Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Puthithaai Malarntha Kaathal

Puthithaai Malarntha Kaathal 6 1

அத்தியாயம் 6

 

அவள் கையை பிடித்தவன், “இன்னைக்கு அதுக்கு தான ஆசையா வந்தேன்?”, என்று நினைத்து கொண்டு “எங்க அம்மா மேல சத்தியம், அம்மாக்கு அடுத்து என் மனசுல இருக்குறது நீ மட்டும்  தான்”, என்றான்.

 



Advertisement

அவன் குரலில் என்ன உணர்ந்தாளோ, அமைதியாக இருந்தாள்.

 

அப்பாடி சமாதானம் ஆகிட்டா”, என்று நினைத்து கொண்டே அவள் அருகில், தைரியத்தை வர வழைத்துக் கொண்டு நெருங்கி அமர்ந்தான். 

Advertisement

 

Advertisement

ஏய் வர்ணா, இங்க பாரேன்”, என்று சொல்லி கொண்டே இன்னும் நெருங்கினான். 

 

அவன் அருகாமை எதுவோ மாதிரி இருக்க, அவள்  நகர்ந்து அமர்ந்தாள். இன்னும் நெருங்கினான் அவன்.

Advertisement

 

அவளை ஒட்டி அமர்ந்தவன் “அந்த அர்ச்சனா ஒரு லூசு டி. என்கிட்ட வந்து என்னை விரும்புறேன்னு சொன்னா. நான் அம்மா சொல்ற பொண்ணை தான், கல்யாணம் செய்வேன்னு சொன்னேன். அப்ப அம்மாவை நான் பாக்கணும்னு சொன்னா. சரின்னு வீட்டுக்கு ஒரு நாள் வர சொன்னேன். ஆனா, அம்மாக்கு அவளை பிடிக்கலை. அதுக்கு அப்புறம், அவ கூட வேலையை பத்தி மட்டும் தான் பேசுவேன். என்னோட பேப்பர் சப்மிட்  பண்ண கூட அவ தான் போவா. அம்மா இங்க தனியா இருக்காங்கனு, நான் அவ கூட போக மாட்டேன் தெரியுமா? உன்கிட்ட அவ என்ன சொன்னா? நீ எதுக்கு அழுற? ப்ளீஸ் அழாத. உன்னை அங்க தனியா விட்டுட்டு போனது தப்பு தான் மன்னிச்சிக்கோ. அம்மா உன்கிட்ட கிண்டலுக்கு சொல்லிருப்பாங்க. அம்மா பத்தி தான் தெரியுமே”, என்று சொன்னான்.

 

அவ என்ன சொன்னா தெரியுமா? நான் உன் வாழ்க்கையை விட்டு போகணுமாம். நான் படிக்காதவளாம். உனக்கு நான் தகுதியே இல்லையாம். இன்னும் நிறைய சொன்னா. அதனால உனக்கு என்னை பிடிக்காதாம். அது உண்மை தான? உனக்கு தான் என்னை பிடிக்காதே. போயா,  நான் எங்க ஊருக்கு போறேன். எனக்கு ஒன்னும் நீ வேண்டாம் போயா”, என்று எழுந்து போக போனாள்.

 

அவள் கை பற்றி இழுத்து கட்டிலில் போட்டான் ஆதி. “விடுய்யா”, என்று சொல்லி கொண்டே எழ பார்த்தாள்.

 

அவளை மறுபடியும் இழுத்து போட்டவன், அவள் மேலயே விழுந்தான். அதில் அவள் பேச்சு முழுமையாக நின்றது. 

 

முதல் நாள் தவிர, என்னைக்காவது உன்னை பிடிக்காதுன்னு சொல்லிருக்கேனா வர்ணா?”, என்று அவள் கண்களை பார்த்து கேட்டான். 

 

அவன் பார்வையை தாங்க முடியாமல், எங்கோ பார்த்து கொண்டு “நகரு நீ”, என்றாள் பஞ்சு. 

