Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 23 2

 அவள் முகத்தையே பார்த்திருந்த  ஸ்ரீஜெயம்,,”நீ ஒரு பொருளை  அவர் கிட்ட விட்டுட்டு வந்துட்ட, அத  உன்கிட்ட  சேர்க்கத்தான் உன்னை தேடி இருக்கார்”..

“என்ன? பொருளா! அப்படி  ஒன்னும் என்கிட்ட சொல்லிக்குற மாதிரி  எந்த பொருளுமே இல்லையே”..



Advertisement

“அது நம்மலோட பொருள்  தான்,மஞ்சு அதுக்கு  உயிர் இருக்கு” என்றவரை பார்த்தவள்..

“என்ன ஸ்ரீப்பா சொல்லுறீங்க!உயிர் இருக்குற  பொருளா, அது என்னது எனக்கு புரியல”..

Advertisement

Advertisement

ஸ்ரீஜெயம்  ஒரு பெரு மூச்சை  விட்டவர், “நான்  சொல்லுறதை அமைதியா கேளு, அழுது ஆர்பாட்டம்  பண்ண கூடாது, சரியா”…

“ஸ்ரீ  என்ன சொல்லுறீங்க  எனக்கு பயமா இருக்கு”..

Advertisement

“பொறுமையா  கேளு”, என்றவர் ‘அது உனக்கு பிறந்தது  ரெட்டை குழந்தைகள்”  என்றார்..

என்ன? என்பது  போல் பார்த்தவள்.

“இல்ல ஸ்ரீப்பா ஒரு குழந்தை  மட்டும் தான் எனக்கு பிறந்துச்சு”..

“இல்லடா நமக்கு ரெட்டை  குழந்தை  தான்”..

“இல்ல  ஸ்ரீ  பா”.

“இல்லடா ஆதியோட அப்பா, உன்னை  செக் பண்ணி பார்த்தப்போ,  உன் வயித்துல ரெண்டு குழுந்தை இருந்துருக்கு, அதில் ஒரு குழந்தைக்கு ஹார்ட் பீட் சரியா துடிக்கல.. போல அதனால  உன்கிட்ட இரண்டு குழந்தையின்னு சொல்லாம மறைச்சு இருக்காங்க போல”.. என்றார்..

மஞ்சு அதிர்ச்சியாக ஸ்ரீ ஜெயத்தை  பார்த்திருக்க,,.

அவளின் காதோர முடிவை ஒதுக்கி விட்டவர்..”உனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது, அடுத்து  தான் ஹரி பிறந்தான், நீ ரெண்டு நாளா மயக்கத்துல இருந்ததால   உனக்கு தெரியல பாப்பூ”. என்றவுடன்..

“நீங்க  சொல்லுறது உண்மையா ஸ்ரீ   எனக்கு இன்னொரு பெண்  குழந்தை பிறந்ததா”! என்று அதிர்ச்சியாகி கேட்க..

“ஆமாம்”  என்று ஸ்ரீஜெயம் தலையாட்ட..

“ஐயோ, ஐயோ” என்று தன் தலையில்  அடித்துக்கொண்டவளை. கையை பிடித்துக்கொண்டவன்,, “வேண்டாம் பாப்பூ வேண்டாம்” என்று அவளை தடுக்க..

“என் பிள்ளையை விட்டுட்டு வந்துட்டேனே, ஐயோ எனக்கு தெரியாது ஸ்ரீ, என் பிள்ளை, அதுவும் பெண் பிள்ளை”  என்று  மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு  அழ..

“பாப்பூ, பாப்பூ அழதடா,,  நம்ம பிள்ளை  நம்ம கிட்ட தான் இருக்க”..

“என்னது, நம்ம பிள்ளை இருக்காளா  எங்க, இருக்க?”..

“உன்னை பார்க்க அவளும் வந்து இருக்க.. ஹரிகூட  வீட்டுல இருப்பா”. எப்படி  உங்க  கூட நம்ம  பொண்ணு என்பது போல்  அவனை பார்க்க.

