Skip to content
Post Views: 1,655
யோகாவும், லட்சுமியும் அவர்கள் அறையில் கோபமாக இருந்தனர்,
நேற்று இரவு ராமசுப்பு வந்து கனி தனி வீடு பார்க்க சொல்லி இருக்காணாம், என்று சொல்லி புலம்பியவர், ‘அவன் இஷ்டப்படி தனியே போனா போகட்டும், நீங்க யாரும் அவன் கிட்ட இத பத்தி ஒன்னும் பேச கூடாது என்று சொல்லி இருந்தார்..
Advertisement
ஆண்டவர் கிச்சனின் எதையோ தேடுவதை பார்த்த யோகா மனது கேட்காமல் அவர் அறையில் இருந்து வெளியில் வர.
திவ்யா சோபாவில் அமர்ந்திருப்பது மட்டும் தெரிய..
Advertisement
Advertisement
“வந்தவுடனே என்மகனை வேல வாங்குற” என்று முணங்கிய படியே கிச்சன் சென்றவர்..
அங்கே நாட்டு சர்க்கரை டம்பாவை தேடிக்கொண்டு இருந்த ஆண்டவர் கனியை பார்த்த யோகா “என்ன வேணும் கனி” என்றார்..
Advertisement
“சித்தி” என்றவன்..
“நாட்டு சர்க்கரை” என்றான்.
“இதோ” என்று டப்பாவை எடுத்து கொடுத்தவர். “ஏன் உன் பொண்டாட்டி வந்து காபி போட மாட்டாளா” என்றார்..
அவரை பார்த்து சிரித்தவன், “பசிக்குதுன்னு சொன்னா சித்தி” என்றவன்..
“ரஸ்க் வேற ஏதாவது பிஸ்கேட் இருக்கா சித்தி” என்றான்..
“உம்”என்றவர் அவன் கேட்டதை எடுத்து கொடுத்து விட்டு கிச்சனில் இருந்து அவர் அறைக்கு செல்லும் முன் திவ்யாவை பார்க்க, தன் மேடிட்ட வயிற்றின் மேல் கையை வைத்திருந்தவள். சோபாவில் சாய்ந்து தலையை பிடித்தபடியே அமர்ந்திருக்க..
அவருக்கு தெரியாத என்ன, பார்த்தவுடனே கண்டு பிடித்துவிட்டார்.. அவளின் தோற்றம் வேற கொஞ்சம் எடை கூடி தெரிய.
திரும்பி மகனை பார்த்தவர் “மாசமா இருக்காளா” என்றார்..
கனி “ஆமாம் சித்தி” என்றான்..
திவ்யாவின் அருகில் வேகமாக சென்றவர். அவளின் கையை பிடிக்க.
தன் கையை யாரோ பிடிப்பதை உணர்ந்தவள். மெல்ல கண் திறந்து பார்த்து “யோகாம்மா” என்றாள்..
அவளின் “யோகாம்மா” என்ற அழைப்பை கேட்டு உருகியவர்..
அவளை அணைத்து கொண்டு “என்னை மன்னிச்சிடுடா உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன், யாரோ பண்ண தப்புக்கு உன்னை” என்று அழ..
“யோகாம்மா வேண்டாம்” என்று அவரை சமாதானம் பண்ண..
தங்கை அழும் சத்தம் கேட்டு லட்சுமியும் அவர் அறைவிட்டு வெளியே வர,,
யோகாவுக்கு மனது கேட்கவில்லை “உன்னை இந்த மாதிரி நேரத்துல தனியா விட்டுட்டேனேமா என்னை மன்னிச்சிடு” என்று மீண்டும் கண்கலங்க..
லட்சுமிக்கு ஒன்னும் புரியவில்லை ஏன் தங்கை அழுகிறாள், இவ்வளவு நேரம் இருவரும் கனி தனி வீடு பார்க்கிறான் என்று தெரிந்து இருவரையும் சேர்த்து திட்டிக் கொண்டு இருக்க, இப்போ தங்கை அழுவதை பார்த்தவர், யோகாவிடம் சென்று “ஏன்டி அழுவுற” என்றார்.
