Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 4 2

இதோ அதோ என்று மணிமேகலையின் வெளிநாட்டு படிப்பு சம்மந்தமாக அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வந்து, இதோ அடுத்த வாரத்தில் அவளின் மேல் படிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் கலிபோனியாவில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் அவளின்  மேல் படிப்புக்கு இடம் கிடைத்து விட்டது.

விசாவில் இருந்து, மணிமேகலைக்கு  அங்கு தேவைபடும் பொருட்கள் அனைத்தையும் வீரா பார்த்து பார்த்து வாங்கி வந்து கொடுத்தான்.

மணிமேகலைக்கு மேல் படிப்பு படிக்க ஆசை இருந்த அளவுக்கு, விவரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மணிமேகலை எப்போது வீட்டில் தன் விருப்பத்தை சொன்னாளோ…அப்போதில் இருந்து அனைத்து ஏற்பாட்டையும் வீரா தான் பார்த்துக் கொண்டான்.

மணிமேகலை எவனை வட்டிக்காரன்  என்று  கிண்டல் செய்தாளோ…அவனே தான் தன் பைனான்ஸ் மூலம் அவள் மேல் படிப்பின் பணத்திற்க்கு ஏற்பாடு செய்தது. அரசாங்கத்தின் மூலம் செல்வதற்க்கு ஆயிரம் கண்டிஷன் இருந்ததால், தன் வேலை நடுவில் அதை இப்போதைக்கு தன்னால்  பார்க்க முடியாது என்று  தன் பைனான்ஸின்  மூலமே  சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மணிமேகலையில் படிப்பு  தேவையான பணத்தை அவனே கொடுத்து விட்டான்.



Advertisement

தெய்வநாயகி கூட… “இது எல்லாம் உனக்கு தேவையா ராசா…” என்று வீராவின் முடிக் கோதி அவனிடம் கேட்டதற்க்கு, …

“நான் வட்டிக்காரன் அம்மத்தா…என் பணம் வீண் போகாது.” என்று சொல்லி விட்டான்.

அதோடு தெய்வநாயகி வீராவிடம் இது போல் கேட்பதை விட்டு  விட்டார். வீரா ஒரு முறை தான் தன் நிலையை சொல்வான். திரும்ப திரும்ப அதை பற்றி கேட்டால், அவனிடம் இருந்து பதில் வராது. ஒரு முறைத்த பார்வை மட்டுமே பார்ப்பான்.

Advertisement

வீரா எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவனோ…அவ்வளவுக்கு அவ்வளவு கண்டிப்பானவனும். அவனின் வாழ்க்கையில் அனைத்தும் அவன் திட்ட மிட்டபடி தான் சரியாக நடந்துக் கொண்டு இருக்கிறது, என்று சொல்வதை விட… வீரா நடத்திக் கொண்டு இருக்கிறான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

Advertisement

அதனால் வீராவிடம் குடும்பம் மட்டும் அல்லாது அவனின் அம்மத்தா குடும்பம் கூட அவன் ஒன்று சொன்னால், அதற்க்கு அடுத்து அதை பற்றி பேச மாட்டார்கள். அதன் காரணத்தால் தெய்வநாயகி தன் பேரனிடம் பேச முடியாததையும் சேர்த்து வைத்து, தன் பேத்தியிடம்  பேசி தீர்த்தார்.

 

[the_ad id=”6605″]

Advertisement

 

 

“உனக்கு அவன் என்ன என்ன செய்து இருக்கான். உங்க அய்யன் கூட அவன் சொன்னதால் தான் உன்னை படிக்க வெளிநாட்டுக்கு எல்லாம் அனுப்ப ஒத்துக் கொண்டார்.

இம்மா பணம் எல்லாம் செலவு செய்யுறான். எல்லாம் பணத்தையும் ஒழுங்கா கொடு. அங்க படிச்சிப்புட்டு ஒரு வருஷம் சமபாதித்தா போதுமாமே செலவு பண்ண அம்புட்டு பணமும் எடுத்துடலாமுன்னு வீரா  சொன்னான்.

ஏமாத்தாம  அவன் கிட்ட பணத்தை கொடு. அவனை ஏமாத்த பார்க்காதே….” என்று இன்னும் என்ன என்னவோ தெய்வநாயகி வாய் ஓயாது சொல்லிக் கொண்டே இருந்தார்.

