Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mister Rascal

Mister Rascal 4

அந்த மருத்துவமனை வளாகமே காக்கிசட்டைகளால் நிரம்பி வழிந்தது.  புறநோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உள்நோயாளிகளை சந்திக்க வருபவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

 

மொத்த மருத்துவமனையும் காக்கிகளின் கண்ட்ரோலில் இருக்க, அவசரமாய் வந்து நின்ற காரில் இருந்து நிதானமாய் இறங்கினான் ரகுனந்தபூபதி.



Advertisement

 

காக்கி பேண்டுக்கு மேல் கலர் சட்டை அணிந்திருந்தான். கண்களில் கூலரும், வாயில் எப்போதும் போல ஒரு பேக்கட்டை கொட்டி மென்றுக்கொண்டிருந்தான்.

 

Advertisement

இறங்கி நின்றதும் நிமிர்ந்து அந்த வளாகத்தை அவன் நோட்டமிட, கைகள் இடுப்பு பெல்ட்டை அட்ஜஸ்ட் செய்தது.

Advertisement

 

அதற்குள் விக்கி இவனை கண்டுவிட்டு ஓடி வந்தான்.

 

Advertisement

“குட் மார்னிங் சார்!” அவன் சல்யுட் வைக்க, அவனை இருநொடிகள் பார்த்தவன்,

“கேஸ்’ல இவ்ளோ பெரிய எவிடென்ஸ ‘மர்கயா சாலா’ பண்ணிருக்காங்க! நீ ‘குட் மார்னிங்’ன்னு சொல்ற? இஸ் திஸ் அ ‘குட்’ மார்னிங்!?” இறுதி வரியை தன் கணீர் என்ற குரலில் அதட்டலாய் அவன் கேட்க, விக்கியின் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.

 

“இல்ல சார்… அது… விஷ்… காலைல!” திக்கி திணறி அவன் சொன்ன பதிலை நின்று கேட்க அவன் தயாராயில்லை.

 

முன்னோக்கி நடந்துக்கொண்டே, “வேர் இஸ் ஷைலு?” என்றான்.

 

விக்கிக்கு திக்’கென்று இருந்தது.

‘ஷைலு’வா?’

 

நின்று திரும்பியவன், “செவுடா நீ?” என்றான்.

 

உடனே விக்கி, “சார், மேடம் எவிடென்ஸ் ரூம்’ல தான் இருக்காங்க!” என்றான்.

 

எதிரில் ‘வணக்கம்’ வைத்த காக்கிகளை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் லிப்டுக்குள் புகுந்து அந்த பெண் இருந்த அறையை அவன் அடைய, கைரேகை நிபுணர் குழு அப்போது தான் உள்ளே நுழைந்திருந்தது.

 

அவர்களுக்கு பதில் வணக்கம் சொன்னவன், அறையை முழுவதும் பார்த்துவிட்டு பின்னே நின்ற விக்கியிடம் திரும்பி, “எங்கே ஷைலு?” என்றான்.

 

“சார்… இங்க தான் சார் இருந்தாங்க” என்றான் அவன் பதட்டமாய்.

 

“அப்படியா? சரி போ… போய் போலிஸ்ட்ட சொல்லி கண்டுப்பிடிச்சுட்டு வா!” என்றான் அவன்.

 

“ஓகே சார்!” என்றவன் உடனே ஓட, கண்ணில் இருந்து கூலர்சை கழட்டி, செல்பவனை பார்த்தவனுக்கு, ‘பைத்தியம்!’ என்றுதான் தோன்றியது.

 

“சார்!” பின்னே குரல் கேட்க திரும்பினான் பூபதி.

 

ஷைலஜா நின்றிருந்தாள்.

 

“எப்படி ஆச்சு?” என்றான் ஒற்றை வரியில்.

 

“உண்மையை சொல்லணும்’ன்னா….

தெரியல!” என்றாள்.

 

அவன் அந்த அறைக்குள் சென்றான்.

