Skip to content
Post Views: 627
மங்கையின் நிழலாய் வந்தவன்🥰💕
அத்தியாயம் – 2
அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் அந்திசாயும் நேரத்தில் சுப்பிரமணியம் மனைவி சாந்தம்மாள் கோவிலுக்கு சென்று கடைசி மகனின் தொழில் துவக்கதிற்காக சிறப்பு அர்ச்சனையும், நெய்தீபமும் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்த சமயம் தன் கணவன் நீல்சாய்வு இருக்கையில் படுத்திருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டார்.
உள்ளே வந்தவர் பூஜையறைக்கும் செல்லவில்லை. கணவனின் அருகில் சென்று என்னங்க….என்னங்க…. என்னாச்சுங்க உடம்புக்கு முடியலையா?
என்றவர் பதட்டத்தில் கணவனின் நெற்றியில் கைவைத்து பார்க்க சில்லென்று இருக்க,
Advertisement
டேய் கதிரு எங்க போனீங்கப்பா எல்லாரும் என்றார். வீடே அதிரும் அளவிற்கு,
எதுக்கு இப்படி கூப்பாடு போட்றீங்க?
வயசாகுதில்லை அதான் இந்த ஆட்டம் என்றவன் எதுவும் நடக்காதது போல பொறுமையாக வந்து அங்குள்ள இருக்கையில் கால்மேல் கால் போட்டு தெனாவட்டாக, என்னம்மா உனக்கு? என்றான்.
Advertisement
“அப்பாக்கு என்னாச்சி? ஏன் இப்படி மூச்சி பேச்சில்லாம படுத்திருக்காரு? “
Advertisement
எனக்கென்ன தெரியும்? கடையில இருந்து வந்தவர் அசதியா இருக்குனு படுத்துட்டார் என்றான்.
அவரை பார்த்தா அசதியில துங்கறமாதிரி தெரியலயே? உண்மையை சொல்லுங்கடா என்ன பண்ணீங்க என் தெய்வத்தை,
இவர் கேட்டுகொண்டிருக்கும் போதே பின்னோடே வந்த இரண்டாவது மகன் கந்தவேல் அதானே நம்ப என்ன செஞ்சோம். இதுக்கெல்லாம் காரணம் உங்க நொண்டிப்புள்ள அவனை போய்ட்டு கேளுங்க. சும்மா சும்மா எங்களையே கேக்கறீங்க நாங்க என்ன உங்களுக்கு ஊழியக்காரங்களா? என்றான்.
Advertisement
என்னது ஊழியக்காரங்களாவா!
கேட்பிங்கடா ஏன் கேட்கமாட்டீங்க?
இதெல்லாம் தெரிஞ்சிருந்தா பிள்ளைகளே வேணாம்னு மலடியாவே இருந்திருப்பேன்.
“ஓஹோ… அப்படியா உன்ன யார் பெத்துக்க சொன்னது என்றான் நக்கலாக?”
பணவெறி புடிச்ச பிசாசுங்களா பெத்த தாய்,தகப்பனை மதிக்க தெரியாததுனால தான் உங்க கையில எந்த தொழில் தொடங்கனாலும் வீணாப்போகுது.
அது மட்டுமா? போலீஸ் ஸ்டேஷன்ல பிரச்னைமேல பிரச்சனைவந்து உங்க அப்பா விழாதவன் காலில் எல்லாம் விழுந்து வெளிய கொண்டு வந்தாங்களே மறந்துடுச்சா?
அதெல்லாம் மறக்க முடியுமா? இவர் பணம் குடுத்தா நாங்க ஏன் கண்டவன் கிட்ட பணம் கேட்டு கட்டமுடியாம அலைய போறோம். என்றான் கந்தவேல்,
“பணம் பணம் கேக்கறீங்களே உறுபடியா ஒண்ணாவது பன்னிருக்கீங்களா? எல்லாமே நாசமாப்போனதுதான் மிச்சம்”
ஆனா என் “சொக்க”னால என்னிக்குமே எங்களுக்கு பிரச்சனை வந்ததில்லை. என்றவர் மீண்டும் கண்ணை துடைத்து கொண்டு என்னடா பன்னிங்க என் புருஷன என கதறிக்கொண்டே அவரின் நாடியை பிடித்து பார்த்தார்.
