Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 9 1

அத்தியாயம்….9 

மணிமேகலையிடம் பேசிவிட்டு  தன் பொருட்களை எடுத்துக் கொண்ட ஜான் விக்டர். தன் கைய் பேசியில்  முதலில் தந்தைக்கு அழைத்து… “அப்பா எந்த ஒட்டல்ல இருக்கிங்க…?” என்ற கேள்விக்கு பதிலாய்…. தான் இருக்கும் தங்கல் ஓட்டலின்  பிரன்ச்  இருக்கும் இடத்தை சொன்ன வில்சன் விக்டர்…

“என்ன விசயம் ஜான்… “ என்ற கேள்விக்கு பதிலாய்…

“இன்னும் அரை  மணிநேரத்தில் அங்கு இருப்பேன்.” என்று சொல்லி விட்டு கைய் பேசியை அணைத்த ஜான் விக்டர்… தொடர்ந்து தன் அன்னைக்கு அழைத்து…



Advertisement

தந்தை இருக்கும் ஒட்டலில் பிரன்ஞ்சை சொன்னவன்… “உடனே அங்கு வந்துடுங்கம்மா…” என்று சொன்னவன் கூடவே… “ட்ரைவரோடு சேப்பா வந்துடுங்க.”  என்ற மகனின் பேச்சில்..

“என்ன ஜான் ஏதாவது பிரச்சனையா…?” என்று கவலையுடன் கேட்டார்.

இது வரை மலர் விழி தனியாக சென்றது கிடையாது. மகன் பெரியவனாக வளரும் வரை கணவரோடு சென்றவர். மகன் வளர்ந்து ஆளாகியதும்..மகன் கணவர் என்று அவர்கள் துணையில்லாது சென்றது கிடையாது.

Advertisement

இந்தியாவில் இருந்து கலிபோனியாவுக்கு வேலை செய்ய தனியாக தான் வந்தாள். மனதில் அவ்வளவு பயம் இருந்தும் குடும்ப சூழ்நிலை அவளை இங்கு வர வழைத்தது.

Advertisement

ஆனால் எப்போதும் வில்சன் விக்டரின் கரம் பற்றினாளோ…அன்றிலிருந்து அவள் தனியாக எங்கும் சென்றது கிடையாது. அவள் கணவர் செல்ல விட்டதும் கிடையாது. 

“நானும் மகனும் இருக்க நீ ஏன் தனியா போகனும்.” என்று  வில்சன் விக்டர் சொல்லி விடுவார்.

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

இப்போது தன் மகன் தன்னை அழைத்ததை தன் கணவனிடம் தெரியப்படுத்தலாமா…. என்று யோசித்த மலர்விழி…சிறிது நேரம் முன் தான்  கைய் பேசியில் கணவர் தன்னை அழைத்து பேசிய  போது அவர் இருக்கும் பிரான்சை சொன்னார்.

சரி எதற்க்கு அழைக்கிறான்… என்று தெரியவில்லை என்றாலும், அங்கு செல்ல தயாராகினார் மலர் விழி.

மணிமேகலை  சிறிது  நேரம் காக்க வைத்த  பின்  அங்கு வந்து சேர்ந்த ஜான் விக்டர்… அவள் முகத்தையே பார்த்த வாறு…

“ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா…?” என்று தெரிந்தே கேட்டான்.

“ம்… இப்போ தான் வந்தேன்.”  என்று பதில் அளித்தவள். இப்போதும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.

அவள் வந்து நேரம்  ஆகி விட்டது என்பதை அவன் அறிவான். தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு இருக்கும் போதே,  மணிமேகலை கார் பார்க்கிங்கை  நோக்கி நடந்து போனதை பார்த்தான்.

அதனால் தான் கைய் பேசியில் தன்  தாய் தந்தையருக்கு, விளக்கமாய் ஏதும் சொல்லாது,  பேசி வைத்து விட்டான். ஆனால் கார் பார்க்கிங் நோக்கி இவன் வரும் வழியில்,  இந்த கல்லூரியின் நிர்வாகி பார்த்து பேச ஆராம்பித்ததும்…

அவரின் வயதும்…அவரின் பதவியும் ..அவரின் பேச்சை தடை செய்து விட்டு  வர முடியாமல் போய் விட்டது.  ஒரு வழியாக அவரிடம் பேசி விட்டு இங்கு வருவதற்க்கு நேரம் தான் ஆகிவிட்டது.

