Skip to content
Post Views: 740
நேசமிகு. . .❤️
_____
“என்னடி செய்யுது உனக்கு?”
“ரொம்ப முடியலைடா! “
“லேசா மழைல நனைஞ்சதுக்காடி, இப்படி அனத்திட்டு கிடக்குற?”
Advertisement
“சொல்ல மாட்ட! எவ்ளோ தூரம். . .கார சந்திரமண்டலத்துல நிறுத்திட்டு, செவ்வா கிரகத்தில இருந்து நடக்க விட்ருக்க. .! மழைல கொஞ்சம் கரைஞ்சே போயிட்டேன் நா! மூஞ்ச பாரு! பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க தெரியாதவனுக்கெல்லாம் ஒரு கல்யாணம்! அதுவும் என்னை மாதிரி ஒரு பிரிஷியஸ் ஏஞ்சலோட. . .!”
“தாயே ! நிறுத்து உன் புராணத்த, இப்போ என்ன? உனக்கு முடியலை. . . சூடா சாப்ட ஏதாவது தரேன், அப்புறமா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடலாம்.”
“முதல்ல எனக்கு சூடா வெந்நீர் வேணும்டா குடிக்க, ஹாட் ஹாட்டா…!”
Advertisement
“சரிடி!”
Advertisement
“என்ன சரிடி. .? உனக்கு வெந்நீர் போட தெரியுமாங்க்கும்?” ஸ்விகில போடுடா. பத்து நிமிஷத்துல வந்திடும்!”
“எதே. . .?
” என்னடா?”
Advertisement
ஸ்விகில வெந்நீர்லாம் தரமாட்டாங்கடி!”
“யாரு சொன்னா?”
“யாரு சொல்லணும்? இதுகூட தெரியாதா?”
“போடா! உனக்கு தெரியாது! சீரகம் எல்லாம் கொஞ்சூண்டு போட்டு அம்மா கரெக்டா தொண்டைக்கு இதம்மா தருவாங்க! அது செய்ய உனக்கு தெரியாது!”
“தோடா! பிளெய்ன் சுடுதண்ணியே ஸ்விகில வராதுங்கறேன், மேடம்க்கு சீரக வெந்நீர் வேணுமாம்! அதெல்லாம் கேரளா கடைகள்ல கிடைக்கும்.அதுவும் சும்மா குடிக்க தரது! விலைக்கு வாங்க இல்லை!”
” இப்போ எனக்கு வெந்நீர் வேணும் குடிக்க!”
“போட்டுத் தரேண்டி ! கத்தாத! எதிர்த்த வீட்டு அங்கிள்க்கு நல்லா கேட்டுருக்கும் எல்லாம்.பார்! இங்கதான் பாக்கறார்.!”
“பாக்கட்டும்!”
எழுந்து, டிஷேர்ட்டை நன்றாக இழுத்து விட்டுட்டு, எதிர்த்த வீட்டிற்கு ஓடினாள் மஞ்சு!
“ஏய் மஞ்சு! என்னடி இது ? எங்க போற? நில்லு!”
“எதிர்த்த வீட்டிற்கு போய் மூச்சிரைக்க நின்றிருந்தாள் மஞ்சு!
” அங்கிள்! இங்க பாருங்க! ஸ்விகில குடிக்க வெந்நீர் ஆர்டர் பண்ணுன்னு சொன்னா, தரமாட்டான்னு சொல்லான் இந்த நெட்டக்குரங்கு!”
“போடி! குள்ள வாத்து! தாத்தாக்கு ஸ்விகி பத்தி என்ன தெரியும்?”
“ஆமா கேட்டுக்கோங்க அங்கிள்!இந்த அஷ்வின்தான் ஸ்விகி ஓனர்! ரூல்ஸ் புக்லாம் இவர் கன்ட்ரோல்!”
“ஏண்டா அஷ்வின், மஞ்சு எவ்ளோ அழகா. அங்கிள்ன்றா! உனக்கு மட்டும் நா என்னடா தாத்தா? போன வாரம் சாவி வாங்கறச்ச அங்கிள்ன்னுதானே பல்லைக் காட்டி வாங்கிட்டு போன!”