 

உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டி. அன்னைக்கே சொல்ல வேண்டியது. அந்த சீனி கரடி வந்து கெடுத்துட்டான். அன்னைக்கு சொல்ல வேண்டியதை, இன்னைக்கு சொல்றேன் போதுமா? அந்த லூசு சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. இந்த ஜென்மத்தில் நீ தான் என் பொண்டாட்டி”

 

அப்ப அடுத்த ஜென்மத்தில் அவளா?”

 

ஐயையோ இப்படி கேட்டால் எப்படி டி? சரி எல்லா ஜென்மத்திலும், நீ தான் என் பொண்டாட்டி போதுமா? உன்னோட இன்னொசண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டி வர்ணா”

 

அப்படின்னா?”

 

உன்னோட குழந்தை தனமான செய்கை பிடிக்கும். எதாவது தப்ப செஞ்சு வச்சிட்டு, என்னை பாவமா பாப்பல்ல? அது பிடிக்கும்”

 

பொய் சொல்லாத, அப்ப எல்லாம் எப்படி திட்டுன? போயா நகரு, எனக்கு எப்படியோ இருக்கு”, என்றாள் பஞ்சு.

 

எப்படி இருக்கு?”, என்று கேட்டு கொண்டே இன்னும் நெருங்கியவன் “அது எல்லாம் சும்மா திட்டினது. அப்புறம், ரசிச்சிருக்கேன் தெரியுமா? எனக்கு மேக்கப் போட்ட எந்த கிளவியும் வேண்டாம். இயற்கையா அழகா இருக்குற, இந்த அழகி தான் வேணும்”, என்று சொல்லி கொண்டே அவள் முகத்தை நோக்கி குனிந்தான். 

 

நான் என்ன அழகாவா இருக்கேன்?”, என்று கேட்டாள் பஞ்சு.

 

அழகாவா? நல்ல கேட்ட போ. அப்படியே கொல்லுற”

 

சரி எந்திரிங்க மாமா. அந்த படத்துல இப்படி தான் செஞ்சாங்க. அதை பாக்க கூடாதுனு சொன்னீங்க. இப்ப நீங்க பண்றீங்க?”

 

படத்துல பாத்தது, இப்ப நேர்ல நடக்க போகுது. அது என்னடி இவ்வளவு நேரம் வாயா போயான்னு மரியாதை குறைஞ்சது. இப்ப மறுபடியும் மரியாதை வந்துட்டு”

 

அது கோபத்துல அப்படி தான். இன்னும் பச்சை பச்சையா கூட வரும். இனி ஒழுங்கா இருந்துக்கோங்க சொல்லிட்டேன்”

 

எப்பவுமே நான் ஒழுங்கா தான் இருப்பேன். சரி கார்ல முத்தம் கொடுத்த மாதிரி, இன்னொன்னு கொடு”, என்றான் ஆதி.

 

தரேன், ஆனா எனக்கு நீங்க ஒரு விஷயம் செய்வீங்கன்னு சத்தியம் பண்ணுங்க. அப்ப தான்”, என்றாள்.

 

ஏண்டி பொண்ணுங்க கண்ணை வச்சு மயக்கி, சத்தியம் கேட்டா பசங்க சொத்தையே எழுதி வச்சிருவாங்க. இப்படி உன் மேல கவிழ்ந்திருக்கும் போது கேட்டா, நான் செய்ய மாட்டேனா? சத்தியமா செய்றேன். ஆனா நீ சீக்கிரம் கேளு”

 

அதுவா, இன்னொரு தடவை எப்ப என் வாயில் இருந்து அர்ச்சனா அப்படின்னு வார்த்தை வந்தாலும், நீங்க நான் சொல்றதை சொல்லணும்”

 

கண்டிப்பா சொல்றேன் டி. சீக்கிரம் சொல்லு வர்ணா”

 

முதல் தடவை, அந்த அர்ச்சனா ஒரு மேனாமினுக்கி.  அந்த நாசமா போறவளை பத்தி எதுக்கு டி, என்கிட்ட பேசுறேன்னு கேக்கணும்”, என்று சொன்னாள் பஞ்சு.

