Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என்னுள்ளே 💞12

அத்தியாயம் _12

உறைந்து போய் நின்ற பிரபாவை அவள் ஏளன சிரிப்பு உலுக்கி எடுத்தது .

தாலி கட்டிட்டோமேன்னு  அட்வான்டேஜ் எடுத்துக்க முயற்சி பண்ணாதே .

நான் ஆசை பட்ட வாழ்க்கை இது இல்லை .



Advertisement

என் மிதுனோட நான் எப்படி எல்லாம் வாழணும்னு ஆசை பட்டேன் தெரியுமா ?

ஒன்றும்  புரியாமல் …எதையும் கிரஹித்து கொள்ள முடியாமல் உயிரற்ற ஜடம் போல் நின்றான் .

என்ன பார்க்கிற .. நானும் மிதுனும் நாலு வருஷமா லவ் பண்றோம் . இப்போ அவன் லண்டனில் இருக்கான் .

Advertisement

நான் வாழ நினைத்த வாழ்க்கை இது இல்லை . என் மிதுன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் தெரியுமா ?

Advertisement

என்னை பெத்த அப்பாவோட வறட்டு பிடிவாதத்தில் என் வாழ்க்கை பாழா போச்சு .

இதை எல்லாம் உங்க வீட்ல சொல்லி இருக்கலாமே ? அவன் சோர்ந்து போய் கேட்டான் .

எங்க வீட்டுக்கு தெரியாமலா இருக்கும் ? அவன் வேற சாதி …அது தான் எங்க வீட்ல ஒத்துக்கலை .

Advertisement

எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி ..ஹவுஸ் அரெஸ்ட் செய்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க .

சதாசிவம் வாலன்டியரா வந்து சம்மந்தம் பேச இது தான் காரணமா ?

ஒரு அனானிமஸ் கால் வந்ததே அது உண்மை தான் போல…! நொறுங்கி போனான் .

“அடுத்து என்ன செய்வது ….” சுவற்றை வெறித்தபடி  நின்றான் .

அடுத்து என்ன என்பதை பத்மா சொன்னாள் . இன்னும் ஆறு மாசத்தில் மிதுன் வந்துடுவான் ….நான் அவன் கூட போயிடுவேன் .

சதாசிவம் வீட்டில் இருந்து தான் என்னால வெளியேற முடியலை . இங்கிருந்து போறது ஈஸி .

ஸோ …அதுவரைக்கும் என் தலை எழுத்தை நொந்துகிட்டு இங்கே இருக்கேன் .

உன் நிழல் கூட என் மேல படக்கூடாது ….அவள் வார்த்தை என்னும்  நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டினாள் .

அவன் பேச எதுவும் இல்லை .
அமைதியாய் நின்றான் .

அவன் கண்ட கனவு கானல் நீராய் போனது .

பார்க்கலாம் …இந்த ஆறு மாத காலத்திற்குள் அவள் மனம் மாறக் கூடும் .

அவள் இடியை இறக்கிய செய்தியை இரு தரப்பு பெற்றோரிடமும் சொல்வதா? வேண்டாமா ? அவன் தவித்து கொண்டிருந்தான் .

என் அப்பாக்கு சொல்லி நியாயம் கேட்கலாம்ன்னு நினைக்காதே …அப்படி நீ பண்ணின ….அடுத்த நிமிஷம் என்னை பிணமா தான் பார்ப்ப .

மூளை முடங்கி …பார்வை மங்கி போனவனாய் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்து கதவை தாழிட்டான் .

கண்ணில் நீர் கொட்டியது . இந்த அதிர்ச்சியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை .

அவள் வாழ்விற்கான வழியை கண்டுபிடித்து விட்டாள் .என் வாழ்வு என்னாவது ?

ஆசை ஆசையாய் எனக்கு திருமணம் செய்து வைத்த என்னை பெற்றவர்களுக்கு என்ன சொல்வது ?

என்னை அவள் பிரிந்து போய்விட்டால் இந்த சமூகம் என்னை என்ன பேசும் ?

நான் காதல் கீதல் என்று சிக்காமல் பெற்றவர்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு தானே திருமணம் செய்தேன் …
எனக்கேன் இப்படி நடக்க வேண்டும் ?

இன்னொருவனை மனதில் நினைத்து கொண்டு இருப்பவளை பலவந்த படுத்தி வாழ முடியுமா ?

ஒரு முடிவும் எட்டப்படாமல் முகம் கழுவி கொண்டு வெளியில் வந்தான் .

