Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 7

நீங்காத  நினைவு  நீ

   அத்தியாயம் – 7



Advertisement

Advertisement

Advertisement

        யோகாவிற்கு   திவ்யா சொல்லியது  புரிவதற்குள்,  அவள்   ஆட்டோவில்  ஏறி  சென்று விட, பதறி போனவர்.

போலிஸ்  டேஷன் வாசல் விரைந்தார், ஆண்டவர்கனியும் அவனின் தந்தை, தம்பி அனைவரும்  எல்லா பார்மாலிட்டிசும்  முடித்து வெளியில்  வந்தனர்.

Advertisement

 ஆண்டவர் கனியிடம்  சென்ற யோகா  கனி  திவ்யா ஆட்டோவில் ஏறி போயிட்டா, எங்க போறேன்னு கேட்டேன்  தெரியல்லு  சொன்ன நம்ம வீட்டுக்கு வர மாட்டலாம், அவங்க வீட்டுக்கும்  போக மாட்டலாம்,  எனக்கு பயமா இருக்கு கனி.

எந்த பக்கம் போனா சித்தி என்றவன், பெரிய சாமியிடம்  பைக்  சாவியை  குடுடா என்றவன்.   வண்டி மெயின் ரோட்டிற்கு  பறந்தது.

அவனை கடந்து போகும் எல்லா ஆட்டோவையும்  பார்த்து கொண்டே சென்றான்.

திவ்யா  மதுரை பஸ்சில் ஏறுவதை பார்த்தவன், வண்டியை   பஸ் ஸ்டாப்  பக்கத்துல உள்ள ஒரு கடை வாசலில்  நிறுத்தி விட்டு, வேகமாக சென்று  பஸ்சில்  ஏறிவிட்டான்.

ஆண்டவர் கனி ஏறியதும்  பஸ் கிளம்பியது.

திவ்யா எங்கே  என்று  தேடியவன், அவள்  இரண்டு பேர் உங்காரும் சீட்டில் சன்னல்  ஓரம் அமர்ந்து இருந்தாள்.

அவளின் அருகில்  சென்று  அமர்ந்து கொண்டவன், அவளையே பார்த்திருந்தான்.

யாரோ  பக்கத்தில் அமர்ந்ததை உணர்ந்தவள்  திரும்பி  பார்த்தாள்.

ஆண்டவர்கனி  என்றதும்  சீட்டில்  இருந்து  இறங்க  முற்பட்டவளை, கன்டெக்டர்!  மா  உங்காரும்மா, மதுரை  வந்தா  சொல்லுறேன், பஸ்  கிளம்பியிருச்சு  இனி நிக்காது  உங்காரு என்று சத்தமிட்டார்.

கன்டெக்டர் கத்தவும், அமைதியாக சன்னல்  ஓரம்  திரும்பி  உங்கார்ந்து  கொண்டவளுக்கு, என்னை  இவன்  விட மாட்டான்  போலயே  என்று  எண்ணி கண்கலங்கி  அமர்ந்து இருந்தாள்.

அவளின்  தோள் மீது  கைவைத்தவன். அவளை  திரும்பி  உங்காரு  திவி என்றான்.

அவனின்  கையை தட்டி விட்டவள், கண்மூடி  சீட்டில்  சாய்ந்து அமர்ந்து விட்டவளின்  கண்ணீல்  இருந்து  கண்ணீர்  வந்து  கொண்டு  இருந்தது.

அவளின்   கையை  எடுத்தவன், அவனின்  மார்ப்பின்  மீது  வைத்து  அழுத்தி கொண்டான்.

அவனிடம் இருந்த தன்  கையை  எடுக்க  போனவளை,

கையை எடுக்க  விடாமல், தன்  நெஞ்சோடு  சேர்த்து வைத்துக்கொண்டான்.

அவனிடம்  இருந்த தன்  கையை  எடுக்க  முடியாமல் கோப பட்டவள். அவனை  அடிக்க  ஆரம்பித்து விட்டாள்.

அவனோ  இன்னும் நகர்ந்து அடி  என்பது போல் அவளின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.

அவனை  தள்ளி  அமர  வைத்தவள்.

சீட்டில்  சாய்ந்து  அமைதியாக வாய்  மூடி அழ.

