Skip to content
Post Views: 4,044
உனக்கென இருப்பேன் -25
ஹே ….கீர்த்தி நில்லு ! அவள் கரம் பற்றி இழுத்தான் ….வேகமாய் அவன் மார்பில் மோதி நின்றாள் .
விழி இரண்டும் வெட்கமும் தயக்கமுமாய் அவனை நோக்க ….வான் விழி இரண்டும் அவளையே துளைத்தது .
இன்னைக்கு நீ சரியில்லையே ….கடல் காற்றில் நெற்றியில் புரண்ட ஒற்றை குழலை ஊதியபடியே கேட்டான் .
Advertisement
என்ன சரியில்லை ஹ்ம்ம் …கண்களால் கேட்டாள் . என்னென்னவோ மாயம் செய்யும் அவள் விழிகள் அவனை சுற்றி சுழற்றி கருந்துளைக்குள் இழுத்தது
இன்னைக்கு புருஷன் மேல் அக்கறை பலமா இருக்கு ! கடைக்கண் பார்வை காந்தமா இழுக்குது.
அதெல்லாம் இல்லை …..அகப்பட்டுக் கொண்ட நிலையை கன்னம் இரண்டும் சிவந்து அப்பட்டமாய் காட்டியது . கீர்த்தி இப்படி கேவலமா மாட்டிக்கிட்டியே …. வெடக்கத்துடன் தன்னையே நொந்து கொண்டாள் .
Advertisement
புருவத்தை உயர்த்தி என்ன என்பதாய் கேட்டான் ?
Advertisement
ம்ம்ம்ம்ம்கும் என்று உதட்டை பிதுக்கினாள் . ஒன்றும் இல்லை என்பதற்கு கொடுத்த ரியாக்ஸன் அவனை மொத்தமாய் சாய்த்தது .
அச்சு ஏதாவது சொன்னாளா ? சிறு குரலில் தலைகோதிக் கொண்டே கேட்டான் .
அவள் அமைதியாய் நிற்கவே …..கீர்த்தி இயல்பா உன்னால என்னைக்கு என்னை ஏத்துக்க முடியுதோ அன்னைக்கு ஏத்துக்கோ !
Advertisement
நீ நன்றி உணர்ச்சியை காட்டவும் வேண்டாம்,குற்றவுணர்ச்சியில் தவிக்கவும் வேண்டாம்.
பாவப்பட்டு என்கிட்டே பேசி பழக முயற்சி பண்ணாதே ப்ளீஸ் ….நான் தாங்க மாட்டேன் . என் கீர்த்தி வேற …வினோத் மனைவி கீர்த்தி வேற !
சம்மட்டி அடியான அவன் பேச்சில் அவள் கண்கள் குளமாகியது . பரந்த கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் . அது அஸ்வின் போல் பிரம்மாண்டமாய் கருணையாய் காருண்யமாய் சாமரம் போல் அலை வீசிக்கொண்டிருந்தது .
“……………………….”
குழந்தை போல் ரசித்து ரசித்து மணல் வீடு கட்டும் அச்சுவை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தான் சரவணன் . பார்வையை எங்கெங்கோ திருப்ப முயற்சித்தான் முடிந்தால் தானே….?
மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வாங்கி வந்து ஆளுக்கு ஒன்று கொடுத்தான் அஸ்வின் .
அனைவரும் சாப்பிட்டனர் ….வீட்டிலிருந்து கொண்டு வந்த மசாலா டீயை மஞ்சுமா அனைவருக்கும் கொடுத்தார் .
அண்ணா இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடிட்டு போகலாமே ப்ளீஸ் ! கெஞ்சினாள் அச்சு
குழந்தைக்கு உப்பு காத்து சேராது என்றார் மஞ்சுளா.
அப்போ கொஞ்ச தூரமா தள்ளி போய் விளையாடலாம் ப்ளீஸ் மீண்டும் கெஞ்சினாள் .
சரி கொஞ்ச நேரம் மட்டும் தான் பர்மிஷன் . சீக்கிரம் விளயாடிட்டு வரணும் ஓகே வா ! அஸ்வின் தங்கையை பார்த்து கண்சிமிட்டினான் கீர்த்தி முறைக்கிறாள் அல்லவா ?
ரொம்ப தான் மிரட்டிட்டீங்க ? உங்க தொங்கச்சி ரொம்ப பயந்துட்டா….கீர்த்தி நொடித்துக் கொண்டாள் .
