Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 19 2

அதுவும் இருவரும் ஒரு சேர  வாசல் படியில் வலது காலை எடுத்து வைக்கும் போது, மணிமேகலையின் பக்கம் தன் கையை நீட்டினான்.

மணிமேகலையும் அவனின் மனது உணர்ந்து தன்னால்  அவன்  கைய்யோடு தன் கையை பிணைத்துக் கொண்டு  அந்த வீட்டில் உள் நுழையும் போது… மணிமேகலையின் உடல் தன்னால் சிலிர்த்துக் கொண்டது.

தெய்வநாயகி கூட வீரேந்திரனிடம்… “ஏற்கனவே மணிய பார்த்துட்டு  ஊரே கண்ணு பட்டு இருக்கு. இதில் ரெண்டு பேரும் சோடியா வேற வீட்டில் நுழையுறிங்க…ஊரு மொத்தமும் இங்கு தான் கூடி இருக்கு.  ஒருத்தர் கண்ணு போல ஒருத்தர் கண்ணு இருக்காது. அதனால இனி ரெண்டு பேரும் சோடி போட்டு நிக்காதிங்க..நான் அம்புட்டு தான் சொல்வேன்.” என்று  சொன்ன அப்பத்தா தாங்கள் வெளியில் நின்றுக் கொண்டு இருந்த இடத்தில் இருந்து, குனிய முடியாது குனிந்து  மண்ணை எடுத்து வந்தவர்…

“இதில் துப்புங்க.” இவ்வீட்டில் பெண்ணாய் பிறந்து, அப்பத்தாவின் கைய்யால் திருஷ்ட்டி சுத்தப்படுவது மணிமேகலைக்கு இது தான் முதல் முறை.



Advertisement

அனைத்து பேரன்களையும் உட்கார வைத்து திருஷ்ட்டி சுத்தும் போது,  ஏதோ ஒரு ஆசையில் தானே போய் அமர்ந்தாலும், தனக்கு சுத்தாது எழுந்துடு…என்று சொன்ன அப்பத்தாவின் அன்றைய செயலும் பேச்சும் நியாபகத்தில் வர…

இது வரை இருந்த இதமான சூழ்நிலை மறைவது போல் ஆனாது. மூன்று முறை… “மணி துப்பு.” என்ற அப்பத்தாவின் பேச்சு காதில் விழுந்தாலும், அதை உடனே செயல் படுத்த அவளாள் முடியவில்லை.

வீரேந்திரன் தான்,அவன் பிடித்து இருந்த கையில் அழுத்ததை  கொடுத்து… “சிட்டு துப்பு.” என்று சொன்ன வீரேந்திரனின்  குரலில், இது வரை இருந்த இலகு தன்மை மறைந்து, அங்கு கடுமை குடியேற சொன்னவனின் பேச்சில் அவனை திரும்பி பார்த்தாள்.

Advertisement

“ஊரே நம்மை தான் பார்த்துட்டு இருக்கு. அம்மத்தா எவ்வளவு நேரம், நம் முன் கை நீட்டி நின்னுட்டு இருப்பாங்க. துப்பு.” என்று  வீரேந்திரன் அதட்டி சொல்லவும்…

Advertisement

அந்த மண்ணில் மேல் துப்பி விட்டு…தன் அன்னையிடம்… “ரொம்ப டையாட இருக்கும்மா. நான் போய் ரெஸ்ட் எடுக்கட்டுமா…” என்று  கேட்டவள் மறந்தும் மற்றவர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பவில்லை. மற்றவர்கள் என்பதில் நம் வீரேந்திரனும் அடக்கம்.

எப்போதும் இது போல் அனைவரும் கூடி இருக்கும் போது மணி இது போல் நான் போகிறேன் என்று எல்லாம் சொல்ல மாட்டாள். அம்மா அனைத்தும் தனியாக செய்கிறார்களே என்று வரலட்சுமிக்கு உதவிகள் செய்துக் கொண்டு இருப்பாள்.

