Skip to content
Post Views: 1,686
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -18
Advertisement
டெல்லியில் காலை பொழுது நன்றாக விடிய..
Advertisement
Advertisement
திவ்யாவுக்கு தன் மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் உணர..
மெல்ல கண்விழித்தாள்,, ஆண்டவர்கனி திவ்யாவை அணைத்து தூங்கி கொண்டு இருக்க.
Advertisement
இவர் எப்படி என்கிட்ட வந்தார் என்றவள், எழுந்து கொள்ள பார்க்க கனி விடமாட்டேன் என்பது போல் அணைத்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தான் அவளை.
திவ்யா பட் என்று அவன் கன்னத்தில் ஒரு அறை குடுத்தாள்,, “ஆ….” வென்று கன்னத்தில் கை வைத்தவன். அவளிடம் இருந்து விலக..
“மூஞ்ச பாரு, நாலு மாசமா விட்டு போயிட்டு, கட்டி பிடிச்சு தூங்குற மூஞ்ச பாரு” என்று புலம்பியபடியே எழுந்து கொள்ள பார்க்க..
ஆண்டவர்கனி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “ஏன்டி என்னை அடிச்ச” என்றான்..
“உம்… உங்களை கொல்ல கூட எனக்கு உரிமை இருக்கு, அடியோட விட்டேன்னு பாருங்க மதுரை பஸ்” என்றவள் எழுந்து ஓய்வு அறைக்கு சென்று வந்தாள்..
கனி எழுந்து அமர்ந்து இருக்க..
“காபி வேணுமா” என்றாள்..
“உம்..” என்று தலையாட்டிய எழுந்தவனுக்கு திவ்யா உதவ வர..
“வேண்டாம் நானே போயிட்டு வருவேன்” என்று அவளை தடுத்து அவனே ஓய்வு அறைக்கு சென்று வந்தவன் ஹாலில் அமர..
சுட, சுட காபியை அவன் முன் வைத்தவள்..
அவளுக்கு பெரிய டம்புளரில் பால், ரஸ்க், சில நட்ஸ்கள் என்று ஒரு பௌலில் வைத்தாள். முதலில் நட்சை மென்று தண்ணீர் குடித்தவள். பாலில் ரஸ்கை முக்கி உண்டாள்..
ஆண்டவர் கனி திவ்யாவையே பார்த்திருந்தவன்,, என்ன காலையிலே இவ்வளவு சாப்பிடுறா என்று பார்க்க..
ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தவள், “உங்களுக்கு என்ன காலையில சாப்பிட வேணும் சொல்லுங்க ஆர்டர் போடுறேன்” என்றாள்..
“உனக்கு என்ன சொல்லுறீயோ அதையே வாங்கு”.என்றான்..
“சரி என்றவள் உணவை ஆர்டர் பண்ணிக்கொண்டு இருக்கும் போதே,, திவ்யாவின் தந்தை காலை உணவு எடுத்து கொண்டு வந்திருக்க..
அப்பாட ஹோட்டல் சாப்பாடு இல்ல என்று நினைத்தவள்.. அவரிடம் இருந்து உணவை வாங்கி டைன்னிங் டேபளின் மேல் வைத்தவிட்டு.
தந்தையிடம் “காப்பி போடவா பா” என்றாள்..
“இல்லடா காலையில் சாப்டேன். நீங்க சாப்பிடுங்க, மதியம் நானே சாப்பாடு கொண்டு வர்ரேன்.. என்றவர் சிறிது நேரம் கனியிடம் பேசிவிட்டு சென்றிருக்க..
திவ்யா குளித்து விட்டு வந்தவள்
ஆண்டவர்கனியை பார்த்து குளிச்சுட்டு வர்ரீங்களா சாப்பிடலாம் என்றாள்..
“இல்லை கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றான்..
அவளோ “உம்”.. என்று சொல்லி விட்டு. அவளின் அம்மா என்ன குடுத்து விட்டார் என்று பார்க்க இட்லியும், மட்டன் கொழம்பும் இருந்தது.
“சூப்பர்” என்றவள். இரண்டு இட்லியை வைத்து, அதில் கறி கொழும்பை ஊற்றி சாப்பிட்டவள். இன்னும் ஒன்னு சாப்பிடவோமா என்றவள் இட்லியை எடுக்க போக.. வேண்டாம் போதும்..
கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுவோம் இல்லண்ணா உள்ளே இருக்குற இரண்டுக்கும் மூக்கு வேர்த்திரும்.. சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்திரும் என்றவள், தனக்கு தானே பேசிக்கொண்டே இரண்டு இட்லியையும் மட்டும் உண்டவள்…
ஒரு பெரிய சைஸ் வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு வந்து ஆண்டவர்கனியின் அருகில் அமர்ந்து மெதுவாக சாப்பிட..
