Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 22.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கதிர்வேலன் புரியாமல் வெண்மயை கவனிக்க… அவள் தொடர்ந்தாள்.

“நீங்க இந்த பணத்தை வார்டு பாய் கிட்ட கொடுத்து உங்க மேனேஜர் ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்சி ஐ. சி .யு. வில் இருக்கும் போது நீங்க ஆக்சிஜன் பம்பை எடுத்து அவரை கொலை பண்ண முயற்சி செஞ்சீங்க என சொல்லுவேன். “

இதனை கேட்ட அவன் கண்களை அகல விரித்து “என்ன!?” என்று  அதிர்ச்சியின் உச்சகட்டத்திற்கு சென்றான்.



Advertisement

“ஆமாம் அப்படித்தான் சொல்லுவேன். அந்த மேனேஜருக்கு அப்புறம் நீதான் அடுத்து மேனேஜரா ஆகுறதுக்கு வாய்ப்பு நிறைய இருக்கு. அதனால நான் சொன்னா உங்கள கம்பெனியில் எல்லோரும் நம்புவாங்க.” அவள் சொல்வது உண்மைதான் என்பது அவனுக்கு புரிந்தது. “அப்படி நான் செய்யவே இல்லை. இது பெரிய பழி.” என்று பதறியபடி கத்தினான். எனினும், அந்த பெரிய தோட்டத்தை தாண்டி அவனது சத்தம் வீட்டுக்குள் கேட்கவில்லை.

“அது எனக்கும் உனக்கும் மட்டும்தானே தெரியும். வேறு யாருக்கும் தெரியாதே.”

“ஆனால் அவர்தான் நல்லபடியா வீட்டுக்கு குணமாகி வந்துட்டாரே.” “ஆமாம் உன்னோட மர்டர் அட்டம்ட் ஃபெயில் ஆயிடுச்சுன்னு சொல்லுவேன். அப்புறம் உன்னோட வேலை காலி.” என்று மிரட்டினாள்.

Advertisement

“என்ன பிராடு வேலை எல்லாம் பண்ற?” என்று கோபமாக கேட்டான். அதற்கு அவள் “உன்னை மாதிரி பிராடை சமாளிக்க நானும் பிராடு வேலை பண்ண வேண்டி இருக்கு. என்ன பண்றது?” என்று தோளை குலுக்கின்னாள். அவன் வசமாக அவளிடம் மாட்டிக்கொண்டான். வேறு வழியின்றி அவள் வழிக்கு வந்தான்.

Advertisement

 

“இப்போ உனக்கு என்ன தாண்டி வேணும்?” என்று ஆவேசமாக கத்தினான். அவள் “எதுக்காக அவனுக்கு பணம் கொடுத்த? அந்த உண்மையை சொல்லு.”

“இப்போ என்ன? எதுக்காக பணம் கொடுத்தேன்னு உனக்கு தெரியணும். அவ்வளவுதானே.  தெரிஞ்சு மட்டும் உன்னால என்ன பண்ண முடியும்? சொல்றேன் கேட்டுக்கோ.” என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

Advertisement

“உனக்கு வேலை கிடைக்க கூடாதுன்னு நினைச்சேன். அதனால அந்த சென்னை இண்டர்வியூவுக்கு நீ போனப்போ உங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட்ன்னு பொய் சொல்லி நீ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணாம திரும்ப வரவழைத்தேன்.”

இதை கேட்டதும் அவள்  அவனை முறைத்தாள்.

“என்ன முறைக்கிற? இது மட்டும் கிடையாது. இதுக்கு முன்னாடி நீ கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன அந்த வேலை கூட உனக்கு கிடைக்காம பண்ணது நான் தான்.

எப்படி தெரியுமா? அந்த கம்பெனியில் என்னோட ஃப்ரெண்ட் அப்பா மேனேஜரா இருக்கிறார். அவர்  மூலமா நான் அப்படி செஞ்சேன். அதுக்கு பதிலா என்னோட பிரண்டுக்கு எங்க கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்தேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா உனக்கு?

இதை கேட்டதும் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடாதே.” என்று அவன் அலட்சியமாக கூற

அவள் அவனை கூர்ந்து கவனித்தாள். அவன் தொடர்ந்தான்.

“ உன்னோட லவ்வர்” என்று அவன் கூற

அவள் ஆச்சரியம் ஆனாள்.

‘இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?’ என்று அவள் யோசிக்கும் பொழுது

அவன் “எனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்னு யோசிக்கிறாயா?”என்று அப்படியே அவள் மனதை படித்தவன் போல கேட்டான்.

