Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 12.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சஞ்சனாவிடம் ஏதோ கேட்பதற்காக வந்த கலைவாணி சுகந்தன் சாதனா இருவரையும் அங்கு ஒன்றாக பார்த்ததும் அதிர்ச்சியானார்.

 

சஞ்சனாவிடம்



Advertisement

 

இவன் எங்க இங்க வந்தான்?” என்று ஆச்சரியமும் கோபமுமாக கேட்டார் கலைவாணி.

 

Advertisement

“அம்மா அவர் அக்காவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு போகலாம்னு வந்திருக்கிறார்nu நினைக்கிறேன்.”

Advertisement

 

“என்னடி சொல்ற? ஆமாம்  அம்மா. கோபப்படாதீங்க. அக்காவை நான் இந்த ரெண்டு வருஷமா பாத்துட்டு தான் இருக்கேன். வெளியில சிரிச்சு பேசினாலும் தனியாய் இருக்கும் போது எப்பவுமே அவள் முகத்தில் சோகம் மட்டும் தான் இருக்கு.

இனிமேலாவது அவள் மனசார சந்தோசமாய் இருக்கட்டும்.

Advertisement

அம்மா நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீர்கள். இது புருஷன் பொண்டாட்டி விஷயம். அவங்க அவங்க பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளட்டும். நீங்க கண்டுக்காம இருந்தா போதும். ” என்றாள் சஞ்சனா.

 

கலைவாணி  யோசித்தார். சஞ்சனா சொல்வது சரி என்றே தோன்றியது எனவே  அமைதி ஆனார்.

 

மேடையில் தமிழில் சொற்பொழிவு ஆற்றிய அந்த 15 வயது பையன் தந்தையுடன் கார்த்திக்  இடம் பேசிக்கொண்டிருந்தான்.

 

அங்கு வந்த சுகந்தன் அவனைப் பார்த்து நல்லா பேசின. எப்படி தமிழ் கத்துக்கிட்ட?” என்று கேட்டான்.

 

“எங்க தமிழ்  ஸ்கூலில் தான்.” என்றான் அவன்.

 

“எங்க அப்பா கூட அங்க வாலண்டியர் பண்றார்.”

 

“ஓ அப்படியா?” என்று என் தந்தையை பார்த்தான் சுகந்தன்.

 

“நீங்க அங்க டீச்சரா வொர்க் பண்றீங்களா?”

 

“இல்லை நான் அட்மின்ல இருக்கேன்.”

 

“ஓ ரொம்ப நல்ல வேலை பண்ணிட்டு இருக்கீங்க. எத்தனை வருஷமா வாலண்டியர் பண்றீங்க?”

 

“நான் அஞ்சு வருஷமா  செய்றேன். நான் கூட வாலண்டியர் பண்ணனும்னு நினைக்கிறேன். எனக்கு கொஞ்சம் டீடைல் கொடுங்க.”

 

“தமிழ் ஸ்கூல் ஞாயிற்று கிழமையில்  3 மணியிலிருந்து அஞ்சு மணி வரைக்கும் நடக்கும். இதுல மழலை அதாவது கிண்டர் கார்டனில் இருந்து கிளாஸ் இருக்கு. நான் உங்களுக்கு ஒரு மெயில்  அட்ரஸ் கொடுக்கிறேன். அந்த அட்ரஸ்க்கு மெயில் அனுப்புங்க. அவங்க உங்கள கூப்பிடுவாங்க.” என்று ஒரு மெயில் அட்ரஸ் கொடுத்தார் .

 

“தேங்க்யூ.” என்று விட்டு அந்த அட்ரஸ்க்கு மெயில் அனுப்பினான்.

 

தன் அறைக்குள் வந்த சாதனாவின் காதுகளில் சுகந்தன்  பேசியது ஞாபகம் வந்தது.

 

கண்ணாடி முன் நின்று  தன்னை இப்படி அப்படி திருப்பி பார்த்துகொண்டாள்.

‘இந்த புடவையில நிஜமாவே அழகா தான்  இருக்கிறோம். இந்த ஜிமிக்கி கூட நமக்கு ரொம்ப பொருத்தமா தான் இருக்கு.’ என்று மீண்டும் அதனை தொட்டு ஆட்டிவிட்டாள்.

