Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 6(2)

அத்தியாயம்-6 சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தங்கள் உடைமைகளுடன் கனடாவிலிருந்து இந்தியா வந்து இறங்கினர், நளன் மற்றும் வினோத் இருவரும். மனதில் ஏதேதோ எண்ணங்கள் பேரலையாய்த் தோன்ற, ஒருவித படபடப்புடன் நின்றிருந்தான் நளன். லக்கேஜ் பெல்ட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜை எடுத்து இரு ட்ரொலிகளில் அடுக்கிக் கொண்டிருந்த வினோத் நளன் அருகில் வந்தான். நளன் நின்றிருந்த விதத்திலேயே அவன் மனநிலையை புரிந்து கொண்டவன், அவன் தோள் தொட்டு கண்களை மூடி திறந்தான் ஆறுதலாக. “டேய் நளா, […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 6(1)

அத்தியாயம்-6       சோஃபாவில் கால்நீட்டி அமர்ந்து பொட்டேடொ சிப்ஸை கொரித்துக் கொண்டே டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, ஒரு சீரியலின் பெயரைச் சொல்லி “அம்மா அம்மா ஓடி வா ***** சீரியல் போட்டுட்டான்”என்று கிச்சனில் இருந்த ரேணுகாவை அழைத்தாள். “இதோ வந்துட்டேன், அதுக்குள்ளே போட்டுட்டானா, ச்ச கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டான், இந்த தேங்கா சட்னியை தாளிக்க விடுறானா, படுபாவி” என்று சலித்தவர், “சரி இடைவேளை போடவும் வந்து தாளிப்போம்” என்று அடுப்பில் வைத்த தாளிப்பு […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 5

அத்தியாயம்-5 இடம்: சென்னை சென்னையின் வெப்பம் தார் சாலையைக் கூட இளக்கிக் கொண்டிருக்க, ஓரளவு நடுத்தர மக்கள் இருசக்கர வாகனங்களிலும், பஸ்ஸிலும் பயணிக்க, ஏசி காரில் செல்வோருக்கு ஏசி போதாமல் வெப்பம் தாக்கி…அஸ் புஸ் என்று புலம்பி கொண்டிருக்க, என் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை விட இந்த வெயில் ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை என்று அங்கே தெருக்களிலும், நடை வண்டியிலும் கடை வைத்திருப்பவர்கள் அவரவர் வேலையை கவனிக்க, இங்கே நேத்ராவும் அஸ் புஸ் என்று […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 4

அத்தியாயம்-4 இடம்: டொரோண்டோ நேரம் இரவு ஏழு மணியைத் தொட்டிருக்க… அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலுடன் பாரும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததால் பார்க்கிங்கில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. பார்க்கிங்கில் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக இருந்தாலும் அது அது அதற்கென்று ஒதுக்கப்பட்ட இரு மஞ்சள் நிற கோடுகளுக்குள் கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. வெள்ளிக்கிழமை என்றால் வீக்கெண்ட் மூடுக்கு சென்றுவிடும் அந்நாட்டவர்கள், அந்த வெள்ளிக்கிழமையிலும் ஆண், பெண் நண்பர் குழுக்களாகவும், இளம் மற்றும் வயது முதிர்ந்த காதல் ஜோடிகளாகவும், தனிமையில் சிலரும் […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 3

அத்தியாயம்-3   இடம்: சென்னை         முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க, சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன், விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள், குளிர் காற்றின் […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 2

அத்தியாயம்-2     முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களைத் அசால்ட்டாகத் தாங்கிய அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உள்ளிருந்து நளனும் வினோத்தும் கையில் அக்ரிமெண்ட் அடங்கிய சிறு சூட்கேஸுடன் வெளியில் வந்தனர்.   கட்டிடத்தின் உள்ளிருக்கும் ஏசி குளிரை விட, வெளியே மனதிற்கு இதமான மழைச்சாரல் மற்றும் அசுத்தமில்லாக் குளிர்காற்று மனதைக் குளிர்விக்க அதை ரசித்து அனுபவித்தான் நளன்.   அதைக் கலைக்கும் பொருட்டு “டேய் நளா வாவாவாவ்…” என்ற இடையீட்டால் கலைந்த நளன் வினோத்தின் கண்கள் சென்ற […]

Readmore

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் ஒன்று

Readmore

அத்தியாயம் – 35.3

“அய்யய்யோ அப்போ கல்யாணம் முடிஞ்சதா?” சிரிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து சீரியஸ் மோடிற்கு சென்றான் ஹரி. “பின்ன உங்களுக்காக வெயிட் பண்ணுவாய்ங்களா? சரி வந்து எழுப்பி விடலாம்னு பாத்தா எவனும் போன் எடுக்குறதில்ல, கதவையும் லாக் பண்ணிடுறது… உதய் உங்க அம்மா அப்பா எல்லாம் செம்ம கடுப்புல இருக்காங்க… முக்கியமா ஆதவன்…” ஆதியின் சட்டை வேறு அழுக்காய் இருக்க அவன் கூறுவதும் சரியாக இருக்குமோ என்று அனைவரும் குழம்பி போயிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துணியை எடுத்து […]

Readmore

அத்தியாயம் – 14.1

“நூத்தி ஏழு… நூத்தி எட்டு” அந்தச் சிறிய மருத்துவமனையின் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதி… அதைச் சரியாகக் கணக்கு எடுத்துக்கொண்டிருதான் தமிழ்… “மச்சி நூத்தி எட்டு வேண்டுதல் ஓவர் இப்ப ஒக்காரு” அந்த அறையில் இருந்த சிறியத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிலும் தன்னை வெறுப்பேற்றும் விதமாக வேறு சேனலை மாற்றாமல் அந்த மினிஸ்டரின் இறப்பு செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்… “இப்ப நீ அத மாத்தாம இருந்தன்னு வை, கத்திய எடுத்துக் கழுத்துலச் சொருகிடுவேன்” […]

Readmore

அத்தியாயம் – 13.2

‘மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்…’ “என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?” நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்… “ஆமா மா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு […]

Readmore