 

ஏய் அடுத்த வீட்டு பொண்ணை பத்தி, தப்பா பேச கூடாது மா”, என்றான் ஆதி.

 

பாத்தியா, உன் வேலையை காமிக்கிற? அவளை சொன்னா உனக்கு எதுக்கு கோபம் வருது? முத்தமும் கிடையாது, மண்ணும் கிடையாது. நான் என் அப்பன் வீட்டுக்கு போய் பஞ்சாயத்தை கூட்டுறேன்”

 

எதுக்கு டி பஞ்சாயத்து?”

 

எதுக்கா? என்னை தலை முழுகிட்டு எவளை வேணும்னாலும் கட்டிக்கோ”, என்று சொல்லும் போதே  அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

 

அதை துடைத்து விட்டவன் “எவளும் வேண்டாம். என் பஞ்சவர்ணம் தான் வேணும்”, என்றான். 

 

அப்ப அப்படி சொல்லணும் சரியா?”

 

சரி டி. அந்த அர்ச்சனா ஒரு மேனாமினுக்கி. அந்த நாசமா போறவளை  பத்தி எதுக்கு என்கிட்ட பேசுறனு சொல்லணும் அதான?”

 

ம்ம். ரெண்டாவது, அவ ஒரு அரை கிறுக்கு. சரியான மெண்டல்னு சொல்லணும். சரியா?”

 

அது உண்மை தான். சரி சொல்றேன் அவ்வளவு தான? இப்ப முத்தம் கொடுக்கலாம்ல? கொடு டி” 

 

ஹ்ம்ம்”, என்றவள், அவன் கன்னத்தில் முத்தத்தை கொடுத்தாள். 

 

இந்த பக்கம்”, என்று அடுத்த கன்னத்தை காட்டினான் ஆதி. சிரித்து கொண்டே, மற்றொரு பக்கமும் கொடுத்தாள். 

 

இனி நான் கொடுக்கிறேன்”, என்று அவள் இதழை நோக்கி குனிந்தான் ஆதி. 

 

அவனுடைய இதழ்கள், அவளுடைய இதழ்களை நெருங்கும் முன் அழைப்பு மணி அழைத்தது.

 

மறுபடியும் அவனை கீழே தள்ளி விட்டு ஓடியே போனாள் பஞ்சு.

 

அட பாவிகளா! எப்ப பாத்தாலும் இப்படியே பண்றீங்களே டா. ஒரு முத்தம் கொடுக்கணும்னு ஆசை பட்டது குத்தமா டா. இவ வேற எப்ப பாத்தாலும் என்னை கீழ தள்ளி விட்டுட்டே இருக்கா”, என்று நினைத்து கொண்டே எழுந்தான்.

 

இப்ப யாருன்னு தெரியலையே”, என்று நினைத்து கொண்டு தலையை நீட்டி, வெளியே எட்டி பார்த்தான்.

 

அங்க சீனி தான் சோபாவில் அமர்ந்திருந்தான். பஞ்சு எதுவோ அவனை உபசரித்து விட்டு, உள்ளே சென்றது கண்ணில் பட்டது.

 

இவனை”, என்று பல்லை கடித்து கொண்டு, அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

 

ஆதியை பார்த்த சீனி திகைத்தான். “டேய் ஆதி, என்ன டா இது கோலம். இவ்வளவு வேகம் ஆகாது டா. அதுக்காக தலையணைல உள்ள பஞ்சு முழுசும், உன் தலைல தான் இருக்கும் போல? அப்புறம் என்ன ஒரு மாதிரி முறைக்கிற? பாதில வந்துட்டேனா? நீ வேற இவ்வளவு வேகமா சந்தோஷத்தில் இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன் டா? சாரி டா ஆதி”

 

சீனி”

 

ம்ம்”

 

ஒரு நிமிஷம் என்னோட ரூம் குள்ள வாயேன்”, என்று எழுந்தான் ஆதி.