திவ்யாவின் முகம் பாராமல்..
“அக்கா நம்ம திவி மாசமா இருக்க பாரு” என்று சொல்ல..
அப்போது தான் தங்கை பக்கத்தில் உள்ள திவ்யாவை பார்க்க, அவள் தோற்றமே மாறி இருக்க… உற்று பார்க்க, அவளின் மேடிட்ட வயிறு தெரிய, பக்கத்தில் உள்ள சோபாவில் டக்கென்று அமர்ந்து லட்சுமிக்கோ, யோகா சொன்ன விஷயத்தில் சந்தோஷம், அழுகை என்று வர.
பக்கத்தில் நின்று இருந்த மகனிடம் “ஏன் கனி சொல்லல்ல” என்றார் குரல் நடுங்க..
“எனக்கே ஒருவாரமா தான் தெரியும்மா” என்றான்.
என்ன என்பது போல் அக்காவும், தங்கையும் பார்த்துக்கொள்ள..
அவளோ ஆண்டவர் கனி குடுத்த பாலை குடித்துக்கொண்டு இருக்க..
யோகாவும் , லட்சுமியும் இருவரும் பிரிந்து மூன்று மாதங்கள் மேல் இருக்குமே என்று நினைத்து.
“எத்தனை மாதம் திவ்யா” என்றார் லடசுமி..
“5 வது மாதம் நடக்குது அத்தை” என்றவள். ஆண்டவர் கனியை பார்க்க.
“என்ன வேணும் நாச்சியா”..என்றான்.
“இன்னும் பசிக்குது” என்று கேட்க..
யோகா “என்னாடா வேணும், மீன் குழம்பு இருக்கு சாப்பிடுறீயா” என்றார்.
“உம்” என்று திவ்யா அரிய நாச்சி தலையாட்ட..
யோகா வேகமாக சென்று, பொறித்த மீன், மீன் குழம்பு, சாதம் வைத்து சாதத்தை பிசைந்து திவ்யாவுக்கு ஊட்ட, அவர் குடுத்ததை ஆசையாக வாங்கி உண்டாள் திவ்யா,.
ஆண்டவர்கனிக்கு திவ்யா உண்பதை பார்த்து மனது நிறைந்திருந்தது, அவனுக்கு நீண்ட நேரம் நின்றிருப்பது கால் வலிக்க, அவனும் சோபாவில் அமர்ந்து. யோகா சித்தி தன் மனைவிக்கு ஊட்ட, லட்சுமி திவ்யாவுக்கு தண்ணீர் கொடுப்பதை பார்த்திருந்தான்..
தன் இரு தாயும் தன் மனைவியை பார்த்துக் கொள்ளும் அழகை பார்த்து ரசித்து அமர்ந்திருந்தான்..
தட்டில் இருந்த உணவை ஊட்டி முடித்தவர், “இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடுறீயா திவ்யா” என்றார் யோகா..
“போதும் யோகாம்மா நைட்டு சாப்பிடுறேன்” என்றாள்..
“சரிடா” என்றவர் கைகழுவ போக..
ஆண்டவர்கனி ஒரு பெரிய சைஸ் வாழைப்பழத்தை கொண்டு வந்து திவ்யாவிடம் தர..
“கனி இப்ப தானே சாப்பிட்டா, கொஞ்சம் நேரம் கழிச்சி குடு” என்றார் வாழைப்பழத்தை..
“இல்ல சித்தி அவளுக்கு பத்தாது, இரண்டு குழந்தைகள் வயித்துல இருக்கு அதனால, அதிகமா சாப்பிடுவா” என்றவன்.. வாழைப்பழத்தை உறித்து அவளிடம் தர..
