“உன்னோட அப்பா பெயரை எதிலும் சேர்க்கக் கூடாதுன்னு அவரோட அப்பா சொல்லி வைத்திருந்தார்” அழுது கொண்டே கத்தினார் ராதிகா.
அவர் பெயரை பயன்படுத்தக் கூடாது; அவருடன் பேசக் கூடாது; குழந்தை பற்றி தெரிவிக்கக் கூடாது; நான் உயிரோட இருக்கும் வரை இந்த ஊர்ப்பக்கமே வரக் கூடாதுன்னு சொல்லி பணம் கொடுத்தாருடா..ஏன்னா நாங்க எதுவும் இல்லாத பிச்சைக்காரியான்டா..
Advertisement
என்னோட பெற்றோர் பூக்கடை தான் வச்சிருந்தாங்க. சொந்த வீடு இல்லை. குடும்பத்துக்கு என்று பெயரும் இல்லை. எதுவுமே அன்று இல்லைடா..
Advertisement
அதுக்கு நான் என்ன செய்றது? எனக்கு இதெல்லாம் தெரியலடா. எனக்கு அவரை பிடிச்சிருந்தது. அவ்வளவு தான். இதை விட அவர் என்னை கைவிட மாட்டார்ன்னு நம்பினேன்.
Advertisement
அதை அவரோட அப்பா கண்டிசன் போட்டு மொத்தமாக தகர்த்தெறிந்து விட்டார்.
Advertisement
கோபத்தில் என்னோட அப்பா பணத்தை அவர் முகத்திலே விட்டெறிந்து விட்டார். உடனே அவரின் அப்பா..இந்த ஊர்லயும் இருக்கக் கூடாது இல்லை உங்களை கொல்ல எனக்கு ஆட்கள் தேவைப்பட மாட்டாங்கன்னு மிரட்டினாருடா. இதுக்கு மேல அவரிடம் என்னால எப்படி போக முடியும்?
செல்லூர் போனோம். ஒரு முறை அவரை அங்கேயும் பார்த்தேன். பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவன் கையில் கடிதமாக நடந்ததை எழுதி கொடுத்தேன். ஆனால் அது அவரிடம் செல்லும் முன் அவர் அப்பாவிடம் சென்று விட்டது.
செல்லூரில் நாங்க இருந்த வீட்டிற்கே வந்து எங்களது கடையை அடித்து போட்டு போயிட்டார். வாழும் எண்ணமே வேரருந்து போனது. உன்னை பார்த்து கூட அந்த மனுசனுக்கு கரிசனம் வரவில்லை. உனக்காக வாழணும்ன்னு நினைச்சு தான் வாழ்ந்தேன். ஆனால் அவரின் செயலால் என் பெற்றோருக்கு என் மீது மனக்கசப்பு தொடங்கியது. யாரிடமும் கூறாமல் இரவோடு இரவாக உன்னை தூக்கிக் கொண்டு யாரும் தெரியாத பட்டணத்துக்கு போனேன்.
நான் படித்த படிப்பு மட்டும் தான் கை கொடுத்தது. ஏற்கனவே ஆசிரியர் பணியில் இருந்ததால் எனக்கு அங்கு வேலை கிடைத்தது. உன்னை வளர்க்க தான் ரொம்ப சிரமப்பட்டேன்.
இளா குடும்பன்னாலே உன் அப்பாவோட குடும்பம்ன்னு மதுரையில எல்லாருக்கும் தெரியும். அதனால தான் அவரோட அப்பா அவர் பெயரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொன்னது எனக்கு புரிந்தது. நானும் அவர் பெயரை பயன்படுத்தவில்லை.
அவர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் முகம் தெரியாத யாரோ ஒருவரின் பெயரை வைக்க எனக்கு விருப்பமில்லை.
நான் அவரை குறை சொல்ல முடியாது. அவருக்கு நடந்த எதுவும் தெரியாது. என்னை தேடி அடிக்கடி வீட்டிற்கு வந்து பார்க்க தான் செய்திருக்கார். எங்களது காதல் என்னுடன் படித்த பார்வதியை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர் அப்பாவின் செயலும் இப்பொழுது வரை அவருக்கு தெரியாது.
இடையே ஒரு நாள் வந்த போது தான் ஊர்ல கலவரம் நடந்ததையும்., அவரு..அவரோட அண்ணன் பசங்கள வளர்த்துட்டு இருக்கார்ன்னு பார்த்தேன்.