 

எதுக்கு டா?”

 

நீ வாயேன் சொல்றேன்”

 

ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி விட்டு சீனி உள்ளே போனவுடன், அங்கு இருந்த இன்னொரு தலையணையை எடுத்து அவனை புரட்டி எடுத்து விட்டான். 

 

“நானே கொலை வெறில  இருக்கேன். உனக்கு நக்கலா? வேகமா வேகமானு கேட்டியே. இன்னும் மெதுவா கூட ஆரம்பிக்கல டா. இங்க வேகமா, இது தான் டா நடந்தது. மொத்து மொத்துனு மொத்திட்டா. நானும் இப்ப தான் சமாதான படுத்தி பக்கத்துல போனேன். அதுக்குள்ள கரடி மாதிரி வந்து காரியத்தை கெடுத்துட்டு, கிண்டலா உனக்கு?”, என்ற படி அடி பின்னினான்.

 

, தெரியாம சொல்லிட்டேன் டா விடு டா. பாக்க சின்ன தலவாணி மாதிரி தான் இருக்கு. ஆனா வலிக்குது டா. நீ பஞ்சு தலையோட வரும் போது, அப்படினு நினைச்சு தப்பா  நினைச்சேட்டேன் டா. விடு டா”

 

அவனை அடித்த தலையணையை, தூக்கி போட்டு விட்டு வெளியே வந்தான் ஆதி.

 

எப்படி என்னை அடிச்ச, தலையணை பிய்யவே இல்லை”, என்று நினைத்து கொண்டு வெளியே வந்தான் சீனி.

 

சரி டா ஆதி, நான் கிளம்புறேன்”

 

எருமை நீ எதுக்கு டா வந்த? அதை சொல்லாமலே போற?”

 

அதுவா நீ அங்க கொடுத்த கிஃப்ட் எல்லாம் எடுக்காமலே வந்துட்ட, அதான் டா எடுத்துட்டு வந்தேன். ஆமா உன்னை பஞ்சு எதுக்கு அடிச்சா?”

 

அதை ஏன் கேக்குற? அந்த அர்ச்சனா எதையோ சொல்லி ஏத்தி விட்டுருக்கா? வாயா போயா, அவன் இவன்னு பேசி கொன்னது மட்டும் இல்லாம, அடியோ அடி”

 

இனி அந்த அர்ச்சனா உன் வாழ்க்கைல தலை இடாத படி பாத்துக்கோ ஆதி”, என்றான் சீனி.

 

அப்போது அங்கே பஞ்சு வருவதை பார்த்து, இவர்கள் பேச்சு தடை பட்டது.

 

இருவருக்கும் டீ எடுத்துட்டு வந்தவள், ஆதி அருகே அமர்ந்தாள்.

 

அப்போது சகுந்தலா போன் செய்தாள்.

 

அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான் ஆதி.

 

என்ன மா எப்படி இருக்க? இங்க எப்ப வர?”

 

ஏன் டா, எப்ப பாத்தாலும் என்னை அங்க வரவைக்க குறியா இருக்க? சின்னஞ் சிறுசுக தனியா இருக்கணும்னு நான் இங்க இருந்தா, ஒரே கேள்வியை கேட்டு மொக்கை போடுற? நான் என்ன கரடியா? உங்க இடைல வர?”, என்று கேட்டாள் சகுந்தலா.

 

சரி சரி, நீ எத்தனை நாள் வேணா இருந்தே வா. இப்ப எதுக்கு போன் செஞ்ச?”

 

சும்மா பேசலாம்னு தான் பண்ணேன். பஞ்சு எப்படி இருக்கா?”

 

நான் நல்லா இருக்கேன் அத்தை. ஆனா, உங்க பிள்ளை செய்ற வேலை தான், சரியே இல்லை”

 

நீ கவலை படாத பஞ்சு. அவன் எதாவது செஞ்சான்னு வை, அந்த சீனி தருதலையை டிக்கட் எடுத்து தர சொல்லி, நேரா இங்க வந்துரு. அத்தை பாத்துக்குறேன் என்ன?”

