Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 7 1

அத்தியாயம்….7 

எப்போதும் போல்  அந்த கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவன் பின்னாலேயே…”அத்தான் எப்போ மாடிக்கு போவிங்க…?” என்று கேட்டாள்.

மணிமேகலை சென்ற வாரம் திரையரங்கில் ஒரு படம் பார்த்தாள். அதில் நாயகன் கவிழ்ந்த வாறு தண்டால் எடுத்துக் கொண்டு இருக்க…நாயகி அவன் முதுகில் ஏறி அமர்ந்த வாறு ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது.

அதை பார்த்தம் ‘நம் அத்தான் மேல் நோக்கி தானே நம்மை புஷ்ஷப் செய்தார். இது போல செய்யலையே…” என்று  நினைத்தவள்…



Advertisement

 ‘சரி அடுத்த தடவை வீரா அத்தான் ஊருக்கு  வந்தா… இது போல் செய்ய சொல்லனும்.’

வளர்ந்தும் வளராத அந்த குழந்தை மனதுக்கு, அந்த காட்சியில்  காட்டிய காதலோ…காமமோ தெரியவில்லை. தன் அத்தான் தன்னை கையில் தாங்கிக் கொண்டு மேலும் கீழும் ஊஞ்லாடுவது போல் செய்யும் போது, அவளுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பாடும்.

‘இது போல் செஞ்சா எப்படி இருக்கும்…?’ இது தெரிந்துக் கொள்ளவே … மணிமேகலை தன் வீரா அத்தானை அந்த தடவை மிக ஆவளோடு எதிர்  பார்த்தாள்.

Advertisement

தன் ஆவள் மிகுதியில் சமையல் கட்டில் சங்கரியிடம்… “அத்த அத்தான் எப்போ வருவார்…?” என்று ஆசையுடன் கேட்டாள்.

Advertisement

மணிமேகலையின் முகத்தை கொஞ்சிய வாறே… “அடுத்த வாரம் வந்துடுவான்மா…” என்று  தகவல் சொன்ன சங்கரி…

கூடுதலாக… “பட்டணத்தில் இருந்து ஏதாவது வாங்கிட்டு வரனுமாடா…” என்று  கேட்டார்

எப்போதும் இல்லாது, இந்த தடவை மணிமேகலை தன் மகனை கேட்கிறாளே…ஒரு சமயம் சென்னையில் இருந்து ஏதாவது வேணுமா…என்று தான் கேட்டாள்.

Advertisement

“அய்யோ அத்த எனக்கு பொருள் எல்லாம்  ஒன்னும் வேண்டாம்.” என்று மணிமேகலை மறுத்து விட்டாள்.

“அப்போ எதுக்குமா அத்தானை கேட்ட…” என்றூ சங்கரி கேட்டதற்க்கு,

இது என்ன என்று சொல்வது என்று யோசித்தவள்…எதுவும் சொல்லாது… “இது வேற அத்த. எனக்கும் அத்தானுக்கும் மட்டுமானது.” என்று சொல்லி விட்டு மணிமேகலை சிட்டாக அந்த இடத்தை விட்டு பறந்து விட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

தான் ஆவளோடு எதிர் பார்த்த வீரா அத்தான் வந்ததில் இருந்து, மணிமேகலை  அவன் பின்னவே சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து சங்கரி கூட…

“என்ன வீரா சின்ன சிட்டு உன் பின்னாடியே சுத்துது.” என்று கேட்டார்.

வீராவின் நாக்கில் அன்று என்ன இருந்ததோ… “அது சிட்டுக்கும் எனக்கும் உண்டானது.” என்று  பதில் அளித்தான்.

அதற்க்கு சங்கரியும்… “சரிப்பா நான் உங்க நடுவுல வரல.” என்று சங்கரியின் மனதிலும் எந்த வித விகல்பமும் இல்லாத காரணத்தால் சொல்லி விட்டார்.

