. தாத்தா பத்தி வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. இறங்கு..” என்றான் சிரிப்போடு.
‘என்ன..? வீட்டுக்கு வந்துட்டமா.?” என்றாள் ஆச்சர்யமாக.
Advertisement
‘ஒரு மணிநேரம் போனதே தெரியலயா.? வா..” என இறங்கினான்.
‘தம்பி இருங்க..” என உள்ளே விரைந்த காஞ்சனா ஆரத்தியோடு வந்து திருஷ்டி கழித்து வரவேற்று.. ராஜாத்திக்கு அழைத்து.. ‘அண்ணி ஆதிம்மாவை அழைச்சிட்டு வந்தாச்சி.. நீங்க பசங்களை கூட்டிட்டு வாங்க..” என தகவல் கொடுத்து அரிபரியாய் வேலையை ஆரம்பித்தார்.
அதிரூபன் ‘அத்தை.. எதுக்கு இத்தனை அவசரம்.? இப்போதான சாப்பிட்டு வந்தோம்.. வந்து உக்காருங்க.. உங்க மக மீதி கதையை முடிக்கனும்..” என்றான் சிரிப்போடு.
Advertisement
‘அப்போ இத்தனை நேரம் நான் கதைதான் பேசிட்டிருந்தனா.?” என ஆதிரை முறைக்க.. ‘பின்ன இல்லையா.?” என்றான் சிரிக்காமல்.
Advertisement
‘இனி உங்கள்ட்ட எதுவும் சேர் பண்ண மாட்டேன்..” என கோபித்து அன்னையிடம் சென்றாள்.
‘ம்மா.. தாத்தா செம ஸ்வீட்..” என ஆரம்பிக்க.. ‘மாரிப்பாவைப் பத்தி என்கிட்டயே சொல்லுறியா.? ஐஞ்சி வயசுலயிருந்து பார்க்கிற எனக்கு தெரியாதா.? போய் மாப்பிள்ளையோட பேசிட்டிரு.. நீ லொடலொடத்தா பலகாரம் சரியா வராது..” என்றார் பொய்யான முறைப்போடு.
‘ஓ.. நான் லொடலொடக்குறனா.? இனி உங்கள்ட்டயும் சொல்லமாட்டேன்..” என பிணங்கி வெளியே வர.. இளங்கோ மகள் மனைவியோடு வந்தார்.
Advertisement
‘நல்லாயிருக்கிங்களா சித்தப்பா..” என்ற ஆதிரையின் மலர்ந்த முகமே ரூபனோடு ராசியாகிவிட்டாள் என்பதை எடுத்துரைக்க.. ‘நல்லாயிருக்கேன்டா..” என சந்தோசித்து.. ரூபனிடம் பேச ஆரம்பித்தார்.
பிறகு ராஜாத்தி கர்ணனின் குழந்தைகளோடு வரவும்.. ஆதிரை விசாரிக்க.. ‘இப்போதாண்டா ஆறுமுகம் இறக்கும் முன்ன இருந்த ஆதியைப் பார்க்கிறேன்..” என்றார் சந்தோசக் கண்ணீரோடு.
‘அப்படியாத்த..?” என சந்தோசித்தவள் புகுந்த வீட்டு பெருமை பேச ஆரம்பித்தாள். குழந்தையிருக்கு என அத்தனை ஆர்பாட்டம் செய்த ஆதிரை தற்போது அவர்களின் பெருமை பேசவும்.. தம்பி மகள் வாழ்வு சரியாகிவிட்ட சந்தோசத்தில் ஆதிரை பேசப் பேச சளைக்காமல் கேட்டார் ராஜாத்தி.
மதிய விருந்து தயாராகியிருக்க.. ரோஜா.. கர்ணன் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த ரூபனை சாப்பிட அழைத்தார் காஞ்சனா. அனைவரும் உண்டு முடிந்ததும்.. ஆதிரை ரூபனிற்கு தனிமை கொடுக்க இளங்கோ ராஜாத்தி குடும்பம் கிளம்பப் பார்க்க.. விட்டேனா என மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
இப்படியாக அன்றைய பொழுது கழிய.. மாலை போல்.. ‘நாளை வரேன் ஆதிமா..” என இளங்கோவும் ராஜாத்தி குடும்பமும் கிளம்ப.. ‘ஆதிம்மா.. ரொம்ப நாளா அத்தை அங்க படுக்க கூப்பிடுவாங்க.. வீட்ல எங்கப்பா கொடுத்த நகைகள் இருக்கிறதால இங்கயே படுத்துப்பேன்.. இன்னைக்குதான் நீங்க ரெண்டு பேரும் இருக்கிங்களே.. நான் போய் அத்தையோட பேசிட்டு இன்னைக்கொரு நாள் அங்கையே தூங்கிக்கிறனே..” என்றார் கெஞ்சலாக.