எனக்கு வாய்த்த பொண்டாட்டியும் அப்படி ,தங்கச்சியும் அப்படி! ….எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி என்றான் .
என்னது ….இடுப்பில் காய் வைத்து கீர்த்தி முறைக்க …. அச்சு என்னடா கேட்ட …இதோ வரேன் என்று ஓடிவிட்டான் .
பீச் மணலில் கிடந்த சிப்பிகளை பொறுக்கி சேகரித்துக் கொண்டிருந்தாள்அச்சு .
அண்ணா ஐஸ்க்ரீம் வேணும் என்றாள்.
நீங்க இருங்க சார் நான் போய் வாங்கிட்டு வரேன் என்றான் சரவணன் .
சாக்கோபார் ரெண்டு என்றாள் திரும்பி பாராமலே …
அவளை முறைத்து பார்த்து சிரித்தவன் வேகமாய் ஐஸ்க்ரீம் வாங்க சென்றான் .
ஆளுக்கொன்றாய் சாக்கோபாரை நீட்டினான்.அச்சுக்கு மட்டும் இரண்டு .
சரவணா கீர்த்திக்கு வேண்டாம் அவளுக்கு சளியா இருக்கு …அஸ்வின் தடுத்தான் .
ஆமா அண்ணிக்கு கோல்டு அதை இங்கே கொடுங்க ! மூன்றாவது ஐஸ்க்ரீமை கைபற்றிக் கொண்ட குதூகலம் அவளுக்கு .
அச்சுவின் அலப்பறைகளை ரசித்துக் கொண்டிருந்தான் சரவணன் .
மஞ்சுளா குழந்தைக்கு தொலைவில் நிற்கும் படகை காட்டிக் கொண்டிருந்தார் .
ஐஸ்க்ரீம் சுவைத்தப்டியே அச்சுவை ரசித்துக் கொண்டிருந்தன் சரவணன் .
உம்ம்ம்ம் என்ற முகத்துடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி
இப்போ ஏன் முகத்தை அசிங்கமா தூக்கி வச்சிட்டு இருக்க ? கிசுகிசுப்பாய் கேட்டான் அஸ்வின் .
என்ன அதிகாரம் பண்றீங்க ?
ஓ ….பாவப்பட்டு வாழ்க்கை கொடுத்திருக்கீங்க ….நீங்க என்ன வேணாலும் பேசலாம் !
என்னடி பேச்சு ஒரு தினுசா இருக்கு நான் பாவப்பட்டு வாழ்க்கை கொடுக்கல ….பிரியப்பட்டு தான் கொடுத்திருக்கேன் .அப்படிங்களா சார் பீச்சில் உங்களுக்கு வச்சிடுவோம் ! முறைப்பாய் பதில் வந்தது
திமிரா ? கடு கடுத்தான்.
நீங்க பேசினா ரியாலிட்டி நான் பேசினா திமிரா ?
நெற்றி பொட்டில் அறைந்தார் போல் கேட்ட கேள்வியில்
ஆடிப்போனான் .
“…………………………”
இரவு அஸ்வின் அச்சு இருவருக்கு தோசை ஊற்றிக் கொடுத்துவிட்டு கீர்த்தி போய் படுத்துக்க கொண்டாள் .
ஏன் சாப்பிடாம படுத்துட்ட ? அவன் கேள்விக்கு பதில் உரைக்காமல் புரண்டு படுத்துக் கொண்டாள்.
இப்போ உனக்கு என்ன பிரச்னை ? கோபத்தை ஏன் சாப்பிடற விஷயத்துல காட்டுற ? பல்லைக் கடித்தான் .
பசிக்கல….ஒற்றை வார்த்தை மட்டுமே வந்தது .
நைட்டுல சாப்பிடாம படுக்கக் கூடாதுனு பலமுறை சொல்லி இருக்கேன்!
அச்சு அண்ணிக்கு ரெண்டு தோசை ஊத்திட்டு வா !
டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து போய் தோசை ஊற்ரிக் மொண்டு வந்தாள் .
இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் போய் டிவி முன் அமர்ந்து கொண்டாள்.
கீர்த்தி எழுந்திரு !
அவள் விறைப்பாய் படுத்திருக்கவே கீர்த்தி உன்னை தான் சொல்றேன் பேச்சில் அழுத்தம் கூட்டினான் .
அவள் காதில் வாங்காதது போல் படுத்திருக்க …..கோபமாய் அவளை தூக்கி அமர்த்தினான் .
எனக்கு பசிக்கலைன்னு சொன்னேன் ….என்னை விடுங்க ! சிலுப்பிக் கொண்டாள் .