“நான் தான் உன்ன பத்தி எல்லா விபரத்தையும் விசாரிச்சுட்டு இருக்கேனே. இது கூட தெரியாதா? அந்த   விஜய்யை மாப்பிள்ளை கேட்டு ஒரு பெண் வந்தாள். ஆனால் அவனுக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. நான்தான் செல்வா மூலமா  அவனை பிரைன் வாஷ் பண்ணி இவளை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்ல வச்சேன்.

அது மட்டும் இல்லை, நீ எக்ஸாம்ல ஃபய்யில்  ஆகணும்னு நான் நினைச்சேன்.  அதனாலதான் உன்னை போர்ஸ் பண்ணி எக்ஸாமுக்கு முன்னாடி நாள் கூட்டிட்டு போய் விஜய்யை நீ மீட் பண்ற மாதிரி ப்ளான் பண்ணேன்.  இப்படி உன்ன சைக்காலஜிக்கலா அட்டாக் பண்ணா நீ எக்ஸாம் எழுத மாட்ட, அப்படியே எழுதினாலும்  ஃபய்யில் ஆயிடன்னு நினைச்சேன்.  ஆனா நீ பாஸ் ஆயிட்ட. ஆனா உன்னோட பர்சன்டேஜ் கம்மியா இருந்தது. அதை யூஸ் பண்ணி தான் உனக்கு இந்த வேலை கிடைக்காம பண்ணேன்.  எப்படியும் நான் நெனைச்சது நடந்திருச்சு” என்று சந்தோஷமாக கூறினான் கதிர்வேலன் .

இப்பொழுது அவள் அவனை அலட்சியமாக பார்த்தாள்.

“எனக்கு வேலை கிடைக்காம பண்ணது மட்டும் தான் நீ எனக்கு பண்ண கெடுதல். விஜய்யை பொறுத்த வரைக்கும் நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்க. இந்த மாதிரி ஸ்டெடி மைண்ட் இல்லாத இவன்கிட்ட இருந்து என்னை நீ காப்பாற்றியிருக்க. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.”

“இவ்வளவு தெரிஞ்சுகிட்ட நீ இதையும் தெரிஞ்சுக்கோ. எதற்காக இதையெல்லாம் நான் செஞ்சேன் தெரியுமா? நீ கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனதும் உங்க அம்மா கிட்ட பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.  இந்த வீட்டை விட்டு வெளியே போய் ஆறுமாசம் சுதந்திரமா உங்க அம்மா கூட வாழ்ந்துட்டு பணம் சேர்த்து விட்டு திரும்ப இங்கே வந்து இதே வீட்ல உங்க அம்மாவை எங்க அம்மாவுக்கு சமமா வாழ வைக்கணும்னு நீ பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். இந்த வீட்டில எப்பவுமே ஒரே ஒரு மகா ராணி தான். அது எங்க அம்மா மட்டும்தான். இன்னுமொரு ராணியா உங்க அம்மா இந்த வீட்டில் வாழ முடியாது. அப்படி வாழ வைக்கணும்னு நீ   ஆசைப்பட்ட. அதுக்கு இந்த வேலை உனக்கு தேவைப்பட்டது. அதனால்தான் உனக்கு எந்த வேலையும் கிடைக்காம நான் பண்ணினேன்.

.

இப்படி உனக்கு தோல்வி மேல தோல்வியா கொடுத்து உன்னோட திமிரு, தன்னம்பிக்கை எல்லாத்தையும் அழித்து நீ எதுக்குமே பிரயோஜனம் இல்லைன்னு உன்னை மூலையில் உட்கார வைக்கிறது தான் என்னோட  பிளான்.”

உடன் பிறக்கவில்லை என்றாலும் கதிர்வேலனை அவள் எப்போதுமே சொந்த அண்ணனாகவே பார்த்தாள்.

கார்த்திகேயன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு சமமாக இவன் மீதும் அவள் பாசம் வைத்திருந்தாள். ஆனால் இவன் மனதில் இப்படி ஒரு  பகை இவள் மீது இருக்கும் என்று அவள் எப்பொழுதும் நினைத்தது கிடையாது.  தங்கையான இவளை அவன்  ஒரு பரம எதிரியை பார்ப்பதைப் போல வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். இந்த பார்வை அவளுக்கு  அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்தது. அவள் மனம்  வலித்தது. அந்த வலி அவள் முகத்தில் தெரிந்தது.