இப்போது மணிமேகலையின் இந்த  பேச்சில் தெய்வநயகி… “நம்ம உறவு இங்கு தான்  சனமே கூடி இருக்கு.இப்போ போய்…” அடுத்து அவர் என்ன பேசி இருப்பாரோ…

Advertisement

இடையில் வீரேந்திரன்… “டையாட  இருக்குன்னு தானே  சொல்றா   அம்மத்தா. விடுங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் அவ கொஞ்சம் சரியா ஆவா…” என்று தெய்வநாயகியிடம் பேசிய வீரேந்திரன்..

மணிமேகலையை பார்தது… “சரி ஆயிடுவே தானே…” என்ற அவன் கேள்வியே சொன்னது நீ சரியாகி விட வேண்டும் என்று.

“ம்…சரி ஆயிடும்.” என்று மணிமேகலை  சொல்லும் போது வீரேந்திரனின் முகத்தை பார்த்து தான் சொல்லும் படி ஆனது.

“ம்.. உன் ரூமுக்கு போ…நான் இதை எல்லாம் பிறகு வேலையாள் மூலம் உன் ரூமுக்கு கொண்டு வந்து வெச்சிடுறேன்.” என்று சொல்லி மணிமேகலையை அனுப்பி வைத்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அந்த வீட்டில் ஊரே கூடி இருக்க…அனைவரையும் பொதுவாக பார்த்த  தெய்வநாயகி… “எல்லோருக்கு சாப்பாடு இங்கன  தான்.  எல்லோரும் சாப்பிட்டு தான் போகனும்.” என்று சொல்லி விட்டு தன்  மகளை  தனியாக அழைத்து சென்றவர்…

தன் மகளிடம்… “தோ பார் சங்கரி. மணிய இப்பவே இழுத்து பிடிச்சா தான் உண்டு.இப்போ விட்டா பொரவு நீ தான் அவளுக்கு ஆக்கி கொட்ட வேண்டி இருக்கும். பாத்து சூதனமா நடந்துக்க..

என்னால அம்புட்டு தான் சொல்ல முடியும்.” என்று தன் மகளிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்க்கு வந்த வீரேந்திரன்…

தெய்வநாயகியிடம்… “எந்த அளவுக்கு இழுத்து பிடிச்சிக்கனும் அம்மத்தா…?” என்று கேட்டவன்…பின் அவனே…

“எதுக்கு இழுத்து கிழுத்து பிடிச்சி நாம கஷ்ட்ட படுவானே…பேசாம நம்ம மாட்டு கொட்டாயில்  கட்டி வெச்சிடலாம…” என்று தன் பேச்சில் நக்கல் கூட்டி கேட்க…

“புது ஜோரு. இப்படி தான் பேச வைக்கும் அப்பூ…அனுபவஸ்த்தி சொல்றேன் கேட்டுக்கோ… எனக்கு என்னவோ மணி போனப்பலே திரும்பி வரலேன்னு தான் எனக்கு படுது.

இப்படியே விட்டா… பொரவு அவ படிச்ச திமிரை உனக்கே காமிப்பா…  அம்புட்டு தான் என்னால சொல்ல முடியும்.”  என்று முதலில் படித்த பல்லவியையே தெய்வநாயகி   திரும்ப படித்தார்.

“இப்போ கொஞ்ச நேரம் முன்ன தான் …சிட்டுவ படிச்சாலே  தேஜஸ் வந்துடுமுன்னு சொன்னிங்க…இப்போ அதை  திமிருன்னு  மாத்தி சொல்றிங்க…” என்று வீரேந்திரன் எடக்காக கேட்டான்.

“என்ன இருந்தாலும், ஊரு சனம். உறவு சனத்துக்கு முன்னாடி அவள நானே தப்பா பேசிட கூடாதுல்ல…அதுவும் இல்லாம முதல்ல அவ என் பேத்தி மட்டும் தான். இப்போ என் பேரனின் பெண்சாதியாவும் ஆக போறவ…அவளுக்கு கொடுக்கும்  மருவாதை கொடுத்து தானே ஆகனும்.”