தனக்கு  பிறந்த  பிள்ளை என்று தெரியாமலே  அவளை தன் பிள்ளைபோல் பார்த்துக்கொண்டதையும், தன் உயிராக நினைக்கும்  மருமகனின்  மனைவிதான் நம்ம பொண்ணு  பார்கவி என்று கூற..

“கல்யாணமாகிருச்ச  நம்ம பாப்பாவுக்கு”..

“ஆமாம் டா என் அக்கா பையனை தான் நம்ம பொண்ணு  கல்யாணம் பண்ணி இருக்க”..

“நான் இப்பவே  என் பொண்ணை பார்க்கனும் ஸ்ரீப்பா”.. என்று அழுது புலம்பியவளை..

“வா  போலாம்” என்று மஞ்சுவின் வீட்டுக்கு  அழைத்துக்கொண்டு வர..

அங்கே  மஞ்சுவின்  வீட்டு  வாசலில் அமர்ந்திருந்தாள் பார்கவி..

“உள்ளே வா பார்கவி” என்று அன்பு அழைக்க..

“உங்க  வேலையை மட்டும் பாருங்க குட்டா” என்றாள்  கோபமாக..

அவளுக்கு  தன் தாயை பார்க்க விடாமல் அழைத்து வந்து விட்டானே என்ற கோபம்..

“ஏய் உள்ள வந்து உட்காருடி, வாச்மேன் மாதிரி  வாசல்ல நிக்குற, வந்து உள்ளே உட்காரு, அவங்க வரும் போது வரட்டும்”..

அவன்  சொல்வதை காதில் கேட்காமல், பார்கவி தெருவையே பார்த்து அமர்ந்திருக்க.

ஹரியும் வந்ததில் இருந்து அவளை பார்க்கிறான், அவள் வீட்டினுள்  வந்து ஒரு நிமிடம் கூட உள்ளே இல்லை, வெளியே சென்று  அமர்ந்து  தன் தாயை பார்க்க காத்திருப்பதை  பார்த்தவனுக்கு  மனம் கேட்க வில்லை,”வாங்க சிஸ்டர் அம்மா வருவாங்க”  என்று அழைக்க..

அவளின் கண்ணீல் உள்ள கண்ணீரை துடைத்தவள், அம்மாவை பார்க்காமல் வரமாட்டேன் என்பது போல் வாசலில் அமர்ந்திருக்க..

ஹரிக்கு  பசியெடுக்க, கிச்சன் சென்று பார்த்தான், அவன் இன்று வருவான் என்று தெரிந்த  மஞ்சு தோசைக்கு சாம்பார் வைத்து விட்டே யோகா கிளாஸ்க்கு சென்றிருந்தாள்.. மஞ்சு மகனுக்கு அனைத்து வேலைகளையும் சொல்லி கொடுத்திருந்தாள்..

சாம்பாரை சுடுபண்ணியவன்.. தோசையை சுட ஆரம்பித்தான்..

அன்புவிடம் வந்து “சாப்பிடுக்க  அன்பு, சாப்பிட்டு மாத்திரை போட்டு படுங்க”  என்றான்.

அன்பு மனைவியை பார்க்க, “நான் பாத்துக்கிறேன் அன்பு” என்றவன்.

 தன் உடன் பிறப்புக்கு உணவை எடுத்துக்கொண்டு வாசலின்  அருகே வந்து அமர்ந்து. “சாப்பிடுங்க சிஸ்டர்” என்று  தோசை  தட்டை  நீட்ட..

“வேண்டாம் ஹரி, அம்மா வரட்டும்”..என்றவள் தெருவை ஆசையாக பார்த்திருக்க.

“பார்கவி  அம்மா வருவாங்க, நீங்க முதல்ல  சாப்பிடுங்க”.. என்றவனை.. “இல்ல ஹரி அம்மா வரட்டும்”, என்றவளிடம்..

தோசையை  பிய்த்து அவளுக்கு ஊட்ட வர.. அவனின் பாசத்தில் உருகியவள் வாயை திறந்து வாங்கி கொண்டவள்.. அவன் தோள் சாயந்து குழங்கி  அழ..