 

“உங்களுக்கு டிஸ்டர்ப் இருக்காது தானே?” அங்கிருந்த கைரேகை நிபுணர்களிடம் கேட்டு அவர்கள் ஒப்புதலுடன் அங்கே உலவ ஆரம்பித்தான்.

 

தலைமை மருத்துவர் பயத்துடனே அறை வாயிலில் வந்து நின்றார்.

 

“சார்… நாங்க ரொம்ப கவனமா தான் பாத்துக்கிட்டோம்! நீங்க வந்து போன பிறகு இங்கே யாருமே வரலை! சிசிடிவி புட்டேஜ் கூட இருக்கு… மேடம் இப்போதான் செக் பண்ணாங்க!” என்றார் ஷைலஜாவை காட்டி.

 

அவன் அவளை பார்க்க, “செக் பண்ணிட்டேன்!” என்றாள் அவள்.

 

“தென், இது எப்படி நடந்துச்சு டாக்டர்? கோமா’ல இருந்த பொண்ணு எழுந்துரிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாளோ?” வெகு தீவிரமான பாவனையில் அவன் கேட்டதில் அந்த மருத்துவருக்கு இன்னமும் கிலி பிடித்தது.

 

“சார், ஐ… ஐ ஆக்ட்சுவலி டோன்ட் க்நொவ் சார்!” என்றார்.

 

“நைட் இங்க டியூட்டி’ல இருந்தது யாரு?”

 

அந்த மருத்துவருக்கு பின்னே சற்று தள்ளி நின்றிருந்த இரு பெண்களும் ஒரு ஆணும் முன்னே வந்தனர் நடுக்கத்துடன்.

 

“மூணு பேரும் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” நிதானமாய் கேட்டான்.

 

“சார், அவங்களுக்கு ட்ரிப்ஸ் அப்போதான் சேஞ் பண்ணோம்! ஈசிஜி மானிட்டர் பண்ணிட்டு, பல்ஸ் செக் பண்ணிட்டு, எல்லாம் நார்மல்’லா இருக்குன்னதும் இங்கிருந்து வெளில வந்துட்டோம்!

ஒரு மணி நேரம் கழிச்சு திரும்ப செக் பண்ணப்போறப்போ தான் ஹார்ட் பீட் இல்லன்னு தெரிஞ்சுது!” அந்த டியூட்டி டாக்டர் ‘விட்டால் அழுதுவிடுவேன்!’ என்பதை போல சொல்ல,

 

“தெரிஞ்சதுமே என்கிட்ட ஏன் சொல்லல?” என்றான்.

 

“அவங்களுக்கு சிபிஆர் குடுத்துட்டு இருந்தோம்! முதலுதவி எல்லாமே செஞ்சு பார்த்தும் பிழைக்கலன்னதும் உங்களுக்கு கூப்பிட்டோம் சார்!” என்றார் தலைமை மருத்துவர்.

 

“அட்டாப்சி ரிபோர்ட் எங்கே?”

 

ஷைலஜா அவன் கரத்தில் கொடுத்தாள்.

 

வாங்கி பார்த்தவன், “யாருமே வந்து போகாத இடத்துல, ஒரு உயிர் போயிருக்கு, அதுவும் விஷம் ஏறி!!! எப்படி?” என்றான்.

 

அது தெரியாமல் தானே அத்தனை பேரும் முழித்துக்கொண்டு நிற்கின்றனர்.

 

“ஷைலு, உனக்கு எதாவது தோணுதா?”

 

“சார், மனுஷங்க யாரும் வரல… ஆனா, எதாவது ரெப்டைல்ஸ்?”

 

“ரெப்டைல்ஸ்?” என்று கேட்டவன், “யூ மீன் பாம்பு!?” என்று நகைக்க,

 

“சார்… வேற எப்படியுமே யோசிக்க முடியல” என்றவள்,

“கொலை பண்ண வந்தவன் இந்த வாசல் வழியா வர முடியாது… நம்ம செக்யுரிட்டி இருந்தாங்க! இதைவிட்டா அந்த ஜன்னல் மட்டும் தான்! அது வழியா உள்ளே நுழைய முடியாது! அப்படி இருக்கப்போ அவன் ஏன் அதுல ஒரு பாம்பை தூக்கி போட்டுருக்கக்கூடாது?” என்றாள்.