‘எல்லாரும் இப்படி போறதுக்கு நாங்க எதுக்கு வரனும்..? இதுக்கு நாங்க அங்கையே இருந்திருக்கலாம்.. “ என்றாள் கோபமாக.
‘சரி.. சரி.. இங்கையே இருக்கேன்.. ஆனா உங்கத்தையையும் இருக்க சொல்லு..” என ராஜாத்தியை இழுத்துவிட்டார் காஞ்சனா.
ஆதிரை சொல்லும் முன்பே.. ‘சரி பசங்களை இளங்கோ வீட்ல தூங்க வச்சிட்டு வரேன்..“ என ஒப்புதல் கொடுத்து இளங்கோ வீட்டிற்கு சென்றார் ராஜாத்தி.
இரவு எட்டு போல் உண்டு முடித்ததும்.. ‘ஆதி நான் காட்ல கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்..” என கிளம்பினான் அதிரூபன்.
ஆதிரையோடு தனிமை கிடைத்ததும் காஞ்சனா மகளின் கன்னம் தடவினார் ஆசையாக. ‘என்னம்மா.?” என ஆதிரை மகிழ.. ராஜாத்தியும் வந்திருந்தார்.
‘வாங்கண்ணி..” என வரவேற்று.. ‘இல்லடா..ரூபனை பிடிச்சிருந்தாலும் கல்யாணம் வற்புறுத்திதான் செய்து வச்சோம்.. கல்யாணம் முடிஞ்சி அடுத்த நாளே தம்பி ஊருக்கு போய்ட்டாப்பில.. இரண்டு நாள் கழிச்சி வந்தவர் திரும்பவும் ஊருக்கு போய்ட்டார். அன்னைக்கு சீர் கொண்டு வந்தப்ப கூட உன் முகம் சோர்ந்தே இருக்கவும் எனக்கு ரொம்ப வருத்தமாகிடுச்சி.
அதுக்கப்புறம் இரண்டு நாள் முன்னதான் தம்பி வந்திருக்கார்னு சொன்ன.. இன்னும் பழசை பிடிச்சி தொங்கிட்டு ரூபனோட சண்டை போட்டுட்டு இருக்கியோனு வருந்திட்டிருந்தேன்.
அப்படியில்லாம உன்னை இப்படி சந்தோசமா இருக்கிறதும்.. உன் வயித்தில பிறக்கலன்னாலும் பட்டுவோட நீ அன்பா இருக்கிறதை பார்க்கவும் ரொம்ப சந்தோசமா இருக்குடா..” என்றார் நிறைவாக.
என் கணவன் பரிசுத்தமானவன் என சொல்லத் துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கியவள்.. ‘பட்டு ரொம்ப கியூட் மா.. முன்னல்லாம் அவங்கப்பா சொன்னாதான் எதுனாலும் கேப்பா.. ஆனா இப்போலாம் நான் சொன்னாலும் கேட்டுக்கிறா..” என பெருமையாய் சொல்லி..
‘பட்டுவோட பழகினா அன்பை காட்டாம இருக்க முடியாதுமா.. அவளுக்கு அம்மாவா இருக்க கொடுத்து வச்சிருக்கனும்..” என்றாள் நெகிழ்வாக.
ராஜாத்தி.. ‘நீயே இந்தளவுக்கு சொல்றனா குழந்தை விசயத்துல கண்டிப்பா ரூபன் மேல எந்த தப்பும் இருந்திருக்காது.. பட்டுவோட அம்மாதான் ரூபனை ஏமாத்திட்டு போயிருக்கனும்னு புரியுது ஆதிம்மா..
எது எப்படியோ.. நீ உன் புருசனை புரிஞ்சி நடந்துட்டினா அதுவே போதும்.. ரொம்ப தங்கமானவனா இருக்கிறாப்பில.. ரோஜா என்பேத்தி பேரன்கள்கிட்ட எத்தனை அனுசரனையா பேசுறாப்பல.. கொஞ்சம் கூட வசதி வாய்ப்பை காட்டிக்கல.. இதைவிட வேற என்ன வேணும்..?” என்றார் பெருமையாக.
