Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

nizhalae ennai thalli pogaathae

Nizhalae Ennai Thalli Pogaathae 7

தள்ளிபோகாதே 7

அன்று போட்டி முடிந்த பின் ஆதிரா அவளுடைய ஆசிரியரோடு கிளம்பிவிட்டாள்.

அன்று இரவு, தேவிகாவின் முகம் வாடிபோயி கிடக்க, அவள் எதுவும் பேசவில்லை. சூர்யாவிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. சரி, எப்படியாவது நாளை காலை ஜீவிதாவை பற்றி தேவிகாவிடம் கூறிவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான். இதற்கு மேல் மூடி மறைத்தால் இருவருக்கும் இடையில் பிரச்சனை உண்டாகும் என அவனை உள்மனம் திட்டியது.

காலை எழுந்தவுடனே சூர்யாவிடம் தன் வீட்டுக்கு செல்வதாக கூறிக் கொண்டு தன் பையினுள் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். சூரியாவை பார்க்ககூட தயங்கியவளாய் அவனை விட்டு ஒதிங்கினாள். தேவிகா அவளது அண்ணணுக்கு அழைப்பு விடுத்திருப்பாள் போலும். காலை ஏழு மணி அளவில் அவளது அண்ணன் வந்தவன் அவளை கூட்டி சென்றான். அவனுக்கு தேவிகா மற்றும் சூரியாவின் போர் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை. தேவிகா ஒரு வார்த்தை கூட பேசாது சென்றுவிட்டாள்…சூரியா, தேவிகா தன்னை விட்டு சென்ற அடுத்த நொடியே மனமுடைந்து நொந்துபோனான். அவன் அவளுக்குத் பலமுறை கைபேசியில் அழைத்தும் எந்த பயனும் இல்லை. அவனுக்கு ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று மட்டும் தெளிவாக புரிந்தது. அவனுக்கு அன்று எதுவுமே ஓடவில்லை.



Advertisement

மறுநாள் காலையில் சூரியா சொந்த ஊர் வந்து சேர்ந்தான். தேவிகா இவனை சந்தித்த போதும் ஒழுங்காக பேச்சு கொடுக்கவில்லை. அவனோ, “எனக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்,” என்று தொடங்கினான்.

“எதுவும் நான் கேட்க தயாராக இல்லை. எனக்கு நல்லது பண்ணனும் என்று நினைத்தீர்கள் ஆனால் என்னைப் பார்க்க வராதீங்க,” என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்ததும் சூரியாவின் உயிர் அவனை விட்டு தூரம் சென்றதாக உணர்ந்தான்..தேவிகாவா இது? என்று அதிர்ச்சி அடைந்தவன் அசையாது அவளை வைத்த கண் இமைக்காமல் பார்த்தான்.

இந்தக் கர்ப்ப காலத்தில் அவளுடைய மனநிலை ஏற்றமும் இறக்கமுமாக தான் இருக்கும் என்று மருத்துவர் சொன்னதை வைத்து, “சரி தேவிகா எப்படியாவது சரியாகிவிடுவாள் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்,” என்று நினைத்தவன் அன்றே பட்டணத்திற்கு கிளம்பிவிட்டான். அவன் குடும்பத்தினர் யாரையும் சந்திக்க முற்படவில்லை ஏன்னென்றால் தேவிகா பற்றின கேள்விக்கு அவனுக்கு பதில் இல்லை. அவள் எப்படியாவது தனக்கு ஒரு முறையாவது போன் செய்வாள் என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருந்தான். அப்படியே ஒரு வாரம் ஆக அவளிடமிருந்து அழைப்பும் வராததால் அவனுக்கு இன்னும் மன அழுத்தமானது அதிகபட்டது. ஆனால் அதே சமயம் அவனுக்கு  வேலையில் இட மாற்றம் கிடைத்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்த வாரமே அவன் ஊருக்கு செல்ல தயார் நிலையில் இருந்தான்.

Advertisement

வளைகாப்பு எந்த நாள் வைக்கலாம் என்று ஆலோசிக்கும் அவனது குடும்பத்தாரை எப்படி சம்மாளிப்பது என்பதே பெரும் வேதனை..இதுவே, பெரும் துயரமாக இருந்தது. எனவே மனதில் வைத்துக்கொண்ட பாரத்தைத் தன் அண்ணனிடம் போன் செய்து ஆதிரா வந்த அந்த நாளில் என்ன நடந்தது என்றும் அவன் வாழ்க்கையில் அதன் முன் நடந்த அனைத்தையுமே கூறினான். ஜீவிதாவால் தான் தேவிகா இந்த முடிவுக்கு வர காரணமாக இருக்கலாம் என்று கூறினான்.

