Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mangaiyin Nizhalaai Vanthavan

Mangaiyin Nizhalaai Vanthavan 1

மங்கையின் நிழலாய் வந்தவன்🥰💕

அத்தியாயம் – 1



Advertisement

அதிகாலை சூரியனின் பார்வை மண்ணுலகை வந்தடையும் நேரத்திற்கு முன்பாகவே அங்குள்ள பழமை வாழ்ந்த  ஈஸ்வரன் கோவிலில் அந்த ஊருக்கே கேட்கும் அளவிற்கு அவரின் புகழை போற்றி பாடல் ஒலித்து கொண்டிருந்தது அந்த ஊரில்.

சத்தியம் நீதான்…

Advertisement

சகலமும் நீதான்…

Advertisement

நித்தியம் என்னில்…

நிலைப்பவன் நீதான்…

Advertisement

அருணாச்சலா…

உனை நாடினேன்…

சிவ லீலை செய்யாமல்..

சிறுஏனை ஆட்கொள்ள…

சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா…

அண்ணாமலையானே…

எங்கள் அன்பில்

கலந்தோனே…

உண்ணாமுலை நாதா…

எங்கள் உள்ளம்

நிறைந்த்தோனே…

“பாடலை கேட்டு கண் விழித்தவள். மெதுவாக கண்ணை துடைத்து இரு கைகளையும் திறந்து பார்த்தாள். அதில் என்றாவது ஒருநாள் எம்பெருமானின் முகம் தெரியாதா!எமது வாழ்க்கைக்கு ஒலி கிடைக்காதா நமக்கு காட்சி தரமாட்டாரா? என்ற ஏக்கம் அவளுக்குள்”

“அதிகாலை என்பதனால் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவுதான். மெதுவாக வீட்டின் வாசல் கதவை திறந்தவள் தனக்கு முன் தோழி வாசலில் சாணமிட்டு மொழுவி கோலமிட்டத்தை பார்த்து தன்னை தானே நொந்து கொண்டாள்” அடைக்கலமகா வந்த இடத்திலும் இப்படி நடந்துகொண்டோமே என்ற குற்றவுணர்ச்சி உள்ளுக்குள்,

எதற்கும் பிரயோஜனமில்லாமல் ஏன் இப்படி ஒரு வாழ்கை எனக்கு கொடுத்தாய் இறைவா??? மனதிற்குள் கலங்கியவளுக்கு கண்களில் கண்ணீர் கசிய தொடங்கியது.

“மறுபுறம் அவளின் தொழியோ சூரியன் உதயத்தில் தங்கம்போல் ஜொலிக்கும் கோவில் கோபுரத்தை நோக்கி கைக்கூப்பி ஆண்டவா என் சினேகிதி மனசை எப்படியாவது மாத்திடு, அவளை பழைய நிலைமைக்கு கொண்டுவரும் பொறுப்பு உன்னுடையதுப்பா என்றவள் சில பல கோரிக்கைகளை வைத்துகொண்டிருந்தாள். இவள் பிறப்பில் கிருத்துவ பெண்ணாக இருந்தாலும் தோழிக்காக வேண்டிக்கொண்டாள்.

அவளின் வேண்டுதலை கலைக்கும் விதமாக அங்கே வந்த இன்பத்தமிழ் (நம் கதையின் நாயகி) பிரிஷில்லா எத்தனை முறை சொல்லிருக்கேன். வாசல் வேல என்னுடையது நீ செய்யாதன்னு? என்றாள் கோவமாக

திடீரென அவளின் வருகையை எதிர்பார்க்கதவள், அதிர்ந்து பின் சாதாரணமாக அவளிடம் திரும்பி என்ன கேட்ட இன்பா என்றாள்.

“ஹாங்….. நொன்ன கேட்டேன். எத்தனைமுறை சொல்லிருக்கேன் எனக்குன்னு பங்கு பிரிச்ச வேலையை செய்யாதன்னு” எப்பவுமே சொல்றபேச்சை கேக்கறதே இல்லை என்றாள் சலிப்பாக,

உடனே பிரிஷில்லா “ஒரே வீட்ல இருக்கோம் யாரு செஞ்சா என்னடி  இன்பா? ” சரி அத விடு அங்க பாத்தியா சூரிய வெளிச்சம் அந்த கோபுரத்துல படுறது பாக்கறப்ப உனக்கு எதாவது தோணுதா?” தோழியின் மனநிலைமை அறியும்பொருட்டு கேட்டாள்.