“இப்போ அதுவா விஷயம்? வயசானவங்கன்னா ரெஸ்பெக்ட் குடுக்கணும், அங்கிள்னு கூப்பிட்டு இன்சல்ட் பண்ணக்கூடாது ன்னு அப்பா சொல்லிருக்கார்!”
“யாரு? நா வயசானவனா? உனக்கு இப்போதான் கல்யாணமாயிருக்குன்னா, நா வயசானவனாயிடுவேனா?” என் கடைசி பையனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலைடா?”
” அது உங்க பிரச்சினை தாத்தா! மற்ற ஏழு பேர்க்கும் கல்யாணம் ஆகி நீங்க பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாச்சு!”
“நீ வம்புக்குன்னே அப்படி கூப்டறடா!போ ! உங்கப்பன் குசும்பு! வேறென்ன?”
கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது! அதுக்குள்ள ஓராயிரம் சண்டை! கொஞ்சம் அந்த பிள்ளய அனுசரிச்சா என்னடா?”
” தாத்தா சண்டை போடறது மஞ்சு ! நானில்ல!”
“நா சண்டையெல்லாம் போடலை அங்கிள்! சுடுதண்ணீர் ஆர்டர் போட்டு தரசொன்னேன்!”
“அதான் நானே போட்டுத் தரேன்னேனே!”
“உனக்கு தெரியாது! நீ கருக்கீருவ! கருகின வெந்நீர் எப்படி குடிக்கறது?”
அஷ்வின் அவளின் அழிச்சாட்டியும் பார்த்து , மோவாயில் விரல்வைத்து ‘ஙே’ எனப் பார்த்திருந்தான்.
பாஷ்யம் மாமாவும் திகைத்துதான் விழித்தார்.
“ஏம்மா குழந்தே!வெந்நீர். எப்படிம்மா கருகும்?”
“அதெல்லாம் இவன் கருக்குவான் அங்கிள்!” ரொம்ப கேர்லெஸ் இவன்!
“ஆமா! இவ அப்டியே கேர்கேர் ஃபுல்ஃபுல் தான்! “
“நீங்க மாமிய கூப்டுங்க அங்கிள்!”
“அவ இப்போதாண்டா தூங்கப் போனா!”
“நானும் போறேண்டா! மாமியோடயே போய்த் தூங்கிக்கறேன்!”
“ஓய்! அரைடிக்கெட் நீ காய்ச்சலை மாமிக்கு கடத்திராத! போய் நம்ம வீட்ல தூங்கு போ!”
“போடா!” என்றபடி கால்களை உதைத்துக்கொண்டு மஞ்சு செல்லவும்,
“தாத்தா,மாமி வெந்நீர் வைச்சுருந்தா ஒரு ஃபிளாஸ்க்ல தாங்களேன்! ராட்சசி படுத்துவா!”
” அது என்னடா அஷ்வின் நா உனக்கு தாத்தா, என் வைஃப் மாமியாடா?”
“உங்க கவலை . . நீங்க வயசா தெரியறீங்க! மாமி அப்டியே உங்க பொண்ணு மாதிரி இருக்கா. . .!
” அடேய். .கிராதகா!” நீ ஸ்விகிலியே வெந்நீர் போட்டுக்கோ! போ!”
சிரித்தபடி வெளியேறினான் அஷ்வின்.
இரண்டு பேரும் எதிர்த்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வாரம்தான் ஆயிற்று. கார்த்திகேயன், அஷ்வினின் அப்பா பாஷ்யம் என்ற ரங்க பாஷ்யத்தின் பால்ய கால நண்பர். அவர்கள் நட்பு அப்படியே இன்று வரை தொடர்கிறது! கார்த்திகேயனுக்கு கூடப்பிறந்த தமக்கை பிரேமா! பிரேமாவின் மகள்தான் மஞ்சு ! ஒரே பெண். கணவர் பலராமன்,பஹ்ரெயினில் வேலை. வருடம் ஒரு முறை முப்பது நாள் லீவில் வருவார். கம்பெனி செலவுதான். அதுபோக மிகவும் அவசரம் என்றால் வருவார். அது சொந்த செலவில் தான் வரவேண்டும். நல்ல சம்பளம்.போக ஊரில் நிலபுலன்களும் ஒரு மாடி வீடும் இருக்கிறது.