தூரத்தில் இருக்கும் போதே மணிமேகலையின் முகத்தை பார்த்துக் கொண்டு தான் வந்தான். ஏதோ டென்ஷனில் அவள் நகத்தை கடித்து துப்பியதை பார்த்த படி வந்தவன்…

மணிமேகலை  தன்னை  பார்த்ததும், தன்  பதட்டத்தை முகத்தில் இருந்து மறைத்தவாறு தன் முகத்தை  சாதரணமாக காட்டி தன்னிடம் பேசிய மணிமேகலையை யோசனையுடன் பார்த்துக் கொண்டே…

“என் கார் அது…” என்று அங்கு நின்றுக் கொண்டு இருந்த விலை உயர்ந்த காரை காட்டி சொன்னதோடு அதனை நோக்கி ஜான் விக்டர் சென்றான்.

இப்போது மணிமேகலை நான் அவன் பின் செல்லனுமா…?எங்கே…?என்பது போல் முழித்து நின்றவள் பக்கத்தில் தன்  காரை  நிறுத்திய ஜான் விக்டர்..

“ம்..ஏறு.” என்பது போல் முன் பக்க  கதவை திறந்து வைத்தான்.

மணிமேகலைக்கோ அதில் ஏறுவதா…?வேண்டாமா..?என்று குழப்பமாக இருந்தது.தன் ஊர் போல் இங்கு வம்பு பேச மாட்டார்கள்.

ஆனால் இவரை எனக்கு எத்தனை நாளாக தெரியும்…? இவர் கூட செல்வது தனக்கு பாதுகாப்பா…?

தனியாக படிக்க வந்து இருக்கோம். இவன் கூட செல்வது  தனக்கு நல்லதா…? தன்  பாதுகாப்பை எண்ணி கொஞ்சம் தயங்கினாள்.

அவள் தயக்கத்தை எல்லாம்  உதறித்தள்ள… “உன் கற்ப்புக்கு நான் கேரண்டி…” என்ற ஜான் விக்டரின் அந்த வார்த்தை  மணிமேகலைக்கு போது மானதாக இருந்தது.

எப்போதும் வீம்புடன் தான் அவள் செயல் படுவாள். அவள் அப்படி செயல்படுவது மற்றவர்களுக்கு தெரியாத போதும்…அவள் மனதுக்கு தெரியும் தானே…

வீரேந்திரனிடம் கள்ளம் இல்லாது தான் பழகினாள். ஆனால் அதை சித்திகள்  எப்படி எல்லாம் பேசினார்கள். வீட்டில் இருப்பவர்களும் அவர்களை அடக்கவில்லையே…

அதன்  தாக்கம் தான்… ஒன்னும் இல்லாததுக்கு நீங்க என் மேல பழிய போட்டிங்கலே…இப்போ பார் நான் ஊரில் இருக்கும் ஒரு பசங்களையும் விடாது பாக்க போறேன்.  உங்களால் என்னை என்ன செய்ய முடியும்…? என்று நினைத்து பார்த்தாள் தான்.

அதற்க்கு மேல் அவளால் போக முடியாத காரணம்…அவள் குணமா…? வளர்ப்பா…?இல்லை இவள் பார்த்தது யாருக்கும் தெரியாது…அவனுங்க பாக்க முடியாது எல்லாம் ஒன் சைட் பார்ப்பது மட்டும் தான் என்ற வகையில் அமைந்ததாளா… இவளின் செயல் வீட்டுக்கு தெரியாது போய் விட்டது.

ஆக மொத்தம் அவளின் குணம்…இப்படி அவளை ஏற்றி விட்டால் போதும்… உடனே அதற்க்கு எதிர் வினை ஆற்றிவிடுவாள்.

அவளின் அந்த குணம்…ஜான் விக்டர் சொன்ன… “உன் கற்புக்கு நான் கேரண்டி…” என்ற வார்த்தையில் அவன் பக்கத்தில் அமர்ந்த மணிமேகலை முதன் முதலாக அவன் முகத்தை நேராக பார்த்த வேறு…

“எனக்கு  கேரண்டி…நானே தான் சார். வேறு யாரும் கொடுக்க முடியாது. கொடுக்கவும் விட மாட்டேன்.” என்று சொன்னவளின் பேச்சை ஜான் விக்டர் ரசித்தாலும், அவளின் குணநலனை ஆராய்ந்தவனின் மனதில் கூடவே ஏதோ ஒன்று முரண்டியது.

அவர் நடசத்திர அந்தஸ்த்து கொண்ட ஓட்டலின் முன் காரை நிறுத்தியதும் அங்கு வேலை செய்பவர் ஓடி  வர தன் காரை அவனிடம் ஒப்படைத்த ஜான் விக்டர்…

தன் கையை முன் நோக்கி காட்டி… “போகலாம்.” என்று அழைத்தவன் கூடவே… “இந்த ஓட்டல்…” என்று ஆராம்பித்தவனின் பேச்சை…

“இந்த ஓட்டல் உங்களுடையதில் ஒன்று.” என்று  சொல்லவும், அதிர்ச்சியுடன் அவளை திரும்பி பார்த்த  ஜான் விக்டர் தெரிந்துமா என்பது போல் மனதில் நினைத்தான்.