“ஆமா பிரிஷி, உனக்கு ரெண்டு அடி கொடுக்கணும்னு தோணுது என்றவள் அதோடு விடாமல் அவளின் முதுகில் செல்லமாக ரெண்டு அடி வைத்தாள்.”

“வலிக்காமலே வலிப்பதுபோல முகபாவனையை வைத்து கொண்டு உன்னய தோழின்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு இப்படியாடி அடிப்ப ரொம்ப வலிக்குது என்றாள் கிண்டலாக “

அந்த வார்த்தை கேட்ட அடுத்த நொடி அவளுக்கு “சுருக் ” என்று குத்தியது.

ஒரு காலத்தில் ஏளனமாக பேசியவள் தான் இன்று தனக்கு பக்கபலமாகவும், வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் இருப்பதை அவளாள் இல்லை என்று சொல்ல முடியாதே.

இன்பாவின் முகசுறுக்கத்தை உணர்ந்தவள், இன்பா…. இன்பா….. சும்மா விளையாடுனேன். உன்கிட்ட தமாசு பண்ண எனக்கு உரிமை இல்லையா? என்றவள் இன்பாவை பேச விடாமல்,

அதுக்காக ஏன் இப்படி மூஞ்சிய “இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிருக்க” பாரு என் வாயை என்று வாயினை குரங்கு மாதிரி வைத்து காண்பிக்க இன்பாவின் இதழ்களில் புன்சிரிப்பு சட்டென வந்து மறைந்தது.

“ஆண்டவரே ஏசப்பா” எப்படியோ சிரிசிட்டா அது போதும் எனக்கு என்றவளுக்கு இயற்கை அழைப்பு விடுக்க சிட்டாக பறந்துவிட்டாள் கழிவறைக்குள்.”

“அதன்பிறகும் ஓயாமல் இன்பாவை அழைக்க அவளோ, சிரித்துக்கொண்டே அங்கனயாவது கொஞ்சம் வாயமூடேன்டி” என்றாள்.

அது கொஞ்சம் சிரமம் தான் ஓகே உனக்காக “ட்ரை ” பண்றேன்.

அதற்குமேல் இன்பாவும் அவளிடம் வாய் கொடுக்காமல் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

அங்கு சென்று பொருட்களை பார்த்தவளுக்கு தினமும் தோன்றும் நினைவலைகள் என்றாலும் இன்று அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் பெற்ற தாயின் நினைவுநாள் இன்று.

மெதுவாக பழைய நினைவுகளுக்கு சென்றவள்,

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஏய், ஓடாதடி நில்லு நில்லுனு சொல்றேன்ல. அம்மா பேச்சை கேளு இன்பா வருசத்துக்கு ஒருமுறையாவது தலைக்கு எண்ண வச்சி குளிக்கணும்டா, வாடா கண்ணு என்றவர்  அவளை ஒருவழியாக பிடித்து பின்புறன் உள்ள திண்ணையில் அமர்த்தினார்.

“ம்ஹும்”…… ம்ஹும்…. ம்ம்ம்ம்…….. மா என்றவள் விளையாட்டாக அழ துவங்க”

“தலையில் லேசாக குட்டு வைத்தவர் இன்னும் ஒருவருசத்துல கட்டிக்குடுத்தா பிள்ளைகளை பெத்துட்டு தாயாகிடுவ இன்னமும் சின்ன புள்ளைங்க போல நடிக்கறத பாறேன் என்றவர் சிரிக்க,

“ஐயோ மம்மி அவ்ளோ பெரிய தண்டனையெல்லாம் எனக்கு கொடுக்காதீங்க ப்ளீஸ், அதுக்கு இந்த ஆயில்பாத் போதும் என்றாள் நக்கலாக.”

“பின்னோடே அவளின் அண்ணன் தூக்க கலக்கத்தில் தானே வந்து இந்த எண்ணெய் குளியலுக்கு மாட்டிக்கொள்ள தங்கைக்கு வானில் பறக்காத குறைதான்”

வந்தவன் பாதி உறக்கத்தில் இருக்க,

“அம்மா காபி வேணும் என்று பிணத்திக்கொண்டே அங்குள்ள மறத்தாலான இருக்கையில் சாய்ந்து கொண்டான். “

வாடா வா, இன்னைக்கு உனக்கு இருக்கு, காபியா கேக்கற காபி என்றவள் தாயின் ஆயில்பாத் முடிந்து எழுந்து,

“அம்மாவிடம் ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்து “உஸ்” என காட்டிவிட்டு”

“அண்ணா அம்மா வேலையா இருகாங்க, இந்தா உனக்காக நானே போட்டு கொண்டுவந்த ஸ்பெஷல் காபி, இந்த மாதிரி டேஸ்ட் வேற எங்கையும் கிடைக்காது. ஏன் நம்ப ஹோட்டல கூட குடிசிருக்க மாட்ட என்றவள் அவனின் மூக்கை பிடித்து கிண்ணத்தில் இருந்த நல்லெண்ணெய் அனைத்தையும் வாயில் திணித்துவிட்டாள்.”

