Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 26

கண்ணு  வளத்து  கண்ணு  தான  துடிசுதுன்னா 

எதோ  நடக்குமின்னு  பேச்சு 

மானம்  கொரையுமின்னு  மாசு  படியுமின்னு 

வீணா  கதை  முடிஞ்சு  போச்சு 



Advertisement

ஈசான  மூலையில  லேசான  பள்ளி  சத்தம் 

மாமன்  பேரை  சொல்லி  பேசுது 

ஆறாத  சோகம் தன்னை  தீராம  சேத்து  வச்சு 

Advertisement

ஊரும்  சேந்து  என்னை  ஏசுது 

Advertisement

மாமா  மாமா  ஒன்னத்தானே 

எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு 

Advertisement

கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே 

அடி  மானே  மானே  ஒன்னத்தானே 

எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

 

கண்ணிற்கு நேராக பிடித்த கத்தி ஒரு கையிலும்… மறுகையால் இனியவளை பிடித்த படி திருமண மேடையை விட்டு இறங்குனான் அன்பு 

 

அன்பு இறங்குவதை பார்த்த இலக்கையன்… வைஷுவுடம் அவன் அருகில் வந்து நின்று கொண்டான்…

 

அதற்குள் லோகநாதனின் ஆட்கள் சுமார் இருபது பேர் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்… 

 

அங்கு இருக்கும் மற்றவர்களுக்கே “யார் இவர்கள்… இங்கு என்ன நடக்கிறது” என்பதும் புரியாமல் நின்று கொண்டு இருக்கும் போது 

 

இனியவளை நெருங்கிய மோகன் “என்ன இனியா இப்டி சொல்லாம கொள்ளாம வந்துட்ட.. உனக்காக எங்க எல்லாம் தேடுனேன் தெரியுமா? வா நாம நம்ப ஊருக்கு போகலாம்” என்ற படி அவளின் கையை பற்றி இழுக்க 

 

அவளோ அன்பை இருக்கி பிடித்த படி நின்று கொண்டு இருந்தாள் 

 

அவளை மேலும் நெருங்கியவனை தடுத்த அன்பு… “உங்களுக்கு யார் வேணும், நீங்க யாரு? ” என்றான் பொறுமையாக 

 

அவனின் பொறுமையை, அவனின் பலகீனமாக எடுத்து கொண்ட மோகன்… உயர்த்திய குரலோடு “இவ என்னோட பொண்டாட்டி, ஏதோ வைஷு என்னோட பொண்ணு, இவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக தான் வந்தேன்” என்றான் எதோ அனைத்தும் உண்மை போல 

 

“இதை நாங்க எப்படி நம்புறது… நீ யாருன்னே தெரியாது… எங்க ஊர்ல இருக்க பொண்ண எப்படி தெரியாதா ஒருத்தன் வந்து கூப்பிட்டா அனுப்ப முடியும்” என்றான் அப்போதும் அதே பொறுமையுடன் 

 

“சாட்சி கேக்குறீங்களா… இதோ” என்று தன்னுடைய அடியாட்களை பார்த்தவன், மோகனின் பார்வை புருந்தவனோ அவன் கையில் இருக்கும் பைலில் இருந்து எதோ ஒரு புகைப்படத்தை நீட்ட… அதை பெற்ற மோகன்… அன்பிடம் கொடுத்தான் 

 

பொறுமையாக வாங்கிய அன்பு, அதை பார்க்க, அது இனியா, அவளின் அக்கா மாமாவுடன் லோகநாதனும் மோகனும் கூட இருக்கும் படம், அடுத்த படத்தை பார்த்தவன் அதில் மோகனும், இனியாவும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படம் 

 

[the_ad id=”6605″]

 

 

 

இரு படங்களையும் பார்த்தவன்… இனியவை பார்க்க… அவளோ “இல்லை” என்பது போல் தலை அசைக்க…. அவளை பார்த்து சிரித்த படியே அந்த புகைப்படங்களை கிழித்து கீழே எறிந்தான் அன்பு 

 

அதில் கோபம் அடைந்த மோகன்.. “யார்டா நீ..எவ்ளோ திமிர் இருந்தா போட்டோவை கிழிச்சி போடுவா?” பேசிக்கொண்டே அன்பின் சட்டை புடித்து விட்டான் மோகன் 

 