கூடவே நம்மை பற்றி தெரியாது. தெரிய வைத்து தன் பெற்றோர்களை அறிமுகப்படுத்திய பிறகு தன் விருப்பத்தை சொன்னால் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தான்  தனக்கு சொந்தமான இந்த ஒட்டலுக்கே அழைத்து வந்தான். இவள் என்ன என்றால் என்னை பற்றி  தெரியும் என்கிறாள்.

ஜான் விக்டர் மனதில் இப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே… “அப்போ என்னை பற்றி விசாரிச்சி இருக்க. ரொம்ப சந்தோஷம்.” என்று ஏதோ ஒரு வித எதிர் பார்ப்புடன் அவளை  பார்த்து சொன்னான்.

“விசாரிக்கல…உங்க ரசிகைங்க நம்ம காலேஜில தான் எக்க சக்கம் ஆச்சே…அந்த ரசிகையில ஒருத்தி தான் உங்கல பத்தி சொன்னா…” என்று சொன்ன மணிமேகலையின் பதில் ஜான் விக்டருக்கு ஏற்புடையதாய் இல்லை.

“அப்படியா…?” என்று கேட்டவன். 

 தொடர்ந்து…. “என்ன பத்தி உன் கிட்ட வந்து ஏன்  சொல்லனும்…?”  என்று தனக்கு தெரிந்த பதிலுக்கு,   கேள்வியாய் மணிமேகலையிடம் ஜான் விக்டர்  கேட்டான்.  

இந்த கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று மணிமேகலை கொஞ்சம் தடுமாறித்தான் போனாள். கல்லூரியில்  ஜான் விக்டர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை. இதோ காரில் வரும் போது தான் முதன் முறையாக அவன் முகம் பார்த்து பேசியது.

இன்னும் கேட்டால், ஒரு ஆண்மகனை நேருக்கு நேர் பார்த்து பேசியது  ஜான் விக்டரிடம் தான்  என்று  கூட சொல்லலாம். சிறு வயதில் வீரா அத்தான்… வீரா அத்தான் என்று பழகியது எல்லாம் ஒரு கனவு போல் தான் அவள் நினைவடுக்கில் இருக்கிறது.

வயதில் பார்த்த பார்வை அனைத்தும், ஓர விழிப்பார்வையும். கீழ் பார்வையுமே…பேசியது என்பது சுத்தமாய் கிடையாது.

 

[the_ad id=”6605″]

 

 

அந்த தயக்கமும் கூடவே சேர்ந்த பயத்தால் தான் மணிமேகலை ஜான் விக்டரை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஒரு சில சமயம் பார்க்க நினைத்தாலுமே…அவன் எப்போதும் தன்னையே தான் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று அவள் உள்மனது சொல்ல…நிமிர்ந்து பார்க்காது விட்டு விட்டாள்.

சரியாக பார்க்காத ஒருவனிடன் காரில் பயணம்…இது நல்லதா…?கெட்டதா…?என்று அவள் யோசித்து ஒரு முடிவுக்கு வரும் முன்னவே…அவனின் தொடர் பேச்சு மூலம் அவளை சகஜமாக பேச வைத்து விட்டான் ஜான் விக்டர்.

மணிமேகலை  ஜான் விக்டரிடம் சகஜமாக பேச  எனக்கு உன் மீது எந்த வித அபிப்பிரயமும் இல்லை என்று  அவனை நேருக்கு நேர் பார்த்து சொல்லவே அவன் அழைத்ததும் தயங்காமல் வந்தது.

என்ன ஒன்று அவள்  காலேஜ் கார் பார்க்கிங்கிலேயே பேசி விடலாம் என்று நினைத்திருக்க…அவன் தன்னை இவ்வளவு தூரத்திற்க்கு கொண்டு வந்து விட்டான். அவ்வளவு தான்.

ஆனால் இப்படி .. “உன்னிடன் என்னை பற்றி அவங்க ஏன் சொன்னாங்க…?” என்ற ஜான் விக்டரின் கேள்விக்கு என்ன என்று சொல்வாள்.

நீ என்னையே பார்த்துட்டு இருக்க…நம்ம  வகுப்பில் நான் உன் ஆள் என்று பாம் ஆயிடுச்சி…அதான் என்றா சொல்ல முடியும்.