 

பூபதி மருத்துவரை பார்த்தான்.

 

“சார், சான்சஸ் இருக்கு! ஆனா, இது பாம்பு விஷம் இல்லை!” என்றார்.

 

மூச்சை இழுத்து, ‘உப்ப்!’ என்று விட்டவன், ஷைலஜாவை பார்த்தான்.

 

அங்கே ஆராய்ந்துக்கொண்டிருந்த நிபுணர்களிடம் சென்று, “எனி க்ளூஸ்?” என்று கேட்க,

“சோ ஃபார்! நத்திங் சார்!” என்றனர்.

 

“ஹும்!” என்ற சலிப்போடு அறையை ஒவ்வொரு இடமாய் அளவெடுக்க ஆரம்பித்தான். ஷைலஜாவும் தன் பங்கிற்கு தேட, மருத்துவர்கள் கையை பிசைந்துக்கொண்டு தவிப்போடு நின்றனர்.

 

டிஐஜி வேறு காலை முதலே அவனுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அழைப்பு வர, எரிச்சல் வந்தது அவனுக்கு.

 

மூச்சு வாங்க ஓடி வந்த விக்கி, நின்றிருந்த மருத்துவர்களை வேகவேகமாய் விலக்கி, “சார், சைலஜா மேடம் மிஸ்ஸிங்!” என்று கத்த, அவனை நோக்கி தன் மொபைலை வீசினான் பூபதி.

 

“போய் இதை காணாப்போட்டுட்டு வா!” என்றான் கடுப்பாய்.

 

“சார்… மேடம்?” அவன் இழுக்க, சுவரோரமாய் நின்றிருந்த ஷைலஜாவிடம், “எப்படி இவனை போய்… அதுவும் அசிஸ்டென்ட்’டா?” என்று கேட்டவன் விட்ட ஆராய்ச்சியை துவங்கியிருக்க, ஷைலஜாவின் கேவலமான பார்வை வீச்சை காண சகிக்காது துரிதமாய் நகர்ந்துவிட்டான் விக்கி.

 

அந்த பெண் படுத்திருந்த கட்டிலை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு இடமாய் ஊன்றி கவனித்தவன் மெதுவாய் கீழே குனிந்து அடிபாகத்தையும் நோட்டம் விட, கட்டிலின் கால் பக்கத்தில் ஓரமாய் எதுவோ ஒன்று அவன் கண்ணில் பட்டது.

 

கண்ணை திருப்பாமல், “ஷைலு?” என்று கை நீட்ட, அவன் குறிப்புணர்ந்து, மொபைல் டார்ச்சை இயக்கி கொடுத்தாள் அவள்.

 

சில நொடிகளில் அங்கிருந்த நிபுணர் குழுவை அழைத்து, கவனமாய் அதை வெளியே எடுக்க சொன்னான்.

 

ஒரு கவரில் அதை போட்டு பத்திரமாய் அவனிடம் நீட்டினர். அங்கிருந்த அனைவருமே அதை ஆச்சர்யமாய் நோக்க,

 

ஷைலு, “சிலந்தி மாதிரி இருக்கே சார்! ஆனா, வித்தியாசமா!” என்றாள்.

 

ஆமோதித்தவன், “இதை டெஸ்ட் பண்ணுங்க! இதோட விஷம் தான் அந்த பொண்ணு உடம்புல இருந்ததா’ன்னு உடனே பண்ணி சொல்லுங்க! குவிக்… குவிக்…!” என்று சொடுக்க்கிட, அவன் சொன்னதை செயல்படுத்த விரைந்தனர் அவர்கள்.

 

யோசனையில் அப்படியே நின்றிருந்தான் அவன்.

 

“இருந்த ஒரே எவிடென்ஸ் சார்!” ஷைலஜாவின் குரலில் திரும்பியவன் லேசாக சிரித்தான்.

 

“இதுக்கூட நமக்கு எவிடென்ஸ் தான்!” என்றான்.