 

அம்மா நான் தருதலையா? நான் இங்க தான் இருக்கேன்”, என்றான் சீனி.

 

டேய் சீனி, நீ அங்க தான் இருக்கியா? கரடி மாதிரி அங்க என்ன டா செய்ற?”

 

இங்க பங்க்சன் நடக்க போகுதுனு சொன்னேன்ல. ஆதி கிஃப்ட் எல்லாம் வச்சிட்டு வந்துட்டான். கொடுக்க வந்தேன்”

 

சரி டா. பாத்து பத்திரமா இருங்க. வச்சிரட்டுமா. பஞ்சு வைக்கிறேன்”

 

சரி மா”, என்று அவர்களும் “சரி அத்தை”, என்று பஞ்சவர்ணமும் சொல்லி விட்டு வைக்கும் போது “இரு டா ஆதி, பூங்கோதை அவ அக்கா கிட்ட பேசணுமாம். அவ பேசுன உடனே வச்சிரு”, என்று கொடுத்து விட்டு சென்றாள் சகுந்தலா.

 

ஏய் பஞ்சு எப்படி டி இருக்குற? நீ  போனதுல இருந்து, எனக்கு தனியாவே இருக்குற மாதிரி இருக்கு டி”

 

நான் நல்லா இருக்கேன் பூவு. நீ அத்தை கூட கிளம்பி இங்க வரியா? எனக்கும் உன்னை பாக்கணும் போல இருக்கு”

 

சரி பஞ்சு, நம்ம அம்மா கிட்ட கேக்குறேன். சரி மச்சான் எப்படி இருக்காங்க?”

 

இங்க எல்லாரும் நல்லா இருக்கோம். அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

 

இங்கயும் எல்லாரும் நல்லா இருக்கோம். சரி அந்த மெண்டல் எப்படி இருக்கு?”, என்று கேட்டாள் பூங்கோதை.

 

யாரு டி அந்த மெண்டல்?”

 

அது தான், மச்சான் கூட ஒரு ஜோக்கர் வந்துருந்தான்ல, அவன் தான்”, என்றாள் பூங்கோதை.

 

எதுக்கு அப்படி சொல்ற?”, என்று கேட்டு விட்டு “அவங்க இங்க தான் இருக்காங்க”,  என்று பஞ்சு  சொல்ல போகும் போது, அவள் வாயை பொத்தி அவளை பேச விடாமல் செய்த ஆதி, போனையும் கையில் எடுத்து கொண்டான்.

 

என்னை தான் ஜோக்கர்னு சொல்றாளா?”, என்று ஆதியை பார்த்தான் சீனி.

 

அதுவா பஞ்சு? உனக்கு அந்த சிரிப்பு தெரியாதுல்ல? இரு சொல்றேன். அன்னைக்கு சரியான சிரிப்பு தெரியுமா? இங்க அந்த சீனி நல்லா பேமஸ் ஆயிட்டாரு. கல்யாணத்துக்கு அடுத்த நாள், அம்மா அவர் குளிக்க தண்ணி எடுத்து வைக்க சொன்னாங்க. சரினு நான் எடுத்து வச்சேன் பஞ்சு”, என்று ஆரம்பித்தாள் பூங்கோதை.

 

சீனிக்கே ஆர்வம் தாங்க முடிய வில்லை. “எதுக்கு இவ இப்படி சொல்றா?”, என்று நினைத்து கொண்டு கேட்டான். ஆதி சிரிப்புடன் கவனித்து கொண்டிருந்தான். ஆனால் பஞ்சு, அவனுடைய நெருக்கமான தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள்.