“அதுவோ இவர்களிடம் உன்னை தனியா விட்டுட்டு போய்டமாட்டேன் சாந்தா, என்ற உணர்வை அவருக்கு தந்தது. கொஞ்சம் தன்னை ஆசுவாசம் செய்துகொண்ட சாந்தா,”
“எங்க என் சொக்கனையும், மருமகளையும் காணோம் ?”
அதுங்க எங்க இங்க இருக்குங்க எப்பவோ வீட்டைவிட்டு ஓடிப் போயிடுச்சுங்க.
என்னது ஓடிப் போயிட்டாங்களா ? என்றார் முகமெல்லாம் சிவக்க,
ஆமா. நல்ல குடும்பத்துல பெண் எடுத்திருந்தா அந்த பொண்ணு இவனுக்கு புத்திமதி சொல்லிருக்கும்.
இவன்தான் வீடுவீடா எச்சில் பாத்திரம் கழுவிட்டு, பிச்சையெடுத்து சோறுதிங்கறவளை கட்டிக்கிட்டானே அதானோ என்னவோ அந்த புத்தியே இவனுக்கும் தொத்திகிச்சி என்றான் மூத்தவன் கதிர்வேல் நக்கலாக,
சாந்தாம்மாள் விரக்தியான சிரிப்பினை சிரித்து விட்டு ஏண்டா பேச மாட்டீங்க? அவனாலதான் இன்னைக்கு நீங்க இப்படியொரு வாழ்கை வாழறீங்க. அவன் நெனசிருந்தா உங்களுக்கும் ஒன்னும் செய்யாம தனியாக எல்லாத்தையும் அனுபவிச்சி இருக்கலாம்.
“ஹாஹாஹா….. டேய் கந்தா கேட்டியா இந்த கெழவி சொன்னதை? “
வாயின்மேல் கைவைத்து கேலி சிரிப்பினை சிரித்தவன் என்னிக்கி இந்த கெழவி அவனை விட்டுகுடுத்திருக்கு, கை, கால் நல்லாருக்கற நம்பனாலேயே வேலை செய்ய முடியல. இவன் கிளிச்சிடுவானம் நம்ப நம்பணுமாம் நல்ல கதையால்ல இருக்கு.
சிரிங்கடா நல்லா சிரிங்க… இதுக்கெல்லாம் காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.
அடடா, இப்ப சொல்லாத காலமா அப்ப சொல்லிடப்போகுது சும்மா போவியா? என்றான் கதிர்வேலன் மூத்தவன்.
நான் ஏண்டா சும்மா போகணும். அவனோட “மாற்றுதிறனாளி உதவித்தொகை” இல்லைனா இன்னைக்கு உங்க அப்பா இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டார். நீங்களும் படிச்சி முட்டாளாக இருந்திருக்க மாட்டீங்க,
அம்மா………. என்ன சொன்ன? என்றான் பல்லை நரநரவென்று கடித்து,
இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுறவ நான் இல்ல. அப்புறமா என்ன சொன்ன அம்மாவா? அம்மா இல்லடா கெழவி நான், என்றவர் மீண்டும் ஆமாண்டா முட்டாள்களா! என்றார்.
கோவம் எரிமலையாக வெடித்தது சாந்தமாக இருந்த சாந்தம்மாவிற்கு, அவனை பெத்த அதே வயித்துலதானே உங்க ரெண்டுபேரையும் பெத்தேன்.
“பாசத்தை தேடாமல் பணத்தை தேடுறீங்க, அதுவும் யாரோ ஒருத்தர் சம்பாத்திகறத இப்படி உட்காந்தே திங்கறீங்களே வெட்கமா இல்லையா உங்களுக்கு? “
போதும் நிறுத்து கிழவி இதுக்கு மேல எதாவது பேசின வெளில போன அவனோட நிலைமைதான் உனக்கும் உன்புருசனுக்கும் எங்களை அனுசரிச்சு நடந்துக்கிட்டால் மூணுவேலை சாப்பாடு கிடைக்கும் இல்லனா நீங்களே பாத்துக்கணும் சொன்னது புரிஞ்சுதா?