 

அவளும் அதை உணர்ந்து தலையாட்ட, “மினிஸ்டர் அப்பாய்ட்மென்ட் என்னாச்சு?” என்றான்.

 

“ஹி இஸ் ரெடி டு மீட் யூ அட் எனி டைம்!”

 

“குட்… அப்போ இப்போவே போலாம்!” என்றவன், அடுத்த சில மணித்துளிகளில் ஷைலஜாவுடன் நிதியமைச்சர் பாஸ்கரனின் வீட்டில் இருந்தான்.

 

அவருக்கு எதிரே சோபாவில் அமர்ந்திருந்தவன், “உங்களுக்கு யார்மேல சந்தேகம்?” என்றான்.

 

அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருந்தார் அவர்.

 

“சொல்லுங்க சார்!”

 

“எல்லார்மேலையும் சந்தேகமா இருக்கு! நான் பாக்குற எல்லார்மேலையும் சந்தேகமா இருக்கு!” என்று கத்தியவர், குரல் கமற, “ஒத்த புள்ளையா அவன்! தவமா தவமிருந்து பெத்த என் ஒரே புள்ள! அவனை கொன்னவன் எவனும் உயிரோட இருக்கவே கூடாது!” என்று ஆக்ரோஷமாய் சத்தம் போட்டவர்,

 

“எவன் கொன்னான்னு சீக்கிரமே கண்டுப்பிடிச்சு, பார்த்த இடத்துல அவனை சுட்டு பொசுக்குங்க! ஐஜி’கிட்ட சொல்லி அதுக்கு நான் ஆர்டர் வாங்கி தரேன்!” என்றார் ஆவேசத்துடன்.

 

பூபதி அயர்வாய் ஷைலஜாவை பார்த்தான்.

 

அவள், “சார், இவ்ளோ எமோஷனல்’லானா எங்களால எங்க தகவலும் உங்ககிட்ட இருந்து வாங்க முடியாது! அப்பறம் கேஸ் எப்படி முடியும் சொல்லுங்க?” என்றாள்.

 

அவள் பேசவும் இன்னமும் கொதித்தார் அவர்.

 

“நீ பேசாத! என் புள்ளையை கொன்னவனை கண்டுப்பிடின்னா கண்ட கருமாந்திர கேஸ் எல்லாம் கண்டுப்பிடிச்சு டிவி’ல பேட்டி குடுத்துட்டு திரிவ! பொம்பளை உன்னை நம்பி இந்த கேஸை குடுத்தேன் பாரு! என்னை சொல்லணும்!”

 

அவர் பேசியதில் அவள் முகம் கோபத்திலும் அவமானத்திலும் சிவந்து கருத்தது.

 

“உங்க கஸ்டடில இருந்த பொண்ணு இப்போ செத்துட்டா! தெரியும்’ல?” என்றான் பூபதி.

 

“தெரியும்!” என்றார்.

 

“நீங்க தான் அவளை கொன்னீங்களா?” அவன் இப்படி கேட்க ஷைலஜாவே திடுக்கிட்டால் என்றால், அமைச்சரை கேட்கவும் தேவையில்லை.

 

“என்ன பேசுற போலீசு?” உறுமலாய் கேட்டார்.

 

“பின்ன உங்க பாதுகாப்புல இருந்த பொண்ணு எப்படி சாகும்?”

 

“அதுதானே எனக்கே சந்தேகம்! என்னை மீறி உள்ள நுழையுற அளவு எவனுக்கு தைரியம்ன்னு தான் தெரியல!”

 

“அப்போ உங்களை விட வசதி கம்மியான இடமா பையன் பிடிச்சுட்டான்னு கோபத்துல நீங்க கொல்லல?” என்று மறுபடி கேட்க, அதீத கோபத்தில் அமைச்சர் பற்களை நறநறப்பது ஷைலஜாவிற்கே கேட்டது.