இந்த பேச்சுக்களை அந்த வீட்டில் இருந்த இரு சித்திகளும் கேட்க நேர்ந்தது.ஆனால் சங்கரி  போல் அதை விகல்பம் இல்லாது எடுத்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை.

அதுவும் இல்லாது வசதியில் தாங்கள் என்ன தான் உயர்ந்து இருந்தாலும், அழகில்…குரல் வளத்திலும் மணிமேகலையின் அன்னை வரலட்சுமியின் அருகில் கூட அவர்களால் செல்ல முடியாது.

அதுவும் சாதாரண  காட்டன் புடவையில் கூட ஜொலிக்கும், வரலட்சுமியின் லட்சுமி களாட்சமான முகத்தை பார்க்க பார்க்க…ஏனோ அவர்கள் மனதில் பொறாமை எழும்.

அதே அழகோடு மணிமேகலை பிறக்க..தங்களை கொண்டு தன் மைந்தர்கள் பிறக்க…அவர்கள் பொறாமை கூடியதே தவிர குறையவில்லை.

தன் அத்தை என்ன தான் வரலட்சுமியையும்  அவள் மகள் மணிமேகலையையும்  தங்களோடு கீழ் நடத்தினாலும், தங்களோடு ஏதோ ஒரு தனிப்பட்ட அக்கறை அவர்கள் மீது செலுத்துவது போல் இருக்கும் அந்த வீட்டின் அடுத்த வந்த இருமருகள்களுக்கும்.

ஒரு முறை வரலட்சுமி வீட்டின் வேலையாளை.. “முதல்ல சாப்பிட்டு அடுத்த வேலை பாருங்க.” என்று சொன்னதோடு உணவும் பரிமாறியவளை பார்த்த இருவரும்  தன் அத்தையிடம்..

“அத்தை அக்கா கமலா அத்தானோடு, வேலையாளை கூடுதலா கவனிப்பது போல இல்ல.” என்று சொன்னது தான் தாமதம்..

இது வரை தெய்வநாயகியை அது போல் ஒரு அவதாரத்தை பார்த்தது இல்லை. இனி பார்க்க போவதும் இல்லை  என்பது போல்…

“பாத்து பேசுங்க. நீங்க எனக்கு அண்ணன் பொண்ணு தான். ஆனா அவ இந்த வீட்டு கவுரவம். அண்ணன் பொண்ணா…கவுரவமா…? என்று  ஒரு நிலை வந்தா…எனக்கு என் வீட்டு கவுரவம் தான் முக்கியது. இனி இது  போல் பெரிய மருமகளை பற்றி பேசுவது என்ன…? மனசுல கூட அது போல  நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது.” என்று திட்ட வட்டமாக தெய்வநாயகி சொன்ன பிறகு.. அதற்க்கு பிறகு ஏன் அதை பற்றி இவர்கள் வாய் திறக்க போகிறார்கள்.

இருந்தும் அவர்கள் இருவரின் மனதிலும் அந்த ஓட்டாண்டி குடும்பத்தில் இருந்து வந்தவளுக்காக, சொந்த  அண்ணன் மகள்களை இப்படி பேசுவாங்களா..என்ற ஆதாங்கம், அவர்கள் மனதில் இருந்துக் கொண்டு  தான் இருந்தது.

இப்போது மணிமேகலையின் இந்த பேச்சால்  தங்களுக்கு ஏதும் ஆதாயம் கிடைக்குமா என்று அவர்களையே கண் காணித்துக் கொண்டு இருந்தனர்.

வீரா வந்ததில் இருந்து மணிமேகலை,  அவன் பின் சுற்றுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். எப்போதும் வீரா மாடிக்கு போனால் மணிமேகலை பின் பக்கம் கோழி இடும் நாட்டு முட்டை இரண்டை எடுத்துக் கொண்டு தான் போவாள்.

