Skip to content
Post Views: 1,461
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -23
Advertisement
அவள் சென்றது தெரியாமல் ஸ்ரீஜெயம் “பாப்பூ,, மஞ்சு” என்று அழைத்துக்கொண்டிருக்க…
Advertisement
Advertisement
ஒரு பெண் வந்து “சார் மஞ்சுமா உங்களை கார் பார்கிங் வர சொன்னாங்க” என்று கூற..
“எங்கே இருக்கு கார் பார்கிங்மா”?.. என்றார் அப்பெண்ணிடம்..
Advertisement
“வாங்க சார்” என்று அழைத்து சென்று கார்பார்கிங்கில் அப்பெண் விட.
தன்னை நோக்கி வரும் காரை பார்த்தவாறே ஸ்ரீஜெயம் நிற்க..
அவரின் முன் வந்து காரை நிறுத்திய மஞ்சு,, முன்பக்க கதவை திறந்து விட. யார் என்று பார்த்தவர் தன்னவள் என்று.
காரின் உள்ளே வந்து அமர்ந்த ஸ்ரீஜெயத்தில் “சீட் பெல்ட் போடுங்க” , என்றவள், அவர் சீட் பெல்ட் போடவும், கார் வேகம் எடுத்தது..
தன்முன்னே அமர்ந்து கொண்டு அந்த மலைகளின் மேல் லாவகமாக காரை ஓட்டும் மஞ்சுவை பார்த்திருந்தான் ஸ்ரீஜெயம்…
அவர் அப்போது பார்த்த மஞ்சு இவள் இல்லை. சைக்கிள் ஓட்டவே சரியாக தெரியாமல் தடுமாறுபவள், இன்று காரை ஓட்டும் மஞ்சுவை பார்த்திருந்தார்….
இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக வர,, ஸ்ரீஜெயம் அவளையே பார்த்திருந்தார்..
யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்தியவள்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள். அவர் முகத்தை பார்க்க தயங்கியவள். பின்பு பார்த்து “ஏன் என்னை தேடி வரல ஸ்ரீ” என்று கேட்டு கதறி அழுத பெண்ணை, பார்த்தவருக்கு கண்ணீல் நீர் வர “பாப்பூ” என்று அவளை அழைக்க.
திரும்பி பார்த்தவள். சிறுகுழந்தை போல் இரண்டு கையைவிரித்து அவனோடு வருவது போல் நீட்ட.. அவளின் நீண்ட கையை பிடித்து இடுப்போடு தூக்கி தன்னோடு சேர்த்து இலுத்து அணைத்துக்கொண்டான் அவளை…அவள் கதறிய, கதறல் கேட்டு துடித்து போனான் ஸ்ரீஜெயம்..அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..
அவளின் அழகை கூடுதே தவிற குறையவில்லை , “பாப்பூ, பாப்பூ போதும்மடா அதான் நான் வந்துட்டேனே, ஏன்டா அழுவுற, அழாதடா பாப்பூ” என்று ஒரு கை அவளின் தலையை வருடி விட..இன்னொரு கை அவளின் முதுகை நீவி விட.. அவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விசும்பா ஆரம்பித்தாள்.
ஸ்ரீஜெயம் அவளின் தலை கோதி, “என் கிட்ட வந்து இருக்கலாமே பாப்பூ, ஏன்மா என்னை தேடி வரல”?..
அவனின் முகத்தையே பார்த்தவள், “நீங்க ஏன் என்னை தேடி வரல? ஸ்ரீ” என்றாள்.. அவரின் கன்னம் தொட்டு..
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தவளின் முகத்தை பார்த்தவள், “சொல்லுங்க என்னை ஏன் தேடி வரல”..
கண்களை மூடி காரின் சீட்டில் சாய்ந்தவர்..”நீ” என்றவர்… சொல்ல முடியாமல் தவிக்க..
“ஸ்ரீப்பா, சொல்லுங்க, என்னை தேடி ஏன் வரல!?”…
கண்களை மூடியபடியே “உன் அப்பன் நீ ஒரு பெண் குழந்தையை பெத்துட்டு செத்து போயிட்டேன்னு ஊருல எல்லார்கிட்டையும் சொல்லி வச்சிருந்தான், நீ இந்த உலகத்துல இல்லன்னு நெனச்சு வாழ்த்துட்டு இருந்தே பாப்பூ” என்றவரின் கண்ணீல் கண்ணீரை கண்டவள்..
“நான் செத்துட்டேன்னு நெனச்சீங்களா ஸ்ரீ” என்றாள்..