 

“சரி, உங்களுக்கு சின்ன வீடு எதுவும் இருக்கா? ஒருவேளை உங்க ரெண்டாம் பொண்டாட்டி பசங்க சொத்து பிரச்சனைல கையை வச்சுருப்பானுங்களோ?” என்று கேட்க, எழுந்தே நின்றுவிட்டார் அமைச்சர்.

 

“என்னய்யா நினைச்சுட்டு இருக்க நீ? சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் கேட்ப்பியா?” அவர் எகிற, இவர்கள் சந்திப்பு தனிமையில் நடப்பதால் அவரது அல்லக்கைகள் எல்லாம் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தது.

 

“எதுக்கு டென்சன் ஆகுறீங்க? கூல்!” என்றவன், “சோ, சொத்து தகராறு இல்லை! பொண்ணு பிடிக்காம நீங்களும் பண்ணல! அப்போ வேற என்னவா இருக்கும்?” என்றான் யோசனை போல…

 

அமைச்சர் சற்று நிதானமாகி இருக்கையில் அமர, “உங்க பையனை கொன்ன அதே ரோட்’ல தான் ஆறு மாசம் முன்ன உங்க கட்சி சார்புல எலக்ஷனுக்காக உங்காளுங்க கொண்டு போன பணம் திருடு போச்சாமே!” என்று அவன் கேட்டதும் அமைச்சரின் முகம் வெளிறி போனது.

 

“அதுக்கும் உங்க பையனுக்கும் எதாவது தொடர்பு இருக்குமா சார்!?” அவன் கேட்க,

 

படபடத்து வியர்வை அரும்ப ஆரம்பித்தது அவருக்கு.

 

ஷைலஜா இதையெல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

“சொல்லுங்க சார்!?” என்றவன்,

 

“அமவுண்ட் பெருசுங்குறதால வெளில தெரிஞ்சா கட்சி பேரு நாறிடும்ன்னு மீடியா, போலிஸ்னு எங்கயும் வராம, உள்ளுக்குள்ளயே பேசி, உருட்டி பிரட்டி முடிச்சு விட்டுட்டீங்க! காசு திருடு போன மூணே மாசத்துல அதே இடத்துல உங்க புள்ள செத்துபோய்ருக்கான்… அதாவது கொலை செய்யப்பட்டுருக்கான்! எங்கயோ இடிக்குறமாதிரி இல்ல?” என்றதும், அமைச்சரின் படபடப்பு அதிகமாகி வியர்வை அருவியாய் கொட்ட ஆரம்பித்தது.     

 

சில நொடிகளில் அவர் மூச்சு விடவே சிரமப்பட, அவர் நிலையை கண்டு பதறிய ஷைலஜா, வெளியே ஓடினாள் ஆட்களை அழைக்க.

 

நிதானமாய் இருக்கையை விட்டு எழுந்த பூபதி, “நீங்க பேசுற நிலைல இல்ல போல! சரி, நம்ம அப்பறம் பேசுவோம்!” என்றுவிட்டு,

 

“அந்த ‘ஷூட் அட் சைட்’ ஆர்டர் மட்டும் மறந்துடாதீங்க! ஆளை கண்டுப்பிடிச்சதும் ‘பொட்டு’ன்னு போடணும்!” என்றான்.

 

ஷைலஜா உள்ளே விரைந்து வந்தாள்.

 

“டாக்டர் வந்துட்டு இருக்காரு!” என்றாள் பதட்டமாய்.

 

“கூல் ஷைலுமா! அவருக்கு தண்ணி குடிச்சா சரியா போய்டும்! நம்ம இன்னொரு நாள் வருவோம், வா!” என்று அவளை கையோடு இழுத்துக்கொண்டு வெளியேற, அமைச்சரின் ஆட்கள் எல்லாம் உள்ளே ஓடினர்.

 

“சார், என்ன நீங்க? என்னென்னவோ சொல்றீங்க?” வெளியே வந்தவனிடம் அதிர்ச்சியுடன் கேட்டாள் அவள்.

 

மிதமாய் புன்னகைத்தவன், பேக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை வாயில் கொட்டினான்.

 

ஷைலஜாவின் மொபைல் அதிர்ந்தது.