“சட்டைல இருந்து கையை எடு” என்ற அன்பை “எடுக்க முடியாது என்னடா பண்ணுவ” என்றான் மோகன் திமிராக 

 

இரண்டு நிமிடம் மோகனையே பார்த்து கொண்டு இருந்த அன்பு அவன் எதிர் பார்க்காத நேரத்தில் அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட… அதில் அதிர்ந்தவன்…. சில நிமிடத்தில் தலை சுற்றுவதை போல் ஆகி கீழே விழுந்து விட்டான் 

 

அதை பார்த்து கொண்டு இருந்த இலக்கியன்”என்னடா பேசிகிட்டு இருக்கும் போதே கைய வெச்சிட்ட…யார்டா அவன்”என்றான் அன்பிற்கு மட்டும் கேட்கும் சத்ததில் 

 

அவனிடம் வந்தவர்களின் விவரத்தை அன்பு கூற, அதை கேட்டவன் “உனக்கு மட்டும் எங்க இருந்துடா வராங்க… அதுவும் அவனை  பாரு… நல்லா ஆளு தடிமாடு மாதிரி இருக்கான்” என்றான் இலக்கியன் மோகனை பார்த்த படி 

 

அதற்குள் தன் மகனிடம் ஓடிய லோகநாதன்.. அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிவதை பார்த்த அவருக்கு கோபம் வந்து விட… 

 

“என்னடா…அட்ரசே இல்லாத ஊருல இருந்துகிட்டு ரவுடி தனம் பன்னுறீர்களா? நான் நெனச்ச இந்த நிமிஷமே உங்களை அடையாளமே தெரியாம செய்ய முடியும்” என்றார் வீராப்பாய் 

 

“ஆமாம்… இவரு அடிக்குற வரைக்கும் எங்க கை பூ பறிக்கும் பாரு… டேய் தடியனோட அப்பா… எங்க அன்பு அண்ணனை பத்தி உனக்கு தெரில… எதோ கொஞ்ச நாளா ரொமான்டிக் ஹீரோவா சுத்திகிட்டு இருக்கான்… அவனை தேவை இல்லாமல் அக்க்ஷன் ஹீரோவா மார்த்தாத..  அப்றம் நீயே கால்ல விழுந்து கதறினாலும் அவன் விட மாட்டான்” என்றான் இலக்கியன் சீறி கொண்டு 

 

“ஹை சின்ன பையா… நீ அமைதியா இரு…இவனுக்கு எவ்வளவு தைரியம்… என்னோட வீட்டு பொண்ண வெச்சிக்கிட்டு எங்களையே அடிக்க வரான்” என்றார் லோகநாதன் கோபத்துடன் 

 

“கோப்பன் மகனே… யார பார்த்துடா சின்ன பையன்னு சொன்ன… எனக்கே கல்யாண வயசு வந்துடுச்சி… என்னை பார்த்து சின்ன பாய்யன்னு சொல்லுறான் பாரு” என்ற இலக்கியன் வைஷுவை இனியவளிடம் கொடுத்து விட்டு 

 

லோகநாதனிடன் எதோ பேச திரும்பிய தருணம்… தரை வாழ வழப்பாக இருக்க… அதில் வழிக்கியவன்… தடுமாறி லோகநாதன் மேல் விழ போக… அவனின் இடது கை மட்டும் லோகநாதனின் முகத்தில் போய் பட்டது 

 

அதை கண்டவன்… அமைதியாக இல்லாமல்.. “ஓ இதன் மூஞ்சில பீச்சாங்கையை வெக்குறதா”என்றான் எப்போதும் விளையாட்டு தனமாக 

 

“உனக்கு எவ்வளவு கொழுப்பு” என்று கோபம் கொண்டவர் இலக்கியன் கன்னத்தில் அறையை 

 

அவ்வளவு தான் அன்பிற்கு பொறுமை என்ற வார்த்தையே மறந்து போனது… “என்னோட ஊருலயே வந்து என் தம்பியையே அடிக்குரியா.. என்னடா வேணும் உனக்கு” என்றான் சீறி பாய்ந்து கொண்டு 

 

“ஒழுங்கா இனியாவ என் கூட அனுப்பி வெச்சிடு” என்ற லோகநாதனை இளக்காரமாக பார்த்த அன்பு 

 