சற்றும் எதிர்பாராத விஷ்வா (இன்பாவின் அண்ணன்) என்னவென்று உணரவே இரண்டுநிமிடம் எடுத்துகொள்ள பிறகு வயிற்றில் பாதியும் கீழே பாதியும் சிந்தி, கண்ணை துடைத்து பார்க்க எல்லாம் இரண்டிரண்டாக தெரிய அவளை அதட்டி கொண்டே துரத்தி பிடிக்க, செல்ல சண்டையோடு அன்றைய காலை பொழுது துவங்கி இருவரும் அவரவர் அறைக்கு குளிக்க சென்றனர்.

இது ஒருபுறம் இருக்க இவர்களின் குடும்பத்தை பற்றி சுருக்கமாக பிளாஷ்பாக் பார்த்துட்டு வந்துடலாம் வாங்க.

🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃

“பிள்ளைகளின் சந்தோசமே தன்னுடைய சந்தோசமாக நினைத்து வாழ்பவர் அன்னலட்சுமி. பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் அன்னம் காலடிவைத்த நேரம் தான் பணம் கொட்டோகொட்டுனு கொட்டுது என்ற பெயரை பெற்றவர். அதுவும் மாமியாரின் வாயில் இப்படி ஒரு வார்த்தை வருவது பல பெண்களின் இன்றைய கனவல்லவா!”

அந்த வீட்டிற்கு அன்னம் கடைசி மருமகள். இவரின் வீட்டில் சமையல் வேலைக்கு தன் அம்மாவுக்கு மேலுக்கு முடியாமல் போக மாற்று ஆளுக்காக சென்றவர் தான் அன்னம்”.

பின்பு அந்த வீட்டின் மருமகளானது

தன் கணவனின் அண்ணன்கள் இருவருக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பிடிக்கவில்லை”

காரணம் அந்த ஊரின் மிகப்பெரிய   “ஸ்ரீமுருகன் ஜவுளிகடை” உரிமையாளர் சுப்பிரமணியம் பிள்ளைகளில் ஒருவன் வேலைக்காரியை திருமணம் செய்துகொண்டதை அவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் ஏளனமாக பேசுவார்கள்.

அண்ணன்களின் மாமியார் வீட்டிலும் கேவலமான பேச்சுக்கள் காது பட பேசவே சொக்கலிங்கதால் பொறுத்துகொள்ள முடியவில்லை.

போதும் நிறுத்துங்க அண்ணா கூடபிறந்ததுக்கு என்னய எவ்ளோ பேசனிங்க பொறுத்துகிட்டேன். ஆனால், என்னோட மனைவியை பத்தியோ அவங்க குடும்பத்தை பத்தியோ பேசறதுக்கு இங்க யாருக்கும் உரிமையோ, தகுதியோ கிடையாது.

உங்களை போல தான் பிறக்கும்போது நானும் எந்த குறைபாடுங்களும் இல்லாமல் பிறந்தேன். ஆனால் விதியா? இல்லை கடவுளின் சதியா? குழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட காய்ச்சலில் எனக்கு இந்த நிலைமை வந்தது. அதையும் நீங்கள் கேலியாக தானே பார்த்தீங்க,

நம்ப தம்பின்னு நெனசிருந்த நான் அசிங்கமா தெரிஞ்சிருக்க மாட்டேன். எப்பவும் ஏளனமான பேச்சுதானே உங்க ரெண்டுபேரிடமும்,

உங்க கொழுந்தியாவை எனக்கு பேசிமுடிக்க சொல்லி அம்மா உங்க கிட்ட கேட்டப்ப நீங்க என்ன சொன்னிங்கண்ணா? என்றான் கட்டமாக இத்தனை நாள் வலியும் வேதனையும் இன்று கொட்டிவிட்டான்.

என்னடா, சொன்னேன்?

