Nimir Episode 16.2
அறைக்கு சென்று கதவை தாளிட்டாள் கவிதா. வெண்மதி அங்கே இருந்த நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தாள். “எனக்கு வேலை இல்லைனு சொல்லிட்டாங்க கவி.” என்றுவிட்டு அழுதாள். “இந்த வேலையை நம்பி நான் எவ்வளவு பிளான் வச்சிருந்தேன். அம்மாகிட்ட நான் இதை எப்படி சொல்லுவேன்? எங்க அம்மா முகத்தில் முதன்முதலில் சந்தோஷத்தை பார்த்தது இந்த ஊருக்கு நாங்க வருவோம்னு சொன்னபோதுதான். அதுவும் இப்போ இல்லைன்னு ஆயிடுச்சு. இங்கே அம்மாவை கூட்டிக்கிட்டு வந்து எவ்வளவு சந்தோஷமா இருக்கலாம்னு தினமும் கனவு கண்டு கொண்டு இருந்தேன். எல்லாமே பாழாய்ப் போயிடுச்சு. இப்ப நான் என்னடி பண்றது?” என்று திருவிழாவில் தனித்து விடப்பட்ட குழந்தை வழி தேடி அழுவது போல அழுதுகொண்டிருந்தாள் வெண்மதி.
அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் முதுகை தட்டிக் கொடுத்தாள் கவிதா. கவிதாவுக்கும் துக்கம் நெஞ்சை அடைத்தது. பேச்சு வரவில்லை.
“என்னோட வாழ்க்கையே போச்சு.” என்று தொடர்ந்து வெண்மதி அழுதுகொண்டே இருந்தாள். இந்த வேலைதான் என்னோட வாழ்க்கை என நம்பிட்டு இருந்த. இப்ப அதுவும் இல்லைன்னு ஆயிடுச்சு. எதெல்லாம் என்னோட வாழ்க்கை என்று நினைக்கிறேனோ அது எல்லாம் என்னைவிட்டு போயிடுது. நான் எப்படி டி வாழறது?” என்று வெண்மதி கதறியபடியே கூற
இதனை கேட்ட கவிதா அதிர்ந்தாள்.
Advertisement
“ நிறுத்துடி. இந்த வேலை இல்லைன்னா என்ன? வேற வேலை தேடலாம். அதுக்கு என் வாழ்க்கையே போயிடுச்சுன்னு அழுற. பொறுமையா இரு. என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.” என்றுவிட்டு அங்கு இருந்த டம்ளரில் தண்ணீர் ஊற்றி வெண்மதிக்கு கொடுத்தாள் கவிதா.
மறுக்காமல் அதை வாங்கி குடித்தாள் வெண்மதி.
“இந்த ஒருவேலை தான் உலகத்திலேயே இருக்கா? வேற வேலையே கிடையாதா? உன்னோட படிப்புக்கும் திறமைக்கும் வேற நல்ல வேலை கிடைக்கும்.” என்று கவிதா கூற
Advertisement
“என்னைவிட பெட்டர் ஆன கேண்டிடேட் கிடைச்சதா சொன்னாரு. ஒருவேளை என்னோட பர்சன்டேஜ் கம்மியா ஆயிடுச்சு இல்ல. அதனால வேலை கொடுக்கலையா?” என்று மீண்டும் அழுதாள் வெண்மதி
Advertisement
“இல்லை மதி. இந்த பர்சன்டேஜ் வச்சிருக்கிற லதாவுக்கு இதே கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. அது காரணமில்லை. அதனால நீ அழுவதை நிறுத்து. வேற கம்பெனியில அப்ளை பண்ணு.”
“எல்லா பெரிய கம்பெனிகளும் வேலைக்கு ஆள் எடுத்துட்டாங்க.” “பாண்டிச்சேரியில் நிறைய சின்ன கம்பெனி இருக்கு. அங்க அப்ளை பண்ணு. கண்டிப்பா வேலை கிடைக்கும்.”
“அப்படியே அங்க வேலை கிடைச்சாலும் இந்த சம்பளம் சின்ன கம்பெனியில கிடைக்காது கவி.”