அடப்பாவிங்களா இது வேறயா? உங்க கையால சாப்பாடு சாப்பிட்டு உயிர் வாழனும்னா அப்படிப்பட்ட உயிரே எங்களுக்கு தேவையில்லை.
“சொத்து எல்லாம் என் புருஷன் பேர்ல இருக்கும்போது உங்களால் என்ன செய்ய முடியும்? “
“ஓஹோ கிளவிக்கு அப்படி ஒரு நெனப்பு இருக்கோ? “
ஆமாண்டா எல்லாமே என் புருஷன் உழைச்சு சம்பாதித்தது. முழுக்க முழுக்க அவருடைய உழைப்பு மட்டுமே. பாட்டன் சொத்து கூட கிடையாது. ஆனா ஒரே ஒருத்தனுக்கு மட்டும் உரிமை இருக்கு அது என் சொக்கனுக்கு மட்டும்தான்.
ஹாஹாஹா…… என்று சிரித்தவன் அது கைமாறி ஆறு மாசம் ஆச்சு. என்னைக்கு அந்த வேலைக்காரிய அந்த லூசு நொண்டி பயலுக்கு கட்டி கொடுத்தியோ? அன்னைக்கே நாங்க முடிவு பண்ணிட்டோம்.
வக்கீல வர வச்சு எல்லாத்தையும் எங்க ரெண்டு பேர் பேர்லையும் மாத்திட்டோம். இதுக்கு அப்புறம் யாராலயும் எங்களை எதுவும் செய்ய முடியாது.
அடப்பாவிகளா? என்று கதறியே விட்டார் சாந்தம்மாள்.
மயக்கத்திலிருந்து விழித்தவர் சாந்தா நீ எதுக்கு அழுவுற இந்த சொத்து போனால் என்ன இதைவிட மிகப்பெரிய சொத்து நம்ம சொக்கலிங்கம் நம்ம கூட இருக்கிறான் அது போதாதா?
அதுக்கு இல்லைங்க பெத்த வயிறு கொதிக்குதுங்க?
என்ன செய்ய சொல்ற இப்படிப்பட்ட கேவலமான பிறவிங்க ரெண்டுத்தையும் பெத்ததுக்கு நம்ப அசிங்கப்படணும். இதற்கு மேலும் இந்த நரக வாழ்க்கை வேணாம். நம்ம சொக்கன் எங்க போயிருக்கானோ அங்கேயே போயிடலாம்.
கணவன் சொல் தட்டாத மனைவி உடனே தலையசைத்து அவர்கள் பின்னோடே சென்றுவிட்டார்.
அவருக்கு வயது எண்பதை தொட்டிருக்கும், சாந்தம்மாவுக்கு வயது எழுவதை தொட இருக்கிறது. இந்த இரவு நேரத்தில் எங்கு செல்வது எப்படி மகனை தேடுவது என்ற குழப்பத்திலேயே அன்று முழுவதும் தேனி பேருந்து நிலையத்திலேயே காலத்தை கழித்தனர்.
“பெரியபங்களா வீட்டில் தங்களுக்கென பழமை மாறாமல் சிரிய அறையை கட்டிக்கொண்டு, பிள்ளைகள் மூவருக்கும் ஒரே மாதிரியான அறைகளை கட்டிக்கொடுத்தவர் இந்த பெரியமனிதன்.”
ஆனால் இன்று பேருந்து நிலையத்தில் “பத்தோடு பதினொன்றாய்” தரையில் விரிக்க துணி கூட இல்லாமல் படுத்து இருப்பதை பார்ப்பதற்கு சாந்தம்மாவிற்கு தாங்க முடியவில்லை.
மெல்ல சூரியன் உதயமாக கண்ணை துடைத்தவர், மனைவியை பார்க்க அவர் அங்கில்லை. சுற்றும் முற்றும் தேடிபார்க்க பத்துநிமிடம் கழித்து பொது கழிவறையில் இருந்து வெளியே வந்தார்.
