Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 24 2

 

மனைவியின் வருகையை உணர்ந்தவன் திரும்பி நின்று கைகட்டிக் கொண்டு அவளையேப் பார்த்தான்.அருகில் நெருங்கி நின்று தன் கையிரண்டையும் அவன் முன் நீட்டி ,

 

“அழகா இருக்கா , இதுல உங்கப்பேர் இருக்கு கண்டுபிடிங்க….” என்றவளிடம் ,



Advertisement

 

“உனக்கு மெகந்திப் போட்டுக்கிறது பிடிக்குமா…”

 

Advertisement

“ம்… டெல்லில இருக்கும் போது அண்ணா கிளாஸ்மேட் கல்யாணத்துக்கு போயிருக்கேன் …அங்க இது தனி பங்ஷன்தானே… அப்ப போட்டு விடுவாங்க , அதுவும் இப்படி ஹஸ்பன்ட் பேர் எழுதிக் கண்டு பிடிக்கச் சொல்வாங்களாம்….” அதற்குள் அவன் மொட்டை மாடிக் கதவினை அடைத்து விட்டு , அவள் முன் வந்து நின்று ஒரு மயக்கும் புன்னகையைத் தர , கணவனின் அந்தப் பார்வை ஒரு வெட்கத்தையும் தர ,

Advertisement

 

“இந்த பேர் கண்டுப்பிடிக்கிற வேலையை அப்புறம் செய்யலாம் ,இந்த மொட்ட மாடி , குளுகுளு னு காற்று , பக்கத்துல என்னைய டெம்ப்ட் பண்ற நீ ……ஆ… சம் சிச்சுவேஷன்…” என்றவாறு அவளை அங்கேயிருந்த சிறிய திண்டில் தூக்கி அமர வைக்க , குளிர் காற்று வீசி அவள் புடவை முந்தானையப் பதக்கச் செய்ய , அதோடு மறைக்கப்பட்ட பாகங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்க , சட்டென்று கையைக் கொண்டு புடவையைப் பிடிக்கப் போனவளின் கையைப் பிடித்துக் கொண்டவன்,

 

Advertisement

“இப்ப நீ அதைப் பிடிச்சா இது அழிஞ்சிடும் … அதுல என் பேர் இருக்கே அது அழிஞ்சா பரவாயில்லயா…”

 

வேகமாக ‘இல்லை’ என்பதாக தலையசைத்தாலும் ,கணவனே ஆனாலும் இப்படி பொது இடத்தில் நிற்பது கூச்சத்தைத் தர, இறங்கி அவனது பின்புறம் வந்து நின்றுக் கொள்ள முயல , பிடித்தக் கையை விடாது முன்புறம் இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

“இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க , அதுவும் இப்போ … ” என காதில் ரகசியம் பேச , வெட்கத்தில் அவன் நெஞ்சிலயே முகத்தைப் புரட்டியவளை நிமிர்த்தி , புடவையை சரி செய்துக்கொண்டே ,

 

“ரிது நீ ஏன் வேற ஃபார்மல் டிரஸ் போட மாட்டிக்கிற … உனக்கு வசதியா இருக்கும் தானே … நைட்ல எத்தனை பின் எண்ணி வைக்கிறேன் தெரியுமா… அவ்வளவு கஷ்டப்பட்டு இதைப் போட்டுக்கணுமா… எனக்கும் ஈஸியா இருக்கும்ல… என் வேகத்துக்கு கிழிஞ்சிடுமோனு பயமா இருக்கு ம் … ” எனச் சிரிக்க…

 

அவளோ கண்ணில் இருந்து நீரை பொலபொலவெனக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

 

“ஏய் நான் என்னமோ ரொமான்டிக்கா பேசுறதா நினைச்சிட்டு இருக்கிறேன் .நீ இப்படி அழுதுட்டு இருக்கிற … நான் சொன்னேன்ல உன் கஸின் , அந்தப் பொண்ணு அந்த நேரத்துலயும் எவ்வளவு போல்ட்னு சொன்னேன்ல … இப்ப பாரு நீ சொன்னது போல அவ அத்தானோட எவ்வளவு சந்தோஷமா இருக்கா… நீ என்னன்னா சரியான அழுமூஞ்சி பாப்பா…” என அவள் கண்ணீரைத் துடைக்க , அவனைத் தூக்கு என்பது போல் கை நீட்டிய வருவை நொடியும் தாமதியாதுத் தூக்கியவன் உதட்டில் தன் உதட்டைப் பொருத்திக் கொண்டாள்.

 

விக்ரமே விட முயற்சித்தாலும் விடாது உதட்டை உதட்டால் பிடித்திருந்தவள் அவளாக தான் அவனை விட்டாள்.