 

அவள் உதட்டில் இருந்த அவன் கைகளை, தன்னுடைய கைகளை வைத்து பொத்தி கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

 

தண்ணி எடுத்து வச்ச நான், சோப்பு இருக்கானு பாக்க போனேன் டி பஞ்சு. ஆனா, அங்க அந்த ஆளு, துண்டு அவுந்தது கூட தெரியாம குளிச்சிட்டு நின்னாரு டி”, என்று சிரித்தாள் பூங்கோதை.

 

ஐயையோ”, என்று அலறினான் சீனி. “ஹா ஹா செம காமெடி”,  என்று சொல்லி பஞ்சுவை விட்டு விட்டு விழுந்து விழுந்து சிரித்தான் ஆதி.

 

அப்போது தான், தன்னுணர்வுக்கே வந்தாள் பஞ்சு.

 

ஏய் பஞ்சு என்ன டி அங்க சத்தமா இருக்கு?”, என்று கேட்டாள் பூங்கோதை.

 

இங்க தான் டி சீனி அண்ணன், அப்புறம் மச்சான் எல்லாருமே இருக்காங்க”, என்றாள் பஞ்சு.

 

ஐயையோ எல்லாரும் கேட்டுட்டாங்களா? அத்தை…. அத்தையோ…. இந்த போனை அணைங்க”, என்று கத்தினாள் பூங்கோதை.

 

எதுக்கு பூவு கத்துற?”, என்று கேட்டாள் சகுந்தலா.

 

அது வந்து அத்தை…”, என்று ஆரம்பித்து அந்த கதையை சகுந்தலாவிடமும், அங்கே பூவு சொல்வது இங்கே கேட்டது அனைவருக்கும்.

 

ஐயையோ இவ மைக் செட் ஆச்சே? ஊருக்கே சொல்லுவாளே”, என்று தலையை பிடித்து கொண்டான் சீனி.

 

டேய் சீனி, இப்படியா டா உனக்கு சோதனை வரணும்? ஒழுங்கா வீட்டுக்கு போயிருவ தான? மறந்து பொய் அடுத்த வீட்ல வண்டியை நிப்பட்டிராத டா”, என்று கிண்டல் அடித்து விட்டு வைத்தாள் சகுந்தலா.

 

இந்த பேச்சில் “என்ன செய்ய?”, என்று தெரியாமல் “நீங்க பேசிட்டு இருங்க நான் குளிக்க போறேன்”, என்று சென்று விட்டாள் பஞ்சு.

 

டேய் மச்சான் ஹா ஹா, உன் மானம் அங்க என்ன பாடு பட போகுதோ?”, என்று சிரித்த ஆதியை முறைத்து விட்டு “அப்படி மட்டும் உன் மச்சினிச்சி செய்யட்டும், அவளுக்கு இருக்கு டா. நான் கோபமா கிளம்புறேன் போடா”, என்று சொல்லி விட்டு எழுந்தான்.

 

டேய் சீனி”, என்று அழைத்தான் ஆதி.

 

என்னை சமாதான படுத்தாத டா. நான் கோபமா இருக்கேன்”

 

லூசு, சமாதான படுத்த கூப்பிடலை. ஒழுங்கா உன் வீட்டுக்கு போயிருவ தான? வேற வீட்டுக்கு மறந்து போய் போயிராத டா. மறந்து போய் நாளைக்கு டிரஸ் போடாம வேலைக்கு வந்துறாத”, என்று சொல்லி மறுபடியும் சிரித்தான் ஆதி.

 

வெளியே சென்ற சீனிக்கு சிரிப்பாக வந்தது. “போயும் போயும் அந்த லூசு முன்னாடியா  அப்படி நிக்கணும். அதுக்கு தான் அப்புறம் என் முகத்தை பாக்காமலே திரிஞ்சாளா?”, என்று நினைத்து கொண்டு வீட்டுக்கு வண்டியை ஓட்டினான்.

 

இங்கே “குளித்து முடித்து எப்ப வருவா?”, என்று கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல காத்திருந்தான் ஆதி.