Advertisement

கௌதம் முதலில் சூரியாவிடம் கடிந்து விழுந்தான். ஜீவிதாவின் சகவாசம் உனக்கு எதுக்கு டா மறுபடியும்? எந்த பொண்ணு டா தாங்குவாள்? அது தான் தேவிகாவின் பிரச்சனையாக இருக்ககூடும். “சரி, நீ வந்து சேரு நம்ம மீதி உள்ளதை பார்த்துக்கலாம். தேவிகாகிட்ட எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்,” என்றான் கௌதம்.

சூரியா தன் சொந்த ஊருக்கு திரும்பியவன் அங்கு உள்ள அலுவலக கிளையில் வேலைக்கு சேர்ந்தான். தேவிகா பற்றி சூரியாவின் பெற்றோர் விசாரித்தபோது, கௌதமும் சூரியாவும் ஏதேதோ சொல்லி வீட்டில் உள்ளவர்களை ஒரளவு சமாதானம் செய்தனர். சௌந்தர்யாவுக்கு சந்தேகம் வரவே கௌதம் அவளிடம் உண்மையை கூறினான்.

அடுத்த நாள் சூரியா குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தேவிகாவை பார்க்க சென்ற போது தேவிகா யாரிடமும் ஒழுங்காக பேசவில்லை இருப்பினும் சூரியாவின் குடுமீபத்தினர் அவளை தவறாக நினைக்கவில்லை. உடம்பு முடியாமல் இருக்கும் என்று எண்ணிக்கொண்டனர். இனி, வளைகாப்பு விழா நடத்தவேண்டாம் என்று இருவீட்டாரிடமும் நொண்டி சாக்கு சொல்லி அரும்பாடுபட்டு ஒருவழியாக நிறுத்தி விட்டாள்.

Advertisement

தேவிகா சூர்யாவிடம் தனியாக பேசும் சந்தர்ப்பம் அமைத்துக்கொண்டு, “எனக்கு உங்களை பார்க்க மனமில்லை. தயவுசெய்து போய் விடுங்கள். இனி உங்கள் குடும்பத்தினரை அழைத்து வந்து துயரத்திற்கு ஆள்ளாக்காதீர்கள். நான் ஏதாவது வார்த்தை சொல்லும் முன் கூட்டி செல்லுங்கள்,” என்று அவளின் கடுமையான வார்த்தையைக் கேட்டவன் தன் கண்ணீரை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு மறு நிமிடமே அவளை தொல்லை செய்ய கூடாது அவள் கண்டிப்பாக புரிந்து கொள்வாள் என்று எண்ணி அவன் தன் பெற்றோர், அண்ணன் மற்றும் அண்ணியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.

நாட்களும் கடந்து ஓடியது, தேவிகா சூரியாவிடம் பேசவோ பார்க்கவோ முயற்சிக்கவில்லை அதேநேரம் சூர்யாவும் அவளுக்கு தொல்லை கொடுக்கவில்லை. எதுவென்றாலும் தங்களின் குழந்தை ஆரோக்கியமாக இந்த உலகத்திற்கு வரட்டும் என்று அனைத்தையும் மனதில் பூட்டி கொண்டு சுமக்கலானான்.

அழகிய காலை பொழுது, சூரியன் தன் கதிர்களால் அனைத்து உயிர்களையும் புத்துயிர் செய்து கொண்ட நேரம்,  தேவிகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருந்து சூரியாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். அனைவரும் பத்தே நிமிடத்தில் மருத்துவமனைக்கு விரைந்தனர். சூரியா, தேவிகாவின் வலியை உணர்ந்தவனாய், அவள் உடலாலும் இவன் மனதாலும் மறுஜென்மம் எடுத்தனர். காலை எட்டு மணி அளவில், அழகான பெண் குழந்தை பிறந்தது. சூர்யாவின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது தன் காதல் மனைவியையும், ஆசை மகளையும் பார்க்க ஆவலுடன் நின்று கொண்டிருந்தான். பின் செவிலியர் ஒருவர் குழந்தையை சூரியாவிடம் கொடுத்தார். அந்த குழந்தையை குடும்பத்தார் அனைவரும் கொஞ்சி மகிழ்ந்தனர். தேவிகாவை ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்கு ஒருமுறை போய் பார்த்தனர். சூரியா அவளை பார்க்க சென்ற போது அவள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள். தன் மகளை ஈன்றெடுத்த தாயே! என்று அவள் கையில் முத்தம் பதித்தான். பின், மதிய நேரம், சூரியாவின் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