 

“இப்படித்தான் முன்பு ஒரு முறை மொட்டை மாடியில் என் ஆடையை சரி செய்து உன் ஆடையைக் கொடுத்தாய்….அதன் பிறகு … அன்றும்…. அது நீயும் நானும் மட்டுமே அறிந்த ரகசியம் விக்கி… அதுவும் நீ இப்ப சொன்னப் பாரு….. இதுக்கெல்லாம் இப்படி தான் எனக்குத் தேங்க்ஸ் சொல்ல முடியும் …..” முத்தமிட்டவள் மனதில் ஓடியது இதுதான்.

 

அருகருகே விழிகள் இருக்க , விழி காந்தத்தில் ஈர்க்கப்பட்டவன் அதற்கு முத்தங்களையும் பதிக்க ,

 

” என் உடம்புல எத்தனை மாற்றங்கள் இருந்தாலும் , இந்தக் கண்கள் உனக்குச் சொல்லலயா நான் யாருனு … ”

 

“ரிது கீழப் போவோமா , இல்ல இன்னைக்கு நைட்ட இங்கேயே ….. “அந்த குரல் நினைவைக் கலைக்க ,

 

“ஷ் … “என்றவள் கதவருகே சென்றுக் கையைப் பார்க்க , அருகில் வந்து கதவைத் திறந்து விட்டு ,

 

“ரிது ப்ளீஸ் … ” எனவும் முகம் சிவக்க ஓடி விட்டாள். மறுநாள் இரவே கிளம்ப வேண்டிய நிர்பந்தத்தில் அதுவும் மனைவியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் , அன்று இரவு அவளை கையணைப்பிலேயே வைக்கத் தூண்டியது.

 

மறு நாளில் தங்கள் பேரனுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் , விக்ரமையும் வருவையும் சபையில் நிற்க வைத்து விட்டார்கள். அதுவும் அத்தை முறையாக அமிர்தாவை முதலில் குழந்தைக் காதில் சொல்லச் சொல்ல விஸ்வனாதனும் அரவிந்தும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விருந்து முடிந்து வீட்டிற்கு வந்த ஆதிக்கும் அமிர்தாவிற்கும் தனிமையே கிடைக்கவில்லை. உறவுகள் இருவரையும் சூழ்ந்துக் கொண்டார்கள்.

 

மாலையில் அவர்கள் கிளம்ப , தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த விக்ரமிற்கு , காலையில் கட்டியிருந்த பட்டுச்சேலையுடனேயே உதவிக் கொண்டிருந்தாள். திறந்திருந்த அறையைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்த லதாவும் பரணியும் அவர்களது வாடிய முகம் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள , லதா அருகில் வந்தவன் ,

 

“ம்மா வீக்கெண்ட் அழைச்சிட்டு வந்து சென்னைல விடட்டுமா ரிதுவ… ” எனவும் , பரணி , ” எந்த வீக்கெண்ட் மகனே…. ” எனச் சிரித்துக் கொண்டே கேட்க ,

 

“மே பீ நெக்ஸ்ட் வீக்கெண்ட் சித்தி … “பரணிக் காதைத் திருக, சிரித்த லதா ,

 

“ராஜா …இந்தா ஜனவரி முடியப் போகுது இன்னும் ரெண்டே மாசம் , அவ படிப்பும் முடியப் போகுது , வேணுமின்னா நீ சென்னை வந்துரு , அப்பா சொன்னாரு உனக்கு அங்க இப்ப பெரிய வேலை இருக்காது … இங்க இருந்தே பார்க்கலாம்னு…. ஆனா நீ பிஸ்னஸ்க்கு தானே முதலிடம் தருவ….. முன்னாடி ரெண்டு வருஷம் மும்பய் , இப்ப கன்னியாகுமரி ….போ போய் நிறைய ஹோட்டல் ,ரிசார்ட் எல்லாம் கட்டுப்பா…. ” எனத் தன் இத்தனை நாள் ஆதங்கத்தைக் கொட்டியவர் ,

 

“பரணி வா … நாமளும் நாளைக்கு கிளம்ப எடுத்து வைப்போம்…” என்றவாறு கிளம்பி விட்டார்கள்.

 

கதவை அடைத்து விட்டு மனைவியிடம் வந்தவன் , அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொள்ள , காதில் அவனது இதயத் துடிப்பை உணர்ந்தவள் , இரு கரங்களும் அவனது சட்டையை இறுக பற்றிக் கொண்டன .இருவருமே பேசிக் கொள்ளவில்லை … ஆனாலும் கண்ணீரை உணர்ந்த விக்ரம் ,

 

“என்னடா செய்றது , உனக்கு ஸ்பீச் தெரஃபி எடுக்க சென்னை தான் வசதி , எனக்கு படிப்பு பத்தி ஒன்னுமில்ல … பட் அம்மாவுக்கு படிப்பு ரொம்ப முக்கியமானது …. ஸ்கூல் கரஸ்பான்டட் ஆச்சே …வெய்ட் பண்ணு சீக்கிரம் வாறேன்…. ”

 