அவள் எதுவும் நடவாதது போல் வெகு இயல்பாக படுத்திருந்தாள்.

ஈசி சேரில் படுத்து கண்ணை மூடிக்கொண்டான்.

இருவருக்குமே துக்கம் நிறைந்த இரவாகவே போனது.

காலையில் எழுந்து வெளியே போய்விட்டான்.

எட்டு  மணிக்கு மேல் எழுந்து வெளியே வந்தாள் பத்மஜா.

மருமகளை வாஞ்சையாய் தழுவி பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார் கல்யாணி.

இருவரையும் அமர்த்தி காலை உணவை கொடுத்து… கோயிலுக்கு சென்று வரசொன்னார் கல்யாணி.

வெறுப்பு மண்டிய பார்வையுடன் அவனுடன் கோயிலுக்கு கிளம்பினாள்  பத்மஜா.

நடப்பதை ஆறு மாதம் பொறுத்து கவனித்துக் கொள்ளலாம் என்று நிதானமாக இருந்தான்  பிரபா.

கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு  வெளியில் வந்தார்கள் .பக்கத்தில் தான் நம் ஹோட்டல் இருக்கிறது வா போகலாம் என்று அழைத்து சென்றான் .

” இது ஒரு ஹோட்டல் ..இதுக்கு ஒரு முதலாளி ! வாட் எ காமெடி
அவள் நக்கலாய் சிரித்தாள் .”

வரதராஜன் ஓடிவந்து மருமகளை வரவேற்றார் .

காஃபி கொண்டு வரும்படி சர்வரிடம் சொன்னார் .

இங்கே காஃபியா? எனக்கு வேண்டாம் அவள் முகம் சுழித்தாள் .

வரதராஜன் முகம் வாடிப் போனார் .

சரிப்பா …நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ …என்று மகனிடம்  கூறி அனுப்பி வைத்தார் .

பெரியவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியாதா? எரிச்சல் அடைந்தான் .

உன்னோட செவன் ஸ்டார் ஹோட்டலை பார்க்க நான்  வரேன்னு சொன்னேனா ? நீ தானே கூட்டிட்டு வந்தே?

எதுவும் பேச இயலாதவனாய் அமைதியாகி போனான் .

புதுமண தம்பதிகளுக்கு உரிய ஆனந்தம் , அந்நியோன்யம் அவர்களிடம் இல்லாதது கண்டு கல்யாணி வருந்தினார் .

மறு வீட்டு விருந்தில்…  மகள்  எப்படி நடந்து கொள்கிறாள்  என்று பிரபாவிடம் கேட்டார் சதாசிவம் .

நல்லபடியா இருக்கோம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றான் .

மகளைப் பற்றி தெரியுமாதலால் ஆயிரம் அறிவுரை கூறி அனுப்பினார் கஸ்தூரி.

பிரபா வழக்கம் போல் வேலைக்கு செல்லத் தொடங்கினான்.

வீட்டில் எந்த வேலையும் பத்மஜா செய்வதில்லை . வீட்டில் இருப்பவர்களை மனிதர்களாக அவள் கணக்கில் கொள்ளவும் இல்லை .

உன் புருஷனுக்கு தேவையானதை நீ தான் செய்யணும் என்றார் கல்யாணி.

அவரை கொன்றுவிடும் பார்வை பார்த்தால் பத்மஜா.

” M.com எல்லாம் ஒரு படிப்பு…” அசிஸ்டன்ட் மேனேஜரா  முப்பதாயிரம் சம்பளம் வாங்குவது பெரிய  வேலை ? அதுக்கு உங்கம்மாக்கு பெருமை தாங்கலை …!

நான் உனக்கு வேண்டியதை செய்யணுமாமே ? நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா ?

வழக்கம் போல் பதிலேதும் பேசாமல் பெருமூச்சுடன் கடந்து சென்றான் பிரபா.

வாரம் ஒரு முறை மிதுனுடன்  தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருந்தாள் பத்மஜா .

வலிக்கும் இதயத்துடன் அதை பார்த்தும் பார்க்காமல் இருக்க பழகி கொண்டான் பிரபா .

மலர்ச்சியற்ற மகனின் முகத்தை கண்ட வரதராஜன் அவசரப்பட்டு அவன் வாழ்வில் முடிவு எடுத்து விட்டோமோ என்று துயரம் கொண்டார்.

மகள் நல்ல விதமாய் குடும்பம் நடத்துவதாய் எண்ணிக்கொண்டார்கள் பத்மஜாவை பெற்றவர்கள் .