வீட்டில் நடந்த போராட்டத்தில் அதிர்ந்த அதிர்ச்சியில் இரவெல்லாம் வயிற்றுப்போக்கு தாய் அவளுக்கு, இவை எதையும் கணவனுக்கு எட்ட வைக்கவில்லை. ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறார் தன் உடல் நிலையும் சீராக இல்லை என்று சொன்னால் மேலும் மனம் நொந்து போவார் என்று அமைதியாகவே இருந்து விட்டார்.
எங்க போன சாந்த சொல்லிட்டு போக மாட்டியா?
அது இல்லைங்க தூக்க கலக்கமாவே இருந்துச்சா அதான் முகத்தை கழுவிட்டு வரலாம்னு அந்த “கக்கூஸ் ரூம்” உள்ள போயிட்டு வந்தேன்.
சரி இரு நானும் போயி முகத்தை கழுவிட்டு வரேன்.
சரிங்க என்றவர் அங்குள்ள மேடையில் அமர்ந்து கொண்டார்.
மகன் எங்கே சென்று இருப்பான் என்று யோசித்தவருக்கு அன்னத்தின் நினைவு வர கண்டிப்பாக அன்னலட்சுமி வீட்டைத் தவிர வேறு எங்கும் இவங்க போயிருக்க மாட்டாங்க. என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சாந்தம்மாள் கணவர் வந்த பிறகு அவரிடம் இதைப் பற்றி கூறி அங்கே செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
“பேருந்தில் ஏறி அமர்ந்த உடனே அன்னத்திற்கு உறக்கம் வர சொக்கலிங்கம் தோளில் சாய்ந்து உறங்கி விட்டாள்.”
“வீட்டில் நடந்த அனைத்தும் கண் முன் வர இவனுக்கு தான் தூக்கம் வருவேனா என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தது. “
ஆழ்ந்த சிந்தனையில் இருக்க ஆரம்பித்தான் சொக்கலிங்கம். இதற்கு முன்பென்றால் எந்த பிரச்சினையும் இல்ல, நாம தனி ஆளு வருமானமே இல்லைன்னா கூட எங்கேயாவது ஆசிரமம் போய் பிழைத்து கொள்ளலாம்.
ஆனா இப்ப அப்படி இல்லையே என்னைய முழுசா நம்பி ஒருத்தி வாழ்க்கையை கொடுத்திருக்கா அவளுக்காகவாது உழைக்க வேண்டும்.
இவ பேச்ச கேட்டு இவங்க அம்மா வீட்டுக்கு போகிறோம். அங்க என்ன மரியாதை இருக்கும் எனக்கு, சொந்த வீட்டிலேயே என்னை பிச்சைக்காரனா பார்த்தவங்க என் அண்ணனுங்க,
கூடப்பிறந்த ரத்த சொந்தமே இப்படிப்பட்ட வார்த்தைகளை யோசிக்காமல் வெறுப்பாக வீசும் போது இவங்க அம்மா வீட்ல மட்டும் எப்படி பாக்க போறாங்க என்ற ஒரு வித பயம் இவன் மனதை தொத்திக் கொண்டே வந்தது. அந்த ஊரில் அன்னத்தின் வீட்டை அடைவதற்கு முன்பு வரை,
“என்ன அன்னம் கல்யாணம் முடிச்சு இப்பதான் அம்மா வீடு ஞாபகம் வருதா?, மாப்பிள்ளையோட முதல் முறையாக இப்பதான் வரிங்க போலிருக்கு?”
“ஆமாங்க பெரியப்பா”
என்றவள் வேறென்றும் பேசாமல் பெரியம்மா நல்லா இருக்காங்களா? என்று கேட்டாள்.
என்ன கட்டிக்கிட்டாங்களே அவங்களுக்கு என்ன குறை? நல்லா இருக்காங்க.
அன்னத்திடம் பேசிக் கொண்டிருந்த அவளது பெரியப்பா அருகில் இருந்த சொக்கலிங்கத்திடம் என்னங்க மாப்ள சௌக்கியம்களா என்றார்.