“போட்டோ காமிச்சிட்டா அவ உங்க வீட்டு பொண்ணு ஆகிடுவாளா? அவளுக்கு தான் உங்க பையனை பிடிக்கலையே… அப்றம் என்ன… இங்க இருந்து இடத்தை காலி பண்ணுங்க” என்றான் திமிராய் 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அவனின் திமிரிலேயே இனியா அவ்வளவு எளிதாக அவன் அனுப்பி வைக்க மாட்டான் என்பது புரிந்து போனது லோகநாதனிற்கு…இதில் பயில்வான் போல தன் மகனை வளத்து வைத்திருக்க… ஒரே குத்தில் அவனை கீழே மயங்கும் படி செய்து விட்டானே… 

 

இதில் இருந்தே இவன் சாதாரண ஆள் இல்லை என்பது லோகநாதனுக்கு நான்கு புரிந்தது… இவனை சரி கட்ட வேற வழி தான் தேட வேண்டும் என சுற்றம் சுத்தி பார்த்தவன் கண்ணில் சந்துரு பட… 

 

“என்ன இன்ஸ்பெக்டர் வேடிக்கை பார்க்க தான் உங்களை வேலைக்கு வெச்சி இருக்காங்களா? நேத்து எதோ பிடிச்சிடலாம், முடிச்சிடலாம்னு பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுன… இப்போ எதோ மூலைல பம்பிகிட்டு நிக்குற? ” என்றார் சந்துருவை தாக்கும் விதமாக 

 

அன்பை பரிதாபமாக பார்த்த சந்துரு… “என்னால உனக்கு எப்படி உதவி பன்னுறதுனே தெரிலடா” என்றபடி பார்க்க… 

 

அதை புரிந்து கொண்ட அன்பு “போலீஸ் இருந்தா… விருப்பம் இல்லாத பொண்ணை எப்படி கூட்டிகிட்டு போவீங்க… அது இல்லாம பொண்ணு மேஜர்… அவளுக்கு உங்க கூட வர இஷ்டம் இல்லை… அவ்வளவு தான்” என்றான் அன்பு… “இனி நீ பேச தேவை இல்லை… பேசினாலும் நான் கேக்க மாட்டேன் எண்ணும் விதமாக”

 

அதில் கடுப்பான லோகநாதன் இப்போ என்ன செய்வது என குழப்பமாக இருக்க… மோகனோ துள்ளி கொண்டு 

 

“விருப்பம் இல்லைனு அவ சொன்னாளா.. நீயே பேசாத… அவளை பத்தி எனக்கு தெரியு… நீ நகரு” என்ற படி அன்பின் பின்னால் இருக்கும் இனியாவை அவன் நெருங்க பார்க்க… தடுத்த அன்பு 

 

“இப்போத்தானே அடி வாங்குன… பத்தலயா… ஒழுங்கா போய் ஓரமா நில்லு” என்றான் மிரட்டும் பார்வையில் 

 

அது அனைத்தும் லோகநாதனின் திட்டத்திற்கு எதிராக போவதை உணர்ந்தவர்… 

 

“யோவ் இன்ஸ்பெக்டர்…இவங்க எங்க பொண்ணை கடத்தி வெச்சிக்கிட்டு… குழந்தையை காட்டி மிரட்டி…அனுப்ப மாட்டேங்குறாக… இனியா பேர்ல இருக்க இருநூறு கோடி சொத்தை ஆடை போட பாக்குறாங்க..நீ என்னயா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க”என்றார் சந்துருவை பார்த்து,  

 

அவரின் திட்டத்தை அன்பின் திட்டமாக மாற்றி கூறி புகார் கொடுத்தார் லோகநாதன் 

 

“அதனால இப்போ எங்க பொண்ணும் பேத்தியும் எங்களுக்கு வேணும்” என்றார் திடமாக… அதில் ஒன்றும் செய்ய முடியாத சந்துரு அன்பை நெருங்கி வர 

 

அன்பு அப்போது இலக்கியனிடம் எதையோ காதில் ஓத… அவன் தலை தெறிக்க ஒரு புறம் ஓடினான் இலக்கியன்…  அதற்குள் அன்பை நெருங்கிய சந்துரு 

 

“ஆமாம்டா… சம்மந்தமே இல்லாம இந்த பொண்ணை நம்ப கூட வெச்சிக்க முடியாதுடா… அவளுக்கு இவங்க தான் உறவு காரங்க… நாம வெளிஆள் தானே.. இது சட்ட படியும் தப்புடா” என்றான் சந்துரு சட்டத்தை மேற்கோள் காட்டி 