அது எப்படி பசிக்காம போகும் ? முறைத்தபடியே தோசையை பிய்த்து ஊட்டத் தொடங்கினான் .
ஒரு வேளை சாப்பிடாம இருக்க கூட எனக்கு உரிமை இல்லையா ? ஆத்திரத்துடன் மென்ரூ முழுங்கினாள் .
உனக்கு இப்போ இங்கே என்ன உரிமை இல்லாம போச்சு ?நீ உரிமை போராட்டம் நடத்துற அளவிற்கு ஒன்னும் இல்லை ….பேசிக் கொண்டே ஊட்டினான் .
நான் ஒரு போராட்டமும் நடத்தலை …நான் உங்களை மாதிரி ஆம்பளையா இருந்தா எப்படி வேணாலும் இருக்கலாம் .
ஒரு பெண்ணை அவளுக்கே தெரியாம வருஷக் கணக்கா லவ் பண்ணலாம் ,லவ் பண்ணினவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம். அவ சந்தோஷமான வாழ்க்கையை கைக் கட்டி தியாகியா நின்னு வேடிக்கை பார்க்கலாம் .அவ புருஷனுக்கு வாக்கு கொடுத்து மறு வாழ்க்கை கொடுக்கலாம்.
இதெல்லாம் உங்களால் முடியும் ! பொம்பள என்னால் என்ன பண்ண முடியும் ? அவள் கண்கள் அருவியாய் உடைப்பெடுத்தது .
இதில் உன் தவறு எங்கேயும் இல்லையே கீர்த்தி …..அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான் .
உங்க வாழ்க்கையை கெடுத்து விட்ட குற்றவுணர்வில் தத்தளிக்கிறேனே ….இது போதாதா ?
எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தால் பரவாயில்லை . எல்லாம் தெரிந்த பிறகு எப்படி ? அவள் விசும்பினாள் .
அழாத கீர்த்தி ….உன்னோட கண்ணர் என்னை ரொம்பவே வேதனை படவைக்கும் ! அவள் முகம் பற்றி கலங்கும் விழி பார்த்து பேசினான் .
நம்ம வாழ்க்கை கொஞ்சம் சிக்கலானது ! உங்களை நான் இயல்பா ஏத்துக்கிட்டாலும் வினோவை காதலிச்சவளா தான் உங்க கண்ணுக்கு தெரியும் .
நீங்க என்னை நெருங்கும் போதெல்லாம் வினோவோட ஒரு காலத்தில் கூடி வாழ்ந்தோமேனு எனக்கு உறுத்தும் . நான் என்ன பாவம் பண்ணினேன் எனக்கு ஏன் இப்படி உறுத்தலான வாழ்க்கை அமையனும்?
இந்த சிக்கலை எப்படி சமாளித்து வெளியில் வருவேன் ? இது மனம் சார்ந்த சிக்கல் ….என்னால் உங்க வாழ்க்கையும் பாழா போகுது ! வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள் .
இவளை சிறு பெண் என்று எண்ணியிருந்தோமே ….உளவியல் சிக்கலை எப்படி பேசுகிறாள் ! உண்மையில் வியந்து தான் போனான் .
கீர்த்தி என்னைக்கு உன் கழுத்தில் தாலி கட்டினேனோ அன்னைக்கே வினோ பொண்டாட்டிக்கு வாழ்க்கை கொடுக்க தாலி கட்டினதா நினைக்கலை …நான் மூணு வருஷமா காதலிச்ச என் கீர்த்திக்கு தாலி கட்டுறேன்னு நினச்சு தான் கட்டினேன்.
மனசை போட்டு குழப்பிக்காதே ….!
எப்போ நீங்க என்னை உயிரா விரும்பினீங்கன்னு தெரிந்ததோ அப்போவே நீங்க என் கண்ணுக்கு தெய்வமா தான் தெரிந்தீங்க !
நான் தெய்வம் இல்லை …எலும்பும் சதையும் கொண்ட சாதராண மனுஷன் .
எனக்கும் ஆசாபாசம் உண்டு ….ஆயிரம் ஆயிரம் கனவுகள் உண்டு !
உங்களோட இயல்பான வாழ்ககை வாழ நன் என் மனசை தயாரா படுத்திக்கணும் ! அதுவரை எங்களுக்காக உங்க வாழ்க்கையையே அர்பணித்த உங்களுக்கு என்னால் முடிந்த பணிவிடை செய்கிறேன் கரம் கூப்பினாள் .