“எனக்கு எதுவும் தெரியாதுன்னு நடிக்காதீங்க அண்ணா”

மூத்தவரின் மனைவி என்ன தம்பி தப்பா சொல்லிட்டாரு, நொண்டிபயலுக்கு என் கொழுந்தியா கேக்குதா? இருக்கற வரைக்கும் நாங்க மூணுவேலை சாப்பாடு போடுறோம், கல்யாணத்த பண்ணிவச்சி அந்த பொண்ணோட பாவத்தை ஏத்துக்கறதுக்கு நாங்க ஒன்னும் முட்டாள் இல்லைன்னு சொன்னார் இதல என் புருஷன் தப்பா சொன்ன மாதிரி எனக்கு தெரியல.

சரிங்க அண்ணி உங்ககிட்ட வாக்குவாதம் பண்ண நான் விரும்பவில்லை. எனக்கான உரிமையை விட்டுக்குடுக்க சொல்லுங்க அமைதியா போயிட்றேன்.

“என்ன உரிமை தம்பி?”

இதுவரைக்கும் கடையில எவ்ளோ வருமானம் வந்திருக்கும் அண்ணனுங்க ரெண்டுபேரும் தான் பங்கு பிரிச்சாங்க நான் ஒருத்தன் இருப்பதையே மறந்துட்டாங்க போல அந்த உரிமை பத்தி தான் பேசறேன். அண்ணி

முதலைக்கே மோசம் போலிருக்கே. ஒன்னும்மே பேசாம பம்பிகிட்டிருந்தவன் இன்னைக்கு பங்கு கேட்கறான்னா, இது அந்த வேலைக்காறியோட வேலையாக தான் இருக்கனும்.

எம் பொண்டாட்டிய பத்திபேச யாருக்குமே தகுதி கிடையாது. இந்த பணத்துக்கும் வசதிக்கும் ஆசைபட்டு இந்த கல்யாணத்துக்கு அவ சம்மதிவில்லை. என்னுடைய அன்புக்காகவும் பாசத்துக்காகவும் விரும்பி கட்டிக்கிட்டா,

இவ்ளோ பேசிட்டியா? சொத்துல சல்லிப்பைசா உனக்கு கொடுக்கமுடியாதுடா எங்கபோய்ட்டு என்னபண்றயோ பண்ணுடா எங்களை எவனாலயும் அசைக்கமுடியாது. என்றவன் இனி ஒரு நிமிஷமும் இந்த வீட்ல நான் இருக்கமாட்டேன்.

நான் கத்துகிட்ட உணவு படிப்பு போதும் எனக்கு ஆனால் உங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன். சும்மாவே விடவேமாட்டேன் என்றவன் திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.

வெளியே வந்த பிறகு பொறுமையாக அன்னம் பேச்சை ஆரம்பித்தார்.

என்னங்க?

“என்ன சொல்லு என்றார் காட்டமாக,”

“உங்களுக்கு கோவம் வருமாங்க? “

அவளின் கேள்வியில் அதிர்ந்தவர் ஏன் அன்னம் நான் கோவப்பட கூடாதா? இல்லை எனக்கு சூடு, சொரணை எதுவும் இருக்ககூடாதா?

என்ன சொன்னேன்னு இப்படி கேக்கறீங்க என்றவளுக்கு முனுக்கென்று கண்ணீர் கணவனின் கையில் தெரிந்தது.

அப்பொழுது தான் கோவம் தனிந்தவறாக மன்னிசிக்கோ அன்னம் கோவத்துலையே வந்ததால உங்கிட்டயும் அப்படி பேசிட்டேன் தப்புமா மன்னிசிடுமா என்றார் கெஞ்சுதலாக,

ஐயோ அப்படிலாம் சொல்லாதீங்க. இப்போதைக்கு நிலைமை சரியில்லை எங்க அம்மாவீட்டுக்கு போய்ட்டு எந்த முடிவா இருந்தாலும் எடுக்கலாம்னு சொல்ல வந்தேங்க.

சரிம்மா அன்னம் இனிமேல் உன் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாதும்மா.  என்ற இருவரும் சந்தோசமாக அன்னத்தின் சொந்த ஊருக்கு பேருந்தில் பயணித்தார்கள்.

அங்கே சொக்கலிங்கம் வீட்டில் கடையிலிருந்து வந்த சுப்பிரமணியம் நடந்ததை கேட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு மூச்சிபேச்சு இல்லாமல் கீழே விழுந்துவிட்டார்.

 நிழலாய் வருவான் அத்தியாயம் – 2-ல்

தொடரும்.

இந்த கதையில் பிழைகள் இருந்தால் கமெண்ட் செய்யவும் திருத்தி கொள்கிறேன் மக்களே. தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் மக்களே நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!