அவளே அந்த முட்டையை உடைத்து வீராவின் வாயில் ஊற்றுவதில்  மணிமேகலைக்கு ஒரு அல்ப  சந்தோஷம் என்று  கூட சொல்லலாம். எப்போதும் போல் வீரா மொட்டை மாடிக்கு சென்றதும், மணிமேகலை முட்டையோடு அவன் பின் சென்று அவள் வாயில் ஊற்றியவள்…

“அத்தான் நீங்க இப்படி படுத்துட்டு என்னை முதுகுல ஏத்தி பண்ணுங்க அத்தான்.” என்று  மணிமேகலை சொன்னதும்…

“ஏய் சிட்டு உனக்கு எப்படி தெரியும்…?” என்று முட்டையை குடித்ததும், உடற்பயிற்ச்சி செய்ய ஏதுவாக,  தான் போட்டு இருந்த பனியனையும் கழட்டிய வாறே வீரேந்திரன்,  மணிமேகலையிடன் கேட்டான்.

மணிமேகலையும் எந்த விகல்பமும் இல்லாது, தான் பார்த்த திரைகாட்சியை சொல்லி… “அத்தான் அத்தான் அது போல செய்யிறிங்களா…?” என்று ஆவளோடு கேட்டாள்.

மணிமேகலை இளம் குறுத்து. அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனா வீரா அவள் சொன்ன காட்சி என்ன என்று தெரியும் அளவுக்கு, பத்தொன்பது வயதை தொட்ட இளைஞன் அல்லவா… அதனால் வீரா தயங்கினான்.

அவனின் தயக்கத்தை பார்த்த மணிமேகலை.. “அத்தான் அது போல உங்களுக்கு செய்ய வராதா… ரொம்ப கஷ்டமா…?அப்போன்னா பரவாயில்ல அத்தான்.உங்களுக்கு ஈஸியானதே செய்யுங்க” என்ற மணிமேகலையின் வார்த்தையில்…

“சே சே..எனக்கு செய்ய வரும். ஆனா நீ என் மேல விழாமா இருந்தா சரி.”

எப்போதும் வீரா மணிமேகலையை தன் கைய் மீது  அவளை படுக்க வைத்து செய்த உடற்பயிற்ச்சியில், அவள் தன் மேல் விழாமல் பார்த்துக் கொள்வது அவன் கையில் இருந்தது.

ஆனால் இந்த  முறை  முதுகில் அவள் தன் இரு கைய் கொண்டு தன் உடல் மேல் படாது அவள் தன் உடல் பாரத்தை சுமக்க வேண்டும்.

 அதனால் வீரா  திரும்ப திரும்ப… “உன் கை வழுக்குவது போல் இருந்தால், சொல்லு சிட்டு.” என்று பார்த்து பார்த்து ஒரு முறைக்கு  இரு முறை அவளுக்கு எச்சரிக்கை செய்த பின்னே அவன் தன்  இரு கையையும் தரை மீது பதித்து தன் உடலை கூடிய மட்டும் மேல் நோக்கி தரை தொடாது  ஒரு நிலைக்கு வந்ததும்…

மணிமேகலையிடம் … “சிட்டு பார்த்து.” என்று சொன்னதும் மணிமேகலை அவன் முதுகில் தன் கைய் கொண்டு பேலன்ஸ் செய்து அவன் தரையில் இருப்பது போல் மணிமேகலை அவன் முதுகில் இருந்தாள்.

அவன் புஷ்ஷப் செய்ய செய்ய…மணியும் மேலே கீழே மேலே கீழே என்று ஜிக் ஜாக் போல் இருக்க…அந்த சிறு பெண்ணுக்கு ஏக குழி…அந்த குழியில் …”அத்தான் நல்லா இருக்கு.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

ஆடை அணியாத அவன் உடலின் வியர்வையில் இவளின் கை வழுக்கி விட, சட்டென்று வீராவின் முதுகில் ஒட்டிய வாறு படுத்துக் கொண்டாள். படுத்தும் கூட அவள் பதறி எழவில்லை…

 

[the_ad id=”6605″]

 

 

“வழுக்கிடுச்சி…அத்தான்.” என்று சொல்லிக் கொண்டே திரும்பவும் அவன் முதுகு பகுதியில் கை ஊன்றி எழ பார்த்தவளுக்கு முடியாது, திரும்பவும் வீரா  முதுகிலேயே படுத்துக் கொள்ளும் படி ஆகிவிட்டது.