திவ்யாவை பார்த்த ஆண்டவர்கனி. முன்பு இவள் இப்படி சாப்பிட்டது இல்லையே, இப்போது நம் பிள்ளைக்காக சாப்பிடுகிறாள் என்று நினைத்து பார்த்திருக்க..
“என்ன பார்வை” என்று கேட்டாள்..
“ஒன்னுமில்லை” என்றான் கனி..
அவளோ உடலை நெளித்து சோபாவில் அப்படி, இப்படி சாயந்து ஒரு வாழைப்பழத்தை உண்டு முடிக்க..
“பிடிக்கல்லணா கீழே போடு, ஏன் கஷ்டப்பட்டு சாப்பிடுற”.
“எல்லாம் பிடிச்சு தான் இருக்கு. உள்ளே இருக்காங்கள, உங்க ரெண்டு குட்டியும் எப்போ என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது, அவங்களுக்கு புடிக்காத புட் சாப்பிட்டா போதும் எல்லாம் வெளியே வந்திரும்” என்றாள்.
“உனக்கு வாமிட் வருமா” என்றான்.
“வாமிட்டா குடம், குடமா வரும் கனிசார், இரண்டு குட்டி உள்ளே இருந்து கிட்டு என்னை பாடா படுத்துது” என்று சொல்லி விட்டு அவளின் வயிற்றை தடவ..
“நான் வேனா சத்தம் போடவா” என்றான்.
அவளோ “நீங்க சொன்னா உங்க பிள்ளைகள் கேட்டுக்கு வாங்களா” என்றாள்..
“என் பிள்ளைகள் என் பேச்சை கண்டிப்பா கேட்பாங்க” என்றவன்.
“இங்கே வா” என்று அவளை தன் முன் நிற்க வைத்தவன்..
வயிற்றை அவன் முகத்தருகே கொண்டு வந்தவன். “அம்மா பாவம்டா செல்ல குட்டிங்களா, அம்மா உங்களுக்காக தான் நிறைய சாப்பிடுற, நீங்க அம்மாவை வாமிட் பண்ண வச்சு தொந்தரவு பண்ண கூடாது சரியா” என்றவன், திவ்யாவின் வயிற்றில் இருக்கும் தன் தங்க குட்டிகளுக்கு முத்தம் வைக்க, முதல் முதலில் பிள்ளைகளின் துடிப்பை உணர்ந்தாள் திவ்யா..
டாக்டர் பல முறை “வயிற்றில் உள்ள பிள்ளையின் துடிப்பு தெரியுதா” என்று கேட்க. இவளோ “எனக்கு துடிப்பை உணர முடியல டாக்டர் என்பாள்” இன்று ஆண்டவர் கனி தன் வயிற்றை தொட்டு பேசியதும் துடிப்பை உணர்ந்தவள்..
கனி திவ்யாவின் வயிற்றில் இருந்து முகத்தை எடுக்க பார்க்க, அவனை தன் வயிற்றோடு அணைத்து பிடித்தவள், குழந்தையின் துடிப்பை நன்கு உணர,.
ஆண்டவர் கனியாலும் துடிப்பை உணர முடிந்தது,, நிமிர்ந்து பார்த்த கணவன் நெத்தியில் முத்தம் வைத்தவள், அவனை அப்படியே அணைத்து வைத்திருந்தாள், கண்கலங்கி…
சிறிது நேரம் கழித்து விலகியவளை, தன் கையணைப்பில் கொண்டு வந்தவன்.. அவளை தன்னுள் புதைத்து பத்திரமாக வைப்பது போல் வைத்திருந்தான். இருவரும் வெகுநேரம் எதுவும் பேசவில்லை அமைதியாக இருவரும் இருக்க”..
உன்னை விட்டு இனி ஒரு நிமிசம் இருக்க மாட்டேன் என்பது போல் திவ்யாவை அணைத்து வைத்திருக்க..
இனி என்னை விட்டு போ பார்க்கலாம் என்பது போல் திவ்யா பார்த்திருந்தாள்..
“சாப்பிடுங்க” என்றவள் அவனுக்கு காலை உணவை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க..
திவ்யாவுக்கு ஒரு வாய் ஊட்டி விட்ட பின்னே உண்டான் கனி..
திவ்யா அதன் பின், ஆண்டவர் கனியிடம் சண்டை போட வில்லை, எப்பொழுதும் ஆண்டவர் கனியின் கை அணைப்பிலே இருந்தாள்.. திவ்யாவின் நான்கு மாத பிரிவை இருவரும் உணர்ந்தனர்..
மூன்று வேளைக்கும், திவ்யாவின் தந்தை வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுக்க, இருவரும் உண்டு விட்டு..வர போற தன் பிள்ளைகளை பத்தி பேசிக் கொண்டு இருந்தனர்.. 5 நாள் கழித்து ஆண்டவர் கனிக்கு கொஞ்சம் நன்றாக நடக்க முடிய..
“ஊருக்கு போலாமா திவ்யா” என்றான்..