 

அவள் முகத்தில் தெரிந்த வலியை தவறாக புரிந்து கொண்ட கதிர்வேலன் தொடர்ந்தான்.

“என்ன மனசு வலிக்குதா?. உன்ன பார்த்தா எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. உன்னோட இந்த கஷ்டம் எல்லாத்துக்கும் நான் ஒரு முடிவு சொல்லட்டுமா?”

அவள் புரியாமல் அவனை பார்க்க, அவன் தொடர்ந்தான்.

“ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போடு.”

“என்ன கையெழுத்து?” என்று புரியாமல் அவள் கேட்க.

அவன் “இந்த வீடு எனக்கும்  கார்த்திகேயனுக்கும் மட்டும்தான். அப்படின்னு நீ எனக்கு எழுதி தரணும். உனக்கு இந்த வீட்டில இருந்து எதுவும் வேண்டாம்னு எழுதி தரணும். அப்படி நீ எழுதி தந்தா நான் உன்னை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இந்த வீடு எனக்கும் என்னோட தம்பிக்கும் மட்டும்தான். இதிலிருந்து ஒரு செங்கல் கூட உனக்கு கிடைக்க கூடாது அதுக்காக தான் இதையெல்லாம் பண்ணினேன்.” என்று முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு கூறினான் கதிர்வேலன்.

“உங்க அப்பாவுக்கும் வயசு ஆயிட்டே போகுது. அவர் எவ்வளவு நாள் வேலைக்கு போக முடியும்? உனக்கும் வேலை கிடைக்காது. அதுக்கப்புறம் உங்களுக்கு வேற என்ன வழி? நான் கேட்கிற மாதிரி நீ எனக்கு கையெழுத்து போட்டு தந்தா நாங்களே உனக்கு ஒரு பையன் பார்த்து கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு அனுப்புறோம்.

 

இதைத் தவிர உனக்கு வேறு வழி கிடையாது. நீ தோத்து போயிட்ட. என்கிட்ட நீ தோற்றுப் போய்ட்ட. நான் ஜெயித்து விட்டேன். ஒழுங்கா நான் சொன்ன மாதிரி கையெழுத்து போட்டு கொடுத்துடு.” என்று கூறி பலமாக சிரித்தான்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த வெண்மதி

“யார் சொன்னா நான் தோத்து போயிட்டேன்னு? நான் என்னோட முயற்சியை  கைவிடாத வரைக்கும் நான் தோற்கவில்லை. அதே முயற்சியோடு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி எனக்கு வேலை கிடைச்சிடுச்சு.” என்று ஆனந்தமாக வெண்மதி கூற அதைக் கேட்ட கதிர்வேலன் திகைத்தான்.

“என்ன சொல்ற?” என்று புரியாதவன் ஆக கேட்டான்.

அதற்கு அவள் “என்ன ஷாக்கா இருக்கா? ஆமாம். எனக்கு வேலை கிடைச்சிருச்சு. வேலையில் ஜாயின் பண்ணி ஒரு மாசம் ஆகுது. வேலை பெர்மனன்ட் ஆயிடுச்சு. ஒரு மாச சம்பளம் 15000 வாங்கி இருக்கிறேன்.” அவள் கூறியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவளை வேண்டுமென்றே மட்டம் தட்ட விரும்பி

“15000 வாங்குற இந்த வேலை எங்க? 40 ஆயிரத்துக்கு மேல வரவேண்டிய அந்த சென்னை வேலை எங்க? எப்படி இந்த 15,000 சம்பளத்தை வச்சி நீ உங்க அம்மாவை இங்கே ராணி மாதிரி வாழ வைப்ப?” என்று கூறி சிரித்தான்.

அவனை அண்ணன் என்று கூப்பிட மனமின்றி ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தாள்.

“முடியும்.  என்னால் முடியும். நான் கூட வெளியே போய் சுதந்திரமா இருக்கலாம் என்றுதான் நினைச்சேன். ஆனா நீ இப்போ சொன்னதை கேட்டு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்த வீட்ல நான் ஆசைப்பட்ட மாதிரி எங்க அம்மாவை வாழ வச்சி காட்றேன். உன் கண் முன்னாடியே நாங்க சந்தோஷமா சுதந்திரமா இதே வீட்டில் வாழ்ந்து  காட்டுவோம். இந்த வீட்டை விட்டு எங்கேயும் ஓடி ஒளிய மாட்டோம். இது என்னோட சேலஞ்ச். அதுக்கான ஏற்பாட்டையும் நான் பண்ணிட்டேன்.”என்று கூறியபடி

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!