 

“சார்… ஹாஸ்பிடல்’ல இருந்து கால்!”

 

அவன் “ஸ்பீக்கர்!” என்றதும், அவள் உயிர்ப்பித்து ஸ்பீக்கரில் போட,

 

“சார், வீ ஃபவுன்ட் இட் அவுட்!” என்றார் மருத்துவர்.

 

“நீங்க கெஸ் பண்ணமாதிரியே அந்த சிலந்தி கடிச்சு தான் அந்த பொண்ணு இறந்துருக்காங்க!” என்றார்.

 

ஷைலஜாவிற்கு மண்டை குழம்பியது.

 

“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்றாள்.

 

“மேடம், இது ‘பிரெசீலியன் வாண்டரிங் ஸ்பைடர்!’ இது கடிச்சா ஒருமணி நேரத்திற்கு உடம்பு விரைப்புத்தன்மையோட இருக்கு… அதுக்கு பிறகு சாவு நிச்சயம்…!” என்றவர்,

 

“இது கடிச்சதும் உடம்புல இருக்க இரத்தகுழாய் சுருங்கியோ, இல்லனா விரிவடைன்ஜோ ரத்தம் ஓட்டம் சீர்கெட்டு இதயத்தை பாதிச்சு, அது மூலமா இறப்பு நடக்கும்!” என்றார்.

 

கேட்டுக்கொண்டிருந்த ஷைலஜாவிற்கு இதெல்லாம் அதிசயமாய் இருக்க, பூபதி இயல்பாய் இருந்தான்.

 

“ஆனா சார், இது ரொம்ப ‘ரேர்’ டைப்! நம்ம ஊருல… அதுலயும் ஹாஸ்பிடல்’க்கு எப்படி வந்துருக்கும்!?” என்றார் மருத்துவர்.

 

பூபதி அழைப்பை துண்டிக்க சொல்லி சைகை காட்ட, ஷைலஜா அதை செய்ததும், “நம்ம போற ரூட்டு கரெக்ட்டு’ன்னு கொலைகாரனே சொல்லிட்டான்!” என்றான்.

 

ஷைலஜா அமைதியாய் இருந்தாள்.

 

“என்ன மேடம் யோசனை!?” என்றான் அவன்.

 

அவனை சில நொடிகள் ஊன்றி பார்த்தவள்,

 

“படத்துல கதைல எல்லாம் ஒரு ஹீரோ வருவான். யார் கண்ணுக்கும் தெரியாதது அவனுக்கு மட்டும் தெரியும்… யாராலையும் கண்டுப்பிடிக்க முடியாது எல்லாம் அவன் ஈசியா கண்டுப்பிடிப்பான்!” என்று நிறுத்தியவள்,

 

“உங்களை பாக்குறப்போ எனக்கு இப்ப அப்டி தான் இருக்கு!” என்றாள்.

 

சத்தமாய் சிரித்தவன், “என்னை ‘ஹீரோ’ன்னு சொல்றியா?” என்றான்.

 

அவள் ஒன்றும் சொல்லாமல் அவனை பார்க்க,

“என்னை ஹீரோ’ன்னு எல்லாம் அவ்ளோ சீக்கிரமா டிசைட் பண்ணிடாத! நான் ரொம்ப டேஞ்சர்!” என்றவன்,

 

“வேணுனா ‘ஆன்டி ஹீரோ’ன்னு சொல்லு!” என்றான்.

 

அவள் எள்ளலாய் சிரிப்பது போல தெரிந்தது அவனுக்கு.

 

அவளை சற்று நெருங்கியவன், “நம்பல’ல நீ? ஒருநாள் நம்புவ! இவன் நிஜமாவே ‘ஆன்டி ஹீரோ’ தான்னு உன் கண்ணு சொல்லும் என்கிட்ட! அன்னைக்கு பாக்குறேன்!” என்று புதிராய் பேசியவன் காரில் ஏறிவிட்டான்.

 

‘இவனை எந்த வகைல சேர்ப்பது?’ என்ற குழப்பம் தான் அவளுக்கு தலை முழுவதும்!           

 

    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!