அவர்களின் பேச்சு முறைகள் வித்தியாசமாக இருக்க ஒற்றை தலை அசைப்பு மட்டும் தான் இருந்தது சொக்கலிங்கத்திடம்,
“சரிங்க பெரியப்பா நாங்க வீட்டுக்கு போறோம் நீங்க போயி காப்பி தண்ணி குடிச்சிட்டு வாங்க”
மகள் சொன்ன உடனே அவரின் பார்வை மாப்பிள்ளை வாங்க காப்பி தண்ணி குடிச்சிட்டு போகலாம் என்று சொல்ல,
இல்லைங்க பரவால்ல இருக்கட்டும் நாங்க அப்புறமா வருகிறோம் என்று இருவரும் அன்னத்தின் வீட்டுக்கு பொடிநடையாக நடக்க ஆரம்பித்தனர்.
சுற்றி எங்கும் மலைகளால் போர்வை போல போர்த்தப்பட்டிருந்தது அந்த ஊர் . மாலை நேரத்தில் பணி போர்வை சூழ்ந்துள்ள அந்த மலையை பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும். அதுமட்டுமா அங்கே அந்திசாயும் நேரத்தில் மட்டுமே பூத்துக் குலுங்கும் நித்தி மல்லியின் வாசம் மனதுக்கு மட்டும் அல்ல, மூளைக்கும் புத்துணர்ச்சியை தரும் விதமாக அமையும். இயற்கைக்காகவே கடவுளின் வரபிரசாதம் அந்த ஊர். அங்குதான் ஆயிரம் காலத்து பழமை வாய்ந்த பூலாநந்தீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.
மெல்ல நடந்து வீட்டினை அடைந்தவர்கள், அம்மா எப்படி இருக்கீங்க? என்றாள்
மகளின் குரலில் நிமிர்ந்தவர் மகளையும் மருமகனையும் பார்க்க இன்ப அதிர்ச்சியாகிவிட்டது. உடனே வாம்மா அன்னம் வாங்க மாப்பிளை, சொல்லிருந்தா அண்ணனிடம் வண்டி கொண்டுவர சொல்லிருப்பேன் என்றார் அன்னத்திடம் போலியான கோபத்துடன்,
அவரு தான் உங்க மாப்பிளை வேண்டாம்னு சொல்லிட்டாரும்மா.
இந்த ஊர் பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கு இந்த அழகை இரசிச்சிகிட்டே நடந்து போய்டலாம்னு சொன்னாரும்மா.
சரிவிடு வாங்க உள்ள போகலாம்.
என்றவர், பக்கத்து வீட்டு பெறாத பிள்ளை முத்துவிடம் மாப்பிளை வந்திருக்கார் நாற்காலி கொண்டுவாப்பா என்றார்.
சரோஜாதேவி எப்பொழுது அழைப்பார்க்கள் என்று நினைத்தவனுக்கு, சித்தியின் குரல் கேட்டஉடன் இதோ வந்துட்டேன்ம்மா என்றவன் கண்ணை மூடி திறப்பதற்க்குள் மாப்பிளைக்கு நாற்காலியை கொண்டுவந்தான்.
சொக்கலிங்கத்துக்கு சொல்லமுடியாத அளவுக்கு மாமியார் வீட்டில் கவனிப்புதான்.
மாப்பிளை இதை வச்சிக்கொங்கோங்க, இல்லல்ல நான் சொல்றத தான் மாமா வாசிக்குவாரு, இந்தாங்க மாமா முயல்கறி சாப்பிடுங்க உடம்புக்கு குளிர்ச்சி, அப்புறம் இந்த ஆட்டுக்கால் கொழம்பு, சட்டிசோறு எல்லாமே ஒன்னு ஒன்னா ருசிச்சு சாப்பிடுங்க.
உங்க ஊருல என்ன கிடைச்சாலும் எங்க ஊருல கிடைக்கற கலியும், நாட்டுகோழி கறி கொழம்பும், மாதிரியான ருசி வேற எதலையும் கிடைக்காது மாமா.