கார்த்திகேயனுக்கு அஷ்வின், ஸ்ரீதரன் என இரண்டு மகன்கள்.அஷ்வின் பெரியவன்! கார்த்திகேயன் பேங்க் மேனேஜராக இருந்து ரிடையர்ட் ஆனவர்! அவர் கடைசியாக வேலை பார்த்த மதுரை நகரம் பிடித்து விட்டதால் அங்கேயே, வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். கார்த்திகேயன் அம்மா மங்களம், சிறிது காலமாக மிகவும் சுகவீனமடைந்திருந்தார். கார்த்திகேயன் அப்பா சடாட்சரம் மத்தியசர்க்காரில் இரயில்வேயில் வேலை பார்த்தவர். அஷ்வின் பிஜி இரண்டாம் வருடம் அடி எடுத்து வைத்தபோது நெஞ்சுவலி என ஆஃபீசில் இருந்தபடியே, கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தனர்.ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தபோது, கார்த்திகேயன் இடிந்து போனார்.
மங்களம் பற்றி சொல்லவே வேண்டாம். வெகு மாதங்களாயிற்று அவர் மீண்டு வர!
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து கொண்டே வந்தது அவரது உடல்நிலை! ஏற்கனவே கார்த்திகேயனுக்கு தன் தமக்கை பிரேமாவின் மகள் மஞ்சுளாவைத் தன் பையன் அஷ்வினுக்கு மணமுடிக்க ஆசை! ஆனாலும் தனக்குள்ளேயே வைத்திருந்தாரே தவிர வெளியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை!
அவரது மனைவி ஸ்வர்ணா ஆறு வருடங்களுக்கு முன் வந்த காய்ச்சலில், படுக்காமல் கொள்ளாமல் திடுதிப்பென்று ஒரு நள்ளிரவில் ஹாஸ்பிட்டலில் ஐசியூவில் அட்மிட் செய்த அடுத்த நாள் இவரையும், இரு மகன்களையும் தவிக்க விட்டு மறைந்து போனார்.
அஷ்வின் அப்போதுதான் பிளஸ் ஒன் சேர்ந்திருந்தான் அடுத்தவன் ஸ்ரீதரன் பத்தாவது! இரு பிள்ளைகளுக்கும், பொதுத் தேர்வு நடக்கும் நேரம் மனைவியின் திடீர் மறைவு அவரை அப்படியே நிலை குலைய செய்தது!
தமக்கை பிரேமாவும், தந்தையும்தான் பெருமளவு குடும்பத்தை நிர்வகித்தது!
மஞ்சு மிகவும் சிறிய பெண் அவளும் ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் இங்கேதான் வாசம்! அக்ஷ்வின் அவளை அவ்வளவு அழகாக பார்த்துக் கொள்வான்.ஆனால் மஞ்சு மிகவும் சேட்டை! ஸ்ரீஈதரனுடன் ஒத்துப் போகாது!
அப்பொழுதே பிரேமாவுக்கும் தம்பி மகனுக்கு தன் மகளைக் கொடுக்க எண்ணம் இருந்தது! இருவரும் படிப்பை முடிக்கும்போது இது பற்றிப் பேசலாம் என இருந்தார்.
அப்பாவின் திடீர் மறைவு, பின் தாயின் சுகவீனம் என நாட்கள் ஓட, அஷ்வின் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில்ஒரு நல்ல கம்பெனியில் தேர்வாகி, நாக்பூரில் பிளேஸ்மெண்ட் கிடைக்கவும், தம்பியிடம் பிரேமா பேச, அவருக்கும் சம்மதமே!
அவரது தாய் மங்களத்தின் இடைவிடாத புலம்பலினால் ஸ்திரமாக விழுந்த வித்து , இப்போது செயல் வடிவம் எடுக்க தொடங்கி, கல்யாண வேலைகள் விறுவிறுப்பாக நடக்க தொடங்க, மஞ்சுவுக்கு உள்ளுக்குள் ஒரே பயம்!
அவளுக்கு அஷ்வினைப் பிடிக்கும் என்றாலும் கல்யாணம் என்றெல்லாம் அவள் யோசித்ததே இல்லை!
