Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 12.2

அந்த வேலையை முடித்துவிட்டு அவனுக்கு அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் சாதனா.

மேஜையில் இருந்த வீட்டு பாடங்களை எடுத்து திருத்திக் கொண்டு இருந்தாள். அவனும் அதையே செய்து கொண்டிருந்தான்.

அப்போது இருவரும் சேர்ந்து ஒரு நோட்டை எடுத்தனர். இவன் விடுவான் என்று அவள் எதிர்பார்க்க அவள் விடுவாள் என்று இவன் எதிர்பார்க்க இருவரும் விடாமல் அந்த ஒரு நோட்டை பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவள் அந்த நோட்டை  விட்டு விட்டு



Advertisement

“என்னதான்  உன்னோட பிரச்சனை?” என்றாள்.

 

“சாரி நான் வேணும்னு பண்ணல.”  என்றான்.

Advertisement

 

Advertisement

எப்படியோ இருவரும் அன்றைய வேலையை முடித்துவிட்டு வெளியில் வந்தனர்.

மீண்டும் கந்தன் அச்சு என்று தும்மினான்.

 அதை கவனித்த அங்கு இருந்த இன்னொரு ஆசிரியர்

Advertisement

“பிளஸ் யூ” என்றார்.

ஆனால் இவள் அவனை முறைத்தாள்.

அவள் முறைத்ததை பார்த்த அவன்

எல்லோருக்கும் நான் கரெக்டா தான் தெரிகிறேன். உனக்கு மட்டும்தான் தப்பா தெரிகிறேன். என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு.” என்று விட்டு சென்றான்.

 

 

 

சாப்பாட்டை முடித்துவிட்டு அறைக்கு வந்தாள் சாதனா.

 

ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள். பெரும்பாலான மரங்கள் வெறும் கிளைகளுடன் காட்சியளித்தன. பெய்து முடித்திருந்த மழையினால் நனைந்திருந்த கிளைகளில் நீர்த்துளிகள் ஐஸ் கட்டிகளாக மாறி  கடும் குளிர் காலம் நடந்து கொண்டிருப்பதை அறிவித்தது.

 

அறைக்கு வந்த சாதனா அந்த கண்ணாடி  ஜன்னல் மீது தன் கையை வைத்த படி மழையை வெறித்துக் கொண்டிருந்தாள்.  கைவிரல்கள்  சில்லென்று ஆகிவிட கையை கண்ணாடி ஜன்னலில் இருந்து எடுத்து இரண்டு கைகளையும் சேர்த்து தேய்த்து வெப்பம் ஊட்டினாள்.

 

தீபாவளி பார்ட்டி அன்று எடுத்த புகைப்படங்களை அவள் கைபேசியில் இன்னொரு தரம் எடுத்து பார்த்தாள். அதில் அவள் அழகாக தெரிந்தாள். ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு இருந்தவள் கண்களில் ஒரு புகைப்படத்தில் சுகந்தன் தெரிந்தான். அவனை தமிழ்ப்பள்ளியில் பார்த்தது ஞாபகம் வந்தது.

 

“அச்சு அச்சு” என்று சுகந்தன் தும்மியது ஞாபகம் வந்தது.

‘ஏன் அவன் அப்படி தும்மினான்? உடம்பு சரியில்லாம போயிருக்குமா? இவனுக்கு வேற குளிர் ஒத்துக்காது.” என்று நினைத்தவள் கண் முன்பு அன்று நடந்தது ஞாபகம் வந்தது.

 

“அச்சு அச்சு” என்று சுகந்தன் வீட்டில் தும்மிக் கொண்டிருந்தான்

 

“நான் நேத்து  நைட் ஷோ போகும்போதே சொன்னேன். மார்கழி மாதம் குளிர் ஜாஸ்தியா இருக்கு. இந்த நேரத்துல வெளிய போக வேண்டாம். அவனுக்கு சளி பிடிக்கும்னு சொன்னேன். கேட்டியா?” என்று சாதனாவை பார்த்து கேட்டுக்கொண்டிருந்தார் தாமரை.

 

“அம்மா சாதாரண கோல்டு தானே. சரியா போயிடும் விடுங்க.” என்றான் சுகந்தன்.

 

“என்ன சாதாரண சலியா? இப்படி தான் உனக்கு ஆரம்பிக்கும். அப்புறம் ஒரு வாரம் ஜுரம் இருக்கும். நீ வேணா பாரு.” என்று சென்றுவிட்டாள் தாமரை.

 

சாதனா குற்ற உணர்ச்சியுடன் சுகந்தனை பார்த்தாள்.

 

“நீ சண்டே போகலாம்னு தான் சொன்னேன். நான்தான் கேட்காமல் நைட் ஷோ போகலாம்nu அடம் பிடிச்சு கூட்டிட்டு போனேன். நீ ஏன் என் கிட்ட உனக்கு குளிர் ஒத்துக்காதுnu சொல்லவே இல்ல?” என்று சிரிது சோகம் காட்டி கேட்டாள்  சாதனா.