‘ஆமாம்த்த.. ரொம்ப நல்லவங்க..” என்றவள்.. ‘யார்கிட்ட ரொம்ப நேரமா பேசிட்டிருக்காங்க.?” என ரூபனைப் பார்த்தாள்.
ஃபோன் பேசியபடி ஆதிரையருகே வந்த ரூபன்.. ‘இதோ கொடுக்கிறேண்ணா.. பேசுங்க..” என ஆதிரையிடம் கொடுக்க.. திரையில் இருந்த கர்ணனைப் பார்த்ததும்.. ‘மாமா..” என விழிவிரித்தாள் சந்தோசமாக.
கர்ணன்.. ‘ம்.. எப்படியிருக்க மேடம்.?” என்றான் கிண்டலாக.
தான் சந்தோசமாய் இருப்பதறிந்து கேட்கிறார்கள் எனப்புரிந்தவள்.. ‘என் மாமா ப்ளான்பண்ணி செய்து வச்ச கல்யாணம்ன்றதால அவரை பிடிக்கலன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்துட்டிருக்கேன் மாமா..” என்றாள் தானும் கிண்டலோடு.
‘ஓஹோ.. அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்கியா.? என் தம்பிக்கு இப்படி பொண்டாட்டி தேவையில்ல.. இனி உங்கம்மாவோடவே இருந்துக்க..” என்றான் சிரிப்போடு.
‘ஹா..ஹா.. நான்தான் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்துட்டிருக்கேன் மாமா.. அவங்க என்னோட சந்தோசமா இருக்காங்க.. என்னை விட மாட்டாங்க..” என்றாள் கர்வத்தோடு.
‘ம்.. ரொம்ப தேறிட்ட..” என பெருமையடைந்தவன்.. அத்தை அம்மாவிடமும் சற்று நேரம் பேசியிருந்து இணைப்பை துண்டித்தான்.
‘சரி போய் படு ஆதிம்மா..” என காஞ்சனா சொல்ல.. ‘தூக்கம் வரலமா..” என்றாள்.
‘ப்ச்.. உனக்கு தூக்கம் வரலனா என்ன.? தம்பிக்கு போய் தூங்க ரெடி பண்ணு..” என முனுமுனுப்பாய் அதட்டினார் ராஜாத்தி.
அங்கிருந்த திண்டில் அமர்ந்தவன்.. ‘அப்புறம் அத்தை.. அரவிந்தனேது எதாவது வம்பு செய்தானா.? மாதவிம்மா என்ன சொல்றாங்க..?” என்றான்.
‘இப்போலாம் எந்த தொல்லையும் செய்யிறதில்ல ரூபா.. ஆனா எங்கப்பாவோட பொண்டாட்டியையும் அவங்க மகளையும் படுத்தி எடுக்கிறானாம்.. இவனுக்கு பயந்து அந்த கனிகா பொண்ணை கூட யாரும் பொண்ணு கேட்க மாட்றாங்கனு கேள்விபட்டேன்..
இவங்கள்லாம் ஒரு மாதிரின்னாலும் அந்த கனிகா புள்ள சின்ன வயசுலயிருந்தே ரொம்ப சாது.. இவங்ககிட்ட மாட்டிட்டு முழிக்குது..” என்றார் ராஜாத்தி.
‘நாமளா போய் எதுவும் செய்ய முடியாதும்மா.. உதவி கேட்டு வந்தா ராமசாமி தாத்தாக்காக பார்க்கலாம்..” என முடித்து.. ‘நீங்க பேசிட்டிருங்கத்தை..” என உள்ளே போனான்.
அதிரூபன் பின்னோடே ஆதிரை வரவும்.. ‘ஏன் வந்துட்ட.?” என்றான்.
‘ம்க்கூம்.. போ போன்னு துரத்துறாங்க.. அவங்களுக்கு தூக்கம் வருதாம்..” என்றாள்.
‘உன்கிட்ட பேச பயந்து தூக்கம் வருதுனு துரத்தி விட்டுட்டாங்களா.?” என கிண்டல் செய்தவனிற்கு ஏனோ இங்கு ஆதிரையை நெருங்க மனம் விழையாமல் போகவே.. ‘ரெண்டு நாளா ரொம்ப படுத்திட்டேன்.. நீயும் பேசிப்பேசி டையர்ட் ஆகியிருப்ப.. தூங்கு..” என்றான்.