வித்தியாசமாக இருந்தார்டா சத்யா. அவர் முகத்தில் சிறுபாவனை மட்டும் தான் இருந்தது. முன்னிருந்த பளிச்சென்ற புன்னகை, கர்வம், எதை பற்றியும் கவலையில்லாமல் சுற்றும் துடுக்குத்தனம் எதுவுமே இல்லை. அவர் குடும்பத்தை இழந்த தவிக்கும் போது ஆறுதலாக இருக்க முடியவில்லைன்னு கஷ்டப்பட்டிருக்கேன். ஆனால் அவர் அப்பாவின் செயலால் தான எல்லாவற்றையும் இழந்தேன். அதனால் அவர் வேண்டாம்ன்னு வந்த வழியே மீண்டும் சென்று விட்டேன்.
தயவு செய்து அவரை கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் செய்யாதடா. நீ நடந்து கொள்வதை பார்த்தால் எனக்கு சரியாக படலை. அவர் என்னை ஏமாற்றலை. நான் தான் தெரிந்தே அவரை விட்டு சென்றிருக்கேன்.
கண்ணா, இனி அவரை கஷ்டப்படுத்துற மாதிரி பேசாதடா.. அழுதார்.
நான் பேசக் கூடாதுன்னா, “அவர் தான் என்னோட அப்பன்னு இந்த ஊர்ல எல்லார் முன்னும் உன்னால சொல்ல முடியுமா?” சத்யா கேட்டான்.
ராதிகா கண்ணீருடன் “முடியாது” தலையசைத்தார்.
நகர இருந்த இளவேலன் கையை பற்றி, “அவசரப்படாத சித்தப்பூ. வா” அவரை வெளியே அழைத்து சென்றான்.
“பாருடா..தீரா, உன்னோட தாத்தா என்ன வேலை செஞ்சு வைச்சிருக்காரு. இருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க” இளவேலன் இளந்திரையனை அணைத்து அழுதார்.
ராதுவை தேடி நான் போன போது அவள் கர்ப்பமாகி இருந்தது தெரிந்திருந்தால் கூட உடனே நான் தேடி இருப்பேன். பக்கத்து வீட்டு ஆட்கள் இதை பற்றி எதுவும் சொல்லவில்லை. இல்லை என் அப்பா சொல்ல விடாமல் இருந்திருக்கார்.
அவரால எப்படி தீரா என்னோட புள்ளையை பார்த்தும் யாரோ போல நடந்திருக்கிறார். ராது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா…என்னால தாங்க முடியலடா.. அவ எங்கோ ஓர் இடத்தில் வேறு குடும்பத்துடன் சந்தோசமா இருக்கான்னு நினைச்சிட்டு இருந்தேன் அழுதார் இளவேலன்.
சித்தப்பூ முடிந்ததை பற்றி பேச வேண்டாம். சித்தியிடம் மன்னிப்பு கேட்டு பேசி பாரு. சும்மா வருத்தப்பட்டு எந்த பிரயோஜமும் இல்லை.
முதல்ல எழுந்திரு. தயாராகு. நம்ம பஞ்சாலைக்கு போ. நான் இன்று வீட்ல தான் இருக்கப் போறேன். நீ பார்த்துக்கோ. நம்ம குட்டிம்மாவையும் மாறனையும் நான் பள்ளியில் விட்டு வாரேன். நாளையிலிருந்து அவங்க மிதிவண்டியில் போகட்டும்.
தீரா, இன்று நம்ம செழியன் போகட்டும். எனக்கு மனசு சரியில்லை..
“சரி சித்தப்பூ, சாப்பிட்டு ஓய்வெடு. இப்ப எழுந்திரு” என்று அவரை எழ வைத்து குளியலறைக்குள் தள்ளினான். அவர் உள்ளே செல்லவும் இவன் அறையை விட்டு வெளியே வந்தான்.
மாறன், அக்சரா உணவுண்ண அமர்ந்திருந்தனர். இளந்திரையன் புன்னகையுடன் சுப்ரியா அருகே அமர்ந்தான்.
குட்டிம்மா, தயாரா இருக்கீங்க போல?
ஆமா மாமா. இதுவரை இந்த சூழ்நிலை புதிது. எக்சைட்டிங்கா இருக்கு. ஹ..அதுவந்து எப்படி சொல்றது?”
புதுவித உணர்வு…
மாமா உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? ஈசிஸா புரிஞ்சுக்கிட்டீங்க..
எதையும் படித்தால் தான் தெரியணும்ன்னு அவசியம் இல்லை குட்டிம்மா. விருப்பமிருந்தால் எல்லாம் அறிந்து கொள்ளலாம்.
சுந்தரம் பதார்த்தங்களை உணவை மேசையில் அடுக்கி வைத்தார்.
பாப்பாவை வைஷ்ணவி அறையில் படுக்க வைத்து விட்டு வந்தாள்.
