Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 6.2

‘சரி  பிஸியா இருந்திருப்பாங்க. அனுப்பவாங்க.’ என்று நினைத்தபடி வேலை செய்து கொண்டிருந்தான்.

 

நேரம் போனதே தவிர அவளிடமிருந்து எந்த ஈமெயிலும் அவனுக்கு வரவில்லை. அவனது இண்டர்காம் ஒலித்தது.பேசியது மேலாளர் தான்.

 



Advertisement

அவனை அவரது அறைக்கு அழைத்தார்.

 

அவன் அங்கு சென்றான்.

Advertisement

 

Advertisement

“Did you have a look at the file? you got the information needed?( நீங்கள் அந்த பைலை பார்த்தீர்களா? உங்களுக்கு தேவையான விபரங்களை கிடைத்ததா)?” என்று கேட்டார்.

 

அதே நேரம் உள்ளே நுழைந்த நேடலி காதுகளில் அது  விழுந்தது. அப்போதுதான் அவளுக்கு அவன் விபரம் கேட்டது ஞாபகம் வந்தது.

Advertisement

 

‘oh my God!. I forgot that!  Is this guy gonna tell that to the manager?  (அடக்கடவுளே நான் அதை மறந்து  போய்விட்டேன. இவன் இதை மேலாளரிடம் கொல்லப் போகிறானா?) என்று நினைத்தபடி சிறு பதட்டத்துடன் சுகந்தனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவள் பார்வையில் உடல்மொழியில் அவள் எண்ணத்தை புரிந்து கொண்ட சுகந்தன்…

 

“I am still working on it. (நான் இன்னும்  அந்த வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.) என்று பொதுவாக கூறிவிட்டான்.

 

இதைக்கேட்ட நேடலி ‘thank God!’  என்று மனதில் நினைத்துக் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

 

அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் நேடலி அவனிடம் வந்து

 

“I am extremely sorry!. I forgot!. It’s crazy Monday!. And thanks! you saved me! I will send the email right now. (மன்னித்துக்கொள்! நான் மறந்து விட்டேன்! திங்கட்கிழமை என்பதால் வேலை அதிகம்! நன்றி! நீ என்னை காப்பாற்றி விட்டாய்! நான் அந்த ஈமெயிலை இப்போதே அனுப்பி விடுகிறேன்.) என்று அவனிடம் கூறியவள் அடுத்த நிமிடம்  தன் கையிலிருந்த லேப்டாப்பின் மூலம் அந்த ஈமெயிலை  அவனுக்கு அனுப்பினாள்.

 

.

“that’s ok. I saw you.  you were busy.  (பரவாயில்லை. நான் பார்த்தேன். நீங்க பிசியா  இருந்தீங்க) என்றான் புன்னகைத்தபடி.

 

அவளும் புன்னகைத்தபடி அவனுக்கு கை கொடுத்தாள். அவன் அவள் கையை பிடித்து குலுக்கினான்.

 

இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

 

 

காபி மேக்கரில் காபி போட்டு எடுத்து வந்து சுகந்தனிடம் நீட்டினான் கார்த்திக்.

 

அந்த காபியில் ஒரு மிடறு  அருந்தியபடி அந்த நாற்காலியில் அமர்ந்தான் சுகந்தன்.

 

“என்னடா அந்த சூப்பர்  ஃபிகர் நேடலி உனக்கு கை கொடுத்தா போல இருக்கு.”

 

“ஆமாண்டா. அதுக்கு என்ன?”

 

“இல்ல.  அவள். ஆபீஸ்ல ஒரு சின்சியர்  ஸ்டாப். கரெக்டா நேரத்துக்கு வருவா. யாரும் அவமேல ஒரு குறை சொல்ல முடியாமல் அவள் வேலையை அவள் நேரத்துக்கு செஞ்சிடுவா. ஆனால் ஆபீஸ்ல பொதுவா யார்கிட்டயும் பேச மாட்டா. வேலை இருந்தால் மட்டும் தான் பேசுவாள். அப்படிப்பட்டவ உன்கிட்ட கைகளை தலையை ஆட்டியபடி ஏதோ ஆர்வமா பேசிக்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சுது. அதான் கேட்டேன்.” என்று விளக்கம் கொடுத்தான் கார்த்திக்.

 

‘ஓ அப்படியா? அதனாலதான் அந்தச் சின்ன தப்புக்கு அப்படி ரியாக்ட்  பணிளா?’ என்று நினைத்துக்கொண்டான் சுகந்தன்.