விடுமுறையில் சென்னை வந்த பாலாஜி நண்பன் முகத்தைக் கண்டே அவன் சோகத்தை புரிந்து கொண்டான்.

தோண்டித் துருவி பாலாஜி கேட்ட கேள்வியில் அனைத்தும் சொல்லிவிட்டான் பிரபா.

நண்பனின் வாழ்க்கையை எண்ணி மிகுந்த துயருற்றான்  பாலாஜி.

கல்லூரியில் எத்தனை பெண்கள் பிரபாவிற்கு
ஏங்கினார்கள் என்று அவனுக்கு தெரியும்!

தான் வந்து பத்மஜாவிடம் பேசி புரிய வைப்பதாக பாலாஜி கூறினான்.

வேண்டாம் கெஞ்சி கேட்டு வாழ்க்கை பிச்சை கேட்க கூடாது ….என்று பிரபா திட்டவட்டமாக மறுத்துவிட்டான் .

பிரபாவின் அழகும் , அமைதியும் கண்டு  பத்மஜா சங்கடம் கொண்டாள் .

பாவம் இவன் …தன்னால் இவன் வாழ்வும் சீரழிகிறது என்று துணுக்குற்றாள் .

ஆயினும் பாவ புண்ணியம் பார்க்கும் நிலையில் அவள் இல்லை .

கடமையே என அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

குளித்துவிட்டு வெற்று மார்புடன்  நிற்பவனை கண்டு தலை தாழ்த்தி கொண்டு வெளியே சென்றுவிட்டாள் பத்மஜா .

உடை மாற்றிக் கொண்டு அவன் வெளியேறவும் அவள் அறைக்குள் நுழையவும் இருவரும் முட்டிக் கொண்டனர்.தடுமாறி விழ இருந்தவளின் இடையை பற்றி நிறுத்தினான் .

பஞ்சு போன்ற மிருதுவான அவள் தேகம் அவனுள் தீயை மூட்டியது .

சட்டென்று சுதாரித்து கொண்டு  சாரி …சாரி …என்று  நிமிர்ந்து பார்க்காமலே  வெளியேறினான் .

அன்று …கிளை மேலாளர் ஓய்வு பெறுவதை ஒட்டி அனைவருக்கும் பார்ட்டி கொடுத்தார் .

இதுவரை மது எப்படி இருக்கும் என்று சுவைத்து அறியாதவன் முதன் முதலாய் குடித்தான் .

குடிக்க …குடிக்க ….இன்னும் வேண்டும் என்று மனம் கேட்டது .

அவன் மன அழுத்தம் தீர்த்தத்தில் கரைந்து காணாமல் போவதாய் நம்பினான் .

கஷ்டப்பட்டு ஸ்டெடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான் .

பார்ட்டியில் சாப்பிட்டு விட்டதாக  அன்னையிடம் கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டான் .

உறங்கி கொண்டிருந்த பத்மஜாவை கண்டதும் …
அவள் தேகம் தீண்டிய ஞாபகம் வந்து அவன் ஆண்மையை உசுப்பி விட்டது .

அதற்கும் மேல் தன்னை கட்டுபடுத்தி கொள்ளும் வழி அறியாது அவள் மேல் சாய்ந்தான் .

மூச்சு முட்டி …திமிறி எழுந்தாள் .

என்ன ..? என்ன பண்ற ? குடிச்சிருக்கியா ?

ஆமா …உன் கூட பேசணும் .அதுக்கு தான் குடிச்சேன் .

அவளுக்கு குற்ற உணர்வு தலை தூக்கியது . தன்னால் இவன் குடிக்க ஆரம்பித்து விட்டானே …!

ஏன்டி சாப்ட் ஆன பசங்களை  உங்களுக்கு பிடிக்காதா ? ரௌடித்தனம் பண்ணினா தான் பிடிக்குமா ?

இவ்வளவு தெளிவா இருக்கிற நீ …கல்யாணத்துக்கு முன்னாடி ஓடி தொலைய வேண்டியது தானே …?

ஏன்டி ….எனக்கு ஆசை காட்டி மோசம் பண்ணீங்க .

எவ்வளவு கனவு கண்டேன் …உன்னோட வாழப் போற வாழ்க்கைக்காக .

ஒருத்தியோட தான் உயிருள்ளவரை வாழ்க்கைன்னு நினைக்கிறவன் நான் . நீ மிதுன் கூட ஓடி போயிட்டா என் நிலை என்னடி ?