“ஆமாம்” என்றவனின் உடல் குழங்கி அழ..
“ஸ்ரீ.. ஸ்ரீப்பா வேண்டாம்,, என்னால நீங்க அழுவுறத பார்க்க முடியல ஸ்ரீப்பா” என்று அவனின் கழுத்தின் வளைவில் அவள் முகத்தை புதைத்து அவனை அணைத்து கொண்டவள் “வேண்டாம் ஸ்ரீ, வேண்டாம்”என்று அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர அழுத பெண்ணை..
அவளை தன்னை நோக்கி பார்க்க வைத்தவர், கண்களை துடைத்துக்கொண்டு..
“எவ்வளவு ஆசையோடு துபாயில் இருந்து, உன்னை பார்க்க வந்தேன் தெரியுமா பாப்பூ, மறுநாள் உனக்காக வாங்கி வந்த பொருளை எல்லாம் எடுத்துட்டு காலேஜ் போனேன். நீ இப்போ காலேஜ் வர்ரது இல்ல, உனக்கு கல்யாணமாகிருச்சுன்னு சொன்னாங்க, என்னால நம்ப முடியல… உனக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க உங்க பக்கத்து வீட்டுங்காரன பார்த்து கேட்டேன்..
அவர் தான் சொன்னாரு,, உனக்கு கல்யாணம் பண்ண நிறைய மாப்பிள்ளை பார்த்தாங்க போல, நீ கல்யாணத்துக்கு ஒத்துகாம பிரச்சனை பண்ணதால .. உனக்கு சாப்பாடு போடாம ஒரு ரூம்ல அடச்சு வச்சுட்டாங்கலாமே… அப்பறம் உன்னை ஹாஸ்பெட்டல சேர்த்து.. எல்லாம் சரி பண்ணி உன்னை மிரட்டி, கொடுமை பண்ணி அடிச்சு, இலங்கையில உள்ள பையனுக்க கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்கலாமுன்னு சொன்னார், எனக்கு மனசே ஆரல. என் பாப்பூவை நான் விட்டு போயிருக்க கூடாதுன்னு நெனச்சேன்.. அப்பறமா, உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்கு, அந்த குழந்தை உன் ஹஸ்பண்ட் கிட்ட வளருது,, நீ இறந்துட்டேன்னு சொன்னாரு”..
“என்னால என் சோகத்தை கூட வெளியில காட்ட முடியல,, என்ன மறக்க முடியாம தான் நீ இறந்துபோயிருப்பான்னு நெனச்சேன்.. உன்னை கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சுடாங்கன்னு நெனச்சு இருந்துட்டேன் பாப்பூ,, எனக்காக நீ காத்திருப்பேன்னு நான் நினைக்கலடா பாப்பூ,, உன்னை இப்படி தனியா போராட விட்டுட்டேனே நான் பாவி” என்று அவனின் தலையில் அடித்து கொண்டவர் சீட்டில் சாய்ந்து கண்ணீர் விட்டவர்..
“எவ்வளவு வேதனையா இருத்துச்சு தெரியுமா பாப்பூ, சில முறை நானும் செத்து போயிடலாமான்னு கூட நெனச்சிருக்கேன்.. அப்போவவது உன்கிட்ட வந்து சேர்ந்திரலாமா,, உன்னை பார்க்கலாமான்னு கூட நெனச்சி இருக்கேன்.. ஆனா இப்படி உயிரோடு நீ என் உயிரை சுமந்துட்டு இருப்பேன்னு எனக்கு தெரியாதுடா,, தெரிஞ்சு இருந்து உன்னை தேடி ஓடி வந்து இருப்பேன்,, என் பாப்பூ, என் கிட்ட இருக்க, இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்”,, என்றவன், அவளை இருக்கமாக அணைத்து அவள் முகம் முலுக்க ஆவேசமாக முத்தம் மிட..
அவன் குடுத்ததை ஆசையாக வாங்கி கொண்டது பெண்…
அவள் கண்ணோடு கண்கலந்து அவளை புன்னகை யோடு பார்த்தவன்..
“வந்துட்ட என் கிட்ட வந்துட்டா என் பாப்பூ”,,.. என்றவர் அவளை பூபோல அணைத்து நெத்தியில் முத்தமிட.. கண்மூடி அதை அனுபவித்தாள் மஞ்சு..
இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருக்க…
“நீ என்னை தேடி வந்து இருக்கலாமே பாப்பூ,” என்றான்..