Advertisement
“நல்ல சம்பளம் கிடைச்சா தான் எங்க அம்மாவை நான் தனியா கூட்டிட்டு போய் சந்தோஷமா இருக்க முடியும். என்னோட ஆசை எங்க அம்மாவை ஒரு ஆறு மாசமாவது தனியா கூட்டிட்டு போய் சுதந்திரமா சந்தோஷமா இருக்கணும். எங்க பெரியம்மா சொன்ன மாதிரி அந்த வீட்டை மெயின்டைன் பண்ற செலவுல பாதியைக் நான் கொடுக்கணும் அப்படி கொடுத்தாதான் எங்க அம்மா அங்க பெரியம்மாவுக்கு சமமா ஒரு எஜமானியா அந்த வீட்டில ராணி மாதிரி இருக்க முடியும். அதுக்காக தானே இவ்வளவு கஷ்டப்பட்டேன். கடைசியில் இப்படி ஆயிடுச்சு டி. என்னடி பண்றது?” என்று மீண்டும் அழுதாள் வெண்மதி.
இவை யாவும் ஏற்கனவே அறிந்திருந்த கவிதா மனம் வருத்தப்பட்டது. எனினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல்
“மதி நீ நினைச்சது எல்லாமே நடக்கும். கொஞ்சம் லேட் ஆகும் அவ்வளவுதான். நான் சொல்றேன். நீ ஆசைப்பட்ட மாதிரி உங்க அம்மாவை நீ ராணி மாதிரி அந்த வீட்டில் வாழ வைப்ப. அதை நான் பார்ப்பேன். கவலைப்படாத. நம்பிக்கையை கைவிடாத . நாம ஆசைப்பட்டது ஏதாவது நமக்கு கிடைக்கலைன்னா அதை விட பெட்டரா ஏதோ நமக்கு கிடைக்கப் போகுதுன்னு தான் அர்த்தம். நீ வேணா பாரு உனக்கு இதைவிட நல்ல வேலை கண்டிப்பா கிடைக்கும்.
வாழ்க்கையில பெருசா சாதித்தவர்கள் எல்லாருமே கஷ்டப்பட்டவங்கதான். இதையெல்லாம் நான் உனக்கு சொல்ல வேண்டியது கிடையாது. நீ வீட்டுக்கு கிளம்பி போ. போயி உங்க அம்மாகிட்ட விஷயத்தை சொல்லு. அம்மா இதை புரிஞ்சுபாங்க. அப்புறம் நீயே தனியா உட்கார்ந்து யோசிச்சு பாரு. நீ ஒரு தைரியமான பொண்ணு. உன்னால இதையெல்லாம் தாண்டி ஜெயிக்க முடியும். இது உனக்கே புரியும். நம்பிக்கையை மட்டும் விட்டுடாத.” என்று அவளுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே அரை தட்டப்படும் ஓசை கேட்டது.
“அப்பா வந்துட்டாங்க என நினைக்கிறேன்.” என்று கூறியபடி சென்று கதவை திறந்தாள் கவிதா.
அருணாச்சலம் உள்ளே வந்தார். அழுது வீங்கி இருந்த வெண்மதியின் கண்களை பார்த்த அருணாச்சலம் வேலையை பற்றி எதுவும் கேட்கவில்லை.
கவிதா அவர் அருகில் சென்று “மெண்மதிக்கு வேலை கிடைக்கல. நீங்க எதுவும் அவளை கேட்காதீங்க. ” என்று சுருக்கமாக கூறினாள்.
“சரிமா” என்றார் அவர்.
“ஹாஸ்டலை பற்றி விசாரித்தேன். திருப்தியா இருந்தது. வா கவி உன்னை அங்கு விட்டுட்டு நாங்க கிளம்பறோம்.”
“வெண்மதி. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் போய் இவளை விட்டுவிட்டு வந்துடறேன்.”என்று கவிதாவை அழைத்துக்கொண்டு சென்று அந்த ஹாஸ்டலில் விட்டுவிட்டு மீண்டும் அறைக்கு திரும்பினார்.
வெண்மதி உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து இருந்தாள். அவளிடம்
“சரி வெண்மதி. நாம ஊருக்கு கிளம்பலாமா? என்று கேட்டார். “கிளம்பலாம் அப்பா.” என்று கூறி அவள் கண்களை அழுந்த துடைத்து விட்டு முகத்தை கழுவி தலையை வாரி கொண்டு பையை எடுத்துக்கொண்டு அவருடன் கிளம்பினாள்.
பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்த பிறகு
வெண்மதி “அப்பா எனக்கு வேலை கிடைக்கல.” என்று அழு குரலில் கூறினாள்.