அவளோ அமைதியாக இருக்க, “சொல்லுடா” என்றவன்.. “உனக்கு எங்கே இருக்க விருப்பமோ சொல்லு” என்றவன்..
“மதுரையில கொஞ்ச நாள் இருக்கீயா, இல்லை விருதுநகரில் வீடு பார்க்கவா” என்றான்…
அவளோ அமைதியாக அவனை பார்க்க. “சொல்லு இனி உன் விருப்பம் தான், உனக்கு எங்க விருப்பம் சொல்லு அங்கே இருக்கலாம், இனி உன்னை கஷ்டபடுத்த விரும்பல, மதுரையில வீடு பார்க்கவா”.
“வேண்டாம்” என்றவள் “நம்ம வீட்டுக்கே போலாம்” என்றாள்..
“வேண்டாம் திவி இந்த மாதிரி நேரத்துல உனக்கு எந்த டென்சனும் இருக்க கூடாது. ஒன்னுக்கு இரண்டு பிள்ளைகள் வைத்துல இருக்கு, உன் மனதும், உடம்பும் நல்லா இருந்தா தான், பிள்ளை நல்லா பிறக்கும், சொல்லு” என்றான்.
“நம்ம முதலில் விருதுநகர் போவோம், அங்கே போயிட்டு சூழ்நிலை பார்த்து முடிவு பண்ணலாம்” என்று சொல்ல..
“உன் இஷ்டம்” என்றவன்..
பிளைட் டிக்கெட் இருக்கா என்று பார்க்க. அன்று மதியமே டிக்கெட் இருக்க.
“மதியம் டிக்கெட் இருக்கு போடவா” என்றான்..
“உம்”.. என்றவள் அவளின் பொருள்களை ரூம்பில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டு இருக்க..
அவளின் பின் இருந்து அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டவன் “எங்க வீட்டுக்கு வரதுக்கு நன்றி” என்றான் அவளின் காதில்..
அவளுக்கு தெரியாதா அவனின் எண்ணம், அவனுக்கு தன் குடும்பம் எந்த அளவுக்கு பிடிக்கும் என்று பக்கத்தில் இருந்து பார்த்தவள் ஆயிற்றே..
அவன் தனக்காக தான் தனி வீடு பார்க்கிறேன் என்கிறான், என்று தெரியும், உண்மையில் அவனுக்கு தனியே வீடு பார்ப்பது பிடிக்காது என்று இவளுக்கும் தெரியும்,, பரவாயில்ல இந்த அளவுக்கு அவன் இறங்கி வந்ததே போதும் என்று நினைத்தவள்.
அவனுக்காக அவன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தாள்..
அங்கே உள்ளவர்கள் ஒன்னும் கொடுமை காரர்கள் இல்லையே ஏதோ ஒரு கோபம் என்றே தோன்ற..
தன்னை பின் இருந்து அணைத்திருந்தவனை முன்னே கொண்டு வந்தவள்.
“உங்களுக்கு உங்க குடும்பம் எவ்வளவு முக்கியமுன்னு தெரியும், எனக்காக நீங்க தனியே போகலமுன்னு பேசியதே எனக்கு ரொம்ப சந்தோசம்” என்றவள்..
“போலாம்”. என்று இருவரும் மதுரை வந்து சேர்ந்தனர்..
ஆண்டவர் கனியின் டிரைவர் காரை மதுரை ஹேர்போர்ட்டுக்கு எடுத்து வந்திருந்தார்..
இருவரும் ஏர்போர்ட்டில் இருந்து விருதுநகர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..
ஆண்டவர்கனி டிரைவரை காரை நிறுத்திவிட்டு சோரூம் போக சொல்லிவிட்டு..
சோர்வாக இருந்த திவ்யாவை மெல்ல அழைத்து வீட்டிற்குள் வந்தான்.
வீடே அமைதியாக இருக்க இரவு நெருங்கி கொண்டு இருந்தது..
வீட்டின் அனைத்து லைட்டையும் போட்டவன். அவளை சோபாவில் உட்கார வைத்து விட்டு. காரில் இருந்த பேக்குகளையும் எடுத்து வந்து ஓரமாக வைத்து விட்டு திவ்யாவை பார்க்க..
அவளோ கண்மூடி சோபாவில் சாய்ந்து இருந்தாள்..
திவ்யாவின் அருகில் வந்தவன் “என்னடா” என்று தலையை வருட..
“பசிக்குது, பால் வேணும்” என்றாள்..
“இதோ” என்றவன் தன் தாயின் அறையையும், யோகா சித்தியின் அறையையும் பார்த்தான். இருவரும் அவர்ரவர் அறையில் இருந்து கொண்டு வரமால் இருப்பதை பார்த்தவன்.. நாம தனி வீடு பார்த்தது சரி தானோ என்று நினைத்து.
கிச்சன் சென்று பார்க்க, பால் காய்ச்சி இருந்தது, நாட்டு சர்க்கரை டப்பாவை தேடிக்கொண்டு இருந்தான்..
error: Content is protected !!