 அவள்   குலுங்கி   அழுவதை  பார்க்க  முடியாதவன், அவளை  தோளோடு  சேர்த்து  அணைத்து  கொள்ள.

முதலில்   அவனிடம்  முரண்டவள்,  பின்பு  அவனின்  தோள் சாய்ந்து  சத்தம்  இல்லாமல்  அழ.

அவளின்  தலையை  வருடி விட்டவன், சாரிடா,  சாரி உன்ன  அழ  வச்சுட்டேன். என்னை  மன்னிச்சுரு என்று  அவளிடம்  மன்னிப்பு  கேட்டான்.

சற்று  நேரம்  தேம்பியவள். அவனின்  தோளில்  முகத்தை  மறைத்து  கொண்டு  இருந்தாள்.

பஸ் மதுரையை  நோக்கி போய் கொண்டு  இருந்தது.

சிறிது நேரம் கழித்து  ஆண்டவர்கனியை  நிமிர்ந்து பார்த்தவள்  பசிக்குது  என்றாள்.

ஆண்டவர் கனி  டைம் பார்க்க   மணி 12  டை  நெருங்கி  கொண்டு  இருக்க.

திவ்யாவின்  தலை  கோதியவள்  10   நிமிசத்துல  மாட்டுதாவனி வந்துரும்  இறங்கி  சாப்பிடலாம் என்றவன்.  சாரிடா  காலையில் நீ சாப்பிடலையா?

இல்லை  என்று தலையாட்ட.

ஆண்டவர் கனியின்  போன் ஒலித்தது.

யோகா தான் அழைத்திருந்தார்.

திவ்யாவை பார்த்தியா.

உம்  பார்த்தேன் சித்தி  என் கூடதான் இருக்கா.

சரிடா,   பாத்துக்கோ என்று போனை வைத்தவர். வீட்டில்  இருக்கும்  அனைவரிடமும்  விசயத்தை  தெரிவித்தார்.

திவ்யா   போனில்  யார்  என்பது போல  கனியை பார்க்க.

சித்தி  உன்ன  கேட்டாங்க என்று பேச்சை முடித்துக்கொண்டான்.

திவ்யாவுக்கு  பசியில்  மயக்கம் வருவது போல இருந்தது. அவனின் தோளில் முகத்தை  அலுத்தி கொண்டவள்.  எப்போ  வரும்  மதுரை என்றாள்.

 இதோ   வந்துருச்சு டா  என்று  சொல்லிக்கொண்டு  இருக்கும்போதே, பஸ்  மதுரை  பேருந்து நிலையம் உள்ளே  நுழைந்தது.

இவர்களுக்காக  ஒருவர்  பஸ் நின்ற பக்கத்திலே  காரோடு நின்று இருந்தார். இவர்களை பார்த்தவுடனே  வாங்க தம்பி  வாங்கம்மா   என்றவர்  காருக் அருகில்  கூட்டி சென்றார்.

திவ்யாவை காரில் ஏறும்படி சொல்லி, அவனும்  ஏறிக்கொண்டான்.

 கார் ஆண்டவர் கனியின்   பர்னீச்சர் கடைக்கு சென்றது.

இவள் ஓரகண்ணீல்   எங்கே  போறான் என்று  பார்த்துக் கொண்டே  வந்தவள், பசிக்குதுன்னு  சொன்ன!  ஹோட்டல் கூட்டிட்டு போகாம  எங்கே  வந்திருக்கார் என்று காரில் இருந்து   இறங்கி பார்த்தாள், கடையின் மேலே  ஆண்டவர் பர்னீச்சர்,  என்று எழுதி இருந்தது.

காரில் இருந்து  இறங்கியவளை  வா திவ்யா என்று  கடையின் உள்ளே  அழைத்து வந்தான்.

அங்கே  வேலை  செய்பவர்கள்  ஆண்டவர் கனிக்கு வணக்கம் வைக்க.  அவர்களை பார்த்து தலை  அசைத்தவன்.

திவ்யா வா என்று  அழைத்துக் கொண்டு  லிப்டில்   ஏறி  மூன்றாவது  மாடிக்கு  சென்றான்.