அஷ்வினைப் பொறுத்த வரை மஞ்சு மீது அளவில்லாத பிரியம். அவளே மனைவி என்னும்போது சந்தோஷமாகவே இருந்தது! மஞ்சு இப்பொழுது பிஎஸ்சி ஐடி கடைசி வருஷத்தில் இருந்தாள். அகடமிக் இயர் முடிந்து, டெர்ம் எண்ட் பரீட்சைகள் மட்டுமே இருந்தது!
மஞ்சு எப்போதுமே விளையாட்டு பிள்ளைதான்.ஒரே பெண் என செல்லம் வேறு! மாமா, அப்பா இருவரிடமும் அளவில்லாத செல்லம்.தாய் பிரேமாதான் சிறிது கண்டிப்பாய் இருப்பாள். பாட்டி மங்களத்திடமும் செல்லம்தான்.
அஷ்வினுமே ஜாலியான குணம் என்றாலும், பொறுப்பும் உணர்ந்தவன்.
வீடு உறவினர் வருகையால் நிறைந்திருந்தது! மஞ்சுவை எழுப்ப சென்றாள் பிரேமா!
“ஏய் மஞ்சு!என்னடி இன்னும் தூங்கற?எழுந்துக்கோ! எல்லோரும் உன்ன பாக்கணுங்கறா!”
“நா என்ன பொம்மையா. .?போ. .!”
“என்ன மஞ்சு இது விளையாட்டுத்தனமாவே இருக்க இன்னும்.கால்யாணப்பொண்ணுடி நீ! குளிச்சி நல்லதா உடுத்திகிட்டு பளிச்சுன்னு இருக்க வேண்டாமா?”
“நா ஒண்ணும் தூங்கலைம்மா! அடுத்த மாசம் பரீட்சைக்கு தேவையான நோட்ஸ் கேட்டுட்டு இருந்தேன் புவனாகிட்ட! நா மூணு கிளாஸ் பங்க் பண்ணிட்டேனே!”
“சரிடி! இப்போ எழும்பி குளிச்சுட்டு, நல்லதா ஒரு புடவை மாத்திக்கோடி . . .என் கண்ணுல்ல. .!”
“புடவையா. . .அம்மாம்மா. ..! நீ எனக்கு பிராமிஸ் பண்ணிருக்க புடவை கட்ட சொல்ல மாட்டேன்னு. . .!”
” அஷ்வினும் ஆசைப்படறாண்டி!”
“அப்போ அவனையே கட்டிக்க சொல்லு!”
“உஷ்! அவன் இவன்னு கத்தாத . . . .!”
“என்ன அத்தை? என்ன சத்தம்? இவ ஏன் ஒராங்குட்டான் மாதிரி இருக்கா?”
“ஏய்! நெட்டகுரங்கு! எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறதினாலதான்!”
“என்ன செய்ய? நடக்கப்போறதே! இரண்டு பேருமே தப்பிக்க முடியாது!”
மஞ்சுவுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது!
“ஏய்! குட்டச்சி? எதுக்கு இப்போ அழுகை? ம்.ம்.ம்.?”
———–
“உனக்கு தப்பிக்கணுமாடி? “
“போடா. .!”
“எதுக்கு இப்போ அழற?”
“இந்த ஸ்ரீஈதர் சொல்றான், நா, அம்மா பாட்டி எல்லோரையும் விட்டுட்டு உன்கூட நாக்பூர் போறேனாம். நினைச்ச உடனே எல்லாம் வரமுடியாதாம்! அதனால சமையல் எல்லாம் நல்லா கத்துக்கணுமாம். நிறைய்ய வேலை செய்யணுமாம்! பொறுப்பா இருக்கணுமாம்! இப்டி நிறைய சொல்றாண்டா. . . .!”
“அவன் சொல்றது இருக்கட்டும்! நீ இந்த வருஷம் படிப்பை முடிச்சுட்டு, வேலை பாக்க போறேன்னு சொன்ன! இப்படி விளையாட்டுதனமா எவ்ளோ நாள் இருப்ப சொல்லு? உன்னைப் பாத்துக்கவாவது உனக்கு தெரியணும்ல?”