அவளை உலுக்கினான் …அவள் கண்ணில் நீர் வழிந்தது .உதடுகள் துடித்தது .

துடித்த அவள் உதடுகள் அவனை இம்சிக்க ….அவளை இழுத்து அழுத்தமாய் முத்தமிட்டான் .

அவள் மனநிலை என்னவென்று அவளுக்கே புரியவில்லை .

அவன் பாவம் என்று நினைத்தாளா ? அவன் பேசிய பேச்சு அவள் மனதை கரைத்ததா …தெரியவில்லை .

வெறிகொண்ட அவனுடன் போராடாமல் அவனுடன் இசைந்தாள் .

காலையில் கண் விழித்தவனுக்கு தலை விண்ணென்று தெறித்தது .

நெடு நேரம் முயன்றே ..என்ன நடந்தது என்று உணர்ந்து கொண்டான் .

அய்யோ …என்ன காரியம் செய்து விட்டேன் ! நான்கு மாதமாய் என்னை கட்டுப்பாட்டில் வைத்திருந்தேனே !

விருப்பம் இல்லாதவளை வேட்டையாடி விட்டேனே ..என் வளர்ப்பு பொய்யாகி போனதே !

அவள் எழுவதற்குள் கிளம்பி வெளியில் போய் விட்டான் .

நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் ? தலையணையில் முகம் புதைத்து கதறினாள் .

அதன் பிறகு ஒருவரை ஒருவர் ஏறிட்டு பார்ப்பதே இல்லை .

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது .

டிரஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை வாரி கொண்டிருந்தவள் நின்ற இடத்தில் ரத்தம் வடிந்தது .

வங்கிக்கு கிளம்பி கொண்டிருந்தவன் அதை கண்டு கொண்டான் ….

ஏய் என்னாச்சு …அவன் பதறி ஓடிவருவதற்குள் அவள் வயிற்றை பிடித்து கொண்டு கட்டிலில் அமர்ந்தாள் .

இரு அம்மாவை கூப்பிடுறேன் …அவன் வேகமாய் ஓடினான் .

ஏய் …எங்க போற …? எனக்கு ஒன்னும் இல்லை . எட்டு நாள் தள்ளி போயிடுச்சு . டேபிலட் போட்டேன் .

என்ன சொல்ற ? அவன் துடித்தான் .

இருவரும் தன் உணர்வு இல்லாம கூடி உண்டான இந்த கருவை நான் ஆராதிக்க முடியுமா ?

என் குழப்பத்தில் உண்டானதை தெளிவா யோசித்து அழித்துட்டேன் .

நானா ஏமார்ந்தேன்னு நினைத்தால்  அருவெறுப்பா இருக்கு .

இந்த குழந்தை செண்டிமெண்ட் காட்டி என்னை கட்டுபடுத்திட நினைக்காதே .

வரும் இருபத்தேழாம் தேதி மிதுன் வரான் .

எதுவும் பேசாமல் வெளியேறினான் .

பாலாஜிக்கு போன் பண்ணி தன் குழந்தை வெறும் பிண்டமாகவே கரைந்து போனதை கூறி  கதறினான் .

பாலாஜி மிகவும் வருந்தினான் . பிரபாவின் நல்ல மனதிற்கு ஏன் இந்த தண்டனை ?

பிரபா தன் வேதனையை மென்று விழுங்கி கொண்டிருந்தான் .

இருபத்து ஏழாம்  தேதி  இரவு அவளாகவே வந்து பேசினாள் .

மிதுன் சென்னைக்கு வந்துட்டான் . நாளை என்னை வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கான் .

உன்னை கஷ்டப்படுத்த நான் நினைக்கல …நீ ரொம்ப நல்லவன் . உன் நல்ல குணத்திற்கு நல்ல பெண் கிடைப்பா…!  கண்டிப்பா மேரேஜ் பண்ணிக்கோ..

என் முடிவு தப்பு தான் . என்னை மன்னிச்சுடு அவன் காலில் விழுந்தாள்  . மிதுன் இல்லாம என்னால் வாழ முடியாது …கை கூப்பினாள் .

சரி …கிளம்பு …மியூச்சுவல் டிவோர்ஸ் ட்ரை பண்ணுங்க . எப்போ எங்கே வந்து சைன் பண்ணனும் சொல்லு நான் வரேன் .

வீட்ல என்ன சொல்வ ? அவள் கண்ணீருடன் கேட்டாள் .

ரொம்ப லேட்டா இதை பத்தி யோசிக்கிற ?