அங்கே  ஒரு அறை இருந்தது. ஆண்டவர் கனி இங்கே வந்தால் கொஞ்சம்  நேரம்  ஓய்வு  எடுக்கவென்று  அந்த அறையை கட்டி  இருந்தான்,  ஒரு  ஹால், ஒரு பெட்ரூம்,  ஒரு பாத்ரூம் என்று எல்லா வசதிகலும்  இருந்தது.

அவளை  உள்ளே அழைத்து வந்தவன்  என்ன சாப்பிடுற, சொல்லு வாங்கிட்டு வர  சொல்லுறேன்.

எனக்கு தயிர் சாதம் இல்ல  சாம்பார்  சாதம்  இந்த மாதிரி வாங்கிட்டு வர  சொல்லுங்க என்றவள். ரெஸ்ட்ரூம் நோக்கி சென்று வந்தவள்,  அந்த  அறையை  பார்க்க  சுத்தமாக  இருந்தது, குடிக்க  தண்ணீர்,  பார்க்க ஒரு டி, வி,  ஏசி என்று சில  பொருள்கள் மட்டுமே இருந்தது. இவளுக்கு   உடல்  அசதியாக  இருக்கவே  ஆண்டவர் கனியை பார்த்தாள்.

அவன் யாரிடமோ  உணவு  வாங்கிட்டு  வர  போனில்  சொல்லி  கொண்டு  இருந்தான்.

திவ்யா அங்கே  இருந்த  ஓரு  சோபாவில்  கண்மூடி  படுத்து விட்டாள்.

போன்  பேசிவிட்டு  வந்தவன், படுத்து இருக்கும்  அவளை பார்த்து உள்ளே ரூம்புல  போய் படு திவ்யா, பத்து  நிமிசத்துல  சாப்பாடு  வந்துரும்.

அவளோ இங்கே இருக்கேன்  என்க.

சரி  என்றவன், நான்  போயி குளிச்சுட்டு வர்றேன்  என்று  அங்கே  கப்போர்டில்  இருந்து  ஒரு உடையை  எடுத்து  கொண்டு குளித்து விட்டு வந்தான்.

ஆண்டவர்  கனியின் கடையில் வேலை செய்யும்  ஒருவர்  உணவு வாங்கி வந்து. அவனிடம் கொடுத்து விட்டு சென்றார்.

கண்மூடி  இருந்த  திவ்யாவை    வா  சாப்பிடலாம் என்று அழைத்தான்.

மெல்ல  எழுந்தவள் அவன்  குடுத்த  சாம்பார்  சாதத்தை  மெதுவாக   சாப்பிட.

அவனும் நேற்றுலிருந்து   சரியாக  சாப்பிடததால் அவனுக்கு  ஒரு  மீல்ஸ்  சொல்லி  இருந்தான். அவனுமே  அவளோடு சேர்ந்து அமர்ந்து  சாப்பிட.

திவ்யா  அவனை  பார்க்காமல்  சாப்பிட்டவள், கை  கழிவி  விட்டு வந்து அதே சோபாவில்  அமர்ந்து கொண்டாள்.

ஆண்டவர்கனி  உண்பதிலே இருந்தே  தெரிந்தது  அவனுமே  பசியில்  தான்  இருந்தான் என்று, அவனை  பார்த்தும் பார்க்காதது  போல்  அமர்ந்து இருந்தாள்.

அவன்  சாப்பிட்டதை எடுத்து  சுத்தம்  பண்ணி வைத்து விட்டு. கைகழுவி  விட்டு . திவ்யா அமர்ந்து இருந்த  சோபாவில் வந்து அமர்ந்தான்.

அவளிடம்  பேச   நிறைய விசயம்  இருந்ததால்.

என்ன  முடிவு பண்ணி இருக்க  என்றான் திவ்யாவை  பார்த்து.

 முடிவுன்னா  எத  பத்தி  என்றாள்.

நீ ஏன் பஸ்சுல ஏறுன.

நான் டெல்லி  போறேன்.

 போயி.

 வேலைக்கு  போவேன்.

  வேலைக்கு  போயிட்டு.

ப்பிரண்ஸ்  கூட  தங்கி இருக்க போறேன்.

சரி  அதுக்கப்பறம்.