“ஏண்டா? நீ என்ன பாத்துக்கமாட்டியா? இவ்ளோ நாள் நீதானே பார்த்த?”
“நா பாத்துப்பேண்டி! ஆனா நீயும் வளர வேண்டாமா?”
“என்னடா பயங்காட்ற?”
“ஏய் மஞ்சு. .!” என்று தொடங்கியவனை இடையிட்டான் ஸ்ரீதர்!
“அண்ணா விடு! அவளை நா பாத்துக்கறேன்.நீ அப்பா கூப்டா என்னன்னு கேளு!”
“ஸ்ரீ ரொம்ப மிரட்டாதடா! பாவம் சின்ன பொண்ணு பயந்து போயிருக்கா!”
“ஆமா தொட்டில்ல போட்டு ஆட்டி தூங்க வை! போண்ணா . .!”
ஸ்ரீதரன் ,”மஞ்சு இங்க பாரு! அண்ணா உன்னை பாத்துப்பான்தான்.ஆனா அவனும் பாவம்ல! நீயும் அவனைப் பார்த்துக்கணும் சரியா? நீ சின்ன பொண்ணு இல்ல இன்னும்! உனக்கு எல்லாம் தெரியும்! கல்யாணம்ங்கிறது எவ்ளோ பெரிய பொறுப்பு? அவன் உன்னை சந்தோஷமா பார்த்துப்பான்னு நீ நம்பறேல்ல? நீயும் அவனை சந்தோஷமா வைச்சுக்கோ!”
மஞ்சு தலையாட்டினாள்.
“குட் கேர்ள்! நாளைக்கு உங்க கல்யாணம் உறுதிதாம்பூலம்ல எவ்ளோ பேர் வந்திருக்காங்க! அத்தை சொல்ற மாதிரி, இன்னைக்கும் நாளைக்கும் புடவை கட்டிக்கோ! அத்தை புதுப் புடவை எடுத்து வைச்சிருக்காங்க! நகையெல்லாம் போட்டு அலங்காரம் செய்தா நீ அவ்ளோ அழகா இருப்ப. .! வா சமத்தா ரெடியாகி வா!”
“டேய்! அந்த நெட்ட கொரங்கு மாதிரியே நீயும் என்னை பேம்பர் பண்றடா. .!”
“அது சரி..ஒழுங்கா கிளம்பி வா. .!”
மஞ்சுவுக்கு அந்த அடர் கனகாம்பர கலர் சாஃப்ட் சில்க் சேலை மிகவும் பிடித்தது! பிரேமா வந்து மகளுக்கு அழகாகக் கட்டிவிட, பொருத்தமான நகைகள் அணிந்து தயாராகி வெளியே வரவும், ஸ்ரீதர் அவளைப் பார்த்ததும் விசிலடித்தான்.
“ஏய்! அழகா இருக்கடி! கல்யாணப் பொண்ணு மாதிரியே!”
“நா கல்யாணப்பொண்ணுதாண்டா!”
“அப்படியே சொல்லிட்டே இரு! நாக்பூர் கிளம்பற வரை!”
“வேணாம் ஸ்ரீ! என்னய அழ வைக்காதடா!”
“ஆமா! பாப்பா இப்போ அழப்போகுது! அஷ்வின் ஒரு டோப்லரான் எடுத்துட்டு வாடா!”
“செத்த நேரம் அவளை சும்மா விடேண்டா!” – மங்களம் பாட்டி!
இப்படியே இனிமையான கலாட்டாக்களுடன், உறுதிதாம்பூலம் முடிந்து, திருமணநாளும் நல்லபடியாக விடிந்தது!
இந்த சில நாட்களில் மங்களமும், பிரேமாவும் அவளுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லி பயமுறுத்தினர்.
அதற்கும் அஷ்வினிடம்தான் புகார் சொன்னாள்.
அஷ்வினே,”ஃப்ரீயா விடுங்கத்தை! நா பாத்துக்கறேன் அவளை! இந்த பொறுப்பு, பருப்பெல்லாம் மெல்லவே வரட்டும். !” என்றிருந்தான்.