லட்சுமிக்கு, யோகாவுக்கு வருத்தம் போயி சந்தோஷத்தில் “இரட்டை பிள்ளைகளா” என்று கேட்டு மருமகளை அணைத்து முத்தமிட்டு, “கனி ரொம்ப சந்தோஷம்” என்றவர் உடனே அவர்கள் கணவன் மாறுக்கு போன் போட்டு சொல்ல..
அடுத்த 10 நிமிசத்தில் இனிப்போடு வந்துவிட்டனர், புது வரவை எதிர் நோக்கி,, ஆண்டவர் கனியின் வீடு, சந்தோஷத்தில் நனைந்தது..
நீண்ட நாள் கழித்து அனைவருக்கும் சந்தோஷம்..
ஆண்டவர் கனியின் அருகில் சென்ற திவ்யா, “ஸ்ரீஜெயம் சித்தப்பாவுக்கு சொல்லுங்க’ என்று சொல்ல.. ஆண்டவர் கனி போனில் ஸ்ரீஜெயமுக்கு விஷயத்தை சொல்ல.. உடனே நளினியை அழைத்து கொண்டு இனிப்போடு பார்க்க வந்து விட்டார்..
நளினியையும், ஸ்ரீ ஜெயத்தையை பார்த்த கனி வீட்டார். சந்தோஷத்தில் வாங்க, வாங்க என்று உபசரிக்க.
திவ்யாவுக்கு இருவரையும் பார்த்து சந்தோஷத்தில் அருகில் அமரத்தி கொண்டு பேசிக்கொண்டு இருந்தாள். ஸ்ரீஜெயம் திவ்யாவின் தலையை வருடி விட்டவர் சந்தோஷம்டா என்றார்..
திவ்யா நளினியை பார்க்க. “உன் சித்தப்பனுக்கு ரொம்ப சந்தோசம்” என்றவர் அவளின் கையை பிடித்துக்கொண்ட நளினி “எத்தனை நாள் மாசம்” என்று கேட்டுக்கொண்டு இருக்க..
பெரியசாமிக்கு விசயம் தெரிந்து திவ்யாவுக்கு பிடித்த மில்க் ஸ்விட்டை வாங்கி கொண்டு
வீடு வந்தவன், ஸ்ரீஜெயத்தையும், நளினியை பார்த்தவன். வாங்கி வந்த இனிப்பை சேரின் மீது வைத்து விட்டு அவன் அறைக்கு சென்று விட.
ஸ்ரீஜெயமுக்கு அவன் யாரிடமும் பேசாது போயிவிட்டது ஒருமாதிரி ஆகிவிட..
“நாங்க கிளம்புறோம்” என்றவர். நளினியை பார்த்து தலையசைக்க, “வர்ரோம் திவ்யா உனக்கு ஏதாவது சாப்பிட வேணுமுன்னா சொல்லுடா அத்தை செஞ்சு எடுத்துட்டு வர்ரேன், பாத்துக்கோ உடம்பை” என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு இருவரும் வீடு வந்தனர்..
அனைவரும் பெரியசாமியை எண்ணி வருத்தப்பட..
திவ்யா எழுந்து பெரியசாமி அறைக்கு போக..
பெரியசாமி அன்புவின் மாமனையும், தாயையும் பார்த்து கோபத்தில் இருந்தான்..
திவ்யா “மச்சான்” என்று அழைத்துக்கொண்டே பெரியசாமி அறைக்கு செல்ல..
“வாங்க அண்ணி” என்றவன் அவளை ஒரு சேரில் அமர வைத்தவன்.
“நல்லா இருக்கீங்களா அண்ணி” என்றான்.
“நான் நல்லா இருக்கேன் மச்சான், நீங்க எப்படி இருக்கீங்க” என்றாள்..
“உம்” என்றவன்..
வெளியே சென்று அவன் வாங்கி வந்த இனிப்பை திவ்யாவிடம் தந்து வாழ்த்துக்கள் அண்ணி என்றான்..