 

அவன் விரல் பட்ட அவள் கண்ணம் சிவந்திருந்தது. அவனது தொடுகை  அவளுக்கு எதை எதையோ ஞாபகப்படுத்தியது. அவனது  கொஞ்சல், கெஞ்சல், மிஞ்சல் என்று அனைத்தும் காட்சிகளாக கண் முன் வந்து வந்து போனது.

 

 

சுகந்தன் அந்த பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தான். அமெரிக்காவில் நுழைந்த பிறகு முதன்முறையாக ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து தமிழில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

“என் பெயர் சுகந்தன். என்னை இங்க வர சொல்லி இருக்காங்க.”  என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தீபாவளி  விழாவில் பார்த்த அவர் அங்கு வந்தார்.

 

“வாங்க சுகந்தன்.” என்று அவரை அழைத்துக் கொண்டு உள்ளே  சென்று வேறு ஒரு பெண்மணியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

 

“இவங்க தான் இந்த ஸ்கூலை நடத்துறாங்க. இவங்க பெயர் மகாலட்சுமி.” என்றார்.

 

அந்தப் பெண்மணி “வணக்கம்” சொல்ல கந்தனும் “வணக்கம்” சொன்னான்.

சுகந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

“ நான்காம் நிலை வகுப்பில் அஸிஸ்டன்ட் டீச்சர் இடம் காலியா இருக்கு. நீங்க அங்கு போறீங்களா?” என்று கேட்டார் மஹாலட்சுமி.

 

“எனக்கு ஓகே .” என்றான் சுகந்தன்.

 

“சரி என் கூட வாங்க.” என்று அவனை  அந்த வகுப்பிற்கு அழைத்து சென்றார்.

சிறுவர் சிறுமியர்கள் அமர்ந்திருந்தனர்.

 

“இதுதான் உங்க கிளாஸ். இங்க நீங்கள்  அட்டெண்டன்ஸ், வீட்டுப்பாடம் திருத்துவது அப்புறம் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. இந்த மாதிரி வேலை செய்யணும். இன்னும் மெயின் டீச்சர் வரல. நீங்க பசங்க சத்தம் போடாம பார்த்துக்கோங்க. அவங்க அஞ்சு நிமிஷத்துல வந்திடுவாங்க.” என்று விட்டு சென்றார்.

 

சுகந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கிருந்த குழந்தைகளிடம் பெயர் கேட்டுக்கொண்டிருந்தான்.

 

அப்போது வகுப்பின் கதவில் யாரோ தட்ட கதவை திறந்தான்.

 

அங்கு நின்றிருந்தாள் சாதனா. அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். அவள்தான்! அவள் அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

‘இவள் எப்படி இங்க?’ என்று நினைத்ததை கேட்கும் விதமாக

“நீ…”என்று ஆரம்பித்தான்.

 

அவள் இடை புகுந்து “நீ எங்க இங்க வந்த? இது ஸ்கூல். குழந்தைங்க படிக்கிற இடம்.” என்று வார்த்தைகளை பற்களுக்கு நடுவில் கடித்தபடி கோபமாக சொன்னாள்.

 

“ஸ்கூல்ல படிக்கிற இடம்னு எனக்கு தெரியாது பாரு.” என்றான் அவன் அலட்சியமாக.

 

“உனக்கு தெரியிற மாதிரி எனக்கு தெரியல. இல்லனா என்னைத்தேடி இங்க  வந்து இருப்பாயா?” என்று கோபம் குறையாமல் கேட்டாள்.

 

“யாரு? நான் உன்னை தேடி இங்க வந்தேன்! உனக்கு தெரியுமா? நீ இங்க வாலண்டியர் பண்றதே எனக்கு இப்பதான் தெரியும். அப்படி இருக்கும்போது நான் எப்படி உன்னை தேடி இங்க வருவேன்? இன்னும் கேட்டால் இந்த உலகமே உன்னை  தான் சுத்துதுன்னு சொல்லுவ போல இருக்கே?” என்றான் எகத்தாளமாக.

 

அவள் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“நான் இன்னிக்கு இங்க அசிஸ்டன்ட் டீச்சரா ஜாயின் பண்ணி இருக்கேன்.

 

உனக்கு நம்பிக்கை இல்லைன்னா அட்மின்ல போய் கேட்டு பாரு.” என்றான் தெளிவாக.

 

அவன் சொன்னதை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் சாதனா.