 

வெளியே வந்தவள் “ரூம் முழுசும் பஞ்சா இருக்கு மாமா. கூட்டுங்க”, என்று சொல்லி விட்டு வெளியே போக பார்த்தாள்.

 

என்னது கூட்டணுமா? நீ தான பிச்சி போட்ட? ஒழுங்கா கூட்டிரு. நான் அதுக்குள்ளே குளிச்சிட்டு வந்துறேன்”, என்றான் ஆதி.

 

எனக்கு தூசி பட்டா தும்மல் வரும் மாமா. நான் தான் பிச்சேன். ஆனா அதுக்கு அந்த  அர்ச்சனா என்கிட்ட பேசாமல் இருந்துருக்கணும். அதனால நீங்களே சுத்தம் பண்ணுங்க”, என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டாள்.

 

என்ன நினைச்சு வீட்டுக்கு வந்தேன்? என்ன நடந்துட்டு இருக்கு? சரி சீக்கிரம் இந்த வேலையை முடிப்போம்”,  என்று நினைத்து அதை கிளீன் செய்ய ஆரம்பித்தான் ஆதி.

 

ஒரு வழியாக எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் போட்டவன் விரைவாக குளித்து விட்டு அவளை தேடி சென்றான். 

 

அங்கே சோபாவில் படுத்து உறங்கி இருந்தாள்.

 

என்னை இங்க வேலை செய்ய வச்சிட்டு, தூங்கிட்டா பாரு. இவளை”, என்று நினைத்து கொண்டே அவள் அருகில் சென்று  அவளை தூக்கினான். 

 

விடுங்க மாமா, எனக்கு தூக்கம் வருது”, என்று தூக்கத்தில் சிணுங்கினாள் பஞ்சு. 

 

வரும் டி வரும்”, என்று சொல்லி கொண்டே அவளை பெட்டில் படுக்க வைத்தான். அப்பவும் எந்திரிக்காமல் உறங்கி கொண்டிருந்தவளை எழுப்ப மனமில்லாமல், அவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு, எப்போதும் போல் கீழே படுக்காமல் அவள் அருகே படுத்தான். 

 

அவள் புறமாக திரும்பி விடி விளக்கு வெளிச்சத்தில் சிறு சிரிப்புடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான் ஆதி. 

 

கொஞ்ச நேரத்தில் காலை கையை தூக்கி தன் மேல் போட்டவளை, அவனுடைய கைகளும் அணைத்து கொண்டது. 

 

அழகாக விடிந்தது காலை. கண் விழித்து பார்த்த பஞ்சு திகைத்தாள். அவன் அவளை இறுக்கி கொண்டு படுத்திருந்தான். 

 

மெல்லிய சிரிப்புடன், அவனை பார்த்தவள் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு, தன் வேலையை பார்க்க சென்றாள். 

 

கண் விழித்து வந்த ஆதி, குளித்து முடித்து தலையில் துண்டை கட்டி கொண்டு சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த பஞ்சுவின் பின்னால் நின்று அவளை கட்டி கொண்டான். 

 

எந்திச்சுட்டீங்களா மாமா? காபி வேணுமா?”

 

ஹ்ம்ம் தா”, என்றவன் அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்தான். 

 

கூசுது மாமா விடுங்க”

 

அதுக்குள்ளே கூசுதா? நேத்து தப்பிச்சிட்ட. இன்னைக்கு மாட்டிக்குவ. சரி வர்ணா. நான் குளிச்சுட்டு ஹாஸ்பிட்டல் போறேன்”, என்று குளிக்க சென்றான். 

 

காலையில் அவனும் சாப்பிட்டு விட்டு, அவளையும் சாப்பிட வைத்து விட்டு “பாத்து பத்திரமா இரு. வெளிய எங்கயும் போகாத. வெளிய யார் வந்தாலும், என்னை கேக்காம உள்ளே விடாத. இந்தா போன். இப்படி எனக்கு போன் பண்ணு”, என்று சொல்லி கொடுத்து விட்டு சென்றான் ஆதி. 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!