அவனை பார்த்து சிரித்தவள், “தாங்யூ மச்சான்” என்றவள். “என் மேல் கோபமில்லையே”.. என்றாள்..
“அண்ணி உங்க மேல எனக்கு என்ன கோபம், என் மேல தான் எனக்கு வருத்தம்” என்றான்..
“நான் உங்களுக்கு பொண்ணு பார்க்கட்டுமா மச்சான்”.. என்று கேட்க.
“வேண்டாம் அண்ணி கொஞ்ச நாள் ஆகட்டும்”.. என்றான்.
அவனை ஒரு நிமிடம் பார்த்தவள்..”நீங்க வேணா பாருங்க உங்களுக்கு எங்களை எல்லாம் விட, சூப்பர் பொண்ணு அமைய போகுது, கட்டுனா உங்களை தான் கட்டுவேண்ணு வந்து நிக்க போறா, நீங்க சந்தோஷமா இருப்பீங்க” என்றவள் வெளியே செல்ல..
பெரியசாமி திவ்யா சொல்லியதை கேட்டு சிரித்துக்கொண்டான், என்னை வேணும்முண்ணு ஒரு பொண்ணு ஒத்த காலுல, காமெடி பண்ணாதீங்க என்றான் மனதில்.
திவ்யா சொன்னது போலவே அங்கே ஒருத்தி இவனை நினைத்து உருகி கொண்டு இருந்தாள், அவள் தான் மீனாட்சியின் நாத்தனார் கமலி..
கமலியின் தாய் போனில் அவளிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்..
“எப்போதான் உனக்கு மாப்பிள்ளை பார்க்குறது சொல்லு நீயு, படிச்சு முடிச்சுட்டு வந்தவுடன் மாப்பிள்ளை பாக்கவா கேட்டோம், கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போறேன்னு சொன்னா. சரி ஓகே சொல்லி, நீயும் வேலைக்கு போயி இரண்டு வருஷம் ஆச்சு, எப்போ கேட்டாலும் கொஞ்ச நாள் போகட்டுமுன்னு சொல்லுற. இனி உன் பேச்சை கேட்க முடியாது, இந்த சனிக்கிழமை நீ ஊருக்கு கிளம்பி வர, மாப்பிள்ளை வீட்டுகாரங்க பூ வைக்க வாராங்க, வந்திரு” என்றவர் போனை வைக்க..
நான் செத்து கூட போவேன் ஆனா பெரியசாமியை தவிற வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று மனதில் சொல்லிக் கொண்டே ஆபிஸ் கிளம்பினாள் கமலி,,
ஏய் நீ விரும்புறது அவனுக்கு தெரியுமா, என்று ஒரு மனம் கேட்க. எப்பவோ சொல்லியாச்சு அந்த மரமண்டைக்கு தான் புரியல என்றவளின் நினைவு. 6 வருடம் பின் நோக்கி சென்றது..
கமலி முதல் முதலில் பெரியசாமியை தன் அண்ணன் கல்யாணத்தில் பார்த்த ஞாபகம் வந்தது..
பெரியசாமி அப்போது தான் படித்து முடித்து சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு வந்திருந்தான்..
முதல் பார்வையிலே பெரியசாமியை விரும்பிவிட்டாள் கமலி..
அவள் அப்போது தான் 12 டாம் வகுப்பு முடித்து விட்டு , காலேஜ் செல்ல எல்லா காஜேசுக்கும் அப்பிளேகேஷன் போட்டு இருந்தாள்..
தன்னை சுத்தி, சுத்தி வந்த கமலியை பார்த்த பெரியசாமி சிறிய பெண் பாவாடை தாவணியில் இருந்த குட்டி பெண்ணை, ஏதோ வயது கோளாறு என்று அவளை தவிர்க்க.
அவளோ அவன் முன்னாடி வந்து, வந்து நிற்பது, பேசுவது, ஏதாவது கேட்பது என்று தன் அருகில் அடிக்கடி வர..