திருமணத்தன்று காலை மஞ்சுவை சீக்கிரமே எழுப்பி விட்டு கிளப்பவும் அதிசயமாக எல்லாம் ஒழுங்காகவே நேரத்துடன் செய்தாள். சடங்குகள், ஹோமங்கள் எல்லாம் முடிந்து தாலி கட்டும் நேரம், எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்க எடுத்து செல்லவும், அஷ்வின் தோள் மீது நன்றாகச் சரிந்து உட்கார்ந்து கொண்டாள்.
அஷ்வின் திகைத்து,”ஏய்! ஒழுங்கா உட்காருடி! எல்லாம் நம்மளையே பாக்கறாங்க!” எனவும் நிமிர்ந்தமர்ந்தாள்.
“அஷ்வின்! நா உனக்கு ஒரு பிராமிஸ் பண்ணனும்!” என்றாள்.
“என்ன மஞ்சு புதுசா?”
“புதுசால்லாம் இல்லடா! ஒரு ஏழெட்டு நாளா யோசிச்சு வைச்சிருக்கேன்.!”
“அப்டி யோசிக்கற அளவுக்கு வளர்ந்துட்டியாடி?”
“ம்.ப்ச்.அச்சு! ஒழுங்கா கேளுடா!”
“ஏஏய்ய்..இந்த ‘அச்சு’ எப்போருந்து?”
“நல்லாருக்குல்லடா. ! திடீர்னு உன்னை கொஞ்சும்போது தோணிச்சுடா!”
“ஹ்ஹேய்ய்.. இரு..இரு.
என்னை எப்ப கொஞ்சுன?”
“கொஞ்சினேன்னா. . ..கொஞ்சறதா என்ன?”
“பின்ன.?”
“ச்சும்மா. . கற்பனை பண்ணுவோம்ல அப்டி. !”
“ஓஹ்ஹோ. !சரி! இப்போ ஒழுங்கா உக்காரு. . .!”
“டேய். .! நா பிராமிஸ் பண்ணனும்டா!”
“அப்புறம் கேக்கறேன்! இப்போ மணவறையில் உட்கார்ந்துருக்கோம்டி! எல்லோர் பார்வையும் நம்ம மேலதான்.கேமரால்லாம் வேற நம்மளைதான் ஃபோகஸ் பண்றா பாரு!”
“பிராமிஸ் மட்டும் இப்போ பண்றேன். பிராமிஸ் கிஸ் அப்புறமா! சரியா? கண்ணடித்தாள்.
” ஹ்ஹூய். . .என்ன மஞ்சு? ரொம்ப வேகமாக போறியே.!”
“கையை தா முதல்ல!”
அவனது வலது உள்ளங்கையை மேல்நோக்கி திருப்பி, அதில் தனது வலது உள்ளங்கையை வைத்து மூடியவள்,
” நா உன்னை ரொம்ப நல்லா பாத்துப்பேன்.ரொம்ப சந்தோஷமாவும் வைச்சுப்பேன்.இட்ஸ் அ பிராமிஸ்!”
என்று தனது இடது உள்ளங்கையால் இருவரது கைகளையும் பொத்திக் கொண்டாள்.
“ஹ்ஹூய் மஞ்சு! டச்சிங் மொமண்ட் டி!” என்று இடது கையால் அவள் தலையைப் பிடித்து ஆட்டினான்.
ஐயர், “கொழந்தேளா! செத்த இங்க பாருங்கோ! இந்தாங்கோ! மந்திரம் எல்லாம் நா சொல்லிட்டேன்.இப்போ இந்த புஷ்பத்த அக்னில சேர்த்துட்டு, சேவிச்சுக்கோங்கோ! மாங்கல்யதாரணம் ஆன பின்னாடி, பாணிக்கிரகணம் பண்ணிக்கலாம்!!” என்றார்.
அஷ்வின் வெட்கத்துடன் நிமிர்ந்து அமர்ந்தான்.
ஸ்ரீஈதரன், ” டேய் மஞ்சுவுக்கும் உன் வெக்கத்தை கொஞ்சம் குடுடா!”
ஐயருடன் எல்லோரும் சிரித்தனர்.