“பரவாயில்லை வெண்மதி. இந்த வேலை இல்லன்னா என்ன? வேற நல்ல வேலை கிடைக்கும். இதுக்கெல்லாம் நீ சோர்ந்து போய் விடாதே.” என்று ஆறுதல் கூறினார்.
இரவு நேர குளிர் காற்று முகத்தில் வீசியது. காலையிலிருந்து அலைந்து திரிந்ததில் களைத்துப் போயிருந்த அருணாச்சலம் அமர்ந்திருந்த இருக்கையிலேயே உறங்கினார். வெண்மதிக்கு தூக்கம் வர மறுத்தது. கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டபடி எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
நள்ளிரவு வெண்மதி வீடு வந்து சேர்ந்தாள். கோவிந்தன் கதவை திறந்தார்.
“ரொம்ப டைம் ஆயிடுச்சு மதி. நீ போய் தூங்கு. நாம காலையில பேசலாம்.” என்று தந்தை கூற அவளும் சென்று படுத்தாள்.
பயண அலுப்பில் படுத்தவள் உறங்கினாள்.
அடுத்த நாள் காலை எழுந்து வெளியே வந்தாள் வெண்மதி.
“அக்கா அவளுக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டமே கிடையாது. ரெண்டு மூணு வருஷம் போகட்டும்ன்னு சொல்றா.” என்று தாய் பெரியம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“நான் அந்த அம்மாவிடம் எவ்வளவோ சொல்லிட்டேன். அவங்க கேட்க மாட்றாங்க.” என்று பெரியம்மா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் அங்கு வந்தார்.
“லட்சுமி இப்போ யாரும் அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லல. இவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. மதியைப் பார்த்து இருக்காங்க. அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அதனால அவங்க பையனுக்கு பெண் பார்க்க வரேன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். அவங்க வரட்டும் மாப்பிள்ளை பெண்ணை பார்க்கட்டும் பெண், மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா மட்டும் மேல பேசலாம். இல்லைனா வேணான்னு சொல்லிடலாம். என்ன சொல்லுற லட்சுமி?” என்று கேட்டார் கிருஷ்ணன் .
“சரிங்க மாமா. நான் அவளை ரெடி பண்றேன்.”
“மதி நீ எல்லாத்தையும் கேட்ட இல்ல?”
“ஆமாம் நான் கேட்டேன். பெரியப்பா உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவார். அதனால நீ ரெடியாக இரு. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. ப்ளீஸ் மதி. எனக்காக இதை நீ செய்.” என்று கெஞ்சும் குரலில் லட்சுமி கேட்க
அம்மாவுக்காக இதையாவது செய்யலாம் என்று நினைத்து தயாரானாள். வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. கிருஷ்ணன் ஓடி சென்று அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தார். அறையில் தயாராகிக் கொண்டிருந்த வெண்மதி கார் சத்தம் கேட்டு திரும்ப ஜன்னல் வழியே அவர்கள் தெரிந்தார்கள்.
அன்று வீட்டில் பார்த்த பெண்மணி தான். அவர்கள் வீட்டில் சுமங்கலி பூஜைக்கு கூட இவள் சென்றிருந்தாள். அவர் பக்கத்தில் அவருடைய பெண்ணும் மற்றொரு பக்கத்தில் ஒரு உயரமான இளைஞனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவனை எங்கோ பார்த்தது போல இருந்தது வெண்மதிக்கு. ஆனால் எங்கு என்று அவளால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஞாபகப்படுத்த அவளுக்கு விருப்பமோ ஆர்வமோ இருந்த மனநிலையில் சுத்தமாக இல்லை. இவர்கள் இங்கிருந்து எப்போது செல்வார்கள் என்று மட்டுமே அவளுக்கு தோன்றியது.
வந்தவர்களுக்கு லட்சுமி காபி , ஸ்வீட் மிக்ஸர் ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.
“இதெல்லாம் எதுக்கும்மா? நான் என்ன ஃபர்ஸ்ட் டைம் ஆ வீட்டுக்கு வரேன்?” என்று கேட்டார் அந்தப் பெண்மணி.
“எடுத்துக்கோங்க மா. எங்க மன திருப்திக்காக தான்.” என்று கூறினார் கிருஷ்ணன்.
“சரி நான் பெண்ணை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். என்னோட பொண்ணுக்கு வெண்மதியை ரொம்ப பிடிச்சு போச்சு. அவதான் அவளோட அண்ணனை இங்க கூட்டிட்டு வந்திருக்கா. போட்டோ கூட அவன் இன்னும் பார்க்கல.”