முத்து பேச பேச அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. இப்படியான நல்ல உள்ளங்களைதான் தவறாக நினைத்து விட்டோமே என்ற மிகப்பெரிய வருத்தம் அவனுள்.
சொக்கனின் நினைவை கலைப்பது போல, வந்து விழுந்தது சரோஜாவின் பேச்சு, அவரை சாப்பிட விடுடா, தொணதொணன்னு பேசிட்டே இருந்தா எப்படி சாப்பிடுவார் என்றார். சற்று அதட்டாளாக,
விடுங்க அத்தை,அவர் பேசறது தொந்தரவு பண்றதா இல்லை. எனக்கு சந்தோசமா இருக்கு, என்றவன் அப்பொழுது தான் அத்தை மாமா எங்க அவரையும் கூப்பிடுங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றான்.
இருக்கட்டும் மாப்ள நீங்க சாப்பிடுங்க.
அவங்களை கூப்பிட்டா மட்டுமே நான் சாப்பிடுவேன் என்றான் இவனும் விடாப்பிட்டியாக,
என்னங்க இப்படி அடம் பிடிக்கறிங்க?
ஆசையாக இருக்கும் அன்னம். ப்ளீஸ் இன்னைக்கி ஒரு நாள் மட்டும் என்றான் கெஞ்சுதலாக,
அவனின் ஆசையை புரிந்து கொண்டவள், தாயிடம் கண்களாலே எடுத்துறைக்க அன்றைய இரவு உணவு அசைவத்தில் துவங்கி சைவத்தில் அதாவது வெற்றிலை பாக்குடன் நிறைவு பெற்றது.
தாயின் தவிப்பு பெண் இல்லற வாழ்க்கையில் இணைந்தாளா? என்பதுதான்
இதை அவளிடம் கேட்கவும் முடியாது என்று யோசித்தவர், முத்துவிடம் சொல்லி மொதராத்திரிக்கி தேவையான பால், பழம், பூ அனைத்தையும் வாங்கிவர சொன்னார்.
சரோஜா ஒருபுறம் தயார் செய்ய அதன் அர்தங்களை புரிந்த சொக்கனும் அமைதியாக இருந்தான்.
இரவு மணி எட்டை நெருங்கியது, நிலவு மகள் தன் காதலனை காண யாருக்கும் தெரியாமல் தேடிபோகும் நேரம் முத்து,அன்னம், சொக்கன் மாறி மாறி பேசிகொண்டிருக்க,
இவன் ஒருத்தன் நேரம் காலம் புரியாம அவங்களோட பேசிட்டிருக்கான் என்று கடிந்தவர், முத்து நேரமாவுது, போய் தூங்கு, இப்ப உறுங்கனாதான் வெள்ளன எழுந்திரிக்க முடியும், பால் வண்டிக்கு கொண்டு போய்ட்டு கொடுக்க முடியும் என்றார்.
சரிங்க சித்தி என்றவன் கிளம்பிவிட்டான்.
அன்னத்தை உள்ளே அழைத்தவர் புது புடிவையை கொடுத்து இத நீ கட்டிக்க, அவருக்கு இந்த உடுப்ப குடு நானும் உன் அப்பாவும் பக்கத்துல பெரியம்மா வீட்ல இருக்கோம். காலைல வரோம். அவருக்கு புடிச்ச மாதிரி நடந்துகம்மா அன்னம்,
என்ன சொல்லிட்டே இருக்கேன் அமைதியா இருக்க,
சரிங்கம்மா என்றவள் வெட்கத்தோடு உள்ளே சென்று விட்டாள்.
உன் பெயர் வைத்த தலையனைக்கு…
விடுமுறை இன்று அளித்திடவா…
தினம் தினம் இரவின் பரிசுகளை…
நேரினில் இன்று கொடுத்திடவா வரம்பு மீறாத குறும்புகளால்…
நிரம்பி வழிகிற நேரம் இது…
மெளனம் காணாத நாழிகையில்…
வானம் பொழிகின்ற பாடல் இது…
முதலிரவு நடக்குமா?
அத்தியாயம்-3 -ல் பாருங்க மக்களே.
error: Content is protected !!