அனைத்திற்க்கும் சேர்த்து வைத்தது போல்… “அப்பத்தா நான் அவங்கல ஏமாத்த மாட்டேன். பணத்தை ஒழுங்கா  கொடுத்துடுவேன்.” என்று தெய்வநாயகியிடம் சொன்ன மணிமேகலை

வசுந்தராவிடம்… “பார்த்தியா வட்டிக்காரன்னு நிரூப்பிக்கிறான். என் அப்பத்தா கிட்ட  பணம் போட்டதை ஒரு வருடத்தில் எடுத்துடலாமுன்னு சொல்றான்.” என்று அவனை தாளித்து  விட்டாள்.

வசுந்தரா இதை அனைத்தும் ஒரு புன்னகையுடனே கேட்டுக் கொண்டு இருக்க… “என்னடி நான் அவனை  திட்டிட்டு இருக்கேன். நீ சிரிச்சிட்டு இருக்க…” என்று மணிமேகலை தன் கோபத்தை வசுந்தராவிடம் காண்பித்தாள்.

“இல்ல வெறுப்புக்கும், விருப்பத்திற்க்கும் ஒரு நூலிழை தான்  வித்தியாசம் இருக்கும் என்று யாரோ சொல்லி கேட்டேன். அதான் இந்த வெறுப்பு எப்போ விருப்பமா மாறுமுன்னு நினச்சிட்டு இருக்கேன்.” என்று சொல்லி மணிமேகலையிடம் நல்ல நாளு வார்த்தைகளை வாங்கி கட்டிக் கொண்டு தான் வசுந்தரா   சென்றாள்.

தெய்வநாயகி என்ன தான் மணிமேகலை  மீது அவ்வளவு வெறுப்பை கட்டினாலும்,   ஏனோ இனி அவள் பார்க்க வருடக்கணக்காகும் என்ற நினைப்பில்…

“ஒழுங்கா சாப்பிடு. கண்ட கண்ட ஓட்டல்ல சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதே…எதுன்னாலும் நீயே சமச்சி சாப்பிடு.” என்று சொல்லிக் கொண்டு வந்தவருக்கு என்ன தோன்றியதோ…

“நான் படுக்க போறேன். வயசான காலத்துல நேரம் சென்டு படுத்தா என் உடம்பு தான் கெடும்.” என்று சொல்லி சென்று விட்டார்.

அய்யனும்…. ஒரு முறைக்கு இரு முறை “ பார்த்து சூதனமா நடந்துக்க. நான் அம்புட்டு தான் சொல்வேன்.” என்ற சொல்லோடு அமைதி காத்தார்.

விடியற்காலை மூன்று மணி விமானத்திற்க்கு, வீட்டில் இருந்து முன் இரவு  பதினொன்று மணிக்கே கிளம்ப வேண்டும் என்பதால், அவ்வீட்டில் அந்த இரவு நேரத்திலும், அனைத்து அறையின் விளக்குகளும் ஜெகஜோதியாக எரிந்துக் கொண்டு இருந்தது.

சித்தி மார்களும் சித்தப்பாக்களும்… “பார்த்து குடும்ப கவுரவம் கெடாம பார்த்துக்க.” என்று சொல்லி விட்டு, கை கட்டி நின்றுக் கொண்டனர்.

வரலட்சுமியோ  மகளுக்கு தேவையான அனைத்தும் கைகள் அது பாட்டுக்கு  பார்த்து… பார்த்து…  எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாலும், கண்கள் அவ்வப்போது தன் மகளை தொட்டு  தழுவிய வண்ணமே இருந்தது.

அதை பார்த்த மணிமேகலைக்கு… ‘இப்போவாவது தன்னிடம் இந்த அம்மா மனம் திறந்து பேசலாம் இல்லையா…குறைந்த பட்சம் இவர்கள் சொன்னார்களே, குடும்ப மானம் அதை பத்தியாவது வாயை திறந்து  சொன்னால் கூட போதும் என்று இருந்தது.

எதையும் வெளியில் சொல்லாது எப்படி இவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தவளுக்கு, நீ மட்டும் என்னவாம்…அவளின் மனசாட்சியே   அவளின் தவறை  எடுத்துரைத்தது.

ஆ நான் வசு கிட்ட சொல்றேன். ஆனா அம்மா …என்று யோசித்தவளுக்கு அப்பா கிட்ட சொல்வாங்களோ என்று நினைத்தவள் உடனே இருக்கவே இருக்காது. அப்பா கிட்ட அம்மா தேவைக்கு பேசி தான் அவள் பார்த்து இருக்கிறாள்.