கல்யாணம் நல்லபடியாக முடிந்து, அவர்கள் இருவரும் நாக்பூர் போவதற்கு முன், இங்கு சென்னைக்கு வந்து தங்கியிருந்தனர்.இது மஞ்சுவின் அப்பா மகள் பெயரில் வாங்கியிருந்த வீடு! இவ்வளவு நாளும் வாடகைக்கு விட்டிருந்தனர்.சாவியும் வீட்டின் பொறுப்பும் கார்த்திகேயனின் நண்பர் பாஷ்யத்தின் பொறுப்பில் இருந்தது.
குடியிருந்தவர் காலி பண்ணி போய், வீட்டை கொஞ்சம் மாற்றி வடிவமைத்து இதோ இவர்களும் இங்கு வந்து சிறிது நாள் தங்கியிருக்கும் பிளான்.
அதற்கு முக்கியமான காரணமும் இருந்தது.
அஸ்வின் நாக்பூர் கம்பெனியில் சென்னைக்கு மாற்றல் கேட்டு , எட்டு மாதங்கள் முன்பாகவே விண்ணப்பித்திருந்தான். இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம். கூடவே மஞ்சுவுக்கும் இதுதான் கடைசி செமஸ்டர்! ரிசல்ட் வந்ததும் அவள் வேலைக்கு சேர்ந்தாலும் சரி, மேலே படித்தாலும் சரி சென்னை தான் வசதி!
அடுத்த மாதம் செமஸ்டர் எக்சாம்ஸ்.
இடையில் அஷ்வின் ஊருக்குப் போவதற்குள் இந்த வீட்டைப் பார்த்து , வேறு வசதிகள் வேணுமான்னு சரி பார்த்துட்டு,ஒரு வாரமோ பத்து நாளோ தங்கி ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வருமாறு சொல்லி அனுப்பியிருந்தனர்.
அஷ்வினுக்கு மஞ்சுவின் படிப்பு பற்றிதான் கவலை. அடுத்த மாதம்தான் என்றாலும்,ரொம்பவும் விளையாட்டு அவளுக்கு. வெளிய போய் சுற்றுவதில் இருக்கும் ஆர்வம் ஒரு நாள் கூட படிக்க நேரம் ஒதுக்குறதுல இல்லை.
எப்போ அதைச் சொன்னாலும் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் தான். “இங்க வந்ததிலிருந்து நீ ரொம்ப படுத்தறடி மஞ்சு!”
“நானாடா படுத்தினேன். ? நீதான் தலை வலிக்குன்னா கூட பிடிச்சு விட மாட்ற!” இதோ சுடுதண்ணி கூட தர மாட்ற!”
அவளுக்கு கண்களில் நீர் திரண்டது!
‘அம்மாடியோ.இது ஆபத்தாச்சே. .!’
அடுத்த நொடி அஷ்வின்,
“இதோ பாரு மஞ்சு! வெந்நீர்தானே, கருக்காம போட்டு தரேன். இருடி!” என்றபடி வெந்நீர் போட்டு பதமாய் ஆற்றி கொடுத்தான்!
” தேங்க்ஸ் அச்சு! டேஸ்ட்டா இருக்கு! சாரிடா சண்டை போட்டதுக்கு!” என்றபடி அவன் மேல் நன்றாகச் சாய்ந்து அவன் கழுத்துக்குள் மேகம் புதைத்துக் கொண்டாள்.
” மஞ்சு. .கிச்சு கிச்சு மூட்டாதடி! செத்த தள்ளி உக்காரு.!”
“உனக்கு என் மேல் பாசமே இல்லடா!”
“ஏண்டி. எனக்குத்தான் உன்னை ரொம்ப பிடிக்குமே!”
“பொய். சொல்றடா! கட்டிப்பிடிக்க கூட விட மாட்ற!”
“ஏய். .! கட்டிப்பிடிக்கறது எதுக்குடி. .? அதும் உனக்கு காய்ச்சல் ல. !”
“அப்போ என் காய்ச்சல் உனக்கு வந்திடும்னு பயப்படறியா . .?”
” லூசு மாதிரி பேசாத மஞ்சு! “
“நமக்குதான் கல்யாணம் ஆயிடுச்சே! உன்னை தொட்டுக்கறது தப்பாடா!”