இந்த வரவேற்ப்பு…இந்த மரியாதை எல்லாம் அவளுக்கு உண்டானது கிடையாது. உனக்கு அவள் மனைவியாய் ஆக போவதால் தான் கொடுக்கிறேன் என்று தெய்வநாயகி சொல்லாமல் சொன்னார்.

வீரேந்திரனோ… “உங்க பேத்தி ஆன பின் தான் அவ எனக்கு பொஞ்சாதியா ஆக போறா…இங்கு நீங்க கொடுக்கும் மரியாதை தான் காலம் முழுசுக்கும் அவளுக்கு தொடரும்.

என்ன தான் புகுந்த வீடு  ஒரு பெண்ணுக்கு நல்ல படியாக அமஞ்சாலும், பிறந்த வீடு சரியில்லேன்னா…அதாவது அவளுக்கு  கொடுக்க வேண்டிய மரியாதையை கொடிக்கலேன்னா…

 

[the_ad id=”6605″]

 

 

 

ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் புகுந்த வீட்டு சனம்… உன் போஷி தான் தெரியுமே…பொறந்த வீட்டில் நாதி இல்லாத போதே உனக்கு இவ்வளவு திமிரா…? என்று கேட்பாங்கன்னு சொல்லலே கேட்க  கூடுமுன்னு தான் சொல்றேன்.” என்று இருக்கும் நிதர்சனத்தை  தெய்வநாயகியிடம் பேசினான்.

அதற்க்கும் தெய்வநாயகி என்னவோ சொல்ல வந்தார்கள் தான். ஆனால் அதற்க்குள் சங்கரி… “ஏன்டா என்னை பாத்தா உனக்கு வில்லி போல தெரியுதா…நான் ஏன்டா என் மருமகள அப்படி பேச போறேன்.

நம்ம வீடே…அவளுக்கு அம்மா வீடாகவும், புகுந்த வீடாகவும் ஆக்கிடுவேன்டா…” தன்னை பார்த்து வில்லி தனம் செய்வது போல் தன் மகனே பேசி விட்டானே என்ற ஆதாங்கத்தில் சங்கரி இப்படி சொன்னார்.

“அம்மா வில்லிக்கு எல்லாம் தனி திறமை வேண்டும். கூடவே மூளையும். அதனால நீங்க வில்லின்னு நினச்சி எல்லாம் நான் பேசல. பொதுவா அப்படி நடக்குமுன்னு தான்  சொன்னேன்.

ஆ அப்புறம் என்ன சொன்னிங்க. நம்ம வீட்டையே சிட்டுக்கு பிறந்த வீடாகவும், புகுந்த வீடாகவும் மாத்திடுவேனா…

எதுக்கு…?அது எதுக்குன்னு கேட்கிறேன்…? என் சிட்டுக்கு என்ன அப்பா இல்லையா…?அம்மா இல்லையா…? அப்பத்தா…தாத்தா…சித்தப்பா…சித்தின்னு  இவ்வளவு பெரிய சொந்தங்கள் இருக்கும் வீட்டில் பிறந்துட்டு…புகுந்த  வீடே பிறந்த  வீடா சீராடனும் என்று அவளுக்கு என்ன தலை எழுத்து…?

என் சிட்டுக்கு, பிறந்த வீட்டில் கிடைக்க வேண்டிய   மரியாதை கிடைக்க வேண்டும் கிடைத்தே ஆகவேண்டும்.” என்று பேசினான்.

அதே சமயம் தன் அறையில்  படுத்திருந்த மணிமேகலைக்கும்  இதே எண்ணம் தான். என்ன கொஞ்சம் மாறி யோசித்திக் கொண்டு இருந்தாள்.