“தெரியல…” என்று  மட்டும் தான் மணிமேகலையால்.  சொல்ல முடிந்தது.

“ம்…அப்படியா…?” என்பது போல் கேட்ட ஜான் விக்டர்…

“ஆனா எனக்கு தெரியும்.” என்று அவன் சொல்ல…அதிர்ந்து போய்  மணிமேகலை ஜான் விக்டரை பார்த்தாள்.

“எ..ன்..ன…?” தெரியும் என்பது போல் அவள் கேட்கும் போதே…

வில்சன் விக்டர்… “ஜான்…” என்ற அழைப்பில் குரல் வந்த திசைப்பக்கம் பார்த்து விட்டு…

“வா…என் பேரன்ஸை அறிமுகப்படுத்துகிறேன்.” என்ற அவன் பேச்சில் இன்னும் இன்னும் அதிர…

‘வம்படியாய் ஏதாது பிரச்சனையில் வந்து மாட்டிக்க போறோமா…?’ என்று மனதில் நினைத்தவளுக்கு பயத்தில் கை இரண்டும் நடுங்கவே ஆராம்பித்து விட்டது. இந்த  சூழ்நிலை அவளுக்கு புதியது.

இதை எப்படி கைய்யாள வேண்டும் என்று யோசிப்பதற்க்குள், அவர்கள் ஜான் விக்டரின் பெற்றோர் முன் சென்று இருந்தனர்.

மலர் விழியை பார்த்ததும் தன் அதிர்ச்சி கொஞ்சம் விலகி போய், அவரை கொஞ்சம் ஆச்சரியத்தோடு தான்  பார்த்தாள் மணிமேகலை.

வில்சன் விக்டரும்…ஜான் விக்டரும் என்ன தான் தமிழ் நன்றாக பேசினாலும், பார்க்க அமெரிக்கர் போல தான் இருந்தனர்.

ஆனால் அவன் அன்னை பார்க்க தமிழ் பெண்ணாய்..அதுவும் தன் வட்டார முக சாயலில் இருந்தவளை பார்த்துக் கொண்டே அவர் கை காட்டிய இடத்தில் அமர்ந்த வாறு புன்னகை புரிந்தாள்.

தன் முகத்தை வாஞ்சையுடன் தடவிய வாறு… “நம்ம பக்கம் முக வெட்டை பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சி…?” தன் முகத்தை ஆசையுடன் தடவிய வாறே பேசியவரின் கையை தட்ட முடியாது அவளும் சிரித்துக் கொண்டே…

“நானும் சாரோட அம்மாவை இப்படி எதிர் பார்க்கலே…”   மலர் விழி கட்டிய சேலையிலும், வைத்திருந்த அகலமான சாந்திலும், தலையில் சூடி இருந்த பூவிலும், பார்வையை  பதித்த வாறே  மணிமேகலை தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விட்டாள்.

சொல்ல வேண்டும் என்று எல்லாம் நினைக்க வில்லை. அது என்னவோ ஜானின் அம்மாவை பார்த்ததும், அவளுக்கு  வேறு யாரோ என்று  தோன்றவில்லை. ஏதோ ஒரு நெருக்கமான உறவை பார்த்த உணர்வு தான் அவளுக்கு எழுந்தது.

அவள் பேச்சில் ஜானே ஆச்சரியம் ஆனான். என்னடா நம்ம கிட்ட  இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் பேசுனா…எங்க அம்மாவை பார்த்ததும் மொத்தமா பேசுறா…

மாமியார் மருமக பிரச்சனை இருக்காது அவன் மனது வேகமாய் திட்டது. அதற்க்கு ஏற்றார் போல் தான் மலர் விழி கேட்க கேட்க…அவள் தன் சொந்த பந்தங்கள் அனைத்தையும் சொன்னவள்.

 

[the_ad id=”6605″]

 

 

அவள் சொந்த ஊர் கிருஷ்ணகிரியை தான்டி என்று சொன்னதும் மலர்விழிக்கு…ஏதோ ஒரு நடுக்கம்…அடுத்து அவள் ஊரை பற்றி பேச்சு எடுக்காது…

அவள் உறவு  அம்மா அப்பா…கூட்டு குடும்பம். தன் அப்பாவின் குறையை கூட சொல்லும் அளவுக்கு மலர்விழி தன் பேச்சால் மணிமேகலையை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கூடவே அவள் சொன்ன…”நான் படிச்சிட்டு என் அப்பா அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்துடுவேன்.” என்று கூடுதல் தகவலும் சொல்ல…

அந்த ஒரு சொல்லே… மணிமேகலையை சாய்க்க ஜான் விக்டருக்கு  போதுமானதாக  அமைந்து விட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!