ஆதிரை ஆச்சர்யமாய் பார்க்க.. ‘தூங்குடி.. என்னவோ தினமும் இவளை படுத்துன மாதிரி பில்டப் கொடுத்துட்டு..” என்றான் அதட்டலாக.
ஆதிரைக்கும் தூக்கம் வரவே படுக்கவும்.. மனைவியை அணைத்தபடி கண்மூடினான்.
அடுத்த நாள் சீக்கிரம் எழுந்திருந்தாள் ஆதிரை. பக்கத்து வீட்டு சரத்திற்கு ஃபோன் செய்து வரவழைத்து அவனின் நலம் விசாரித்து மாணிக்கத்தின் நலனையும் விசாரித்து பேக்கரி நிலவரங்களை கேட்டுக்கொண்டிருந்தாள்.
ரூபன் வரவும்.. ‘இவன் பேரு சரத்குமார்.. நானும் இவனும் சின்ன வயசுலயிருந்து பிரண்ட்..” என அறிமுகம் செய்தாள். அன்றெல்லாம் ஆதிரை பேசியதை சளைக்காமல் கேட்டிருந்தான். அடுத்த நாள் காலை சந்தோசமாய் வழியனுப்பி வைத்தார் காஞ்சனா.
காரில் போய்க்கொண்டிருந்தவன் ஆளில்லாத இடம் பார்த்து காரை நிறுத்தினான். ‘ஏன் நிறுத்திட்டிங்க..?” என ஆதிரை கேட்க.. ‘இன்னும் ஒரே ஒரு விளக்கம் பாக்கியிருக்கு.. வீட்டுக்கு போனா மொழி பேச விடமாட்டா.. நைட் முக்கியமான நேரத்துல நீ ஆரம்பிப்ப.. அதுக்கு இப்பவே சொல்லிடறேன்..” என்றான்.
தான் கேட்டதனைத்திற்கு பதில் கிடைத்தாயிற்றே.. இன்னும் என்னவா இருக்கும் என ஆதிரை யோசிக்க.. ‘அந்த கேடுகெட்ட டாக்டர் பத்தி யோசிக்காம இருப்பேனா.? அவனுக்கு பட்டு இருக்கிறதே தெரியாது. அப்படியே தெரிஞ்சி வந்தாலும் குழந்தையை கேட்க நினைக்கும்போதே கொன்னுடுவேன்..” என்றான் கோபமாக.
ரூபன் கோபம் போக்க.. ‘நான் இதை யோசிச்சேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்.?” என பேச்சை மாற்றினாள்.
‘முந்தினநாள் நைட் உளறிட்டே தூங்கிட்ட..” என்றவன்.. ‘பட்டு விசயத்துல எதை நினைச்சும் நீ கவலைப்படாத ஆதி.. என்னை மீறி ஒன்னும் நடக்காது..” என தைரியம் கொடுத்தான்.
‘அது தெரியும்ங்க.. திடீர்னு இப்படியொருத்தன் கிளம்பி வந்தா ப்ரியாக்கு கெட்ட பேராகிடும்ல..? அதான் கொஞ்சம் பயமாகிடுச்சி.”
ஆதிரையின் பயத்தில் பெருமையடைந்தவன்.. ‘இதெல்லாம் நான் யோசிக்காம இருப்பனா.? எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீ நமக்கான வாழ்க்கையை சந்தோசமா வாழப்பாரு..” என்றான் இலகுவாக.
‘ம்..” என சந்தோசமாய் தலையாட்டியவள் ‘அம்மாக்கு நான் சந்தோசமா இருக்கிறது நினைச்சி ரொம்ப சந்தோசம்..” என ஆரம்பித்தவள் வீடு வரும்வரை தொடர்ந்தாள்.
வீடு வந்ததும் பட்டுவை கொஞ்சி.. ‘பட்டம்மா வேலை முடிச்சி வந்துட்டேன்..” என்றாள் சந்தோசத்தோடு. தன் வீட்டில் நடந்ததெல்லாம் கணேசன் மாரியப்பனிடம் சொல்லி முடித்து பத்து மணிபோல் ரூமிற்கு வந்த ஆதிரையை தாபத்தோடு அணைத்தவன்..
‘இன்னைக்கும் எதாவது பேசின.. விடியும் வரை தூங்க விடமாட்டேன்..” என மிரட்டி ஆண்டான் மனைவியை. அடுத்து வந்த நாட்கள் எந்த சஞ்சலமும் இல்லாமல் சந்தோசமாய் சென்றது ஆதிரையின் நாட்கள்.
error: Content is protected !!