“ஓ அப்படியா?” என்று கேட்டுக்கொண்டார் கிருஷ்ணன்.
“ நான் பெண்ணை வர சொல்றேன். “ என்று கூறிவிட்டு லட்சுமியை பார்த்தார்.
லட்சுமி உள்ளே சென்று வெண்மதியை அழைத்துவந்து அங்கு இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார். எவரையும் நிமிர்ந்து பார்க்கும் மனநிலையில் வெண்மதி இல்லை. எனினும் அவளுக்கு தெரிந்த அந்த பெண்மணியை பார்த்து சம்பிரதாயமாக
“வாங்க மா.” என்று கூறினாள்.
அவருடைய மகள் வெண்மதி பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ பேச தொடங்கினாள். வெண்மதி அதில் பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவன் “நான் பொண்ணு கிட்ட தனியா பேசணும்.” என்று கூற.
“தாராளமா பேசுங்க. நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. வெண்மதி நீ உன்னோட ரூமுக்கு கூட்டிக்கிட்டு போ.” என்றார் கிருஷ்ணன் வெண்மதி அவனை பார்க்காமல் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள்.
“மாப்பிள்ளை நீங்க போங்க.” என்று கிருஷ்ணன் கூற
அவன் அவளைப் பின் தொடர்ந்தான். அறைக்குள் நுழைந்த வெண்மதி அங்கு இருந்த நாற்காலியை காட்டினாள். அவன் உட்கார்ந்தான்.
அவள் எதிரில் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று அவன் கேட்க
அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“இல்லையே.” என்று யோசித்தபடியே கூறினாள்.
“அது எப்படி உனக்கு ஞாபகம் இருக்கும்? என்னை மாதிரி எத்தனை பேர் மேல இடிச்சுட்டு கையில இருக்கிறதை தள்ளி விட்டுட்டு செல்ஃபிஷா சாரி கூட கேட்காம திரும்பி கூட பார்க்காம போனாயோ? எப்படி உனக்கு ஞாபகம் இருக்கும்?” என்று அலட்சியமாக கேட்டான் அவன்.
அப்பொழுதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது.
அன்று இவன் மீது தான் இடித்துவிட்டு சாரி கேட்காமல் ஓடிவந்து பேருந்தில் ஏறியது. அவன் அன்று பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது
“நீங்க தானா இப்ப தான் எனக்கு ஞாபகம் வருது. ஐ அம் சாரி அன்னிக்கி ஒரு பஸ் பிடிக்க வேண்டியிருந்தது. அதனாலதான் உங்ககிட்ட சாரி கூட கேட்காம போயிட்டேன். அப்புறம் அன்னைக்கு நீங்க எதையோ சேத்துல தேடிக்கிட்டு இருந்தீங்களே. அது என்னது?” என்று கேட்டாள்.
“ஓ அது கூட ஞாபகம் இருக்கா? அது ஒரு முக்கியமான பென்டிரைவ். அதுல எங்க கம்பெனி மீட்டிங்காக பிரிப்பேர் பண்ணி வச்சிருந்த பவர்பாயிண்ட் இருந்தது. நீ கீழே தள்ளி விட்டதால அது வீணா போயிடுச்சு. அதனால என்னோட முக்கியமான கிளையன்ட் எங்க கம்பெனியை விட்டு போயிட்டாங்க. உன்னால எனக்கு எவ்ளோ லாஸ் தெரியுமா? அதுல இருந்து வெளிய வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று கோபமாக கேட்டான்.
“சாரி எனக்கு எதுவுமே தெரியாது.”
“உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கன்னுமா. நல்ல காமெடி. இப்பவே போய் நான் உன்னை பிடிக்கலைன்னு சொல்ல போறேன்.” என்று கூறியவன் அங்கிருந்து சென்றான்.
‘நான் சொல்ல வேண்டியதை இவனே சொல்லப் போகிறான். நிம்மதியே போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள்.
வெளியில் வந்தவன்
“அம்மா வாங்க நாம போகலாம்.”
“என்னடா? என்ன ஆச்சு?” என்று பதறியபடி விசாரித்தார்
அவனின் தாய் .
“எனக்கு பெண்ணை பிடிக்கவில்லை. என்று எல்லோர் முன்பும் மூஞ்சில் அடித்தது போல கூறினான்.