தன் வாழ்வில் மகள் பிறந்த நாளென்று அந்த சம்பவம் நடக்கும் என்று அவன் துளி கூட நினைக்கவில்லை. அன்று மாலை அவனுக்கு ஒரு நோட்டீஸ் வந்ததிருப்பதை அறிந்தவன்…அதைப் பார்த்ததுமே அப்படியே உயிர் இல்லாத ஜீவனானான். அப்படியே நின்ற இடத்திலேயே உட்கார்ந்து விட்டான், தேவிகாவிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ். அவன் யாரிடமும் பேசாதவனாய் மனம் உடைந்து காணப்பட்டான்.. வாழ்க்கையே முடிவுற்றது போல மனம் கனகனத்தவனாய் கண்களில் கண்ணீர் வற்றி போயி அப்படியே இருந்தான்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும், அப்படி என்ன நடந்துவிட்டது என்று தேவிகா இவ்வாறு நடந்துகொண்டாள் அவளிடம் உண்மையைச் சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் அது வீண்ணாகவே போனது. அவனின் ஆசை மகளைக் கூட அவன் ஒழுங்காக பார்க்கவில்லை. அவனுடைய மன கவலை எவ்வாறு இருக்கும், அந்த நிலையை எவ்வாறு அவன் தாங்கிக் கொள்வாள்.

பின் அவன் அண்ணண் கௌதமிற்கு தெரியவர சூரியாவை தேற்ற வழியின்றி தவித்தான், “இப்போதைக்கு வீட்டில் யாருக்கும் தெரியவேண்டாம்,” என்றான் கௌதம். தேவிகா எவ்வளவு நல்ல பொறுப்பான பெண். இப்படி ஒரு காரியத்தை எப்படி செய்திருப்பாள்?

நாட்கள் செல்ல செல்ல தேவிகாவின் செயல் மற்றும் பேச்சுவார்த்தைகள், சூரியாவின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது இருப்பினும் அவர்கள் பேத்தியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பார்த்து வந்தனர். விடுமுறை நாள்களில் சௌந்தர்யா ஆதிராவை அழைத்து செல்வாள். முன்பு போல் ஆதிராவிடமும் தேவிகா முகம் கொடுத்து பேசாதது சௌந்தர்யாவுக்கு வருத்தத்தை தந்தது. சூரியா ஒருமுறை சென்று பார்த்த போது அவனை பார்க்க மறுத்து விட்டாள், தேவிகா. அன்று, மருத்துவமனையில் வைத்து குழந்தையை பார்த்ததோட சரிதான். பின், சூரியாவை அங்கு செல்ல கௌதம் அனுமதிக்கவில்லை பிரச்சனை இன்னும் பெருசாகி விடகூடாது என்று. கடைசி வரை போராடு! என்ற மன ஊக்கத்தை சூரியாவிற்கு கொடுத்தான், கௌதம்.

அன்று கோர்ட்டில் முதல் ஆஜர், வக்கீல் மூலமாக தான் சூரியாவிற்கு தேவிகாவிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயம் அவன் ஒரு கோரிக்கை விடுத்தான், “எனக்கு எப்படியாவது என் குழந்தையை பார்க்க வேண்டும் அனுமதி பெற்று தாருங்கள்,” என்று தன் குழந்தையை பார்க்க மன்றாடினான் இரு தரப்பு வக்கீல்களிடமும். பின், சட்டத்தை மீற முடியாத தேவிகாவும் ஒரே ஒரு முறை குழந்தையை சூர்யாவிடம் கொடுத்தாள். அவன் கையில் வாங்கிய அந்த தருணம் அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அழகாக இருந்தாள், அவர்களின் குழந்தை. சூர்யாவை போலவே அவளுடைய கண்களும், காதுகளும் இருந்தது.  தேவிகாவை போன்ற மூக்கும், உதடும் அந்த சிறு குழந்தைக்கு அழகு சேர்த்தது. தன் குழந்தையை மார்ப்போடு சேர்த்து கொஞ்ச நேரம் அணைத்துக் கொண்டான். தன் மகளை மடிவில் வைத்து சீராட்டி கொஞ்ச விரும்புவனுக்கு வாழ்வு போடும் பரிசாய் இது? நீதிமன்றம் முன்னே நின்று தன் குழந்தையை பார்க்கும் பரிதாபம்.

தேவிகா தன் அண்ணணோடு வந்திருந்தவள் பத்து அடி தொலைவில் நின்று கொண்டிருந்தாள். அவள் அண்ணணுக்கு சூரியாவை கொலை செய்யும் அளவுக்கு கோபம் இருந்த போதிலும் தன் தங்கை அருகில் நின்றதால் அமைதி காத்தான். பின் சற்று நேரத்தில், சூரியாவிடம் போயி அந்த குழந்தையை பெற்றுக் கொண்டாள். “சாரா குட்டி,” என்று ஏங்கியவாறே அவளின் நெற்றியில் முத்தமிட்டு தேவிகாவிடம் கொடுத்தான். தேவிகாவோ முகதெளிவுடன் காணப்பட்டாள், சூரியாவின் மீது அவளது பார்வையை செலுத்தவில்லை.