அது என் இஷ்டம், உங்க  கிட்ட சொல்ல  முடியாது.

ஏன்  சொல்ல  முடியாது, இப்போ  நீ தனி ஆலு கிடையாது  மிஸ்சஸ்  ஆண்டவர் கனி திவ்யா  புரிஞ்சதா. என்  பொண்டாட்டி. உன் இஷ்டத்துக்கு  உன்ன  விட முடியாது.  இனி நீ  என்  கூட தான்  விருதுநகருல  உள்ள நம்ம  வீட்டுல தான்  இருக்கனும்.

உனக்கு  வேலை  பார்க்கனுமுன்னா நான்  ஏற்பாடு  பண்ணி தர்ரேன். நீ   பேஷன்  டிசைனிங்  தானே  படிச்ச, உனக்கு  ஏத்த  மாதிரி  பிஸ்னஸ்  பண்ண ஏற்பாடு  பண்ணி  தர்ரேன். அத பண்ணு, அத  விட்டுட்டு  டெல்லிக்கு போறேன்னு  சொன்ன.

 சொன்னா, என்ன   பண்ணுவீங்க.

பண்ணு  அப்புறம் சொல்லுறேன்.

நீங்க  ரொம்ப பேசுறீங்க, நான்  போறேன்  என்று  எழுந்தவளை.

எங்கே போற?  என்று  அவளின் கைபிடித்து  அமர  வைத்தவன்,  சொன்னா கேளு.

நீங்க  சொன்னா  நான்  கேங்கனுமா முடியாது என்று எழுந்தவளை.

எழாத வாறு  பிடித்து கொண்டவன். கேட்டுத்தான்  ஆகனும், சொன்னா  கேளு, உள்ள போயி  கொஞ்சம்  நேரம் தூங்கு சாயங்காலம்  விருதுநகர் போகலாம்.  எனக்கு  கொஞ்சம்  கீழ கடையில வேலையிருக்கு  முடிச்சுட்டு  வர்ரேன்.

நீங்க  என்னை என்று அழுதவளை.

சும்மா, சும்மா  அழாத  இப்போ என்ன  நடந்து போச்சு.

என்ன  நடக்கனும், நான்  பாட்டுக்கு  நிம்மதியா  இருந்தேன். எனக்கு  ஏன்  தாலி  கட்டுனீங்க.

எனக்கு பிடிச்சது  தாலி  கட்டுனேன்.

உங்களுக்கு பிடிச்ச போதுமா, எனக்கு பிடிக்க  வேண்டாமா.

உனக்கு  என்னைய  புடிக்கும்  வாழ்ந்து பாரு.

 வாய்குள்ளே  ஆண்டவர் கனியை  இந்தியில்  திட்டியவளை.

சும்மா சத்தமா திட்டு  எனக்கு இந்தி மொழி தெரியும்  நாச்சி  குட்டி, மச்சானுக்கு   சரியா காது   கேட்கல  சத்தமா பேசு.

யாரு  மச்சான்.

நான் தான் உனக்கு மச்சான்.

நீங்க ஒன்னும் எனக்கு மச்சான் இல்லை. எனக்கு மச்சானா அது அன்பு மச்சான் தான்.

ஓ… அவன் தான் உனக்கு  மச்சானா, என்ன பாத்தா  உனக்கு மச்சான்  தெரியல.

ஆமாம் தெரியல.

ஆமா எங்கே   உன்  அன்பு மச்சான் போலிஸ் டேஷசன்  வரல, பயந்து ஓடிட்டானா.

மச்சான் ஒன்னும் ஓடல, சித்தப்பா தான்  அவர் இருந்த இன்னும்  பிரச்சனை  வருமுன்னு  நெனச்சு ஊருக்கு அனுப்பி வச்சுட்டார்.

அத விடு நம்ம பிரச்சனை வருவோம். அன்னைக்கு நீ வாக்கிங்  போறப்போ, நான் உன்னை  பார்த்து  தான்,முகத்தை திருப்பி  நின்னேன் தானே.

ஆமாம் என்று தலையாட்ட.

நீயேன்  என் கிட்ட வந்து பேசுன.