வீராவும் அவளை திட்டாது… “என்ன சிட்டு என் முதுகு உனக்கு மெத்தை போல இருக்க…” என்று கேட்டவன்…

“இரு இரு எழாதே நானே உன்னை இறக்கி விடுகிறேன். என்று  சொல்லிக் கொண்டே, அவன் சாஷ்ட்டங்கமாய் தரையில் படுத்துக் கொள்ளவும், அவள் தரையில் கை ஊன்றி எழ பார்க்கவும்… அந்த வீட்டின் மொத்த குடும்பமும் அங்கு வரவும் சரியாக இருந்தது.

“ஓ இதுக்கு தான் அத்தான் எப்போ மேல போவ எப்போ மேல போவேன்னு கேட்டுட்டு இருந்தியா…?” என்று இரண்டாம் மருமகள் இப்படி சொல்ல… 

மூன்றாம் மருமகள்… “இன்னும் குந்த கூட  வைக்கல..அதுக்குள்ள பார்த்தியா…?” என்று சொன்னார்.

இவர்கள் வந்து இப்படி பேசுவதற்க்குள் வீராவும் மணிமேகலையும் எழுந்து நின்று விட்டனர். இவர்களின் பேச்சு மணிமேகலைக்கு தான் புரியாது…

“ஏன் இவர்கள் நம்மை திட்டுறாங்க….” ஏதோ திட்டுறாங்க என்ற அளவுக்கு தெரிந்தவளாய் குழம்பி போய்  மணிமேகலை அவர்களை பார்த்தாள்.

ஆனால் இவர்களின் பேசியதின் அர்த்தம் புரிந்த வீரா… “பேச்சு பார்த்து வரட்டும்.” இது வரை என்ன என்று மரியாதையாக  பேசிய வீரா தன் விரல் நீட்டி பார்த்து என்பது போல் சொல்லவும்…

சங்கரியிடம்.. “பார்த்து அண்ணி உங்க பையனை இப்போவே இப்படி பேச வைக்கிறா…இன்னும்.” என்று அதற்க்கு அடுத்து என்ன பேசி இருப்பார்களோ…

 

[the_ad id=”6605″]

 

 

சங்கரி… “அண்ணி போதும். என்ன இது சின்ன பசங்களை பார்த்து பேசும் பேச்சா இது…?அதுவும் மணி குழந்தை.” என்று சொல்லி  தன் இரு அண்ணிமார்களையும் அடக்கியவர்..

தன் அன்னையை பார்த்து… “என்னம்மா உங்க மருமகள்களை  பேச  விட்டுட்டு  சும்மா இருக்கிங்க. இந்த பேச்சு எல்லாம் அவர் காதில் போச்சு அவ்வளவு தான்.” என்று சொன்னதற்க்கு…

மணிமேகலையின் சித்திமார்கள் திரும்பவும் ஏதோ பேச வந்தார்கள் தான்…ஆனால் தெய்வநாயகி… “சும்மா இருங்க.” என்று ஒரு அதட்டல் போட்டவர்…

“மணி இங்கே வா…” என்று தன் பேத்தியை அழைத்தார்.

மணிமேகலைக்கு, முதலில் இரு சித்தியும் பேசியது புரியவில்லை தான். ஆனால் வீரா அத்தான் பேசியது. அத்தை சொன்ன சின்ன பெண் என்ற வார்த்தைகள். ஏதோ புரிந்தும் புரியாதது போல் ஒரு கோர்வையாக, அவள் மனதில் அர்த்தம் கண்டு பிடித்தவள், தயங்கிய வாறே தன் அப்பத்தாவின் முன்  நின்றாள்.

 

  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!