தேவிகா ஒருநிமிடம், ” உனக்கு என் மேல இவ்வளவு வெறுப்பு வருவதற்கான காரணம் தான் என்ன? நீ என்னை நம்பவில்லையா? ஒரு ஐந்து நிமிடம் மட்டும் நான் சொல்வதை கேள்,” என்றான் சூரியா.

“எனக்கு எதுவுமே தேவையில்லை. உங்களுக்கு தானே திருமணமான தொடக்கத்திலிருந்தே என்னை கழட்டி விட  திட்டம் தீட்டினீர்கள், இப்போது என்ன புது பாசம்? இது பாசம் இல்லை வேசம் என்பது எனக்கு நன்றாக தெரியும். தயவுசெய்து இழுக்காமல் விவகாரத்துக்கு சம்மதித்தாலே உங்களுக்கு கோடி புண்ணியமாக போகும்,” என்றவள் திரும்பி பார்க்காமல் அழுத்தமாக கூறி சென்றாள்.

அவனோ கிளைகள் முறிந்த மரமாக நின்றான். இவள் எல்லாமே மனதில் வைத்துக்கொண்டு தான் திரிந்தாளா?
தேவிகா, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாள்? சூரியா மறுபடியும் ஜீவிதாவிடம் பழகுவதை கண்டாளா? அல்லது சூரியா தான் அப்பாவி போல பகல் வேஷம் போடுகிறானா?

சூரியா எவ்வளவோ ஒரு மாதமாக முயற்சித்தும் தேவிகாவிடமிருந்து எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அவனுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து கொண்டே போனது. இனி அவளுக்கு புரியவைப்பது எளிதான காரியம் இல்லை என்று புரிந்து கொண்டான். எனினும் அவனுக்கு அன்று கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தினானா இல்லையா? அல்லது இன்னும் நிலைமையை மோசமடைய செய்தானா?

அன்று மீண்டும் சூரியாவும், தேவிகாவும் நீதிமன்ற வாயலில் சந்தித்தனர்.. அன்று தேவிகா குழந்தையை கொண்டு வரவில்லை, அவளது அண்ணன் காரை ஒதுக்கு புறமாக ஒதுக்கி கொண்டிருந்தான்.
சூரியா கூப்பிட தேவி நிற்காமல் சென்றவளை அவள் கை பிடித்து இழுத்தான்..”தேவி, நான் எந்த தப்பும் பண்ணவில்லை. தயவுசெய்து ஒருமுறையாவது நம் குழந்தைக்காகவாது கேளு,” என்று அவனை அறியாமலேயே கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து அவன் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. தேவிகா கல் நெஞ்சகாரியாக அவன் கையை தட்டி விட, பின்னால் வந்த அவளது அண்ணன் சூரியாவை அடிக்க கை ஓங்கியவன் தன் ஆவேசத்தை கட்டுபடுத்திக்கொண்டு, “என் தங்கச்சி நிக்கிறானு, ஒரே காரணத்திற்காக தான் உன்னை நான் சும்மா விடுறேன். இனி, நீ தேவையில்லாமல் அவள் வழியில் வந்தனா உன்னை கொல்லாமல் விட மாட்டேன். டேய், உனக்கு தான் எவளோ ஒருத்தி இருக்காளாமே, அவளை தேடி போ. ஏன் தங்கச்சி வாழ்க்கை உனக்கு இழக்காரமாக போச்சா?” என்று தங்கச்சி மேலுள்ள பாசத்தில் சரமாரியாக வார்த்தைகளை அள்ளி வீசி சூரியாவை அந்த இடத்திலேயே சாம்பல் ஆகினான்.

சூரியா தலை குனிய, தேவிகாவோ அண்ணணுடன் உள்ளே சென்றாள். அன்றைய தினம், தேவிகாவிற்கு தன்னுடன் வாழ துளிகூட விருப்பமில்லாததை அறிந்தவன் அவளுக்கு விவாகரத்து கொடுக்க சம்மதித்தான். இன்னும் இரண்டு வாரங்களில் விவாகரத்து உறுதியாகி விடும் என்ற நிலையில் சூரியா நடை பிணமாய் திரிந்தான்.

தேவிகா சூரியாவை தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு குறைவு என்றே கூறலாம் ஏனென்றால் அவள் மனதில் தன் கணவன் சூர்யா எந்தவித தப்பும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் தான் இருமுறை ஜீவிதாவுடன் பார்த்த பின்பும் அமைதி காத்தாள்? அப்படி இருக்க தன் கணவனை தன் குழந்தையிடம் இருந்து பிரித்து ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் என்பதை பார்ப்போம். எதனால் இந்த மாற்றம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!