தன் பெற்றோர்களின் வாழ்க்கையே அவளுக்கு ஒரு புரியாத புதிர் தான் என்று மணிமேகலை நினைத்து கொண்டவள்…தன் அப்பா அம்மாவை பற்றிய நினைப்பை இப்போதைக்கு தள்ளி வைப்போம்.

தான் அடுத்து  தனியாக போகும் அமெரிக்கா வாழ்க்கை  எப்படி இருக்க போகிறதோ என்று நினைத்தவளின் மனது, லேசாக கொஞ்சம் ஆட்டம் கண்டது.

கனவு, லட்சியம், ஆசை என்று,  தான் அமெரிக்கா செல்ல ஆயிரம் காரணம் சொன்னாலும், இந்த ஊரை விட்டு எங்கும் போகாத தான் எப்படி சமாளிக்க  போகிறோம் என்று தன் கவலையில் ஆழ்ந்தவளை…

“தைரியமா இரு எல்லாம் நல்ல படியா நடக்கும். உன் கவனம் மொத்தமும் உன் படிப்பில் மட்டும் தான் இருக்கனும்.”

மணிமேகலையை விமானம் நிலையம் வரை கொண்டு செல்ல வந்த வீரா, அவளின் லக்கேஜை எடுக்கும் போது அவளின் முகபாவனையை பார்த்து சொன்னான்.

 

[the_ad id=”6605″]

 

 

அதுவும் படிப்பில் மட்டும்  தான் கவனம் இருக்கனும், என்று சொல்லும் போது கவனம் என்ற வார்த்தையில் வீரா அதிக அழுத்தத்தை கொடுத்தானோ  என்று மணிமேகலை நினைத்தாலும், அந்த நேரத்தில் அவன்  அவளிடம் பேசிய வார்த்தைகள் அவளுக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது என்பது உண்மை.

தான் சொன்னதற்க்கு எப்போதும் தலையாட்டும் மணிமேகலை அந்த தலையாட்டலும் விடையாக தனக்கு கிடைக்காததால்… திரும்பவும் “என்ன புரியுதா…?” என்று கேட்டான்.

“ம் புரியுது. பார்த்து நடந்துக்குறேன்.” என்று முதன் முறை மணிமேகலை வீராவின் முகத்தை பார்த்து  சொன்னாள்.

கமலக்கண்ணன் எப்போதும் போல் மகள் கிளம்பும் போது தன் கவலையை முகத்தில் காட்ட வில்லை என்றாலும், அவர் கண்கள் கலங்கி, ஒரு வித அலைப்புறுதலுடன், அங்கும் இங்கும் அலைபாய்வதை பார்த்து…

அவரை கட்டிக் கொண்டவள்… “கவலை படாதிங்க அப்பா. என் இந்த முடிவு நமக்கு ஒரு விடிவா இருக்கும்.” என்று அனைவரின் முன்நிலையில் தான் அவர் பாஷையில் சொன்னாள்.

ஆனால்  வராவுக்கு தவிர, அங்கு இருப்பவர்களுக்கு அது புரியாது போனது. புரிந்து இருந்தால்…

வீரா யாரும் வேண்டாம் நானே வழி அனுப்பிட்டு வர்றேன் என்று  சொல்லி அனைவரையும் வீட்டில் விட்டு,  மணிமேகலை  வீரா மட்டும் அமர்ந்திருந்த அந்த கார்,  விமான நிலையம் நோக்கி சென்றது.

அவள் போக வேண்டிய விமானத்தின் நேரம் வந்து விட… வீரா அவள் கை பற்றி.. “டேக் கேர்.” என்ற அந்த வார்த்தையில் மணிமேகலையின் கண்கள் தன்னால் கலங்க… “தேங்ஸ்.” தன் கைய் பற்றிய கையில் தன் மறுகையை வைத்தவள், சொன்ன அந்த பேச்சில், வீரா   எதுக்கு தேங்ஸ் என்று நினைத்து குழம்பி பின் தெரிந்து…

“எனக்கு உன் கிட்ட இருந்து தேங்ஸ் வேண்டாம்.” என்ற  சொல்லோடு மணிமேகலையை வழி அனுப்பி வைத்தான்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!