தலையாட்டியவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு , கோவில்ல சாமி கும்பிட்டுட்டு நீங்க கிளம்புங்க….” என்றவாறு இருவரும் கீழிறங்க,

 

சங்கரி , ” எய்யா சீக்கிரம் ஊருக்கு வரப்பாரு….” என விபூதி வைக்க, வெளியே அரவிந்தும் வித்யாவும் காரில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

லதா வருவிடம் ஒரு காகிதத்தை தந்து , “பேரனக்கு வாங்க வேண்டிய லிஸ்ட் இருக்கு ,ஜக்ஷன்ல சண்முகம் அண்ணன் நிற்பாங்க , அவருக்கூட ஆதி ஏர்போர்ட் போகட்டும் , நீங்க இதை வாங்கிட்டு வாங்க … “மகனுக்காக தான் செய்கிறார் என்பதை உணராதவர்களா ,

 

விக்ரம் வந்து லதாவை கட்டிக் கொண்டவன் , “தேங்க்யூ மா ,தேங்க்யூ வெரி மச்” என்று விட்டுக் கிளம்பினான். அரவிந்த் காரோட்ட வித்யா அவனருகில் அமர்ந்துக் கொள்ள , ஆதியும் அமிர்தாவும் பின்னால் அமர்ந்துக் கொண்டார்கள். இருவரும் கைப் பிடித்துக் கொண்டே பயணிக்க , கோவில் வந்ததும் நால்வரும் இறங்கினர்.

 

அரவிந்துக்கும் வித்யாவிற்கும் பழைய நினைவுகளில் புன்னகை மலர , அவர்கள் இருவருக்கும் தனிமை தந்து , இவர்கள் எப்போதும் அமரும் ஆலமரத்தடிச் சென்றார்கள்.

வித்யாவிடம் , ” சந்திக்க துடித்தேன் பொன் மானே….” என்ற வரிகளை அரவிந்த் புன்னகையோடுப் பாடிக் காட்ட ….

 

“அத்தான் மறக்க முடியாத நாட்கள் …. ” எனப் புன்னகைத்தவள் , தூரத்தில் தன் அண்ணனையும் அண்ணியையும் பார்க்க , இருவரும் அமைதியாக இறைவனைப் பிரார்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

 

“தினமும் அவ அந்த விநாயகர் கிட்ட என்னக் கேட்டானு தெரியலத்தான்… இப்ப அவமுகத்துல எங்கண்ணன பிரிஞ்சு இருக்கப் போற ஏக்கமும் , அண்ணகைய அவப் பிடிச்சிருக்க இறுக்கமுமே , அவ சாமிக்கிட்ட கேட்ட எல்லாத்தையும் அண்ணன் ரூபத்துல தந்துட்டார்னு தெரியுது …. ” என அரவிந்த் முகம் பார்க்க ,

 

“அம்முவுக்கு மட்டுமில்ல … எனக்குமே நீ கிடைச்சிருக்க … எத்தனை வருஷத்துக்கு அப்புறம் எனக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைச்சிருக்கு தெரியுமா … எல்லாம் உன்னால தான்…. ” எனச் சிரிக்க ,

 

புன்னகைத்துக் கொண்டவள் காரில் ஏறிக் கொண்டாள். இப்போது அந்தப் பாலத்தைக் கார் கடக்க , வரு குனியவில்லை மாறாக ஜன்னல் வழியாக அந்தப் பாலத்தை , அதனடியில் சலசலத்து ஓடும் பரணியாற்றை ரசித்துப் பார்க்க , ஆதியும் மனைவியை ரசித்துப் பார்க்க, தோள் வளைவில் சாய்ந்துக் கொண்டு விழிமூடியவளின் தலை மீது தானும் தலை வைத்து விழிமூடிக் கொண்டான்.

 

‘எது வந்த போதும் ….இந்த அன்பு போதும்….’

 

பாலத்தைக் கண்டதும் வருவின் உணர்வறிய சட்டென்று திரும்பிய வித்யாவின் முகம்  மகிழ்ச்சியை பிரதிபலிக்க , மனைவியின் புன்னகை முகம் கண்டு அரவிந்த் புருவம் உயர்த்த , ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்தாலும் அவளின் முகச் சிவப்பு அரவிந்துக்கு உணர்த்தியது ,

 

தன் உடன் பிறந்தவளின் மகிழ்ச்சியைத் தான் தன்னவளின் முகம் பிரபலிக்கிறது என்பதைத் தான்.…

 

இடக்கரத்தால் அவள் வலக்கரம் பிடித்து , சத்தமில்லாமல் ,

 

“ஐ… லவ்… யூ… ” என்றான் அந்த அருமைக் காதலனும் , அன்பு நிறைந்தச் சகோதரனுமானவன்.

 

என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே

என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே

வேறென்ன வேண்டும் உலகத்திலே

இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே

ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்….

 

தூவும் …..

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!