“என்னால முடியல ஸ்ரீ, என் அப்பா ஊருல எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்லிட்டாரு.. நீங்க துபாயில் இருந்து எப்போ வருவீங்கன்னு எனக்கு தெரியாது. நான் மறுபடியும் வந்த, என் அப்பா என்னை என்ன செய்வாரோ என்ற பயம்,, அப்பறம் எனக்கு கல்யாணமாகிருச்சுன்னு , நீங்க நெனச்சு வேற யாரையாவது நீங்க கல்யாணம் பண்ணி இருந்த,, அதை பாக்குற சக்தி எனக்கு இல்ல,, அந்த நொடியே, நான் செத்துருவேன்”.. என்றவளை…
“பாப்பூ”.. என்றிருந்தார் ஸ்ரீ..
“இல்ல ஸ்ரீ அத என்னால கேட்க கூட முடியாது, நீங்க என்னைக்காவது என்னை தேடி வருவீங்கன்னு தெரியும் ஸ்ரீ,,. ஆனா நீங்க என் ஸ்ரீயா வே கல்யாணம் பண்ணாம இருப்பீங்கன்னு நெனைக்கல…
நமக்கு மட்டும் ஏன் ஸ்ரீ இப்படி நடக்கனும்,, நம்ம என்ன பண்ணோம்” என்றவளை..
“வேண்டாம் இனிமேல், எதுக்கும் நீ அழ கூடாது பாப்பூ” என்றவன்..
“இங்கே எப்படி வந்த பாப்பூ”..
“நான் ஹாஸ்பெட்டலுல இருந்து தப்பிச்சு வெளியில வந்து ஏறுன பஸ் இந்த புத்தர் கோவில் வந்து நின்னுச்சு.. எனக்கு ரொம்ப நேரம் உட்கார முடியல.. கீழ இறங்கி கோவில் வாசலில் உட்கார்ந்து இருந்தேன்..
ஒரு புத்த சன்யாசி என்னை பார்த்து உள்ள வான்னு கூப்பிட்டு சாப்பாடு குடுத்து இங்கே இருமான்னு சொன்னாரு.. என்கிட்ட உனக்கு யாரு இருக்கான்னு கேட்டார்
யாரும் இல்லண்ணு சொன்னேன்.. சரிமா இங்கே இருந்து மக்களுக்கு தொண்டு செய்துட்டு உன் பையனை வளத்துக்கோன்னு சொன்னாரு.. நானும் இங்கேயே இருந்து தொண்டு செஞ்சேன் , இங்கே யோகா கிளாஸ் நடக்கும், யோகா கத்துகிட்டேன்.. யோகாவில் எல்லா டிகிரியும், கோர்சும் முடிச்சேன், யோகா டீச்சராகி நம்ம மகனை வளத்துட்டேன், என்னைக்காவது என்னை தேடி நீங்க வருவீங்கன்னு நெனச்சேன், வந்துட்டீங்க”.
“கடவுள் உன்னையும், நம்ம குழந்தையும் பத்துறமா பாத்துகிட்டார் போல, அது போதும் எனக்கு”..
“நீங்க எப்படி என்னை தேடி இந்த இடத்துக்கு வந்தீங்க ஸ்ரீ”..
“நம்ம பையன் ஹரி தான் கூட்டிட்டு வந்தான்”..
“ஹரியை பார்த்தவுடனே கண்டு பிடிச்சீங்களா”..
“இல்லை பாப்பூ, ஆதிநாரயணன் சார் தான் உன்னையையும், நம்ம பிள்ளையையும் தேடிட்டு இருந்தாறாம்,, ஹரியை பார்த்தவுடனே உன் பேர் என்ன? உன் அம்மா பேர் என்னன்னு கேட்டு உன் போட்டவை பார்த்து கண்டுபிடிச்சிட்டாரு”.
அப்படியா என்பது போல் பார்த்தவள்.. “ஆதி சார் ரொம்ப நல்ல மாதிரி,, குழந்தைக்கு அப்பா யாருன்னு என்கிட்ட நிறைய வாட்டி கேட்டு இருக்காரு நான் தான் உங்கள பத்தி அவர் கிட்ட சொல்லல்ல”..
“வைத்தியர் அப்பா கூட என்னை நல்லா பாத்துகிட்டாங்க,, கடைசியா ஒரு வார்த்தை கூட சொல்லாம வந்துட்டேன் நான்”…. என்று வருத்தப்பட்டவள்.
“ஆமாம் ஆதி சார் என்னை ஏன் தேடுனார்”.. என்றாள் மஞ்சு..
error: Content is protected !!