 

“சாது நீ வேற  ஆரம்பிக்காத. சரியா போயிடும்.” என்றான் சுகந்தன்.

 

வெந்நீர் வைத்து சாதனா எடுத்து வந்து கொடுத்தாள். அதை வாங்கி அருந்திவிட்டு உறங்கினான் சுகந்தன்.

 

காலை எழுந்திருக்கும் போதே தாமரை சொன்னமாதிரி சுகந்தன் நல்ல ஜுரத்தில் இருந்தான்.

 

சாதனா அவன் நெற்றியை தொட்டுப் பார்த்துவிட்டு

“ஐயையோ ரொம்ப  சூடா இருக்கே.” என்றுவிட்டு ஒரு பருத்தித் துணியை எடுத்து  ஈரம் செய்து  நெற்றியில் ஒற்றி எடுத்தாள்.

 

சூடு குறையவே இல்லை.

 

“என்ன இவ்வளவு நேரம் ஆச்சு. இன்னுமா தூங்கிட்டு இருக்கான்?” என்றபடி அங்கு வந்தார் தாமரை.

 

அவன் இருந்த கோலத்தை பார்த்து புரிந்து கொண்டு நெற்றியில் கை வைத்து பார்த்து விட்டு

“நான்தான் நேத்தே சொன்னேன் இல்ல? பாரு. எப்படி ஜுரம் அடிக்கிது.” என்று சாதனாவை கேட்டார்.

 

“பகல்ல படம் பார்க்க  போகறதுக்கு என்ன? இப்படி நைட்ல தான் போகணுமா? கொஞ்சமாவது புருஷன் மேல அக்கறை இருந்தா தானே. நினைச்ச நேரத்துக்கு நினைச்சதை செய்யணும். யாருக்கு எந்த கஷ்டம் வந்தால் என்ன? நாம சந்தோஷமா நம்ம நினைச்சதை செஞ்சா போதும். அது எப்படி தான் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி இருக்க முடியாதோ? தெரியல.” என்று சாதனாவை திட்டி தீர்த்தார்.

 

சாதனாவுக்கு ஏற்கனவே  இருந்த குற்ற உணர்ச்சியுடன் இவரது பேச்சும் சேர்ந்துகொண்டு கண்ணீரை வர வைத்தது.

 

சுகந்தன் ஜுர மயக்கத்தில் இருந்ததால் இவரது  பேச்சு அவன் காதுகளை எட்டவில்லை.

 

“பெரியவங்க சொல்லும்போதே கேட்கணும். இப்போ அழுது என்ன பிரயோஜனம்? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம நடந்து கொண்டாலும் பைப்பை திறந்து விட்டது போல அழுவதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று அதற்கும் எரிச்சல் பட்டார் தாமரை.

 

கண்களை துடைத்துக்கொண்டாள் சாதனா.

 

“சரி சரி. இரு. நான் போய் அவங்க அப்பாவை கூட்டிட்டு வரேன்.” என்றுவிட்டு வாசுதேவனை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார்..

 

அவர் மகன் நெற்றியை தொட்டுப் பார்த்துவிட்டு

 

“நான் போய் ஆட்டோ பிடிச்சிட்டு வரேன்.” என்று சென்று ஆட்டோ உடன் வந்தார்.

 

சுகந்தன், சாதனா, தாமரை, வாசுதேவன் நால்வரும் மருத்துவமனை சென்றனர்.

 

மருத்துவர் அவனை பரிசோதித்துவிட்டு

“ஹோட்டலில் சாப்டீங்களா?” என்று கேட்டார்.

 

சாதனா தாமரையை ஒரு முறை பார்த்தாள்.

 

அவர் “என்னை எதுக்கு பார்க்கிற? அவருக்கு பதில் சொல்லு.” என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல

 

சாதனா “ஆமாம். ஐஸ்கிரீம் கூட சாப்பிட்டோம்.” என்றாள்.

 

தாமரை அவளை முறைத்தார்.

 

“இன்பெக்சன் ஆகி இருக்கு. ஃபீவர் ஒரு வாரம் இருக்கும். வைரல் ஃபீவர் . டெம்பரேச்சர் 100 டிகிரி தாண்டினால் இந்த மாத்திரை போடுங்க.” என்று மாத்திரை எழுதிக் கொடுத்தார்.

 

“அடிக்கடி டெம்பரேச்சர் செக் பண்ணி அதிகமானால்  மாத்திரை கொடுங்க.” என்றார்.

 

“ஓகே டாக்டர்.” என்று  அந்த மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு வீடு வந்தனர்.

 

வாசுதேவன் கடைக்கு சென்று அந்த மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்தார்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!