அவள் பண்ணும் அலம்பல் தாங்க முடியாதவன். அவளை தனியே அழைத்து “என்ன உனக்கு வேற வேலையே இல்லையா, என்னை ஏன் சுத்தி, சுத்தி வர, காபி குடுக்குற, பார்த்து, பார்த்து வெட்கப்பட்டு சிரிக்குற, என்ன விசயம்”?.. என்றான்..
அவளோ அவனை பார்த்து வெட்கப்பட்டு சிரித்து “உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு,ஐ லவ் யூ” என்று கூற..
“அடிச்சேனா பல்லு எல்லாம் விழுந்துரும், ஸ்கூல் போற வயசுல லவ்வா, ஒழுங்க போயி படி” என்றான்..
“நான் ஒன்னும் ஸ்கூல் போல காலேஜ் படிக்க போறேன்”..
“போன மாதம் ஸ்கூல் தானே போன” என்றான்..
அவளோ “ஆமாம்” என்று தலையாட்ட..
“இனிமே என் பக்கம் வந்த” என மிரட்டியவனின் தோற்றம் அவள் கண்முன்னாடி வர.
“பனமரம்” என்று அவனை கொஞ்சியவள், உன்னை தவிற வேற யாரையும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன் பெரியசாமி என்றவளின் கண்கலங்கி இருந்தது.
கமலியால் அவள் எண்ணத்தை கூட வெளியில் சொல்ல முடியவில்லை..
அவளுக்கு பெரியசாமியின் கல்யாணம் ஏற்பாடு கேள்விப்பட்டு மனம் நொந்து போனாள்..
அதைவிட அவன் தற்கொலை முயற்சி பண்ணி, ஹாஸ்பெட்டலில் இருப்பதை தெரிந்து வெட்கி போனாள்.. நான் உன்னை இங்கே உருகி, உருகி காதலித்து கொண்டு இருக்கிறேன், நீ இன்னொருத்தியை விருப்பபட்டு கல்யாணம் பண்ண போகி, அந்த கல்யாணம் நின்னு, உன்னை எனக்கு பிடிக்கல என்றவளின் மனம்,, பொய் சொல்லாத என்று கேலி பேச..
இந்த ஐந்து வருடமா அவனை உயிருக்கு, உயிராக கமலி விரும்பிக்கொண்டு இருந்தாள்.. ஆண்டவர்கனிக்கு திருமணம் முடிந்த பின் தான், பெரியசாமிக்கு பெண் பார்ப்பார்கள், அப்போது தன் விருப்பத்தை சொல்லலாம் என்று இவள் காத்திருக்க..
ஆனால் நடந்ததோ வேறு, ஆண்டவர்கனிக்கு பார்த்த பொண்ணை இவன் திருமணம் செய்ய போவதாக தன் வீட்டில் இவனை பத்தி பேசியதை கேட்டவள் அதிர்ந்து போனாள்..
அது மட்டுமா, இவனெல்லாம் ஒரு தம்பியா அண்ணணுக்கு பார்த்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லுறான் என்று கமலின் தந்தை பெரியசாமியை திட்டுவதை கேட்டவள், எப்படி சொல்வாள் தன் விரும்புவதை. மனதிலே போட்டு புதைத்து விட்டாள்..
ஆனால் பெரியசாமியை தவிற அவளால் வேற ஒருவனை அவளால் திருமணம் செய்ய முடியாது அதில் உறுதியாக இருந்தாள்..
கமலி இப்போது பெங்களுரில் ஒரு ஐ, டி கம்பெனியில் வேலை செய்து வருகிறாள்..
கமலியை பார்த்தவுடனே அனைவருக்கும் பிடிக்கும் பேறழகி அவள்..
தன்னை ஒருத்தி உயிராக நினைத்து உருகி காதலித்து கொண்டு இருக்க..
பழையதை நினைத்து வருந்திய பெரியசாமி இனிமேல் தனக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தான்…
விடுவாளா கமலி……
error: Content is protected !!