தன் உடன் பிறப்பை தோள் அணைத்தவன்..

“என்னாச்சு சிஸ்டர்”..

“அம்மாவை பார்க்கனும் ஹரி.. எவ்வளவு நான் ஏங்கி இருக்கேன் தெரியுமா,  அம்மா பாசத்துக்காக. நமக்கு  ஒரு அம்மா இல்லையே. நம்ம கஷ்டத்தை சொல்ல, விரும்பியதை கேட்க.. இன்னும் எவ்வளவோ.. நிறைய முறை அழுதிருக்கேன்..

இப்போ எனக்கு அம்மா, அப்பா, தம்பி நீ,, எல்லாரும் கிடைச்சிருக்கீங்க, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா, ஸ்ரீப்பா எனக்கு உண்மையிலே  அப்பான்னு  தெரிஞ்சப்போ  எவ்வளவு சந்தோஷ பட்டேன் தெரியுமா.. உனக்கும் அப்படி தான்,, அப்பா இல்லாமல் நீயும் வருத்தப்பட்டு இருப்பதானே” என்று கேட்க..

“ஆமாம்” என்று தலையாட்டியவனின் கண் கலங்கி இருந்தது..

எத்தனை பேர் தன்னிடம் உனக்கு அப்பா இல்லையா,, அப்பா செத்துட்டாரா, இல்ல உங்க அம்மா டைவர்சியா, என்று எத்தனை கேள்வி தன்னை பார்த்து கேட்டிருப்பார்கள்,, அத்தனைக்கும் இன்று விடை கிடைத்திருக்க..

அதை அனுபவிக்கதான் முடியவில்லை மருத்துவனுக்கு.. உன் அப்பா எங்கே, அப்பா எங்கே என்ற வார்த்தைகளை கேட்டு, கேட்டு, பதில் சொல்ல முடியாமல் இருகி போன மனம். இன்றும் அப்படியே இருக்க..  தன் முன் கண்கலங்கி இருந்த தமக்கை பார்த்தவன்..

சாப்பிடு என்று ஊட்டி விட..

“நீ சாப்டீயா ஹரி”.

“இல்லை” என்றவனுக்கு..

 “நீ  தான் நேத்து  நைட்டெல்லாம்   கண்முழிச்சு  சாப்பிடமா வண்டியோட்டிட்டு வந்த நீயும் சாப்பிடு” என்று அவனுக்கு அவள்  ஊட்ட..

இருவரின் கண்ணீலும் கண்ணீர். ஒன்றாக தாயின் வயிற்றில் உதித்து, வளந்து, பிறந்தவுடன் விதி இவர்களை  பிரித்திருக்க.

இன்று  தமக்கை தாயின் வடிவத்தில் இருந்து தனக்கு ஊட்டுவதை வாங்கிகொண்டவன்.. இனி நாம பிரியமாட்டோம் என்பது போல் இருவரும் ஊட்டி தங்கள்  ரத்த சொந்தத்தை பார்த்திருக்க..

அன்பு இருவரையும் பார்த்து உள்ளே  அமர்ந்திருந்தான்.

ஹரி பாருவை  பார்த்து, “எனக்கு கூட பிறந்தவங்க யாருமில்லையின்னு  நெனச்சு இருந்தேன், நம்ம அம்மா மாதிரியே  எனக்கு  ஒரு சிஸ்டர், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”.

“எனக்கும்  தான் ஹரி, எனக்கும் யாரும்  இல்லை, அப்பா  மட்டும் தான்  சித்தி நல்லா மாதிரி தான், ஆனாலும்  அம்மா மாதிரி  யாரும் இருக்க  முடியாதுல. அம்மா இருந்தும் ஆனாதையா வாழ்ந்து இருக்கேன்”. என்று சொல்லி அழ.

“இட்லி” என்றான் அன்பு, உள்ளே  இருந்து இவள் பேசியதை கேட்டு..

