Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vaazhkai Vaazha Thaanae

SECOND LINK VVT 3

அடுத்து வந்த சில நாட்களும் இருவரும் ஒரே நேரத்தில் அதே பிளாட்பாரத்தில் சந்தித்துக்கொண்டனர்.

 

மாதங்கவதனாவிற்கு அவன் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பது தெரிந்துப்போனது.

 



Advertisement

ஆனால், காரணம் தான் புரியவில்லை.

 

அவன் முகத்தை அடிக்கடி காணும்போது எங்கேயோ பார்த்துருக்கோமே? என்று மட்டும் அவளுக்கு தோன்றியது.

Advertisement

 

Advertisement

அஜய்க்கூட அதைதான் அடிக்கடி நினைப்பான்!

 

“ஏன்டா என்னை டெய்லி பாக்குறா!? எங்கேயோ பார்த்த ஆளுன்னு கூடவா தோணிருக்காது?”

Advertisement

 

குருவோ, “கண்டிப்பா தோணிருக்கும்!” என்று அடித்து சொல்ல,

 

“அப்படியா டா? என்னை நியாபகம் வந்துருக்குமா அப்போ?” என்று ஆசையாய் கேட்டதற்கு,

 

“ஆண்கள் கக்கூஸ் வாசல்ல பார்த்தமாறி நியாபகம் வந்துருக்கும்!” என்று சொல்ல, “ச்சை நாயே!!” என்று ஒரு கைகலப்பே ஆன பிறகு, அவர்களிடம் அவளை பற்றி சொல்வதை குறைத்துக்கொண்டான்.

 

இப்போதெல்லாம் ‘அந்த’ நேரத்திற்கு ரயில்நிலையம் செல்வதை விரும்பி செய்ய ஆரம்பித்திருந்தான் அஜய். இருக்கும் வேலைகளை கூட அதற்கேற்ப அவன் மாற்றிக்கொள்ள, அதெல்லாம் புரிந்தாலும் ‘ஏதோ நல்லது நடக்கட்டும்’ என கண்டும் காணாமல் விட்டுவிட்டனர் அவன் சகாக்கள்.

 

எப்போதும் கடைசி நிமிடத்தில் ஓடி வந்து ரயிலில் ஏறுபவன் இப்போதெல்லாம் ஆளுக்கு முதலாய் வந்து பெரிய தூணாய் பார்த்து, அதன்பின்னே ஒட்டி கொண்டு நிற்க ஆரம்பித்திருந்தான்.

 

‘மறைந்து நிற்க்கிறானாம்!!!’

 

அன்றும் அதேபோல அவன் காத்திருக்க, நிதானமாய் நடந்து வந்தாள் மாதங்கவதனா.

 

‘இவ எப்பவும் காட்டன் சேரி தான் கட்டுவாளோ? சுடி போட்டா இன்னும் யங்’கா இருப்பா!’

மாடல்’களை தேர்வு செய்யும் வியாபார மூளை தன் வேலையை ஆரம்பித்தது.

 

‘முடியை விரிச்சு போடாம ஒன் சைடா ப்ரைட் [braid] போடலாம்… நல்லாருக்கும்!’

 

இன்றும் அதேபோல கடையில் நின்று ‘மேகசின்’ வாங்குவதை கண்டவன், ‘அய்யய்ய! எப்பபாரு புக்கு! நமக்கு எல்லாம் பஜ்ஜி மடிக்க மட்டும் தான் புக் தேவப்படுது!’ என்று சலித்துக்கொண்டான்.

 

அடுத்த சில நிமிடங்களில் ஒரு காலியான நடைப்பாதை இருக்கையில் சென்று அமர்ந்தவள், மேகசினை புரட்ட ஆரம்பித்தாள்.

 

இத்தனை நாள் கவனிப்பில், ‘ம்கும்! இனி இடியே விழுந்தாலும் அந்தத்தலை நிமிராது!’ என்று தெரிந்தவனுக்கு, ஒரு விபரீத ஆசை முளை விட்டது.

 

அதை செயல்ப்படுத்த எண்ணி, நைசாக நழுவி பின்பக்கமாய் அவள் அருகே பொடிநடையாய் நடந்தவன், பத்து மீட்டர் இடைவெளியில் அவள் பக்கவாட்டில் வந்து நின்றுக்கொண்டான்.

 

சுற்றிமுற்றி பார்க்க, அன்று கூட்டம் சற்று குறைவு தான்! இவர்கள் நின்றதும் கூட அதிக ஆள்நடமாட்டம் இல்லாத அமைதியான இடமாய் இருக்க, தைரியமாய் தன் மொபைலை எடுத்தவன் கேமராவை ‘ஆன்’ செய்து, தலைக்கு மேல் தூக்கி பிடித்தான்.

 

அவளோடு ஒரு ‘செல்பி’ எடுக்க தான் இந்த பாடு!

தட், ‘சங்கூதுற வயசுல சங்கீதா மொமென்ட்’    

 

அவன் முகம் ‘போகஸ்’ ஆகும்படி ஆங்கிள் பார்த்து முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டிருந்தவன், ஒரு ஆங்கிளில் அவளது பக்கவாட்டு தோற்றமும் தெளிவாய் தெரியும்படி இருக்க, வெகு உற்சாகமாய் பல்வரிசை காட்டி, ‘கிளிக்’ என சத்தமின்றி எடுத்திருந்தான்.

 

அப்போது அவன் உற்சாகத்தை சொல்ல வேண்டுமே!?

 

எவரேனும் வந்து ரெண்டு பல்லைப்பிடுங்கிக்கொண்டு சென்றிருந்தால் கூட அவனுக்கு தெரிந்திருக்காது! அப்படி ஒரு உல்லாசம்!!!

 

தன்னை தானே ‘கெத்து மச்சி!’ என பாராட்டியவன், எடுத்த போட்டோவை பார்க்க வேண்டி கேலரியை திறக்க, அம்சமாய் வந்திருந்தது அந்த படம்.

 

பார்க்க பார்க்க வற்றாத குதூகளிப்புடன், அவள் பக்கவாட்டு வதனம் காணவேண்டி ‘ஜூம்’ செய்தவன் கண்களுக்கு தெரிந்ததோ, அவளது நேர்க்கொண்ட தோற்றம்!  

 

கரண்டு கம்பத்துக்குள் கையை விட்டவன் போல ‘ஷாக்’காகி அவன் நிற்க,

 

“என்ன பண்றீங்க நீங்க?” செவி வழி கேட்ட அவள் குரல் நொடியில் பீதியை கிளப்பி, அவன் அடிவயிற்றில் உருவமில்லா பல உருண்ட்டைகளை உருளவிட்டிருந்தது.

 

=வாழலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!