குழந்தை பருவத்தில் சுற்றி போடும் போது என்னை விரட்டியவர்கள்…இன்று ஏழு கழுதை வயதான பிறகு சுற்றுகிறார்கள்.இது யாருக்காக…?எல்லாம் தன் பேரனுக்காக…அதாவது நான் அவர் பேரனின் மனைவியாக போகிறேன். அதான் எனக்கு இந்த மரியாதை எல்லாம்.

 

[the_ad id=”6605″]

 

 

 

தன் மகனோட  மகளாய்…தன் பேத்தியாய் இந்த வீட்டில் எனக்கு கிடைக்காத மரியாதை…அவரோட பேரனின் மனைவியாய் எனக்கு கிடைக்கிறது. அப்படி பட்ட மரியாதையே எனக்கு வேண்டாம்…என்ற எண்ணம் மணிமேகலையின்   மனதில்  எழுந்தது.

இதோ அதோ என்று காத்துக் கொண்டு இருந்த பெரிய வீட்டில் திருமணம் ஊரே வளைத்து போட்டு பந்தல் கட்டி விழா கோலம் பூண்டது போல இருந்தது.அந்த ஊரில் இருக்கும் பெரிசுகளில் ஒருவர்…

“அவுகளுக்கே சொந்தமா கல்யாணம் சத்திரம் இருக்கும் போது…எதுக்கு ஊரையே வலச்சி போட்டு பந்தல் போட்டு கல்யாணம் செய்யிறாங்க…?” என்று கேட்க…

அதற்க்கு மற்றொருவரோ… “ஏன்டாப்பா அது நம்மை போல சாமனியங்களுக்கு, அந்த கல்யாணம்  மண்டபம் பத்தும். இது பெரிய வூட்டு கல்யாணம். அதுலேயும் ஒன்னுக்கு இரண்டா பண்றாங்க…

பெரிய வூட்டு மனுஷாளோட அந்த வீரா தம்பி தான் பார்த்த இடத்தில் எல்லாம் பணம் கொடுத்து வெச்சி இருக்காரே…அவருக்கு நம்ம ஊரில் இருந்தும்,  அடுத்த ஊரில் இருக்கும் சனமும்  வந்து நேத்தே வந்துடுச்சே…” என்று வியாக்கணம் பேசினார் என்றால்..

அதை கேட்ட மற்றொருவரோ… “நீ வேறு அப்பூ…நீ என்னவோ பக்கத்து ஊரை பேசுறே…நேத்து  வெளிநாட்டுக்காரி ஒருத்தி வந்து இருக்கா…என்னம்மா இருக்கா தெரியுமா…? ஏதோ பாட்டுல வருமே, உன்னை  வெள்ளாமை வெச்சி தான் வெளுத்தாங்கலா…?வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களான்னு…அது கணக்கா இருக்குப்பூ அந்த புள்ள…” என்று  நாப்பதின் தொடக்கத்தில் இருக்கும் ஒருவன் பேசினான்.

அதற்க்கு பதில்… “அந்த புள்ள எப்படி இருக்குமுன்னு நான் பாக்கலே பங்காளி… ஒரு சமயம் அதோ உன் பக்கத்தில் இருக்குறவங்க பார்த்து இருந்தாலும் பார்த்து இருக்கலாம்.” என்று சொன்னதும்…

அந்த அழகியைய் பற்றி பேச ஆள் கிடைத்த சந்தோஷத்தில் யாரு அது என்பது போல் திரும்பி பார்த்தவனின் கண்ணில் அகப்பட்டது என்னவோ அவனுடைய மனையாள்…

“அட பங்காளி உன் புத்திய காட்டிட்டியே…” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டே  ஓடி விட்டார். வாங்கும் அடியை யாரும் பார்க்காது வாங்க வேண்டும் அல்லவா…

இப்படி கிண்டலும் கேலியுமாய் அந்த கல்யாணத்தின் இனிதே தொடங்கிய தொடக்கம்…முடியும் போதும் இருக்குமா….?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!