 

அவர்கள் பேசுவது லோகநாதனிற்கு கேட்க… “போட…போய் என் மருமகளை கூட்டிட்டு வா” என்றார் மோஹனை பார்த்து, படையப்பா பாணியில் 

 

மோகனும் தைரியமாக முன்னேறியவன்… எதோ யோசனையில் நின்று கொண்டு இருந்த அன்னை பார்த்ததும்… இது தான் சமயம் என்று 

 

இனியவளை அன்பின் பாதுகாப்பில் இருந்து பிரித்து, இழுத்து சென்று கொண்டு இருக்க…எதோ யோசனையில் இருந்த அன்பு… சுதாரித்து இனியாவின் மறுகையை பிடிக்க… இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டாள் இனியா 

 

“ஆமாம் என்ன சொன்னீங்க… எனக்கும் இவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை… அதனால இவ எங்க வீட்டுல இருக்க முடியாது… அப்டி தானே”என்ற படி திரும்பி பார்க்க… இலக்கியன் அப்போது தான் வந்து கொண்டு இருந்தான் 

 

அருகில் வந்தவன் அன்பிடம் எதையோ கொடுக்க… அதை மறைவாகவே தன் உள்ளங்கையில் வாங்கியவன் 

 

இனியவை பற்றி இருக்கும் கையால்,  அவளை தன் புறம் இழுக்க… குழந்தையுடன் அவன் மேல் வந்து விழுந்தவளின் கழுத்தில் அடுத்த நொடி தன் கையில் இருக்கும் தாலியை கட்டினான் அன்பு 

 

அங்கு நிற்கும் அனைவருக்குமே இது அதிர்ச்சியாய் போக… லோகநாதனிற்கோ… கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது போல ஒரு உணர்வு… 

 

அதில் கோவம் உற்றவர்… தன் அடியாட்களை விட்டு அன்பை தாக்கும் படி கூற…. 

 

இனியாவையும் குழந்தையையையும் இலக்கியன் பொறுப்பில் விட்டுட்டு விட்டு… வந்தவர்களை பந்தாடி கொண்டு இருந்தான் அன்பு 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

திருமணத்திற்கு வந்த ஊரார் சிலரும் அன்பிற்கு துணையாக சண்டை போட்டு கொண்டு இருக்க… லோகநாதனிற்கு தான் பயத்தில் வேர்வை ஊற்றியது… 

 

அதில் ஒரு தாடி மாட்டை அன்பு வெளுத்து கொண்டு இருக்கும் போது… 

 

“எனக்கு இல்லாதது யாருக்குமே கிடைக்க கூடாதுடா”என்ற ஆத்திரம் அடைந்த மோகன்…அருகில் இருந்த நீளமான கத்தி  ஒன்றை எடுத்து கொண்டு அன்பின் முதுகு  நோக்கி ஓடி வர… 

 

அதை அறியாத அன்பு… அந்த மாட்டை சலவை செய்து கொண்டு நிற்க…. சில நொடிகளில் அவனை நேருமாகினான் மோகன் 

 

அதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த இலக்கியன்… ஒரு புறம் தடுக்க ஓடி வர.. 

 

சரியாக அன்பு திரும்பும் நேரமும்… மோகன் கத்தியால் குத்தும் நேரமும்… இலக்கியன் இவர்களுக்கு இடையில் வரும் நேரமும் ஒத்து போய்விட… 

 

கிட்ட தட்ட கதியை பாய்ச்சியே விட்டான் மோகன்.. 

 

புனித கோவில் ஸ்தலத்தில் ரத்தத்தின் துளிகள் கீழே சிந்த… “இலக்கியா” என்ற சத்தம் அந்த கோவில்  முழுவதும் பரவா 

 

நிலை தடுமாறி கீழே விழுந்த இலக்கியனை தன் மடியில் ஏந்தினான் அன்பு 

 

“டேய் இலக்கியா”என்று பல முறை அழைக்க… பதில் இல்லாமல் போக… பின் மயங்கிய நிலையில் கண் விழித்தவன் 

 

“உன் காதல் ஒன்னு சேர நான் உயிர குடுத்ததா இருக்கட்டும்டா அண்ணா”என்று கூறிய படியே கண் மூடினான் 

 

                 மாயம் தொடரும்….  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!