 

“நிஜமாத்தான்  சொல்றானா?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மகாலட்சுமி

“இந்தாங்க சுகந்தன். அட்டெண்டன்ஸ் ஷீட்.” என்று கொடுத்ததும் அவளுக்கு எல்லாம் உண்மைதான் என்று புரிந்து போனது.

 

அவர் சென்றதும் அவனிடம்

“இது ஸ்கூல். வந்த வேலையை மட்டும் செஞ்சா நல்லா இருக்கும். தேவையில்லாத பேச்சு வேண்டாம்.” என்றாள் கண்டிப்பான குரலில்.

 

“டீச்சரம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல இருக்கு.” என்று வாய்விட்டு சொல்லிவிட்டு அட்டெண்டன்ஸ் எடுத்தான்.

நீராரும் கடலுடுத்த…..” என்று ஆரம்பித்து தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிவிட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்தாள்.

“பசங்களா திருக்குறள் படிக்கலாம் . புக்கு எடுங்க.” என்றாள் சாதனா.

 

அதைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்கள் பையிலிருந்து புத்தகத்தை   பிரித்து வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தனர்.

 

“நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

 

பசங்களா இந்த குரலோட மீனிங் உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டாள் சாதனா.

 

“தெரியாது” என்று குரல் கொடுத்தனர் மாணவர்கள்.

 

இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. அந்த தண்ணீர் நமக்கு எப்படி கிடைக்குது சொல்லுங்க.” என்று கேட்டாள்.

 

ஒருவன் “டேப்ல இருந்து கிடைக்கும்.” என்றான்.

 

“டாடி வால்மார்ட்டில் இருந்து மினரல் வாட்டர் வாங்கிட்டு வருவாங்க.” என்றாள் ஒரு சிறுமி.

 

“சரி. அப்புறம் நேச்சுரலா எப்படி கிடைக்கும்?” என்றதும்

ஒரு சிறுமி ரெயின் என்றாள்.

 

“கரெக்ட் மழ!. மழை நமக்கு தண்ணீர் கொடுக்கும். அதைத்தான் இந்தக் குறளில் சொல்லி இருக்கிறார் திருவள்ளுவர். இப்போ நான் போர்டில் எழுதுவதை நீங்க உங்க நோட்புக்ல எழுதுங்க.’ என்றுவிட்டு அந்தக் குரலை எழுதினாள் சாதனா.

 

அப்போது கந்தன்  “அச்சு”  என்று தும்பினான்.

 

மாணவர்கள் அவனை திரும்பிப் பார்த்து

“பிளஸ் யூ” என்றனர்.

 

சாதனா அவனை பார்த்து முறைத்தாள்.

 

அவன் “சாரி” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு அவளை கெஞ்சலாக பார்த்தான்.

 

அவள் அவன் மீது இருந்த பார்வையை திருப்பி தன் வேலையை தொடர்ந்தாள்.

 

அந்த போர்டில் எழுதி முடித்தவள் மாணவர்கள் ஒழுங்காக எழுதுகிறார்களா என்று அவர்கள் நோட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அப்போது மீண்டும் “அச்சு” என்று தும்பினான் சுகந்தன்.

 

சாதனா அவனிடம் வந்தாள்.

 

“இப்ப என்ன வேணும் உனக்கு?” என்று அவனைப் பார்த்து கேட்டாள். .

 

“எனக்கு ஒன்னும் வேண்டாம்.” என்றான் புரியாதவனாக.

 

ஏன் கேக்குற?” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

 

“இப்போ எதுக்கு தும்புகிற மாதிரி சத்தம் போட்டுட்டு இருக்க? பசங்க திரும்பி பார்க்கிறார்கள் இல்லை?” என்று கேட்டாள்.

 

“இது என்னடா வம்பா போச்சு? எனக்கு தும்மல் வந்தது. தும்மினேன். அது கூட தப்பா?” என்று கேட்டான்.

 

“நிஜமாவே தும்மல் வந்தால் பரவாயில்லை. சும்மா சத்தம் போட்டா தப்பு தான்.” என்றாள் எரிச்சலுடன்.

 

“அப்போ நான் தப்பு பண்ணல. நீ போய் உன் வேலையை பாரு. என் வேலையை என்னை பாக்க விடு.” என்றான்.

அவள் அவனை முறைத்துவிட்டு தன் இடத்திற்கு வந்து தன் வேலையை தொடர்ந்தாள்.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!