அது.. அது.. வந்து…

சொல்லு  நாச்சியா  ஒருத்தர்  நம்மல பார்த்து  மூஞ்ச  திருப்புறாங்கன்னா. நம்ம  என்ன  பண்ணுவோம், போடா பெரிய இவன்  என்னையா பாத்து  மூஞ்ச  திருப்புறாங்கன்னு , பாக்காம போயிட்டே  இருப்போம். நீ என்ன  பண்ண.

 நான்  உன்னைய  பாத்து மூச்ச திருப்புறேன்னு  தெரிஞ்சும் நீயே  வந்து  என்கிட்ட  பேசி, என்னைய  சீண்டி  விட்டியா இல்லையா.

அது மட்டுமா,  அன்னைக்கு  ஊர்வலத்துல  என்னைய  பார்த்து கொண்டே அந்த  அன்பு பய  கூட சேர்ந்து   ஜாலியா  டான்ஸ்  ஆடுனதான நீ, யீ,  சரி  ஓகே  அத விடு.

 உன்ன யாரு  என் தங்கச்சி மீனாட்சி  பொண்ண  தண்ணில  குதிச்சு  காப்பாத்த  சொன்னது. காப்பாத்த  மட்டுமா  பண்ண, நீயும்  சேர்ந்துல  தண்ணில  மயக்கமாகிட்ட.

நீ என்னை சுத்தி, சுத்தி  வந்த மாதிரி  இருந்துச்சு. உன்ன நான்  மறக்க நெனச்சா, நீ மறுபடியும்,  என்  கண் முன்னாடி  வந்த, நான் என்ன  பண்ண.

 இங்கே  பக்கத்துல வா என்று அவள் அருகில்  வந்தவன். அன்னைக்கு உன்ன  தெப்ப குளத்தில்  இருந்து  தூக்குனேன் பாரு,  நீயின்னு  நெனச்சு  தூக்கல  யாரோ  ஒருத்தர்ன்னு  நெனச்சு தான்   தூக்கினேன்.

  உன்ன பாத்தப்போ    கண்மூடி  சுயநினைவு  இல்லாமா  இருந்த  அப்போ  உன்ன எப்படியாவது  காப்பாத்தனுமுன்னு   நெனச்சு முதல் உதவி பண்ணிட்டு இருந்தேன்.

ஆனா அந்த அன்பு பய, உன்னை என்கிட்ட இருந்து  உன்ன பிரிச்சு  தூக்குன   அப்போ  உணர்ந்தேன்.   நீ  எனக்கு வேணுமுன்னு. அவன்  உன்னை  தூக்குனது எனக்கு  பிடிக்கல. என் பொருளை எவனோ  வைத்திருப்பத. நீ கண்முளிக்குற வரை என் உயிர் என்கிட்ட இல்ல.

அது  ஒரு பீல், உன்னால  அத உணர  முடியாது, அப்போ முடிவு பண்ணேன், என்னால  உன்ன விட்டு  கொடுக்க  முடியாதுன்னு, சொல்லு  நான் பண்ணுனது தப்பா.

இல்லை என்று  தலையாட்டியவளை.

எனக்கு உன்ன  ரொம்ப பிடிச்சுருக்கு  உங்க  வீட்டுல வந்து. உன்ன   எனக்கு கல்யாணம் பண்ண கேட்டாலும்,  அவங்க  சம்மதிப்பாங்கலன்னு   எனக்கு நம்பிக்கை இல்ல. அதனால தான் கோவியில  வச்சு தாலி கட்டினேன். நான் பண்ணுனது தப்பு தான்.

நீஎன்னை  விரும்புற வர நான் உனக்காக  காத்திருப்பேன், அது வரைக்கும் என்  சுண்டு  விரல்  கூட  உன் மேல  படாது  போதுமா. நீ  உன்  வீடு  மாதிரியே  என் வீட்டுல  இருக்கலாம், உனக்கு  என்ன வேணுமோ செய். அத என் கூட இருந்து  செய்யு.

சித்தியும், அம்மாவும்  உன்ன  நல்லா  பாத்துப்பாங்க போதுமா.

உனக்கு என் கூட  எப்போ வாழனுமுன்னு  தோணுதோ அப்போ என்கிட்ட  வா, அதுவரைக்கும்  உன்னை நான்  டிஸ்டர்ப்  பண்ண  மாட்டேன்.