“பார்கவி  பீல் பண்ணாத, அது தான் நம்ம எல்லாம் சேர்ந்துட்டோமே பிறகு என்ன?.. என்று ஹரி  பேசிக்கொண்டு இருக்கும் போதே..

அவர்கள்  வீட்டின் முன் கார் வந்து நிற்க..  மஞ்சு காரில் இருந்து வேகமாக இறங்கி வாசலுக்கு வர..

 தான் பெற்ற இரு பிள்ளைகளும்  தன் வீட்டு  வாசல் படியில் ஒன்றாக சேர்ந்து அமர்ந்திருப்பதை கண்டவர்..

அப்படியே நிற்க..

கார் சத்தம் கேட்டு வாசலை பார்த்த  பார்கவி தன்னை போலவே உருவ அமைப்புடன் சுடிதார்  அணிந்து வந்த தாயை பார்த்திருந்தாள்..

மஞ்சுவுக்கு தன் பிம்பம் போல்  சிறு  பெண் தன் மகனோடு அமர்ந்திருப்பதை பார்த்தவர். என் பொண்ணா?.  நான் பெற்ற  பெண்ணா?  என்று  ஒரு நிமிடம் பார்த்தவர்.. இவ்வளவு பெரிய பொண்ணா  எனக்கு, கடவுளே ஏன் என் பொண்ணை  என்னிடம்  இருந்து  பிரித்தாய் என்று மனதில்  புலம்பியவர்.  தன் இரு பிள்ளைகளையும் பார்த்து  கண்ணீரோடு  நிற்க.

பார்கவி இவ்வளவு நேரம் தேடிய  தாய்  தன் முன் தன்னை பார்த்து கலங்கி நிற்பதை  பார்த்து அப்படியே  நிற்க..

ஸ்ரீஜெயம் காரில் இருந்து  இறங்கி வந்தவர், தன் குடும்பத்தை பார்த்து அவரும் கண்கலங்கி நிற்க..

மஞ்சு தான்  முதலில்  பார்கவியை பார்த்து  “பிள்ளை  என் பிள்ளை” என்று பார்கவியை  பார்த்து கையை நீண்டி அழைக்க..

“அம்மா”! என்று  கேவலுடன்  தன் தாயை வந்து  அணைத்திருந்தாள் பார்கவி..

“பிள்ளை, பிள்ளை  என் பிள்ளை”  என்று மகளை அணைத்துக்கொண்டு  மஞ்சு அழுக..

“அம்மா, அம்மா”  என்று கதறி அழுதாள் பார்கவி..

இருவரையும் சேர்ந்து அணைத்து  கண்கலங்கினார் ஸ்ரீஜெயம்..

 ஹரி தன் தாய் அழுததை பார்த்ததில்லை இன்று  கதறி அழும்  தன் தாயை பார்த்து கண்கலங்கி நிற்க..

மகனை பார்த்த ஸ்ரீஜெயம் வா என்று  பக்கத்தில் அழைக்க. அவனும்  இவர்களை   பார்த்து நிற்றவன். அருகில் வர. நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக  நிற்க..

அவர்களை அப்படியே நிற்பது போல் போட்டோ எடுத்தான் அன்பு..

 தங்கள் மேல் வெளிச்சம் படுவதை உணர்ந்தவர்கள்  திரும்பி பார்க்க..

அன்பு தான் அவர்களை  போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தவன்.. “அப்படியே  நில்லுங்க”  என்று சில படங்களை எடுத்தவன். “எல்லாரும் அப்படியே  குடும்பமா சிரிக்க பாப்போம்”  என்று அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர..

மஞ்சு மகளையே  தொட்டு தடவி பார்த்து இன்னும் இயல்புக்கு வரமால் இருக்க..

“அத்தை இங்க பாறுங்க”  என்று  அன்பு மஞ்சுவை அழைக்க..

மஞ்சு   அன்புவை யார் என்பது போல் பார்க்க..

“என் ஹஸ்பென்ட்  அன்பு” என்றாள் பார்கவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!