 

“ஒன்னும் இல்லடா. அவங்களும் நானும் புது ப்ராஜெக்ட் பற்றி பேசிட்டு இருந்தோம்.

 

“அவங்க இவங்கன்னு பேச வேண்டியது இல்லை. அவள் நம்மளை விட சின்ன பொண்ணு தான். கல்யாணம் ஆகல.” என்று சொன்ன படி கண்ணடித்தான் கார்த்திக்.

 

“சரி அதை விடு. நம்ம கதைக்கு வருவோம்.  நான் எப்படிடா சாதனாவை சமாதானம் பண்றது? அவள் இருக்கிற ஊருக்கு வந்துட்டேன். அவள் வீட்டுக்கு பக்கத்துல வீடு  தேடி குடித்தனம் வந்துட்டோம். அவள்  ஆபீஸ்ல இருந்து கொஞ்ச தூரம் தான் நம்ம ஆபீஸ். இவ்வளவு பக்கத்துல இருந்தாலும் அவ கிட்ட என்னால பேச முடியல. அவகிட்ட போய் பேசினாலும் நல்லா திட்டி அனுப்புவாள். திட்டு வாங்குவதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் நான் அவளை சும்மா சும்மா தொந்தரவு பண்ணி இன்னும் அவளுக்கு கோபம் ஜாஸ்தி ஆகாம பாத்துக்கணும். அதை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு. அதுக்காக தான் கொஞ்சம் கேப் விட்டு அவளை பார்க்கலாம்னு நினைக்கிறேன்.” என்றான் சிறு வருத்தம் கலந்த குரலில்.

 

“நீ சொல்றதுலயும் பாயிண்ட் இருக்கு.  ஆனால் அதுக்காக ஓவரா கேப் விட்டுடாதே.” என்றபடி கார்த்திக் அவனுடைய போனை எடுத்து வந்திருந்த குறுஞ்செய்திகளை படித்தான்.

 

அதில் புதிதாக ஒரு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருக்க

 

“யாருடா இது?”  என்று வாய்விட்டு கேட்டபடி அதைப் படித்தான். படித்தவன்

 

“ஓ அந்த தீபாவளி பார்ட்டி  ஏற்பாடு போயிட்டு இருக்கா? சஞ்சனா சிஸ்டர் ? இவங்களுக்கு பேர் கிடையாதா? அஞ்சப்பர் ரெஸ்டாரண்டுக்கு வரணுமா? இந்த வேலை வேறயா? எத்தனை மணிக்கு? 6 மணிக்கா? மணி இப்பவே 5:40 ஆகுது. நானே இப்பதான் பார்க்கிறேன். சரி அப்புறம் பாத்துக்கலாம்.” என்று வைக்க போனவனை தடுத்தான் சுகந்தன்.

 

“என்ன பேரு சொன்னடா?”. என்று கேட்டான்

 

“யாரோ சஞ்சனா சிஸ்டர்nu இருக்கு.  பேரு போடல.”

 

“டேய் சஞ்சனா சாதனாவின் தங்கை பேருடா.”

 

“அப்படியா? எனக்கு தெரியாதே. ஆனால் அதே பெயரில் வேறு யாராவது இருந்திருந்தால்?”

 

“ஆமால்ல. எங்க? காட்டு.” என்று அந்த மொபைலை வாங்கி பார்த்தான் சுகந்தன்.

“ டேய்  இந்த வாட்ஸ்அப் டிபியில் இருக்கிற செம்பருத்தி பூச்செடியை ஜாடியுடன் பார்த்திருக்கிறேன்.” என்று வேகமாக படியேறி ஜன்னல் வழியாக தெரிந்த விக்ரம் வீட்டு தோட்டத்தை பார்த்தான்.

 

5 :40 மணி என்றாலும் குளிர்காலம் என்பதால் நன்கு இருட்டி இருந்தது. எனினும் அந்த தோட்டத்தில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் அந்த செம்பருத்தி செடி பூக்கள் ஜாடியுடன்  தெரிந்தது.

 

மிதமான குளிர் என்பதால் செம்பருத்தி பூக்கள் வாடாமல் இருந்தன.

 

அந்த பூக்கள் லேசாக அடித்த காற்றில் ஆடியது அவனைப்பார்த்து அழகாக குலுங்கி குலுங்கி சிரித்தது போல அவனுக்கு தோன்றியது. அந்த பூக்களின்  சிரிப்பு அவனுக்கு தொற்றியது போல பலமாக குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!