கீர்த்தி இது என்ன அசிங்கமா பணிவிடை அது இதுன்னு …
உண்மையை தான் சொன்னேன் ,எனக்கு உங்களை ஆர்க்கும் போதெல்லாம் பாவமா இருக்கு ….உருகிப் போனாள் .
எதுக்கு பாவம் வரணும் ? எனக்கு உன் மேல் ஈர்ப்பு இருந்திருந்தால் அப்போவே வந்து லவ் அது இதுன்னு உளறியிருப்பேன் … எனக்கு உன் மேல அளவு கடந்த பிரியம் . அது ஏன்னு எனக்கு தெரியாது . ஏன்னா ஒரே நாளில் உன்னை கண்டு மயங்கி காதலில் விழுந்துடலை .ஒவ்வொரு நாளா உன்னை பார்த்து ஒவ்வொரு நொடியா எனக்குள் ரசித்து நான் சேமித்த காதல் இது ! அந்த நினைப்பை உயிருள்ளவரை மறக்க முடியாது .
என்னால இந்த நிமிஷம் வரை உன்னைத் தவிர வேறொருத்தியை விளையாட்டா கூட நினைக்க முடியாது .
நீ தெய்வம் பணிவிடைன்னு அபத்தமா பேசவே வேண்டாம் ….நீ என்னோட ரைட் ராயல் வைஃப் . மிஸஸ் அஸ்வின் . உனக்கு எந்த குற்றவுணர்வும் வேண்டாம் .
என்கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ! உனக்காக மட்டுமே நான் ! இந்த ஜென்மமே உனக்காக தான் . எந்த சூழ்நிலையிலும்” உனக்கென இருப்பேன் “,
உன் மேல் பாய்ந்து என் ஆண்மை வேகத்தை தனிச்சுக்கனும்னு என்னைக்கும் நினைக்க மாட்டேன் ! நீயா விரும்பினா தான் நம் வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு போகும் .அதுவரை நீயும் குழந்தையும் என் நிழலில் பாதுகாப்பா இருக்கீங்கங்கிற நிம்மதியும் திருப்தியும் எனக்கு போதும் .
இவ்வளவு நேரம் சரிக்கு சரி பேசிக்கொண்டிருந்தவள் அவன் காலடியில் மண்டியிட்டாள்.
ஏய் …ச்சீ ….எழுந்திருடி …அறைஞ்சேன்னா பாரு ! அசடு மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டு ….சட்டென்று காலைப்பற்றியவளை அள்ளிக் கொண்டான் .
அள்ளிக் கொண்டவள் மார்பில் பாதைந்து விட்ட அழுகையை தொடர்ந்தாள் .
ஏய் கீர்த்தி என்னம்மா குழந்தை மாதிரி …. அவனுக்குமே விழியை மறைத்தது உவர் நீர் .
என் தாயே என்னை வேண்டாமென்று தலை மூழ்கிய பின்னும் எனக்காக இவ்வளவு பண்றீங்களே …எனக்கு அம்மா அப்பா கடவுள் எல்லாம் நீங்க தான் ! அழுதபடியே அவனை இறுக்கிக் கொண்டாள் .
அப்போ புருஷன் இல்லையா ? கேலியாய் சிரித்தான் .
சசீ போங்க ….வெட்கத்துடன் அவனை மார்பில் அடித்தாள் .
சிணுங்கியவளை இறுக்கமாய் அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் .
அழுது மனசை பலகீனப்படுதிக்காதே …நீ அழுதால் என்னால் தாங்கிக்க முடியாது . ஐ லவ் மை கீர்த்தி ….மீண்டும் அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினான் .
அவன் என்றோ சொல்ல நினைத்த ஐ லவ் யூ வை நான்கு ஆண்டுகள் கழித்து சொல்லிவிட்டான் .
உணர்ச்சியின் பிடியில் சிக்குண்டு இருந்தவள் அவன் கரம் பற்றி இதழ் பதித்தாள் .
இந்த நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல நாள் , எதிர்பாராத அதிர்ஷ்டம் அமையும் ! சிரிப்புடன் அவள் முத்தமிட்ட கரத்தை ஆசையாக வருடினான் .
அவளுக்கு வெட்கமாகி போனது ….அழுத்தமாய் தலையை கவிழ்த்துக் கொண்டாள் .
சரி இன்னும் கொஞ்சம் மிச்சசம் வை ! இப்போ போய் தூங்கு ! கண்சிமிட்டி சிரித்தான் .
error: Content is protected !!