நடக்கிறது நடக்கிறபடி நடக்கட்டும் ….நீ கிளம்பு .

அவன் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டிருந்தான் .

காலை ….பத்மஜாவை காணும் என்று கல்யாணி ஓடிவந்து கூப்பாடு போட்டார் .

எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்தான் பிரபா .

பிரபா  என்னடா …எதுவும் பேசாமல் அமைதியா நிற்கிற? வரதராஜன் துடித்தார் .

” அவ ஆசை பட்டவனோட அவ போயிட்டா …! “

என்னப்பா சொல்ற ? கல்யாணி இடி தாக்கியவர் போல் அலறினார் .

அய்யோ என் பிள்ளை வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேனே …
வரதராஜன் தலையில் அடித்து கொண்டார் .

பத்மஜா செய்த ஒரே நல்ல காரியம் தன் தந்தைக்கு கடிதம் எழுதிவிட்டு போனது தான் .

சதாசிவம் தன் கணக்கு பொய்த்து போனதை எண்ணி தொய்ந்து போனார் .

மகள் செய்த ஈன செயலை எண்ணி  உடைந்து அழுதார் கஸ்தூரி .

வரதராஜன் காலில் விழுந்தார் சதா . வரதா  எம்பொண்ணு இப்படி எல்லோரையும் தலை குனிய வைப்பான்னு நான் சத்தியமா நினைக்கலை .

பத்மஜாவிற்கு போட்ட அறுபது சவரன் நகை , சீர் வரிசை பொருட்களை கொண்டு போக சொன்னான் பிரபா .

அக்கம் பக்கத்து மனிதர்கள் இதை பெரிய விஷயமாக எண்ணி பேசி கொள்ள …கூசி போனார்கள் பிரபா குடும்பத்தினர் .

டேய் பிரபா …நீ ஆரம்பத்திலே அவ வீட்டில் சொல்லி இருக்கலாம் பாலாஜி வருந்தினான் .

இல்லை பாலா ..வீட்டில் தெரிந்தால் …அடித்து, உதைத்து என்னோடு வாழ வற்புறுத்தி இருப்பாங்க .

போகட்டும் விடு …! நல்லா இருக்கட்டும் …விரக்தியாய் சிரித்தான் .

மகனை பார்த்து பார்த்து நொந்து போன …வரதராஜன் மாரடைப்பில் காலமானார் .

குடும்பமே கண்ணீரில் தத்தளித்தது .

பரம்பரையாய் நடத்தி வரும் ஹோட்டலை விற்க விரும்பாமல் தனது வங்கி பணியை ரிசைன் பண்ணிவிட்டு ஹோட்டலை கவனிக்க தொடங்கினான்  .

தனது அசுர உழைப்பில் சாதாரண ஹோட்டலை… ரெசிடென்ஷியல் ஹோட்டலாக மாற்றினான் .

நண்பன் தனி ஒருவனாய் போராடுவதை கண்ட பாலாஜி தன் வேலையை விட்டுவிட்டு வந்து சேர்ந்தான்.

திருவான்மியூரில் ஹோட்டல் பிரான்ச்  தொடங்கினார்கள் . அது பாலாஜி பொறுப்பில் இயங்கியது .

தங்கை ஸ்ரீமதிக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைத்தான் .

பிரபாவின் வாழ்க்கை இப்படி இருக்கையில் தான் எப்படி திருமணம் செய்வது ? என்று தயங்கினான் பாலாஜி .

நண்பனின் மனம் அறிந்து நெகிழ்ந்து போன பிரபா …அவனே முன்னின்று பாலாஜி , நிஷா திருமணத்தை நடத்தி வைத்தான் .

எல்லோரும் அவனை வேறு திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியும் அவன் மறுத்து வந்தான் .

“———“

ஸ்வாதியிடம் அவன் மெல்ல மெல்ல தன்னை இழந்து கொண்டிருந்தான் .

அவன் தன் கட்டுப்பாட்டை இழக்கும் நிலையில் தான்  அவளை கூடுவாஞ்சேரிக்கு மாற்றினான் .

பாலாஜி சொல்லி முடிக்க ….கண்ணீரில் கரைந்து நின்றாள் ஸ்வாதி .

அவன் ஏற்கனவே காயப்பட்டவன் ஸ்வாதி .

என்னை மன்னிச்சிடுங்க …என்னால் அவரை ஏத்துக்க முடியாது …கை கூப்பினாள் .

——தொடரும் —–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!