” மஞ்சு இன்னும் கொஞ்சம் வளருடி! இந்த குழந்தை மாதிரி கொஞ்சல்லாம் எனக்கு வேண்டாம்!”
” அப்போ.! என்னை பிடிக்காதா டா உனக்கு?”
” ஏ ! மஞ்சு! இங்க வா! இங்க பாருடி! நா சொல்றதைப் புரிஞ்சுக்கோ! நீ எனக்கு பிடிச்ச என்னோட வைஃப்டி! ! நீ உன் படிப்ப முடிக்கணும்! இப்போ அதுதான் முக்கியம்.நீ விளையாட்டுதனமா இருக்கியேன்னுதான் திட்டறேன்.. புரியுதா..? “
அவள் தலை அவன் நெஞ்சில் புதைந்து மேலும் கீழுமாக ஆடியது. அவன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டுக் கொண்டாள்.
அஷ்வின் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க போராடினான்.
“என்னடி செய்ற? என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டியா?”
“எனக்கு பிடிச்சிருக்கு அஷ்வின். உனக்கு பிடிக்கலியா?”
“ராட்சசி. ! என்றபடி அவளை இறுக்கினான்.
“என்னடா பண்ற? வலிக்குதுடா!”
“நல்லா வலிக்கட்டும்! வெளிய போலாமா டி?”
“வேண்டாம்டா! கைகால் லாம் வலிக்குது! உன் மேல படுத்திருக்கறது நல்லா சுகமா இருக்குடா! காலெல்லாம் புடிச்சி விடேன்.!”
” ஹுய் மஞ்சு! இப்பவும் வேற டிராக்ல போற!”
” போடா! சொல்றதைக் செய்!”
“வாலு! ” என்றபடி அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.
சிறிது நேரம் கழித்து,
” பசிக்குது டா. .!”
“வெளிய போலாமா?”
“இல்லடா! இப்போ ரொம்ப கால் வலிக்குது.!”
“சரி அப்போ என்ன வேணும் சொல்லு.ஸ்விகில போடறேன்!”
“அந்த நெய் ரோஸ்ட் கூம்பு மாதிரி மடிச்சு தருவாங்களே அப்டி சாம்பாரோட!”
“டீ ! ஆர்டர் பண்ணினா கூம்பா வராது! ஒரு டப்பால மடிச்சு தான் தருவாங்க!”
” எனக்கு அப்படி வேண்டாம்!”
“சரி வா! போய் சாப்டுவோம்! கார்லதானே!!”
“எனக்கு நடக்க முடியலடா!”
“நா தூக்கிக்கறேன்!”
“வேண்டாம்! வேண்டாம்! நீ கீழ போட்ருவ!”
அஷ்வின் முறைத்தான்.
“உண்மையாவே உனக்கு தூக்க முடியாது! நீ என்னை கீழ போட்ருவ!”
“அடியே..வாலு. .எனக்கும் பசிக்குதுடி! இப்போ நீ வரலைன்னா, நா உன்னை சாப்டுருவேன்!”
“பூதமாடா நீ?”
“ஆமாண்டி! இந்த பூதம் இப்போ எப்டி உன்னை சாப்பிடப் போதுன்னு பாரு!”
“அய்யோ. . .விடு அஷ்வின். எனக்கு ரொம்ப பசிக்குது!”
“அப்போ மரியாதையா வா!”
அவள் உடை மாற்றிக் கிளம்பவும், இவள் சத்தம் கேட்டு பாஷ்யம் மாமா இவர்கள் வாசலுக்கு வந்திருந்தார்.
அஷ்வின் தலையில் அடித்துக் கொண்டான்.
“என்னம்மா கொழந்தே! மறுபடி சண்டையா?”
“இந்த அஷ்வின் தான் அங்கிள்.!”
“என்ன சொல்றான்?”
“என்னை தூக்கி கீழ போட்ருவேன்னு சொன்னான்!”
“ஏண்டா அஷ்வின்?”
“தாத்தா.! இந்த குட்டச்சி சொல்றதெல்லாம் கேட்டுட்டு வராதீங்க!
“ஏண்டா! உனக்கு தாத்தாவா நா?”
“உங்க கவலை உங்களுக்கு! வரோம் தாத்தா. !
error: Content is protected !!