கொஞ்ச நேரம் தூங்கு, கீழ போயிட்டு  வரேன் என்று ரூம்பை  பூட்டி  விட்டு கீழே  உள்ள பர்னீச்சர்  கடைக்கு  சென்றான்.

திவ்யாவுக்கு  தானுமும்  ஆண்டவர் கனியிடம்  அதிக படியாக  நடந்து  கொண்டோமோ, அவனிடம் வழியே சென்று பேசியது தவறோ, தன்  மேலும் தப்பு இருக்குமோ என்று யோசித்து கொண்டே தூங்கி  போனாள்.

சிறிது நேரம்  கழித்து  வந்தவன். அவளை  அழைத்து  கொண்டு  விருதுநகரில்  உள்ள அவன் வீட்டுக்கு  சென்றான்.

இருவரையும்  யோகா  ஆரத்தி எடுத்தே  வீட்டுக்குள்  விட்டார்.

திவ்யா அரியா நாச்சி வீட்டினுள் வந்து  நேராக  லட்சுமியின்  அறை நோக்கி  சென்றாள். லட்சுமி கட்டிலின்  மேலே  அமர்ந்து இருக்க, அவரின்  மடி மீது தலை வைத்து  படுத்து விட்டாள்.

திவ்யாவின்  தலை கோதியவர்  என்னட  சாப்டீயா.

இல்லை  என்று தலையாட்ட.

இரு யோகாவை  கொண்டு வர  சொல்லுறேன் என்றார்.

வேண்டாம் ஆன்டி  என்றவள், யோகாயம்மாவை  அழய  விடாதீங்க  நானே  போய்  சாப்பிட்டுகிறேன்  என்றவள்.

 இன்று  ஆண்டவர் கனி   மதுரையிருந்து   விருதுநகர் வரும் போழுது   யோகா சித்தியை பத்தி சொல்லியதை  நினைத்து படுத்திக்கோண்டே.

ரூம்பை விட்டு  வெளியே  வந்தவள்  யோகாவை தேட, ஆண்டவர் கனி சொல்லியது போலவே  அனைவருக்கு இரவு உணவு  தயார் பண்ணி கொண்டு இருந்தார். இங்கே அனைத்து வேலையும்  யோகா தான் செய்வார்.  தன் வீடு, தன் குடும்பம் என்று ஒவ்வொருவரையும் அங்கறை எடுத்து  பார்த்து கொள்வார்.

உன்கிட்ட ஒன்னு மட்டும் கேட்டுகிறேன் என்றவன். யோகா சித்தியை,  நான்  சித்தின்னு கூப்பிட்டாலும்  என் மனசுல எங்க அம்மாவுக்கு மேல அவங்கல  வச்சு  இருக்கேன். நீ அவங்கல சின்ன மாமியார் மாதிரி பாக்க கூடாது, எங்க அம்மா மாதிரி தான்  அவங்க  உனக்கும்,  எந்த நேரத்திலும்  அவங்க உனக்கு வேலை செய்யுற மாதிரி  வச்சுக்காத, முடிஞ்சா  அவங்கலுக்கு  உதவி செய்,   அவங்க இல்லன நாங்க இல்ல.

உனக்கு புரியும்முன்னு நினைக்குறேன் என்றான்.

திவ்யா ஆண்டவர்கனி சொல்லியதை  நினைத்து கொண்டே  கிச்சன் வந்தவள்  யோகாமா  என்றாள்.

வாடா என்றவர், சாப்பிடுறீயா.

சாப்பிடுறேன் என்று தலையாட்ட.

அவளிடம்  சாப்பாத்தி சாப்பிடுறீயா  என்று  ஒரு தட்டில்  சப்பாத்தி வைத்தை   கொடுத்தார்.

 அதை வாங்கி சாப்பிட்டு முடித்தவன்.

யோகாமா  அத்தைக்கு  சாப்பாடு  தர்ரீங்கல  என்று வாங்கி கொண்டு   லட்சுமியின் அறைக்க சென்றவளை  ஹாலில் இருந்து பார்த்துக்கொண்ட   ஆண்டவர் கனி  உண்டு விட்டு  அவனின் அறைக்கு சென்றான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!