மாறனுக்கும் சுப்ரியாவிற்கு உணவுதட்டை வைத்து, சார் உங்களுக்கும் வைக்கவா? வார்த்தைகளை மென்று விழுங்கி விழுங்கி கேட்டாள்.
இப்ப வேண்டாம். முதல்ல எல்லாரும் சாப்பிடட்டும். மாறா உணவை முடித்து விட்டு அழை. நான் செழியனை பார்த்துட்டு வாரேன்.
சரிண்ணா..
இளந்திரையன் அவனறைக்கு சென்று சில பைல்களை எடுத்து செழியன் அறைக்கு சென்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
இருவரும் உணவை முடித்து விட்டு அவரவர் புத்தகப்பைகளை எடுத்தனர்.
இளவேலன் அவரறையிலிருந்து வெளியே வந்தார். செழியனும் இளந்திரையனும் வெளியே வந்தனர்.
“வச்சுக்கிறியா? நான் என்ன உன் புருசனா வச்சுக்க?” அக்சரா வாய்த்துடுக்குடன் கேட்க, “ச்சீ…அக்காவாடி நீ” இருவரும் முதலில் இருந்து தொடங்கினார்கள்.
“அய்யோ நேரமாகுது” மாறன் கத்தினான்.
சுப்ரியா விறுவிறுவென வெளியேறினாள்.
ஏன் சிட்டு “எப்படி இவங்கள சமாளிச்சீங்க?” இளந்திரையன் வைஷ்ணவியிடம் கேட்டான். “என் விதி” என்பது போல அவள் நெற்றியை வழித்து காட்ட, புன்னகையுடன் சென்று காரை எடுத்தான்.
இளவேலன் இவர்களை பார்த்துக் கொண்டே உண்டு எழுந்து சென்று விட்டார்.
“தீரா” செல்லக் கொஞ்சலுடன் உள்ளே வந்தாள் ரூபினி. அவன் அதிர்ந்து “ஏய்..வெளிய போ” கத்தினான்.
தீரா, ப்ளீஸ் திட்டாத. உன்னை இனி நான் தொந்தரவு செய்ய மாட்டேன். எல்லாரையும் படிக்க வைக்கிறேல்ல? நானும் கோர்ஸ் சேரலாம்ன்னு இருக்கேன். எனக்கு இதில் கையெழுத்து போட்டு விட்டால் என்னை உடனே சேர்த்திடுவாங்க.
நம்ம ஏ சி ஏ அகாடமி தான். ப்ளீஸ் உன் பேரை சொல்லி சேர தான் சென்றேன். அவங்க நான் சேர வேண்டிய கோர்ஸூக்கான விண்ணப்பப்படிவம் கொடுத்து உன்னிடம் கையெழுத்து வாங்கி வரச் சொன்னாங்க. போட்டு விடு நான் போயிடுறேன்..
இந்தா படிவத்தை நீட்டினாள். அவன் சிந்தனையுடன் அவளை பார்த்தான்.
ஏன் தீரா, “நீ கூட என்னை நம்பவில்லையா?”
நேற்று..
கண்ணீருடன் என்னோட அம்மா, அப்பா இருவரும் என்னை ஏமாத்தி இருக்காங்க. அதான் வீட்டை விட்டு வர எண்ணினேன். அம்மாவை விட்டு வர முடியல. அம்மாவும் என்னோட வருவதாக தான் இருந்தது. ஆனால் அப்பா தான் அவங்கள பிடித்து வைத்திருக்கார். என்னை இதற்கு மேல் படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லீட்டாரு. அதான் நீ உதவுவன்னு வந்தேன்..
அவன் அப்படிவத்தை பிரித்து பார்த்தான்.
“இவனுக்கு ஆங்கிலம் தெரியவா போகுது?” தைரியத்தில் அவள் தெனாவட்டாக பேசிக் கொண்டிருந்தாள்.
“ஏய்! நீ எதுக்குடி இதுல தலையிடுற? அதை கொடு” வைஷ்ணவியை நெருங்கினாள் ரூபினி.
“ரூபினி” இளந்திரையன் சத்தமிட, “இவ என்ன கொண்டு வந்திருக்கான்னு பார்க்காமல் கையெழுத்திடப் போறீங்க சார்? இது விண்ணப்படிவமே இல்லை” வைஷ்ணவி சொல்ல, ரூபினி அவளை நெருங்கி “சொல்லாத” ஹஸ்கி வாய்சில் கூறினாள். இளந்திரையனுக்கு நன்றாக கேட்டது.
இது பத்திரப்பதிவு. உங்களோட சொத்துக்களை இவளோட அப்பா பெயரில் நீங்க மாற்றிக் கொடுக்கும் பத்திரம். இதில் நீங்க கையெழுத்திட்டால் உங்களது சொத்துக்கள் அனைத்தும் அவளோட அப்பா பெயருக்கு மாறி விடும்.
“இல்ல தீரா. இவ பொய் சொல்றா” ரூபினி சொல்ல, அக்சரா சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.
அக்சா, “இது என்ன இவருக்கு சொல்லு?” வைஷ்ணவி அவளிடம் அந்த காகிதங்களை கொடுத்தாள்.
“மாமா, என்ன இது? யாரோ ஒருவர் பெயருக்கு சொத்தை மாத்தி கொடுக்கப் போறீங்களா? ஏய்..நீ நீ..அவ தான!” ரூபினியை நெருங்கினாள் அக்சரா.
“எம்மா, எதுவும் கேட்காம உள்ள போற?” கான்ஸ்டபிள் அவளை தடுக்க, “சார் சத்யா சாரை பார்க்கணும்” அவள் சொல்லிக் கொண்டிருக்க, அவள் தந்தை ஸ்டேசனுக்குள் அதிரடியாக நுழைந்து ரூபினியை ஓங்கி அறைந்து அவளை இழுக்க, சத்தம் கேட்டு வெளியே வந்த சத்யா…
இத்தனை போலீஸ் இருக்காங்க. அவள அடிக்கிறீங்க?
நான் அவளோட அப்பன். அடிக்க என்ன? என்ன வேண்டுமானாலும் செய்வேன்..
“என்ன வேண்டுமானாலும் செய்ய இது உன்னோட வீடில்லையே! அவ கையை விடு” சத்யா அவரிடம் சத்தமிட்டான்.
ரூபினி அவள் தந்தை கையை சிரமப்பட்டு உதறி விட்டு, “என்னோட அம்மாவும் இவருக்கும் சண்டை முற்றி இந்தாளு என்னோட அம்மாவை கொன்னுட்டான். என்னையும் ஒரு பணக்காரனிடம் விற்க ஏற்பாடு செய்துட்டான். ப்ளீஸ் சார் கெல்ப் பண்ணுங்க” கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள் ரூபினி.
“கொலையா? ஆதாரம் இருக்கா? உன்னை எப்படி நான் நம்புவது?” சத்யா கேட்க, அவள் தந்தை சிரித்தார்.
ஏன்டி, உன் அம்மா அவளா சாவ தேடிகிட்டா. ஆதாரமில்லாமல் எவனும் உன் பேச்சை நம்ப மாட்டான்..
சத்யா ரூபினி கையை பிடித்து அவன் பக்கம் வைத்துக் கொண்டு, நீ இவர் மேல கம்பிளைண்ட் பைல் செய்து கொடு.
“சார்” அங்கிருந்த போலீஸ் அதிர்ந்தார்.
“ஆதாரமில்லாமல் நாம கைது செய்ய முடியாது சார்” மற்றவர் கூற, ஒரு கவர் ஒன்று சன்னல் பக்கமிருந்து வந்து விழுந்தது.
அதை எடுங்க..
ஒருவர் அவனிடம் வந்து கொடுத்தார்.
கவரின் உள்ளே இருக்கும் அலைபேசியை பார்த்து, “இது என்னோட அம்மாவிது” ரூபினி கூற, அவள் தந்தை சினமுடன் சத்யாவிடம் அதை பறிக்க வந்தார்.
அவரை மற்றவர்கள் பிடித்து நிறுத்தினார்கள்.
அலைபேசி பேட்டர்ன்னை ரூபினி போட்டு சத்யாவை பார்த்தாள். அதில் முன் வந்த வீடியோவை பார்த்து பயங்கரமாக சிரித்தான் சத்யா.
சார்..
ஆதாரம்..இதோ..என்று ரூபினி அம்மாவை அவள் அப்பா கொன்றதையும், இவளை விற்க அவர் பேசிய ஆடியோவும் கிடைத்தது.
அலைபேசியை தன் அருகே இருந்தவரிடம் கொடுத்து விட்டு விலங்கை அவர் கையில் பூட்டினான் இளசத்யவேந்தன்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்” அவள் வெளியேற, “ஒரு நிமிசம் நில்லு. இவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க” என்று ஒருவரிடம் கூறி, “இனி உன் அப்பா பிரச்சனை உனக்கு இருக்காது. முடிந்தால் உழைத்து வாழு” அவளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தான்.
மாட்டிக் கொண்ட ரூபினி தந்தை எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்தார். சத்யா புன்னகையுடன், “நீயே வந்து கைதாவன்னு நான் நினைக்கலை சிரித்தான்”.
“ஆமா சார்” மற்றவனும் சிரித்தான். அவர் கடுப்பில் முகம் திருப்பி சிறையில் அடைந்தார்.